மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.4.12

Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?


........................................................................................................
Doubts: தொகுதி அமைச்சரை எப்போது பார்க்க வேண்டும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஒன்று!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-----------------------------------------------------------------------
email no.1
திருமதி.நாகேஸ்வரி வெங்கடேசன்

ஐயா
பரல்கள் படிக்கும் போது சுய வர்க்கம் (Example சூரியன் சுயவர்க்கம் etc) இன்று கூறி உள்ளீர்கள் . சுய வர்க்கத்திற்கு அர்த்தம் கூறினால் நன்றாக இருக்கும். தொல்லைக்கு மன்னிக்கவும்

சுயவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் தனிப்பட்ட வலிமை (Strength of an individual planet) அதை எப்படித் தெரிந்து கொள்வது என்பதை ஒரு உதாரண ஜாதகத்துடன் விளக்கியுள்ளேன். கணினியில் ஜாதகத்தைக் கணித்தீர்கள் என்றால் அத்தனை விவரங்களும் உங்களுக்குக் கிடைக்கும்
-------------------------------------------------------------------------
ஜாதகத்தின் பிறப்பு விவரம்!
படங்களின் மீது கர்சரை வைத்து அழுத்தினால்
படங்கள் பெரிதாகத் தெரியும்
அட்டவணை 1

அட்டவணை 2அட்டவணை 3
அட்டவணை 4


அட்டவணை 5


அட்டவணை 6
-------------------------------------------------------------------------
email no.2
கண்ணன் சீதாராமன்

குருவே!
வணக்கம்
1. எம்பெருமான் மாயகண்ணன்!!! ஏன் தனது தாய், தந்தையரை விட்டு விட்டுச் சென்றார்? (எத்தனையோ நபர்கள் இருக்க ) யசோதை @ நந்தகோபரிடம் ஒப்படைக்க காரணம் என்ன ? பெற்றோரை பகவானே தவிக்க விட்டது தவறு இல்லையா ?

என்ன குழப்புகிறீர்கள்? பிறந்த குழந்தையை அதன் தாய் தேவகியும், தந்தை வாசுதேவரும் அல்லவா யசோதை -  நந்தகோபர் தம்பதியிடம் ஒப்படைத்தார்கள். அதற்கு ஒரு வலுவான காரணம் இருந்தது. கிருஷ்ண புராணத்தை மீண்டும் நன்றாகப் படியுங்கள்.

2. இன்றைய சூழலில் யசோதை @ நந்தகோபர் போல், ஒரு சாதரணமான குழந்தையை, தனது குழந்தையாக ஏற்றுக்கொள்ள முடியுமா?

ஏன் முடியாது! மனதிருந்தால் முடியும். குழந்தை இல்லாத எத்தனையோ பெற்றோர்கள் அதைச் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்

3. ஐயா தவறான கேள்வி என தாங்கள் நினைத்தால் விட்டு விடவும் . இங்கு இணைத்துள்ள கண்ணனின் படம் ஓர் வணிக வகுப்பில் உள்ள குடும்பத்தில் உள்ளது. அடியனும் அதே வகுப்புத் தான், அவர்களை அடையாளம் காண குருநாதர் தான் வழி சொல்ல வேண்டும். ஏன்னெனில் அவர்களிடம் உள்ள கண்ணனின் படத்திற்கும் அடியேனுக்கும் சம்பந்தம் உண்டு என்று ஒரு மகான் சொல்லி உள்ளார் . அது எந்த அளவில் உண்மை என்பது எனக்கு தெரியாது ஐயா!!

இனம், வகுப்பு, பணம், பொருள் எனும் மாயைகளை எல்லாம் உதறிவிட்டு, இறைவனை வணங்குங்கள். எல்லா அடையாளங்களையும் உரிய நேரத்தில் அவன் காட்டுவான்!
------------------------------------------------------------
email no.3
சரவணகுமார்

Dear Sir,
The below are my doubts, Those are really important sir. Please answer them,

1. கால சர்ப தோசம் உள்ளவர்கள் ஆண் , அதே தோசம் உள்ள பெண்ணை மட்டுமே திருமணம் செய்யவேண்டுமா?

தோஷம் உள்ளவர்கள், தோஷம் உள்ள பெண்ணை மணப்பது நல்லதுதான். மைனஸ் பெருக்கல் மைனஸ் ப்ளஸ் ஆகிவிடும். முதலில் நல்ல வரன் கிடைப்பது கஷ்டம். ஆகவே உங்களை மணந்து கொள்ள ஒரு பெண் சம்மதித்தால் அதுவே பெரிய பாக்கியம். இந்தக் காலத்துப் பெண்கள் மிகவும் உஷாரானவர்கள். அதனால் இதைச் சொல்கிறேன்., இறைவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு மணந்து கொள்ளுங்கள். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான். இப்போதே திருமண வயதைக் கடந்து விட்டீர்கள். ஜாதகத்தைப் பார்த்துப், பார்த்து, வயதையும், பெண்ணையும் கோட்டைவிட்டு விடாதீர்கள்.

2. பாதகதிபதியின் திசையில் மரணம் நிகழுமா? eg. மேஷ லக்னம், 8 இல் செவ்வாய் & சனி, சனி திசையில் மரணமா?

உங்கள் வயதிற்கு மரணத்தைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது.மரணம் வரும்போது வரட்டும். அதற்காகக் கவலைப் பட்டு, இருக்கிற பொழுதை எதற்காக வீணாக்க வேண்டும்?

3. எனக்கு துலாலக்னம், சனி திசை. (யோகா திசை) அனால் சனி 11 இல் சிம்மம் - பகை. 44 பரல்கள், சுயவர்க்க பரல் 6. சனி திசை எனக்கு நல்லதா அய்யா?

11, 44, 6 என்ற எண்ணிக்கைகளைப் போட்டு நீங்களே பதிலைச் சொல்லிவிட்டீர்கள். பிறகென்ன? மகிழ்ச்சியாக இருங்கள்.

4. 7 இல் சந்திரன் &  கேது இருந்தால், கேட்ட பெண்கள் சாகவசம் ஏற்படும். (பாடத்தில் படித்தேன்). குருவின் 9 ஆம் பார்வை இருந்தால் இந்த தோசம் நிவர்த்தியா?

