மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

26.3.12

Numerology முதல் மரியாதை யாருக்கு?


The Sun Temple, Konark, Orissa State, India
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 முதல் மரியாதை யாருக்கு?

எண் ஜோதிடத்தில் ஒன்றாம் எண்ணிற்குத்தான் முதல் மரியாதை! ஒன்றாம் எண்ணை உடையவர்களுக்குத்தான் முதல் மரியாதை!

கிரகங்களில் சூரியனைக் குறிக்கும் எண் ஒன்றாம் எண்ணாகும்.

கிழமைகளில் ஞாயிற்றுக்கிழமைக்கு உரியது.

The Great என்று குறிப்படும் நாயகர் Alexander the Great பிறந்தது ஜூலைத் திங்கள் ஒன்றாம் தேதியில்! The Great என்று குறிப்படும் மற்றுமொரு நாயகர் அக்பர் பிறந்த தேதியின் கூட்டல் தொகையும் ஒன்றுதான் (November 23, 1542) 23 + 11 + 1542 = 19 = 1

சரித்திரத்தில் உள்ள மற்றுமொரு மாமன்னர் அசோகர் (Ashoka the Great) பிறந்த தேதி தெரியவில்லை. விக்கி மகராஜாவிடம் கேட்டுப் பார்த்தேன் கிடைக்கவில்லை. அவரும் ஒன்றாம் எண்ணிற்கு உரியவராக இருக்கலாம்.

தமிழ்த்திரையில் தனக்கென முத்திரையைப் பதித்துவிட்டுப்போன நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் பிறந்தது ஒன்றாம் தேதியில் (Date of Birth: October 1, 1927)

ஒன்றாம் எண்ணின் தனிதன்மையே எதையும் எதிர்கொள்ளும் வலிமை மிக்க எண் அது. தன்னம்பிக்கைக்கும், துணிச்சலுக்கும் உரிய எண் அது.

ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்கள் தலைமை தாங்கும் வலிமை உடையவர்கள் (They are born leaders) எண்ணங்களிலும், செயல்களிலும் சுதந்திரமனப்பான்மை உடையவர்கள். தங்கள் வழியில் குறுக்கிட எவரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆக்கவேலைகளை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எப்போதும் அசலாகவே இருக்க விரும்புபவர்கள். நகலாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.

சொந்த வாழ்க்கையாக இருக்கட்டும் அல்லது வேலை செய்யும் இடமாக இருக்கட்டும் அல்லது தொழிலாக இருக்கட்டும், எதிலும் முதன்மை பெறும் சக்தி இயற்கையாகவே அவர்களுக்கு இருக்கும்!

உடல், மனம், செயல்படும் தன்மை என்று எல்லாவற்றிலுமே வலிமை பெற்றவர்களாக இருப்பார்கள் They are usually incredibly strong in mind, body, and spirit.

ஒன்றுதான் துவக்க எண். மற்ற எண்கள் எல்லாம் அதன் விரிவாக்கமே. அதை மறக்க வேண்டாம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அனைவருக்குமே பிறப்பு எண் ஒன்றுதான். அவர்கள் தங்களுடைய பெயரை ஒன்று என்ற எண் வரும்படியாக அமைத்துக் கொண்டால், வாழ்க்கை சிறப்பாக இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள கல்லாகும்.படிகக்கல்லாகும்,

நவரத்தினங்களுள் அதுவும் ஒன்று. தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைக்கும். ஒன்று எண்ணிற்கு உரிய கல் இந்தக் கல்.

On wearing a Ruby one becomes proof against the effect of poison என்று சொல்வார்கள். அது எந்த அள்விற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!

இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு உரிய வண்ணங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், தங்க நிறம் பொருந்தாத வண்ணங்கள்: கறுப்பு, மெரூன்

மேலதிகத்தகவல்கள்:

கிரகங்களுக்கு அரசன் என்று சொல்லப்படும் கிரகம் சூரியன். அதிகாரம், சக்திகளுக்கு உரிய கிரகம், தந்தைக்குக் காரகன். உடல் காரகன். சூரியன் நீசமடைந்திருப்பவர்கள் இந்த இளஞ்சிவப்புக் கல்லை அணியும்போது, நீசத்தன்மை குறையும்.

ஒன்றாம் எண் தனித்தன்மைவாய்ந்த எண்ணாகும். தலைமை ஏற்பதற்குரிய அபரிதமான அறிவையும், ஆற்றலையும், கொடுக்கும் தன்மையை உடையது. ஆர்வம், இலக்கை நோக்கிப் பயணிக்கும் தன்மை, அதீத உந்து சக்தி, துணிச்சல் ஆகியவற்றை வழங்கும் எண். தனித்தன்மை வாய்ந்தது. முதன்மையானது.

பிரச்சினைகளைப் புதுமையான வழியில் எதிர்கொள்ளும் ஆற்றலைத்தருவது. வெற்றிக்கான செயல்பாடுகளை உள்ளடக்கியது ஆகியவைகள் அதன் சிறப்பாகும்.

