மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.3.12

Cinema தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத் தெரியுமா?Cinema தொகுளுவா மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத் தெரியுமா?

Thuguluva Meenatchi Iyengar Soundararajan (துகுலுவ மீனாட்சி அய்யங்கார் செளந்தரராஜனைத் தெரியுமா? என்று கேட்டால் பலபேர்கள் தெரியாது என்பார்கள். அதையே சுருக்கி டி.எம்.எஸ் ஐத் தெரியுமா என்றால் சண்டைக்கு வருவார்கள்.

தமிழர்களிடையே 50 ஆண்டுகாலமாக அத்தனை பிரபலமானவர் அவர். அவரைத் தெரியாவிட்டால் அவன் தமிழ்னே அல்ல!

ஆமாம் பின்னணிப் பாடகர் திரு.T.M.செள்ந்தரராஜன் அவர்களைப் பற்றித்தான் சொல்கிறேன்.

11,000 திரைப்படப் பாடல்களையும், 2,500 பக்திப் பாடல்களையும் பாடிய பெருந்தகை அவர். நாம் வாழ்ந்த காலத்தில் மறக்கமுடியாத பிரபலங்களில் அவரும் ஒருவர்.

24.3.1923ல் மதுரையில் பிறந்த அவர், தனது 21ஆம் வயதில் மேடைகளில் பாடத்துவங்கினார். பிறகு திரைப்படங்களில் பாடும் வாய்ப்புக் கிடைத்தது.
எம்.ஜி.ஆர், சிவாஜி என்று அத்தனை முன்னணி நாயகர்களுக்கும் குரல் கொடுத்தவர். கம்பீரமான குரல் வளம் கொண்டவர். அசத்தலாகப் பல பாடல்களைப் பாடியுள்ளார்

இன்றைய மனதை மயக்கிய குரல்கள் பகுதியை அவர் நிறைக்கின்றார்

நமது தேமொழி அக்காவின் உயிர்த்தோழி விக்கி காமாட்சி அம்மாளிடம் அவரைப்பற்றிய முழுத்தகவல்கள் உள்ளன. அதற்கான சுட்டி கீழே உள்ளது. அவசியம் படித்துப் பாருங்கள்

http://en.wikipedia.org/wiki/T._M._Soundararajan
-------------------------------------------------
மனதை மயக்கிய குரல்கள் - பகுதி 4
திரு.T.M.செள்ந்தரராஜன்

செளராஷ்ட்டிரா சமூகத்தில் பிறந்தவர் அவர். தமிழ் அவருடைய தாய்மொழியல்ல! ஆனாலும் அசத்தலாகத் தமிழில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். எதை இங்கே கொடுப்பது? எதை விடுவது? குழப்பம்தான்

இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த 10 பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------

1
பாடல்: மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே!
படம்: அம்பிகாபதி (1957)
http://youtu.be/fb1uJPhkpLc

2
பாட்ல்: தூங்காதே தம்பி தூங்காதே படம்: நாடோடி மன்னன் (1958)
http://youtu.be/tUEB_61rhZI3
பாடல்: யாரடி நீ மோகினி படம்: உத்தமபுத்திரன் (1958)
http://youtu.be/TZ8cTUNUyvE4
பாடல்: உலகம் பிறந்த்து எனக்காக படம்: பாச்ம் (1962)
http://youtu.be/j8oCtAIyrik5
பாடல்: புதிய வானம் புதிய பூமி, படம்: அன்பே வா (1966)
http://youtu.be/L34zDMiGQ6E

6
பாடல்: சட்டி சுட்டதடா படம்: ஆலயமணி (1962)
http://youtu.be/c3S5RtB3uTU7
பாடல்: ஆறு மனமே ஆறு படம்: ஆண்டவன் கட்டளை (1964)
http://youtu.be/fdjQG6CbYKs

8
பாடல்: பொன்னை விரும்பும் பூமியிலே பட்ம்: ஆலயமணி (1962)
http://youtu.be/sc4pV709YMk9
பாடல்: எங்கே நிம்மதி எங்கே நிம்மதி படம்: புதிய பறவை (1964)
http://youtu.be/sPJAQ5Z7_CU

10
பாடல்: பாட்டும் நானே பாவமும் நானே படம்: திருவிளையாடல் (1965)
http://youtu.be/xg_hBWlR3h0

உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

106 comments:

Parvathy Ramachandran said...

திரையுலகின் இரண்டு இமயங்களைத் தன் குரல் பாலத்தால் இணைத்த அசாதாரணமான பாடகரைப் பற்றிய தங்கள் பதிவு அருமை. எந்தப் பாடல் பிடிக்கும் என்று சொல்வது, 'வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிக்கும்' என்று சொல்வது போலத்தான். குரலை விடுங்கள்,'அந்த நாள் ஞாபகம்' பாடலில் மூச்சிரைப்பு வர வேண்டுமென்பதற்காக, ஓடி விட்டு வந்து பாடிய உழைப்பு , 'எங்கே நிம்மதி' பாடலில் ஒரு உயிரின் துடிப்பைத் துல்லியமாகக் குரலில் காட்டிய ஈடுபாடு,' முத்துக்குளிக்க வாரீயளா' என்ற வட்டார மொழிப் பாடலும் சரி, 'தூங்காத கண்ணென்று ஒன்று' என்ற மெலடியிலும் சரி, 'யார் அந்த நிலவு' என்ற 'வெஸ்டர்ன் டைப்' பாடலாயினும் சரி, 'சாரங்கதாரா' படத்தில் , 'போகுது பார் என் புறா' என்று கம்பீரமாக, அடாணாவை அலசிப் பிழிவதிலும் சரி,பாடிய பாடலில் 100 சதவீதம் தன்னை அர்ப்பணித்த தொழில் பக்தி, எந்த நடிகருக்கும் பொருந்துவதைப் போலப் பாடிய அசாத்தியத் திறமை, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

பாடல் மட்டுமல்லாமல் நடிப்பிலும் (அருணகிரிநாதர், பட்டினத்தார் என்ற இரு படங்களேயாயினும்) வல்லவர். ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. ஒரு முறை எம்.எஸ்.வி., தனது பேரனுடன், அருணகிரிநாதர் படத்தைப் பார்த்த போது,அவன், 'தாத்தா, ஏன் சிவாஜி இவருக்குப் பின்னணி பாடியிருக்கிறார்?' என்று கேட்டானாம். இன்றைய பாடகர்கள் இவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்.

ரமேஷ் வெங்கடபதி said...

வெண்கலக்குரலோன்!

தான் பாடிய பெரும்பான்மையான பக்திப்பாடல்களுக்கு தானே மெட்டும் கட்டியுள்ளார்!

இந்திய அரசின் சிறந்தத் திரை பாடகர் விருது வழங்கவில்லையென்பது துரதிர்ஷ்டம்..விருதுக்கு!

அய்யர் said...

உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லலாம்!

இப்படி சொல்லி விட்டால்
இருக்கிற 10000 பாடலினையும் சொல்லலாம்,,

ஆடலுடன் பாடலை கேட்டு என்ற
அந்த பாடலில் உள்ள வேகம்..

ஆயிரம் நிலவே வா என்ற பாடல்
ஆராவரமின்றி எஸ்பிபியை அறிமுகம்

செய்யவைத்தது..
சொல்ல இருக்குது எனினும்

டிஎம் எஸ்ஸின்
தெவிட்டாத முருகன் பாடல்கள்

முழு கலெக்ஷனும் அய்யரிடம் ..
முனுமுனுக்கும் பாட்டெல்லாம்அதுவே

வாழ்க.. வாழ்க..
முருகா சரணம்

தேமொழி said...

ஹ..ஹ..ஹா... ஐயா ....சந்தடி சாக்கில் நடுவே கோயம்புத்தூர் குசும்பும் தெரிகிறதே.
புதியவானம் புதிய பூமி பாடலில் மக்கள் திலகத்திற்குப் பதில் மலேஷியா எம். ஜி. ஆர். பாடல்?
OMG he has such a creativity .... அதற்காகவே மீண்டும் இருமுறைப் பார்த்தேன்.
வெளிநாட்டில் வாழும் நம் வகுப்பறை தோழர்களும் இதுபோல் பாடி ஆடி வெளியிட்டால் நன்றாக இருக்குமே, எங்கே தனுசு, ஆலாசியம், மைனர், கண்ணன்

தேமொழி said...

