மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

28.3.12

முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முத்தான முத்தல்லவோ : முதிர்ந்து வந்த முத்தல்லவோ!

மனிதர்களில் பலவிதமான குணமுடையவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேர்களும் ஒன்றிலிருந்து ஒன்பதிற்குள் உரிய எண்களின் குணங்களில் வகைப்பட்டுவிடுவார்கள்.

ஒரு குறிப்பிட்ட எண்ணைச் சார்ந்தவர்களின் குணங்கள் பொதுவாக ஒன்றாக இருக்கும். அதாவது அந்த எண்ணின் குணாதிசயங்களைச் சார்ந்து இருக்கும்.

இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.

உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களுக்கு என்ன தேவை என்று உணரக்கூடியவர்களாக இருப்பார்கள். அதன்காரணமாக ஒரு குழுவாகச் செயல்படும் தன்மையை உடையவர்களாக இருப்பார்கள். அழகை நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

ஆசிரியர், ஆலோசகர், இசைக்கலைஞர், கட்டடக்கலைஞர், தூதுவர் போன்ற தொழில்களில் அல்லது வேலைகளில் பரிணமளிப்பார்கள். அதாவது பெயர் எடுப்பார்கள்.

சிலர், கோழைத்தனம், பயஉணர்வு அல்லது தன்னம்பிக்கைக் குறைபாடுகள் உடையவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாக வெற்றிபெற முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகக்கூடும். இதுவும் அந்த எண்ணின் தன்மையாகும். தேய்பிறைச் சந்திரனில் பிறந்தவர்களுக்கு இந்தத்தன்மை இருக்கும்!

சிலர் சட்டென்று மனதளவில் காயப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களின் எதிர்ப்பில் இருந்தும், விமர்சனங்களில் இருந்தும் தப்பிக்கும் உணர்வுடையவர்களாகவும் இருப்பார்கள்.

இந்த எண்ணிற்கு நட்பான எண்கள் 1, 3
நட்பு இல்லாத எண்கள் 5, 4
உரிய நாள்: திங்கட்கிழமை
உரிய நிறம்: வெண்மை! (White)
உரிய நவரத்தினம்: முத்து (Pearl)
உரிய உலோகம்: வெள்ளி (Silver)

தொழில் அல்லது வேலை:

நீதித்துறையில் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்கள். இந்த எண்காரர்களுக்கு இயற்கையாகவே பேச்சுத்திறமை இருக்கும் என்பதால், அவர்களால் நீதித்துறையில் வெற்றிபெறமுடியும். அதுபோலவே இந்த எண்காரர்களுக்கு அரசியலும் பொருத்தமான துறையாகும். நடனம், இசை, இலக்கியம், சிற்பக்கலை ஆகிய துறைகளும் இவர்களுக்கு வெற்றிகரமான துறையாகும். பதிப்பகம், ஜவுளித்துறை, நகைவியாபாரம் ஆஇய துறைகளில் பணியாற்றும் இந்த எண்காரர்களுக்கு அபரிதமான செல்வம் சேரும்.

உடல் நலம்: நீரழிவு நோய்க்கு (Diabetes) ஆட்பட நேரிடும். கண் சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் ஆளாக நேரிடும்.

திருமணம்: இந்த எண்ணுடைய பெண்கள் ஒன்றாம் எண்காரர்களையும், இந்த எண்ணில் பிறந்த ஆண்கள் 7ஆம் எண்ணுடைய பெண்களையும் மனந்து கொள்ளலாம். பொருத்தமாக இருக்கும்!

மகாத்மா காந்திஜி, லால் பஹதூர் சாஸ்த்ரி ஆகியவர்கள் இந்த எண்ணில் பிறந்த இந்தியப் பிரபலங்கள்.

அன்புடன்
வாத்தியார்!

வாழ்க வளமுடன்!

வாழ்க வளமுடன்!

36 comments:

krishnan51972 said...

very useful messages for lucky no:2.

Rajaram said...

ஐயா,

இன்றைய பதிவும் கலக்கல்.இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் ராஜதந்திரங்கள் நிறைந்த அபரிமிதமான திறமையும் உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.சில நேரங்களில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.2ம் பிறந்தவர்களின் மரணங்கள் துர்மரணங்களாகவே நிகழ்ந்ததாக ஒரு செய்தியும் உள்ளது.உதாரணம் ராஜிவ்காந்தி மற்றும் மகாத்மா காந்தி.