சுயதொழில் முனைவோர்கள், மேலாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் போன்றவர்களுக்கு உரிய எண் இந்த எண்ணாகும்

இந்த எண்ணை உடையவர்களிடம் அதீத உழைப்பு இருக்காது. விவேகமான செயல் இருக்கும் (works smarter not harder). தலைமை ஏற்கும் சக்தி இருக்கும்.

மொத்தத்தில் வாழ்க்கையின் முன்னணிக்குக் கொண்டுபோய் நிறுத்தும் வலிமை உடைய எண் இந்த எண். இது மற்றவர்களை ஈர்க்கும் சக்தியை உடையதும் ஆகும்!

ஒன்றாம் தேதியில் பிறந்த சில பிரபலங்கள்: 
Alexander the Great    Born 1st July
Duke of Wellington    Born 1st May
President Garfield (USA)   Born 19th November
Field-Marshal Earl Haig    Born 19th June
Queen Alexandra   Born 1st December
Field-Marshal Lord French   Born 28th September
David Livingstone    Born 19th March
Lord Charles Beresfor   Born 10th February
Annie Besant  Born 1st October
President Wilson(USA)   Born 28th December
President Monroe (USA)  Born 28th April
President Hoover (USA)   Born 10th August
Orville Wright (Flying Machines)   Born 19th August
Sven Hedin (Explorer)   Born 19th February
Chopin (Composer)  Born 1st March
William Dean Howells (Author)   Born 1st March
Sir Edwin Amold (Author)  Born 10th June
Sir Roberth Ball (Astronomer)  Born 1st July
John Calvin (Astronomer)  Born 10th July
Mary Anderson (American Actress) Born 28th July
Alexandre Dumas (Author) Born 28th July
Oliver Wendell Holmes (Author) Born 28th August
President Adams (USA) Born 19th October
“Cheiro” Born 1st November
William Hogarth (Painter) Born 10th November
Captain Cook (Explorer) Born 28th October
Oliver Goldsmith Born 10th November
Thomas Moore (Irish Poet) Born 28th May
Nansen (Arctic Explorer) Born 10th October
Sir Charles Napier  Born 10th August
Edgar Allan Poe (Poet) Born 19th January
-----------------------------------------------------------------------
(தொடரும்)

அடிக்குறிப்பு:  வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு விடுமுறை இல்லை! பாடங்களை வலை ஏற்றுவதில் சிரமம் இல்லை. அதற்கு கூகுள் ஆண்டவருக்கு நன்றியைச் சொல்ல வேண்டும். அவர் செய்து கொடுத்திருக்கும் பல வசதிகளில் Auto Post வசதியும் ஒன்று. ஆகவே பாடங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தானாக வெளியாகும். ஒருவாரகாலத்திற்கான பாடங்கள்  பதிவில் தயாராக உள்ளன.

பின்னூட்டங்களும் அப்படியே! தானாக வெளியாகும். தேவைப்பட்டால் மட்டுறுத்தலும் உண்டு. உங்களுடைய பின்னூட்டங்களுக்கான பதில்கள் உடனுக்கு உடன் வராது. தாமதமாக வரும். ஆனால் நிச்சயமாக வ்ரும்.ஒருவார காலத்திற்கு இந்த நிலைமை. சொந்த ஜாதகம் மற்றும் சொந்தப் பெயரை வைத்து எழுதும் பின்னூட்டங்களைத் தவிர்க்கும்படி அனைவரும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

38 comments:

Ananthamurugan said...

மூன தொட்டது யாரு! நாம நம்பர் மூன்!!wait for two days

Parvathy Ramachandran said...

நம்ம நம்பர்ர்...........
//ஆக்கவேலைகளை மட்டுமே செய்யக்கூடியவர்கள். எப்போதும் அசலாகவே இருக்க விரும்புபவர்கள். நகலாக ஒருபோதும் இருக்க மாட்டார்கள்.//

கரெக்ட்ட்டு

//மொத்தத்தில் வாழ்க்கையின் முன்னணிக்குக் கொண்டுபோய் நிறுத்தும் வலிமை உடைய எண் இந்த எண்.//

அப்படியா......(ஆனா எல்லாருக்கும் எல்லா விதியும் பொருந்துமா)

Maheswaran said...

வணக்கம் ஐயா, தங்கள் பாடத்துக்கு நன்றி. விதி எண் & பிறந்த எண் பற்றி சிறிது விளக்க வேண்டும். இதில் எது முக்கியம்.

ஜி ஆலாசியம் said...

ஒன்றாம் எண்ணாம் அது தரும்
நன்றாம் உயர்வென அறிவீர்.

என்ற அறிய தகவல்களை தாங்கிய பதிவு...

பகிர்வுக்கு நன்றிகள் ஐயா!

ananth said...

என் தந்தையார் 19ம் தேதி பிறந்தவர். எனக்கு... தந்தைக்கு தந்தையின் எண். தனயனுக்கு அவருடைய தனயனின் எண். என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்.

அய்யர் said...

வாத்தியார் எண் 1ல் இருந்து
தொடங்கி உள்ளீர்..
அய்யர் எட்டில் இருந்து தொடங்குவார்..