டி.எம். எஸ். பற்றிய பதிவிற்கு நன்றி....நன்றி.... நன்றி....
எனக்கும் என் கணவருக்கும் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒற்றுமைகளில் ஒன்று டி.எம். எஸ். ரசிகராயிருப்பது. இன்றைய பதிவைப் பற்றி சொன்னவுடன் அவரும் படித்தார். உண்மை டி.எம். எஸ். பாடல்களில் சிறந்த பாடல்கள் எனத் தேர்ந்தெடுப்பது சுலபமான காரியம் அல்ல.

"இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்....இசை என்னிடம் உருவாகும்'" என்று அவர் பாடும்பொழுது இதில் எவ்வளவு உண்மை என்று தோன்றும்.

தேமொழி said...

சிறுவயதில் குழந்தை உள்ளம் இருந்த பொழுது எத்தனையோ பாடல்களைக் கேட்டதுண்டு,பொருள் புரியாமல் பாடியதும் உண்டு. வெளித் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு தமிழக அரசின் அங்கீகரிக்கப் படாத குடும்ப நலப் பிரச்சார பீரங்கியாய் மாறி,
"மூட்டை முடிச்சைக் குறையுங்கள் வண்டிப் பயணம் சுகமாகும்
குடும்ப அளவைக் குறையுங்கள் வாழ்க்கைப் பயணம் சுகமாகும்
வண்டியாயினும், வாழ்கையாயினும் சுமை குறையட்டும் சுகம் நிறையட்டும்"
என்று பாடி பெற்றோர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய நாட்கள் உண்டு.

ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொருள் உண்டு என்று புரிய ஆரம்பித்த பதின்ம வயதில் அர்த்தம் புரிந்து என்னைக் கவர்ந்த பாடல் டி.எம். எஸ். ன் பொன்னை விரும்பும் பூமியிலேதான். அவர் குரலும் அவர் பாடிய விதமும் மிகவும் மனதுக்கு மிகவும் பிடித்துவிட அன்று முதல் அவர் ரசிகை.
"இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே" என்ன அருமையான வரிகள்.
ஆனால் அப்பொழுதே அந்தப் பாடல் பழைய பாடல் என்ற நிலைக்குப் போய்விட்டது.

தேமொழி said...

எந்த உணர்சியையையும் சுலபமாக குரலில் கொண்டு வரத் தெரிந்தவர் டி.எம். எஸ். ஒருவர் மட்டுமே. அமைதி, ஆர்பாட்டம், சோகம், கோபம், துள்ளாட்டம், கிண்டல், கேலி எந்த உணர்ச்சியும் அவருக்கு சுலபம். 'பைரவி' படத்தில் "நண்டூருது நரியூருது" பாட்டில் சோகத்தில் இருந்து கோபத்திற்கு மிகச் சுலபமாக தாவி விடுவார்.

பாடல்களை நன்கு தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர் எனப் பெயரெடுத்த எம்.ஜி. ஆர். அவருக்காக கனவுக் காட்சிகளில் யாரைப் பாடவிடாலும் பெரும்பாலும் அவரே பாடுவதாக வரும் காட்சிகளில் பாடத் தேர்ந்தெடுத்தது டி.எம். எஸ். அவர்களை மட்டுமே. இது அவரது "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரைத் தொடர்ந்தது. மற்றவர்கள் பாடிய பாடல்கள் இருந்தாலும் "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" மிகச் சிறப்பாக அமைந்தது அந்தப் படத்தில்.

naren said...

வெண்கலகுரலோனை பற்றிய அருமையான பதிவு ... எனக்கு பிடித்த பாடல் ...
http://www.youtube.com/watch?v=Ef1mPAwO7II

கலங்கரை விளக்கத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் எம் . ஜி . ஆர் எவ்வளவு அட்டகாசமாய் இருக்கிறார் !!! - அசல் ராஜா போல ...love it

Kalai said...

என்னுடைய முதல் சாய்ஸ் எங்கே நிம்மதி தான். அடுத்து தூங்காதே தம்பி அடுத்து ஆறு மனமே.
மூன்று போதும் என்றும் நினைக்கிறன்.

எனது கைகள் பின்னோட்டம் பண்ணும் போது கீ போர்டு அழுகிறது........
எனது கண்கள் படிக்கும் (வாத்தியார் , உமா அக்கா திருத்தும் ) போது மானிடர் ப்ளின்க் ஆகிறது.......

இது வைத்தியருக்கு மன்னிக்கவும்(கூகிள் எழுத்து பிழை) வாத்தியாருக்கு ,
ஆறு மனமே ஆறு , இந்த கலையின் ஜாதக அலசலை பார்த்து ....

இது உமா அக்கா (வகுப்பில் சீனியர்) சொல்வதாக...
தூங்காதே தூங்காதே கலை தங்கை தூங்காதே
வாத்தியார் அடிப்படை பாடம் படிக்கும் போது தூங்காதே......

RAMADU Family said...

Guru vanakkam,

out of all the songs, "Yaradi nee mohini " tops the list with Sivaji's dance for the song.

Thanks for the post.

RAMADU.

kmr.krishnan said...

செளராஷ்ட்ரா சமூகத்தவர் ஆதியில் கூர்ஜரம் என்னும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் தமிழகத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூட இதனைக் குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார். பட்டு நூல் நெசவு அவர்களுடைய சிறப்பான தொழில்.பட்டுக்கு நல்ல‌ மதிப்பு சிந்தெடிக் வருவதற்கு முன்னர் இருந்தது. அப்போது செளராஷ்டர்ரர்கள் ஓரளவு வறுமையின்றி வாழ்ந்தார்கள். சேலம்(அம்மாப்பேட்டை) தஞ்சை(மகர்நோன்புச் சாவடி)மதுரை,பரமக்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் அதிகம் பேர் உள்ளனர்.பட்டு கோலோச்சிய காலத்தில் அவர்கள் படிப்புக்கோ மற்ற தொழிலுக்கு மாறவோமுக்கியத்துவம் கொடுக்கவில்லை.
பட்டு படுக்க ஆரம்பித்தவுடன் மற்ற தொழில்களுக்கும் வந்தனர்.

மதுரை காந்திகால காங்கிரஸ் தலைவர் என் எம் ஆர் சுப்பராமன் இன்ற‌ளவும் போற்றப்படும் ஒரு தலைவர். அவர் செள‌ராஷ்ட்ரா சமூகத்தவர்தான்.

எம் வி வெங்க‌ட்ராம் மணிக்கொடிக் கால தமிழ் எழுத்தாளார்.அவரும் செளராஷ்ட்ரா சமூகம் தான்.

இங்கே வந்தபின்னர் தங்களை சமூக அந்தஸ்த்தில் சாதிகளுக்கு ஏற்றம் இருந்த கால கட்டத்தில் தங்களையும் பிராமணர்களாக அவர்களாகவே வரித்துக் கொண்டனர். அய்யர், அய்யங்கார் என்ற பெயர்களை அவர்களாகவே
சூட்டிக் கொண்டனர். அதனால், காலம் மாறி இட ஒதுக்கீடு எல்லாம் வந்த பின்னர் அவர்கள் இழந்தது ஏராளம். ஏழைகள் அதிகம் உள்ள அந்த சமூகம் தன்னை பிராமணர்களாக காட்டிக் கொண்டதால் முன்னேறிய சமூகமாகக் கொள்ளப்ப‌ட்டு எந்த ஒதுக்கீடும் கிட்டாமல் இன்றளவும் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.

செள‌ராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களே இல்லாமல் இருந்தது. இப்போது அக்குறையும் தீர்ந்துள்ளது.கிருஷ்ண பக்தர்களான அவர்கள் எங்கே போனாலும் கிருஷ்ணன் கோவிலை அமைத்து விடுவார்கள்.

டி எம் எஸ் குரல்களை மாற்றிப் பாடுவதில் வல்லவர். சிவாஜிக்குப்பாடும் போது சிவாஜியே பாடுவதுபோலவும், எம்ஜிஆருக்குப் பாடும் போது எம் ஜியாரே பாடுவது போலவும் இருக்கும். நல்ல திறமைசாலியான டிஎம் எஸை
நினைவுபடுத்தியதற்கு நன்றி.

