மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

28.10.07

கேள்வி இங்கே! பதில் எங்கே?

கேள்வி இங்கே! பதில் எங்கே?

ஒரு ராஜா இருந்தார். அவரைப் பார்ப்பதற்குப் பெரிய ஞானி ஒருவர்
அடுத்தநாள் காலையில் அரசசபைக்கு வருவதாக இருந்தது.

ராஜாவிற்கு இரவு முழுவதும் தூக்கமில்லை. பலத்த சிந்தனையில்
இருந்தார். வருகின்ற ஞானியைக் கேள்விகேட்டு பதில் சொல்ல முடியாதபடி
அவரைத் திணறடிக்க வேண்டும் என்ற ஆதங்கம் மேலிட்டிருந்தது.

இரவு முழுவதும் யோசித்து மூன்று கேள்விகளைத் தயார் செய்தார்.
மூன்றுமே நல்ல கேள்விகள்.

காலையில் சபைக்கு வந்த ஞானியிடம் அரசன் கேள்விகளைக் கேட்க,
அரசனின் எதிர்பார்ப்பை முறியடித்து மூன்று கேள்விகளுக்குமே
அற்புதமான பதிலைச் சட்டென்று சொல்லிவிட்டார் அவர்.

கேள்விகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

1.தினமும் குறைந்து கொண்டே இருப்பது எது?
2.தினமும் அதிகமாகிக் கொண்டே இருப்பது எது?
3.தினமும் குறைந்து கொண்டேயும், அதே நேரத்தில் அதிகமாகிக் கொண்டும் இருப்பது எது?

உங்களுக்குத் தெரிந்தால் பதில்களைப் பின்னூட்டமிடுங்கள்.

ஞானி சொன்ன பதில்கள் நாளையப் பதிவில்!

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

10 comments:

ஜாவா said...

1.புவியில் வாழப்போகும் நாட்கள்
2.வயது
3.(நன்றாக குழப்பிவிட்டீர்)
சந்திரன்(அம்மாவாசை,பவுர்ணமி என மாறி மாறி தேய்ந்து வளர்கிறது அல்லவா)

SP.VR. SUBBIAH said...

தாம்பரம் ஜாவா - நீங்கள் சொன்ன பதிலில் ஒன்று மட்டும் சரி

Madhan said...

Sir,

Answers as follows,

1. Life time
2. Age
3. --
pls tell us the answers
regards,
madhan

சதங்கா (Sathanga) said...

1. நாகரிகம்
2. வயது
3. பிறவி

வித்யா கலைவாணி said...

1. மனிதனின் ஆயுட்காலம்
2. மனிதனின் வயது
3. தெரியவில்லை

SP.VR. SUBBIAH said...

1.மதன்
2.சதங்கா (Sathanga)
3.வித்யா கலைவாணி

மூவருமே ஒரு கேள்விக்குரிய விடையைத்தான் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்
மற்ற இரண்டு விடைகள் முக்கியமானவை

மற்றவர்களும் முயலுட்டுமே!
அதனால் சரியான விடை நாளை வெளியிடப்படும்

சேதுக்கரசி said...

1 - ஆயுள் (தப்பு தானே?)
2 - வயது
3 - ஹிஹி

Anonymous said...

1) Punniyam
2) Paavam
3) Inbam / Thunbam

SP.VR. SUBBIAH said...

சரியான விடை இதுதான் (அதாவது ஞானி சொன்னது)

1. மனிதனின் ஆயுள்
2. மனிதனின் ஆசைகள்
3. இயற்கை (Nature) - மரம், செடிகொடிகள், பறவைகள், பூச்சிகள், விலங்குகள், மனிதன் போன்ற இறைவனின் இயற்கைப் படைப்புகள்

அன்புடன்
வாத்தியார்

மதி said...

நான் நினைதேன் நீங்க சொல்லிவிட்டிர்கள் குருவே....
சிந்திக்க வைத்தமைக்கு நன்றி