அதே பாடத்தை மீண்டும் படியுங்கள். குரு பார்த்தால் தீமைகள் விலகிவிடும்/குறையும் என்று எழுதியிருப்பேன்

5. ஒரு ஜாதகத்தில் சுக்ரன் நீசம் அனால், வேறு என்ன கவனிக்க வேண்டும் அய்யா? திருமண சமாச்சாரத்திற்கு சுக்ரன் முக்கியம் அல்லவா? அவரே 5 ஆம் அதிபதியாகவும் வருகிறார். மிதுன லக்னம், 4 இல் சுக்ரன் நீசம்?

சுக்கிரனை மட்டும் பார்த்து ஓட்டுப்போட்டால் போதுமா? உங்கள் தொகுதியையும் அதன் அமைச்சரையும் பாருங்கள். அதாவது உங்கள் ஜாதகத்தின் ஏழாம் வீட்டையும், அதன் அதிபதி குரு பகவானின் வலிமையையும் பாருங்கள்
------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

18 comments:

Ananthamurugan said...

Good!repost thanks sir..

seethalrajan said...

குருவே!
வணக்கம்,

மிக அவலொடு எதிர்பார்த பகுதி இது குருவே!

1.ஒரு கிரகத்தின் சாரம் என்றால் என்ன? அதை எப்படி பார்பது, அந்த கிரகம் அமரும் நட்சத்திரம் தான் அதன் சாரமா? குருவே ஒரு கிரகம் ஒரு விட்டில் அமரும் பொது அந்த வீட்டின் பலனை எத்தனை சதவிதம் தரும்?

2.அந்த கிரகத்தின் ஆதிபத்தியத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?

3.அந்த கிரகத்தின் பார்வை எத்தனை சதவித பலனை தரும்?

4.அது அமரும் நட்சத்திர நாதனின் பலன் எத்தனை சதவிதமாக இருக்கும்?

5.அது பெறும் சாரத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?

உங்கள் பதிலை அவலொடு எதிர்பக்கிறென்.

sadan raj said...

அன்புள்ள ஐயா,மேற்கண்ட உதாரணத்தில் ஒரு தவறு உள்ளது.அட்டவணை 6ல் லக்கினம் தனுசு எனவரவேண்டும்.என் சிற்றரிவுக்கு எட்டியது.தவறாக இருந்தால் மன்னிக்கவும்

Maaya kanna said...

வாத்தியார் ஐயா விற்கு அடியவனின் முதற்க்கண் வணக்கம்.

கண்டிப்பாக தாங்கள் பதில் கூருவிர்கள் அல்லது கூறவேண்டும் என்பது எமது விருப்பம் ஐயா! . தங்களுக்கு ஒன்றை கூற விருப்புகின்றேன் ஐயா! அதுவும் உள்ள அன்போடு பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் நபரை மரியாதை நிமிர்த்தமாக ஆசிரியர் அல்லது ஆசிரியை என்று விபரம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது நிர்பந்தத்தின் வழியாக அல்லது பெயராலோ கூறுவோம் அல்லது யாம் கூறி உள்ளேன் .

அந்த பள்ளி , கல்லூரி நாட்களுக்கு பின்னர் தற்பொழுது தான் வாய் நிறைய உள்ள அன்போடு ஐயா ! ஐயா ! என்று மனதார யாம் கூறிய நபர் அல்லது கூறும் நபர் கூறபோக நபர் நீங்கள் தாம் ஐயா! இதற்க்கு மேலே பழனி ஆண்டியின் கைவசம் தான் எல்லாம் இருக்கு . . வேதம் புதிது படத்தில் ஒரு வசனம் வரும் மிகவும் அற்புதமாக திருவாளர் பாரதிராஜா அவர்கள் இயக்கி இருப்பார்கள் சாதி இல்லை , சாதி இல்லை என்று கூறும் தாங்களே நூற்றுக்கு முன்னுறு தடவை பாலுத்தேவர் பரம்பரை! பாலு தேவர் பரம்பரை என்று கூருகின்றிர்களே . பாலு என்பது தங்களின் பெயர் தேவர் என்பது தாங்கள் படித்து வாங்கிய பட்டமா என்று ? நான் கரை ஏறிவிட்டேன் நீங்கள் இன்னும் கரை ஏறாமல் உள்ளீர்கள் என்று.

மேற்கண்ட படத்தின் வசனம் போல நூற்றுக்கு முன்னுறு தடவை தங்களை ஐயா! ஐயா! என்று கூறிய , கூறுகின்ற அல்லது கூற போகும் நல்ல தொரு ஆத்மா தாங்கள் தான்.

தற்பொழுது கேள்வி பாடத்திற்கு வருகின்றேன் ஐயா . தங்களுக்கும் மற்றும் வகுப்பறைக்கு வரும் அனைத்து நபருக்கும் நன்கு தெரிந்து இருக்கும் அல்லது தெரிந்த ஒன்றை இங்கு ஞாபகபடுத்தும் பொருட்டு மீண்டும் கூறுகின்றேன் . அது என்ன வென்றால் மற்றவர்களால் பெயர் சூட்ட பட்ட நமது " இந்து "! மதத்தில் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது .
சரிதானே ஐயா.

சரி ! மதம் மதமாகவே இருக்கட்டும் . எமது கேள்வி என் ஒன்று ?

இரை தூதுவர்கள் என்று இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் வந்து உள்ளார்கள் .நாம எல்லோரும் கௌரவம் பார்காமல் ஒத்து கொள்ள வேண்டிய செய்தி அல்லது விஷயம் அவர்கள் கூறியதிலும் உண்மை உள்ளது. மேலும் சற்று பொறுமையாக நமது அறிவை வளர்த்து கொள்ளும் பொருட்டு மற்ற அதாவது நமது மதத்தை மட்டும் பார்க்காமல் மற்ற இரை தூதுவர்கள் கூறியவற்றை பார்த்தால் நன்கு புரியும் . ஒன்றுக்கு லாக்கு இல்லாத மரமண்டைக்கும் நன்கு புரியும் படி நல்ல செய்தியை அவர்கள் கூறியவற்றில் உள்ளது . சாரி தானே வாத்தியார் ஐயா!.

