மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

20.3.12

Astrology நேசம் தரும் பூசம்.

சனீஸ்வரன்


Astrology நேசம் தரும் பூசம்.

பூச சனி நேசம் தரும் என்பது பழைய மொழி.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆக்கிய 3 நட்சத்திரங்களும் சனி பகவானுக்கு உரிய நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு துவக்க திசை சனிதசை ஆகும். அந்த மூன்றில் பூச நட்சத்திரம் சற்று மேனமை யானதாகும்.

சனி பகவான் சூரியனின் மகன். எமதர்மன் சனியின் சகோதரன். சூரியனின் முதல் தாரத்து மகன். அவனுடைய அன்னையின் பெயர் உஷா தேவி.
எப்ப்டியொரு காம்பினேஷன் பாருங்கள். உடல்காரகன், ஆயுள்காரகன், ஆயுளை முடிப்பவன் - என்று என்னவொரு அசத்தலான கூட்டணிக் குடும்பம்
பாருங்கள்.

எமதர்மராஜன் ஒரு முறை தன் சகோதரனான சனீஸ்வரனின் காலில் அடிக்க அது ஊனமானது.(அப்பொழுதே அண்ணன், தம்பி சண்டை இருந்திருக்கிறது.
ஆனால் இந்தச் சண்டை அப்பனின் இருதாரப் பிரச்சினையால் ஏற்பட்டுள்ளது)

Shani is a deva and son of Surya and his wife Chhaya, hence also known as Chayyaputra. He is the elder brother of Yama, the Hindu god of death, who in some scriptures corresponds to the deliverance of justice. Interestingly, Surya's two sons Shani and Yama judge. Shani gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death.

http://en.wikipedia.org/wiki/Shani

ஊனமான காலுக்கு நிவாரணம் தேடிப் பல சிவத்தலங்களுக்கும் சனீஸ்வரன் சென்றாராம். இத்தலத்திற்கு அவர் வந்தபோது, விளாமரவேரில் கால் இடறி அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்துவிட்டாரம். அவர் விழுந்தநாள் திருதியைத் திதியும், பூச நட்சத்திரமும், சனிக்கிழமையும் சேர்ந்த நன்னாளாம்.
அவர் விழுந்த இடத்தில் இருந்து, பல காலமாக மறைந்திருந்த பூச ஞானவாவி தீர்த்தம் சுரந்து சனீஸ்வரரை மேல் எழுப்பிக் கரை சேர்த்ததாம். அச்சமயம் சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக சனீஸ்வரருக்கு காட்சி தந்து அருள்பாலித்தாராம். சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆனதாம். விளாமரம் இருந்ததாலும், தீர்த்தம் சுரந்ததாலும் இவ்வூர் விளங்குளம் ஆனது.

பூச நட்சத்திர உலகத்தில் வசித்த பூசமருங்கர் என்ற சித்தர், சனீஸ்வர உலகத்திலிருக்கும் சனி தீர்த்தத்தை எடுத்து, பூமியில் பல கோயில்களில் உள்ள தீர்த்தங்களுடன் அதைச் சேர்ப்பாராம். அந்தத் தலங்களில் எல்லாம் சனீஸ்வரருக்கு முக்கியத்துவம் உண்டாயிற்றாம். இந்தப் பூசமருஙக சித்தர் பித்ருக்கள் உலகத்திற்கும் சென்று வரும் அரிய சக்தியை உடையவராம். காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகின்றாராம். இவர் தினமும் இத்தலத்தில் வழிபாடு செய்வதாக நம்பப் படுகிறது.

இதை நீங்களும் நானும் நம்புவது முக்கியமில்லை. நம்பாவிட்டாலும் அது முக்கியமில்லை. இதுதான் தல புராணம்.

உலகம் உருண்டையா,  தட்டையா  என்று தெரியாத காலத்தில் ஆர்யபட்டா எப்படி, கிரக சஞ்சாரங்களைத் துல்லியமாகக் கணித்து எழுதி வைத்தானோ, அவனுக்கு அந்த சித்தி அல்லது ஞானம் எப்படிக் கிடைத்ததோ, அதறகு எது அடிப்படையோ, அதே அடிப்படைதான் இந்த சித்தர்களுக்கும். அதை மனதில் வையுங்கள்

ஆரயபட்டா வாழ்ந்த காலத்தில், கணினி, சாட்டிலைட், டெலஸ்கோப், கோளரங்கங்கள் என்று எந்தப் புண்ணாக்கும் இல்லை. அதையும் மனதில்
வையுங்கள்.

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் நட்சத்திர தினத்தன்று சனி பகவானுக்கு அபிஷேகம் செய்வதோடு, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் எல்லாம் தீரும் என்று நம்பப்ப்படுகிறது.

உடல் நலக்குறைவு உடையவரகள். கடன் பிரச்னையால் அவதிப்படுபவர்கள், மன நிம்மதி வேண்டுபவர்கள், ஊனமுற்றவர்கள், கால் சம்பந்தமான நோய் உள்ளவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள் விளங்குளம் சென்று சனீஸ்வரரை வழிபட்டு விட்டு வரலாம். நல்ல பலன் கிடைக்கும். இங்கு சனீஸ்வர பகவான் மந்தா, ஜேஷ்டா என்ற இரு மனைவியருடன் திருமணக் கோலத்தில் ஆதி பிருஹத் சனீஸ்வரர் என்ற பெயரில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார். இத்தல அபிவிருத்தி நாயகியை வழிபட்டால் சகல காரியங்களும் அபிவிருத்தியாகும். இத்தலத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது. அதற்கு பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித்தனி சன்னதிகளில் அருள் பாலிக்கின்றனர். விநாயகப் பெருமான் இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கின்றார். அவரை வழிபட்டால் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி (விஜயம்) கிடைக்கும் என்பதால் அவர் விஜய விநாயகர் என்று அழைக்கப்படுகின்றார்.
 
கோவிலின் சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், மனைவியருடன் சனீஸ்வரர், சூரியன், பைரவர், நந்தி, தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்க்கை, கஜலட்சுமி, நாகர், நடராஜர் சன்னதிகள் உள்ளன.
-----------------------------------------
நட்சத்திரக்கோவில்கள் - பகுதி எண் 19
பூச நட்சத்திரம்
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்

இறையனாரின் பெயர்: அட்சயபுரீஸ்வரர்
அம்பிகையின் பெயர்: அபிவிருத்தி நாயகி
தல விருட்சம்: வில்வமரம்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருக்கோவில் இருக்கும் இடம்:
பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் (East Coast Road) 30 கிஇலோ மீட்டர் தூரத்தில் விளங்குளம் பிரிவுச் சாலை. அதில் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இத்திருக்கோவிலை அடையலாம். அல்லது புதுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் சாலையில் சென்றாலும் இத்திருக்கோவிலை அடையலாம்.

முகவரி:
அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்,
விளங்குளம் - 614 612,
பேராவூரணி தாலுக்கா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை
திருவிழாக்கள்: மகாசிவராத்தரி, திருக்கார்த்திகை, திருவாதிரை
   
பூச நட்சத்திரத்காரரர்கள் நல்லெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், புனுகு, இளநீர், சந்தனம், பால், தயிர் ஆகிய எட்டு வகை பொருட்களால் சனி பகவானுக்கு அபிஷேகம் செய்து, எட்டு முறை சுற்றி வந்து வழிபட்டால் தீராத பிரச்னைகள் தீரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது!
 
பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் ஜாதக தோஷங்கள் நீங்க இத்தலத்தில் உறையும் இறைவனை வழிபாடு செய்வது நலம் பயக்கும். உடல் ஊனமுள்ளவர்கள், கால் வலி உள்ளவர்கள், தோஷங்களினால் திருமணத்தில் தடை உள்ளவர்கள் ஆகியவர்களும் இங்கே வழிபாடு செய்து நலம் பெறலாம்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்த பிறகு பலனைப் பாருங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

83 comments:

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

சனீஸ்வரன் அருள் பெற ஆற்றுப் படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா!

கேது பகவான் எப்போது வருவார் எனக் காத்து இருக்கிறேன்...

மேற்கு பார்த்த விநாயகர் சின்னக் குன்னக்குடி கம்மாக் கரை ஓரம் இருக்கும் கோவிலில் பார்த்து இருக்கிறேன். அதற்கும் எதோ ஒரு கதை இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது ஞாபகத்தில் இல்லை:):)

பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

adiyaarkku adiyavan said...

நான் எங்கோ படித்தது: சனியின் காலை ஊனமாக்கியது இராவணன் என்று. இந்த்ரஜித் பிரக்கும்போது, இராவணன், எல்லா க்ருஹங்ளையும் 11ம் வீட்டில் இருக்கும்படி சிறைப்பிடித்தானாம். தேவர்கள் முறையிட,விஷ்ணு சனியை 12ம் வீட்டுக்கு செல்லும்படி பணித்தாராம். 12ம் வீட்டில் சனி கால் வைக்கப்போவதை பார்த்த இராவணன், சனியின் காலை உடைத்தானாம்.

Parvathy Ramachandran said...

இன்றைய பதிவு வழக்கம் போல் நிறைய விஷயங்களைத் தாங்கி இருக்கிறது.சனிபகவானின் அப்பா சூரியனுக்கும் இரண்டு தாரம். இதைச் சொல்லும் கதை இதோ.

சூரியனின் மனைவி உஷா.இவர் சூரியனின் வெப்பம் தாங்காமல், தன் நிழலைத் தன் உருவம் போலவே அழகான பெண்ணாக்கி, சூரியனின் வீட்டில் விட்டுவிட்டுப் போய் விட்டார். 'நிழல்பெண்' ஆனதால் இவர் பெயர் சாயாதேவி. உஷாவின் பிரதி போல் இருப்பதால் இவரின் மற்றொரு பெயர் பிரத்யுஷா. இவருக்குப் பிறந்தவர் தான் சனி பகவான். 'சாயா மார்த்தாண்ட சம்பூதம்' என்ற சனி ஸ்துதியின் வரிகள் இதனை விளக்கும்.