Cool Guy said...

Dear sir,

Thanks for the posting. I have mailed you for advanced lessons you have ..Esp about the story of man who wanted to test astrology, I really got excited. Please send me those lessons sir.

Regards,

Srivatchan

Rajaram said...

ஐயா,
////இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்////.
////நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.////

இது 100க்கு 100 உண்மை.சந்திரன் ராசி,லக்கின, நட்சத்திர ஆதிபத்தியம் பெற்றவர்கள் மிகப்பெரிய ராஜதந்திரம் உடையவர்கள் தான்.அதிலும் குறிப்பாக கடகராசியில் புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்கள்,ரிஷபராசியில் ரோகிணி நட்சத்திரக்கார்ர்கள் இயற்கையாகவே நீங்கள் மேற்கூறியது போன்ற குணாதிசயங்களுடன் உள்ளனர்.இதை நான் அனுபவத்தில் கண்டது.மற்றவர்கள் கடகராசியில் பூசம்,ஆயில்யம் மற்றும் ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரக்காரர்களும் மேற்கூறிய குணங்களை பாதியேனும் கொண்டிருக்கின்றனர்.அது நவாம்சத்தில் சந்திரன் நிலைவைத்து கூடுதல்,குறைச்சலாகவும் உள்ளது.

thanusu said...

காந்தியோடு ஹிட்லரும் 2 என்னில் பிறந்தவர். .

இரண்டாம் எண் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள் .அடுத்தவரின் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்கள்.மற்றவர்களுக்காக சேவை செய்யும் மனம் கொண்டவர்கள்.

இது அபரிதமாகும் போது அடுத்தவரின் கழ்டங்களையும் , நழ்டங்களையும் கண்டு கோபம் கொள்வார்கள் இப்படி கோபம் கொள்ளும் போது நீதியை நியாத்தை நிலைநிறுத்தி வெற்றி கொள்ள எண் 7 ஐ துணைக் கொள்ளவேண்டும் .

எண் 7 கேதுவின் ஆதிக்கம் உள்ள எண். 7 இன் குணம் தடைகளை கொடுக்கும் . 2 ஆம் எண் கொடுக்கும் தேவை இல்லாத உணர்ச்சிகளை எண் 7 தடுக்கும் . தடுத்தே வெற்றியைக் கொடுக்கும்

2 எதை நினைத்து உணர்ச்சி வசப்படுகிரோமோ அதை கொடுக்கும்.

தேசப்பிதா ஆசைப் பட்டது இந்திய சுதந்திரம் .

ஹிட்லர் ஆசைப் பட்டது உங்களுக்கே தெரியும்.

இருவரும் தங்களின் ஆசைகளை அடைந்தார்கள் ..மரணமும் இருவருக்கும் ஏறக் குறைய ஒரே மாதிரியாக அமைந்தது.

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இரண்டாம் எண்ணுக்கு ஒன்பது
பகை எண் என்பது விடுபட்டுள்ளது.
நன்றி!!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
ஆஹா...என்னுடையதும் இரண்டாம் எண் தான் ஐயா...

//இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.
உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்//

தாங்கள் கூறியவைகள் எனக்கு மிக சரியாக பொருந்தும் ஐயா...பாரதியாரை போல என்னுடைய பிறந்த தேதியும் 11ம் தேதி தான்...பார‌தியாரை உண‌ர்ச்சிமிகு க‌விஞ‌ர் என்று சொல்வ‌து மிக‌வும் பொருந்துகிற‌து...

தேமொழி said...

ஐயா, உங்கள் விடுமறை நாட்களிலும் வகுப்பறைப் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் பதிவேற வகை செய்ததற்கு நன்றி.

நான் விக்கியில் தேடி ஒரு நூற்றைம்பது பிரபலங்களின் பிறந்த தேதி, பிறந்த நாள், பிறந்த எண், விதி எண் ஆகியவைகளைத் தொகுத்து பதிவேற்றியுள்ளேன். பிரபலங்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அவர்கள் எந்த துறையில் புகழ் பெற்றவர்கள் என்ற செய்தியும் உள்ளது.

