மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.3.12

Devotional உருகிச் சொல்ல வேண்டியதும் நெருங்கிச் செல்ல வேண்டியதும்!

மருதமலை முருகன் கோவில், கோயமுத்தூர்

Devotional உருகிச் சொல்ல வேண்டியதும் நெருங்கிச் செல்ல வேண்டியதும்!

இன்றைய பக்தி மலரை ஒரு அருமையான முருகன் பாடல் அலங்கரிக்கின்றது. கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++
பெங்களூர்' ரமணியம்மாள் அவர்கள் பாடிய பாடல்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் -   அங்கே
குவிந்ததமா பெண்களெல்லாம் வண்டாட்டம் ... கொண்டாட்டம்

(குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்)

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களில் ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை
முருகப் பெருமானை

(குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்)

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை

வேல் முருகா வெற்றி வேல் முருகா

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

கந்தனுக்கு வேல் வேல்
முருகனுக்கு வேல் வேல்

வேல் முருகா வெற்றி வேல் முருகா
   
காணொளி:

http://youtu.be/FlZ_KfsPQFc   
Our sincere thanks to the person who uploaded the video

பெங்களூர் ரமணியம்மாள் பாடிய - 'குன்றத்திலே' பாடல்
பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன்
இசை:  குன்னக்குடி வைத்யநாதன்
படம் :  தெய்வம் (1971)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

31 comments:

ஆலாசியம் ஜி said...

வேலனின் நாமம் போற்றிய வெண்கலக் குரல்

முருகனின் பெருமையை தீட்டிய முத்தனின் பாடல்.

அருமை! அருமை!! அருமை!!! ஐயா.

பகிர்வுக்கு நன்றிகள்.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இன்றைய பக்தி மலரில்
முருகன் பாடல் கேட்டு
மகிழ முடிந்தது
நன்றி!!

Parvathy Ramachandran said...

இன்றைய பதிவு, பல நினைவுகளை என் மனதில் கரைபுரண்டு ஓடச் செய்தது. குறிப்பாகக் காணொளியில் முருகனைக் கண்டதும், என் தந்தையைக் கண்ட பரவசம்.பிறந்தது முதல் திருமணம் வரை, தினம் கண்ட முருகன். இன்றும் டி.வி.யில் முருகனின் எத்தனை உற்சவமூர்த்திகள் வந்தாலும், குன்றத்து முருகனைக் கண்டு பிடித்து விடுவேன்.

மற்ற எந்தத் தலத்து, முருகன் திருக்கல்யாணத்திலும் காணக்கிடைக்காத சிறப்பு, முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றத்து திருக்கல்யாணத்துக்கு உண்டு. அதிகாலை, கந்தவேள் சப்பரத்தில் கிளம்பி, ஊர் எல்லையில், தன் தாய் தந்தையரான, மதுரை,மீனாட்சி சுந்தரேசுவரரை வரவேற்று, அவர்களை மும்முறை சுற்றி வந்து, வணங்கி ஊருக்குள் அழைத்துச் செல்வார். இந்தச் 'சந்திப்பு' நிகழ்வதால் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு, சந்திப்பு மண்டபம் என்றே பெயர்.(காணொளியில் காண்க) பிறகே, முருகனுக்கு, அபிஷேகம், மணக்கோல அலங்காரம் எல்லாம்.

அதைப்போல,இரவும்,தாய் தந்தையரை, வாண வேடிக்கை, கோலாகலங்களோடு வழியனுப்பி வைப்பார் முருகன். தெய்வானை, முருகன் திருமணம் நடந்த தலம் ஆதலால், ஆனந்தமான சிரிப்போடு கூடிய மூலவரின் அழகே அழகு. மற்ற தலங்களில் உள்ளது போல் முருகன் அருகே நின்ற கோலத்தில் இல்லாமல், சஷ்டி தேவியாகிய தெய்வானை, முருகன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது சிறப்பு. சித்தர்களில் ஒருவராகிய மச்சமுனி சித்தியடைந்த தலம்.
முருகனோடு சேர்த்து, காணொளியில், கோவில் தலைமை அர்ச்சகரான, என் தாத்தா,(அவர்தான் திருமணம் செய்து வைப்பார்),என் சித்தப்பா உள்ளிட்ட முருகனடி சேர்ந்தோரையும் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

ஆலாசியம் ஜி said...

