மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.10.07

JL.44. ஜோதிட நூல்களின் விவரம்



***********************************************
JL.44. ஜோதிட நூல்களின் விவரம்

ஜோதிடம் - பகுதி. 44

ஜோதிட நூல்களின் பெயர்களையும், அது கிடைக்கும்
இடத்தையும் எழுதும்படி எனக்கு நிறையப்
பின்னூட்டங்கள் வந்துள்ளன! அவற்றை இந்தப் பதிவில்
இட்டுள்ளேன்.நிறைய நூல்கள் உள்ளன.
முக்கியமானவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.

தமிழில் தொன்மையான ஜோதிட நூல்' குமாரசுவாமியம்'
என்னும் நூல் ஆகும். வீரவ நல்லூர் குமாரசுவாமி தேசிகர்
என்னும் அன்பர் எழுதிய நூல் அது.

அதைப் பலர் பதிப்பித்திருக்கின்றார்கள்.
Copy right பிரச்சினை இல்லையோ என்னவோ.தெரியவில்லை.

1.B.இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ்
26, வெங்கட்ராம தெரு,
கொண்டித்தோப்பு,
சென்னை - 600 079

அவர்களே இன்னும் பல ஜோதிட நூல்களை
வெளியிட்டுள்ளார்கள்

1.ஜோதிட பிரஞ்ஞான தீபிகை
2.ஜோதிட கோட்சார சிந்தாமணி
3.ஜோதிட அரிச்சுவடி (4 பாகங்கள்)
4.நஷ்ட ஜாதக கணிதம்
5.சுகர் பெருநாடி (4 பாகங்கள்)
-----------------------------------------------
இதே குமாரசுவாமியம்' என்கின்ற நூலைக்
கீழ்க் கண்ட பதிப்பகத்தாரும் வெளியிட்டுள்ளார்கள்

ராக்ஃபோர்ட் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்
எஸ்.6, திரு.வி.க தொழிற்பேட்டை
கிண்டி, சென்னை - 600 032

ஜூன் 1992ல் வெளிவந்த நூல்
402 பக்கங்கள்
அன்றையவிலை ரூபாய் 90.00

பாடல்கள் விளக்க உரையுடன் உள்ள நூல் இது
-----------------------------------------------------------------
மணிகண்ட சோதிடம்
(மூலமும் உரையும் உள்ள நூல்)
அகஸ்தியர் அருளியதாக தலைப்பிடப்பெற்றுள்ளது.
உரை எழுதியவர் திரு.கந்தசாமி பிள்ளை

பதிப்பாளர்கள்:
சண்முகானந்தா புத்தக சாலை
97, நைநியப்ப நாயக்கன் தெரு,
பார்க் டவுன்
சென்னை - 600 003
---------------------------------------------------
ஜோதிட போதினி
ஆங்கிலத்தில் இருந்து மொழியாக்கம் செய்யப்
பெற்ற
சிறந்த நூல்

பதிப்பகத்தார்:
பொய்யாமொழிப் பதிப்பகம்
4, கெள்டியா மடம் தெரு
சென்னை - 600 006
------------------------------------------------
மணிமேகலைப் பிரசுரம்
4, தணிகாசலம் செட்டித் தெரு
தி.நகர் சென்னை - 600 017

தமிழ்வாணன் அவர்களின் குமாரர்கள் நடத்திக்
கொண்டிருக்கும் பதிப்பகம் இது.
இவர்களிடம் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
நேரில் சென்று பார்த்து வாங்கிக் கொள்ளலாம்
அல்லது தமிழகத்தின் பெரிய நகரங்களில் உள்ள
பிரபலமான புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்
--------------------------------------------------------------------
வசந்தவல்லி பப்ளிஷிங் ஏஜென்ஸி,
16, காளிங்கராயன் 1வது சந்து
சிமெட்டரி ரோடு
சென்னை - 600 021

இவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
----------------------------------------------------------------------
பாரதி பதிப்பகம்
108, உஸ்மான் சாலை
சென்னை - 600 017

இவர்களிடமும் நிறைய ஜோதிட நூல்கள் உள்ளன
-----------------------------------------------------------------------
மதுரையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில்
உள்ள புதுமண்டபத்தில்,
கண் நிறைந்த கடைகள் உள்ளன
கடலளவு புத்தகங்கள் உள்ளன் - சென்றால்
வண்டியளவு புததகங்களை வாங்கலாம்
-----------------------------------------------------------
நானும் வண்டியளவு புத்தகங்களை வாங்கினேன்
ஆனால் அவற்றை முழுமையாகப் படிக்கவில்லை
காரணம் அழகு தமிழிலும், கடினமான தமிழிலும்
அவைகள் எழுதப் பெற்றிருந்தன.