SP.VR. SUBBAIYA said...

//// Parvathy Ramachandran said...
திரையுலகின் இரண்டு இமயங்களைத் தன் குரல் பாலத்தால் இணைத்த அசாதாரணமான பாடகரைப் பற்றிய தங்கள் பதிவு அருமை. எந்தப் பாடல் பிடிக்கும் என்று சொல்வது, 'வெல்லக் கட்டியில் எந்தப் பக்கம் இனிக்கும்' என்று சொல்வது போலத்தான். குரலை விடுங்கள்,'அந்த நாள் ஞாபகம்' பாடலில் மூச்சிரைப்பு வர வேண்டுமென்பதற்காக, ஓடி விட்டு வந்து பாடிய உழைப்பு , 'எங்கே நிம்மதி' பாடலில் ஒரு உயிரின் துடிப்பைத் துல்லியமாகக் குரலில் காட்டிய ஈடுபாடு,' முத்துக்குளிக்க வாரீயளா' என்ற வட்டார மொழிப் பாடலும் சரி, 'தூங்காத கண்ணென்று ஒன்று' என்ற மெலடியிலும் சரி, 'யார் அந்த நிலவு' என்ற 'வெஸ்டர்ன் டைப்' பாடலாயினும் சரி, 'சாரங்கதாரா' படத்தில் , 'போகுது பார் என் புறா' என்று கம்பீரமாக, அடாணாவை அலசிப் பிழிவதிலும் சரி,பாடிய பாடலில் 100 சதவீதம் தன்னை அர்ப்பணித்த தொழில் பக்தி, எந்த நடிகருக்கும் பொருந்துவதைப் போலப் பாடிய அசாத்தியத் திறமை, என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
பாடல் மட்டுமல்லாமல் நடிப்பிலும் (அருணகிரிநாதர், பட்டினத்தார் என்ற இரு படங்களேயாயினும்) வல்லவர். ஒரு நிகழ்ச்சி நினைவு வருகிறது. ஒரு முறை எம்.எஸ்.வி., தனது பேரனுடன், அருணகிரிநாதர் படத்தைப் பார்த்த போது,அவன், 'தாத்தா, ஏன் சிவாஜி இவருக்குப் பின்னணி பாடியிருக்கிறார்?' என்று
கேட்டானாம். இன்றைய பாடகர்கள் இவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும்./////

ஆமாம். அந்தச் சிறுவனின் வார்த்தைகள் நிதர்சனமானவை. அவ்ரில் குரலில் அத்தனை நடிகளும் தெரிந்தார்கள். அத்தனை நடிகர்கள் குரலுக்கும் அவர் குரல் ஒத்துப் போனது. அது தெயவ் அனுக்கிரகம்தான். உங்கள் பகிர்விற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// ரமேஷ் வெங்கடபதி said...
வெண்கலக்குரலோன்!
தான் பாடிய பெரும்பான்மையான பக்திப்பாடல்களுக்கு தானே மெட்டும் கட்டியுள்ளார்!
இந்திய அரசின் சிறந்தத் திரை பாடகர் விருது வழங்கவில்லையென்பது துரதிர்ஷ்டம்..விருதுக்கு!////

விருதுகளை விட்டுத்தள்ளுங்கள். சிவாஜிக்குக்கும் விருது வழங்காமல் மெளனமாக இருந்துவிட்டார்கள். ல்ட்சக்கணக்கான மக்களின் மனம் விருதாக அவர்களுக்குக் கிடைத்தது. அது போதும்! அதைவிடப் பெரிய விருது ஏது?

SP.VR. SUBBAIYA said...

//// அய்யர் said...
உங்களுக்கு மிகவும் பிடித்த பாடலை பின்னூட்டத்தில் நீங்கள் சொல்லலாம்!
இப்படி சொல்லி விட்டால்
இருக்கிற 10000 பாடலினையும் சொல்லலாம்,,
ஆடலுடன் பாடலை கேட்டு என்ற
அந்த பாடலில் உள்ள வேகம்..
ஆயிரம் நிலவே வா என்ற பாடல்
ஆராவரமின்றி எஸ்பிபியை அறிமுகம்
செய்யவைத்தது..
சொல்ல இருக்குது எனினும்
டிஎம் எஸ்ஸின்
தெவிட்டாத முருகன் பாடல்கள்
முழு கலெக்ஷனும் அய்யரிடம் ..
முனுமுனுக்கும் பாட்டெல்லாம்அதுவே
வாழ்க.. வாழ்க..
முருகா சரணம்//////

ஆமாம். நீங்கள் பெரிய ரசிகர் என்பது தெரியும். நேரம் கிடைக்கும்போது அந்த முருகன் பாடல்களை வரிசைப் படுத்திக்கொடுங்கள் விசுவநாதன்.
முருகப்பெருமான் அதற்குரிய நேரத்தை உங்களுக்கு நல்குவார்!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
ஹ..ஹ..ஹா... ஐயா ....சந்தடி சாக்கில் நடுவே கோயம்புத்தூர் குசும்பும் தெரிகிறதே.
புதியவானம் புதிய பூமி பாடலில் மக்கள் திலகத்திற்குப் பதில் மலேஷியா எம். ஜி. ஆர். பாடல்?
OMG he has such a creativity .... அதற்காகவே மீண்டும் இருமுறைப் பார்த்தேன். வெளிநாட்டில் வாழும் நம் வகுப்பறை தோழர்களும் இதுபோல் பாடி ஆடி வெளியிட்டால் நன்றாக இருக்குமே, எங்கே தனுசு, ஆலாசியம், மைனர், கண்ணன்////

அப்படியே யார் யார் எந்தெந்தப் பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் உங்கள் கற்பனைக் குதிரையில் வந்து சொன்னால் நன்றாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
டி.எம். எஸ். பற்றிய பதிவிற்கு நன்றி....நன்றி.... நன்றி....
எனக்கும் என் கணவருக்கும் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒற்றுமைகளில் ஒன்று டி.எம். எஸ். ரசிகராயிருப்பது. இன்றைய பதிவைப் பற்றி சொன்னவுடன் அவரும் படித்தார். உண்மை டி.எம். எஸ். பாடல்களில் சிறந்த பாடல்கள் எனத் தேர்ந்தெடுப்பது சுலபமான காரியம் அல்ல.
"இசை கேட்டால் புவி அசைந்தாடும் அது இறைவன் அருளாகும்....இசை என்னிடம் உருவாகும்'" என்று அவர் பாடும்பொழுது இதில் எவ்வளவு உண்மை என்று தோன்றும்./////

அதனால்தான் ஏ.பி.நாகராஜன் என்னும் இமயம், 'ஒரு நாள் போதுமா?' என்று ஹேமநாத பாகவதர் பாடிய பாடலுக்கு, பதிலடியாக சிவன் தோன்றி 'பாட்டும்
நானே..பாவமும் நானே என்ற பாடலுக்கு இவரைத் தெரிவு செய்து பாடவைத்தார். அந்தப் படத்தில் ஏ.பி.என், கவியரசர் கண்ணதாசன், இசையமைப்பாளர் (திரையுலக மாமா) கே.வி.மகாதேவன் ஆகிய மூன்று மாமேதைகளின் உழைப்பு நன்றாகத் தெரியும். உங்கள் கணவருக்கு எனது நன்றியைச் சொல்லுங்கள்
சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
சிறுவயதில் குழந்தை உள்ளம் இருந்த பொழுது எத்தனையோ பாடல்களைக் கேட்டதுண்டு,பொருள் புரியாமல் பாடியதும் உண்டு. வெளித் திண்ணையில் ஏறி நின்றுகொண்டு தமிழக அரசின் அங்கீகரிக்கப் படாத குடும்ப நலப் பிரச்சார பீரங்கியாய் மாறி,"மூட்டை முடிச்சைக் குறையுங்கள் வண்டிப் பயணம் சுகமாகும் குடும்ப அளவைக் குறையுங்கள் வாழ்க்கைப் பயணம் சுகமாகும் வண்டியாயினும், வாழ்கையாயினும் சுமை குறையட்டும் சுகம் நிறையட்டும்" என்று பாடி பெற்றோர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்திய நாட்கள் உண்டு.
ஆனால் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொருள் உண்டு என்று புரிய ஆரம்பித்த பதின்ம வயதில் அர்த்தம் புரிந்து என்னைக் கவர்ந்த பாடல் டி.எம். எஸ். ன் பொன்னை விரும்பும் பூமியிலேதான். அவர் குரலும் அவர் பாடிய விதமும் மிகவும் மனதுக்கு மிகவும் பிடித்துவிட அன்று முதல் அவர் ரசிகை.
"இந்த மனமும், இந்த உறவும் என்றும் வேண்டும் என்னுயிரே" என்ன அருமையான வரிகள்.
ஆனால் அப்பொழுதே அந்தப் பாடல் பழைய பாடல் என்ற நிலைக்குப் போய்விட்டது./////

