மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.4.12

Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?


-----------------------------------------------------------------
Doubt: தேவதையா? பிசாசா? எது கிடைக்கும்?

நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் நான்கு!

Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.15
சுபஸ்ரீ கண்ணன்

Sir,
My doubt is,
Will our natalchart/horoscope reflect out previous jenma karma? i mean based on our previous jenma karma only our natal birth chart will appear?
Thanking you sir,
Sincerely yours,
K.Subhashree

எல்லாக் குழந்தைகளுமே தாயின் வயிற்றில் 280 நாட்கள்தான் இருக்கின்றன. அதில் வித்தியாசமில்லை. ஆனால் பிறப்பில் ஏன் இத்தனை வேறுபாடுகள். ஒரு குழந்தை செல்வந்தர் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை குடிசைவாசியின் வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை ரஜினி வீட்டில் அல்லது அம்பானி வீட்டில் பிறக்கிறது. ஒரு குழந்தை கூலிவேலை செய்யும் தொழிலாளி வீட்டில் பிறக்கிறது.ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எல்லாம் இருக்கிறது. ஒரு குழந்தைக்குப் பிறந்த அன்றே எதுவும் இல்லை.(பெற்றவள் குப்பைத் தொட்டியில்வீசிவிட்டுப் போய் விடுகிறாள்) ஒரு குழந்தை அழகோடு பிறக்கிறது. ஒரு குழந்தை அழகில்லாமல் பிறக்கிறது. ஒரு குழந்தை புஷ்டியான தோற்றத்துடன், பார்ப்பவர்களை மயக்கும் விதமாகப் பிறக்கிறது. ஒரு குழந்தை சற்று ஊனத்துடன் பிறந்து பெற்றவர்களைத் துயரப்பட வைக்கிறது. இப்படிப் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டே போகலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன? முன் வினைப்பயன்தான் காரணம்!

முன் வினைப்பயனைத்தான் பூர்வ புண்ணியம் என்று ஜாதகத்தில் உள்ள ஐந்தாம் வீட்டைக் காட்டுவார்கள். அதில் ஒன் லைன் ஸ்டோரிதான் தெரியும். முழுப்படமும் தெரியாது. அதாவது ஜாதகனின் சென்ற பிறவி வரலாறு
22 ரீல்களில் படமாகத் தெரியாது.

ஏன் தெரியாது? தெரிந்தால் ஜாதகன் தன் போன ஜென்மத்து உறவுகளைத் தேடிப்போய்விடுவான். பழைய சேட்டைகளை மீண்டும் தொடர்வான்:-))))

ஒரு பிறவித் தொடர்புகளே தாங்க முடியவைல்லை. இரண்டு பிறவித் தொடர்புகளும் மனிதனுக்கு இருந்தால் என்ன ஆகும்? கடவுள் கருணை மிக்கவர். அதனால் தான் அதைக் காட்டாமல் மனிதனுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்துள்ளார்.

இப்போது சொல்லுங்கள். பிறவியே முன் வினைப் பயனை வைத்துத்தான் எனும்போது, ஜாதகமும் அதைவைத்துத்தானே அமையும்?
--------------------------------------------------------
email No.16
பாலசுப்பிரமணியன் புள்ளிகாட், ரியாத்

1. Can you please let me know what is Vargothama Yogam? Am I right in this question. Is there any such yog. If so , what are the effects of the same please. Is it something related to moon in seventh house from lagna or viceversa. I have already studied your lesson on Vargotham which has something to do with Navamsam..

குழப்புகிறீர்களே? வர்கோத்தமம் என்ன என்பதைப் பற்றிச் சொல்லச் சொல்கிறீர்கள். அதே நேரத்தில் கடைசிவரியில் வர்கோத்தமம் பாடத்தைப் படித்தேன் என்கிறீர்கள்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? ஏன் இந்தக் குழப்பம்? பாடத்தை மீண்டும் படியுங்கள்.

2. I note the lessons on House 10 etc are reproduction from Lessons in 111 to 120. Is that right?

அதில் புதிதாக எழுதப்பட்ட பகுதிகளும் உண்டு. இரண்டையும் பிரின்ட் அவுட் எடுத்து ஒத்துப் பாருங்கள். தெளிவாகும்!

