மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.10.07

ஜோதிடப் பாடம் - பகுதி 40




ஜோதிடப் பாடம் - பகுதி 40

இன்று கதை கிடையாது. வெறும் பாடம் மட்டும்தான்.
நேற்று பாதியில் இருக்கும் சஸ்பென்ஸ் கதையின்
தொடர்ச்சி இரண்டு நாட்கள் கழித்து வரும்.

உலகில் அனைவருடைய ஜாதமும் சமம்தான். அவனு
டையது உயர்வானது. இவனுடையது மட்டமானது
என்று எதுவும் கிடையாது. எவனும் கொம்புடன்
பிறக்கவில்லை!

அது எவ்வாறு என்பது அஷ்டவர்க்கம் என்னும்
ஜோதிடப் பாடம் நடத்தும்போது உங்களுக்குத் தெள்ளத்
தெளிவாக விளங்கும். அது சற்றுப் பெரிய பகுதி.

அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுத்த பிறகு
அந்தப் பகுதிக்கு வருவேன். அதுவரை பொறுத்துக் கொள்ளுங்கள்.

அஷ்டவர்க்கத்தில், எந்தவொரு ஜாதகத்திற்கும் மொத்த
மதிப்பெண் 337 பரல்கள் தான். ஜனாதிபதி பிரதீபா அம்மை
யாருக்கும் 337 பரல்கள்தான். தஞ்சாவூர்ப் பகுதியில் -
வயல் வரப்புகளில் தினக்கூலியாக வேலை பார்க்கும்
வெள்ளைச்சாமிக்கும் 337 பரல்கள்தான்.

முகேஷ் அம்பானிக்கும் 337 பரல்கள்தான். அவருடைய
கார் டிரைவருக்கும் 337 பரலகள்தான். நடிகை சிநேகா
விற்கும் 337 பரல்கள்தான். அவருடன் திரைப்
படத்தில் உடன் நடனமாடும் அததனை நடனப்
பெண்களுக்கும் (extra actresses) 337 பரல்கள்தான்.

ஒரு நாயர் கடையில் அமர்ந்து, இரண்டு வாழைக்காய்
பஜ்ஜி, ஒரு மசாலா டீ சாப்பிட்டுவிட்டு, ஒரு சிகரெட்
டைப் பற்ற வைத்து வலித்துக் கொண்டு, "லே
ஜாயேங்கே, லே ஜாயேங்கே என்ற பாட்டைக் கேட்ட
வாறு, முகேஷ் அம்பானியின் டிரைவரால் ஆனந்தமாக
ஒரு மணி நேரம் உட்கார்ந்திருக்க முடியும்.
முகேஷ் அம்பாணியால் முடியுமா?

பிரதிபா அம்மையாருக்கு - ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்
- Protocol கள் உணடு

தில்லி கனாட் பிளேஸ் சதுக்கம் பகுதிக்குத் தனியாகச்
சென்று ஒரு ரவுண்ட் அடித்துச் சுற்றி விட்டு, ஒரு சாட்
கடைமுன் நின்று ஒரு பிளேட் பேல்பூரி சாப்பிட்டு விட்டு
வரலாம் என்றால் அரசு இயந்திரங்கள் - அவருடைய
பாதுகாப்பை முன்னிட்டு - அதை அனுமதிக்காது.

வெள்ளைச் சாமிக்கு வேறு விதமான பிரச்சினை இருக்கும்.
தன் மனைவிக்கும், மகளுக்கும், தினசரி இரண்டு வேளை
சூடான அரிசிச் சோற்றிற்கு வழி பண்ணக் கூட வருமானம்
இருக்க்காது. அதற்காக அவன் கவலைப் படமாட்டான்.
இருக்கிற கஞ்சியைப் பகிர்ந்து குடித்து விட்டு, வீட்டு வாசலில்
இருக்கும் வேப்ப மரத்து நிழலில், கயிற்றுக் கட்டிலில்
படுத்து நிம்மதியாகத் தூங்குவான்.

ஒருவனுக்கு இருப்பது இன்னொருவனுக்குக் இருக்காது.
இல்லாதவனுக்குக் கிடைத்தது, பொருள் இருப்பவனுக்குக் கிடைக்காது

அதைத்தான் கண்ணதாசன்,
"பாலிருக்கும், பழமிருக்கும் பசியிருக்காது;
பஞ்சனையில் காற்றுவரும் தூக்கம்வராது" என்றார்.