எட்டும் இரண்டும் என்ற
சித்தர் வாக்கினை கருத்தில் கொண்டால்
(8+2=10; இது 1யை குறிக்கும் தானே)

///அப்படியா......(ஆனா எல்லாருக்கும் எல்லா விதியும் பொருந்துமா)///

எல்லாருக்கம் எல்லா விதியும் பொருந்தாது என்பது அய்யரின் கருத்து

மாற்றுக் கருத்துள்ளவர்கள்
மறுத்தும் எழுதலாம்...

தேமொழி said...

///The Great என்று குறிப்படும் மற்றுமொரு நாயகர் அக்பர் பிறந்த தேதியின் கூட்டல் தொகையும் ஒன்றுதான் (November 23, 1542) 23 + 11 + 1542 = 19 = 1 ///

இந்த மாதிரி கூட்டினால் எனக்கும் எண் ஒன்று வருகிறது. So...I am the great. என்ன இருந்தாலும் தேமொழி போல ஆவுமா?

///On wearing a Ruby one becomes proof against the effect of poison என்று சொல்வார்கள். அது எந்த அள்விற்கு உண்மை என்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்!///

தெரிந்தால் மட்டும் சொல்லவும், பரிசோதித்துப் பார்க்கத் தேவையில்லை

Parvathy Ramachandran said...

// So...I am the great //

100% உண்மை. அஹம் ப்ரம்மாஸ்மி. இறையே நாம் எனும்போது நாமே நமக்கு இணை. இறைவன் படைப்பில், (எண் ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும்)
ஒவ்வொரு படைப்பும் சிறந்ததே.

thanusu said...

தேமொழி said... இந்த மாதிரி கூட்டினால் எனக்கும் எண் ஒன்று வருகிறது. So...I am the great. என்ன இருந்தாலும் தேமொழி போல ஆவுமா?

Parvathy Ramachndren said... / So...I am the great //

இதில் சந்தேகமென்ன?

உங்களுக்கு வேண்டுமானால் இந்த சந்தேகம் வந்திருக்கலாம் வரலாம் . எங்களுக்கு இருந்தது இல்லை .

தேமொழி said...

உலகம் என் புகழைப் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புவியில் ஜெயக்கொடிதான் பறக்கட்டுமே

வேலிருக்கும் விழி மேலிருக்கும் என்
இமை மூடித் திறந்தால் சபை கூடும்
நானிருக்கும் இடத்தில் நாடிருக்கும்
நான் எனும் சொல்லே நடமாடும்

நாடும் நகரமும் நால்வகைப் படையும்
நவரச மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும் புலவரும்
புவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே

ஹி. ஹி. ஹீ ...ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சிட்டேனாக்கும்

அய்யர் said...

தேமொழி said...
...///உலகம் என் புகழைப் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புவியில் ஜெயக்கொடிதான் பறக்கட்டுமே

வேலிருக்கும் விழி மேலிருக்கும் என்
இமை மூடித் திறந்தால் சபை கூடும்
நானிருக்கும் இடத்தில் நாடிருக்கும்
நான் எனும் சொல்லே நடமாடும்

நாடும் நகரமும் நால்வகைப் படையும்
நவரச மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும் புலவரும்
புவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே///

இதனை பேராசை என்று சொல்ல
இந்த வகுப்பில் அனுமதிப்பீரா சகோதரி

ஆளில்லா ஊருக்கு
அரசராக யாரேனும் விரும்புவாரோ

ஆண்டவன் சித்தம் அதுவானால்
ஆகட்டும் அப்படியே..

வாழ்த்துக்களும்
வணக்கமும்.. வழக்கம் போல் ...

Govindasamy said...

எனது அனுபவத்தைப் பொருத்த மட்டில் எண் கணித சோதிடம் அத்துனை சரியாக இருந்ததில்லை. ஆனால் புகழ் பெற்ற எண் கணித சோதிடர் சீரோ சரியாக predictions செய்திருக்கிறார்.

நமது ஆட்கள் பிறந்த நேரம் வினாடி அளவுக்கு சரியாக இருந்தால்தால் லக்கினத்தை சரியாக கணித்து பலன்களைச் சொல்ல முடியும் என்கின்றபோது எண் கணித சோதிடம் எத்துனை வித்தியாசமானது...?

ஆனால் கட்டைவிரல் ரேகையை வைத்தே அத்துனை பலன்களையும் சொல்லும் நாடி முறையும் தான் இருக்கிறது.. இது மட்டுமே என்னை இன்னமும் வியப்பில் ஆழ்த்துகிறது.

ஜி ஆலாசியம் said...
This comment has been removed by the author.
Parvathy Ramachandran said...

//நாடும் நகரமும் நால்வகைப் படையும்
நவரச மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும் புலவரும்
புவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே

ஹி. ஹி. ஹீ ...ப்ராக்டீஸ் செய்ய ஆரம்பிச்சிட்டேனாக்கும்//

'யத் பவம்......தத் பவதி......(நீ எதுவாக ஆகவேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்)

'யத்ருஸே பவந‌யாஸ்யா..... ஸித்திர் தத்ருஸே.....( நீ எதை மனதால் பார்க்கிறாயோ அதுவே வெளிப்புறத்தில் பரிணமிக்கும்)

வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.

