மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.3.12

Devotional முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்து, பாடப் பெற்ற முதற் பாடல்!Devotional முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்து, பாடப் பெற்ற முதற் பாடல்!

அருணகிரிநாதர் அருளிச் செய்த, பெருமை மிகு திருப்புகழ் பாடல்களில் முதற் பாடலான 'முத்தைத் திரு' பாடலை திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் பாடியுள்ளார்கள். அதை நீங்கள் கேட்டு மகிழ இன்று வலை ஏற்றியுள்ளேன்

கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------
Video clipping of the song
http://youtu.be/xrh51nwHhAI
Our sincere thanks to the person who uploaded the video clipping

திருமதி.சுதா ரகுநாதன்

பாடல் வரிகள்:

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ..... எனவோதும்


முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ..... அடிபேணப்


பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ..... இரவாகப்


பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்பு யல்மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ..... ஒருநாளே


தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ..... கழுதாடத்


திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ..... எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ..... முதுகூகை


கொட்புற்றெழ நட்புற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட வொத்துப் பொரவல ..... பெருமாளே.

ஆதே பாடலை திரு T.M.செளந்தரராஜன் அவர்கள் பாடியுள்ளார். அதையும் கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்


http://youtu.be/2vRkCV3symk
Our sincere thanks to the person who uploaded the video clipping
------------------------------------------------------------------
அருணகியார் காலத் தமிழ் பாடல்களுக்கு விளக்கம் இல்லாமல் யாரும் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது. மனனம் செய்ய முடியாது.
இந்த 'முத்தைத்தரு' பாடலுக்கு விளக்கம் தேவைப்படுவோர் கீழ்க் கண்ட தளத்தில் உள்ள விளக்கத்தைப் படித்துப் பயன் பெறலாம். அப்ப்டியே அவ்விளக்கத்தை அளித்த பதிவுலக மேதை டாக்டர்.திரு.சங்கர் குமார் அவர்களுக்கும் ஒரு நன்றியைத் தெரிவித்து, அந்தப் பதிவிலேயே மறக்காமல் பின்னூட்டம் இட்டு விடுங்கள்.

பதிவிற்கான சுட்டி
http://aaththigam.blogspot.in/2006/07/3.html
------------------------------------------------------------------
அருணகிரியார் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதன்மை முருக பக்தர். முருகப் பெருமானை நேரில் சந்தித்து பாடும் அருள் பெற்ற யோகம் மிக்கவர்.
"முத்தைத் தரு பத்தித் திருநகை'' என்ற திருப்புகழின் முதல் அடியை இவருக்கு முருகப்பெருமான் எடுத்துக் கொடுத்துப் பாட வைத்தார். அதற்குப் பிறகு நதி வெள்ளமாக அவர் பாடிய பாடல்கள் திருப்புகழ் என்னும் பெருமையைப் பெற்றன. தமிழில் சந்த நயத்தோடு பாடுவதற்கு திருப்புகழுக்கு இணையான பாடல்கள் வேறெதுவும் இல்லை!

அருணகிரிநாதர் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு உரிய சுட்டி கீழே உள்ளது. படித்துப் பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/Arunagirinathar

------------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

28 comments:

Jeyram said...

குருவே,
நீங்கள் முன்னமே சொல்லி இருந்திங்க வாக்கிய பஞ்சாங்கம் தான் சரி என்று,
சுவாமி விவேகானந்தர், ரஜனி, கமல் போன்றோருடய ஜாதகம் திருகணித பஞ்சாங்கம்(software) படி தான் கணித்து பலன் சொல்லுறின்க இது எப்படி சரியாக வரும்?
ஏனென்றால் ஒரு ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்கம், திருகணித பஞ்சாங்கம் இரண்டிலும் கணித்தால் குறைந்தது மூன்று அல்லது நான்கு கிரகங்கள் அமைந்துள்ள வீடுகள் வித்தியாசப்படும். நான் கிட்டதட்ட 50 நன்பர்கள், உறவினர்களுடய ஜாதகத்தை Software கணித்து பார்திருக்கிறன்.
(குறிப்பாக புதன்,சனி,ராகு,கேது,செவ்வாய் வித்தியாசப்படும்)
தவறுதலான comments என்றால் மன்னிக்கவும்.................