ஒருவன் அழகை ஆராதிப்பவ்னாக இருப்பான். அவனுக்குக்
குரங்குபோன்ற மனைவி வந்து சேர்வாள் (தோற்றத்தில்
அல்லது குணத்தில்) ஒருவனுக்கு கிளி போன்ற மனைவி
கிடைப்பாள். அவன் அவளைப் புறக்கணித்து விட்டுக் குரங்கு
போன்ற பெண்ணோடு தொடர்பு வைத்து, மகிழ்ந்து
கொண்டிருப்பான்.

எல்லாம் அவனவன் வாங்கி வந்த வரம். முன் வினைப் பயன்.

கடவுள் அங்கேதான் தன்னுடைய கைவண்ணத்தைக்
காட்டியுள்ளார். அவருடைய படைப்பில் அனைவரும் சமம்.
ஆகவே மொத்தப் பரல்களும் சமம்.

பிரச்சினைகள், கவலைகள் எல்லோருக்கும் பொதுவானது.
அவை இரண்டும் இல்லாத மனிதனே கிடையாது.

நமக்கு ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய்க்குப் பிரச்சினை
இருக்கும்.அம்பானி களுக்கு அது கோடிகளில் இருக்கும்.
பிரச்சினை பிரச்சினைதான்.

எல்லோருக்கும் ஒரு ஜான் வயிறுதான்.
உடலில் ஒன்பது வாசல்கள்தான்

பணம் இருப்பதற்காகத் தட்டில் தங்கத்தை வைத்துச் சாப்பிட முடியாது!

எல்லா உணவும் தொண்டைவரைக்கும் தான். ஐ.ஆர் 20
அரிசியானால் என்ன? பாசுமதி அரிசியானால் என்ன?
ருசி தொண்டை வரைக்கும்தான். அதற்குப் பிறகு
எல்லா உணவும் ஒன்றுதான்.

ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்ன? பாய் விரித்த
படுக்கை என்ன? தூக்கம் வரும்வரைதான் வித்தியாசம்.
துங்கிவிட்டால் எல்லா இடமும் ஒன்றுதான்.

பணக்காரன் பத்து லட்ச ரூபாய்க் காரில் பயணிப்பான்.
ஏழை இருபது லட்ச ரூபாய் பஸ்ஸில் பயணிப்பான்.
பயணம் ஒன்றுதான். இவனுக்காவது பஸ்ஸில்
உடன் 57 பேர்கள் துணையுண்டு. அவனுக்கு அவனே
துணை. அல்லது வண்டி ஓட்டும் டிரைவர் மட்டுமே துணை.

எல்லாம் நாம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் இருக்கிறது.
சந்தோசம் முற்றிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயம்
அல்ல. அது மனம் சம்பந்தப்பட்ட விஷயம்

ஜாதகத்தில் பணம் இரண்டாம் வீட்டை வைத்து.
சந்தோசம் ஐந்தாம் வீட்டை வைத்து.

ஆகவே ,ஒரு நாள் பாடத்தை மட்டும் படித்து விட்டு, தனியாக
உட்கார்ந்து குழம்பாதீர்கள். மொத்தப் பாடத்தையும் படித்து
விட்டு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஆகவே இந்தத் தொடர் முடிந்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்

ஜாதகப்படி மொத்தம் 36 பாக்கியங்கள் (12 கட்டங்கள்
x ஒரு கட்டத்திற்கு மூன்று பாக்கியங்கள் = 36 )
18 பாக்கியங்கள்தான் கிடைத்திருக்கும்.
18 கிடைத்திருக்காது. அவை என்னென்ன?

அதுதான் இனி வரப்போகும் பாடம். ஒவ்வொரு
கட்டமாகச் சொல்லித்தரப் போகிறேன்

இன்று லக்கினம் என்னும் முதல் கட்டம் அல்லது
முதல் வீட்டின் பலாபலன்கள்
-----------------------------------------------------------------
முதல் வீடு.

உடம்பில் தலைப் பகுதி எப்படியோ - அப்படித்தான்
ஜாதகத்தின் முதல்வீடு. அது லக்கினம் எனப்படும்.

1. லக்கினத்தின் அதிபதி யார்?

2. அவர் எங்கே சென்று அமர்ந்திருக்கிறார்.