யமதர்மராஜன், சனியின் சகோதரர் என்று ஒரு கூற்று உண்டு.

//நான் எங்கோ படித்தது: சனியின் காலை ஊனமாக்கியது இராவணன் என்று. இந்த்ரஜித் பிரக்கும்போது, இராவணன், எல்லா க்ருஹங்ளையும் 11ம் வீட்டில் இருக்கும்படி சிறைப்பிடித்தானாம். தேவர்கள் முறையிட,விஷ்ணு சனியை 12ம் வீட்டுக்கு செல்லும்படி பணித்தாராம். 12ம் வீட்டில் சனி கால் வைக்கப்போவதை பார்த்த இராவணன், சனியின் காலை உடைத்தானாம்.//

வாத்தியாரின் 'ஒரிஜினல் வில்லன்' பதிவிலேயே இதைப் பற்றிப் படித்ததாக ஞாபகம். வெட்டுப்பட்ட கால் லக்கினத்தில் விழுந்து மாந்தியாக உருவெடுத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.

kmr.krishnan said...

அடியேன் பூசம்தான். பூச நட்சத்திரக்கோவில் உள்ள ஊருக்கு ஒருமுறை சென்று வருவோம். இதுவரை கற்கடகேஸ்வரர்(நண்டான் கோவில்,திருவிசைநல்லூர் அருகில்)தான் கடகராசிக்கு என்று இருந்தேன். இப்போது இந்தக் கோவிலும் சேர்ந்து கொண்டது.மிக்க நன்றி அய்யா!

தேமொழி said...

///சனி பகவான் சூரியனின் மகன். எமதர்மன் சனியின் மகன். எப்படியொரு காம்பினேஷன் பாருங்கள். உடல்காரகன், ஆயுள்காரகன், ஆயுளை முடிப்பவன் - என்று என்னவொரு அசத்தலான கூட்டணிக் குடும்பம் பாருங்கள்.///

இந்தக் கூட்டணிக் குடும்பத்தின் அருள் இருந்தால் மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்க முடியுமா?

தேமொழி said...

சனீஸ்வரனுக்கும் காலுக்கும் இருக்கும் தொடர்புகள் பலப்பல எனத் தெரிகிறது. இந்தக் கதையில் (ஆளுக்கு ஆள் ஒன்று சொன்னால் அதன் பெயர் கதைதானே இல்லை வதந்தியோ, எது எப்படி இருந்தாலும் ஆன்மீக ஆர்வலர்கள் மன்னிக்கவும்) மகன் இருதாரத் தந்தையின் காலை ஓடித்தான், அம்மாவின் நலனைக் கருத்தில் கொண்டு என்றால் வாழ்த்துக்கள். சொத்து தகராறு என்றால் கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஐயா நீங்கள் "மாந்தி" பாடத்தில் சனி 12 ம் கட்டத்தில் கால் வைத்தால் இராவணன் கோபம் கொண்டு சனியின் காலை வெட்டிப்போட, அது லக்கினத்தில் விழுந்து மாந்தியானது, இந்திரஜித்துக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தது என்று கூறுவார்கள் என்றீர்கள். காலை சரியாகக் கழுவாத நளனுக்கு கால் வழியாக சனி பிடித்தது. காலைத் தொடர்பு படுத்தி காலதேவனின் மீது ஏகப்பட்ட செய்திகள். எல்லாவற்றிகும் காரணம் மெதுவாக சுற்றிவரும் கோள் என்ற ஒரே காரணத்தில்தானோ?

தேமொழி said...

தமிழக வரைபடத்தில் கோவிலின் இடம் குறிப்பிட்டது உதவியாக இருக்கிறது. நன்றி ஐயா.

தேமொழி said...

////காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகின்றாராம்///

ஆனந்தமுருகனுக்கு ஏகப்பட்ட போட்டி, பாவம் எப்படித்தான் வக்காலத்து வாங்கி காக்கையின் கவனத்தைக் கவரப் போகிறாரோ? நல்ல வேலை...நல்ல வேளை ( ஸ்ரீகணேஷ் பாக்கிரதுக்குள்ள மாத்தியாச்சு) அவருக்கிட்ட 5 வடை இருக்கு, ஒரு வடையைக் கொடுத்து காரியத்த சாதிசுக்கலாம்.

thanusu said...

புதிதாக வந்திருக்கும் வரை பட உதவி நல்ல யோசனை.

thanusu said...

தேமொழி said...ஆனந்தமுருகனுக்கு ஏகப்பட்ட போட்டி, பாவம் எப்படித்தான் வக்காலத்து வாங்கி காக்கையின் கவனத்தைக் கவரப் போகிறாரோ? நல்ல வேலை...நல்ல வேளை ( ஸ்ரீகணேஷ் பாக்கிரதுக்குள்ள மாத்தியாச்சு) அவருக்கிட்ட 5 வடை இருக்கு, ஒரு வடையைக் கொடுத்து காரியத்த சாதிசுக்கலாம்.


ஏற்கனவே குறையை கண்டிபிடிக்க நக்கீரன் போல் ஒருவர் இருக்கிறார். இதில் இவர்கள் வேறா?

Parvathy Ramachandran said...

திரு. கே.எம்.ஆர். அவர்கள் தயவு செய்து மன்னிக்க.

நேற்றைய பதிவிலேயே இதைப்பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வணங்கப்போன தெய்வத்தை வழியிலேயே பார்த்ததுபோல, இன்றைய நட்சத்திரம் பூசம். ஆண்களுக்குத் திருமண விஷயத்தில் திண்டாட்டமே இல்லை,பெண்களுக்கே சில நட்சத்திரங்கள் பிரச்னை என்பது சிலரின் அபிப்பிராயம்.ஆண்களுக்கும் பிரச்னை உண்டு எனத் தெளிவு படுத்தவே இதை எழுதுகிறேன்.

எனக்குத் தெரிந்த ஒரு பையனுக்கு 37 வயது. நல்ல படிப்பும் வேலையும் உள்ளது. யாரிடமாவது, ஜாதகம் கொடுக்கப் போனால், 'என்ன நட்சத்திரம்?' என்று கேட்டு, 'பூசம்' என்றால் வாங்கவே மறுக்கிறார்கள். பூசத்து மாப்பிள்ளை மாமனாரை ஓட்டாண்டியாக்கி விடுவானாம். பூச நட்சத்திரத்தில் பிறக்காமல், வரதட்சணை கேட்டே மாமனாரின் ஓட்டைக் கவிழ்த்து ஆண்டியாக்கிய பலரை எனக்குத் தெரியும். சமீபத்தில் ஒரு வீட்டில், மேற்படி பையன் நட்சத்திரம் கேட்ட உடனே அலறி ஓடாத குறை. அந்த வீட்டுப் பாட்டியின் கணவர் பூசமாம். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் பிறந்த வீடு திவாலாகி விட்டதாம். அவர் பெண்ணுக்கு, நல்ல வரன் என்று இதை நம்பாமல் பூசத்து வரனைத் திருமணம் முடிக்க, சில மாதங்களிலேயே, அவர் கணவருக்குப் பக்க வாதம் வந்து, வேலைக்குச் செல்ல முடியாமல் போய் விட்டதாம். அவர் இந்த செய்தியைப் பரப்புவதை ஒரு சேவையாக(?)செய்து வருகிறாராம்.ஹூம்.... சங்கடம் தீர்ப்பாய் சனி பகவானே.

அய்யர் said...

ஆளுக்கு ஒரு கால்
அந்த தோழருக்கும் ஒன்றறை கால்

காக்கைக்கும் இரண்டு கால்
கருப்பாட்டிற்கும் இரண்டே கால்

தலையை சாய்த்து பார்க்கும் காகம்
தப்பாமல் கூவியே உண்கிறது
(சைவத்தில் மட்டும்)

நாம்..
நம்மிடம்..

வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்

அய்யர் said...

ஆளுக்கு ஒரு கால்
அந்த தோழருக்கும் ஒன்றறை கால்

காக்கைக்கும் இரண்டு கால்
கருப்பாட்டிற்கும் இரண்டே கால்

தலையை சாய்த்து பார்க்கும் காகம்
தப்பாமல் கூவியே உண்கிறது
(சைவத்தில் மட்டும்)

நாம்..
நம்மிடம்..

வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்

ஓம் தத் சத் said...

அருமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி ஐயா. அதுவும் சனி பகவானை பற்றியும், காக்கைகளின் சத்குருவின் பெயரும் 
மிக்க உபயோகமான தகவல். பூச லோகத்து பூசமருங்க சித்தரை போல சனிஸ்வர லோகத்து சித்தரே சனிப்பரணி சித்தர். இவரும் நித்தியம் சனிஸ்வர பகவான் பூமியில் வாசம் செய்யும் தலங்களுக்கு சென்று பூஜை செய்பவர். சனிஸ்வர பகவானின் அருள் உள்ளோருக்கு இச்சித்தரின் தரிசனமும் ஆசியும் கிட்டும்.
சனி பகவானின் அருளை பெற விரும்புவோர் சனிப்பரணி சித்தரை வேண்டினால் நல்லது

ஓம் தத் சத் said...

திருமதி பார்வதி அவர்களுக்கு

அந்த நல்லவரை தயவு செய்து அவர் செய்து வரும் சேவையை(???) நிறுத்த சொல்லுங்கள். எல்லா க்ரஹமும், நக்ஷத்திரமும் ஜீவனின் புண்ணிய / பாவ கர்ம கணக்கின் படியே தான்  பலன்களை வழங்குகின்றன. கடவுளோ / குருவோ மாற்ற நினைத்தால் தவிர இந்த  கர்ம பரிபாலனத்தில் எந்த வித மாற்றமும் கிடையாது / ஏற்படாது. அந்த நல்லவர் இதை போல
தவறான தகவல்களை பரப்புவதினால் அவருக்கு தான் கிரக / நக்ஷத்திர தோஷம் ஏற்படும்.

sriganeshh said...