உலகத்திற்கு நற் செய்தியை கூறியவருக்கு பிற்காலங்களில் வரும் அல்லது வந்த அல்லது வந்துகொண்டு இருக்கும் மத பிரச்சனை மட்டும் எப்படி அவர்களுக்கு தெரியாமல் போனது. இந்த பிரச்சனையால் எத்தனை லட்சம் மற்றும் கோடி உயிர் , உடல், பொருள் சேதம் ஐயா வேறு வாக்கில் கூறுவது என்றால் முக்கியமாக அனைத்து பிரச்சனைக்கு மூல முக்கிய காரண காரியமே இந்த பாலகி போன மத கோட்பாடு தானே ஐயா ?

பிற்காலத்தி முக்கியமான பிரச்சனைக்கு மூல காரண காரியமாக வரும் " மத " பிரச்சனை மட்டும் எப்படி தெரியாமல் போனது அவர்க்களுக்கு ஐயா ? . இது தான் நீண்ட நெடு வருடம்மாக எமது மனதை உறுத்திக்கொண்டு இருந்த கேள்வி ஐயா?

Maaya kanna said...

கேள்வி என் இரண்டு ?

தாங்கள் நேற்றைய பாடத்தில் நெத்தியில் அடித்தது போல கூறி இருந்தீர்கள் . தனது ஜாதகம் அல்லது தனக்கு மட்டும் பயன் தரும் கேள்வியை யாரும் மிகவும் புத்தி சாதூரியமாக கேக்கவேண்டாம் என்பது . ஆனால் யாம் இந்த வகுப்பறைக்கு வந்து , அன்பு, பாசம், நேசம், நட்பு, விவேகம் , புத்திசாலிதனம், மனிதாபிமானம், காருண்ணியம் , தர்மம், என இவற்றுள் ஜோதிடமும் படிக்கின்றேன் ஐயா. மேற்கண்டதை தங்களிடம் இருந்து படித்த காரணத்தால் இந்த கேள்வி? எமது எண்ணப்படி என்னை போன்ற சிலருக்கும் இந்த கேள்வி பயன் படும் என்பது எமது எண்ணம், அவிப்பிராயம் ஆகும்.

அதாவது என்னுடைய தந்தையார் உடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள் . என்னுடைய தந்தையார் தான் மூத்தவர், ஆனால் மூன்று நபர்களும் அரசாங்க வேலையில் இருந்தவர்கள் . இவற்றுள் எமது தந்தையார் இறந்து சுமார் 14 வருடம் ஆகுது. இரண்டாவது உள்ளவருக்கு ஒரு பெண், இரண்டு ஆண்கள் . அதில் ஒரு பையனுக்கு ( தம்பி) மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. மூன்றாவது நபருக்கு இது வரைக்கும் குழந்தை இல்லை . சித்தப்பாவிற்கு தமிழ் நாடு தலைமை செயலகத்தில் நல்ல தொரு வேலை , சித்த்திக்கு ஒரு பள்ளி கூடத்தில் ஆசிரியையாக உள்ளார்கள்.

சென்னையில் சொந்தமான வீடு, பூர்விகமான செங்கோட்டையிலும் வீடு உள்ளது . எமது தந்தையார் உட்பட மூன்று நபருக்கும் ஜோதிடம் தெரியும் , மேலும் சென்னையில் உள்ள இரண்டாவது சித்தப்பாவிற்கு மிகவும் நன்றாக ஜாதகம் பார்க்க தெரியும்.
மேலும் நமது பாரம்பரியம் , சாஸ்திர சம்பிராதயத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள் . இதனால் குழந்தைக்கு வேண்டி அவர்கள் மாற்று முறை என ( மருத்துவம்) எதனையும் செய்ய வில்லை தெய்வமாக தந்தாள் போதும் இல்லை எனில் விதி போல அமையட்டும் என்று இன்று வரை ஒரு குழந்தையை தத்து கூட எடுத்து வளர்க்காமல் உள்ளார்கள் . இன்னும் மூன்று வருடத்தில் அவர்களுடைய ஓயவி அடைய இருக்கின்றனர்.

இதில் ஆரம்ப காலத்தில் வசதி இல்லாத வீடு தந்தையார் வழியில். தாயார் வழியில் முற்றிலும் மாறாக நன்கு வசதி உள்ள வீடு . தெரியாத்தனமாக எமது தந்தையாருக்கு கல்யாணம் செய்து எமது தாத்தா கொடுத்து விட்டார் . அப்பா ராணுவத்தில் இருந்தமையால் எமது தாயார் மட்டும் தந்தையார் வீட்டில் இருந்தார்கள் ஒரு வருடமாக . அங்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் . ஆதலால் எனது அம்மா! தாய் வீட்டுக்கு வந்து விட்டார்கள். எமது தாத்தாவும் ( அம்மா வழி) மகளை பொன் போல பார்த்து கொண்டார் . சொத்து சுகம் என எமது தாயுடைய தாய் இறக்கும் பொழுது கூட இன்றைய மதிப்புக்கு குறித்த பட்சம் 15 லட்சத்திற்கு மேலே மதிப்பு உள்ள இடத்தை எனது அம்மா பேருக்கு கொடுத்து உள்ளார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ஐயா.

மேலும் ஆண்பிள்ளைக்கு சமமாக உனக்கும் சொத்து தருகின்றேன் என்று ஆறுதல் , தேறுதல் கூறி மகளை உயிர் உள்ளவரைக்கும் நன்றாக பார்த்து கொண்டார் தாத்தா . தாத்தா காலத்திற்கு பின்னர் மாமன் மார்களின் சதியால் அம்மாவிற்கு சேரவேண்டிய கோடிகணக்கான சொத்தை மாமன் மார்கள் வைத்து கொண்டு தரவில்லை . கோர்டில் கேஸ் நடக்குது இந்த வருடத்தில் அல்லது இன்னும் ஒரு சில மாதத்தில் அம்மாவிற்கு கிடைக்க வேண்டிய சொத்து வரும் என்பது 90 % உண்மையான நிலைமையில் உள்ளது.