Thanjavooraan said...

தமிழில் சந்தக் கவிக்குப் புகழ் பெற்றது திருப்புகழ். முருகப் பெருமானின் புகழை பரப்பும் பாடல் என்பதால் திருப்புகழ் எனப்பட்டது. திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்து திருப்புகழ் பஜனைகள் செய்துதான் புகழ் பெற்றார். தமிழில் திருப்புகழைப் போன்ற சந்தக் கவி வேறு அதிகம் கிடையாது. சரளமாகப் பேச முடியாதவர்கள் தொடர்ந்து திருப்புகழை வாய்விட்டுப் படித்து வந்தால் தடையின்றி பேச முடியும். வள்ளிமலை சுவாமிகள் என்ற மகான் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்தார். அவர்தான் திருத்தணியில் படித்திருவிழா என்று ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி மலையேறி முருகனை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். திருப்புகழ்மணி என்பவர் அதனைத் தொடர்ந்து செய்து வந்தார். இந்த வள்ளிமலை சுவாமிகளுக்கு சேதுராமன் என்பவர் தொண்டராக வந்து சேர்ந்தார். சுவாமிகள் சென்னை அரசு பொதுமனையில் இறக்கும் தருவாயில் இந்த சேதுராமனை வரவழைத்து அவருக்கு சந்நியாச தீட்சை அளித்தார். சேதுராமன் சாதுராம் சுவாமிகள் என அழைக்கப்பட்டு தாம்பரத்துக்கு அருகில் பொங்கி மடாலயம் எனும் பெயரால் ஒரு மடம் அமைத்தார். இவர் எழுதிய திருப்புகழ் விளக்கம் பலர் முனைவர் பட்டம் பெற வசதியாக இருந்தது. அருணகிரிக்கு முருகன் "சும்மா இரு, சொல்லற" என்று சொல்லி பின் தன்னைப் பாடப் பணித்தார் எனவும், அவரும் இந்த "முத்தைதரு" பாட்டைப் பாடினதாகவும் வரலாறு கூறுகிறது.

ஆலாசியம் said...

அருமையானப் பாடல்
கந்தனின் பெருமைகளை எல்லாம்
அடுக்கிய விதம் மிகவும் அருமை என்றாலும்...
சொற்களிலே நடனமாடுகிறார்
அருணகிரிநாதர்....

எனக்கு ஏழு வயதில் இந்தப் பாடலை
ஒரு முருக பக்தர் அவரின் பெயரும் முருகேசன்
தான் வயலூர் காரர் என்று நினைக்கிறேன்
அவர் எனக்கு சொல்லிக் கொடுத்து பாடச் செய்தார்.

நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயா சாகரி.... என்ற ஒருப் பாடல்
தான் எனக்கு விவரம் தெரிந்து நான் முதன் முதலில்
பாடிய முழு பக்திப் பாடல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது....

அதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள்
பாராட்டி பரிசும் தந்தார்...
அது திருக்குறள் புத்தகம்... காணாமற் போயிற்று.
இப்போது ஆறேழு திருக்குறள் புத்தகம் இருந்தாலும்
அதை இழந்தது தான் பேரிழப்பாக நினைக்கிறேன்.

ராமச்சந்திரன் சார் ஒரு வயலின் மாஸ்டர், கர்நாடக இசையில் தேர்ந்தவர்...
அவரிடம் பாட்டுக் கத்துக் கொண்டவர் நூர்ஜகான் என்னும் இஸ்லாமியப்
பெண்..... பிறகு, மீரா என்று பெயர் கொண்டு மேடைகளிலே பாடினார்.

எனக்கும் கற்றுக் கொள்ள ஆசை தான் செந்தாமரையில் இருப்பவளின் அனுக்கிரகம்
இல்லாமல் எப்படி வெண்தாமரையில் இருப்பவளை அடைய முடியும்.