@teacher,
யமன் சனியின் சகோதரர். அவர் மகன் என்று இப்போது தான் படிக்கிறேன். ஆசிரியர் ஏதாவது ஆதாரம் கொடுத்தால் நல்லது. சனியின் மகன் மாந்தி என்று படித்ததாக ஞாபகம்.

@dhanusu
//இதில் இவர்கள் வேறா?//
தனுசு ஒரு விளையாட்டுக்காகத் தான் சகோதரி தேமொழியின் தட்டச்சு பிழையை காண்பித்தேன். ஆனால் "இவர்கள் " என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் கடுமையானது.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இராவணேஸ்வரன் அவனது அரச தர்பார் மண்டபத்தில்
அரியணையில் ஏறி அமர்வதற்காக,நவக்கிரகங்களையும்
கவிழ்த்துப்போட்டு படிக்கட்டுக்களாக பயன்படுத்தி ஏறிச்சென்று
அமர்வது வழக்கமாக இருந்ததாகவும்,

ஒருநாள் அரியணை ஏறும் தருவாயில் நாரதர் அங்கு வருகை தந்து
இராவணேஸ்வரன் இடத்தில்,கவிழ்த்துப்போட்டு அவர்கள் முதுகில்
ஏறிச் செல்வது புற முதுகுக் காட்டி ஓடுபவர்களை,தாக்கி வெற்றி அடைவதற்கு
ஒப்பாகும் எனவே,

அவர்களை நிமிர்த்திப் போட்டு மார்பின் மீது கால்களை வைத்து
ஏறிச்செல்வதுதான் வீரனுக்கு ஒப்பாகும் என்று கூறியதைக் கேட்டு,
அவ்வாறே நிமிர்த்திப் போட்டு மார்பின் மீது கால்களை வைத்து
ஏறிச்செல்லும் போது சனீஸ்வரனின் பார்வை, இராவணேஸ்வரன்
கண்களை சந்தித்ததால்,இராவணேஸ்வரன் தனது பலத்தினை
இழந்ததாகவும்,ஒரு வரலாறு உண்டு.

இதனால்,சனீஸ்வரனின் பார்வைக்கு உள்ள சக்தி மிகவும் வலிமையுள்ளது
என்பதை உணர்த்தியுள்ளார்கள்.- * - * -
இவ்வாறு எப்பொழுதோ படித்த ஞாபகம்.பகிர்ந்துள்ளேன்.
= = = = = = = = = = = = = = = = = = = = = = = =
நட்சத்திரக்கோவில்கள் பகுதியில்
பூச நட்சத்திரத்திர்க்கான
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
பற்றிய வரலாறு,மற்றும் இதர விபரங்கள் யாவும்
சிறப்பாக கொடுத்துள்ளீர்கள்.
நன்றி!!

RAMADU Family said...

Guru vanakkam,


thanks for the post.

Like Aalsiyam Sir, I am also eager abuot "kethu".

but guru is going in "P" series.

Ramadu.

Kalai said...

வழக்கம் போல் உங்கள் பதிவு இன்றும் நலம். அதைவிட பின்னூடங்கள் சூப்பர். என் கணவரின் நக்ஷத்ரம் பூசம்.
மகா பொறுமைசாலி. நின்றய சகிப்பு தன்மை உடையவர். அதுவே பல இடங்களில் எனக்கு பிரச்சனையாக இருக்கும்.
அதே போல் நம்மால் இருக்க முடிவதில்லை...!

kmr.krishnan said...

//திரு. கே.எம்.ஆர். அவர்கள் தயவு செய்து மன்னிக்க.பூசத்து மாப்பிள்ளை மாமனாரை ஓட்டாண்டியாக்கி விடுவானாம். //

அதுக்குப் பயந்துதானோ என்னமோ என் மாமானார் என் மனைவியின் 4 வயதின் போதே டிக்கட் வாங்கிவிட்டார்.

இன்னொரு விஷயம் என்ன வென்றால் என் மனைவி அனுஷம் ஆகவே அதே சனீஸ்வரனின் காலில்தான் இருவரும் பிறந்துள்ளோம். மேலும் இருவருமே கடக லக்னம்.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தமிழ் விரும்பி ஆலாசியம் said...
சனீஸ்வரன் அருள் பெற ஆற்றுப் படுத்தியமைக்கு நன்றிகள் ஐயா!
கேது பகவான் எப்போது வருவார் எனக் காத்து இருக்கிறேன்...
மேற்கு பார்த்த விநாயகர் சின்னக் குன்னக்குடி கம்மாக் கரை ஓரம் இருக்கும் கோவிலில் பார்த்து இருக்கிறேன். அதற்கும் எதோ ஒரு கதை இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால் இப்போது ஞாபகத்தில் இல்லை:):)
பதிவு பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!/////

இன்னும் 5 பகுதிகள் உள்ளன. அதற்குப் பிறகு கேதுவின் நட்சத்திரங்களுக்கான தலங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger adiyaarkku adiyavan said...
நான் எங்கோ படித்தது: சனியின் காலை ஊனமாக்கியது இராவணன் என்று. இந்த்ரஜித் பிரக்கும்போது, இராவணன், எல்லா க்ருஹங்ளையும் 11ம் வீட்டில் இருக்கும்படி சிறைப்பிடித்தானாம். தேவர்கள் முறையிட,விஷ்ணு சனியை 12ம் வீட்டுக்கு செல்லும்படி பணித்தாராம். 12ம் வீட்டில் சனி கால் வைக்கப்போவதை பார்த்த இராவணன், சனியின் காலை உடைத்தானாம்.////

நீங்கள் சொல்வது சரிதான்.இப்போது அது என் நினைவிற்கு வருகிறது. என் முன் பதிவு ஒன்றில் அதை எழுதியுள்ளதும் நினைவிற்கு வருகிறது.
சத்ய ய்கம், திரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று 4 யுகங்கள் உள்ளன. இராவணன் கதை இரண்டாவது யுகத்தில் வருகிறது. யமன் சனியின் காலை ஒடித்த கதை இந்த யுகத்தில் (கோவில் புராணப்படி) வருகிறது. ஆகவே இரண்டையும் எடுத்துக்கொள்வோம். என்ன கெட்டுவிடப்போகிறது?
உங்களின் தகவல் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

Blogger Parvathy Ramachandran said...
இன்றைய பதிவு வழக்கம் போல் நிறைய விஷயங்களைத் தாங்கி இருக்கிறது.சனிபகவானின் அப்பா சூரியனுக்கும் இரண்டு தாரம். இதைச் சொல்லும் கதை இதோ.
சூரியனின் மனைவி உஷா.இவர் சூரியனின் வெப்பம் தாங்காமல், தன் நிழலைத் தன் உருவம் போலவே அழகான பெண்ணாக்கி, சூரியனின் வீட்டில் விட்டுவிட்டுப் போய் விட்டார். 'நிழல்பெண்' ஆனதால் இவர் பெயர் சாயாதேவி. உஷாவின் பிரதி போல் இருப்பதால் இவரின் மற்றொரு பெயர் பிரத்யுஷா. இவருக்குப் பிறந்தவர் தான் சனி பகவான். 'சாயா மார்த்தாண்ட சம்பூதம்' என்ற சனி ஸ்துதியின் வரிகள் இதனை விளக்கும்.
யமதர்மராஜன், சனியின் சகோதரர் என்று ஒரு கூற்று உண்டு.
//நான் எங்கோ படித்தது: சனியின் காலை ஊனமாக்கியது இராவணன் என்று. இந்த்ரஜித் பிரக்கும்போது, இராவணன், எல்லா க்ருஹங்ளையும் 11ம் வீட்டில் இருக்கும்படி சிறைப்பிடித்தானாம். தேவர்கள் முறையிட,விஷ்ணு சனியை 12ம் வீட்டுக்கு செல்லும்படி பணித்தாராம். 12ம் வீட்டில் சனி கால் வைக்கப்போவதை பார்த்த இராவணன், சனியின் காலை உடைத்தானாம்.//
வாத்தியாரின் 'ஒரிஜினல் வில்லன்' பதிவிலேயே இதைப் பற்றிப் படித்ததாக ஞாபகம். வெட்டுப்பட்ட கால் லக்கினத்தில் விழுந்து மாந்தியாக உருவெடுத்தாக குறிப்பிடப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன்.////

விரிவான தகவல்களைக்கொண்ட பின்னூட்ட்டதிற்கு நன்றி சகோதரி!
நீங்கள் சொல்வது சரிதான்.இப்போது அது என் நினைவிற்கு வருகிறது. என் முன் பதிவு ஒன்றில் அதை எழுதியுள்ளதும் நினைவிற்கு வருகிறது.
சத்ய ய்கம், திரேதா யுகம், துவபார யுகம், கலியுகம் என்று 4 யுகங்கள் உள்ளன. இராவணன் கதை இரண்டாவது யுகத்தில் வருகிறது. யமன் சனியின் காலை ஒடித்த கதை இந்த யுகத்தில் (கோவில் புராணப்படி) வருகிறது. ஆகவே இரண்டையும் எடுத்துக்கொள்வோம்.

கோவில் புராணப்படிதான் காலை ஒடித்தவரைப்பற்றிக் குறிப்பிட்டேன். ஆனால் விக்கி காமாட்சி அக்கா வேறுவிதமாகக் கூறுகிறார். அவர் சொல்லியபடி, பதிவில் இப்போது மாற்றம் செய்துவிட்டேன்
Shani is a deva and son of Surya and his wife Chhaya, hence also known as Chayyaputra. He is the elder brother of Yama, the Hindu
god of death, who in some scriptures corresponds to the deliverance of justice. Interestingly, Surya's two sons Shani and Yama judge. Shani
gives us the results of one's deeds through one's life through appropriate punishments and rewards; Yama grants the results of one's deeds after death.

http://en.wikipedia.org/wiki/Shani

SP.VR. SUBBAIYA said...