என்னுடைய அம்மா! புகுந்த வீட்டில் ஒன்றும் இல்லாமல் மற்ற மைத்துனர்கள் மற்றும் மாமியார் கஷ்டபடுவதால் தன்னுடைய தந்தை வழி சொத்து வழியாக பணமாக, பொருளாக கொடுத்து இரண்டு மைத்துனருக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் எனது அம்மாவால் முடிந்த அளவிற்கு பார்த்துகொண்டார்கள். ஆகையால் எமது அம்மா மேல இரண்டாவது சித்தப்பாவிற்கு அளவிற்கு அதிகமான மரியாதை, பாசம் என நிறைய கூறலாம்.

Maaya kanna said...

எல்லாம் வல்ல எம்பெருமான் திருசெந்தில் ஆண்டவனின் அருளால் இன்றைய நிலைமைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நானும் பார்த்து கொண்டு உள்ளேன் ஐயா.

யாம் தங்களுடைய மாணவனாக இருந்தாலும் ஜோதிட கலையில் நன்கு தேர்தவர்களிடம் ஜாதகத்தை பார்த்த பொழுது வரும் வைகாசிக்கு மேலே வரும் பெண்ணை பாருங்கள் கண்டிப்பாக நல்ல தொரு பெண் அமையும் என்று கூறியதாக சில தினங்களுக்கு முன்னர் எமது அம்மா கூறினார்கள்.

என்னுடைய அப்பா வழி தாத்தா பரம்பரையில் எல்லோரும் ஒரு ஆணாகவே மூன்று தலை முறையாக வந்துள்ளனர் . பின்னர் தாத்தா கூட பிறந்தது மட்டும் ஒரு தம்பி அவருக்கு மூன்று பெண் , ஒரே ஆண் . அந்த ஆணுக்கு மூன்று பெண்கள் மட்டும். அங்கு ஆண் வாரிசு இல்லை . ஆகையால் அடியேன் தான் இந்த தாத்தா , ஆச்சி இறந்த பொழுது அவர்களுடைய அஸ்தியை கன்னியாகுமரி கடலில் சென்று கரைத்து வந்தேன் ஐயா.

தற்பொழுது உள்ள மூன்று ஆண்களில் கடைசி சித்தப்பாவிற்கு தான் குழந்தை பாக்கியமே இல்லாமல் உள்ளார்கள். யாவரும் கேட்டால் அண்ணன் மகன் உள்ளானே அவன் நன்றாக இருந்தால் அதுவே போதும் அதுவே நாங்கள் செய்த பெரும் பாக்கியம் என்று இந்த சித்தப்பா & சித்தியும் கூறுகின்றனர் ஐயா நானும் கூறுவதை கேட்டும் பார்த்தும் உள்ளேன் ஐயா.

என்னுடைய ஆசையும் குழந்தை பாக்கியமே இல்லாமல் உள்ள சித்தப்பா சித்தியை தான் கல்யாணம் என்ற சாஸ்திர சடங்கின் பொழுது தாய் , தகப்பன் ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்பது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ஆசை .

மற்றவர்களுக்கு ஆணோ! பெண்ணோ! உள்ளது . இவர்களுக்கு அந்த பாக்கியம் கூட இல்லை . அவர்களின் மனதிலையும்
நமக்கு என்று எதோ ஒரு குழந்தை இருந்தால் ஊரு அறிய எவ்வளவு சிறப்பாக கல்யாணம் முதல் எத்தனையோ சடங்கு சாஸ்திரம் என அனைத்தையும் செய்து பார்க்கும் ஆசை இருக்கும் இல்லையா ஐயா?

மினிமம் இன்னும் நான்கு மாதத்தில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்ய அனைவரும் தயாராக உள்ளார்கள்.கெட்ட காலம்கள் கழியட்டும் அனைவரும் உள்ளோம் ஐயா.

தற்பொழுது யாம் கேற்பது ஒன்றே ஒன்று தான்

இந்த குழந்தை இல்லாத மூன்றாவது சித்தப்பாவை ஒருவரும் இல்லாத அனாதையாக ஆக்க அணு அளவு கூட விருப்பம் இல்லை.
கல்யாணம் என்ற சாஸ்திர சடங்கின் பொழுது தாய் , தகப்பன் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது என்பது
நடை முறை வாழ்க்கைக்கு சரியாக வருமா என்பது தான் அடியவனின் ? ஐயா ......................................................

thanusu said...

"சுயவர்க்கம் என்பது ஒரு தனிப்பட்ட கிரகத்தின் வலிமை"

சுய வர்கத்தில் அதிக பரல்கள் இருந்தாலும் ஒரு கிரகம் நீசமானால் அதன் பலனை 0 என்று கொள்வதா, பரல்கள் அதிகம் இருந்ததால், குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் அது கொடுக்கும் பலன் நீசத்தை விட அதிகமாக இருக்குமா.

இந்த உதாரண ஜாதகத்தில் செய்வாய் நீசம். ஆனால் சுய பரல்கள் 4 . சுய பரல்கள் 4 எனும் போது சுமாரான பலன்கள் கிடைக்கும் . ஆனால் நீசம். அத்துடன் தோஷம் இதனை எப்படி கணக்கு செய்வது என்பது தான் புரியவில்லை அய்யா.

தேமொழி said...

கண்ணா, நீங்கள் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி மனதைத் தொட்டுவிட்டது.
ஆசிரியர் சொல்லும் பதில் எதுவாகா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் என் மனதில் உள்ளதை நான் சொல்ல விரும்புகிறேன்.
பெற்ற தாய் தந்தையர் மீதே மரியாதை சிறிதும் இன்றி திருமணநாளில் சடங்கு என்ற ஒரே காரணத்திற்காக பாத பூஜை செய்தவர்களை நானறிவேன். வீட்டிலோ பெற்றோர்களுக்கு மரியாதை சிறிதும் கொடுத்திருக்க மாட்டார்கள் (நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா, தம்பி நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா என்று கண்ணதாசன் பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்).