என்னமோ... இனி நினைதென்ன ஆவது....
என்பிள்ளை கேட்கிறான் இயந்திர வாழ்க்கை இங்கே.
அனுப்ப நேரம் போதவில்லை என்றே கூறுகிறேன்
அவனும் ஒரு நாள் இப்படி வருந்தாமல் இருக்க
ஏதாவது செய்ய வேண்டும்...

சொந்தக் கதை இருந்தாலும் சுகமான
பிள்ளைப் பருவத்திற்கு கொண்டு சென்றது...
இனிமையானப் பாடல்...
பதிவிற்கு நன்றிகள் ஐயா!

அய்யர் said...

அய்யரை அழைக்க வாத்தியார்
அய்யாவிற்கு இப்படி ஒரு எடுகோள்

வாழ்க நலமுடன்
வளர்க உமது நல் தொண்டு

Parvathy Ramachandran said...

முருகனும் தமிழும் முழுமையும் அழகு.திருப்புகழ் தெய்வக்கவி பாடிய சந்தக்கவி.கேட்கும் போதெல்லாம் பக்தித் தேன் பாயுது காதினிலே.
தன் பழைய‌ வாழ்க்கை முறை காரணமாக‌ , கொடிய நோயால் பீடிக்கப்பட்டு, மனம் வருந்தி, தான் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக தானே திருவண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து அருணகிரியார், கீழே விழ, விழுந்தவரை முருகன் தாங்கிப்பிடித்து,'சொல்லற ,சும்மா இரு'என்று உபதேசித்து, அவ்வண்ணமே அவர் பல காலம் தவம் இருக்க, பின் முருகனே அவர் முன் தோன்றி, தன் வேலால் அவர் நாவில் பிரணவத்தை எழுதி,'முத்து முத்தாகப் பாடு' என்று பணிக்க, அவர் பாடிய முதல் திருப்புகழ் இது.
கந்தன் வந்து பாடும் திறன் வழங்கியதால்,அவர் பாடல்கள் சற்றே கடினமான சந்தங்களுடன் இருக்கும் என்று கூறுவதுண்டு.கலியுகக் கடவுளாம் கந்தவேளின் கருணை மழை பக்தன் எப்படியிருந்தாலும் மனம் திருந்தினால் அவர் மீது பொழியக் காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் மிக அருமையான வரலாறு. கிளி வடிவம் தாங்கி, முக்தியடைந்த அருணகிரியார், இன்றும் திருவண்ணாமலையில் சூக்கும சரீரத்தில் அருளுகிறார். தன் பல பாடல்களில், முருகனை மால் மருகனாகவே அவர் புகழ்ந்து பாடுவதைக்காணலாம்('பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்').செந்தூர் மாசித்திருவிழாவிலும் ,ஆவணித்திருவிழாவிலும் பக்தனின் வார்த்தைக்கேற்ப பச்சைப்புயலாக,'பச்சை சார்த்தி' அலங்காரத்தில் (ஆடை, ஆபரணம், அலங்காரம் அனைத்தும் பச்சை வண்ணமாக இருக்கும்)
அருளும் கந்தன் கருணையை விவரிக்க வார்த்தைகள் ஏது? தங்கள் பதிவுக்கும் தஞ்சாவூராரின் மேலதிகத்தகவல்களுக்கும் மிக்க நன்றி.

தேமொழி said...

பாசாங்கு செய்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்பதே வெற்றியின் ரகசியம். கேட்க பிடிக்காவிட்டாலும் அதுதான் நடைமுறை. என்ன செய்வது? வாழைத்தார் கொண்டு வந்த விருந்தினர் வாசலோடு, வெறும் வாய்ச்சவடால்காரருக்கு நடுவீட்டில் உபசரணை என்று சொல்வது போல்தான்.

திருப்புகழைப் பற்றி கருத்து சொல்லவும் ஒரு தகுதி வேண்டாமா? அதனால் அதைத் தவிர்த்து விட்டு..... பதவுரைக்கு சுட்டி கொடுத்த உங்கள் முன்யோசனைக்கு பாராட்டுகள். சுதா நன்றாகத்தான் பாடுகிறார், இருந்தாலும் எனக்கு டி. எம். எஸ். தான் பிடித்திருக்கிறது. நல்ல பாட்டை கேட்க வைத்ததற்கு ஐயா.