3. லக்கினத்தின் பெயர் என்ன? அதனுடைய இயற்கைத் தன்மை என்ன?

4. லக்கினத்தில் வேறு எந்த கிரகம் வந்து குடியிருக்கிறது?

5. தனியாகக் குடியிருக்கிறதா? அல்லது வேறு
நல்ல/அல்லது தீயகிரகத்துடன் சேர்ந்து குடியிருக்கிறதா?

6. லக்கினம் எந்தெந்த கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது?

7.லக்கினநாதன் நட்பு, உச்சம் பெற்று மேன்மை
அடைந்துள்ளாரா? அல்லது பகை நீசம் அடைந்து
கெட்டுப் போய் உள்ளாரா?

8.நவாம்சத்தில் லக்கினநாதன் ராசியில் உள்ளபடியான
வலுவுடன்தான் இருக்கிறாரா? அல்லது அங்கே
வலுவிழந்து இருக்கிறாரா?

9. லக்கினநாதனுக்கு திரிகோணம், கேந்திரம் ஆகிய
இடங்களில் அமரும் பாக்கியம் கிடைத்துள்ளதா?
அல்லது இல்லையா?

10. ஆறு, எட்டு, பன்னிரெண்டு ஆகிய மறைவிடங்
களுக்குரிய (தீய) கிரகங்களுடன் லக்கினாதிபதிக்கு
சேர்க்கை ஏற்பட்டுள்ளதா?

11. லக்கினாதிபதிக்கு அஸ்தமன சோகம் (combust)
ஏற்பட்டுள்ளதா?

12. லக்கினாதிபதியின் திசை நடை பெறுகிறதா?
அல்ல்து எப்போது அது வரும்?

13. லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளன?

14. லக்கினாதிபதி தனது ஆதிபத்தியமாகத் தனித்து
எத்தனை பரல்களுடன் உள்ளார்?

15. லக்கினத்திற்கு அதிபதியான கிரகம் natural benefic planetஆ
அல்லது malefic planet ஆ?

16. லக்கினாதிபதி - பொதுவில் - எதற்குக் காரகன் (authority)?

17.லக்கினத்திற்குரிய செயல் பாடுகள் என்னென்ன?

இப்படிப்பட்ட கேள்விகளுக்குரிய விடையைக் கண்டுபிடித்
தால்தான் லக்கினம் எப்படி உள்ளது என்று தெரிய வரும்.

அதேபோல 16 கேள்விகள் x 12 வீடுகள் = மொத்தம்
192 கேள்விகளுக்குப் பதில் தெரிந்தால்தான் ஒருவரின்
ஜாதகம் முழுமையாகத் தெரிய வரும்.

அதைத் தெரிந்து சொல்ல குறைந்தது இரண்டு மணி
நேரமாமவது ஆகும் அப்படியெல்லாம் பார்த்துப் பலன்
சொல்ல இப்போது எந்த ஜோதிடருக்குப் பொறுமை
யிருக்கிறது. ஆகவே நீங்கள் கேட்கும் ஒன்று அல்லது
இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லி விட்டு
உங்களை ஒட்டி வீட்டு விடுவார்

அந்தப் பலன்களும் சரியாக நடக்கவேண்டுமென்றால்
அடுத்துள்ள இரண்டு முக்கியம்

1. உங்கள் ஜாதகம் சரியாகக் கணிக்கப்பெற்றிருக்க வேண்டும்
2. அந்த ஜோதிடன் திறமை மிக்கவனாகவும், நல்ல
ஜோதிட அறிவு பெற்றவனாகவும் இருக்க வேண்டும


அதைவிட முக்கியம், அந்த ஜோதிடனுக்கு, அவன்
ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்
சொன்னது பலிக்கும். இல்லையென்றால் ஊத்திக் கொண்டு
விடும் (அவன் சொன்னது நடக்காது)

(பாடம் நாளையும் தொடரும்)
பதிவின் நீளம் கருதி, வகுப்பு இன்று இத்துடன் நிறைவு பெறுகிறது!
--------------------------------------------------------
I want feed back. Please send your views about the lesson

18 comments:

  1. ஐயா,
    தங்கள் பாடங்கள் தெளிவாகவும், விளக்கமாகவும் இருக்கிறது. நேற்று தான் முதன் முதலாக இத்தொடரைப் படிக்க நேர்ந்தது. படிக்கத்தொடங்கியவுடனே தெளிவாக விளங்கியதால், தொடுகுத்து வெர்டில்(word) புகுத்தி ப்ரின்ட்(print) செய்து பைண்டரில்(Binder) செருகிவிட்டேன்.