பழைய பாடல் என்ற நிலைக்குப் போனாலும் நம் மனதை விட்டுப்போகாது. அதுதான் முக்கியம்!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
எந்த உணர்சியையையும் சுலபமாக குரலில் கொண்டு வரத் தெரிந்தவர் டி.எம். எஸ். ஒருவர் மட்டுமே. அமைதி, ஆர்பாட்டம், சோகம், கோபம், துள்ளாட்டம், கிண்டல், கேலி எந்த உணர்ச்சியும் அவருக்கு சுலபம். 'பைரவி' படத்தில் "நண்டூருது நரியூருது" பாட்டில் சோகத்தில் இருந்து கோபத்திற்கு மிகச் சுலபமாக தாவி விடுவார். பாடல்களை நன்கு தேர்ந்தெடுக்கத் தெரிந்தவர் எனப் பெயரெடுத்த எம்.ஜி. ஆர். அவருக்காக கனவுக் காட்சிகளில் யாரைப் பாடவிடாலும் பெரும்பாலும் அவரே பாடுவதாக வரும் காட்சிகளில் பாடத் தேர்ந்தெடுத்தது டி.எம். எஸ். அவர்களை மட்டுமே. இது அவரது "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரைத் தொடர்ந்தது. மற்றவர்கள் பாடிய பாடல்கள் இருந்தாலும் "தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை" மிகச் சிறப்பாக அமைந்தது அந்தப் படத்தில்.////

"பட்டிக்காடா...பட்டணமா" போன்ற தெம்மாங்குப் பாடலகளையும் பாடி கிராமத்து ரசிகர்களை மயக்கிய மாமேதை அவர்! என்றும் நம் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்து விட்டவர் அவர். அவருக்குக் கிடைத்த பெரிய விருது அதுதான்!

SP.VR. SUBBAIYA said...

//// naren said...
வெண்கலகுரலோனை பற்றிய அருமையான பதிவு ... எனக்கு பிடித்த பாடல் ...
http://www.youtube.com/watch?v=Ef1mPAwO7II
கலங்கரை விளக்கத்தில் இடம் பெற்ற இந்த பாடலில் எம் . ஜி . ஆர் எவ்வளவு அட்டகாசமாய் இருக்கிறார் !!! - அசல் ராஜா போல ...love it/////

அந்தப் படத்தில் வரும், கண் போன போக்கிலே என்ற பாடலில் வரும்,
நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
போன்ற வரிகள் உயிர் பெற்றது அவரது வெண்கலக் குரலால்தான்!
நன்றி நரேன்!

SP.VR. SUBBAIYA said...

//// Kalai said...
என்னுடைய முதல் சாய்ஸ் எங்கே நிம்மதி தான். அடுத்து தூங்காதே தம்பி அடுத்து ஆறு மனமே.
மூன்று போதும் என்றும் நினைக்கிறன்.
எனது கைகள் பின்னோட்டம் பண்ணும் போது கீ போர்டு அழுகிறது........
எனது கண்கள் படிக்கும் (வாத்தியார் , உமா அக்கா திருத்தும் ) போது மானிடர் ப்ளின்க் ஆகிறது.......
இது வைத்தியருக்கு மன்னிக்கவும்(கூகிள் எழுத்து பிழை) வாத்தியாருக்கு ,
ஆறு மனமே ஆறு , இந்த கலையின் ஜாதக அலசலை பார்த்து ....
இது உமா அக்கா (வகுப்பில் சீனியர்) சொல்வதாக...
தூங்காதே தூங்காதே கலை தங்கை தூங்காதே
வாத்தியார் அடிப்படை பாடம் படிக்கும் போது தூங்காதே....../////

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் பாடம் மறையட்டுமே
தன்னாலே புரியும் தயங்காதே - கலையரசி
தலைவன் (இறைவன்) இருக்கிறான் மயங்காதே!

SP.VR. SUBBAIYA said...

/// RAMADU Family said...
Guru vanakkam,
out of all the songs, "Yaradi nee mohini " tops the list with Sivaji's dance for the song.
Thanks for the post.
RAMADU.////

ஆமாம். சிவாஜி & டி.எம்.எஸ் ஆகிய இருவருக்கும் பெரும் புகழைச் சேரத்த பாடல் அது. நன்றி ராமுடு!

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
செளராஷ்ட்ரா சமூகத்தவர் ஆதியில் கூர்ஜரம் என்னும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் தமிழகத்தில் பேசிய குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கூட இதனைக் குறிப்பிட்டு பெருமைப்பட்டுள்ளார். பட்டு நூல் நெசவு அவர்களுடைய சிறப்பான தொழில்.பட்டுக்கு நல்ல‌ மதிப்பு சிந்தெடிக் வருவதற்கு முன்னர் இருந்தது. அப்போது செளராஷ்டர்ரர்கள் ஓரளவு வறுமையின்றி வாழ்ந்தார்கள். சேலம்(அம்மாப்பேட்டை) தஞ்சை(மகர்நோன்புச் சாவடி)மதுரை,பரமக்குடி, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் அதிகம் பேர் உள்ளனர்.பட்டு கோலோச்சிய காலத்தில் அவர்கள் படிப்புக்கோ மற்ற தொழிலுக்கு மாறவோமுக்கியத்துவம் கொடுக்கவில்லை. பட்டு படுக்க ஆரம்பித்தவுடன் மற்ற தொழில்களுக்கும் வந்தனர்.
மதுரை காந்திகால காங்கிரஸ் தலைவர் என் எம் ஆர் சுப்பராமன் இன்ற‌ளவும் போற்றப்படும் ஒரு தலைவர். அவர் செள‌ராஷ்ட்ரா சமூகத்தவர்தான்.
எம் வி வெங்க‌ட்ராம் மணிக்கொடிக் கால தமிழ் எழுத்தாளார்.அவரும் செளராஷ்ட்ரா சமூகம் தான்.
இங்கே வந்தபின்னர் தங்களை சமூக அந்தஸ்த்தில் சாதிகளுக்கு ஏற்றம் இருந்த கால கட்டத்தில் தங்களையும் பிராமணர்களாக அவர்களாகவே வரித்துக் கொண்டனர். அய்யர், அய்யங்கார் என்ற பெயர்களை அவர்களாகவே சூட்டிக் கொண்டனர். அதனால், காலம் மாறி இட ஒதுக்கீடு எல்லாம் வந்த பின்னர் அவர்கள் இழந்தது ஏராளம். ஏழைகள் அதிகம் உள்ள அந்த சமூகம் தன்னை பிராமணர்களாக காட்டிக் கொண்டதால் முன்னேறிய சமூகமாகக் கொள்ளப்ப‌ட்டு எந்த ஒதுக்கீடும் கிட்டாமல் இன்றளவும் பெரும்பான்மையானவர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
செள‌ராஷ்ட்ரா மொழிக்கு எழுத்துக்களே இல்லாமல் இருந்தது. இப்போது அக்குறையும் தீர்ந்துள்ளது.கிருஷ்ண பக்தர்களான அவர்கள் எங்கே போனாலும் கிருஷ்ணன் கோவிலை அமைத்து விடுவார்கள்.
டி எம் எஸ் குரல்களை மாற்றிப் பாடுவதில் வல்லவர். சிவாஜிக்குப்பாடும் போது சிவாஜியே பாடுவதுபோலவும், எம்ஜிஆருக்குப் பாடும் போது எம் ஜியாரே பாடுவது போலவும் இருக்கும். நல்ல திறமைசாலியான டிஎம் எஸை நினைவுபடுத்தியதற்கு நன்றி./////

உங்களின் மேலதிகத்தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்! பின்னூட்டத்தை ஒருமுறை மட்டும் உள்ளிடுங்கள். இந்தப் பின்னூட்டத்தை 4 முறைகள் உள்ளிட்டுளீர்கள். ஒத்துப்பார்த்து நகல்களை நீக்குவதற்கு நேரம் பிடிக்கிறது. ஒத்துழைப்புத் தாருங்கள்!

kmr.krishnan said...

