மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.07

ஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்!


=======================================================
ஜோதிடப் பாடம் - பகுதி.43

ஜோதிடமும் GMT என்ற புண்ணாக்கும்!

ஜோதிடப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.
என் ஆதாயத்திற்காக அதை நடத்தவில்லை.
நம்புகிறவர்கள் நம்புங்கள். நம்பாதவர்கள் நம்பாமலே
இருங்கள் என்ற டிஸ்கியைப் போட்டு விட்டுத்தான்
நடத்துகிறேன்.

We can not change any body, since it is very
difficult to change ourselves.

எனது அரிய நேரத்தை செலவழித்து நடத்துவதற்கு
- ஒரே காரணம் - எனக்கு வசப்பட்ட அந்தக்
கலை, வலையில் வந்து படிக்கும் ஒரு நூறு
பேருக்காவது வசப்படட்டும் என்ற உயரிய நோக்கம்தான்
காரணம். அதுதான் என்னை மீண்டும் மீண்டும்
எழுதத் தூண்டுகிறது.

எனக்கு தமிழ்மணத்தில் வந்து எழுதும் சக
பதிவர்களைவிட, புதிய வாசகர்கள் கொடுக்கும்
ஆதரவுதான் வியக்க வைக்கிறது.

எனக்கு உபத்திரவம் கொடுக்க வேண்டும்
என்பதற்காகவே சிலர் புதிது புதிதாக எதாவது
கேள்வி எழுப்பி மின்னஞ்சல் கொடுத்துக்
கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு எனது நன்றி. அவர்களால்தான் என்
எழுத்தில் விறுவிறுப்பும் கூடுகிறது. பல புதிய
செய்திகளையும் என்னால் சொல்ல முடிகிறது!

அதனால் அவர்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன்.
உங்கள் உபத்திரவத்தைத் தொடருங்கள்
நான் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டவனாகவே
இருப்பேன்.ஆனால் அறிவு பூர்வமான கேள்விகளை
மட்டுமே கேளுங்கள். அல்லாத கேள்விகளைக் கேட்டு
என் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

இப்போது சொல்ல வந்த மேட்டருக்கு வருகிறேன்.

கேள்வி இதுதான்: GMT மாற்றயமைக்கப்படும்போது,
ஜாதகங்களை மாற்றி எழுத வேண்டுமா?

திருமணங்களைப் பதிவு செய் என்று சொன்னால்,
அது இன்றிலிருந்துதான் அமுலுக்கு வரும்.
நாளையிலிருந்து நடைபெறும் திருமணங்களைப் பதிவு
செய்தால் போதும் என்பதுதான் மறைமுக அர்த்தம்.
அதைவிட்டு விட்டு, 1945ம் ஆண்டு நடைபெற்ற எங்கள்
தாத்தாவின் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டுமா?
1972ல் நடந்த என்தந்தையின் திருமணத்தைப் பதிவு
செய்ய வேண்டுமா? 2002ல் நடைபெற்ற என் திருமணத்
தைப் பதிவு செய்ய வேண்டுமா என்று அடுக்கிக்
கொண்டே போனால் என்ன சொல்வது?
அப்படிக் கேட்கும் அன்பரை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

அதுபோல GMT மாற்றியமைக்கப்பட்டால்,
அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளின் ஜாதகததை
எழுதும்போது மட்டுமே அந்த சந்தேகம் வரவேண்டும்.
சூரிய உதயம், அந்த நாட்டின் பொது நேரம்,
அந்தக் குழந்தை பிறந்த உள்ளூரின் நேரம் என்று
பல விஷயங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், அதை
ஜாதகம் கணிக்கும் ஜோதிடர் பார்த்துக்கொள்வார்.
GMT மாற்றம் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தாது.

காலை 5.50 என்ற சூரிய உதயம் 5.55 என்று
மாற்றப் படுமானால், அவர் அதையும் கணக்கில்
கொண்டுதான் ஜாதகத்தை எழுதுவார்.
ஜாதகத்திற்கு முக்கியம் சூரிய உதயம் தானே தவிர,
GMTஎன்ற புண்ணாக்கு அல்ல! அதை நம்மை ஆட்சி
செய்த பிரிட்டீஷ்காரர்கள் வடிவமைத்தது.
அதற்கு ஆயிரம் வருடம் முன்பு தொட்டே, காலத்தைக்
கணிக்கும் சுவர்க் கடிகாரங்கள் நம்மிடம் இருந்தன

என்னைபோன்ற கணினி வைத்துக் கணக்குப் பார்க்கும்
புண்ணாக்குகள் மட்டும்தான் அதை யோசிக்க வேண்டும்.
ஆனால் கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்
துள்ள ஜாதகம் பார்க்கும் மென் பொருள் அதை
ஈடுகட்டும்படி உள்ளதால, அதை உபயோகிக்கும் அன்பர்கள்
எந்தக் கவலையும் பட வேண்டாம்.