3. My wife is just house wife, but has 35 parals in tenth house (Rishaba). and her 10th house lord (venus) has 7 parals. But she is just housewife and of average I Q. Saturn has 5 parals. Does that mean will she shine in profession, if she goes for job or if she does any business or if she does share trade by herself. (DOB 14.08.1973 at 7.15 am chennai.)

உங்கள் மனைவி சிம்ம லக்கினம். பத்தாம் வீட்டின் இருபுறமும் செவ்வாய், சனி, கேது ஆகிய கிரகங்கள் அமர்ந்து பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுத்துள்ளன. அதனால்தான் 36 வயதாகியும், ஜாதகத்தில் பத்தாம் வீடு வேறு மேட்டர்களில் நன்றாக இருந்தும் அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை! அதோடு பத்தாம் அதிபதி சுக்கிரன் நீசமடைந்துள்ளார். அதிபதியும் முக்கியம்.

இது பொதுக்கேள்விக் கணக்கில் வராது. இருந்தாலும் பதில் அளித்துள்ளேன்

4. I have written this query in my earlier email also, but not received any reply and is reproduced below.You had described benefits or results of Sun being in various houses. You have also described benefits of lord of each house from lagna, placed in various houses.

To quote an example, when sun in 5th house, you have listed some items.

For a person with Midhuna Lagna, Sun being Lord of 3rd house, positionined in 5th house(alone), you have described certain items.

They go in contradiction. In former, it says the person will have small family. In the latter, it is mentioned that the person will have big family. I find the former one was matching in all items with the sample jathakam(It is mine with Guru in Lagna and also in Navamsa) I have chosen. If I adopt the former, can I reject it latter completely or will the latter also become true at some other point of time. Please explain which narration is predominant.

நீங்கள் படித்த அந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கான பாட எண் அல்லது சுட்டியைக் (Link) கொடுங்கள். படித்துப்பார்த்துவிட்டுப் பதில் சொல்கிறேன்

I find this may be the case with other planets also. I will be glad if you can teach me how to interpret, when we find or come across contradictions. Kindly excuse me if it is primitive or if I have missed your explanations if any in other parts of the lessons.

ஜாதகத்தை அலசுவது எப்படி (how to interpret) என்பது மேல் நிலைப் பாடம். பின்னால் அது வரும். பொறுத்திருந்து படியுங்கள்

5. I am going through the lessons only and do not read the comments posted for each lesson. Is there any way to give summary of important points given by you in the comment of portion of each lesson. Otherwise I have to go through comments portion separately.

பின்னூட்டங்களைப் படிப்பதில்லை என்கிறீர்கள். அதை (முக்கியமான பகுதிகளாக) தொகுத்துத்தர வழி உண்டா என்று கேட்கிறீர்கள். உங்களைப் போல எனக்கும் நாள் ஒன்றிற்கு 24 மணி நேரம்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

6. Would also appreciate if you can give the date on which your books will be released.

புத்தகத் தொகுப்பு தயாரிப்பில் உள்ளது. பாடங்களை ஒழுங்கு படுத்தும் வேலை நடந்து கொண்டு உள்ளது. அது முடிந்தவுடன், அச்சாகி வரும். அச்சான பிறகு முறையான அறிவிப்பு வரும். பொறுத்திருங்கள்

Hope I will have answers to the above questions. I am still going through the lessons on second round. It may require few more rounds to understand.

தெளிவதற்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் படியுங்கள். ஒன்றும் குறையாது!

With best regards.
BALASUBRAMANIAN PULICAT
RIYADH.
---------------------------------------
email No.17
மா. திருவேல் முருகன், புது தில்லி.
ஐயா வணக்கம்!

1. ஒரு ஜாதகத்தில் 5ஆமிடத்தில், மாந்தியும் 6ஆமிடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் மன நோய் வரும் என்று நமது வகுப்பறை பதிவில் படித்தேன். அதேபோல், ஒரு ஜாதகனுக்கு வலிப்பு நோய் (Epilepsy) வருவதற்கு என்ன காரணம்? அது எந்த கிரகத்தின் தசாபுத்தியில் தீரும்? அல்லது தீரவே தீரதா? (தயவு செய்து இந்த கேள்விக்கும் பதில் தரவேண்டுகிறேன், குருதேவா...Please...)