    இரவே ஒருமுறை இருப்பவற்றை வாசித்து ஆரம்ப பாடங்களை விளங்கிக்கொண்டேன்.

    மி்குதி பாடங்களிற்காக காத்திருக்கிறேன்.

    -குரு வணக்கத்துடன் சுவேதா(கனடா)

    ReplyDelete
  2. அந்த ஜோதிடனுக்கு, அவன்
    ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன்
    சொன்னது பலிக்கும்


    என்ன ஐயா! இப்படி ஒரு குண்டை தூக்கி போடுகிறீர்கள்.சாதரண மக்கள் எப்படி இதை தெரிந்துகொள்வது?
    அது அடுத்த பதிவிலா?

    ReplyDelete
  3. நண்பரே !! நல்லதொரு தொடக்கம் - பல்தரப்பட்ட வாசகர்கள் எதிர்பார்க்கும் எளிமையான பாடங்கள் - வாழ்த்துகள் - தொடர்க

    ReplyDelete
  4. ////சுவேதா (கனடா) said...
    தங்கள் பாடங்கள் தெளிவாகவும், விளக்கமாகவும் இருக்கிறது. நேற்று தான் முதன் முதலாக இத்தொடரைப் படிக்க நேர்ந்தது. படிக்கத்தொடங்கியவுடனே தெளிவாக விளங்கியதால், தொடுகுத்து வெர்டில்(word) புகுத்தி ப்ரின்ட்(print) செய்து பைண்டரில்(Binder) செருகிவிட்டேன்.
    இரவே ஒருமுறை இருப்பவற்றை வாசித்து ஆரம்ப பாடங்களை விளங்கிக்கொண்டேன்.
    -குரு வணக்கத்துடன் சுவேதா(கனடா)///

    நன்றி சுவேதா! அதெப்படி 40 பாடங்களையும் ஒரே இரவில் படித்து முடித்ததோடு புரிந்தும் கொண்டீர்கள்? கேட்பதற்கு வியப்பாக இருக்கிறது!
    வாழ்த்துக்கள்!
    தொடர்ந்து படியுங்கள்

    ReplyDelete
  5. ///வடுவூர் குமார் said...
    அந்த ஜோதிடனுக்கு, அவன் ஜாதகப்படி நல்ல தசாபுத்தி நடைபெற்றால்தான், அவன் சொன்னது பலிக்கும்///
    என்ன ஐயா! இப்படி ஒரு குண்டை தூக்கி போடுகிறீர்கள்.சாதரண மக்கள் எப்படி இதை தெரிந்துகொள்வது?
    அது அடுத்த பதிவிலா?///

    அது குண்டு அல்ல! உண்மை!
    உண்மை சில சமயம் குண்டு போலத்தான் தெரியும்.
    குண்டைத் தவிக்க வழியுண்டு.
    தீர்வு உண்டு.
    அது பிறகு வரும்.

    ReplyDelete
  6. ///கோவி.கண்ணன் said...
    உள்ளேன் ஐயா ! :)

    சரி, அதற்காக விட்டு விடுவேனா?
    ஏன் லேட்?:-))))

    ReplyDelete
  7. ///cheena (சீனா) said...
    நண்பரே !! நல்லதொரு தொடக்கம் - பல்தரப்பட்ட வாசகர்கள் எதிர்பார்க்கும் எளிமையான பாடங்கள் - வாழ்த்துகள் - தொடர்க///

    நன்றி மிஸ்டர் சீனா! தொடக்கமல்ல இது!
    இதுவரை ஜோதிடத்திப் பாடத்தில் மட்டுமே 40 பதிவுகள் உள்ளன.
    பழைய பதிவுகளையும் நேரம் இருக்கும்போது படித்துப் பாருங்கள்!

    ReplyDelete
  8. இனிமேதான் முக்கிய பகுதிகள் வருது.
    கவனமாப் படிக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கேன்.

    ReplyDelete
  9. சார், பாடத்தைத் தொடர்ந்ததற்கு நன்றிகள்.