ஜோதிடத்தில் சூரிய உதயத்தை வைத்துத்தான்
ஜாதகம் எழுதப்படுகிறது.

சூரியனை வைத்துத்தான், அதைச் சுற்றிவரும்
கோள்களை வைத்துத்தான், அதைவிட முக்கியமாக
சூரியனின் உதய நேரத்தை வைத்துத்தான் ஜோதிடம்
என்ற அரியகலை அமைந்துள்ளது.

இந்தியா, சீனா, கிரேக்கம் ஆகிய மூன்று நாடுகள்தான்
உலகின் தொன்மையான நாடுகள்.
இந்தியாவில் இருந்துதான், கணிதம், வான சாஸ்திரம்,
ஜோதிடம், ஆன்மிகத் தத்துவங்கள் எல்லாம் உலகமெங்கும்
பரவியது. அதில் நாம்தான் பிரதானமானவர்கள்.
இங்கே வணிகம் செய்ய பாய்மரக் கப்பலில் வந்த
சீனர்களும், கிரேக்கர்களும் அதையெல்லாம் எடுத்துக்கொண்டு
போய் சிறப்படைந்தார்கள்.

நாம்தான் இன்னமும் கேள்விகள் கேட்டே பொழுதைப்
போக்கிக் கொண்டிருக்கின்றோம்

ஞாயிறு முதல் சனி வரை வாரத்தின் ஏழு நாட்களையும்
சொல்லிக் கொடுத்தவர்கள் நாம்தான்
ஒவ்வொரு நாளூம் ஒவ்வொரு கிரகத்தின் magnetic rays
அதிகமாக இருக்கும். எந்த கிரகத்தின் magnetic rays
அதிகமாக இருக்கிறதோ - அந்த நாளிற்கு அந்தக் கிரகத்தின்
பெயரைக் கொடுத்துள்ளோம் இதுதான் வார நாட்களின் வரலாறு!

சூரியன் = ஞாயிற்றுக்கிழமை = Sun Day
சந்திரன் = திங்கட்கிழமை = Mon Day
செவ்வாய் = செவ்வாய்க்கிழமை = Tues Day
புதன் = புதன்கிழமை = Wednes Day
குரு = வியாழக்கிழமை = Thurs Day
சுக்கிரன் = வெள்ளிக்கிழமை = Fri Day
சனி = சனிக்கிழமை = Satur Day

ராகு & கேதுவிற்கு தனி நாட்கள் கிடையாது அதனால்
அனைத்து நாட்களிலும் ராகுவிற்கு ஒன்றரை மணி
நேரமும், கேதுவிற்கு ஒன்றரை மணி நேரமும் வழங்கப்
பட்டுள்ளது. அந்த நேரத்தில் அதன் ஆதிக்கம்தான்.
அதுதான் ராகு காலம் என்றும் எமகண்டம் என்றும்
சொல்லப்படுகிறது.

ஆங்கிலப் பெயர்கள் எல்லாம் கிரேக்கர்கள் அவர்கள்
மொழியில் சொன்னது. அவர்கள் மூலமாக அது ஐரோப்பா
முழுவதும் பரவியது.

அதனால்தான் ராகு காலத்தில் முக்கியமான
காரியத்தைச் செய்யதே என்று ந்ம் முன்னோர்கள்
சொல்லிவைத்து விட்டுச் சென்றார்கள்.
இல்லை நான் செய்வேன் - அது என்னை என்ன
செய்கிறது பார்த்து விடுகிறேன்?' என்று சொல்லித்
'தில்லாக' செய்தால் செய்து கொள்.

It is your problem;
No body will be affected by it or look into it!

அமெரிக்காவெல்லாம் கொலம்பஸ் கண்டுபிடித்ததற்குப்
பிறகுதான் - அதாவது 400 ஆண்டுகள் மட்டுமே
வரலாற்றைக் கொண்ட நாடு.
நமக்கு 4,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாறு
இருக்கிறது. முதலில் நம் மண்ணின் பெருமையை
உணருங்கள். பிறகு கேள்விகளைக் கேளுங்கள்!