////// Parvathy Ramachandran said...
இன்றைய பதிவு, பல நினைவுகளை என் மனதில் கரைபுரண்டு ஓடச் செய்தது. குறிப்பாகக் காணொளியில் முருகனைக் கண்டதும், என் தந்தையைக் கண்ட பரவசம்.பிறந்தது முதல் திருமணம் வரை, தினம் கண்ட முருகன். இன்றும் டி.வி.யில் முருகனின் எத்தனை உற்சவமூர்த்திகள் வந்தாலும், குன்றத்து முருகனைக் கண்டு பிடித்து விடுவேன்./////

தங்களின் பின்னூட்டம் பார்த்து மீண்டும் காணொளியைக் கண்டு களித்தேன்.

தங்களின் பின்னூட்டம் எனது அனுபவத்தையும் சொல்கிறேன்.

நாங்கள் திருமணம் முடித்து தேனிலவு புறப்பட்டு ஒரு நாளுக்கு மேல் கோடைக்கானலில் இருக்க வேண்டாம் என்று அவளின் விருப்பத்திற்கு பிறகு அங்கிருந்து கிளம்பி ஹாலாஸ்ய ஷேத்ரம் (மதுரையம்பதி) வந்து அம்மையையும் அப்பனையும் வணங்கி ஆசி பெற்று அதன் பிறகு தேவாதி தேவன், கிரியாவும், ஞானமும் ஒருங்கே பெற்ற திருக் குன்றம் வந்தோம் அங்கே கோவில் வாசலிலே ஒரு அம்மா பூ விற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்களிடம் நிறைய பூவும், சாமிக்கு மாலையும் வாங்கிக் கொண்டு பேரம் பேசாமல் (அப்படித்தான் நினைவு) சொன்ன விலைக்கு வாங்கினேன்.

அப்போது அந்த அம்மா "அடுத்த முறை வரும் பொது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டு முருகனை கும்பிட வேண்டும் அதற்கு முருகன் அருள்வான்: நீங்கள் இருவரும் என்றும் சந்தோசமாக இருக்கணும்" என்று வாழ்த்தியது இன்றும் என் பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் அந்த அம்மாவும், திருக் குன்ற முருகனும் நினைவுக்கு வருவார்கள்.

எங்கள் வீட்டில் ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பெரிது... இருந்தாலும் முதலில் காயத்திரி தேவியே பிறந்தால் பிறகு தான் பிள்ளை (குமரனின் அருளால்)

சகோதரி தங்களின் பின்னூட்டம் என்னையும் தூண்டியதால் பகிர்ந்தேன்:):)

Jeyram said...

வணக்கம் சார்,
நீசமான கோள் வக்கிரம் or அஸ்தங்கம் அடைந்தால் அதற்கான பலன்

"நீசமாய் கோளும் வக்கிர நிலையில் நிற்கும் காலை ஆட்சிக்கு மேலாய் உச்சம் அடைந்திடும் பலனைக் கொண்டு சூட்சுமம் அறிந்து மற்ற சுவர் நிலை தெரிந்து தக்க மாட்சிமையோடு குருவை மதித்துமே பலனை கூறு"

இது ஒரு ஜோதிட சங்க கால பாடல் என்று படித்திருக்கிறேன். இந்த பாடல் சரியா சார்?

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
முருகப் பெருமானின் பாடல்களில் அனைவரையும் துள்ளல் இசையாலும் பாடல் வரிகளாலும் ஈர்த்த பாடல் என்றால் அது நிச்சயம் இப்பாடலாக தான் இருக்க முடியும்...இப்பாடலை பாடிய ரமணியம்மாள் அவர்களின் குரல் மிகவும் தனித்துவமாக தோன்றும்...

இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஆனால் ஒரு சின்ன வருத்தம் இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தோன்றும்...அது என்னவெனில் இப்பாடல் சிறிய பாடலாய் இருப்பதால் சீக்கிரமாய் முடிந்து விடும்...கவியரசர் இன்னும் பாடல் வரிகளை அதிகமாக தந்திருந்தால் பக்தர்கள் இன்னும் 'ஆனந்தமன்றம்' அடைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்...நல்ல,அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...

ananth said...