அட்டவணையின் இறுதி நெடுவரிசை (column :)) 'விதிஎண்'ணின்படி வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. இந்த தகவல் இந்த பாடம் படிப்போருக்கு உபயோகமாக இருக்ககூடும் என்பதனால் அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நன்றி.
http://planetspower.blogspot.com/p/numerology.html

பிறந்த எண் '2' உடைய பிரபலங்கள்
Amitabh Bachchan
Dilip Kumar
Mikhail Gorbachev
Rajiv Gandhi
Osho/Bhagwan Shree Rajneesh
Khushwant Singh
Viswanathan Anand
JRD Tata
Violin Kunnakudi Vaidyanathan
Adolf Hitler
Subramanya Bharathi
Michael Jackson
Shahrukh Khan
Vaali
Tipu Sultan
Raja Ravi Varma
Mohandas Karamchand Gandhi

இவர்களில் இரண்டாம் தேதியிலேயே பிறந்தவர்கள்
Mikhail Gorbachev
Khushwant Singh
Violin Kunnakudi Vaidyanathan
Shahrukh Khan
Mohandas Karamchand Gandhi

ரமேஷ் வெங்கடபதி said...

ஐயா வணக்கம்!

மனோகாரகன் சந்திரன் தேய்பிறையானால் கெடுபலன் என்று விளக்கியுள்ளது என் அனுபவத்தில் சரியெனவேப்படுகிறது! ஆகவே, இறைவனிடம் நானும் கேட்பேன்..!

இரண்டு மனம் வேண்டும்!
இரண்டில் பிறந்த எனக்கென்று!

Balamurugan Jaganathan said...

வாத்தியார் அய்யா இன்றைய பதிவில் விதி எண் 2 க்கு உரிய பலன் பற்றிய தங்களது ஆய்வு மிகவும் அருமை.

kmr.krishnan said...

2 ம் எண் காரர்களின் சிறப்பைச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!

பூசம்,கடகராசிக்கு.கடகலக்னத்திற்கு இந்தக் குணங்கள் எல்லாம் சரிதான்.
22 ந்தேதி பிறந்துள்ளாதால் நான் 4ல் வகைப்படுத்தப் படுவேன்.

ஜி ஆலாசியம் said...

நாளை நமதே...

minorwall said...

///நட்பு இல்லாத எண்கள் 5, 4///////

இதை நேற்றே குறிப்பிட நினைத்தேன்..

தனுசு அவர்கள் ஐந்திலே பெயர் அமைத்தபோது இந்த விஷயம் இடறியதாலேதான் நான் ஏற்கனவே இருக்கும் 34ஐ மாற்ற அவசியமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தேன்..

கூட்டு எண் விதி எண் என்று சொல்லப்படும் இந்த எண்ணின் குண நலன்கள் வாழ்வில் வயது ஏற ஏற வந்தமையும் என்ற பொது விதியை வைத்துப் பார்த்தால் ரெண்டாம் எண்ணே வாழ்வின் பிற்பகுதியை ஆளும்..

அந்த வகையிலே நட்பாக இல்லாத ஐந்தாம் எண்ணிலே பெயர் வைப்பதைத் தவிர்த்தலே நலம்..(இது குறிப்பாக ரெண்டாம் எண் காரர்களுக்குஉரிய செய்தி..பொதுவாக ஐந்தாம் எண்ணை யாரும் வைத்துக் கொள்ளலாம்..ரெண்டைத் தவிர..)

ஆனால் தனுசு மேல் ஆலோசனை கேட்டிருந்தார்..அவரது கணிப்புக்கு மறுப்பு /எதிர்ப்பு என்று சொல்லவேண்டாமே என்றே தவிர்த்திருந்தேன்.

இன்று இந்தப் பதிவிலே ஆசிரியர் வைத்திருக்கும் இந்த வரிகள் எனக்கு விளக்கமளிக்க வழிவிட்டது..

அதனாலேதான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்..நுமேராலாஜி ஒரு டீப் சப்ஜெக்ட்..எனவே பெயர்மாற்றம் செய்து கொள்பவர்கள் பல கோணங்களிலும் ஆராய்ந்து செய்வது நல்லது..

thanusu said...

minorwall said...தனுசு மேல் ஆலோசனை கேட்டிருந்தார்..அவரது கணிப்புக்கு மறுப்பு /எதிர்ப்பு என்று சொல்லவேண்டாமே என்றே தவிர்த்திருந்தேன்.

தவறு என்றால் கண்டிப்பாக மறுத்து சொல்ல வேண்டும் அதிலும் ஜோதிட தவறு என்பது வாழ்வே தவறில் போய் முடிந்து விடும் .