GMT என்ற புண்ணாக்கு வடிவமைக்கபெற்றதெல்லாம்
200 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலமே!
கடிகாரத்ததிற்கும் (Modern Clocks) அதே வயதுதான்.
அதற்கு முன் பல நூறு வருடங்களாக நேரத்தை
அறியப் பல கருவிகள் நம்மிடம் இருந்தன, அதைப் பற்றி
எழுதினால் பதிவு இன்னும் பல பக்கம் நீடிக்கும். ஆகவே
கீழே மூன்று சுட்டிகள் கொடுத்துள்ளேன் அதைப் படித்துக்
காலக் கணிப்பின் வரலாற்றை அனைவரையும்
(அறிந்தவர்களைத் தவிர்த்து) தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

ஆர்யபட்டர், வராஹிமிஹிரர், பராசுரர், ஜெய்மானி
போன்ற மேதைகள் 1,500 ஆண்டுகளுக்கு
முன் வானவியலையும் , ஜோதிடத்தையும் வடிவமைத்
தபோது- Planatoriuam, Telescope, Computer போன்ற
எந்த உபகரணமும் கிடையாது. அவர்கள் எழுதி வைத்து
விட்டுப்போனதும் இன்று இவர்கள் சொல்வதும் எப்படிச்
சரியாக உள்ளது?
வேண்டுமென்றால் Birla Planatorium, Kolkattaவில்
உள்ள வான் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு குறிப்பிட்ட
நாளின் கிரக நிலையை (Planetary Position) வாங்கி
நம் ஊர்ப் பஞ்சாங்கத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்,
அதற்குப் பிறகு வாயைத் திறந்து பேசுங்கள்!

தாய் மட்டுமே பரம நம்பிக்கைக்கு உரியவள்.
தாய் சொல்லித்தான் தந்தை,
தந்தை சொல்லித்தான் குரு,
குரு சொல்லித்தான் தெய்வம்.
அதனால் தான் 'மாத, பிதா, குரு, தெய்வம்' என்ற
சொல்லடை ஏற்பட்டது. எல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்தது.

அதுபோல இறைவன், கோள்கள், வானவியல்,
ஜோதிடம் என்பதும் ஒன்றை ஒன்று சார்ந்தது.

எனவே தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,
மற்றதெல்லாம் பிடிபடுவது வெகு சிரமம். வெகு
கடினம். தெய்வ நம்பிக்கைதான் ஜோதிடத்தின்
அடிப்படை சக்தி. அது இல்லாதாவர்களுக்கு
ஜோதிடமும் புரியாது; என்னுடைய வகுப்பறையும்
ஒத்துவராது. ஆகவே அவர்களை
உள்ளே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்

இது உத்தரவு அல்ல! வேண்டுகோள்!

என்னைப் பாடம் நடத்த விடுங்கள்.
என் மாணவர்களைக் கற்றுக் கொள்ள விடுங்கள்!

அன்புடன்
வகுப்பறை - வாத்தியார்.
------------------------------------------------------------
1.*About Greenwich Mean Time

Our natural concept of time is linked to the rotation
of the earth and we define the length of the day as
the 24 hours it takes (on average) the earth to spin
once on its axis.
As time pieces became more accurate and
communication became global, there needed to be
a point from which all other world times were based.
Since Great Britain was the world's foremost
maritime power when the concept of latitude
and longitude came to be, the starting point for
designating longitude was the "prime meridian"
which is zero degrees and runs through the
Royal Greenwich Observatory, in Greenwich, England.

சுட்டி இங்கே உள்ளது:
----------------------------------------
2.* Apparent Solar Time, or true local time.

For millennia, people have measured time based
on the position of the sun; it was noon when the
sun was highest in the sky. Sundials were used
well into the Middle Ages, at which time mechanical
clocks began to appear. Cities would set their town
clock by measuring the position of the sun, but every
city would be on a slightly different time.
The time indicated by the apparent sun on a
sundial is called Apparent Solar Time, or
true local time. The time shown by the fictitious
sun is called Mean Solar Time, or local mean time
when measured in terms of any longitudinal meridian.
[For more information about clocks, see A Walk through Time.]
சுட்டி இங்கே உள்ளது
---------------------------
3.* சூரியக் கடிகாரங்கள்

A sundial is a device that measures time by the position of the Sun

சுடடி இங்கே உள்ளது
-------------------
4.* கடிகாரங்கள்:

A clock is an instrument for measuring and indicating the time

சுட்டி இங்கே உள்ளது
-----------------------------------

18 comments:

  1. வாத்தியார் ஐயா

    தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நம் நாட்டின் அரிய கலைகளை பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பது புரிந்தவர்கள் ஏராளம் உள்ளனர்.மற்றவர்களை பற்றி கவலைபடாதீர்கள்

    ReplyDelete
  2. ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ஆசாமிகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடங்களை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.