Ananthamurugan said...

மேலதிக தகவல்கள் நன்று.நன்றிகள் திரு.தஞ்சை பெரியவர்,சகோதரி பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கும் வழக்கம் போல் வாத்தியாருக்கும்....???

அது ஒரு பொற்காலம் ஆலாசியம் சார்!!!!எந்த கவலையும் மனதில் இல்லாத, குழந்தை பருவம்!!

kmr.krishnan said...

அருணகிரிநாத‌ரின் சந்தக் கவியையை சிந்தைமகிழக் கேட்டேன்.
அவ் வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி ஐயா!

திருப்புகழை விருப்பமுடன் பாடினால் திருமுருகன் திரு அருள் நிச்சயம்.

ஆலாசியம் said...

////Ananthamurugan said...
அது ஒரு பொற்காலம் ஆலாசியம் சார்!!!!எந்த கவலையும் மனதில் இல்லாத, குழந்தை பருவம்!!/////

ஆமாம் அனந்த முருகன் சார்! அது ஒரு பொற்காலம் தான்...
அவைகளை அசைபோட இப்படி ஒரு வேளை
கிடைப்பதற்கு வேலை கையில் சுழற்றும்
சுப்பனுக்கும் நமது சுப்பையா வாத்தியாருக்கும்
தான் நன்றிகள் சொல்லணும்.

Jagannath said...

முருகரைப் பற்றிய கவிதைகள் கடினமான, வித்தியாசமான சந்தங்களைக் கொண்டிருப்பதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணம் உள்ளதா?
கந்த சஷ்டி கவசத்திலும் வித்தியாசமான ஒலிகள் உள்ளது.

thanusu said...

T.M.S பாடிய பாடலை பல வருடங்களுக்கு முன்பே கேட்டுள்ளேன் .அர்த்தம் புரியாது,ஆனால் t.m.s.ன் குரலும் அந்த ராகமும் மிகவும் பிடிக்கும் .இந்த ராகம் பிடித்திருந்ததால் இப்பாடலை பாடுகிறேன் என்று" திக்கு தித்து பித்து பிக்கு" என்று எதையோ உளறி ராகத்தை மட்டும் சரி செய்து பாடி பார்த்துள்ளேன் .மீண்டும் அதை பாடி பார்க்க வாய்ப்பு கொடுத்த அய்யா அவர்களுக்கு நன்றிகள் ' என் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன அய்யா .

ananth said...

திருப்புகழை சுதா ரகுநாதன் அவர்கள் பாடியது இப்பொதுதான் கேள்விப்படுகிறேன். எனக்கு தெரிந்தது TMS அவர்கள் அருணகிரிநாதர் என்ற திரைப் படத்தில் பாடியதுதான். மிகுந்த பக்தி பரவசத்துடன் மனம் ஒன்றி பாடியிருப்பார்.

திருப்புகழின் மொத்த 1327 பாடல்களும் http://www.kaumaram.com/thiru/index.html இந்த தளத்தில் பொருளுரையுடன் இருக்கிறது. அதையும் சென்று பாருங்கள். முருக பக்திக்கென்று இருக்கும் பல தளங்களில் இதுவும் ஒன்று.

SP.VR. SUBBAIYA said...