Epilepsy can be cured. Since Epilepsy is a disoreder related with head & according to Vedic Astrology Moon governs head.A chronic functonal disease of the nervous system or impairment of consciousness with foaming in the mouth.This problem generally happens to many people in India. According to medical astrology this can be judged when moon, venus, rahu is badly placed conjuncted or delibilated or saturn & ketu aspected.(one of the reasons). நல்ல வைத்தியரிடம் காட்டச்சொல்லுங்கள். அதோடு முழுமனதுடன், நம்பிக்கையுடன் வைத்தீஸ்வரன் கோவிலில் உறையும் வைத்தியநாதனைப் பிரார்த்திக்கச் சொல்லுங்கள். குணமாகும்!

2. மாந்திக்கும் பார்வைகள் உண்டா? உண்டென்றால், எந்தெந்த இடங்கள்?

மாந்திக்குப் பார்வை கிடையாது. வேறு கிரகங்களின் பார்வைகளையும் அது ஏற்றுக்கொள்ளாது. தமிழகத்தில் உள்ள சில ஜோதிடர்கள் மாந்தியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அது ஏன் என்று தெரியவில்லை! கேரள ஜொதிடர்கள் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மாந்தி தான் இருக்கும் வீட்டின் பலன்களைக் கெடுத்துவிடும். Mandhi is supposed to cause flop results in the house it is residing in


3. ஒரு ஜாதகத்தின் நவாம்சத்தில், 7ஆமிடம், சுக்கிரன் இரண்டுமே கெட்டிருந்தால் எந்த மாதிரியான மனைவி அமைவாள்?

உங்களின் மனமும், குணமும் நன்றாக இருந்தால், எந்த மனைவி வந்தாலும் அது ஒன்றுதான். வருகிறவள் தேவதையாக (angel) இருந்தாலும் சரி, அல்லது பிசாசாக (devil) இருந்தாலும் சரி நீங்கள் அவளை வித்தியாசமில்லாமல் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஏழாம் இடமும், சுக்கிரனும் கெட்டிருந்தால், திருமணம் தாமதமாகும் அல்லது திருமணமே ஆகாமல் போகலாம்.

ஏழாம் இடத்து அதிபதி, அவருடன் சேர்ந்திருப்பவர்கள், அவர் பெறும் பார்வையை வைத்துத்தான் மனைவி அமைவாள். ஆகவே அவற்றைப் பாருங்கள்.

ஒரு ஞானி சொன்னான்:

எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல மனைவி கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பான்.

4. லக்கினத்திலிருந்து 7ஆமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெரும்போது "ருச்சக யோகம்" உண்டாகிறது. இந்த ஜாதகன்/ஜாதகிக்கு செவ்வாய் தோஷத்தில் இருந்து விலக்கு உண்டா? இல்லையா?

ஆட்சி, உச்சம் பெற்ற செவ்வாய்க்கு, செவ்வாய் தோஷம் கிடையாது. சில ஜோதிடர்கள் 7 & 8ல் செவ்வாய் இருந்தால், அது எவ்வளவு உயர்வான அமைப்பில் இருந்தாலும் தோஷம் உண்டு என்பார்கள். அவர்கள் அனுபவத்தை வைத்துச் சொல்வார்கள். ஆகவே ரிஸ்க் எடுக்காமல் இருக்க நினைப்பவர்கள், அதற்குத்
தகுந்தாற்போல செவ்வாயைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்!

தங்களின் மேலான பதில்கள் மற்றும் விளக்கங்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும் தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன், புது தில்லி.

விளக்கங்கள் போதுமா திருவேல் முருகன்?
---------------------------------------------------------
email No.18
மதி

இது என் கேள்விகள்,

1. லக்கினத்தில் குரு இருந்தால் மிக நன்மை என்று கூறி உள்ளீர்கள் ஆனால் அதே குரு(சுயபரல் 5 )வக்கிரமாக இருந்தால் குரு (4,7க்கு உடையவன்) ,உடன்
வக்கிர பெற்ற சனி( சுயபரல் 2), வீட்டின் பரல் 29, சனி (5,6க்கு உடையவன்).
குருவால் நன்மை அதிகமா அல்லது சனியால் தீமைதான் மிஞ்சுமா...?