    -கிச்சா

    ReplyDelete
  3. ///செல்வன் said...
    வாத்தியார் ஐயா, தெளிவாக விளக்கி உள்ளீர்கள். நம் நாட்டின் அரிய கலைகளை பாதுகாப்பது எத்தனை அவசியம் என்பது புரிந்தவர்கள் ஏராளம் உள்ளனர்.மற்றவர்களை பற்றி கவலைபடாதீர்கள்///

    கவலையெல்லாம் ஒன்றுமில்லை மிஸ்டர் செல்வன். இப்ப்டி ஒரு விளக்கம் கொடுக்கும்போது அது வகுப்பறை மாணவர்களுக்கும் பயன்படும் என்றுதான் பதிவிட்டுள்ளேன்

    ReplyDelete
  4. ///Kicha said...
    ஐயா, நீங்கள் அந்த மாதிரி கேள்வி கேட்கும் ஆசாமிகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடங்களை நடத்துமாறு வேண்டிக்கொள்கிறேன்.///

    உங்கள் கருத்திற்கு நன்றி மிஸ்டர் கிச்சா!

    ReplyDelete
  5. வாத்தியார் எதெதுக்கு விளக்கம் கொடுக்கணுமுன்னு நியதி இருக்கு. ச்சும்மா விவாதம் செய்யரதுக்காக மட்டுமே கேட்கப்படும் விதண்டாவாதத்துக்கு
    விளக்கம் தேவையில்லை.

    சரி.இனி இன்றைய வகுப்புக்கு வருவோம்.


    எந்த ஊரில் இருந்தாலும், சூரிய உதயம் ஆனபிறகு காலை 6 மணிக்கு ஆரம்பிச்சு மாலை 6 மணிக்குள்தான் ராகு காலம், எமகண்டம் பார்க்கணுமுன்னு எங்க பாட்டி சொல்லிக் கேட்டிருக்கேன்.

    இப்ப வசிக்கும் நாட்டில் வெய்யில்காலம் வரவர சூரியன் 4 மணிக்கெல்லாம்
    ( இங்கே டே லைட் சேவிங்ஸ் இருப்பதால் அப்ப 5 மணின்னு கணக்கு) வந்துருது. அதே போல அஸ்தமனமும் மாலை 9 மணிக்கு அப்புறம்தான்.

    இதுலே நல்ல நேரம் எப்படிப் பார்க்கறதுன்னு சிலசமயம் புரியறதில்லைங்களே.

    ReplyDelete
  6. ஐயா,

    ஒரு கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது!

    ஒரு தடவை, தந்தையும் மகனும் ஒரு கழுதையை ஓட்டியபடி பயணித்துக் கொண்டிருந்தனர். அவ்வழி வந்த ஒருவன் "மூளை இல்லாதவர்கள், கழுதையை உபயோகப்படுத்தாமல் நடக்கிறார்களே" என்று முணுமுணுத்தபடி சென்றான்.

    சரி மகனை கழுதையில் ஏற்றி தகப்பன் பக்கத்தே நடந்து வர, இன்னொருவன் "வயதான தந்தை நடக்க இச்சிறுவன் சொகுசாய் சாவரி செய்கிறானே!" கூற, மகனை இறக்கிவிட்டு கழுதையி தந்தை ஏறிக்கொண்டார்.

    "சிறியவனை நடக்கவிட்டு வயதான கிழவனுக்கு என்ன சவாரி!" என இன்னொருவன் வினாவ மகனையும் கழுதையில்
    ஏற்றிக்கொண்ட தந்தை கழுதை சுமக்கக் கஷ்டப்படுவதை அவதானித்தார். பாரம் தாங்காத கழுதையின் கால் சுளுக்கிவிட கடைசியில் தந்தையும் மகனுமாய் கழுதையை சுமந்தபடி பயணித்தனர்!.


    எது எப்படியாயினும், உங்கள் பாடங்களை நீங்கள் தொடருங்கள்!. எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்திபடுத்த முடியாது!