//இந்தப் பின்னூட்டத்தை 4 முறைகள் உள்ளிட்டுளீர்கள். ஒத்துப்பார்த்து நகல்களை நீக்குவதற்கு நேரம் பிடிக்கிறது. ஒத்துழைப்புத் தாருங்கள்!//

இதுபோல எனக்கு இதுவரை நடக்கவில்லை. ஒரு முறை அனுப்பிய பின்னர் அனுப்பினோமா என்ற சந்தேகம் வந்து மற்றொரு முறையும் அனுபியது நினைவுள்ளது.4 முறை என்பது வியப்பளிக்கிறது. எனது கண்ணினியில்தான் ஏதோ கோளாறு போலும்.

தங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு மிகவும் வருந்துகிறேன். இரண்டு நாட்களாக
சுரமும் தலைவலியுமாக இருந்தது. அதில் நிலை தடுமாறியுள்ளது போலும். எதுவாக இருந்தாலும் நான் செய்தது வகுப்பறை ஆசிரியருக்கு அளித்த சங்கடம்தான்.இனி இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.என்றும் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவே நினைத்து வருகிறேன்.இனியும் கவனத்துடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

தேமொழி said...

SP.VR. SUBBAIYA said... அப்படியே யார் யார் எந்தெந்தப் பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் உங்கள் கற்பனைக் குதிரையில் வந்து சொன்னால் நன்றாக இருக்கும்! ///

கரும்பு தின்னக் கூலி?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு - கண்ணன்
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று - மைனர்
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் - தனுசு
மின்மினியை கண்மணியாய் கொண்டவளை - துபாய் சரவணா
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - எஸ். சந்திரசேகரன்

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
//இந்தப் பின்னூட்டத்தை 4 முறைகள் உள்ளிட்டுளீர்கள். ஒத்துப்பார்த்து நகல்களை நீக்குவதற்கு நேரம் பிடிக்கிறது. ஒத்துழைப்புத் தாருங்கள்!//
இதுபோல எனக்கு இதுவரை நடக்கவில்லை. ஒரு முறை அனுப்பிய பின்னர் அனுப்பினோமா என்ற சந்தேகம் வந்து மற்றொரு முறையும் அனுபியது நினைவுள்ளது.4 முறை என்பது வியப்பளிக்கிறது. எனது கண்ணினியில்தான் ஏதோ கோளாறு போலும்.
தங்களுக்கு ஏற்பட்ட இடைஞ்சலுக்கு மிகவும் வருந்துகிறேன். இரண்டு நாட்களாக
சுரமும் தலைவலியுமாக இருந்தது. அதில் நிலை தடுமாறியுள்ளது போலும். எதுவாக இருந்தாலும் நான் செய்தது வகுப்பறை ஆசிரியருக்கு அளித்த சங்கடம்தான்.இனி இவ்வாறு நேராமல் பார்த்துக் கொள்கிறேன்.என்றும் ஒத்துழைப்பு அளித்து வருவதாகவே நினைத்து வருகிறேன்.இனியும் கவனத்துடன் இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.////

புரிதலுக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/// தேமொழி said...
SP.VR. SUBBAIYA said... அப்படியே யார் யார் எந்தெந்தப் பாடலுக்கு ஆடினால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் உங்கள் கற்பனைக் குதிரையில் வந்து சொன்னால் நன்றாக இருக்கும்! ///
கரும்பு தின்னக் கூலி?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு - கண்ணன்
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று - மைனர்
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் - தனுசு
மின்மினியை கண்மணியாய் கொண்டவளை - துபாய் சரவணா
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - எஸ். சந்திரசேகரன்////

அப்ப்டியே இது லால்குடிக்காரருக்கு: எங்கிட்டோ மோதாதே....நான் வீராதி வீரனடா!
ஒன்று மட்டும் நியாயமில்லை! உங்கள் தோழிகளை விட்டுவிட்டீர்களே! குறிப்பாக தில்லிக்க்கார அமமணி ம்ற்றும் சோபனையானவர்! அவர்களுக்கு உரிய பாடலைக் குறிப்பிடுங்கள்

kmr.krishnan said...

//அப்ப்டியே இது லால்குடிக்காரருக்கு: எங்கிட்டோ மோதாதே....நான் வீராதி வீரனடா!//

Why so? Do I present such a notorious picture in public?

kmr.krishnan said...

//அப்ப்டியே இது லால்குடிக்காரருக்கு: எங்கிட்டோ மோதாதே....நான் வீராதி வீரனடா!//

Why so? Do I present such a notorious picture in public?

kmr.krishnan said...

அவரோ மீனாட்சி 'அய்யங்கார்' செளந்திரராஜன். அப்படியானால் நெற்றியில் நாமம் அல்லவா தரிக்க வேண்டும்? பட்டையாக வெண்ணீரு!

seethalrajan said...

Ji! I am admiring your talent! TMS all songs are rhythmic and nicefeel to hear. He is great voice. i used to hear adathar aatt vithar adukiran kanna and 6maname 6 anthe andavan katalai 6. Last year I have seen tms function in madurai by awarding alagiri(Cabinet Minister) giving award to him. I have seen him somany time in t-nagar as common man. It is realy give us nicefeel.Ji! Once again i thanks to you and I always owe to ur work.

தேமொழி said...

///SP.VR. SUBBAIYA said... ஒன்று மட்டும் நியாயமில்லை! உங்கள் தோழிகளை விட்டுவிட்டீர்களே! குறிப்பாக தில்லிக்க்கார அமமணி மற்றும் சோபனையானவர்! அவர்களுக்கு உரிய பாடலைக் குறிப்பிடுங்கள் ///

ஹ்ம்ம்..... நான் எம். ஜி . ஆர் நடித்து டி.எம்.எஸ் பாடிய பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன் ஐயா!!!
டி.எம்.எஸ் பாடல்கள் என்பதனால் இன்று என் தோழிகள் பாடல்கள் பாடமுடியாது.
வேண்டுமானால் என் தோழிகளைப் பார்த்து டி.எம்.எஸ் இப்படி பாடுவார்.....

உமாவைப் பார்த்து - திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ நீ தென் பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ
ஸ்ரீஷோபனாவைப் பார்த்து - ஐ வில் சிங் ஃபார் யு, ஐ வில் டான்ஸ் ஃபார் யு, ஆட்டமென்ன சொல்லடி தோழி நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி
கலையைப் பார்த்து - நாடு அதை நாடு..அதை நாடாவிட்டால் ஏது வீடு பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
பார்வதியைப் பார்த்து - மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடானுகோடி தருக

மற்றவர்களையும் விடமுடியாது, KMRK ஐயாவும் நீங்களும் பாடிமுடித்து விட்டீர்கள் , அதனால் மற்றவர்கள் ....
தஞ்சாவூர் ஐயா - பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே, நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே உயிர் கொண்டு வந்தேனே (இருகோடுகள் படம்)
அய்யர் ஐயா - கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
குறிப்பிட்ட அனைத்தும் டி.எம்.எஸ் பாடல்கள்தான்

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
//அப்ப்டியே இது லால்குடிக்காரருக்கு: எங்கிட்டோ மோதாதே....நான் வீராதி வீரனடா!//
Why so? Do I present such a notorious picture in public?////

என்ன ஒரு தவறான நினைப்பு சுவாமி? சூப்பர் ஸ்டாரின் பிரபலமான பாடலை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். அவர் நொட்டோரியசா அல்லது ஹீரோவா? நீங்க்ளே சொல்லுங்கள்! அந்தப் பாடலைப் பாடியது டி.எம்.எஸ் அல்ல! மனோ பாடிய பாடல் அது.

சரி, போகட்டும் டி.எம்.எஸ் பாடலையே தருகிறேன். சீக்கிரம் லால்குடியையோ அல்லது தஞ்சையையோ லொக்கேசனாகவைத்து கானொளிக்கு ஏற்பாடு செய்து அனுப்பிவையுங்கள்.
பாடல்:
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்!