நான் படிக்கத் துவங்கிய காலத்தில் எனக்கு பழகு தமிழ்
மட்டுமே கைகொடுத்ததால், எனக்கு இந்த நூல்களில்
75% நூல்களைப் படித்துத் தேர்வதில் சிரமங்கள் இருந்தன.

ஆகவே அவற்றையெல்லாம் மூட்டைகட்டிப் பரண்மேல்
வைத்துவிட்டு ஆங்கில நூல்களுக்குத் தாவினேன்

அவைகள் எளிய நடையில், உரையில் (Text) மட்டுமே
எழுதப் பெறிருந்ததால், என்னால் ஜோதிடத்தைப் படித்துத்
தெளிவு பெற முடிந்தது.

தமிழில் எதுகை மோனை சிறப்பிற்காக 'சனீஸ்வரனை'
சனி - நீலவன் - முடவன் - காரிமைந்தன் என்று பல
பெயர்களில் குறிப்பிட்டிருப்பார்கள், அதே வேலையைத்தான்
மற்ற கிரகங்களுக்கும், ஜோதிட விதிகளுக்கும் செய்திருக்கிறார்கள்

ஆங்கிலத்தில் இந்தத் தொல்லையெல்லாம் இல்லை
சனியை Saturn என்று ஒரு சொல்லால் மட்டுமே
குறிப்பிடுவார்கள்.
-----------------------------------------
அதே போல ஜோதிடத்திற்கான மாத இதழ் ஒன்றும் வருகிறது.
அது ஆங்கிலத்தில் வருவதால் இந்தியாவின் அனைத்து
மாநிலங்களைச் சேர்ந்த ஜோதிட நிபுணர்கள் மற்றும்,
ஜோதிட ஆர்வலர்களின் கட்டுரைகளும்
அதில் வெளிவருகிறது.

அதன் பெயரும், சந்தா அனுப்ப வேண்டிய முகவரியும்:

The Astological Magazine'

Raman Associates,
28, Nagappa Street,(Nehru Circle)
Seshadripuram
Bangalore - 560 020

Web site: www.raman associates.org
Email: books@ramanassocites.com

இவர்களின் நூல்கள் அனைத்தும், Higginbothams
புததகக் கடைகளில் கிடைக்கும். அவர்களின்
கிளைகள் தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்கள்
அனைத்திலும் உள்ளன!
--------------------------------------------------------------------
இவர்களிடம் ஏராளமான புத்தகங்கள் உள்ளன
கேட்டால் விவரம் அனுப்புவார்கள்
தலைப்பிலேயே - புத்தகத்தின் விவரம் தெரியும்
தேவைபடுவதை வாங்கி ஒவ்வொன்றாகப் படிக்கலாம்!

தமிழ் நூல்கள் எல்லாம் எளிமைப் படுத்தப்பெற்றால்
தமிழ் கூறும் நல்லுலகம் பயனடையும்

ஆகவே, விரைவாகப் படித்து ஜோதிடம் கற்றுக் கொள்ள
விரும்புகிறவர்கள், ஆங்கிலத்தில் எழுதப் பெற்றுள்ள
நூல்களைப் படிப்பதே நல்லது

இதைப் படித்து விட்டுத் தனித் தமிழ் ஆர்வலர்கள் யாரும்
சண்டைக்கு வரவேண்டாம். எனக்கும் தமிழ்தான் உயிர்.
ஆனால் உண்மையைச் சொல்வதனால் தமிழ்த்தாய்
ஒன்றும் என்னுடன் சண்டைக்கு வரமாட்டாள்

அன்புடன்
வாத்தியார்
(தொடரும்)
----------------------------------------------
-


26 comments:

  1. ஐயா..

    கோவையில இருந்தப்போ, '' ''ஜோதிடவியலில் ராகு கேது'' அப்படீன்னு ஒரு புத்தகம் என் நண்பர் ஒருவர் அச்சடித்து வெளியிட்டார்..எழுதினது ஜி.பி.தியேட்டர் கார்னர்ல ஒரு ஹோட்டல் இருக்குமே..அங்க உக்கார்த்துட்டு இருப்பார்..அந்த ஜோசியர்..பெயர் மறந்துபோச்சு..
    நான் என்னோட பிரஸ்ல பைன்டிங்க மட்டும் பண்ணி குடுத்தேன்..ஆனா அவங்களால அதை விக்க முடியலை... கடைசியில 4 வருடங்கள் கழித்து எடைக்கு தான் போட வேண்டி இருந்துச்சு...ஆனா இப்ப அந்த புஸ்தகம் நல்லா விக்குதுன்னு கேள்விப்பட்டேன்..