உங்களைப் போன்ற நல்ல மகனைப் பெற்ற உங்கள் சிறிய தந்தையும், சிறிய தாயும் உங்களைப் போலவே போற்றப் பட வேண்டியவர்கள். சாஸ்திரப்படி திருமணம் செய்ய நீங்கள் நினைத்தால், உங்கள் தந்தை மறைந்த காரணத்தினால் உங்கள் சித்தப்பாவும் அவர் மனைவியுமே உங்கள் பெற்றோர் இடத்தில் இருந்து செய்ய வேண்டிய சூழலும் ஏற்படக் கூடும், ஆனால் இது உங்கள் இரண்டாவது சித்தப்பாவின் குடும்ப சூழலைப் பொருத்தது.

நீங்களாக முடிவெடுத்தால் வாரிசற்ற சொத்துக்கு அடிபோடுவதுபோல் உங்கள் முயற்சி இருப்பதாக மற்றவர் பேசக்கூடும். எனவே உங்கள் அன்பை கீழ்த்தரமாக அடுத்தவர்கள் விமரிசிக்க வாய்ப்பளிக்காமல் முடிவு எடுப்பதில் கவனமாக இருங்கள்.

Kalai said...

நான்கு நாள் இடைவெளிக்கு பிறகு பதிவுக்கு வருகிறேன். நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக சந்தோசம். நிறைய ஆர்வத்தோடு படிக்க உள்ளேன்.பின்னோடதிலே எனக்கொரு சந்தேகம், அய்யா என்றில்லை , யார் வேண்டுமானாலும் பதில் சொல்லுங்கள்.
லக்ன பரல்கள் பூஜ்ஜியம் என்றால் என்ன அர்த்தம்? அதாவது லக்ன பலன் நீசம் என்று கருத வேண்டுமா?
Lagna refers to physique. will neesa leads to any disablities?
ஒருவருக்கு லக்னமும் , ராசியும் ஒன்றாக இருக்கும் போது ,லக்ன சுயவர்க்க பரல் பூஜ்ஜிமாக இருக்குமா? அப்படி இருந்தால் பொது பலன் என்ன ?
I have seen in couple of horoscopes, in which SAV I could see more than 20 in each raasi , whereas in lagna (AS) I could see only zero. One have said that it leads to abundance of wealth.
how could zero paralkal will give that???. - Kalai Seattle

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ananthamurugan said...
Good!repost thanks sir..////

எல்லாம் உங்களுக்குக்காகத்தான். ஆனந்தமாக இருங்கள் ஆனந்தமுருகன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger seethalrajan said...
குருவே!
வணக்கம்,
மிக ஆவலொடு எதிர்பார்த பகுதி இது குருவே!
1.ஒரு கிரகத்தின் சாரம் என்றால் என்ன? அதை எப்படி பார்பது, அந்த கிரகம் அமரும் நட்சத்திரம் தான் அதன் சாரமா? குருவே ஒரு கிரகம் ஒரு விட்டில்

அமரும் பொது அந்த வீட்டின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
2.அந்த கிரகத்தின் ஆதிபத்தியத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
3.அந்த கிரகத்தின் பார்வை எத்தனை சதவித பலனை தரும்?
4.அது அமரும் நட்சத்திர நாதனின் பலன் எத்தனை சதவிதமாக இருக்கும்?
5.அது பெறும் சாரத்தின் பலனை எத்தனை சதவிதம் தரும்?
உங்கள் பதிலை அவலொடு எதிர்பக்கிறென்.//////

ஒரு கிரகம் அமர்ந்திருக்கும் நட்சத்திரம்தான் அதன் சாரம். வீட்டின் பலனை அதன் அதிபதிதான் தருவார், அமர்ந்திருக்கும் கிரகம் தன்னுடைய பலன்களை
தன்னுடைய தசாபுத்திகளில் தரும். எத்தனை சதவிகிதம் தருவார் என்று அளந்து பார்ப்பதற்கு அளவுகோள்களெல்லாம் இல்லை. சுயவர்க்க வலிமையைப்
பொறுத்து அளவுகள் மாறுபடும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sadan raj said...
அன்புள்ள ஐயா,மேற்கண்ட உதாரணத்தில் ஒரு தவறு உள்ளது.அட்டவணை 6ல் லக்கினம் தனுசு எனவரவேண்டும்.என் சிற்றரிவுக்கு எட்டியது.தவறாக
இருந்தால் மன்னிக்கவும்/////