    உங்கள் பாடங்களுக்காக காத்திருக்கும்

    சுவேதா கனடா

    ReplyDelete
  7. அய்யா என்னகொரு கேள்வி....

    புரந்தர தாசர் ஒரு பாடலில் சொல்லுவார்...

    ரவிசந்தரர புத நீனே ராஹு கேதுவு நீனே.. என்று..

    இது எனக்கு எப்பொழுதும்குழப்பத்தை தருகிறது.
    கடவுளை நம்பினால் ஏன் ஜோசியம் பார்க்கிறோம்.?

    உங்களை மடக்க இந்த கேள்விஐ கேட்க்கவில்லை.

    புரிதலுக்காக வேண்டி கேட்கிறேன்.

    ஏனென்றால் ஏனால் நம்பவும் முடியவில்லை.ஆனால் நம்பும்பொழுது
    தினசரி வாழ்க்கையிலொருவித சமாதானமின்மை ஏற்ப்படுகிரது.

    ReplyDelete
  8. A related post
    http://bruno.penandscale.com/2007/10/should-horoscopes-need-to-be-changed.html

    ReplyDelete
  9. //தெய்வ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு,
    மற்றதெல்லாம் பிடிபடுவது வெகு சிரமம். வெகு
    கடினம். தெய்வ நம்பிக்கைதான் ஜோதிடத்தின்
    அடிப்படை சக்தி. அது இல்லாதாவர்களுக்கு
    ஜோதிடமும் புரியாது//

    சத்திய வார்த்தைகள் வாத்தியாரைய்யா....

    ReplyDelete
  10. வணக்கம் ஜயா.
    நான் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்ற மாணவர்களில் ஒருவன். உங்கள் பொன்னான நேரத்தை என்னைப்போன்ற மாணவர்களுக்காக செலவிடுவதையிட்டு மிகவும் நன்றி. தயவு செய்து குதர்க்கமாக கேள்வி கேட்பவர்களை மனதில்கொண்டு பதிவை நிறுத்திவிடாதீர்கள். அத்துடன் காலசர்ப்ப யோகத்தின் தீயபலன்களைப்பற்றி குறிப்பிடுவதாய் சொல்லியிருந்தீர்கள், உங்களுக்கு நேரம் கிடைக்கையில் அதைப்பற்றியும் விளக்கமாக குறிப்பிடுவீர்களானால் மிகவும் நன்றி.
    வணக்கம்.

    ReplyDelete
  11. "மனித ஜாதியின் நோய்கள் யாவுமே
    மனதினால் வந்த நோயடா" கவியரசின் வரிகள் சத்திய வாக்கு.மனம் நோயுற்று இருப்பதினால்தான்,குதர்க்கம் வருகிறது.நோயுள்ள மனம் எதையும் நம்பாது.
    "பொய்யான சில பேர்க்கு இது நாகரீகம்
    புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்
    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்"
    "முன்னோர் எல்லாம் மூடருமில்லை" பாருங்கள்;கவியரசு எல்லாவற்றுக்கும் எழுதி வைத்து விட்டார்.
    மூட நம்பிக்கை என விதண்டா வாதம் செய்யும் மூடர்களை ஒதுக்கி தங்கள் பணி தொடரட்டும்.
    தென்பரங்குறத்து குமரன் அடி பணிந்து,
    வணக்கத்துடன்
    பொன்.பாண்டியன்

    ReplyDelete
  12. Sir,

    In your lesson, you have mentioned
    "கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள ஜாதகம் பார்க்கும் மென்பொருள் அதை ஈடுகட்டும்படி உள்ளதால், அதை உபயோகிக்கும் அன்பர்கள் எந்தக் கவலையும் பட வேண்டாம்".

    கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள மென்பொருளின் பெயர் என்ன?
    Do we have any website for it?

    Thanks,
    Diwakar

    ReplyDelete
  13. /////கேரள மாலையோகம் நிறுவனத்தார் வடிவமைத்துள்ள மென்பொருளின் பெயர் என்ன?
    Do we have any website for it?
    Thanks,
    Diwakar////

    மாலையோகத்தைவிட சிறந்த மென்பொருள் ஒன்று இணையத்தில் இலவசமாகவே கிடைக்கிறது
    அதன் விவரங்களை 1.2.2008 தேதியிட்ட பதிவில் வெளியிட்டுள்ளேன்.சென்று பாருங்கள் நண்பரே!
    அதன் சுட்டி கீழே உள்ளது

    http://classroom2007.blogspot.com/2008/02/1.html

    ReplyDelete
  14. Sir,

    மிக்க நன்றி...
    தாங்கள் "Horoscope Explorer" பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
    நான் சென்னையில் இருந்த பொழுது இலவசப்பதிவைப் பயன்படுத்தி இருக்கிறேன். (free 45 days fully functional trial version).
    இதுவும் ஒரு அருமையான மென்பொருள்.