நான் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டேன்

sriganeshh said...

இன்று பிஸினஸ் இந்தியா படித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து எடுத்த தகவல்..
பெயர் - N.Shankar ‍
பிறந்த தேதி - 20.April.1956

இவர், Chairman and Managing Director of ECGC ஆக கடந்த ஆண்டு அக்டோபர் 12 ம் தேதியிலிருந்து பணியாற்றுகிறார்.
இவருடைய வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற ஆண்டுகள் 1977, 1982, 1992, 2006
those who do research on this case of number 2, kindly share..
Thanks

Uma said...

என் கணவரின் பிறந்த எண் இரண்டு. கடக ராசி. எழுதியுள்ளவையும் பொருந்துகின்றன.

நட்பு இல்லாத எண்கள் 5, 4 //

இதென்ன ஜுஜுபி, நாங்க ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமையே குப்பை கொட்டிட்டிருக்கோம்!!!!!!!!!!

Balamurugan Jaganathan said...

Uma said...
/// என் கணவரின் பிறந்த எண் இரண்டு. கடக ராசி. எழுதியுள்ளவையும் பொருந்துகின்றன.

நட்பு இல்லாத எண்கள் 5, 4 //

இதென்ன ஜுஜுபி, நாங்க ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமையே குப்பை கொட்டிட்டிருக்கோம்!!!!!!!!!! ///

Great .. ஆனால் "குப்பை கொட்டிட்டிருக்கோம்" என்பதை அழுத்தமாக தாங்கள் சொல்லுவதில் ....... ... :-)

Uma said...

ஆனால் "குப்பை கொட்டிட்டிருக்கோம்" என்பதை அழுத்தமாக தாங்கள் சொல்லுவதில் ....... ... :-)//

என்ன சொல்றீங்கன்னு புரியலியே?

SP.VR. SUBBAIYA said...

////Blogger krishnan51972 said...
very useful messages for lucky no:2.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Rajaram said...
ஐயா,
இன்றைய பதிவும் கலக்கல்.இரண்டாம் எண்ணில் பிறந்தவர்கள் ராஜதந்திரங்கள் நிறைந்த அபரிமிதமான திறமையும் உடையவர்களாகவே இருந்திருக்கின்றனர்.சில நேரங்களில் மற்றவர்களால் புரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருக்கின்றனர்.2ம் பிறந்தவர்களின் மரணங்கள் துர்மரணங்களாகவே நிகழ்ந்ததாக ஒரு செய்தியும் உள்ளது.உதாரணம் ராஜிவ்காந்தி மற்றும் மகாத்மா காந்தி./////

அவர்கள் விதிவில்க்கானவர்கள். எல்லோருக்கும் (எல்லா 2ஆம் எண்காரர்களூக்கும்) அது பொருந்தாது!

SP.VR. SUBBAIYA said...

Blogger Cool Guy said... Dear sir,
Thanks for the posting. I have mailed you for advanced lessons you have ..Esp about the story of man who wanted to test astrology, I really got excited. Please send me those lessons sir.
Regards,
Srivatchan////

மின்னஞ்சல் பெட்டியில் ஏராளமான கடிதங்கள் உள்ளன. பதில் வர தாமதமாகும் பொறுத்துக்கொள்ளூங்கள். நேரமின்மைதான் காரணம்!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Rajaram said...
ஐயா,
////இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்////.
////நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.////
இது 100க்கு 100 உண்மை.சந்திரன் ராசி,லக்கின, நட்சத்திர ஆதிபத்தியம் பெற்றவர்கள் மிகப்பெரிய ராஜதந்திரம் உடையவர்கள் தான்.அதிலும் குறிப்பாக கடகராசியில் புனர்பூசம் நட்சத்திரம் உடையவர்கள்,ரிஷபராசியில் ரோகிணி நட்சத்திரக்கார்ர்கள் இயற்கையாகவே நீங்கள் மேற்கூறியது போன்ற குணாதிசயங்களுடன் உள்ளனர்.இதை நான் அனுபவத்தில் கண்டது.மற்றவர்கள் கடகராசியில் பூசம்,ஆயில்யம் மற்றும் ஹஸ்தம்,திருவோணம் நட்சத்திரக்காரர்களும் மேற்கூறிய குணங்களை பாதியேனும் கொண்டிருக்கின்றனர்.அது நவாம்சத்தில் சந்திரன் நிலைவைத்து கூடுதல்,குறைச்சலாகவும் உள்ளது.////