ஆமாம், 3 மற்றும் 5 ஆக்கிய இரண்டு இடங்களில் கும்பம் என்று தட்டச்சாகி உள்ளது. திருத்தி வாசித்துக்கொள்ளுங்கள். சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா விற்கு அடியவனின் முதற்க்கண் வணக்கம்.
கண்டிப்பாக தாங்கள் பதில் கூருவிர்கள் அல்லது கூறவேண்டும் என்பது எமது விருப்பம் ஐயா! . தங்களுக்கு ஒன்றை கூற விருப்புகின்றேன் ஐயா! அதுவும்
உள்ள அன்போடு பள்ளிக்கூட, கல்லூரி நாட்களில் நமக்கு பாடம் சொல்லி கொடுக்கும் நபரை மரியாதை நிமிர்த்தமாக ஆசிரியர் அல்லது ஆசிரியை என்று
விபரம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ அல்லது நிர்பந்தத்தின் வழியாக அல்லது பெயராலோ கூறுவோம் அல்லது யாம் கூறி உள்ளேன் .
அந்த பள்ளி , கல்லூரி நாட்களுக்கு பின்னர் தற்பொழுது தான் வாய் நிறைய உள்ள அன்போடு ஐயா ! ஐயா ! என்று மனதார யாம் கூறிய நபர் அல்லது
கூறும் நபர் கூறபோக நபர் நீங்கள் தாம் ஐயா! இதற்க்கு மேலே பழனி ஆண்டியின் கைவசம் தான் எல்லாம் இருக்கு . . வேதம் புதிது படத்தில் ஒரு வசனம்
வரும் மிகவும் அற்புதமாக திருவாளர் பாரதிராஜா அவர்கள் இயக்கி இருப்பார்கள் சாதி இல்லை , சாதி இல்லை என்று கூறும் தாங்களே நூற்றுக்கு முன்னுறு
தடவை பாலுத்தேவர் பரம்பரை! பாலு தேவர் பரம்பரை என்று கூருகின்றிர்களே . பாலு என்பது தங்களின் பெயர் தேவர் என்பது தாங்கள் படித்து வாங்கிய
பட்டமா என்று ? நான் கரை ஏறிவிட்டேன் நீங்கள் இன்னும் கரை ஏறாமல் உள்ளீர்கள் என்று.
மேற்கண்ட படத்தின் வசனம் போல நூற்றுக்கு முன்னுறு தடவை தங்களை ஐயா! ஐயா! என்று கூறிய , கூறுகின்ற அல்லது கூற போகும் நல்ல தொரு ஆத்மா தாங்கள் தான்.
தற்பொழுது கேள்வி பாடத்திற்கு வருகின்றேன் ஐயா . தங்களுக்கும் மற்றும் வகுப்பறைக்கு வரும் அனைத்து நபருக்கும் நன்கு தெரிந்து இருக்கும் அல்லது தெரிந்த ஒன்றை இங்கு ஞாபகபடுத்தும் பொருட்டு மீண்டும் கூறுகின்றேன் . அது என்ன வென்றால் மற்றவர்களால் பெயர் சூட்ட பட்ட நமது " இந்து "!
மதத்தில் ஆய கலைகள் அறுபத்தி நான்கும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது . சரிதானே ஐயா.
சரி ! மதம் மதமாகவே இருக்கட்டும் . எமது கேள்வி என் ஒன்று ?
இரை தூதுவர்கள் என்று இந்த உலகத்தில் எத்தனையோ நபர்கள் வந்து உள்ளார்கள் .நாம எல்லோரும் கௌரவம் பார்காமல் ஒத்து கொள்ள வேண்டிய செய்தி அல்லது விஷயம் அவர்கள் கூறியதிலும் உண்மை உள்ளது. மேலும் சற்று பொறுமையாக நமது அறிவை வளர்த்து கொள்ளும் பொருட்டு மற்ற
அதாவது நமது மதத்தை மட்டும் பார்க்காமல் மற்ற இரை தூதுவர்கள் கூறியவற்றை பார்த்தால் நன்கு புரியும் . ஒன்றுக்கு லாக்கு இல்லாத மரமண்டைக்கும் நன்கு புரியும் படி நல்ல செய்தியை அவர்கள் கூறியவற்றில் உள்ளது . சாரி தானே வாத்தியார் ஐயா!.
உலகத்திற்கு நற் செய்தியை கூறியவருக்கு பிற்காலங்களில் வரும் அல்லது வந்த அல்லது வந்துகொண்டு இருக்கும் மத பிரச்சனை மட்டும் எப்படி அவர்களுக்கு தெரியாமல் போனது. இந்த பிரச்சனையால் எத்தனை லட்சம் மற்றும் கோடி உயிர் , உடல், பொருள் சேதம் ஐயா வேறு வாக்கில் கூறுவது என்றால் முக்கியமாக அனைத்து பிரச்சனைக்கு மூல முக்கிய காரண காரியமே இந்த பாலகி போன மத கோட்பாடு தானே ஐயா ?
பிற்காலத்தி முக்கியமான பிரச்சனைக்கு மூல காரண காரியமாக வரும் " மத " பிரச்சனை மட்டும் எப்படி தெரியாமல் போனது அவர்க்களுக்கு ஐயா ? .
இது தான் நீண்ட நெடு வருடம்மாக எமது மனதை உறுத்திக்கொண்டு இருந்த கேள்வி ஐயா?/////