மனம் போல் வாழ்வு.

கிடைக்கும். வாழ்த்துக்கள். (ஏற்கனவே வாத்தியாரோடு சேர்ந்து சொல்லியாச்சு,
இது ரெண்டாவது ரவுண்ட்)

ஜி ஆலாசியம் said...

தேமொழியின் தெவிட்டாத கவிமழை - அது
தேனாறாய் பொங்கிப் பெருகட்டுமே!

அருமை! அருமை!! அருமை!!!
மடை திறந்த வெள்ளமாய்
நந்தவனம் புகுந்து வரும் தென்றலாய்
பொங்குகடல் அலையாய்
பூத்துக் குலுங்கிய மல்லிகை மணமாய்
கண்டமிட்டு கண்டம் வந்து கமழ்கிறதே
கண்கள் தான் பூக்க கவர்கிறதே!

இதோ இன்னொரு கவியும் வந்து விட்டார்...
வாழ்த்துக்கள் வருக வருக புலவரே!

இன்னும் சற்று அழகு உணர்சிகளைக் கூட்டும் (அது வீரமோ, காதலோ, கருணையோ, அருளோ எதுவானாலும் அது பண்புத் தொகையாய் அது அதனின் உயர்வான குணத்தை அடை மொழியாக கொண்டு வந்தால் இன்னும் சிறக்கும்.. நான் செய்த வண்ணத்தைப் பாருங்கள்... )

உலகம் என் புகழைப் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புவியில் ஜெயக்கொடிதான் பறக்கட்டுமே
(அருமை நான் தொடவே இல்லை... இருந்தும் இன்னும் நீங்கள் இதில் தொடலாம்)

வேலிருக்கும் விழியது மேலிருக்கும் - என்
இமைமூடித் திறந்தால் சபை கூடிநிற்கும்
நானிருக்கும் இடத்தில் உயர் நாடிருக்கும்
நானெனும் சொல்லே நர்த்தனமாடிநிற்கும்

நாடும் நகரமும் நால்வகைப் படையும்
நவரச மாளிகையும் நாயகி என்வசமே
கூடும் அரசரும் தமிழ்கவி பாடும்புலவரும்
புவியும் பொன்பொருளும் யாவும் என்வசமே...

(உங்களின் கவிதையை படித்த உணர்வில் என்னுள்ளும் பொங்கியது)

நானே எல்லாமும், நானில்லா எல்லாம் வீணே
தானே எதுவும் நடப்பதில்லை அதனில் வாழும்
நானே நலமுடன் யாவும் நடத்துவேனே
பூவில் தேனாவேன் புதுமலர் மணமாவேன்
நாவில் மொழியாவேன் கோவில் சிலையாவேன்
திங்களாவேன் தென்றலாவேன் தீந்தமிழாவேன்
வஞ்சமில்லா நெஞ்சில் அன்பாவேன் இன்னும்
எதுவானாலும் அதுவே நானாவேன்.

அருமை அருமை உண்மையில் அருமை... தங்களின் பழைய சென்ற ஆக்கத்திலே உங்களின் கவிதையை புகுத்தி இருந்தீர்கள் என்றே நினைக்கிறேன். மிகவும் அருமை அப்படியேத் தொடருங்கள்...

உங்களுக்குள் இருக்கும் தமிழ் பெருக ஆரம்பித்து விட்டது இனி யார் தடுத்தும் அது நிற்காது.... எழுதுங்கள் கவியை இதயம் நிரம்பிய அழகு உணர்வை...
தமிழ் புரவி ஏறி புவி வலம் வர தமிழ்கவிதா தீந் தமிழ்க் கவி தா என அனைவரும் ஏங்க வைக்கப் போகும் தமிழ் கவிதா தேமொழிக்கு வாழ்த்துக்கள்.

தேமொழி said...

///அய்யர் said...
ஆளில்லா ஊருக்கு
அரசராக யாரேனும் விரும்புவாரோ///


மச்சு குச்சு எல்லாமே மனசிலேதான் இருக்கு
மனசு நெறஞ்சிருந்தா மத்ததும் நெறஞ்சிருக்கும்....
ஆனாக்க அந்தமடம் ஆவாட்டி சந்தை மடம்
அதுவும் கூட இல்லாக்காட்டி பிளாட்ஃபாரம் சொந்த இடம்...
:)))))))))))))

தேமொழி said...

ஆலாசியம் ஷ்டாப்.....ஷ்டாப்.....ஷ்டாப்.....
ஒரு சின்ன சந்தேகம்.
கண்ணதாசனின் "உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி" பாட்டை
நீங்கள் சொல்வது போல் மாற்றிப் பாடினால் கவியரசர் கோபித்துக் கொள்ள மாட்டாரா ?