ரோகிணியை விட்டுவிட்டீர்களே! சந்திரனுடைய நட்சத்திரக்காரர்கள் அனைவருக்கும் அந்த குணங்கள் இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

Blogger thanusu said...
காந்தியோடு ஹிட்லரும் 2 என்னில் பிறந்தவர். .
இரண்டாம் எண் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள் .அடுத்தவரின் உணர்வுகளை மதிக்க தெரிந்தவர்கள்.மற்றவர்களுக்காக சேவை செய்யும் மனம் கொண்டவர்கள்.
இது அபரிதமாகும் போது அடுத்தவரின் கழ்டங்களையும் , நழ்டங்களையும் கண்டு கோபம் கொள்வார்கள் இப்படி கோபம் கொள்ளும் போது நீதியை நியாத்தை நிலைநிறுத்தி வெற்றி கொள்ள எண் 7 ஐ துணைக் கொள்ளவேண்டும் .
எண் 7 கேதுவின் ஆதிக்கம் உள்ள எண். 7 இன் குணம் தடைகளை கொடுக்கும் . 2 ஆம் எண் கொடுக்கும் தேவை இல்லாத உணர்ச்சிகளை எண் 7 தடுக்கும் . தடுத்தே வெற்றியைக் கொடுக்கும்
2 எதை நினைத்து உணர்ச்சி வசப்படுகிரோமோ அதை கொடுக்கும்.
தேசப்பிதா ஆசைப் பட்டது இந்திய சுதந்திரம் .
ஹிட்லர் ஆசைப் பட்டது உங்களுக்கே தெரியும்.
இருவரும் தங்களின் ஆசைகளை அடைந்தார்கள் ..மரணமும் இருவருக்கும் ஏறக் குறைய ஒரே மாதிரியாக அமைந்தது.////

மேலதிகத் தகவல்களுக்குந் நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
இரண்டாம் எண்ணுக்கு ஒன்பது
பகை எண் என்பது விடுபட்டுள்ளது.
நன்றி!!////

ஒன்பது செவ்வாய்க்கு உரிய எண். சந்திரனும் செவ்வாயும் நட்புக்கிரகங்களே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger R.Srishobana said...
வணக்கம் ஐயா,
ஆஹா...என்னுடையதும் இரண்டாம் எண் தான் ஐயா...
//இரண்டாம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் மனகாரகன்.இரண்டாம் எண்ணிற்கு உரியவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்கள். மெல்லிய உணர்வுகளை உடையவர்கள்.
உயர்வான, சாதுவான, இனிமையான குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண்ணிய, சமாளிக்கும் திறன்மிக்க, ராஜதந்திரமிக்க, பொறுமையுள்ள, நேர்மையுள்ளவர்களாக இருப்பார்கள். அடுத்தவர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். உண்மையானவர்களாக இருப்பார்கள்//
தாங்கள் கூறியவைகள் எனக்கு மிக சரியாக பொருந்தும் ஐயா...பாரதியாரை போல என்னுடைய பிறந்த தேதியும் 11ம் தேதி தான்...பார‌தியாரை உண‌ர்ச்சிமிகு க‌விஞ‌ர் என்று சொல்வ‌து மிக‌வும் பொருந்துகிற‌து...////

நல்லது. உணர்ச்சிகள் இல்லாவிட்டால், வாழ்க்கை சுவைக்காது. வாழ்த்துக்கள்!

SP.VR. SUBBAIYA said...