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
//அப்ப்டியே இது லால்குடிக்காரருக்கு: எங்கிட்டோ மோதாதே....நான் வீராதி வீரனடா!//
Why so? Do I present such a notorious picture in public?////

இது நகல். அசலுக்கு உள்ள பதில்தான் இதற்கும்!

SP.VR. SUBBAIYA said...

//// kmr.krishnan said...
அவரோ மீனாட்சி 'அய்யங்கார்' செளந்திரராஜன். அப்படியானால் நெற்றியில் நாமம் அல்லவா தரிக்க வேண்டும்? பட்டையாக வெண்ணீறு!/////

அவர் தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் தீவிர பக்தர் சுவாமி. அதனால் அவருடைய நெற்றியில் பட்டையாகத் திருநீறு!

SP.VR. SUBBAIYA said...

/// seethalrajan said...
Ji! I am admiring your talent! TMS all songs are rhythmic and nicefeel to hear. He is great voice. i used to hear adathar aatt vithar adukiran kanna and 6maname 6 anthe andavan katalai 6. Last year I have seen tms function in madurai by awarding alagiri(Cabinet Minister) giving award to him. I have seen him somany time in t-nagar as common man. It is realy give us nicefeel.Ji! Once again i thanks to you and I always owe to ur work.////

நல்லது. உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
///SP.VR. SUBBAIYA said... ஒன்று மட்டும் நியாயமில்லை! உங்கள் தோழிகளை விட்டுவிட்டீர்களே! குறிப்பாக தில்லிக்க்கார அமமணி மற்றும் சோபனையானவர்! அவர்களுக்கு உரிய பாடலைக் குறிப்பிடுங்கள் ///
ஹ்ம்ம்..... நான் எம். ஜி . ஆர் நடித்து டி.எம்.எஸ் பாடிய பாடல்களையே நினைத்துக் கொண்டிருந்துவிட்டேன் ஐயா!!!
டி.எம்.எஸ் பாடல்கள் என்பதனால் இன்று என் தோழிகள் பாடல்கள் பாடமுடியாது.
வேண்டுமானால் என் தோழிகளைப் பார்த்து டி.எம்.எஸ் இப்படி பாடுவார்.....
உமாவைப் பார்த்து - திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ நீ தென் பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ
ஸ்ரீஷோபனாவைப் பார்த்து - ஐ வில் சிங் ஃபார் யு, ஐ வில் டான்ஸ் ஃபார் யு, ஆட்டமென்ன சொல்லடி தோழி நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி
கலையைப் பார்த்து - நாடு அதை நாடு..அதை நாடாவிட்டால் ஏது வீடு பாடும் பொழுதெல்லம் அதையே பாடு
பார்வதியைப் பார்த்து - மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடானுகோடி தருக
மற்றவர்களையும் விடமுடியாது, KMRK ஐயாவும் நீங்களும் பாடிமுடித்து விட்டீர்கள் , அதனால் மற்றவர்கள் ....
தஞ்சாவூர் ஐயா - பாப்பா பாட்டு பாடிய பாரதி நான் தானே, நான் பாடிய பாட்டை மீண்டும் கேட்க வந்தேனே உயிர் கொண்டு வந்தேனே (இருகோடுகள் படம்)
அய்யர் ஐயா - கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது
குறிப்பிட்ட அனைத்தும் டி.எம்.எஸ் பாடல்கள்தான்/////

எல்லாம் அருமையாக உள்ளன! சீக்கிரம் கானொளிகள் வந்து சேரும் என்று நம்பலாம்.
உங்களை விட்டுவிட்டீர்களே!
உங்களுக்கான டி.எம்.எஸ் பாடல்:

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - உலகம்
அறிந்திடாத பிறவியம்மா நீ!

Parvathy Ramachandran said...

//பார்வதியைப் பார்த்து - மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடானுகோடி தருக//

ஹை! பாட்டு நல்லா இருக்கே.
இது நான் தேமொழியைப் பார்த்து, டி.எம்.எஸ் குரலில் பாடும் பாட்டு,

" ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்"

எந்த இடத்திலும் மின்னி ஒளிரும் தங்களது தனித்தன்மையை குறிக்கவே இப்பாடலைத் தேர்வு செய்தேன். நன்றி.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

நல்லதொருப் பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் புகழ் தமிழ் உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...
நமது சகோதரிகள் மிகவும் அருமையாக அவரின் பெருமைகளை மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக கூறி இருக்கிறார்கள்.. படித்து வியந்தேன்... அவர்களின் ரசிப்புத் தன்மையையும் சகோதிரி தேமொழி அவர்களின் சிறு பிள்ளை துணிச்சலையும் பார்த்து.

நானும் இது போன்று திண்ணையிலேயும் தெருவிலேயும் கூத்து செய்ததுண்டு அவைகளை எல்லாம் மீண்டும் நினைவுக்கு கொண்டு வைத்தீர்கள்

/////கரும்பு தின்னக் கூலி?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்/////

ஹா! ஹா! ஹா!!!.... நீங்கள் எண்ணப் பாவம் செய்தால் அந்தக் காட்சியைக் காண விரும்புவீர்கள்:):)

எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் (ரசிப்பேன்) அதை என்னைச் செய்ய தேர்ந்தெடுத்தது தான்?! நீங்கள் யாவரும் ஏமார்ந்துப் போவீர்கள் வேறென்ன சொல்ல முடியும். ஒருவேளை பெரிய டான்ஸ் மாஸ்டர் வந்தால் அவரோட டான்சை அவரே மறந்து விடுவார்.

இருந்தாலும் ஒரு நற் செய்தி... எனக்குப் பதில் எனது பிள்ளை சிங்கை தொலைக் காட்சியில் கலக்கிக் கொண்டு இருக்கிறான். நான் செய்யாததை அவன் செய்வதால் பூரித்து நிற்கிறேன் நீங்களும் கண்டு களிக்கவும்.. நிகழ்ச்சியின் ஆரம்பப் பாடல்களில் வருபவர் தான் அவர்:):)
இதோ லிங்க் பாருங்கள்.. மற்றவரை 'யூ டுபிள்' பதிவிறக்கம் செய்த பிறகு லிங்கை தருகிறேன்.

http://video.xin.msn.com/watch/video/episode-38/1tnl3x3hj

http://video.xin.msn.com/watch/video/episode-22/1tnhbxr7u

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

கிருஷ்ணன் சார் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்... மருந்துகளையும் வேளாவேளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

SP.VR. SUBBAIYA said...

//// Parvathy Ramachandran said...
//பார்வதியைப் பார்த்து - மஞ்சள் முகமே வருக மங்கள விளக்கே வருக கொஞ்சும் தமிழே வருக கோடானுகோடி தருக//
ஹை! பாட்டு நல்லா இருக்கே.
இது நான் தேமொழியைப் பார்த்து, டி.எம்.எஸ் குரலில் பாடும் பாட்டு,
" ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்"
எந்த இடத்திலும் மின்னி ஒளிரும் தங்களது தனித்தன்மையை குறிக்கவே இப்பாடலைத் தேர்வு செய்தேன். நன்றி.////

உண்மைதான். அவருடைய பன்முகத் திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முருகப்பெருமான் அருளால அவர் பெருமையை இவ்வுலகத்தோர் ஓரு நாள் அறிய வேண்டும். அந்த நாள் விரைந்து வரவேண்டும். அன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் பதிவை நான் வலை ஏற்ற வேண்டும். முதல் பின்னூட்டத்தை நீங்கள் எழுத வேண்டும். நன்றி சகோதரி!

seethalrajan said...

National award tms not get but he is only sing our tamil national song(NEERADUM KADALUDUTHA.

தேமொழி said...