இப்பவே கண்ணதாசன் அதிர்ச்சியுடன்
"அவளா சொன்னாள்? இருக்காது,
அப்படி எதுவும் நடக்காது,
நடக்கவும் கூடாது,
நம்ப முடியவில்லை............வில்லை...........வில்லை'
என்று பாடுவது எனக்கு கேட்கிறதே.

தேமொழி said...

///Parvathy Ramachandran said... வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்தனையது உயர்வு.

மனம் போல் வாழ்வு.
கிடைக்கும். வாழ்த்துக்கள். (ஏற்கனவே வாத்தியாரோடு சேர்ந்து சொல்லியாச்சு,
இது ரெண்டாவது ரவுண்ட்)///

(நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் ஷோபாவின் குரலில்) நன்றி... நன்றி...பார்வதி, காலம் வரும்பொழுது அரசவைக் கவிஞர் பதவி உங்கள் வசம் வரும்..

thanusu said...

தேமொழி said...
...///உலகம் என் புகழைப் பாடட்டுமே
உயர்ந்தவள் நான் என்று சொல்லட்டுமே
புலவர் என் பெருமை பேசட்டுமே
புவியில் ஜெயக்கொடிதான் பறக்கட்டுமே

வேலிருக்கும் விழி மேலிருக்கும் என்
இமை மூடித் திறந்தால் சபை கூடும்
நானிருக்கும் இடத்தில் நாடிருக்கும்
நான் எனும் சொல்லே நடமாடும்

நாடும் நகரமும் நால்வகைப் படையும்
நவரச மாளிகையும் என் வசமே
கூடும் அரசரும் பாடும் புலவரும்
புவியும் பொருள்கள் எல்லாம் என் வசமே///"இவை யாவும் நடக்கவில்லையெனில்
வாளேடுப்பால் இந்த வேலு நாச்சியார் "

புதிய தூரிகையும் வண்ணங்களும்
வாங்கியதாக நேற்றைய பின்னூட்டம்
ஆனால் வரைதிருப்பதோ
இன்றைக்கு கவி ஆட்டம் .

நன்றாக இருக்கிறது அதிலும் இறுதி நான்கு வரிகளும் மிகவும் அருமை.

ஜி ஆலாசியம் said...

நான் எவ்வளவு எதிர் பார்த்து காத்திருக்கிறேன் பாருங்களேன்...

கவியரசர் கோவித்துக் கொள்ளவே மாட்டார்... கவிஞர்கள் யாவரும் அப்படியே...

நமது வேதத்தில் சொல்லாத விசயமே இல்லை அதையே தான் மீண்டும் மீண்டும் தேவைக்கு தோதுக்கு கரு சிதையாமல் மற்றவர்களும் செய்தார்கள்...

கவியரசு காட்டியது இவ்வழியே... 'கைவண்ணம் அங்கே கண்டேன் கால வண்ணம் இங்கே கண்டேன்' என்றார் விஸ்வம்நமது ரகுராமனைப் பார்த்து (அப்போது அவன் சீதாராமனாகவில்லை)

சீதாராமன் இலக்குமணனுக்கு சொல்லுவான்... அப்படி அன்னையை கோபிக்காதே... நதிவெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றமில்லை' என்று எல்லாம் கம்பனின் வரிகள் தாம் ஆனால் பெரும்பாலோருக்கு நமது கவியரசர் தானே கொண்டு வைத்தார்.

எப்படியோ, தாங்கள் மனது வைத்தால் இப்படி கவியரசரையே இன்னும் உங்கள் நடைக்கு கொண்டு வர முடியும்.. கவியரசு கோவிக்காது, மாறாக சந்தோசப் படும் காரமா அது அவர் நமக்கு விட்டுச் சென்றது!! (தமிழ் உரிமையில் இப்படி அது இது என்று... கொஞ்ச முன்னாடி கூட சகோதரியார் எப்படி இன்னும் அணுக்கமாக தமிழ் கவிதா தேமொழியா னீர்கள் அப்படித் தான்:):))

சரி எப்படியும் இந்த வாரம் உங்களின் கவிதை வரும் என்றேக் காத்திருக்கிறோம் யாவரும்.. தூரிகையை கொண்டு செய்த கவியை கொஞ்சம் இளைப்பாறச் செய்து விட்டு... எடுங்கள் எழுதுகோலை எழுதுங்கள் தமிழ் கவியை... (பிழை சரி பார்க்க வில்லை :):) கணைகள் வரும் முன் ஒரு அரணை எழுப்புகிறேன் )

தேமொழி said...

///thanusu said...
நன்றாக இருக்கிறது அதிலும் இறுதி நான்கு வரிகளும் மிகவும் அருமை. ///

///ஜி ஆலாசியம் said...
கவியரசர் கோவித்துக் கொள்ளவே மாட்டார்... கவிஞர்கள் யாவரும் அப்படியே...///

அப்போ காப்பி அடிச்சா கண்ணதாசன் கோவிச்சுக்க மாட்டார் அப்படிங்கறீங்க. சரி செஞ்சுடலாம் ...
வாரம் ஒரு கண்ணதாசன் கவிதையை என் பெயரில் அனுப்பலாம்தான், ஆனா காந்தி கண்ணதாசன் போனா போவுதுன்னு விட்டாக் கூட நம்ம வாத்தியார் வழக்கு போடுவாரே. அதான் யோசனையா இருக்கு.