/////Blogger kmr.krishnan said...
அடியேன் பூசம்தான். பூச நட்சத்திரக்கோவில் உள்ள ஊருக்கு ஒருமுறை சென்று வருவோம். இதுவரை கற்கடகேஸ்வரர்(நண்டான் கோவில்,திருவிசைநல்லூர் அருகில்)தான் கடகராசிக்கு என்று இருந்தேன். இப்போது இந்தக் கோவிலும் சேர்ந்து கொண்டது.மிக்க நன்றி அய்யா!///

ஒன்றிற்கு இரண்டாகப் பலன் கிடைக்கும். இரண்டு கோவில்களுக்குமே சென்று வாருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
///சனி பகவான் சூரியனின் மகன். எமதர்மன் சனியின் மகன். எப்படியொரு காம்பினேஷன் பாருங்கள். உடல்காரகன், ஆயுள்காரகன், ஆயுளை முடிப்பவன் - என்று என்னவொரு அசத்தலான கூட்டணிக் குடும்பம் பாருங்கள்.///
இந்தக் கூட்டணிக் குடும்பத்தின் அருள் இருந்தால் மருத்துவத் தொழிலில் சிறந்து விளங்க முடியுமா?////

மர்த்துவத் தொழ்லிலுக்கு செவ்வாயின் அருளாசியும் வேண்டும்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger தேமொழி said...
சனீஸ்வரனுக்கும் காலுக்கும் இருக்கும் தொடர்புகள் பலப்பல எனத் தெரிகிறது. இந்தக் கதையில் (ஆளுக்கு ஆள் ஒன்று சொன்னால் அதன் பெயர் கதைதானே இல்லை வதந்தியோ, எது எப்படி இருந்தாலும் ஆன்மீக ஆர்வலர்கள் மன்னிக்கவும்) மகன் இருதாரத் தந்தையின் காலை ஓடித்தான், அம்மாவின் நலனைக் கருத்தில் கொண்டு என்றால் வாழ்த்துக்கள். சொத்து தகராறு என்றால் கண்டிக்கப் பட வேண்டிய செயல். ஐயா நீங்கள் "மாந்தி" பாடத்தில் சனி 12 ம் கட்டத்தில் கால் வைத்தால் இராவணன் கோபம் கொண்டு சனியின் காலை வெட்டிப்போட, அது லக்கினத்தில் விழுந்து மாந்தியானது, இந்திரஜித்துக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தது என்று கூறுவார்கள் என்றீர்கள். காலை சரியாகக் கழுவாத நளனுக்கு கால் வழியாக சனி பிடித்தது. காலைத் தொடர்பு படுத்தி காலதேவனின் மீது ஏகப்பட்ட செய்திகள். எல்லாவற்றிகும் காரணம் மெதுவாக சுற்றிவரும் கோள் என்ற ஒரே காரணத்தில்தானோ?////

சனியின் மேல் உள்ள பக்தியினால் ஆளுக்கு ஒரு கதை எழுதிவைத்திருப்பார்கள் போலும்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger தேமொழி said...
தமிழக வரைபடத்தில் கோவிலின் இடம் குறிப்பிட்டது உதவியாக இருக்கிறது. நன்றி ஐயா.////

கடைத் தேங்காய். வழிப்பிள்ளையார். என் பங்கு எடுத்துப் போட்டது மட்டுமே!

SP.VR. SUBBAIYA said...

///Blogger தேமொழி said...
////காக்கைகளுக்கு சற்குருவாக விளங்குகின்றாராம்///
ஆனந்தமுருகனுக்கு ஏகப்பட்ட போட்டி, பாவம் எப்படித்தான் வக்காலத்து வாங்கி காக்கையின் கவனத்தைக் கவரப் போகிறாரோ? நல்ல வேலை...நல்ல வேளை ( ஸ்ரீகணேஷ் பாக்கிரதுக்குள்ள மாத்தியாச்சு) அவருக்கிட்ட 5 வடை இருக்கு, ஒரு வடையைக் கொடுத்து காரியத்த சாதிசுக்கலாம்.////

காரியம் சாதமாகும் என்றால் ஐந்தையுமே கொடுக்க அவர் தயங்கமாட்டார்:-))))

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
புதிதாக வந்திருக்கும் வரை பட உதவி நல்ல யோசனை.////

எல்லாம் உங்களுக்காகத்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
தேமொழி said...ஆனந்தமுருகனுக்கு ஏகப்பட்ட போட்டி, பாவம் எப்படித்தான் வக்காலத்து வாங்கி காக்கையின் கவனத்தைக் கவரப் போகிறாரோ? நல்ல வேலை...நல்ல வேளை ( ஸ்ரீகணேஷ் பாக்கிரதுக்குள்ள மாத்தியாச்சு) அவருக்கிட்ட 5 வடை இருக்கு, ஒரு வடையைக் கொடுத்து காரியத்த சாதிசுக்கலாம்.
ஏற்கனவே குறையை கண்டிபிடிக்க நக்கீரன் போல் ஒருவர் இருக்கிறார். இதில் இவர்கள் வேறா?////

குறை என்று வரும்போது எத்தனைபேர் கண்டுபிடித்தால் என்ன? குறையின் எண்ணிக்கை மாறுபடாது அல்லவா? சரி செய்துவிடலாம்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Parvathy Ramachandran said...
திரு. கே.எம்.ஆர். அவர்கள் தயவு செய்து மன்னிக்க.
நேற்றைய பதிவிலேயே இதைப்பற்றிக் கேட்க நினைத்திருந்தேன். வணங்கப்போன தெய்வத்தை வழியிலேயே பார்த்ததுபோல, இன்றைய நட்சத்திரம் பூசம். ஆண்களுக்குத் திருமண விஷயத்தில் திண்டாட்டமே இல்லை,பெண்களுக்கே சில நட்சத்திரங்கள் பிரச்னை என்பது சிலரின் அபிப்பிராயம்.ஆண்களுக்கும் பிரச்னை உண்டு எனத் தெளிவு படுத்தவே இதை எழுதுகிறேன்.
எனக்குத் தெரிந்த ஒரு பையனுக்கு 37 வயது. நல்ல படிப்பும் வேலையும் உள்ளது. யாரிடமாவது, ஜாதகம் கொடுக்கப் போனால், 'என்ன நட்சத்திரம்?' என்று கேட்டு, 'பூசம்' என்றால் வாங்கவே மறுக்கிறார்கள். பூசத்து மாப்பிள்ளை மாமனாரை ஓட்டாண்டியாக்கி விடுவானாம். பூச நட்சத்திரத்தில் பிறக்காமல், வரதட்சணை கேட்டே மாமனாரின் ஓட்டைக் கவிழ்த்து ஆண்டியாக்கிய பலரை எனக்குத் தெரியும். சமீபத்தில் ஒரு வீட்டில், மேற்படி பையன் நட்சத்திரம் கேட்ட உடனே அலறி ஓடாத குறை. அந்த வீட்டுப் பாட்டியின் கணவர் பூசமாம். திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் பிறந்த வீடு திவாலாகி விட்டதாம். அவர் பெண்ணுக்கு, நல்ல வரன் என்று இதை நம்பாமல் பூசத்து வரனைத் திருமணம் முடிக்க, சில மாதங்களிலேயே, அவர் கணவருக்குப் பக்க வாதம் வந்து, வேலைக்குச் செல்ல முடியாமல் போய் விட்டதாம். அவர் இந்த செய்தியைப் பரப்புவதை ஒரு சேவையாக(?)செய்து வருகிறாராம்.ஹூம்.... சங்கடம் தீர்ப்பாய் சனி பகவானே.//////

அதற்கு மாப்பிள்ளை மட்டும் காரணமாக இருக்க முடியாது. மாமனாரின் ஜாதகமும் காரணமாக இருக்கும். தனிப்பட்டவர்களின் எழுச்சியும்,வீழ்ச்சியும்
அவர்களுடைய ஜாதகத்தை வைத்துத்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
ஆளுக்கு ஒரு கால்
அந்த தோழருக்கும் ஒன்றறை கால்
காக்கைக்கும் இரண்டு கால்
கருப்பாட்டிற்கும் இரண்டே கால்
தலையை சாய்த்து பார்க்கும் காகம்
தப்பாமல் கூவியே உண்கிறது
(சைவத்தில் மட்டும்)
நாம்..
நம்மிடம்..
வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்////

வழக்கம்போல் புரியவில்லை விசுவநாதன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
ஆளுக்கு ஒரு கால்
அந்த தோழருக்கும் ஒன்றறை கால்
காக்கைக்கும் இரண்டு கால்
கருப்பாட்டிற்கும் இரண்டே கால்
தலையை சாய்த்து பார்க்கும் காகம்
தப்பாமல் கூவியே உண்கிறது
(சைவத்தில் மட்டும்)
நாம்..
நம்மிடம்..
வழக்கம் போல்
வணக்கமும் வாழ்த்தும்/////

இது நகல். பின்னூட்டங்களை ஒருமுறை உள்ளிட்டால் போதும்

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஓம் தத் சத் said...
அருமையான தகவல்களை தந்தமைக்கு நன்றி ஐயா. அதுவும் சனி பகவானை பற்றியும், காக்கைகளின் சத்குருவின் பெயரும்
மிக்க உபயோகமான தகவல். பூச லோகத்து பூசமருங்க சித்தரை போல சனிஸ்வர லோகத்து சித்தரே சனிப்பரணி சித்தர். இவரும் நித்தியம் சனிஸ்வர பகவான் பூமியில் வாசம் செய்யும் தலங்களுக்கு சென்று பூஜை செய்பவர். சனிஸ்வர பகவானின் அருள் உள்ளோருக்கு இச்சித்தரின் தரிசனமும் ஆசியும் கிட்டும். சனி பகவானின் அருளை பெற விரும்புவோர் சனிப்பரணி சித்தரை வேண்டினால் நல்லது////

உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///Blogger ஓம் தத் சத் said...
திருமதி பார்வதி அவர்களுக்கு
அந்த நல்லவரை தயவு செய்து அவர் செய்து வரும் சேவையை(???) நிறுத்த சொல்லுங்கள். எல்லா க்ரஹமும், நக்ஷத்திரமும் ஜீவனின் புண்ணிய / பாவ கர்ம கணக்கின் படியே தான் பலன்களை வழங்குகின்றன. கடவுளோ / குருவோ மாற்ற நினைத்தால் தவிர இந்த கர்ம பரிபாலனத்தில் எந்த வித மாற்றமும் கிடையாது / ஏற்படாது. அந்த நல்லவர் இதை போல தவறான தகவல்களை பரப்புவதினால் அவருக்கு தான் கிரக / நக்ஷத்திர தோஷம் ஏற்படும்.////