இதுபோல் பல பக்திப் பாடல்களைச் சிறு வயது முதலே கேட்டு வருகிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை. அப்போதுதான் புதிதாக கேட்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.

அய்யர் said...

வெற்றி வேல் முருகனுக்கு
அரகோரா...

Parvathy Ramachandran said...

//எங்கள் வீட்டில் ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பெரிது... இருந்தாலும் முதலில் காயத்திரி தேவியே பிறந்தால் பிறகு தான் பிள்ளை (குமரனின் அருளால்)//

தங்களின் பின்னூட்டம் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன். கிரியாசக்தியாகிய தெய்வானையை ஞான சக்தியாகிய முருகன் மணந்த தலம் இது. தெய்வானையின் மற்ற பெயர்கள் சஷ்டிதேவி, (அதனால்தான் சஷ்டியில்(விரதம்) இருந்தால் அகப்பையில்(குழந்தை) வரும்.) ஜெயந்தி (அதனால்தான், திருச்செந்தூர் முருகனின் திருநாமம் ஜெயந்திநாதர். சூரனை வென்றதற்குத் தேவேந்திரனின் பரிசல்லவா ஜெயந்தி!) என்பதாகும்.

தெய்வானையை, குழந்தைகளின் செவிலித்தாய் என்றும் கூறுவர். 16 மாத்ருகா தேவிகளுள் ப்ரஸித்தமான தேவசேனா தேவியை வேண்டினால்,குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு, கண்டிப்பாகக் குணம் கிடைக்கும். இச்சாசக்தியான வள்ளியைத்தெரிந்த அளவுக்கு, தெய்வானையைப் பற்றிச் சிலருக்குத் தெரியாது என்பதால் இதை எழுதுகிறேன். அருமையான பதிவைத் தந்த வாத்தியார் அவர்களுக்கு நன்றி.

Ananthamurugan said...

muruga!!om muruga!!kantha!kadamba!kathirvela!
ayya next week friday please,publish topic of vinayagar.

தேமொழி said...

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்று பாடி மகிழ்ந்தது பெங்களூரு ரமணி மட்டுமல்ல, பெங்களூரு பார்வதி என்பதும் தெரிகிறது. பார்வதியின் தாத்தாவைப் பார்ப்பதற்காக மீண்டும் ஒருமுறைப் பார்த்தேன். தன் தாத்தாவை அவ்வப்பொழுது காணொளியில் காணும் வாய்ப்பு பார்வதிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

நல்ல பாடலை மீண்டும் கேட்க வைத்த ஐயாவிற்கு நன்றி. ஐயா, ஒருமுறை 'சிந்தனையில் மேடை கட்டி' (திருமலை தென்குமரி) பாடலை வலையேற்றுங்கள். பக்தர்கள் கூட்டம் 'வேல் வேல், வெற்றி வேல்' என்று கூவியபடி படி ஏறுவதைப் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும்.

ரமேஷ் வெங்கடபதி said...

தெய்வம் படப்பாடல்கள் இன்னமும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன! சாகாவரம் பெற்றவை!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஆலாசியம் ஜி said...
வேலனின் நாமம் போற்றிய வெண்கலக் குரல்
முருகனின் பெருமையை தீட்டிய முத்தனின் பாடல்.
அருமை! அருமை!! அருமை!!! ஐயா.
பகிர்வுக்கு நன்றிகள்./////