கவிதை வரும்னு காத்திருக்கப் போறீங்களா? அடப் பாவமே...அது சரி நாளை நடப்பதை யார் அறிவார்.

ஜி ஆலாசியம் said...

////தேமொழி said...
///thanusu said...
நன்றாக இருக்கிறது அதிலும் இறுதி நான்கு வரிகளும் மிகவும் அருமை. ///

///ஜி ஆலாசியம் said...
கவியரசர் கோவித்துக் கொள்ளவே மாட்டார்... கவிஞர்கள் யாவரும் அப்படியே...///

அப்போ காப்பி அடிச்சா கண்ணதாசன் கோவிச்சுக்க மாட்டார் அப்படிங்கறீங்க. சரி செஞ்சுடலாம் ...
வாரம் ஒரு கண்ணதாசன் கவிதையை என் பெயரில் அனுப்பலாம்தான், ஆனா காந்தி கண்ணதாசன் போனா போவுதுன்னு விட்டாக் கூட நம்ம வாத்தியார் வழக்கு போடுவாரே. அதான் யோசனையா இருக்கு.

கவிதை வரும்னு காத்திருக்கப் போறீங்களா? அடப் பாவமே...அது சரி நாளை நடப்பதை யார் அறிவார்.////

நல்ல வேலையாப் போச்சு..

அப்படியே எடுத்துப் போட்டா

அதுக்கு வரும் வழக்கு

அது நமக்கு இழுக்கு.இப்ப நீங்க வரஞ்ச படத்துக்கு எப்படி தேமொழின்னு போட்டீங்களோ

அப்படி கருத்தை உள்வாங்கி

உங்கள் நடைக்கு எழுதினா என்ன பிணக்கு,

அது கொண்டு வராது வழக்கு.

உண்மை எது என்றால் ஒரு புலவன் தனக்கு முந்தியவன் கூறியதைத் தான் கூறி இருக்கிறான்... யாரை ஆராய்ந்தாலும் அப்படித் தான் முடியும்...

அதை எப்படி எந்தப் புலவனைக் கொண்டு பார்த்தாலும் சரி... அழகுணர்ச்சி, படைக்கும் பாணி மாத்திரமே அவனோடது.. கருத்து மேலே மேலப் போய் கடைசியில் வேத, வேதாந்தத்தில் தான் முடியும். உண்மை எப்படிக் கூறினாலும் யார் கூறினாலும் உண்மைதானே.. தாங்கள் அறியாததா என்ன!புதிதாக சொல்ல யாதும் இல்லை... அப்படி இருக்க யார் எதைக் கூறினாலும் நான் சொன்னது என்று வழக்காட நிறைய பேர் வருவார்கள்...

ஆகவே, முயன்று பார்ப்பீர்கள் என்றே நம்புகிறேன். முயன்று என்ன முடிவு செய்தாச்சு என்றேக் கொள்கிறேன்.:):)

நல்ல வேலை அடைப்புக் குறிக்குள்ளப் போட்டிருந்தீர்கள் என்றால் இப்போ உங்களை கவிதை எழுத சொல்லி புதிய பாதையே அமைக்க முடியாமல் போயிருக்கும்..

நன்றி சகோதரியாரே!

ஜி ஆலாசியம் said...

////நல்ல வேலை அடைப்புக் குறிக்குள்ளப் போட்டிருந்தீர்கள் என்றால் இப்போ உங்களை கவிதை எழுத சொல்லி புதிய பாதையே அமைக்க முடியாமல் போயிருக்கும்..///

பிழை அது அடைப்புக் குறியல்ல மேற்கோள்குறி...

Parvathy Ramachandran said...

//நன்றி... நன்றி...பார்வதி, காலம் வரும்பொழுது அரசவைக் கவிஞர் பதவி உங்கள் வசம் வரும்..//

நன்றி....நன்றி...(மனதிற்குள்) நான் பாடி நாலு பேர் கேப்பாங்கன்னு என்ன நம்ம்பிக்க்க்கை இவங்களுக்கு!

அண்ணன் ஆலாசியத்துக்கு,
கவியரசரின் பெரும்பாலான பாடல்கள் க்விச்சக்கரவர்த்தி கம்பரின் பாதிப்பே....(உ.ம்).

1. பாடல்: தோள் கண்டேன் தோளே கண்டேன். திரைப்படம்: இதயக் கமலம்

2 பாடல்: பால் வண்ணம் பருவம் கண்டு திரைப்படம்: பாசம்

3. கட்டான கட்டழகு கண்ணா பாடலில் வரும் “மதயானை வடிவமே நடமாடும் வீரனே ! மலர் போன்ற உள்ளமே வா!… தொடங்கிய வரிகள் , படம் : குடும்பத் தலைவன்

என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு கவியின் பாடல் தூண்டிலால் கவர்ந்திழுக்கப்பட்ட மற்றொரு கவி அதனை எடுத்தாள்வது எப்போதும் நடக்கும்.