பாதாம் அல்வாவையும், மிளகாய் பஜ்ஜியையும் கையில் வைத்துக்கொண்டு, இரண்டையும் சாப்பிட்டால் எதன் சுவை மிஞ்சும் என்று கேட்பதுபோல் உள்ளது உங்கள் கேள்வி. குருவின் தசா/புத்தியில் அதன் காரகத்துவம் என்னவோ அதன்படி பலன் நடக்கும். சனிக்கும் அப்படித்தான். ஒரு சமயத்தில் ஒரு சானல்தான் ஓடும். ஆகவே பொறுமையாக உட்கார்ந்து படத்தைப் பாருங்கள். படம் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி எழுந்து போக முடியாது. ஆகவே பொறுமையாகப் பாருங்கள் (எதிர்கொள்ளுங்கள்). மிளகாய் பஜ்ஜி சாப்பிடும் போது விக்கல் வந்தால், மினரல் வாட்டர் 337ல் ஒரு தம்ளர் குடியுங்கள்! எல்லாம் சரியாகிவிடும்!

2 திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம் திருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் வாழ்கையில் தாக்கத்தை எற்படுத்துமா? (உதாரணம் 5 ராகு: புத்திரபாக்கிய தடை) காரணம் மணப்பத்திரிக்கையில் லக்கினம் (முக்கியத்துவம் கொடுக்கபட்டு) உள்ளதே.

தாக்கத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதானே நல்ல நேரம், நல்ல முகூர்த்தம் பார்த்துத் திருமணத்தை நடத்துகிறார்கள். பிறகு அதையும் சந்தேகப்பட்டுக் கேள்வி கேட்டால் என்ன செய்வது? அப்புறம் உங்களுடைய பிறப்பு ஜாதகத்திற்கு என்ன மதிப்பு?

திருமண நடக்கும் பொழுது உள்ள ஜாதகம்
பள்ளியில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மாமியார் வீட்டில் அடி எடுத்து வைத்த ஜாதகம்
மனைவியைத் தொட்ட நேரத்து ஜாதகம்
வேலையில் சேர்ந்த நேரத்து ஜாதகம்.
டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வண்டி ஓட்டப் பழகிய நேரத்து ஜாதகம்
என்று 100 கணக்கான ஜாதகங்களைத் தயார் செய்யலாம். கடைசியில் முடியைப் பிய்த்துக் கொண்டு படுக்கையில் கிடக்க வேண்டியதாகிவிடும்.

ஆகவே குழம்பாதீர்கள். உங்கள் Birth Chart ஒன்று போதும். மற்றதை எல்லாம் நினைத்துக்கூடப் பார்க்காதீர்கள்.

Okayயா?
-------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14 comments:

Ananthamurugan said...

Good repost..!!eagarly awiting for Q\A தற்பொழுது ...

தேமொழி said...

me too...

kmr.krishnan said...

புதியவர்களுக்கான மறு வெளியீடு, மீண்டும் வாசிக்கத்தூண்டியது. நன்றி ஐயா!

seethalrajan said...

ஐயா வணக்கம்!

ஒரு கிரகம் இராசிகட்டத்தில் அமரும் நட்சத்திரம் தானெ நட்சத்திர சாரம். ஆனால் நட்சத்திர சாரதை பார்க அம்சகட்டத்தை பார்க வேண்டும் என்கிறார்கள் அது எப்படி என்று விளக்கி சொல்லுங்கள் நட்சத்திர சாரம் பலன் என்ன?

கேது, ராகு, சனி, செவ்வாய் நட்சத்திர சாரம் பெற்றால் அந்த கிரம் நல்ல பலன் செய்யாது என்கிறார்கிள். ஆனால் சூரிய பாகவான் கேது பாகவான் நட்சத்திரத்தில்(அஸ்வினியில்) உச்சம், சனி பாகவான் செவ்வாய் பாகவான் நட்சத்திரத்தில்(சித்திரையில்)உச்சம் பெறுகின்றார்கள்.