///எந்த இடத்திலும் மின்னி ஒளிரும் தங்களது தனித்தன்மையை குறிக்கவே இப்பாடலைத் தேர்வு செய்தேன்.///

நன்றி பார்வதி

///உண்மைதான். அவருடைய பன்முகத் திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முருகப்பெருமான் அருளால அவர் பெருமையை இவ்வுலகத்தோர் ஓரு நாள் அறிய வேண்டும். அந்த நாள் விரைந்து வரவேண்டும். அன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் பதிவை நான் வலை ஏற்ற வேண்டும். முதல் பின்னூட்டத்தை நீங்கள் எழுத வேண்டும். நன்றி சகோதரி! ///

நன்றி ஐயா உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் நடக்காமலா போய்விடும். உங்கள் பின்னோட்டம் மிகவும் நெகிழ்வைத் தந்தது.
"காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" அப்படின்னு வேண்டிகிட்டா எல்லாம் நடக்கும்தானே :)))))

Thanjavooraan said...

இன்று ஆசிரியர் ஐயாவின் வகுப்பறை மாணவர்களின் துடிப்பைப் போல வேறு எவருக்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஐயா வெளியிடும் ஒவ்வொரு பதிவுக்கும் ஏராளமான பின்னூட்டங்களிலிருந்து வகுப்பறை எவ்வளவு தூரம் மக்களைக் கவர்ந்திழுக்கிறது என்பது புரிகிறது. கிழவர்கள் உட்பட இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்துபோகும் அறை இந்த வகுப்பறை. இது தொடரட்டும், வளரட்டும், வாழ்த்துக்கள். வகுப்பறைக்குள் வந்ததால் பிரபலமடைந்தோர் ஏராளம். அதில் அடியேனும் ஒருவன். டி.எம்.எஸ். அவர்களின் சில அபூர்வமான புகைப் படங்கள் என்னுடைய கணிப்பொறியில் பிக்காசாவில் சேமித்து வைத்திருக்கிறேன். இப்போது நான் வெளியூரில் இருப்பதால் அதை எடுத்து வெளியிடமுடியவில்லை. ஊர் திரும்பியதும் அந்தப் படங்களை ஆசிரியர் ஐயாவுக்கு அனுப்பி வைக்கிறேன். 1957இல் டி.எம்.எஸ்.பிரபலமடைந்து கொண்டிருந்த நேரம். திருச்சியில் பணியாற்றி வந்தேன். அப்போது என் அறைக்குப் பக்கத்து அறையில் திருச்சி வானொலி நிலைய வயலின் வித்வான் திருகோகர்ணம் உலகனாத பிள்ளை இருந்தார். திருச்சி வானொலி நிலையத்தில் ஒரு இசை விழா. டி.எம்.எஸ்.பாடுகிறார் அவசியம் மாலை வரவேண்டும் என்று அழைத்தார். நண்பர்கள் பலர் சென்றோம். அங்கு நிலைய இயக்குனர் அறை வாயிலில் நின்று கொண்டிருந்த போது டி.எம்.எஸ்.பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் குள்ளமாக வந்து வெற்றிலை போட்ட வாயை தண்ணீர் விட்டுக் கொப்பளித்தார். நாங்கள் டி.எம்.எஸ்.ஐ ஒருமையில் என்னமா பாடறான்யா, என்ன குரல் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். வாய் கொப்பளித்தவர்தான் டி.எம்.எஸ். என்று அவரை மேடையில் பார்த்தபொதுதான் தெரிந்தது. நாங்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தும் சிரித்துக் கொண்டே போன அவரது பெருந்தன்மையை என்னவென்போம். நூறாண்டு வாழட்டும் அவர்.

Parvathy Ramachandran said...

//உண்மைதான். அவருடைய பன்முகத் திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முருகப்பெருமான் அருளால அவர் பெருமையை இவ்வுலகத்தோர் ஓரு நாள் அறிய வேண்டும். அந்த நாள் விரைந்து வரவேண்டும். அன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் பதிவை நான் வலை ஏற்ற வேண்டும். முதல் பின்னூட்டத்தை நீங்கள் எழுத வேண்டும்.//

'அந்த நாளும் வந்திடாதோ' என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். திறமையிருப்போரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. "மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் வீசுவதை மின்மினிகள் தடுத்திட" முடியாது.

'காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து,
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து,
நாளை நமதே!'

தேமொழி said...

தொலைக்காட்சியில் நடன நிகழ்சியைப் பார்த்தேன் சகோதரரே, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

உன்ன மட்டும் புடிக்குது கோவிந்த்
உன் ஆட்டம் மட்டும் புடிக்குது

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

////தேமொழி said...
தொலைக்காட்சியில் நடன நிகழ்சியைப் பார்த்தேன் சகோதரரே, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.

உன்ன மட்டும் புடிக்குது கோவிந்த்
உன் ஆட்டம் மட்டும் புடிக்குது////

Thank you so much aunty.

Govindh Sudhan Alasiam

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
நல்லதொருப் பாடகர் டி.எம்.எஸ் அவர்களின் புகழ் தமிழ் உலகம் உள்ளவரை நிலைத்து இருக்கும்...
நமது சகோதரிகள் மிகவும் அருமையாக அவரின் பெருமைகளை மிகவும் உணர்ச்சிப் பூர்வமாக கூறி இருக்கிறார்கள்.. படித்து வியந்தேன்... அவர்களின் ரசிப்புத் தன்மையையும் சகோதிரி தேமொழி அவர்களின் சிறு பிள்ளை துணிச்சலையும் பார்த்து.
நானும் இது போன்று திண்ணையிலேயும் தெருவிலேயும் கூத்து செய்ததுண்டு அவைகளை எல்லாம் மீண்டும் நினைவுக்கு கொண்டு வைத்தீர்கள்
/////கரும்பு தின்னக் கூலி?
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்/////
ஹா! ஹா! ஹா!!!.... நீங்கள் எண்ணப் பாவம் செய்தால் அந்தக் காட்சியைக் காண விரும்புவீர்கள்:):)
எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் (ரசிப்பேன்) அதை என்னைச் செய்ய தேர்ந்தெடுத்தது தான்?! நீங்கள் யாவரும் ஏமார்ந்துப் போவீர்கள் வேறென்ன சொல்ல முடியும். ஒருவேளை பெரிய டான்ஸ் மாஸ்டர் வந்தால் அவரோட டான்சை அவரே மறந்து விடுவார்.
இருந்தாலும் ஒரு நற் செய்தி... எனக்குப் பதில் எனது பிள்ளை சிங்கை தொலைக் காட்சியில் கலக்கிக் கொண்டு இருக்கிறான். நான் செய்யாததை அவன் செய்வதால் பூரித்து நிற்கிறேன் நீங்களும் கண்டு களிக்கவும்.. நிகழ்ச்சியின் ஆரம்பப் பாடல்களில் வருபவர் தான் அவர்:):)
இதோ லிங்க் பாருங்கள்.. மற்றவரை 'யூ டுபிள்' பதிவிறக்கம் செய்த பிறகு லிங்கை தருகிறேன்.
http://video.xin.msn.com/watch/video/episode-38/1tnl3x3hj
http://video.xin.msn.com/watch/video/episode-22/1tnhbxr7u////

சுட்டி கிளப் வீடியோ க்ளிப்பிங் - கோவிந்த் - ஸ்நேகா இருவரின் ஆட்டம் பாட்டம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி ஆலாசியம். இப்போதுதான் இந்த வசதி எல்லாம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லையே என்ற ஏக்கமும் கூடவே தொக்கி நிற்கிறது ஆலாசியம்! பகிர்விற்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

///தமிழ் விரும்பி ஆலாசியம் said...
கிருஷ்ணன் சார் உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்... மருந்துகளையும் வேளாவேளைக்கு எடுத்துக் கொள்ளுங்கள்./////

ஏன் என்ன ஆச்சு சுவாமி, அவருக்கு?

SP.VR. SUBBAIYA said...

///// seethalrajan said...
National award tms not get but he is only sing our tamil national song(NEERADUM KADALUDUTHA./////

தகவலுக்கு நன்றி சகோதரரே!

Uma said...

டி.எம்.எஸ் ஒரு சிறந்த கம்பீரமான குரல்வளம் உடைய பாடகர்.

அவர் பாடியதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களைத் தவிர, யாருக்காக இது யாருக்காக, வீடுவரை உறவு, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், என்னடி ராக்கம்மா, கண்போன போக்கிலே கால் போகலாமா என்று பிடித்தமான பாடல்கள் நிறைய உள்ளன. இருந்தும் ஆல் டைம் பேவரிட் பாடல்கள் 'முத்தைத்திரு அத்தித் திருநகை' மற்றும் 'பாட்டும் நானே பாவமும் நானே'.