    சில கேள்விகள் - சரியான பகுதியில் பதிலளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    1. அமாவாசையன்று தர்ப்பணம் செய்வதன் பலாபலன் என்ன ? யார் யார் செய்யவேண்டும் ? ஏன் ?

    2. ஆடி அமாவாசை, தை அமாவாசை - இதற்கும் மற்ற அமாவாசைக்கும் என்ன வித்தியாசம் ? அதுவும் கடலில் சென்று செய்கிறார்களே ? பொதுவாக பல ஜாதியினரும் தங்கள் குல/குடும்ப வழக்கப்படி செய்கின்றனர்.

    3. தற்போது நடைபெறும் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் எனப்படும் இந்த 15 நாட்களில் செய்யப்படும் தர்ப்பணம்/திதிக்கு என்ன முக்கியத்துவம். மறைந்த தந்தை/தாய் தவிர இன்ன பிற (மறைந்த) குடும்ப உறவினர்க்கும் இதில் முக்கியத்துவம் ஏன் ?

    4. வருடா வருடம் மறைந்த தாய்/தந்தைக்கு திதி/திவசம் செய்வது - இது எந்த விதத்தில் விதிப்பயனை ஏற்படுத்தும் (அல்லது செய்ய முடியாதவர்களுக்கு எந்த விதத்தில் பாதிக்கும்)

    5. பெண் குழந்தைகள் மட்டும் இருப்பவர்கள் இறந்தால் அவருக்கு (தந்தை அல்லது தாய்) யார் கொள்ளிவைப்பார்கள்/வைக்கலாம் ? அல்லது பித்ரு கடன்களை யார் செய்வது ? செய்யவேண்டும் (அந்த குடும்பத்தில் நெருங்கிய ஆண்பிள்ளைகள் இல்லாத பட்சத்தில்)

    6. ஆண் வாரிசு இல்லாத குடும்பத்தில் வருடாவருடம் திதி/திவசம் யார் செய்ய வேண்டும் ? அல்லது செய்யாவிட்டால் அந்த ஆன்மா என்ன ஆகும் ? அந்த குடும்பத்திற்கு அதனால் என்ன விதிப்பயன் ?

    இதற்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  10. ///துளசி கோபால் said...
    இனிமேதான் முக்கிய பகுதிகள் வருது.
    கவனமாப் படிக்கணுமுன்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கேன்.

    வாங்க துளசி டீச்சர்!
    கவனத்தைப் பத்தி தாய்க்குலங்களுக்கு சொல்லியா தெரியனும்?

    ReplyDelete
  11. Thankyou for answering my questions.

    ReplyDelete
  12. நானும் உள்ளேன் ஐயா.. தொடர்ந்து படித்து வருகிறேன்.. ஜமாயுங்கள்.. நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ.. ஜாதகம் என்ற பிரிவின் கீழ் இவ்வளவையும் எழுதியும், படித்தும் வைத்திருக்கிறார்களே முன்னோர்கள் என்ற பிரமிப்பு படிப்பவர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்..

    ReplyDelete
  13. அறுமை. இருந்தாலும் பாதியில் விட்ட கதையை சொல்லாமல் இருந்திருக்க கூடாது...

    ReplyDelete
  14. Sir,
    I am a student joined in between. Trying to understand your old lessons also. It goin really good.
    Can you share more websites & books to read on this OCEAN.
    ever
    Raja (WA,USA)

    ReplyDelete
  15. உண்மையிலேயே வகுப்பு நடக்கிற
    உணர்வு ஏற்பட்டு விட்டது.
    அதுசரி, இறுதியில் பரீட்சை உண்டா,
    சார்?..
    இப்பவே கொஞ்சம் கூடுதல் கவனத்தோட,கவனிக்கலாமில்லே..

    ReplyDelete
  16. சார் இதை எப்படி word இற்கு மாற்றி பிரிண்ட் எடுப்பது என்று சற்றே சொல்ல முடியுமா?

    ReplyDelete
  17. ////Kumares said...
    சார் இதை எப்படி word இற்கு மாற்றி பிரிண்ட் எடுப்பது என்று சற்றே சொல்ல முடியுமா?/////

    முதலில் உங்கள் கணினியில் NHM writer மென்பொருளை இணையத்தில் இருந்து எடுத்து நிறுவிக் கொள்ளுங்கள். அது இலவசம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com