அவர்களுக்குத் தெரியாமல் போனது என்று நாம் சொல்வது உசிதமாகாது. இப்போது உள்ள கோளாறுகளுக்கெல்லாம் அவர்கள் காரணமில்லை. சக மனிதர்களே காரணம். எல்லாம் ஒரு நாள் சரியாகும். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Maaya kanna said...
கேள்வி என் இரண்டு ?
தாங்கள் நேற்றைய பாடத்தில் நெத்தியில் அடித்தது போல கூறி இருந்தீர்கள் . தனது ஜாதகம் அல்லது தனக்கு மட்டும் பயன் தரும் கேள்வியை யாரும் மிகவும் புத்தி சாதூரியமாக கேக்கவேண்டாம் என்பது . ஆனால் யாம் இந்த வகுப்பறைக்கு வந்து , அன்பு, பாசம், நேசம், நட்பு, விவேகம் , புத்திசாலிதனம், மனிதாபிமானம், காருண்ணியம் , தர்மம், என இவற்றுள் ஜோதிடமும் படிக்கின்றேன் ஐயா. மேற்கண்டதை தங்களிடம் இருந்து படித்த காரணத்தால் இந்த
கேள்வி? எமது எண்ணப்படி என்னை போன்ற சிலருக்கும் இந்த கேள்வி பயன் படும் என்பது எமது எண்ணம், அவிப்பிராயம்
அதாவது என்னுடைய தந்தையார் உடன் பிறந்தவர்கள் இரண்டு ஆண்கள் . என்னுடைய தந்தையார் தான் மூத்தவர், ஆனால் மூன்று நபர்களும் அரசாங்க
வேலையில் இருந்தவர்கள் . இவற்றுள் எமது தந்தையார் இறந்து சுமார் 14 வருடம் ஆகுது. இரண்டாவது உள்ளவருக்கு ஒரு பெண், இரண்டு ஆண்கள் .
அதில் ஒரு பையனுக்கு ( தம்பி) மட்டும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. மூன்றாவது நபருக்கு இது வரைக்கும் குழந்தை இல்லை . சித்தப்பாவிற்கு தமிழ்
நாடு தலைமை செயலகத்தில் நல்ல தொரு வேலை , சித்த்திக்கு ஒரு பள்ளி கூடத்தில் ஆசிரியையாக உள்ளார்கள்.
சென்னையில் சொந்தமான வீடு, பூர்விகமான செங்கோட்டையிலும் வீடு உள்ளது . எமது தந்தையார் உட்பட மூன்று நபருக்கும் ஜோதிடம் தெரியும் , மேலும் சென்னையில் உள்ள இரண்டாவது சித்தப்பாவிற்கு மிகவும் நன்றாக ஜாதகம் பார்க்க தெரியும்.
மேலும் நமது பாரம்பரியம் , சாஸ்திர சம்பிராதயத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர்கள் . இதனால் குழந்தைக்கு வேண்டி அவர்கள் மாற்று முறை என ( மருத்துவம்) எதனையும் செய்ய வில்லை தெய்வமாக தந்தாள் போதும் இல்லை எனில் விதி போல அமையட்டும் என்று இன்று வரை ஒரு குழந்தையை தத்து கூட எடுத்து வளர்க்காமல் உள்ளார்கள் . இன்னும் மூன்று வருடத்தில் அவர்களுடைய ஓயவி அடைய இருக்கின்றனர்.
இதில் ஆரம்ப காலத்தில் வசதி இல்லாத வீடு தந்தையார் வழியில். தாயார் வழியில் முற்றிலும் மாறாக நன்கு வசதி உள்ள வீடு . தெரியாத்தனமாக எமது தந்தையாருக்கு கல்யாணம் செய்து எமது தாத்தா கொடுத்து விட்டார் . அப்பா ராணுவத்தில் இருந்தமையால் எமது தாயார் மட்டும் தந்தையார் வீட்டில் இருந்தார்கள் ஒரு வருடமாக . அங்கு சாப்பாட்டுக்கே கஷ்டம் . ஆதலால் எனது அம்மா! தாய் வீட்டுக்கு வந்து விட்டார்கள். எமது தாத்தாவும் ( அம்மா வழி)
மகளை பொன் போல பார்த்து கொண்டார் . சொத்து சுகம் என எமது தாயுடைய தாய் இறக்கும் பொழுது கூட இன்றைய மதிப்புக்கு குறித்த பட்சம் 15
லட்சத்திற்கு மேலே மதிப்பு உள்ள இடத்தை எனது அம்மா பேருக்கு கொடுத்து உள்ளார்கள் என்றால் பார்த்து கொள்ளுங்கள் ஐயா.
மேலும் ஆண்பிள்ளைக்கு சமமாக உனக்கும் சொத்து தருகின்றேன் என்று ஆறுதல் , தேறுதல் கூறி மகளை உயிர் உள்ளவரைக்கும் நன்றாக பார்த்து
கொண்டார் தாத்தா . தாத்தா காலத்திற்கு பின்னர் மாமன் மார்களின் சதியால் அம்மாவிற்கு சேரவேண்டிய கோடிகணக்கான சொத்தை மாமன் மார்கள் வைத்து
கொண்டு தரவில்லை . கோர்டில் கேஸ் நடக்குது இந்த வருடத்தில் அல்லது இன்னும் ஒரு சில மாதத்தில் அம்மாவிற்கு கிடைக்க வேண்டிய சொத்து வரும்
என்பது 90 % உண்மையான நிலைமையில் உள்ளது.
என்னுடைய அம்மா! புகுந்த வீட்டில் ஒன்றும் இல்லாமல் மற்ற மைத்துனர்கள் மற்றும் மாமியார் கஷ்டபடுவதால் தன்னுடைய தந்தை வழி சொத்து வழியாக பணமாக, பொருளாக கொடுத்து இரண்டு மைத்துனருக்கு வேலை கிடைக்கும் வரைக்கும் எனது அம்மாவால் முடிந்த அளவிற்கு பார்த்துகொண்டார்கள். ஆகையால் எமது அம்மா மேல இரண்டாவது சித்தப்பாவிற்கு அளவிற்கு அதிகமான மரியாதை, பாசம் என நிறைய கூறலாம்./////

நல்லது. நெகிழவைக்கும் செய்திகளுக்கு நன்றி! இறையருளால் உரிய நேரத்தில் எல்லாம் நடக்கும். பொறுமையாக இருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Maaya kanna said...
எல்லாம் வல்ல எம்பெருமான் திருசெந்தில் ஆண்டவனின் அருளால் இன்றைய நிலைமைக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நானும் பார்த்து கொண்டு உள்ளேன் ஐயா.
யாம் தங்களுடைய மாணவனாக இருந்தாலும் ஜோதிட கலையில் நன்கு தேர்தவர்களிடம் ஜாதகத்தை பார்த்த பொழுது வரும் வைகாசிக்கு மேலே வரும் பெண்ணை பாருங்கள் கண்டிப்பாக நல்ல தொரு பெண் அமையும் என்று கூறியதாக சில தினங்களுக்கு முன்னர் எமது அம்மா கூறினார்கள்.
என்னுடைய அப்பா வழி தாத்தா பரம்பரையில் எல்லோரும் ஒரு ஆணாகவே மூன்று தலை முறையாக வந்துள்ளனர் . பின்னர் தாத்தா கூட பிறந்தது மட்டும் ஒரு தம்பி அவருக்கு மூன்று பெண் , ஒரே ஆண் . அந்த ஆணுக்கு மூன்று பெண்கள் மட்டும். அங்கு ஆண் வாரிசு இல்லை . ஆகையால் அடியேன் தான் இந்த தாத்தா , ஆச்சி இறந்த பொழுது அவர்களுடைய அஸ்தியை கன்னியாகுமரி கடலில் சென்று கரைத்து வந்தேன் ஐயா.
தற்பொழுது உள்ள மூன்று ஆண்களில் கடைசி சித்தப்பாவிற்கு தான் குழந்தை பாக்கியமே இல்லாமல் உள்ளார்கள். யாவரும் கேட்டால் அண்ணன் மகன் உள்ளானே அவன் நன்றாக இருந்தால் அதுவே போதும் அதுவே நாங்கள் செய்த பெரும் பாக்கியம் என்று இந்த சித்தப்பா & சித்தியும் கூறுகின்றனர் ஐயா நானும்
கூறுவதை கேட்டும் பார்த்தும் உள்ளேன் ஐயா.
என்னுடைய ஆசையும் குழந்தை பாக்கியமே இல்லாமல் உள்ள சித்தப்பா சித்தியை தான் கல்யாணம் என்ற சாஸ்திர சடங்கின் பொழுது தாய் , தகப்பன் ஸ்தானத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்பது வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு ஆசை .
மற்றவர்களுக்கு ஆணோ! பெண்ணோ! உள்ளது . இவர்களுக்கு அந்த பாக்கியம் கூட இல்லை . அவர்களின் மனதிலையும்
நமக்கு என்று எதோ ஒரு குழந்தை இருந்தால் ஊரு அறிய எவ்வளவு சிறப்பாக கல்யாணம் முதல் எத்தனையோ சடங்கு சாஸ்திரம் என அனைத்தையும்
செய்து பார்க்கும் ஆசை இருக்கும் இல்லையா ஐயா?
மினிமம் இன்னும் நான்கு மாதத்தில் ஒரு பெண்ணை பார்த்து கல்யாணம் செய்ய அனைவரும் தயாராக உள்ளார்கள்.கெட்ட காலம்கள் கழியட்டும் அனைவரும் உள்ளோம் ஐயா.
தற்பொழுது யாம் கேற்பது ஒன்றே ஒன்று தான்
இந்த குழந்தை இல்லாத மூன்றாவது சித்தப்பாவை ஒருவரும் இல்லாத அனாதையாக ஆக்க அணு அளவு கூட விருப்பம் இல்லை.
கல்யாணம் என்ற சாஸ்திர சடங்கின் பொழுது தாய் , தகப்பன் ஸ்தானத்தில் வைத்து பார்ப்பது என்பது
நடை முறை வாழ்க்கைக்கு சரியாக வருமா என்பது தான் அடியவனின் ? ஐயா???? .....///////