இதை பற்றி கூறுங்கள் ஆசிரியரெ!


நன்றி.

அய்யர் said...

நம் ஊர்களில்
பெண்களின் பெயர்கள் பொதுவாக
"ஆ" வில் முடியும் (உதாரணம் மல்லிகா, கவிதா)அல்லது "இ" யில் முடியும் (உதாரணம் லட்சுமி நளாயினி) விதிவிலக்காக சில "ள்" லில் முடியும்

ஒவ்வொன்றிர்கும் ஒரு குணம் இருப்பதால்

phrenologyயின் படி தே(வை)தையா பி(ச்)சாசா என முடிவு செய்ய வேண்டியது யார்...??

arul said...

arumayana pathilgal mikka nandri

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
நல்ல பதிவிற்கு மிக்க நன்றி ஐயா...

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ananthamurugan said...
Good repost..!!eagarly awiting for Q\A தற்பொழுது .../////

தொடரை முழுவதும் படித்து முடியுங்கள். அதற்குப் பிறகு சந்தேகம் வராது. வந்தால், குறித்து வைத்துக் கொள்ளூங்கள். கேள்வி - பதில் சீசன் இரண்டு என்று ஒரு புதிய பகுதி வரும். அப்போது கேளுங்கள்

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
me too...////

தொடரை முழுவதும் படித்து முடியுங்கள். அதற்குப் பிறகு சந்தேகம் வராது. வந்தால், குறித்து வைத்துக் கொள்ளூங்கள். கேள்வி - பதில் சீசன் இரண்டு என்று ஒரு புதிய பகுதி வரும். அப்போது கேளுங்கள் சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
புதியவர்களுக்கான மறு வெளியீடு, மீண்டும் வாசிக்கத்தூண்டியது. நன்றி ஐயா!////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger seethalrajan said...
ஐயா வணக்கம்!
ஒரு கிரகம் இராசிகட்டத்தில் அமரும் நட்சத்திரம் தானெ நட்சத்திர சாரம். ஆனால் நட்சத்திர சாரதை பார்க அம்சகட்டத்தை பார்க வேண்டும் என்கிறார்கள் அது எப்படி என்று விளக்கி சொல்லுங்கள் நட்சத்திர சாரம் பலன் என்ன?
கேது, ராகு, சனி, செவ்வாய் நட்சத்திர சாரம் பெற்றால் அந்த கிரம் நல்ல பலன் செய்யாது என்கிறார்கிள். ஆனால் சூரிய பாகவான் கேது பாகவான் நட்சத்திரத்தில்(அஸ்வினியில்) உச்சம், சனி பாகவான் செவ்வாய் பாகவான் நட்சத்திரத்தில்(சித்திரையில்)உச்சம் பெறுகின்றார்கள்.
இதை பற்றி கூறுங்கள் ஆசிரியரெ!
நன்றி.////

என்கிறார்கள் என்றால் - அவர்களிடமே கேட்பதுதான் நல்லது. முதலில் நவாம்சப் பாடத்தைப் படியுங்கள்

SP.VR. SUBBAIYA said...

/////Blogger அய்யர் said... நம் ஊர்களில்
பெண்களின் பெயர்கள் பொதுவாக
"ஆ" வில் முடியும் (உதாரணம் மல்லிகா, கவிதா)அல்லது "இ" யில் முடியும் (உதாரணம் லட்சுமி நளாயினி) விதிவிலக்காக சில "ள்" லில் முடியும்
ஒவ்வொன்றிர்கும் ஒரு குணம் இருப்பதால்
phrenologyயின் படி தே(வை)தையா பி(ச்)சாசா என முடிவு செய்ய வேண்டியது யார்...??////

யார் வேண்டுமென்றாலும் முடிவு செய்யலாம். அனுபவிக்க வேண்டியது ஒருவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger arul said...
arumayana pathilgal mikka nandri/////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
நல்ல பதிவிற்கு மிக்க நன்றி ஐயா...////

நல்லது. நன்றி சகோதரி!!