ஜி ஆலாசியம் said...

முக்காலும் உண்மை சகோதரியாரே.... ஒளவையும், வள்ளுவரும், இன்னும் அவர்கால புலவர்களும் ஒரே கருத்தை நயம் பட கூறி இருப்பதைக் காண முடிகிறது..

கவியரசுக்கு குற்றாலக் குறவஞ்சியில் நூற்றுக் கணக்கானப் பாடல்களும், ராமாயணத்திலும் நிறையப் பாடல்களும் மனப்பாடமாகவேத் தெரியும் என்று பள்ளியில் எனது தமிழாசிரியர் கூறி இருக்கிறார் என்பதை ஞாபகப் படுத்துகிறது தங்களின் கருத்து.

நன்றிகள் சகோதரியாரே!

ஜி ஆலாசியம் said...

இன்னும் சொன்னால் நமது சரஸ்வதி ராமநாதன் அவர்கள் அதை ஆய்ந்து தான் முனைவர் பட்டம் பெற்றார் என்றும் கேள்விப் படுகிறேன்.

ஆசிரியர் வகுப்பறையில் இல்லை... அதனால் வழக்கம் போல ஓப்பி ஆகுகிறது.... வாத்தியார் வருவதற்குள் கரும்பலகையை அளித்து விடலாம் என்ற தைரியத்தோடு நீங்கள் இருவரும் சம்பாசனையில் கலப்பதால் நானும் தப்பிப்பேன்.::))::))

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
சூரியனுக்கான கோவில் கோனார்க் என்ற இடத்தில், .
கட்டடக் கலையின்,சிறப்பினை எடுத்துக்காட்டும்
வகையில் அமைந்துள்ளதை,இன்றைய பாடத்தில்
உள்ள படத்தின் மூலம் நன்கு அறிந்துக்கொள்ள முடிகிறது.
ஒன்றாம் எண்ணுக்கு உரிய பலன்களை விபரங்களுடன்
அளித்துள்ளமைக்கு நன்றி!!

Balamurugan Jaganathan said...

பாடம் எளிமையாகவும் மனதில் பதியும் படி இருக்கின்றது. நன்றி ஐயா.

Arul said...

Dear Sir,

Thank you for the lesson and the information about Konarak.

I have requested for the access for your new website where you are taking advanced lessons. Kindly give me the details of the link, user name and password. I am sending this request for the fourth time. I think, since Kolsara sani is sitting in my fifth place, he is making delay to get the access(poorva jenma punniyam).But Guru paarvai sani-kku iruppathaal I hope I'll get soon.

Uma said...

பதிவிற்கு நன்றி சார்!

ரமேஷ் வெங்கடபதி said...

ஒன்றாம் எண்..முதல்வன்! இதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம்!
சுயதொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்திற்கு ஒன்றாம் எண் வருமாறு வைக்கலாமா ? என்பதை அறிய ஆவல்!

முருகராஜன் said...

முதல் மரியாதை யாருக்கு? என்ற 1ம் எண் பற்றி விரிவாக பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஏற்கானவே வகுப்பறையில் படித்த ஞாபகம் உள்ளது.

thanusu said...

ரமேஷ் வெங்கடபதி said...
ஒன்றாம் எண்..முதல்வன்! இதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம்!
சுயதொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்திற்கு ஒன்றாம் எண் வருமாறு வைக்கலாமா ? என்பதை அறிய ஆவல்!

தொழில் தொடங்கவும் , பயணங்கள் செய்யவும், வாகனங்களின் பதிவு எண்களும், கடைகள் அல்லது தொழில் நிறுவனங்களின் கதவு எண் ஆகியவைகளுக்கு மிக மிக சிறந்தது 5 .அதிலும் தொழில் நிறுவனங்களின் அல்லது வியாபார நிறுவனங்கள் , கடைகள் இவைகளின் பெயரின் கூட்டு தொகை 41 வந்தால் சாலச்சிறந்தது என்று எண் ஜோதிடம் சொல்கிறது.


மேலாதிக்க விவரங்கள் வாத்தியாரும் மைனரும் தருவார்கள். நான் கத்துக் குட்டி தான் .

Rajaram said...

ஐயா,
எண்கணிதம் பற்றிய பாடங்கள் தொடர்வது மிகவும் அருமை.சோழ சாம்ராஜ்யத்தையும்,காலத்தால் அழியாத கலைவண்ணமாம் தஞ்சைப் பெரியகோவிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்ததும் ஒன்றாம் எண் ஆதிக்கத்தில் தான் என படித்திருக்கிறேன்.

minorwall said...

///// thanusu said...
ரமேஷ் வெங்கடபதி said...
ஒன்றாம் எண்..முதல்வன்! இதற்கு தானே நாம் ஆசைப்படுகிறோம்!
சுயதொழில் முனைவோர் தங்கள் நிறுவனத்திற்கு ஒன்றாம் எண் வருமாறு வைக்கலாமா ? என்பதை அறிய ஆவல்!