    நீங்க கேள்வி பட்டீருக்கீங்களா... நண்பருக்காக கேக்குறேன்..

    ReplyDelete
    Replies
    1. என்னுடம்உள்ளது , என் நண்பா் ஒருவா்20புத்தகங்கள் கொடுத்தாா்
      மிக த் தெளிவான ஆய்வு இதுவைர10 வருடங்களில் எண்ணற்ற ஜாதகங்களுக்கு அவர் வழி காட்டு தவில் பலன் சொன்னேன் மிக மிகச் சரியாக உள்ளது அவா்பெயா் க. தில்லை அம்பலம் Hats off to him அவர் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன் அவருடைய வேறு நூல்கள் ஏதேனும் உள்ளதா அவர் விலாசம் (சாா்ந்தவாகள்) கிடைக்குமா???please !!!

      Delete
  2. உங்களிடம் scaner இருந்தால் குமாரசுவாமியம் நூலைக் கொஞ்சம் கொஞ்சமாக scan செய்து வெளியிடலாமே இணையத்தில்? அனைவருக்கும் பயன்படும்.

    ReplyDelete
  3. வாத்யாரே.. நானும் படிச்சிட்டேன்னு சொல்லிக்கிறேன்..

    ReplyDelete
  4. குடும்ப ஜோதிடம் என்று ஒரு புத்தகம் படிக்க ஆரம்பிக்க மிக நல்ல புத்தகம். நிறைய புத்தகக் கடைகளில் பார்த்திருக்கிரேன்

    ReplyDelete
  5. ///மங்கை said...
    கோவையில இருந்தப்போ, '' ''ஜோதிடவியலில் ராகு கேது'' அப்படீன்னு ஒரு புத்தகம் என் நண்பர் ஒருவர் அச்சடித்து வெளியிட்டார்..எழுதினது ஜி.பி.தியேட்டர் கார்னர்ல ஒரு ஹோட்டல் இருக்குமே..அங்க உக்கார்த்துட்டு இருப்பார்..அந்த ஜோசியர்..பெயர் மறந்துபோச்சு..
    நான் என்னோட பிரஸ்ல பைன்டிங்க மட்டும் பண்ணி குடுத்தேன்..ஆனா அவங்களால அதை விக்க முடியலை... கடைசியில 4 வருடங்கள் கழித்து எடைக்கு தான் போட வேண்டி இருந்துச்சு...ஆனா இப்ப அந்த புஸ்தகம் நல்லா விக்குதுன்னு கேள்விப்பட்டேன்..
    நீங்க கேள்வி பட்டீருக்கீங்களா... நண்பருக்காக கேக்குறேன்..////

    அடடே, நீங்கள் கோவையைச் சேர்ந்தவரா-கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது!

    நீங்கள் சொல்லும் ஜோதிடரின் பெயர்.க.தில்லையம்பலம் - சரியா?

    பதிப்பகத்தின் பெயர் - பூஜா பதிப்பகம் - சரிதானா?

    150 ரூபாய் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை ஒரு கடைக்காரர் - தள்ளுபடி விலையில் - அதாவது ரூபாய் முப்பதிற்கு விற்றதாகவும் - தான் வாங்கிக் கொண்டு வந்ததாகவும் - என் நண்பர் ஒருவர் காட்டினார். அதனால் சட்டென்று நினைவிற்கு வந்தது சகோதரி - தகவல் சரியா?

    ReplyDelete
    Replies
    1. நண்பா் சுப்பையா வீரப்பன் அவா்களே அது ஒரு அற்புதமான ஆய்வு நிரல் இதுவரை10வருடங்களாக அதுதான் என் வேதம் பலநுாறுபேருக்கு அவர் வழி காட்டுலில் பலன் சொல்லி இருக்கிறேன் நுாறுக்கு நுாறு சரி
      அவர் இப்போது இல்லை என கேள்விப்பட்டேன் அவா்சாா்ந்தவாகள் விலாசம் கிடைக்குமா ???

      Delete
  6. ///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    வாத்யாரே.. நானும் படிச்சிட்டேன்னு சொல்லிக்கிறேன்..///

    நீங்கள் வந்து 'உள்ளேன் ஐயா' சொன்னால் 100% மகிழ்ச்சி
    படித்தேன் என்று சொன்னால் 200% மகிழ்ச்சி!