சரி, சொல்லிவிட்டீர்கள் அல்லவா? நிறுத்திவிடுவார். பொறுத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger sriganeshh said...
@teacher,
யமன் சனியின் சகோதரர். அவர் மகன் என்று இப்போது தான் படிக்கிறேன். ஆசிரியர் ஏதாவது ஆதாரம் கொடுத்தால் நல்லது. சனியின் மகன் மாந்தி என்று படித்ததாக ஞாபகம்./////

கோவில் வரலாற்றினால் வந்த குழப்பம். விக்கி காமாட்ட்சி சனீஷ்வரனை எமனின் மூத்த சகோதரர் என்றுதான் சொல்கிறார். பதிவில் அப்படியே மாற்றிவிட்டேன். விக்கியின் சுட்டியையும் கொடுத்துள்ளேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
@dhanusu
//இதில் இவர்கள் வேறா?//
தனுசு ஒரு விளையாட்டுக்காகத் தான் சகோதரி தேமொழியின் தட்டச்சு பிழையை காண்பித்தேன். ஆனால் "இவர்கள் " என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் கடுமையானது./////

வகுப்பறையில் எல்லாம் நட்பு அடிப்படையில்தான்/யதார்த்தம்தான். கடுமைக்கு இங்கே வேலையில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

SP.VR. SUBBAIYA said...

////Blogger V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இராவணேஸ்வரன் அவனது அரச தர்பார் மண்டபத்தில்
அரியணையில் ஏறி அமர்வதற்காக,நவக்கிரகங்களையும்
கவிழ்த்துப்போட்டு படிக்கட்டுக்களாக பயன்படுத்தி ஏறிச்சென்று
அமர்வது வழக்கமாக இருந்ததாகவும்,
ஒருநாள் அரியணை ஏறும் தருவாயில் நாரதர் அங்கு வருகை தந்து
இராவணேஸ்வரன் இடத்தில்,கவிழ்த்துப்போட்டு அவர்கள் முதுகில்
ஏறிச் செல்வது புற முதுகுக் காட்டி ஓடுபவர்களை,தாக்கி வெற்றி அடைவதற்கு
ஒப்பாகும் எனவே,
அவர்களை நிமிர்த்திப் போட்டு மார்பின் மீது கால்களை வைத்து
ஏறிச்செல்வதுதான் வீரனுக்கு ஒப்பாகும் என்று கூறியதைக் கேட்டு,
அவ்வாறே நிமிர்த்திப் போட்டு மார்பின் மீது கால்களை வைத்து
ஏறிச்செல்லும் போது சனீஸ்வரனின் பார்வை, இராவணேஸ்வரன்
கண்களை சந்தித்ததால்,இராவணேஸ்வரன் தனது பலத்தினை
இழந்ததாகவும்,ஒரு வரலாறு உண்டு.
இதனால்,சனீஸ்வரனின் பார்வைக்கு உள்ள சக்தி மிகவும் வலிமையுள்ளது
என்பதை உணர்த்தியுள்ளார்கள்.- * - * -
இவ்வாறு எப்பொழுதோ படித்த ஞாபகம்.பகிர்ந்துள்ளேன்./////

ஆமாம். அது பிரபலமான புராணக் கதை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
//// நட்சத்திரக்கோவில்கள் பகுதியில்
பூச நட்சத்திரத்திர்க்கான
அருள்மிகு அட்சய புரீஸ்வரர் திருக்கோயில்
பற்றிய வரலாறு,மற்றும் இதர விபரங்கள் யாவும்
சிறப்பாக கொடுத்துள்ளீர்கள்.
நன்றி!!////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger RAMADU Family said...
Guru vanakkam,
thanks for the post.
Like Aalsiyam Sir, I am also eager abuot "kethu".
but guru is going in "P" series.
Ramadu./////

இன்னும் 5 பகுதிகள் உள்ளன. அதற்குப் பிறகு கேதுவின் நட்சத்திரங்களுக்கான தலங்கள்!

SP.VR. SUBBAIYA said...

///Blogger Kalai said...
வழக்கம் போல் உங்கள் பதிவு இன்றும் நலம். அதைவிட பின்னூடங்கள் சூப்பர். என் கணவரின் நக்ஷத்ரம் பூசம்.
மகா பொறுமைசாலி. நின்றய சகிப்பு தன்மை உடையவர். அதுவே பல இடங்களில் எனக்கு பிரச்சனையாக இருக்கும்.
அதே போல் நம்மால் இருக்க முடிவதில்லை...!/////

அது எப்படி முடியும்? உங்கள் ஜாதக அமைப்பிற்கு உள்ள குணம் உங்களுக்கு இருக்கும் அல்லவா?

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//திரு. கே.எம்.ஆர். அவர்கள் தயவு செய்து மன்னிக்க.பூசத்து மாப்பிள்ளை மாமனாரை ஓட்டாண்டியாக்கி விடுவானாம். //
அதுக்குப் பயந்துதானோ என்னமோ என் மாமானார் என் மனைவியின் 4 வயதின் போதே டிக்கட் வாங்கிவிட்டார்.
இன்னொரு விஷயம் என்ன வென்றால் என் மனைவி அனுஷம் ஆகவே அதே சனீஸ்வரனின் காலில்தான் இருவரும் பிறந்துள்ளோம். மேலும் இருவருமே கடக லக்னம்.//////

இருவருமே சனியின் நட்சத்திரம் என்பதால், திருமணப் பொருத்தம் பார்க்கையில் ஜோதிடர் ரஜ்ஜு தட்டுகிறது என்று சொல்லியிருப்பாரே! எப்படி சமாளித்தீர்கள்?

Balamurugan Jaganathan said...

சனீஸ்வர பகவானை பற்றி பலவித புராண கதைகள் உள்ளன..ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கும... எதுவாக இருந்தலும் வாழும் போதும், வாழ்வு முடியும் போதும் நம் பிராணத்தை எடுப்பது அவரே.. சனிஸ்வராய போற்றி..!!!. சனிஸ்வராய போற்றி...!!! தகவலுக்கு நன்றி அய்யா..

thanusu said...

riganeshh said....... .sriganeshh said.......


//இதில் இவர்கள் வேறா?//
தனுசு ஒரு விளையாட்டுக்காகத் தான் சகோதரி தேமொழியின் தட்டச்சு பிழையை காண்பித்தேன். ஆனால் "இவர்கள் " என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் கடுமையானது.

வகுப்பறையில் தட்டச்சு பிழையை சுட்டிக் காட்டுவதும் அதற்கு எதிர் பின்னூட்டங்களில் கலாய்ப்பதும் ஒரு விளையாட்டாகவே நடந்துக் கொண்டு இருக்கிறது.

நீங்களும் உங்கள் பின்னூட்டத்தில் "விளையாட்டாகவே சகோதரி தேமொழி அவர்களின் தட்டச்சு பிழையை
காண்பித்தேன் "என்றே சொல்லி உள்ளீர்கள்.

உங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் நேரடியாக உங்களிடமே சுட்டி காட்டிருப்பேன்.

இதில் இவர்கள் என்பதன் பொருள்; குற்றம் கண்டிபிடித்தே பெயர் வாங்கும் சங்கப் புலவர்கள் எனும் வகுப்பறையின் கண்மணிகள் என்பதாகும் .

இன்னு சொல்லப் போனால் இது பழைய ஆக்கங்களின் தொடர்ச்சியான பின்னூட்டம் தான் .அந்த பழைய பின்னூட்டங்கள் உங்களுக்கு தெரிய வில்லை என்று நினைக்கிறன் . இது நக்கீரன் ,தருமி, பாண்டிய மன்னன் ஆகியோர் சம்பந்தப் பட்ட "திருவிளையாடல்" பாணி தான்.

நான் யாருக்காக அதனை அப்படி எழுதினேன் என்பது தேமொழிக்கும் தெரியும், இன்னும் மற்றோருக்கும் தெரியும் .

நீங்கள் சொன்னால் விளையாட்டு மற்றவர் சொன்னால் விளையாட்டில்லை எனும் பொருளே உங்கள் பின்னூட்டம் சொல்கிறது.

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Balamurugan Jaganathan said...
சனீஸ்வர பகவானை பற்றி பலவித புராண கதைகள் உள்ளன..ஒவ்வொன்றும் ஒவ்வொரு கோணத்தில் இருக்கும... எதுவாக இருந்தலும் வாழும் போதும், வாழ்வு முடியும் போதும் நம் பிராணத்தை எடுப்பது அவரே.. சனிஸ்வராய போற்றி..!!!. சனிஸ்வராய போற்றி...!!! தகவலுக்கு நன்றி அய்யா../////

முடியும்போது மட்டுமல்ல. இருக்கும்போது சிலருடைய பிரணானனை எடுப்பதும் (விளையாடுவதும்) அவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger thanusu said...
riganeshh said....... .sriganeshh said.......
//இதில் இவர்கள் வேறா?//
தனுசு ஒரு விளையாட்டுக்காகத் தான் சகோதரி தேமொழியின் தட்டச்சு பிழையை காண்பித்தேன். ஆனால் "இவர்கள் " என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் கடுமையானது.
வகுப்பறையில் தட்டச்சு பிழையை சுட்டிக் காட்டுவதும் அதற்கு எதிர் பின்னூட்டங்களில் கலாய்ப்பதும் ஒரு விளையாட்டாகவே நடந்துக் கொண்டு இருக்கிறது.
நீங்களும் உங்கள் பின்னூட்டத்தில் "விளையாட்டாகவே சகோதரி தேமொழி அவர்களின் தட்டச்சு பிழையை
காண்பித்தேன் "என்றே சொல்லி உள்ளீர்கள்.
உங்களை சுட்டிக் காட்ட வேண்டும் என்றால் நேரடியாக உங்களிடமே சுட்டி காட்டிருப்பேன்.
இதில் இவர்கள் என்பதன் பொருள்; குற்றம் கண்டிபிடித்தே பெயர் வாங்கும் சங்கப் புலவர்கள் எனும் வகுப்பறையின் கண்மணிகள் என்பதாகும் .
இன்னு சொல்லப் போனால் இது பழைய ஆக்கங்களின் தொடர்ச்சியான பின்னூட்டம் தான் .அந்த பழைய பின்னூட்டங்கள் உங்களுக்கு தெரிய வில்லை என்று நினைக்கிறன் . இது நக்கீரன் ,தருமி, பாண்டிய மன்னன் ஆகியோர் சம்பந்தப் பட்ட "திருவிளையாடல்" பாணி தான்.
நான் யாருக்காக அதனை அப்படி எழுதினேன் என்பது தேமொழிக்கும் தெரியும், இன்னும் மற்றோருக்கும் தெரியும் .
நீங்கள் சொன்னால் விளையாட்டு மற்றவர் சொன்னால் விளையாட்டில்லை எனும் பொருளே உங்கள் பின்னூட்டம் சொல்கிறது.////

(வாத்தியார், மேஜைத் தட்டி ச்த்த்மாகச் சொல்கிறார்.) அமைதி! அமைதி! அமைதி!

kmr.krishnan said...