முருகனருள் முன்னிற்கும். நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இன்றைய பக்தி மலரில்
முருகன் பாடல் கேட்டு
மகிழ முடிந்தது
நன்றி!!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்க்கு நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Parvathy Ramachandran said...
இன்றைய பதிவு, பல நினைவுகளை என் மனதில் கரைபுரண்டு ஓடச் செய்தது. குறிப்பாகக் காணொளியில் முருகனைக் கண்டதும், என் தந்தையைக் கண்ட பரவசம்.பிறந்தது முதல் திருமணம் வரை, தினம் கண்ட முருகன். இன்றும் டி.வி.யில் முருகனின் எத்தனை உற்சவமூர்த்திகள் வந்தாலும், குன்றத்து முருகனைக் கண்டு பிடித்து விடுவேன்.
மற்ற எந்தத் தலத்து, முருகன் திருக்கல்யாணத்திலும் காணக்கிடைக்காத சிறப்பு, முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றத்து திருக்கல்யாணத்துக்கு உண்டு. அதிகாலை, கந்தவேள் சப்பரத்தில் கிளம்பி, ஊர் எல்லையில், தன் தாய் தந்தையரான, மதுரை,மீனாட்சி சுந்தரேசுவரரை வரவேற்று, அவர்களை மும்முறை சுற்றி வந்து, வணங்கி ஊருக்குள் அழைத்துச் செல்வார். இந்தச் 'சந்திப்பு' நிகழ்வதால் அந்த குறிப்பிட்ட இடத்துக்கு, சந்திப்பு மண்டபம் என்றே பெயர்.(காணொளியில் காண்க) பிறகே, முருகனுக்கு, அபிஷேகம், மணக்கோல அலங்காரம் எல்லாம்.
அதைப்போல,இரவும்,தாய் தந்தையரை, வாண வேடிக்கை, கோலாகலங்களோடு வழியனுப்பி வைப்பார் முருகன். தெய்வானை, முருகன் திருமணம் நடந்த தலம் ஆதலால், ஆனந்தமான சிரிப்போடு கூடிய மூலவரின் அழகே அழகு. மற்ற தலங்களில் உள்ளது போல் முருகன் அருகே நின்ற கோலத்தில் இல்லாமல், சஷ்டி தேவியாகிய தெய்வானை, முருகன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருப்பது சிறப்பு. சித்தர்களில் ஒருவராகிய மச்சமுனி சித்தியடைந்த தலம்.
முருகனோடு சேர்த்து, காணொளியில், கோவில் தலைமை அர்ச்சகரான, என் தாத்தா,(அவர்தான் திருமணம் செய்து வைப்பார்),என் சித்தப்பா உள்ளிட்ட முருகனடி சேர்ந்தோரையும் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.////

வியப்பிற்குரிய செய்திதான். பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஆலாசியம் ஜி said...
////// Parvathy Ramachandran said...
இன்றைய பதிவு, பல நினைவுகளை என் மனதில் கரைபுரண்டு ஓடச் செய்தது. குறிப்பாகக் காணொளியில் முருகனைக் கண்டதும், என் தந்தையைக் கண்ட பரவசம்.பிறந்தது முதல் திருமணம் வரை, தினம் கண்ட முருகன். இன்றும் டி.வி.யில் முருகனின் எத்தனை உற்சவமூர்த்திகள் வந்தாலும், குன்றத்து முருகனைக் கண்டு பிடித்து விடுவேன்./////
தங்களின் பின்னூட்டம் பார்த்து மீண்டும் காணொளியைக் கண்டு களித்தேன்.
தங்களின் பின்னூட்டம் எனது அனுபவத்தையும் சொல்கிறேன்.
நாங்கள் திருமணம் முடித்து தேனிலவு புறப்பட்டு ஒரு நாளுக்கு மேல் கோடைக்கானலில் இருக்க வேண்டாம் என்று அவளின் விருப்பத்திற்கு பிறகு அங்கிருந்து கிளம்பி ஹாலாஸ்ய ஷேத்ரம் (மதுரையம்பதி) வந்து அம்மையையும் அப்பனையும் வணங்கி ஆசி பெற்று அதன் பிறகு தேவாதி தேவன், கிரியாவும், ஞானமும் ஒருங்கே பெற்ற திருக் குன்றம் வந்தோம் அங்கே கோவில் வாசலிலே ஒரு அம்மா பூ விற்றுக் கொண்டிருந்தார்கள் அவர்களிடம் நிறைய பூவும், சாமிக்கு மாலையும் வாங்கிக் கொண்டு பேரம் பேசாமல் (அப்படித்தான் நினைவு) சொன்ன விலைக்கு வாங்கினேன்.
அப்போது அந்த அம்மா "அடுத்த முறை வரும் பொது ஒரு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டு முருகனை கும்பிட வேண்டும் அதற்கு முருகன் அருள்வான்: நீங்கள் இருவரும் என்றும் சந்தோசமா இருக்கணும்" என்று வாழ்த்தியது இன்றும் என் பிள்ளையைப் பார்க்கும் போதெல்லாம் அந்த அம்மாவும், திருக் குன்ற முருகனும் நினைவுக்கு வருவார்கள்.
எங்கள் வீட்டில் ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பெரிது... இருந்தாலும் முதலில் காயத்திரி தேவியே பிறந்தால் பிறகு தான் பிள்ளை (குமரனின் அருளால்)
சகோதரி தங்களின் பின்னூட்டம் என்னையும் தூண்டியதால் பகிர்ந்தேன்:):)////

