✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 78
Date 10-10-2022
New Lessons
பாடம்
எண்
78
பாடம் அரிஷ்ட யோகம்
(படுக்கவைக்கும் யோகம்)
நாமாகப் படுத்தால் அதற்கு அர்த்தம்
வேறு. வேறு யாராவது அல்லது வேறு ஏதாவது சூழ்நிலையில் நாம் படுக்க நேர்ந்தால்
அதன் பொருள் வேறு.
நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம்மைப் படுக்க வைக்கும் யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடம் கீழே உள்ளது.
இவைகள் பொது விதிகள்.
தனிப்பட்டவர்களின் ஜாதகங்களுக்கு, சுபக்கிரகங்களின்
அமைப்பை வைத்துப் பலன்கள் மாறுபடும்.
ஆகவே அவசரப்பட்டு முடிவிற்கு
வராதீர்கள். அதேபோல ஹோம் ஒர்க் நோட்டு புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு வந்து, என்னுடைய
ஜாதகத்தை வைத்து இதற்கு விளக்கத்தை
எழுதிக்கொடுங்கள் சார் என்று யாரும் கேட்காதீர்கள். உங்களுக்கு நீங்களே
பாருங்கள். இவை எல்லாம் மேல் நிலைப்
பாடங்கள். அதை நினைவில் வையுங்கள்!
----------------------------------------------------------
அரிஷ்ட என்பது வடமொழிச்சொல். அது தீங்கு (evil) என்று பொருள்படும்.
அரிஷ்டயோகம் என்பது தீங்கை விளைவிக்கக்கூடிய தன்மையையுடைய யோகம் என்று பொருள்படும். அதேபோல ஆபத்தானது என்றும் பொருள் படும்.
உதாரணத்திற்குப் ‘பாலஅரிஷ்டம்’ என்பது பால + அரிஷ்ட = குழந்தைக்கு
ஆபத்தை விளவிக்கக்கூடிய என்று பொருள்படும்
+++++++++++++++++++++++++++++++++++++++++
அரிஷ்ட யோகம் 1
(அவயோகம்தான்)
தீங்கை விளைவிக்கக்கூடிய கிரக அமைப்பு!
1
லக்கின அதிபதி, 6, 8, அல்லது 12ஆம் அதிபதிகள் எவரேனும் ஒருவருடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது
பார்வையில்
இருக்க நேர்ந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.
பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.
2.
எட்டாம் வீட்டு அதிபதி 12ஆம் வீட்டுக்காரனுடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது அவனுடைய பார்வையைப் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு இந்த யோகம் உண்டு.
பலன்: ஜாதகன் தன்னுடைய உடல் ஆரோக்கியம் கெட்டு அவதிப்படுவான்.
அன்புடன்,
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com