//இருவருமே சனியின் நட்சத்திரம் என்பதால், திருமணப் பொருத்தம் பார்க்கையில் ஜோதிடர் ரஜ்ஜு தட்டுகிறது என்று சொல்லியிருப்பாரே! எப்படி சமாளித்தீர்கள்?//

அப்போதெல்லாம் சோதிடம் என்றால் கிலோ என்ன விலை என்பதுதான் என் அறிவு.25 வயது. பொருத்தம் உள்ளது என்று சொன்னது என் தாய் மாமன்.அவரே என் மனைவிக்கு சித்தியின் கணவர்,சித்தப்பா. அனுஷம் என்பதால் சோதிடப் பொருத்தம் பார்க்க வேண்டாம் என்ற நம்பிக்கையில் என் அம்மா தலை ஆட்டி இருக்கலாம்.ஏக லக்னம். நல்ல‌ தசா சந்திப்பு வேறு. 1 மாத வித்தியாசத்தில் எப்போதும் ஏக தசை ஏக புக்தி நடக்கிறது.எப்படியோ ஓரளவு மகிழ்ச்சியாகவே காலம் தள்ளிவிட்டோம்.நிறைய பிரச்சனைகள் வந்தாலும் விருச்சிகம் துணிவோடு எதிர்கொண்டது; கடகம் வளைக்குள் பதுங்கினாலும், விருச்சிகம் கொடுக்கை உயர்த்திப் பாதுகாத்தது. இன்னமும் சிறிது காலம் தானே. அதையும் கழித்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.எல்லாம் அந்தப் பழனியப்பன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.

Ananthamurugan said...

//வழக்கம்போல் புரியவில்லை விசுவநாதன்!//

ஹா!ஹா!முத்தாய்ப்பு!!!


என்னக்கு புலிப்பாணி,போகர்,திருமூலர் பாடல்கள் கூட விளக்க உரை இல்லாமல் படிக்க முடிகிறது!!!இவர் நவீன கால(கலியுக)சித்தர்!!!!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
//இருவருமே சனியின் நட்சத்திரம் என்பதால், திருமணப் பொருத்தம் பார்க்கையில் ஜோதிடர் ரஜ்ஜு தட்டுகிறது என்று சொல்லியிருப்பாரே! எப்படி சமாளித்தீர்கள்?//
அப்போதெல்லாம் சோதிடம் என்றால் கிலோ என்ன விலை என்பதுதான் என் அறிவு.25 வயது. பொருத்தம் உள்ளது என்று சொன்னது என் தாய் மாமன்.அவரே என் மனைவிக்கு சித்தியின் கணவர்,சித்தப்பா. அனுஷம் என்பதால் சோதிடப் பொருத்தம் பார்க்க வேண்டாம் என்ற நம்பிக்கையில் என் அம்மா தலை ஆட்டி இருக்கலாம்.ஏக லக்னம். நல்ல‌ தசா சந்திப்பு வேறு. 1 மாத வித்தியாசத்தில் எப்போதும் ஏக தசை ஏக புக்தி நடக்கிறது.எப்படியோ ஓரளவு மகிழ்ச்சியாகவே காலம் தள்ளிவிட்டோம்.நிறைய பிரச்சனைகள் வந்தாலும் விருச்சிகம் துணிவோடு எதிர்கொண்டது; கடகம் வளைக்குள் பதுங்கினாலும், விருச்சிகம் கொடுக்கை உயர்த்திப் பாதுகாத்தது. இன்னமும் சிறிது காலம் தானே. அதையும் கழித்துவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.எல்லாம் அந்தப் பழனியப்பன் அருள் கிடைக்கும் என்ற நம்பிக்கைதான்.////

1.ஜாதகப் பொருத்தம் பார்த்துச் செய்த சில திருமணங்கள் ஊற்றிக்கொண்டுள்ளது.
2.ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் செய்த பல திருமணங்கள் வெற்றிகரமான வாழ்க்கையில் கொண்டுபோய் விட்டுள்ளது.
திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் ஒன்று மட்டும் போதாது. மற்றும் பல அமைப்புக்கள் உள்ளன. கேந்திர, திரிகோண வீடுகள் இருவருக்கும் நன்றாக இருக்கும் நிலையில் பொதுப் பொருத்தங்கள் எல்லாம் ஒரம் கட்டப் ப்ட்டுவிடும். உங்கள் மொழியில் சொன்னால் கட்டம் கட்டுப்பட்டு விடும்,
மொத்தத்தில் மனப் பொருத்தமும், பாக்கியமும் இருந்தால் போதும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Ananthamurugan said...
//வழக்கம்போல் புரியவில்லை விசுவநாதன்!//
ஹா!ஹா!முத்தாய்ப்பு!!!
என்னக்கு புலிப்பாணி,போகர்,திருமூலர் பாடல்கள் கூட விளக்க உரை இல்லாமல் படிக்க முடிகிறது!!!இவர் நவீன கால(கலியுக)சித்தர்!!!!////

நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவர் சித்தர்தான். விசுவநாத சித்தர். சைவசித்தந்த சித்தர். முருகன் அருள் பெற்றவர்!

Ananthamurugan said...

தேமொழி said...
\\அவருக்கிட்ட 5 வடை இருக்கு, ஒரு வடையைக் கொடுத்து காரியத்த சாதிசுக்கலாம்.//

வடைன்னு சொன்னப்பதான் எனக்கு ஒரு கதை ஞாபகம் வருகிறது.(தென்கச்சி சுவாமிநாதன் style) ஒருவன் லட்டு,ஜாங்கிரி,வாங்க கடைக்கு சென்றான்.கடைக்காரரிடம் போன வருட ஆயுதபூஜைக்கு லட்டு,ஜாங்கிரி கொடுத்தீர்களே!!!நன்றாக இருந்தது.அதே போல் 5 kg கொடுங்கள்.கடைக்காரர்.........அதே போல் ஏன் அதுவே இருக்கிறது கொடுக்கிறேன்???!!! 5 வடையையும் துடைத்து வைத்திருக்கிறேன்.வேண்டுமெனில் Attachment இல் அனுப்பப்படும்.

தேமொழி said...

///Ananthamurugan said... 5 வடையையும் துடைத்து வைத்திருக்கிறேன்.வேண்டுமெனில் Attachment இல் அனுப்பப்படும். ///

எதை அனுப்புவீங்க... ஊசிப்போன மசால் வடையையா? அப்புறம் அதை கொடுத்தால் ஏன் காக்காவுக்கு உங்க மேல கோபம் வராது.
எதுக்கும் வெளியில் போனால் குல்லா போட்டுக்கோங்க. இதுக்குள்ள காக்கா அது அண்ணன்கிட்ட உங்களைப் பத்தி என்னென்ன வத்தி வச்சுதோ?

Ananthamurugan said...

தேமொழி said...
///எதை அனுப்புவீங்க... ஊசிப்போன மசால் வடையையா? அப்புறம் அதை கொடுத்தால் ஏன் காக்காவுக்கு உங்க மேல கோபம் வராது.
எதுக்கும் வெளியில் போனால் குல்லா போட்டுக்கோங்க. இதுக்குள்ள காக்கா அது அண்ணன்கிட்ட உங்களைப் பத்தி என்னென்ன வத்தி வச்சுதோ?//

''சேயவன் புந்தி வனவாச மாதுடன் சேர்ந்த செந்திற்
சேயவன் புந்தி கனிசா சராந்தக சேர்ந்தவென்னிற்
சேயவன் புந்தி பனிப்பானு வெள்ளி பொன் செங்கதிரோன்
சேயவன் புந்தி தடுமாற வேதருஞ் சேதமின்றே.''

குல்லா போடுறது,கக்கா பிடிக்கிறது.நமக்கும் அதுக்கும் வெகுதூரம்.
Polimer tv இல் "சனிபகவான் மகிமை"என்னும் தொடரில்,சனியின் வாகனமாக கழுகை காண்பிக்கிறார்கள்.எது சரியென்று தெரியவிலையே.இது எப்படி புது குழப்பம்???!!!!
பதில் வாத்தியார்?!! அய்யா!

Ananthamurugan said...

SP.VR. SUBBAIYA said...
சனியின் மேல் உள்ள பக்தியினால் ஆளுக்கு ஒரு கதை எழுதிவைத்திருப்பார்கள் போலும்!

பக்தியினலா??பயத்தினாலா!?

sriganeshh said...