    ReplyDelete
  7. ///Anonymous said...
    உங்களிடம் scaner இருந்தால் குமாரசுவாமியம் நூலைக் கொஞ்சம் கொஞ்சமாக scan செய்து வெளியிடலாமே இணையத்தில்? அனைவருக்கும் பயன்படும்.///

    செய்யலாம்- ஆனால் Copy right தான் பயமுறுத்துகிறது. என் வயசிற்கு அதை மீறுவதற்கு சங்கடமாக இருக்கிறது!

    ReplyDelete
  8. ///whoami said...
    குடும்ப ஜோதிடம் என்று ஒரு புத்தகம் படிக்க ஆரம்பிக்க மிக நல்ல புத்தகம். நிறைய புத்தகக் கடைகளில் பார்த்திருக்கிறேன் ///

    நான் படித்திருக்கிறேன் - நல்ல புத்தகம்.
    ஒரு நண்பரிடம் இரவல் கொடுத்ததில் - அது தொலைந்து போய் விட்டது!

    ReplyDelete
  9. ஆஹா...ரொம்ப சரி...அந்த பூஜா பதிப்பகத்தின் உரிமையயளாரும் இங்க தான் தில்லியில இருக்கார்..

    ஹ்ம்ம் என்ன சொல்ல....

    ஐயா...நான் கோவைன்னு இப்ப தான் தெரியுமா?

    ReplyDelete
  10. James Braha has written some excellent books in English. These books are for beginners!

    ReplyDelete
  11. Sir,
    Thank you for the list.


    Swetha

    ReplyDelete
  12. Thx for the list.
    It would be better if you could recommand the books available in English.
    thx
    Raja

    ReplyDelete
  13. Calcutta Lahiri's INDIAN EPHEMERIS" is best for Planets Position details.

    Available at HIGGINBOTHAMS.

    NellaiPrakash

    ReplyDelete
  14. Sir,

    This is one online book that I found thru our Google ஆசான். This is the introductory book by B.V.Raman - A Manual of Hindu Astrology.

    Link:
    http://www.archive.org/details/manualofhinduast030716mbp

    Towards the left, there will be a link "Flip Book" which takes to the actual link

    Here is that link too:
    http://www.openlibrary.org/details/manualofhinduast030716mbp

    Open பண்ணினா blank page தான் தெரியும். We have to use the navigation arrows or keep clicking over the pages to proceed reading.

    Let this be of use for our ஜோதிட ஆர்வலர்கள்.

    Thanks,
    Diwakar

    ReplyDelete
  15. Here is that link too:
    ////http://www.openlibrary.org/details
    Open பண்ணினா blank page தான் தெரியும். We have to use the navigation arrows or keep clicking over the pages to proceed reading.

    Let this be of use for our ஜோதிட ஆர்வலர்கள்.
    Thanks,
    Diwakar///

    Thanks Mr.Diwakar for the useful information

    ReplyDelete
  16. Sir, Here is another one.

    This one is VarahaMihira's Brihat Jataka.

    http://www.archive.org/details/brihatjataka00varaiala

    This is available as a downloadable PDF.

    Here is the PDF download:
    http://www.archive.org/download/brihatjataka00varaiala/brihatjataka00varaiala.pdf

    Thanks
    Diwakar

    ReplyDelete
  17. Dear Sir,
    Mr. P.V. Narashimha Rao has been teaching Vedic Astrology and has given lot of materials including mp3 lessons. Check his site. www.vedicastrologer.org

    ReplyDelete
  18. sir,

    please see the website http://www.saptarishisastrology.com

    they are publishing free digital astro magazine at regular intervals. The magazine contains many good articles...hope it is useful to you and other

    ganesh

    ReplyDelete
  19. "ஜோதிட நூல்களின் விவரம்"
    மிகவும் அருமை.
    ஒரு வேண்டுகோள்:
    "காலப் பிராசிகை" என்னும் ஜோதிட நூல் கிடைக்க வகை செய்யவும்.

    ஆவலுடன்,

    அடியேன்

    ReplyDelete
  20. just got a copy of 'Kumaraswamiyam'. My friend got this for me from Neyveli book fair. Delighted to have it. All happening because of 'Vathiyar's guidance. THANK YOU GURUVE.

    ReplyDelete
  21. எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா????

    ReplyDelete
  22. குமாரசுவாமியம் ஜோதிட நூல்கள் தேவைப்படுகிறது கிடைக்கும் இடம் கூறவும்

    ReplyDelete
  23. குமாரசுவாமியம் ௭ன்ற ஜோதிட நூல்கள் தேவைப்படுகிறது கிடைக்கும் இடம் கூறவும்

    ReplyDelete
  24. MOST OF THE TAMIL BOOKS ARE AVAILABLE IN
    https://www.tamildigitallibrary.in/

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com