சரியாக வரும்! அதையே செய்யுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger thanusu said...
"சுயவர்க்கம் என்பது ஒரு தனிப்பட்ட கிரகத்தின் வலிமை"
சுய வர்கத்தில் அதிக பரல்கள் இருந்தாலும் ஒரு கிரகம் நீசமானால் அதன் பலனை 0 என்று கொள்வதா, பரல்கள் அதிகம் இருந்ததால், குறிப்பிட்ட கிரகம் குறிப்பிட்ட இடத்தில் இருந்தால் அது கொடுக்கும் பலன் நீசத்தை விட அதிகமாக இருக்குமா.
இந்த உதாரண ஜாதகத்தில் செய்வாய் நீசம். ஆனால் சுய பரல்கள் 4 . சுய பரல்கள் 4 எனும் போது சுமாரான பலன்கள் கிடைக்கும் . ஆனால் நீசம். அத்துடன் தோஷம் இதனை எப்படி கணக்கு செய்வது என்பது தான் புரியவில்லை அய்யா.////

பின் சுயவர்க்கம் பார்ப்பது எத்ற்காக என்று நினைக்கிறீர்கள்? நீசத்தை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு சுயவர்க்கப் பரல்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said...
கண்ணா, நீங்கள் ஆசிரியரிடம் கேட்ட கேள்வி மனதைத் தொட்டுவிட்டது.
ஆசிரியர் சொல்லும் பதில் எதுவாகா வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் என் மனதில் உள்ளதை நான் சொல்ல விரும்புகிறேன்.
பெற்ற தாய் தந்தையர் மீதே மரியாதை சிறிதும் இன்றி திருமணநாளில் சடங்கு என்ற ஒரே காரணத்திற்காக பாத பூஜை செய்தவர்களை நானறிவேன்.
வீட்டிலோ பெற்றோர்களுக்கு மரியாதை சிறிதும் கொடுத்திருக்க மாட்டார்கள் (நன்றி உள்ள உயிர்கள் எல்லாம் பிள்ளை தானடா, தம்பி நன்றி கெட்ட
மகனைவிட நாய்கள் மேலடா என்று கண்ணதாசன் பாடலை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்).
உங்களைப் போன்ற நல்ல மகனைப் பெற்ற உங்கள் சிறிய தந்தையும், சிறிய தாயும் உங்களைப் போலவே போற்றப் பட வேண்டியவர்கள். சாஸ்திரப்படி
திருமணம் செய்ய நீங்கள் நினைத்தால், உங்கள் தந்தை மறைந்த காரணத்தினால் உங்கள் சித்தப்பாவும் அவர் மனைவியுமே உங்கள் பெற்றோர் இடத்தில்
இருந்து செய்ய வேண்டிய சூழலும் ஏற்படக் கூடும், ஆனால் இது உங்கள் இரண்டாவது சித்தப்பாவின் குடும்ப சூழலைப் பொருத்தது.
நீங்களாக முடிவெடுத்தால் வாரிசற்ற சொத்துக்கு அடிபோடுவதுபோல் உங்கள் முயற்சி இருப்பதாக மற்றவர் பேசக்கூடும். எனவே உங்கள் அன்பை
கீழ்த்தரமாக அடுத்தவர்கள் விமரிசிக்க வாய்ப்பளிக்காமல் முடிவு எடுப்பதில் கவனமாக இருங்கள்./////

உண்மைதான் சகோதரி. உங்களின் அறிவுரைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

//////Blogger Kalai said...
நான்கு நாள் இடைவெளிக்கு பிறகு பதிவுக்கு வருகிறேன். நிறைய விஷயங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. மிக சந்தோசம். நிறைய ஆர்வத்தோடு

படிக்க உள்ளேன்.பின்னோடதிலே எனக்கொரு சந்தேகம், அய்யா என்றில்லை , யார் வேண்டுமானாலும் பதில் சொல்லுங்கள்.
லக்ன பரல்கள் பூஜ்ஜியம் என்றால் என்ன அர்த்தம்? அதாவது லக்ன பலன் நீசம் என்று கருத வேண்டுமா?
Lagna refers to physique. will neesa leads to any disablities?
ஒருவருக்கு லக்னமும் , ராசியும் ஒன்றாக இருக்கும் போது ,லக்ன சுயவர்க்க பரல் பூஜ்ஜிமாக இருக்குமா? அப்படி இருந்தால் பொது பலன் என்ன ?
I have seen in couple of horoscopes, in which SAV I could see more than 20 in each raasi , whereas in lagna (AS) I could see only

zero. One have said that it leads to abundance of wealth.
how could zero paralkal will give that???. - Kalai Seattle/////

சுயவர்க்கப்பரல் ஜீரோ என்றாலும், அந்த இடத்திற்கான சர்வாஷ்டக வர்க்கப் பரல்கள் 20ற்கும் மேலே இருந்தால் நல்லது. இல்லையென்றால் பிரயோஜனம் இல்லை.