@ananthamurugan,
பழமையான சனி வஜ்ஜிர பஞ்ச கவசத்தில் (வட மொழியில் இயற்றப்பட்டது) சனி பகவானை வர்ணிக்கும் போது "மகுடம் தரித்து வல்லூறு வாகனத்தில் அமர்ந்திருப்பவர்." என்று உள்ளது. இக்கவசம் வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. சனி ப்ரீதிக்காக எல்லோராலும் பாராயணம் செய்யப்படுகிறது.
விஜய் டிவியில் சனி மகாத்மியம் தமிழாக்கம் செய்யப்பட்டு ஒளிப்பரப்பு ஆகிறது. ஆகவே வல்லூறு வாகனமாகிறது.
ஆனால் தமிழில் சனி கவசத்தில் "சனியனே காகம் ஏறும் தம்பிரானே' என்று ஒவ்வொரு பாடலின் முடிவில் வருகிறது. ஆகவே காகமும் வாகனமாகிறது.

minorwall said...

பூச நட்சத்திரக்க்காரர்கள் பத்தின பதிவுக்கு வந்த இன்றைய பின்னூட்டத்தை சனி பிடித்துவிட்டதுதான் ஆச்சரியம்..

minorwall said...

பூச நட்சத்திரக்க்காரர்கள் பத்தின பதிவுக்கு வந்த இன்றைய பின்னூட்டத்தை சனி பிடித்துவிட்டதுதான் ஆச்சரியம்..

minorwall said...

////////Parvathy Ramachandran said..
அவர் இந்த செய்தியைப் பரப்புவதை ஒரு சேவையாக(?)செய்து வருகிறாராம்.ஹூம்.... ////////
எது எப்படியோ நீங்கள் இன்று அந்த சேவைக்குத் துணை புரிந்திருக்கிறீர்கள்..

Uma said...

வழக்கம்போல் நிறைய தகவல்களுடன் வெளியிட்ட பதிவிற்கு நன்றி!

Uma said...

ஏற்கனவே குறையை கண்டிபிடிக்க நக்கீரன் போல் ஒருவர் இருக்கிறார்//

ரெண்டு நாளா போனா போகுதுன்னு குறை ஏதும் கண்டுபிடிக்காம விட்டா பயம் விட்டுப்போச்சா? இனிமே தினமும் இதே வேலையா செய்யவேண்டியதுதான்.

Parvathy Ramachandran said...

//////////Parvathy Ramachandran said..
அவர் இந்த செய்தியைப் பரப்புவதை ஒரு சேவையாக(?)செய்து வருகிறாராம்.ஹூம்.... ////////
எது எப்படியோ நீங்கள் இன்று அந்த சேவைக்குத் துணை புரிந்திருக்கிறீர்கள்..//

நான் எனது பின்னூட்டத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். திருமண விஷயத்தில் ஆண்களுக்கும் நட்சத்திரப் பிரச்னை உண்டு என்பதை விளக்கவே இதை எழுதுகிறேன் என்பதை. மூட நம்பிக்கையைப் பரப்புவது என் வேலையோ நோக்கமோ அல்ல. இப்படியும் சில நம்பிக்கைகள் மனிதர்களைக் கெடுக்கின்றன என்பதைத் தெரியப் படுத்தவே எழுதினேன். இதைத் திரித்துக் கூறும் அளவுக்குத் தங்களுக்கு என் மீது என்ன கோபம் என்பதைத் தெரியப்படுத்தவும்

Uma said...

. இப்படியும் சில நம்பிக்கைகள் மனிதர்களைக் கெடுக்கின்றன என்பதைத் தெரியப் படுத்தவே எழுதினேன். இதைத் திரித்துக் கூறும் அளவுக்குத் தங்களுக்கு என் மீது என்ன கோபம் என்பதைத் தெரியப்படுத்தவும்//

ஆஹா, நிஜமாகவே இன்றைய பதிவை சனி பகவான் பிடித்துவிட்டார் போலும். தனுசு / மைனர் இருவருமே விளையாட்டுக்காகவே / கலாய்ப்பதற்காகவே எழுதியிருக்க சம்பந்தப்பட்ட இருவருமே சீரியசாக எடுத்துக்கொண்டு விட்டனர். வாத்தியார் சார்பாக நான் சொல்லிக்கொள்கிறேன் 'கூல், கூல், கூல்'.

Uma said...

. இப்படியும் சில நம்பிக்கைகள் மனிதர்களைக் கெடுக்கின்றன என்பதைத் தெரியப் படுத்தவே எழுதினேன். இதைத் திரித்துக் கூறும் அளவுக்குத் தங்களுக்கு என் மீது என்ன கோபம் என்பதைத் தெரியப்படுத்தவும்//

ஆஹா, நிஜமாகவே இன்றைய பதிவை சனி பகவான் பிடித்துவிட்டார் போலும். தனுசு / மைனர் இருவருமே விளையாட்டுக்காகவே / கலாய்ப்பதற்காகவே எழுதியிருக்க சம்பந்தப்பட்ட இருவருமே சீரியசாக எடுத்துக்கொண்டு விட்டனர். வாத்தியார் சார்பாக நான் சொல்லிக்கொள்கிறேன் 'கூல், கூல், கூல்'.

thanusu said...

Uma said...ஆஹா, நிஜமாகவே இன்றைய பதிவை சனி பகவான் பிடித்துவிட்டார் போலும். தனுசு / மைனர் இருவருமே விளையாட்டுக்காகவே / கலாய்ப்பதற்காகவே எழுதியிருக்க......

நீங்கள் புரிந்து கொண்டமைக்கு நன்றிகள் .

Uma said.ரெண்டு நாளா போனா போகுதுன்னு குறை ஏதும் கண்டுபிடிக்காம விட்டா பயம் விட்டுப்போச்சா? இனிமே தினமும் இதே வேலையா செய்யவேண்டியதுதான்.

சவுத் ஆப்ரிகாவிலிரிந்து இன்னும் வரவில்லை என்று தெரிகிறது .

Ananthamurugan said...

sriganeshh said...
\\"மகுடம் தரித்து வல்லூறு வாகனத்தில் அமர்ந்திருப்பவர்." என்று உள்ளது.

"சனியனே காகம் ஏறும் தம்பிரானே' என்று ஒவ்வொரு பாடலின் முடிவில் வருகிறது.//

நன்றி! ஸ்ரீகணேஷ்,சாதாரண மனிதர்களே பல வாகனங்களுக்கு அதிபதியாக இருக்கும் பொழுது,கர்மகாரகன்,ஆயுள்காரகன்,ஆக,இரண்டு.................

Uma said...

சவுத் ஆப்ரிகாவிலிரிந்து இன்னும் வரவில்லை என்று தெரிகிறது .//

இன்னும் பத்து நாள் ஆகும், அதுவரைக்கும் லா லா லா லாஆஆஆஆஆ

thanusu said...

uma said.....இன்னும் பத்து நாள் ஆகும், அதுவரைக்கும் லா லா லா லாஆஆஆஆஆ

ஒரூ பத்து நாளுக்கு முன்னாடி ஏதோ டிராப்ட்டில் இருக்கிறது என்று சொன்னதாக நினைவு முடித்துவிட வேண்டியது தானே.

Uma said...

ஒரூ பத்து நாளுக்கு முன்னாடி ஏதோ டிராப்ட்டில் இருக்கிறது என்று சொன்னதாக நினைவு முடித்துவிட வேண்டியது தானே.//

அதைப் பிறகு எழுதலாம் என அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு கதை எழுத ஆரம்பித்திருக்கிறேன் வாரமலருக்கு அனுப்ப.

minorwall said...

.
//////////Parvathy Ramachandran said..
நான் எனது பின்னூட்டத்திலேயே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். திருமண விஷயத்தில் ஆண்களுக்கும் நட்சத்திரப் பிரச்னை உண்டு என்பதை விளக்கவே இதை எழுதுகிறேன் என்பதை. மூட நம்பிக்கையைப் பரப்புவது என் வேலையோ நோக்கமோ அல்ல. இப்படியும் சில நம்பிக்கைகள் மனிதர்களைக் கெடுக்கின்றன என்பதைத் தெரியப் படுத்தவே எழுதினேன். இதைத் திரித்துக் கூறும் அளவுக்குத் தங்களுக்கு என் மீது என்ன கோபம் என்பதைத் தெரியப்படுத்தவும்/////////

ச்சும்மா..டமாஷ்....

இப்புடி புடி புடின்னு புடிச்சுட்டீங்களே சேச்சி..
எனக்கு உங்க பேரிலேயே ஒரு சகோதரி இருக்கிறார்..
பேரு பாரதி ராமச்சந்திரன்..(கணவர் பெயரும் அப்படியே டிட்டோ ) ஹெட்மிஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறார்.
அவரை வம்பளப்பதுபோலே நினைச்சுக்கிட்டு உங்களை சொல்லிவிட்டேன்..
ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட வேணாம்..

ஒண்ணு கவனிச்சீங்களா?

நான் இந்த செய்தியை 'ஹிட்' பண்ணி செய்த முயற்சியை கையிலெடுத்து
'டெல்லி ஆல் இண்டியா ரேடியோ' ரெண்டு தடவை பின்னூட்டமாக்கி பரப்புரையை ஆத்து ஆத்துன்னு ஆத்தியிருக்காங்க பார்த்தீங்களா?
(சாரி..தமிழ் விரும்பி.. உங்க 'ஆற்றுவித்து' என்கிற 'பேடன்ட்'டெட் வார்த்தையை நான் 'ஆத்து ஆத்துன்னு ஆத்தியிருக்காங்க'ன்னு கல்லோக்குயலா யூஸ் பண்ணிவிட்டேன்..)

minorwall said...

////thanusu said...
சவுத் ஆப்ரிகாவிலிரிந்து இன்னும் வரவில்லை என்று தெரிகிறது ./////

தனுசு..தப்பா சொல்றீங்க..

அது.. சவுத் 'அப்பிரிக்கா'

Uma said...

பாரதிக்கும் பார்வதிக்கும் என்ன பெயர் ஒற்றுமை என்பது எனது சிற்றறிவிற்கு விளங்கவில்லை, சற்றே விளக்குவீர்களா மைனர் சார்??

minorwall said...

////Uma said...
பாரதிக்கும் பார்வதிக்கும் என்ன பெயர் ஒற்றுமை என்பது எனது சிற்றறிவிற்கு விளங்கவில்லை, சற்றே விளக்குவீர்களா மைனர் சார்??/////

ரெண்டுமே தமிழ்ப்பெயர்..