//// Jeyram said...
குருவே,
நீங்கள் முன்னமே சொல்லி இருந்திங்க வாக்கிய பஞ்சாங்கம் தான் சரி என்று,
சுவாமி விவேகானந்தர், ரஜனி, கமல் போன்றோருடய ஜாதகம் திருகணித பஞ்சாங்கம்(software) படி தான் கணித்து பலன் சொல்லுறின்க இது எப்படி சரியாக

வரும்? ஏனென்றால் ஒரு ஜாதகத்தை வாக்கிய பஞ்சாங்கம், திருகணித பஞ்சாங்கம் இரண்டிலும் கணித்தால் குறைந்தது மூன்று அல்லது நான்கு கிரகங்கள்

அமைந்துள்ள வீடுகள் வித்தியாசப்படும். நான் கிட்டதட்ட 50 நன்பர்கள், உறவினர்களுடய ஜாதகத்தை Software கணித்து பார்திருக்கிறன்.
(குறிப்பாக புதன்,சனி,ராகு,கேது,செவ்வாய் வித்தியாசப்படும்)
தவறுதலான comments என்றால் மன்னிக்கவும்................./////

எல்லைக் கோடுகளில் (Border Births) கிரகங்கள் இருக்கும் நிலையில் பிறக்கும் ஜாதகர்களுக்கு, கிரகங்கள் ராசி மாறி அமர்வது சாதாரணவிஷ்யம்.

அவர்களுக்கு இரண்டு ராசிகளுக்கான பலன்களும் சேர்ந்து கிடைக்கும். சமயங்களில் பலனைக் கணிப்பதும் சிரமமாக இருக்கும்

SP.VR. SUBBAIYA said...

/// Thanjavooraan said...
தமிழில் சந்தக் கவிக்குப் புகழ் பெற்றது திருப்புகழ். முருகப் பெருமானின் புகழை பரப்பும் பாடல் என்பதால் திருப்புகழ் எனப்பட்டது. திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்து திருப்புகழ் பஜனைகள் செய்துதான் புகழ் பெற்றார். தமிழில் திருப்புகழைப் போன்ற சந்தக் கவி வேறு அதிகம் கிடையாது. சரளமாகப் பேச முடியாதவர்கள் தொடர்ந்து திருப்புகழை வாய்விட்டுப் படித்து வந்தால் தடையின்றி பேச முடியும். வள்ளிமலை சுவாமிகள் என்ற
மகான் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்தார். அவர்தான் திருத்தணியில் படித்திருவிழா என்று ஒவ்வொரு படிக்கும் ஒரு திருப்புகழ் பாடி மலையேறி
முருகனை தரிசிக்கும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். திருப்புகழ்மணி என்பவர் அதனைத் தொடர்ந்து செய்து வந்தார். இந்த வள்ளிமலை சுவாமிகளுக்கு
சேதுராமன் என்பவர் தொண்டராக வந்து சேர்ந்தார். சுவாமிகள் சென்னை அரசு பொதுமனையில் இறக்கும் தருவாயில் இந்த சேதுராமனை வரவழைத்து
அவருக்கு சந்நியாச தீட்சை அளித்தார். சேதுராமன் சாதுராம் சுவாமிகள் என அழைக்கப்பட்டு தாம்பரத்துக்கு அருகில் பொங்கி மடாலயம் எனும் பெயரால் ஒரு
மடம் அமைத்தார். இவர் எழுதிய திருப்புகழ் விளக்கம் பலர் முனைவர் பட்டம் பெற வசதியாக இருந்தது. அருணகிரிக்கு முருகன் "சும்மா இரு, சொல்லற"
என்று சொல்லி பின் தன்னைப் பாடப் பணித்தார் எனவும், அவரும் இந்த "முத்தைதரு" பாட்டைப் பாடினதாகவும் வரலாறு கூறுகிறது.///

உங்களுடைய மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கோபாலன் சார்!

SP.VR. SUBBAIYA said...