தொழில் தொடங்கவும் , பயணங்கள் செய்யவும், வாகனங்களின் பதிவு எண்களும், கடைகள் அல்லது தொழில் நிறுவனங்களின் கதவு எண் ஆகியவைகளுக்கு மிக மிக சிறந்தது 5 .அதிலும் தொழில் நிறுவனங்களின் அல்லது வியாபார நிறுவனங்கள் , கடைகள் இவைகளின் பெயரின் கூட்டு தொகை 41 வந்தால் சாலச்சிறந்தது என்று எண் ஜோதிடம் சொல்கிறது.


மேலாதிக்க விவரங்கள் வாத்தியாரும் மைனரும் தருவார்கள். நான் கத்துக் குட்டி தான் ./////////

அல்ரெடி நீங்கதான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டீங்களே..

ஏற்கனவே மலேசியா நண்பர் -பண்டிட் சேதுராமன் -நுமேராலாஜி என்றெல்லாம் நீங்க சொன்னதைப் படிச்சேன்..

அதுனாலே அந்தப் புத்தகம் கையிலே இருந்தா /மனசுலே இருந்தா அதிலேருந்து எந்த வரியையும் எங்கேயும் தயங்காம பேசலாம்..

மத்தபடி சமீபகாலமா சீன்லே வந்த ஆளுங்க ரொம்பப்பேரு இந்தப் பேரை மறைச்சுட்டு தனக்குத்தானே முடி சூட்டிக் கொள்கிற வேலையிலே
இறங்கினாங்களே தவிர உரைகல் போன்ற பதிவைத் தரவில்லை..

அனுபவித்து ஆராய்ந்து எழுதும்போது அது பேசப்படுகிறது..

அப்படி ஓர் அரிய கலையை உலகுக்கு அறிவித்தார் பண்டிட்..

நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து சொல்லப்பட்ட விஷயங்களை படித்து உள்வாங்கி நாம் அதன் தன்மையை அனுபவத்தில் உணரத் தலைப்படும்போது அவரின் அர்ப்பணிப்பு புரியும்..

அப்படி புரிந்து தெளிந்தவர் நீங்கள் என்றே நினைக்கிறேன் தனுசு..

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
வழக்கம் போல இணைய கோளாறால் வகுப்பறைக்கு வர இய‌லவில்லை...மன்னிக்கவும் ஐயா...

எனது சகோதரரின் பிறப்பு எண்ணும்(Nov 28) ஒன்று தான்...தாங்கள் கூறிய அத்தனை அம்சங்களும் அவருக்கு மிகவும் சரியாக பொருந்துகிறது...அரசியல்வாதிகளுக்கு உரிய எண் என்றும் கொள்ளலாம் அல்லவா ஐயா...நல்ல பதிவிற்கு நன்றி ஐயா...

thanusu said...

minorwall said...அதுனாலே அந்தப் புத்தகம் கையிலே இருந்தா /மனசுலே இருந்தா அதிலேருந்து எந்த வரியையும் எங்கேயும் தயங்காம பேசலாம்..////

அந்த புத்தகம் கையில் இல்லை வீட்டில் தான் இருக்கிறது, அதே நேரம் மனசிலும் இருக்கிறது.தேவைக்கு இந்த வழி முறைகளை பயன் படுத்திக் கொள்வதுண்டு.

minorwall said... மத்தபடி சமீபகாலமா சீன்லே வந்த ஆளுங்க ரொம்பப்பேரு இந்தப் பேரை மறைச்சுட்டு தனக்குத்தானே முடி சூட்டிக் கொள்கிற வேலையிலே
இறங்கினாங்களே தவிர உரைகல் போன்ற பதிவைத் தரவில்லை..

சேதுராமன் அவர்களின் புத்தகம் ஒரு சுவாரஸ்யம் தந்த பிறகு மற்றவர்கள் எழுதிய புத்தகத்தையும் வாங்கி படித்தேன் , பல புத்தகங்கள் விரிவாக இருந்தாலும் கதை அளப்பது போல்தான் இருந்தது. ஒருமுறை படித்தாலும் மனதில் பதிய வைக்கும் எழுத்துக்கள் சேதுராமன் புத்தகத்தில் மட்டுமே உள்ளது.

minorwall said...நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து சொல்லப்பட்ட விஷயங்களை படித்து உள்வாங்கி நாம் அதன் தன்மையை அனுபவத்தில் உணரத் தலைப்படும்போது அவரின் அர்ப்பணிப்பு புரியும்..

அப்படி புரிந்து தெளிந்தவர் நீங்கள் என்றே நினைக்கிறேன் தனுசு..

என் பெயரை ஒரு என் கணித நிபுணரிடம் மாற்றிய பிறகு என் மகளின் பெயரையும் என் மனைவியின் பெயரையும் என் தம்பியின் பெயரையும் சில சின்ன திருத்தம் செய்து நானே மாற்றினேன்.

Syam Pandeet said...

This post is great. Thank you for this post. I like this type of people who share knowledge with others. Indian astrology Know your path ahead and walk towards a glorious future.

Numerology