Blogger தேமொழி said...
ஐயா, உங்கள் விடுமறை நாட்களிலும் வகுப்பறைப் பாடங்களை குறிப்பிட்ட நேரத்தில் பதிவேற வகை செய்ததற்கு நன்றி.
நான் விக்கியில் தேடி ஒரு நூற்றைம்பது பிரபலங்களின் பிறந்த தேதி, பிறந்த நாள், பிறந்த எண், விதி எண் ஆகியவைகளைத் தொகுத்து பதிவேற்றியுள்ளேன். பிரபலங்களில் பெரும்பாலோர் இந்தியர்கள், அவர்கள் எந்த துறையில் புகழ் பெற்றவர்கள் என்ற செய்தியும் உள்ளது.
அட்டவணையின் இறுதி நெடுவரிசை (column :)) 'விதிஎண்'ணின்படி வரிசைப் படுத்தப் பட்டுள்ளது. இந்த தகவல் இந்த பாடம் படிப்போருக்கு உபயோகமாக இருக்ககூடும் என்பதனால் அதன் சுட்டியைக் கீழே கொடுத்துள்ளேன். நன்றி.
http://planetspower.blogspot.com/p/numerology.html
பிறந்த எண் '2' உடைய பிரபலங்கள்
Amitabh Bachchan
Dilip Kumar
Mikhail Gorbachev
Rajiv Gandhi
Osho/Bhagwan Shree Rajneesh
Khushwant Singh
Viswanathan Anand
JRD Tata
Violin Kunnakudi Vaidyanathan
Adolf Hitler
Subramanya Bharathi
Michael Jackson
Shahrukh Khan
Vaali
Tipu Sultan
Raja Ravi Varma
Mohandas Karamchand Gandhi
இவர்களில் இரண்டாம் தேதியிலேயே பிறந்தவர்கள்
Mikhail Gorbachev
Khushwant Singh
Violin Kunnakudi Vaidyanathan
Shahrukh Khan
Mohandas Karamchand Gandhi/////

உங்களுடைய அக்கறைக்கும், எடுத்துக்கொடுத்துள்ள உதவிக்கும் நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger ரமேஷ் வெங்கடபதி said...
ஐயா வணக்கம்!
மனோகாரகன் சந்திரன் தேய்பிறையானால் கெடுபலன் என்று விளக்கியுள்ளது என் அனுபவத்தில் சரியெனவேப்படுகிறது! ஆகவே, இறைவனிடம் நானும் கேட்பேன்..!
இரண்டு மனம் வேண்டும்!
இரண்டில் பிறந்த எனக்கென்று!////

இறைவன் கொடுத்திருக்கிறாரே! விழித்திருக்கும்போது ஒன்று. தூங்கும்போது ஒன்று!:--))

SP.VR. SUBBAIYA said...

/////Blogger Balamurugan Jaganathan said...
வாத்தியார் அய்யா இன்றைய பதிவில் விதி எண் 2 க்கு உரிய பலன் பற்றிய தங்களது ஆய்வு மிகவும் அருமை./////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Blogger kmr.krishnan said...
2 ம் எண் காரர்களின் சிறப்பைச் சிறப்பாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!
பூசம்,கடகராசிக்கு.கடகலக்னத்திற்கு இந்தக் குணங்கள் எல்லாம் சரிதான்.
22 ந்தேதி பிறந்துள்ளாதால் நான் 4ல் வகைப்படுத்தப் படுவேன்.////

அடுத்த திங்களன்று மாலை (2.4.2012) உங்களுக்கான எண்ணைப் பற்றிய பதிவு.

SP.VR. SUBBAIYA said...

////Blogger ஜி ஆலாசியம் said...
நாளை நமதே...////

நாளும் நம்தே! எல்லா எண்களும் நமதே!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger minorwall said...
///நட்பு இல்லாத எண்கள் 5, 4///////
இதை நேற்றே குறிப்பிட நினைத்தேன்..
தனுசு அவர்கள் ஐந்திலே பெயர் அமைத்தபோது இந்த விஷயம் இடறியதாலேதான் நான் ஏற்கனவே இருக்கும் 34ஐ மாற்ற அவசியமில்லை என்று கருத்து தெரிவித்திருந்தேன்..
கூட்டு எண் விதி எண் என்று சொல்லப்படும் இந்த எண்ணின் குண நலன்கள் வாழ்வில் வயது ஏற ஏற வந்தமையும் என்ற பொது விதியை வைத்துப் பார்த்தால் ரெண்டாம் எண்ணே வாழ்வின் பிற்பகுதியை ஆளும்..
அந்த வகையிலே நட்பாக இல்லாத ஐந்தாம் எண்ணிலே பெயர் வைப்பதைத் தவிர்த்தலே நலம்..(இது குறிப்பாக ரெண்டாம் எண் காரர்களுக்குஉரிய செய்தி..பொதுவாக ஐந்தாம் எண்ணை யாரும் வைத்துக் கொள்ளலாம்..ரெண்டைத் தவிர..)
ஆனால் தனுசு மேல் ஆலோசனை கேட்டிருந்தார்..அவரது கணிப்புக்கு மறுப்பு /எதிர்ப்பு என்று சொல்லவேண்டாமே என்றே தவிர்த்திருந்தேன்.
இன்று இந்தப் பதிவிலே ஆசிரியர் வைத்திருக்கும் இந்த வரிகள் எனக்கு விளக்கமளிக்க வழிவிட்டது..
அதனாலேதான் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்..நுமேராலாஜி ஒரு டீப் சப்ஜெக்ட்..எனவே பெயர்மாற்றம் செய்து கொள்பவர்கள் பல கோணங்களிலும் ஆராய்ந்து செய்வது நல்லது..////