    But JHora is a completely free software - so no licensing worries :)

    A question here - which panchangam do these softwares follow? To my understanding they all follow திருக்கணித பஞ்சாங்கம். But there are people who follow வாக்கிய பஞ்சாங்கம். And the horoscopes casted with both the panchangams differ to some extent at times. This is mainly due to the precision of calculation used to arrive at the numbers for both the panchangams.

    With this being the case, how do we know that the horoscope that is casted reflects the karmic pattern of the individual? (because a shift in the surya lagna, chandra lagna or for the matter any graha is definitely going to give a compeletely different interpretation altogether).

    Thanks,
    Diwakar

    ReplyDelete
  15. /////Diwakar Said: A question here - which panchangam do these softwares follow? To my understanding they all follow திருக்கணித பஞ்சாங்கம். But there are people who follow வாக்கிய பஞ்சாங்கம். And the horoscopes casted with both the panchangams differ to some extent at times. This is mainly due to the precision of calculation used to arrive at the numbers for both the panchangams.////

    திருக்கணிதம்தான் சரியானது.முழுமையாக கணிதத்தை அடிப்படையாகக் கொண்டது
    வருடத்திற்கு 365.25 நாட்கள் என்று கணக்கில் எடுத்துக் கொள்வது. வாக்கியப் பஞ்சாங்கம் 360 நாட்கள் என்ற அடிப்படையில் உள்ளது. மென் பொருட்கள் எல்லாம் திருக்கணித் அடிப்படையில்தான். வித்தியாசத்தை நீங்களே உணர்ன்‍துகொள்ளுங்கள்

    ReplyDelete
  16. வாத்யாரே..

    கடவுள் நம்பிக்கை கொண்டு, ஜோதிடம், இன்ன பிறவற்றில் நம்பிக்கை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

    கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஜோதிடம் மற்றும் பிறவற்றில் நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். உதாரணம் மஞ்சள் துண்டு அணிவது, வாஸ்து பார்த்து வீடு கட்டுவது, பெயரை நியூமராலஜி என்று சொல்லி மாற்றிக் கொள்வது, பச்சைக் கல்லோ, சிவப்புக் கல்லோ பார்த்து மோதிரம் போட்டுக் கொள்வது.. இப்படி நிறைய இருக்கின்றன.

    எனவே இங்கு யாருமே முழுமையான கொள்கை குன்றுகள் என்றில்லை..

    சந்தர்ப்பம் வாய்த்தால் நரியும் பரியாகும்.. பரியும் நரியாகும்.. அது நீங்கள் சொன்ன 'நேரத்தைப்' பொறுத்தது.

    புரியாதவர்களுக்கும், புரியாதது போல் நடிப்பவர்களுக்கும் பதில்களைச் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. ஒதுக்கித் தள்ளி விடுங்கள்..

    பாடத்தைத் தொடருங்கள்..

    ReplyDelete
  17. ////Unmaiththamizhar Said: எனவே இங்கு யாருமே முழுமையான கொள்கை குன்றுகள் என்றில்லை..

    சந்தர்ப்பம் வாய்த்தால் நரியும் பரியாகும்.. பரியும் நரியாகும்.. அது நீங்கள் சொன்ன 'நேரத்தைப்' பொறுத்தது.

    புரியாதவர்களுக்கும், புரியாதது போல் நடிப்பவர்களுக்கும் பதில்களைச் சொல்லி நமது நேரத்தை வீணடிக்க வேண்டாம்.. ஒதுக்கித் தள்ளி விடுங்கள்..

    பாடத்தைத் தொடருங்கள்..///

    உங்கள் புரிதலுக்கும், பரிந்‍துரைக்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //உங்கள் புரிதலுக்கும், பரிந்‍துரைக்கும் நன்றி நண்பரே!//

    உறவு முறையை மாத்தாதீங்க வாத்யாரே..

    நான் தங்களின் அடக்கமான சிஷ்யன் மட்டுமே..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com