//// ஆலாசியம் said...
அருமையானப் பாடல்
கந்தனின் பெருமைகளை எல்லாம்
அடுக்கிய விதம் மிகவும் அருமை என்றாலும்...
சொற்களிலே நடனமாடுகிறார்
அருணகிரிநாதர்....
எனக்கு ஏழு வயதில் இந்தப் பாடலை
ஒரு முருக பக்தர் அவரின் பெயரும் முருகேசன்
தான் வயலூர் காரர் என்று நினைக்கிறேன்
அவர் எனக்கு சொல்லிக் கொடுத்து பாடச் செய்தார்.
நீயே கதி ஈஸ்வரி சிவகாமி தயா சாகரி.... என்ற ஒருப் பாடல்
தான் எனக்கு விவரம் தெரிந்து நான் முதன் முதலில்
பாடிய முழு பக்திப் பாடல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது....
அதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்கள்
பாராட்டி பரிசும் தந்தார்...
அது திருக்குறள் புத்தகம்... காணாமற் போயிற்று.
இப்போது ஆறேழு திருக்குறள் புத்தகம் இருந்தாலும்
அதை இழந்தது தான் பேரிழப்பாக நினைக்கிறேன்.
ராமச்சந்திரன் சார் ஒரு வயலின் மாஸ்டர், கர்நாடக இசையில் தேர்ந்தவர்...
அவரிடம் பாட்டுக் கத்துக் கொண்டவர் நூர்ஜகான் என்னும் இஸ்லாமியப்
பெண்..... பிறகு, மீரா என்று பெயர் கொண்டு மேடைகளிலே பாடினார்.
எனக்கும் கற்றுக் கொள்ள ஆசை தான் செந்தாமரையில் இருப்பவளின் அனுக்கிரகம்
இல்லாமல் எப்படி வெண்தாமரையில் இருப்பவளை அடைய முடியும்.
என்னமோ... இனி நினைதென்ன ஆவது....
என்பிள்ளை கேட்கிறான் இயந்திர வாழ்க்கை இங்கே.
அனுப்ப நேரம் போதவில்லை என்றே கூறுகிறேன்
அவனும் ஒரு நாள் இப்படி வருந்தாமல் இருக்க
ஏதாவது செய்ய வேண்டும்...

சொந்தக் கதை இருந்தாலும் சுகமான
பிள்ளைப் பருவத்திற்கு கொண்டு சென்றது...
இனிமையானப் பாடல்...
பதிவிற்கு நன்றிகள் ஐயா!////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
அய்யரை அழைக்க வாத்தியார்
அய்யாவிற்கு இப்படி ஒரு எடுகோள்
வாழ்க நலமுடன்
வளர்க உமது நல் தொண்டு////

நீங்கள் வாரம் ஒருமுறையாவது வரவேண்டும். முருகனருள் முன்னிற்கும்!

SP.VR. SUBBAIYA said...

////Parvathy Ramachandran said...
முருகனும் தமிழும் முழுமையும் அழகு.திருப்புகழ் தெய்வக்கவி பாடிய சந்தக்கவி.கேட்கும் போதெல்லாம் பக்தித் தேன் பாயுது காதினிலே.
தன் பழைய‌ வாழ்க்கை முறை காரணமாக‌ , கொடிய நோயால் பீடிக்கப்பட்டு, மனம் வருந்தி, தான் செய்த தவறுகளுக்குத் தண்டனையாக தானே

திருவண்ணாமலை கோபுர உச்சியில் இருந்து அருணகிரியார், கீழே விழ, விழுந்தவரை முருகன் தாங்கிப்பிடித்து,'சொல்லற ,சும்மா இரு'என்று உபதேசித்து,

அவ்வண்ணமே அவர் பல காலம் தவம் இருக்க, பின் முருகனே அவர் முன் தோன்றி, தன் வேலால் அவர் நாவில் பிரணவத்தை எழுதி,'முத்து முத்தாகப்

பாடு' என்று பணிக்க, அவர் பாடிய முதல் திருப்புகழ் இது.
கந்தன் வந்து பாடும் திறன் வழங்கியதால்,அவர் பாடல்கள் சற்றே கடினமான சந்தங்களுடன் இருக்கும் என்று கூறுவதுண்டு.கலியுகக் கடவுளாம் கந்தவேளின்

கருணை மழை பக்தன் எப்படியிருந்தாலும் மனம் திருந்தினால் அவர் மீது பொழியக் காத்திருக்கிறது என்பதை உணர்த்தும் மிக அருமையான வரலாறு. கிளி

வடிவம் தாங்கி, முக்தியடைந்த அருணகிரியார், இன்றும் திருவண்ணாமலையில் சூக்கும சரீரத்தில் அருளுகிறார். தன் பல பாடல்களில், முருகனை மால்