ஆமாம் மைனர். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////Blogger sriganeshh said...
இன்று பிஸினஸ் இந்தியா படித்துக் கொண்டிருந்த போது, அதிலிருந்து எடுத்த தகவல்..
பெயர் - N.Shankar ‍
பிறந்த தேதி - 20.April.1956
இவர், Chairman and Managing Director of ECGC ஆக கடந்த ஆண்டு அக்டோபர் 12 ம் தேதியிலிருந்து பணியாற்றுகிறார்.
இவருடைய வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு நடைபெற்ற ஆண்டுகள் 1977, 1982, 1992, 2006
those who do research on this case of number 2, kindly share..
Thanks////

உங்களின் பகிர்விற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

////Blogger Uma said...
என் கணவரின் பிறந்த எண் இரண்டு. கடக ராசி. எழுதியுள்ளவையும் பொருந்துகின்றன.
நட்பு இல்லாத எண்கள் 5, 4 //
இதென்ன ஜுஜுபி, நாங்க ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமையே குப்பை கொட்டிட்டிருக்கோம்!!!!!!!!!!/////

ரஜ்ஜுப் பொருத்தம் மட்டும் எப்படிப் போதும்? மற்ற கிரக நிலைகளும் ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு ஒத்துழைக்கின்றன!

SP.VR. SUBBAIYA said...

Blogger Balamurugan Jaganathan said...
Uma said...
/// என் கணவரின் பிறந்த எண் இரண்டு. கடக ராசி. எழுதியுள்ளவையும் பொருந்துகின்றன.
நட்பு இல்லாத எண்கள் 5, 4 //
இதென்ன ஜுஜுபி, நாங்க ரஜ்ஜுப்பொருத்தம் இல்லாமையே குப்பை கொட்டிட்டிருக்கோம்!!!!!!!!!! ///
Great .. ஆனால் "குப்பை கொட்டிட்டிருக்கோம்" என்பதை அழுத்தமாக தாங்கள் சொல்லுவதில் ....... ... :-)

வேலை செய்தால்தானே குப்பை வரும். சந்தோஷ்மாக இருக்கிறார்கள் என்று எடுத்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

Blogger Uma said...
ஆனால் "குப்பை கொட்டிட்டிருக்கோம்" என்பதை அழுத்தமாக தாங்கள் சொல்லுவதில் ....... ... :-)//
என்ன சொல்றீங்கன்னு புரியலியே?

வேலை செய்தால்தானே குப்பை வரும்.
அவர் குப்பை என்பதை வேறு விதமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் விளக்கம் சொல்லிவிட்டேன்!

Uma said...

ரஜ்ஜுப் பொருத்தம் மட்டும் எப்படிப் போதும்? மற்ற கிரக நிலைகளும் ஒத்துழைக்க வேண்டும். உங்களுக்கு ஒத்துழைக்கின்றன!//

உண்மைதான், இந்தத் திருமணத்திற்கு பொருத்தம் பார்த்தது என் தாத்தாதான் (எங்கள் குடும்பத்தில் என் திருமணம் வரை மட்டுமே அவர் உயிருடன் இருந்தார்). இதுதான் முதலில் எனக்குப்பார்த்த
வரன் கூட. இதையே முடித்துவிடலாம் என்று உறுதியாக அவர் சொன்னதால் இதையே முடித்துவிட்டார்கள். (சொர்க்கத்துல அவரை மீட் பண்ணும்போது இருக்கு கச்சேரி!!!!!). அதன்பின் சித்தியிடம் கேட்டபோதும் ரஜ்ஜுப்பொருத்தம் மட்டுமே முக்கியமில்லை என்று சொன்னார்கள்.

வேலை செய்தால்தானே குப்பை வரும்.
அவர் குப்பை என்பதை வேறு விதமாக எடுத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு நான் விளக்கம் சொல்லிவிட்டேன்!//

நன்றி! நன்றி! நன்றி!