நல்லது. உங்கள் இருவரின் கருத்துப் பகிர்வுகளுக்கும் நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Jeyram said...
வணக்கம் சார்,
நீசமான கோள் வக்கிரம் or அஸ்தங்கம் அடைந்தால் அதற்கான பலன்
"நீசமாய் கோளும் வக்கிர நிலையில் நிற்கும் காலை ஆட்சிக்கு மேலாய் உச்சம் அடைந்திடும் பலனைக் கொண்டு சூட்சுமம் அறிந்து மற்ற சுவர் நிலை தெரிந்து தக்க மாட்சிமையோடு குருவை மதித்துமே பலனை கூறு"
இது ஒரு ஜோதிட சங்க கால பாடல் என்று படித்திருக்கிறேன். இந்த பாடல் சரியா சார்?////

பழைய பாடல் எனும்போது சரியாக இருக்காதா என்ன? ஏன் இந்த சந்தேகம்?

SP.VR. SUBBAIYA said...

////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
முருகப் பெருமானின் பாடல்களில் அனைவரையும் துள்ளல் இசையாலும் பாடல் வரிகளாலும் ஈர்த்த பாடல் என்றால் அது நிச்சயம் இப்பாடலாக தான் இருக்க முடியும்...இப்பாடலை பாடிய ரமணியம்மாள் அவர்களின் குரல் மிகவும் தனித்துவமாக தோன்றும்...
இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...ஆனால் ஒரு சின்ன வருத்தம் இப்பாடலை கேட்கும் பொழுதெல்லாம் தோன்றும்...அது என்னவெனில் இப்பாடல் சிறிய பாடலாய் இருப்பதால் சீக்கிரமாய் முடிந்து விடும்...கவியரசர் இன்னும் பாடல் வரிகளை அதிகமாக தந்திருந்தால் பக்தர்கள் இன்னும் 'ஆனந்தமன்றம்' அடைந்திருக்கலாம் என்று நினைக்கின்றேன்...நல்ல,அருமையான பாடலை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா...////

படத்தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர் ஆகியோர் விரும்பிய அளவிற்கு கவியரசர் வரிகளைத் தந்திருப்பார். அவ்வளவுதான்!

SP.VR. SUBBAIYA said...

Blogger ananth said...
இதுபோல் பல பக்திப் பாடல்களைச் சிறு வயது முதலே கேட்டு வருகிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு தட்டுவதில்லை. அப்போதுதான் புதிதாக கேட்பதைப் போன்ற உணர்வு ஏற்படும்.////

நல்லது. உங்களின் உணர்வுப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger அய்யர் said...
வெற்றி வேல் முருகனுக்கு
அரகோரா.../////

முருகனருள் முன்னிற்கும்! வாழ்க வளமுடன்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Parvathy Ramachandran said...
//எங்கள் வீட்டில் ஆண் குழந்தை என்றால் அவ்வளவு பெரிது... இருந்தாலும் முதலில் காயத்திரி தேவியே பிறந்தால் பிறகு தான் பிள்ளை (குமரனின் அருளால்)//
தங்களின் பின்னூட்டம் கண்டு மிகவும் ஆனந்தமடைந்தேன். கிரியாசக்தியாகிய தெய்வானையை ஞான சக்தியாகிய முருகன் மணந்த தலம் இது. தெய்வானையின் மற்ற பெயர்கள் சஷ்டிதேவி, (அதனால்தான் சஷ்டியில்(விரதம்) இருந்தால் அகப்பையில்(குழந்தை) வரும்.) ஜெயந்தி (அதனால்தான், திருச்செந்தூர் முருகனின் திருநாமம் ஜெயந்திநாதர். சூரனை வென்றதற்குத் தேவேந்திரனின் பரிசல்லவா ஜெயந்தி!) என்பதாகும்.
தெய்வானையை, குழந்தைகளின் செவிலித்தாய் என்றும் கூறுவர். 16 மாத்ருகா தேவிகளுள் ப்ரஸித்தமான தேவசேனா தேவியை வேண்டினால்,குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு, கண்டிப்பாகக் குணம் கிடைக்கும். இச்சாசக்தியான வள்ளியைத்தெரிந்த அளவுக்கு, தெய்வானையைப் பற்றிச் சிலருக்குத் தெரியாது என்பதால் இதை எழுதுகிறேன். அருமையான பதிவைத் தந்த வாத்தியார் அவர்களுக்கு நன்றி.////