மருகனாகவே அவர் புகழ்ந்து பாடுவதைக்காணலாம்('பச்சைப்புயல் மெச்சத் தகு பொருள்').செந்தூர் மாசித்திருவிழாவிலும் ,ஆவணித்திருவிழாவிலும் பக்தனின்

வார்த்தைக்கேற்ப பச்சைப்புயலாக,'பச்சை சார்த்தி' அலங்காரத்தில் (ஆடை, ஆபரணம், அலங்காரம் அனைத்தும் பச்சை வண்ணமாக இருக்கும்)
அருளும் கந்தன் கருணையை விவரிக்க வார்த்தைகள் ஏது? தங்கள் பதிவுக்கும் தஞ்சாவூராரின் மேலதிகத்தகவல்களுக்கும் மிக்க நன்றி.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...
This comment has been removed by the author.
SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
பாசாங்கு செய்பவர்கள் பதவி உயர்வு பெறுவார்கள் என்பதே வெற்றியின் ரகசியம். கேட்க பிடிக்காவிட்டாலும் அதுதான் நடைமுறை. என்ன செய்வது? வாழைத்தார் கொண்டு வந்த விருந்தினர் வாசலோடு, வெறும் வாய்ச்சவடால்காரருக்கு நடுவீட்டில் உபசரணை என்று சொல்வது போல்தான்.
திருப்புகழைப் பற்றி கருத்து சொல்லவும் ஒரு தகுதி வேண்டாமா? அதனால் அதைத் தவிர்த்து விட்டு..... பதவுரைக்கு சுட்டி கொடுத்த உங்கள் முன்யோசனைக்கு பாராட்டுகள். சுதா நன்றாகத்தான் பாடுகிறார், இருந்தாலும் எனக்கு டி. எம். எஸ். தான் பிடித்திருக்கிறது. நல்ல பாட்டை கேட்க
வைத்ததற்கு ஐயா.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/// Ananthamurugan said...
மேலதிக தகவல்கள் நன்று.நன்றிகள் திரு.தஞ்சை பெரியவர்,சகோதரி பார்வதி ராமசந்திரன் அவர்களுக்கும் வழக்கம் போல் வாத்தியாருக்கும்....???
அது ஒரு பொற்காலம் ஆலாசியம் சார்!!!!எந்த கவலையும் மனதில் இல்லாத, குழந்தை பருவம்!!/////

எல்லோருக்கும் அந்தப் பருவம் பொற்காலம் போன்றதுதான்!

SP.VR. SUBBAIYA said...

/// kmr.krishnan said...
அருணகிரிநாத‌ரின் சந்தக் கவியையை சிந்தைமகிழக் கேட்டேன்.
அவ் வாய்ப்பளித்த தங்களுக்கு நன்றி ஐயா!
திருப்புகழை விருப்பமுடன் பாடினால் திருமுருகன் திரு அருள் நிச்சயம்.////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

SP.VR. SUBBAIYA said...

/// ஆலாசியம் said...
////Ananthamurugan said...
அது ஒரு பொற்காலம் ஆலாசியம் சார்!!!!எந்த கவலையும் மனதில் இல்லாத, குழந்தை பருவம்!!/////
ஆமாம் அனந்த முருகன் சார்! அது ஒரு பொற்காலம் தான்...
அவைகளை அசைபோட இப்படி ஒரு வேளை
கிடைப்பதற்கு வேலை கையில் சுழற்றும்
சுப்பனுக்கும் நமது சுப்பையா வாத்தியாருக்கும்
தான் நன்றிகள் சொல்லணும்.////

வேலனுக்கு மற்றும் நன்றி சொன்னால் போதும்!:-)))

SP.VR. SUBBAIYA said...

//// Jagannath said...
முருகரைப் பற்றிய கவிதைகள் கடினமான, வித்தியாசமான சந்தங்களைக் கொண்டிருப்பதற்கு ஏதாவது குறிப்பிடத்தக்க காரணம் உள்ளதா?
கந்த சஷ்டி கவசத்திலும் வித்தியாசமான ஒலிகள் உள்ளது./////

அருணகிரியார் காலத்துத் தமிழ் அப்படித்தான் இருக்கும். உரையில்லாமல் புரிந்துகொள்வது கடினம்!