ரெண்டுமே பெண்களுக்கான பெயர்..

ரெண்டிலுமே முதலெழுத்து 'பா' கடைசி எழுத்து 'தி'..

இந்தளவு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஆமா..
நீங்க இன்னும் வூட்டுக்கு கிளம்பலியா மேடம்?

Uma said...

ரெண்டுமே தமிழ்ப்பெயர்..
ரெண்டுமே பெண்களுக்கான பெயர்..
ரெண்டிலுமே முதலெழுத்து 'பா' கடைசி எழுத்து 'தி'..
இந்தளவு போதுமா?இன்னும் கொஞ்சம் வேணுமா?
ஆமா..நீங்க இன்னும் வூட்டுக்கு கிளம்பலியா மேடம்?//

தப்பு தப்பா எழுதிட்டு என்னாமா சமாளிக்கிறாரு? அரசியல்ல உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு!!!!!!!!!!

இதோ கிளம்பிகினே இருக்கேன்.

minorwall said...

/////Uma said...

தப்பு தப்பா எழுதிட்டு என்னாமா சமாளிக்கிறாரு? /////

கிராமங்களில் இன்னமும் 'ஏ பார்வதீ' என்று பாரதியைப் பார்வதியாக்கியும், பார்வதியை பாரதியாக்கியும் வழக்கிலே கூப்பிடும் பழக்கம் உண்டு..
அங்கேயெல்லாம் உங்கள் தப்புக் கணக்கு- திருத்தல் வேலையெல்லாம் எடுபடாது மேடம்..

//////அரசியல்ல உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கு!!!!!!!!!!//////

சோதிட பரம்பூஷன் பலன் சொல்லியிருக்கீங்க..
பலிக்காமலா போய்டும்?

Parvathy Ramachandran said...

//நான் இந்த செய்தியை 'ஹிட்' பண்ணி செய்த முயற்சியை கையிலெடுத்து
'டெல்லி ஆல் இண்டியா ரேடியோ' ரெண்டு தடவை பின்னூட்டமாக்கி பரப்புரையை ஆத்து ஆத்துன்னு ஆத்தியிருக்காங்க பார்த்தீங்களா?//

பி.பி.சி.யே போற்றிப் புகழும் அன்புச் சகோதரியின் 'தமிழ்ச் சேவையை,' ஆல் இண்டியா ரேடியோ அளவுக்குச் சுருக்கியமைக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டு,

//அவரை வம்பளப்பதுபோலே நினைச்சுக்கிட்டு உங்களை சொல்லிவிட்டேன்..
ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட வேணாம்..//

இல்லவே இல்லை. நானும் உங்கள் சகோதரியே . ஆனா......
//இப்புடி புடி புடின்னு புடிச்சுட்டீங்களே 'சேச்சி'..//

இது என்ன 'மதுரைக்கு' வந்த சோதனை.

Parvathy Ramachandran said...

//நான் இந்த செய்தியை 'ஹிட்' பண்ணி செய்த முயற்சியை கையிலெடுத்து
'டெல்லி ஆல் இண்டியா ரேடியோ' ரெண்டு தடவை பின்னூட்டமாக்கி பரப்புரையை ஆத்து ஆத்துன்னு ஆத்தியிருக்காங்க பார்த்தீங்களா?//

பி.பி.சி.யே போற்றிப் புகழும் அன்புச் சகோதரியின் 'தமிழ்ச் சேவையை,' ஆல் இண்டியா ரேடியோ அளவுக்குச் சுருக்கியமைக்கு என் கண்டனத்தைத் தெரிவித்துக்கொண்டு,

//அவரை வம்பளப்பதுபோலே நினைச்சுக்கிட்டு உங்களை சொல்லிவிட்டேன்..
ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட வேணாம்..//

இல்லவே இல்லை. நானும் உங்கள் சகோதரியே . ஆனா......
//இப்புடி புடி புடின்னு புடிச்சுட்டீங்களே 'சேச்சி'..//

இது என்ன 'மதுரைக்கு' வந்த சோதனை.

minorwall said...

@Parvathy Ramachandran said...
இன்னிக்கு 'பூசம்' மேட்டர் BBCநியூஸ் அளவுக்குப் போயிடுச்சா?ஏக 'ஹிட்' தான் போங்க..

///இல்லவே இல்லை. நானும் உங்கள் சகோதரியே//////

சகோதரத்துவத்துக்கு நன்றி..
உங்கள் தமிழுணர்வுக்கு தலைவணங்குகிறேன் சகோதரி..

படத்தைப் பார்த்தால் கதகளி போலத் தெரிந்தது..கிளிக் பண்ணிப் பார்க்காமல் சொன்னது தப்புதான்..

ஒரு தூய தமிழச்சியை மலையாளியாக ஆக்கி விட்ட வார்த்தையை எடிட் செய்துவிட வேண்டுகிறேன்..

தமிழனின் குரல் உலகெங்கிலும் ஒன்றிணைந்து ஓங்கி ஒலிக்கப்போகும் நாளை..
இத்தாலியரும் சீக்கியரும் மலையாளத்தாரும் சேர்ந்தே இருந்தும் வேறுவழியில்லாமல்
தமிழனுக்காக ஓடி ஒளியாமல் ஓங்கிக் குரல் கொடுக்கவேண்டிய கட்டாயம்..

இந்த வேளையில் 'ஆக்டிவ் வாசகர் வட்டத்துக்குள்' வந்திருக்கும் தெற்கத்தித் தமிழச்சி
தங்களின் வரவை நல்வரவாக்கி வாழ்த்தி வரவேற்கிறேன்..

Parvathy Ramachandran said...

//படத்தைப் பார்த்தால் கதகளி போலத் தெரிந்தது..//

அண்ணனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? என் படம் கதகளி போலத்தெரிந்ததாலோ என்னவோ இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் 'குரு கரகம்'னு ஆடியிருக்கீங்க.
மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Parvathy Ramachandran said...

//படத்தைப் பார்த்தால் கதகளி போலத் தெரிந்தது..//

அது எங்கள் வீட்டுக் கொலுவில் நான் வைத்த அலங்காரம் செய்யப்பட்ட பெரிய குத்து விளக்கு. என்னைவிட அது நன்றாக இருப்பதால், அதன் படத்தைப் போட்டிருக்கிறேன்.

Uma said...

சோதிட பரம்பூஷன் பலன் சொல்லியிருக்கீங்க..
பலிக்காமலா போய்டும்?//

ஹி ஹி

Uma said...

இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் 'குரு கரகம்'னு ஆடியிருக்கீங்க.
மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.//

கவனிச்சுருவோம்!!!

Uma said...

அது எங்கள் வீட்டுக் கொலுவில் நான் வைத்த அலங்காரம் செய்யப்பட்ட பெரிய குத்து விளக்கு. என்னைவிட அது நன்றாக இருப்பதால், அதன் படத்தைப் போட்டிருக்கிறேன்.//

வாவ் உண்மையிலேயே அழகாக இருக்கிறது, நான் கூட போட்டோ என்றுதான் நினைத்தேன். எப்படி செய்தீர்கள் என விளக்கி ஒரு மெயில் அனுப்புங்களேன்.

minorwall said...

/////Parvathy Ramachandran said...
// Parvathy Ramachandran said...
படத்தைப் பார்த்தால் கதகளி போலத் தெரிந்தது..//

அண்ணனுக்கு இன்னைக்கு என்ன ஆச்சு? என் படம் கதகளி போலத்தெரிந்ததாலோ என்னவோ இன்றைய பதிவின் பின்னூட்டத்தில் 'குரு கரகம்'னு ஆடியிருக்கீங்க.
மதியத்துக்கு மேல, உங்களை 'மேலிடம்' கவனிக்கும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்./////

கதகளியை ஒதுக்கி 'கரகாட்டம்' என்ற தமிழர் பண்பாட்டை நினைவு படுத்திப் பேசி மீண்டும் தமிழச்சி என்றே பதிவுசெய்த உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அக்கா..

சேச்சி என்றால் 'அக்கா' என்றல்லவா அர்த்தம்?

Ananthamurugan said...

Parvathy Ramachandran said...
அது எங்கள் வீட்டுக் கொலுவில் நான் வைத்த அலங்காரம் செய்யப்பட்ட பெரிய குத்து விளக்கு. என்னைவிட அது நன்றாக இருப்பதால், அதன் படத்தைப் போட்டிருக்கிறேன்.

இதுதான் குடும்ப குத்துவிளக்கு என்பதா சகோதரி!!

Parvathy Ramachandran said...

//வாவ் உண்மையிலேயே அழகாக இருக்கிறது, நான் கூட போட்டோ என்றுதான் நினைத்தேன். எப்படி செய்தீர்கள் என விளக்கி ஒரு மெயில் அனுப்புங்களேன்.//

பாராட்டுக்கு நன்றி. கண்டிப்பாக அனுப்புகிறேன்.

//கதகளியை ஒதுக்கி 'கரகாட்டம்' என்ற தமிழர் பண்பாட்டை நினைவு படுத்திப் பேசி மீண்டும் தமிழச்சி என்றே பதிவுசெய்த உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை அக்கா..

சேச்சி என்றால் 'அக்கா' என்றல்லவா அர்த்தம்?//

ஆலாசியம் அண்ணாவுக்கு நான் ஆறு வயது இளைய தங்கை. உங்களுக்கு திரு. ஆலாசியம் அண்ணனா? தம்பியா?

// இதுதான் குடும்ப குத்துவிளக்கு என்பதா சகோதரி!!//

ஹா....ஹா...... ஆனால் சகோதரரே, என் ப்ளாக்கில் போடுவதற்காக இணையத்தில் 'குத்துவிளக்கு' தலைப்பில் படம் தேடினால், ஐயோ ஆண்டவனே....எப்படிச்சொல்வது, குடும்ப குத்துவிளக்குகள் என்று, சில பெண்கள் செய்யும் அநியாயமும் பார்வைக்கு வருகிறது. இந்தியாவை இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.