பல அரிய செய்திகளைத் தந்த உங்களுக்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Ananthamurugan said...
muruga!!om muruga!!kantha!kadamba!kathirvela!
ayya next week friday please,publish topic of vinayagar.////

பரிந்துரைக்கு நன்றி.. செய்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger தேமொழி said... குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் - என்று பாடி மகிழ்ந்தது பெங்களூரு ரமணி மட்டுமல்ல, பெங்களூரு பார்வதி என்பதும் தெரிகிறது. பார்வதியின் தாத்தாவைப் பார்ப்பதற்காக மீண்டும் ஒருமுறைப் பார்த்தேன். தன் தாத்தாவை அவ்வப்பொழுது காணொளியில் காணும் வாய்ப்பு பார்வதிக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
நல்ல பாடலை மீண்டும் கேட்க வைத்த ஐயாவிற்கு நன்றி. ஐயா, ஒருமுறை 'சிந்தனையில் மேடை கட்டி' (திருமலை தென்குமரி) பாடலை வலையேற்றுங்கள். பக்தர்கள் கூட்டம் 'வேல் வேல், வெற்றி வேல்' என்று கூவியபடி படி ஏறுவதைப் பார்க்க மிகவும் நன்றாக இருக்கும்.////

ஆகா, நல்ல பாடல். நினைவுபடுத்தியமைக்கு நன்றி. அடுத்த பக்தி மலரில் இடம் பெறும்!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
தெய்வம் படப்பாடல்கள் இன்னமும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன! சாகாவரம் பெற்றவை!////

உண்மைதான். நன்றி நண்பரே!

kmr.krishnan said...

கல்லூரி மாணவனையும் கடவுள் பெயரைச் ச்சொல்ல வைத்த பெங்களூர் ரமணியம்மாளின் கணீர் குரலுக்கு ஈடு இணை இல்லை அய்யா!பாடலுக்கு
நனறி!

thanusu said...

Parvathy Ramachandran said...காணொளியில், கோவில் தலைமை அர்ச்சகரான, என் தாத்தா,(அவர்தான் திருமணம் செய்து வைப்பார்),என் சித்தப்பா உள்ளிட்ட முருகனடி சேர்ந்தோரையும் கண்டு நெஞ்சம் நெகிழ்ந்தேன்.

கானொளியில் உங்களின் தாத்தாவையும் சித்தப்பாவையும் கான நேற்று முதல் முயல்கிறேன் இனையப் பிரச்சினையால் கான முடியவில்லை பார்வதி அவர்களே.

Raghupathy K said...

ஆஹா!! என்ன அருமையான பாடல். இந்த பாடலை கேட்டு பல நாட்கள் ஆனது.. இங்கு படிக்க படிக்க நெஞ்சம் கனத்தது.. பார்வதி அவர்களின் பதிப்பு அருமை..

அரகர பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

எத்தனை சத்தியம் நிறைந்த வார்த்தைகள்.... முருகா.. முருகா..
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி...

kmr.krishnan said...

கல்லூரி மாணவனையும் கடவுள் பாட்டைத் துள்ளலுடன் பாட வைத்தவர் பெங்களூர் ரமணி அம்மாள்.அருமையான பாடலைப் பதிந்ததற்கு நன்றி அய்யா!

Bala.N said...

மருதமலை முருகன் கோவிலின் படத்தை பர்தாலே உள்ள்ம் எல்லம் உருகுதய்யா. மிக்க நன்றி.

geetha said...

k.r.geethavarshaa

my full name is r.geethasri,but i changed my name as k.r.geethavarshaa.still i faced so many problems what can i do.

geetha said...

hello sir,

your blog is very useful and interesting. i m a new commer to ur blog.wish you all the best for ur good work.