SP.VR. SUBBAIYA said...

/// thanusu said...
T.M.S பாடிய பாடலை பல வருடங்களுக்கு முன்பே கேட்டுள்ளேன் .அர்த்தம் புரியாது,ஆனால் t.m.s.ன் குரலும் அந்த ராகமும் மிகவும் பிடிக்கும் .இந்த ராகம்

பிடித்திருந்ததால் இப்பாடலை பாடுகிறேன் என்று" திக்கு தித்து பித்து பிக்கு" என்று எதையோ உளறி ராகத்தை மட்டும் சரி செய்து பாடி பார்த்துள்ளேன்

.மீண்டும் அதை பாடி பார்க்க வாய்ப்பு கொடுத்த அய்யா அவர்களுக்கு நன்றிகள் ' என் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன அய்யா .////

நல்லது. நன்றி தனூர்ராசிக்காரரே!

SP.VR. SUBBAIYA said...

/// ananth said...
திருப்புகழை சுதா ரகுநாதன் அவர்கள் பாடியது இப்பொதுதான் கேள்விப்படுகிறேன். எனக்கு தெரிந்தது TMS அவர்கள் அருணகிரிநாதர் என்ற திரைப் படத்தில்பாடியதுதான். மிகுந்த பக்தி பரவசத்துடன் மனம் ஒன்றி பாடியிருப்பார்.
திருப்புகழின் மொத்த 1327 பாடல்களும் http://www.kaumaram.com/thiru/index.html இந்த தளத்தில் பொருளுரையுடன் இருக்கிறது. அதையும் சென்று
பாருங்கள். முருக பக்திக்கென்று இருக்கும் பல தளங்களில் இதுவும் ஒன்று./////

அந்தத் தளம் பற்றி நானும் அறிவேன். நன்றி ஆனந்த்!

Uma said...

இந்த திருப்புகழ் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கிருபானந்த வாரியார் அவர்கள் ஒவ்வொரு சொற்பொழிவிலும் இதைப்பாடுவதைக் கேட்டிருக்கிறேன். திரு. டி.எம்.எஸ் / திருமதி. சுதா ரகுநாதன் இருவர் பாடியதுமே எனக்குப்பிடித்திருந்தது.

இதைக்கேட்டுவிட்டு நம்ம 'தல' திரு. ஜேசுதாஸ் இதைப்பாடியிருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். இந்த பாடல் கிடைக்கவில்லை, அதற்குப்பதிலாக இந்த இரண்டு இனிமையான பாடல்கள் கிடைத்தன. இந்த லிங்கில் திரு. பாலமுரளி கிருஷ்ணா உட்பட இன்னும் நிறைய இசை மேதைகளின் பாடல்கள் கிடைக்கின்றன.

http://www.youtube.com/watch?v=QK3h_WH0Crs&feature=related

http://www.youtube.com/watch?v=Ka4RZAn2rhQ&feature=related

ஆலாசியம் said...

ஆஹா! அருமை உமா!
உண்மை தான் நம்ம தல அசத்தி இருக்கிறார்...ஆரம்பத்தில் 'ழ' -விற்கு சிரமப் பட்டார் என்றுக் கேள்விப் பட்டேன்...
திருப்புகழையே பாடி அசத்தி இருக்கிறார். அதிலும் ல,ள,ழ மிகவும் திருத்தமாக வந்திருக்கிறது.

Kirubanandan Palaniveluchaamy said...

அரூணகிரி நாதர் அவரை அநுபூதி நிலையில் உணர்ந்து பாடியவை ஞான மறை பொதிந்த பக்தி பாமாலையாகும் ! அவைகளின் பொருளை உணர்ந்து அனுபவித்தால் அனுபூதியடையலாம் ! அப்படி சிலவற்றை இங்கு தருகிறேன் !

http://www.godsprophetcenter.com/rich_text_65.html