அவரைப்பற்றிய இந்த லிங்கை விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்:

http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1951

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
///எந்த இடத்திலும் மின்னி ஒளிரும் தங்களது தனித்தன்மையை குறிக்கவே இப்பாடலைத் தேர்வு செய்தேன்.///
நன்றி பார்வதி
///உண்மைதான். அவருடைய பன்முகத் திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முருகப்பெருமான் அருளால அவர் பெருமையை இவ்வுலகத்தோர் ஓரு நாள் அறிய வேண்டும். அந்த நாள் விரைந்து வரவேண்டும். அன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் பதிவை நான் வலை ஏற்ற வேண்டும். முதல் பின்னூட்டத்தை நீங்கள் எழுத வேண்டும். நன்றி சகோதரி! ///
நன்றி ஐயா உங்கள் ஆசீர்வாதம் இருந்தால் நடக்காமலா போய்விடும். உங்கள் பின்னோட்டம் மிகவும் நெகிழ்வைத் தந்தது.
"காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" "காயத்திரி" அப்படின்னு வேண்டிகிட்டா எல்லாம் நடக்கும்தானே :)))))/////

இத்தனை தடவை காயத்திரி சொன்னால், தேவியே பிரசன்னமாகி விடுவார்! "தேவிகண்ட தேமொழி" என்று உங்கள் பெயரை உலக்த்தோர் சொல்வார்கள்!
அப்படிச் சொல்ல வாழ்த்துக்கள்!

Parvathy Ramachandran said...

சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கு,

குழந்தை கோவிந்த் மிக அருமையாக ஆடியிருக்கிறான். எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இன்னொரு விஷயம், சிங்கைத் தொலைக்காட்சியில், பேசும் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் தங்கள் மகனின் நடனம் போலவே மிக அருமை, அழகு.

SP.VR. SUBBAIYA said...

///// Thanjavooraan said...
இன்று ஆசிரியர் ஐயாவின் வகுப்பறை மாணவர்களின் துடிப்பைப் போல வேறு எவருக்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. ஐயா வெளியிடும் ஒவ்வொரு பதிவுக்கும் ஏராளமான பின்னூட்டங்களிலிருந்து வகுப்பறை எவ்வளவு தூரம் மக்களைக் கவர்ந்திழுக்கிறது என்பது புரிகிறது. கிழவர்கள் உட்பட இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் வந்துபோகும் அறை இந்த வகுப்பறை. இது தொடரட்டும், வளரட்டும், வாழ்த்துக்கள். வகுப்பறைக்குள் வந்ததால் பிரபலமடைந்தோர் ஏராளம். அதில் அடியேனும் ஒருவன். டி.எம்.எஸ். அவர்களின் சில அபூர்வமான புகைப் படங்கள் என்னுடைய கணிப்பொறியில் பிக்காசாவில் சேமித்து வைத்திருக்கிறேன். இப்போது நான் வெளியூரில் இருப்பதால் அதை எடுத்து வெளியிடமுடியவில்லை. ஊர் திரும்பியதும் அந்தப் படங்களை ஆசிரியர் ஐயாவுக்கு அனுப்பி வைக்கிறேன். 1957இல் டி.எம்.எஸ்.பிரபலமடைந்து கொண்டிருந்த நேரம். திருச்சியில் பணியாற்றி வந்தேன். அப்போது என் அறைக்குப் பக்கத்து அறையில் திருச்சி வானொலி நிலைய வயலின் வித்வான் திருகோகர்ணம் உலகனாத பிள்ளை இருந்தார். திருச்சி வானொலி நிலையத்தில் ஒரு இசை விழா. டி.எம்.எஸ்.பாடுகிறார் அவசியம் மாலை வரவேண்டும் என்று அழைத்தார். நண்பர்கள் பலர் சென்றோம். அங்கு நிலைய இயக்குனர் அறை வாயிலில் நின்று கொண்டிருந்த போது டி.எம்.எஸ்.பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒருவர் குள்ளமாக வந்து வெற்றிலை போட்ட வாயை தண்ணீர் விட்டுக் கொப்பளித்தார். நாங்கள் டி.எம்.எஸ்.ஐ ஒருமையில் என்னமா பாடறான்யா, என்ன குரல் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தோம். வாய் கொப்பளித்தவர்தான் டி.எம்.எஸ். என்று அவரை மேடையில் பார்த்தபொதுதான் தெரிந்தது. நாங்கள் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தும் சிரித்துக் கொண்டே போன அவரது பெருந்தன்மையை என்னவென்போம். நூறாண்டு வாழட்டும் அவர்./////

உங்களின் பாராட்டிற்கு நன்றி. நான் எளியவன். முருகன் என்னை எழுதப் பணித்திருக்கிறான். இததனைபேர்களை அனுப்பியதும்/ அனுப்பிக் கொண்டிரு ப்பதும் அவன்தான். என்னுடைய பங்களிப்பு வெறும் உழைப்பு மட்டும்தான்!

படங்களை அனுப்புங்கள் ஐயா, வந்த்தும் வலை ஏற்றிவிட ஆர்வமாக உள்ளேன்!

SP.VR. SUBBAIYA said...

//// Parvathy Ramachandran said...
//உண்மைதான். அவருடைய பன்முகத் திறமைகளைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது. முருகப்பெருமான் அருளால அவர் பெருமையை இவ்வுலகத்தோர் ஓரு நாள் அறிய வேண்டும். அந்த நாள் விரைந்து வரவேண்டும். அன்றைய தினம் ஒரு ஸ்பெஷல் பதிவை நான் வலை ஏற்ற வேண்டும். முதல் பின்னூட்டத்தை நீங்கள் எழுத வேண்டும்.//
'அந்த நாளும் வந்திடாதோ' என்று ஆவலுடன் காத்திருக்கிறேன். திறமையிருப்போரின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. "மூன்றாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் வீசுவதை மின்மினிகள் தடுத்திட" முடியாது.
'காலங்கள் என்னும் சோலைகள் மலர்ந்து,
காய் கனியாகும் நமக்கென வளர்ந்து,
நாளை நமதே!'/////

வடமொழி சுலோகங்களில் மட்டுமல்ல, திரையிசைப் பாடல் வரிகளை நினைவு கூர்ந்து சொல்வதிலும் விற்பன்னராக இருக்கிறீர்கள் சகோதரி. உங்கள் திறமையையும் உலகம் அறியும் நாள் வரட்டும். முருகனைப் பிரார்த்திக்கின்றேன்!

SP.VR. SUBBAIYA said...

//// தேமொழி said...
தொலைக்காட்சியில் நடன நிகழ்சியைப் பார்த்தேன் சகோதரரே, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
உன்ன மட்டும் புடிக்குது கோவிந்த்
உன் ஆட்டம் மட்டும் புடிக்குது////

கோவிந்தா! கோவிந்தா! - இது திருமலையானை அழைக்கக் கொடுத்த குரல்! அவர் அருளால் சிறுவன் வளர்ந்து பிரபலமாகட்டும்!

Uma said...

இது உமா அக்கா (வகுப்பில் சீனியர்) சொல்வதாக...
தூங்காதே தூங்காதே கலை தங்கை தூங்காதே
வாத்தியார் அடிப்படை பாடம் படிக்கும் போது தூங்காதே......//

ஹா ஹா

Uma said...

உமாவைப் பார்த்து - திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ நீ தென் பாங்கு திருமகளோ பண்பாடும் குலமகளோ//

ஏ...............ன், நல்லாதானே போய்க்கிட்டிருக்கு?????????

Uma said...

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ - உலகம்
அறிந்திடாத பிறவியம்மா நீ!//

வாத்தியாரின் பாடல் சாய்ஸ் சுபெர்ப்.

SP.VR. SUBBAIYA said...

//// Uma said...
டி.எம்.எஸ் ஒரு சிறந்த கம்பீரமான குரல்வளம் உடைய பாடகர்.
அவர் பாடியதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடல்களைத் தவிர, யாருக்காக இது யாருக்காக, வீடுவரை உறவு, கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், என்னடி ராக்கம்மா, கண்போன போக்கிலே கால் போகலாமா என்று பிடித்தமான பாடல்கள் நிறைய உள்ளன. இருந்தும் ஆல் டைம் பேவரிட் பாடல்கள் 'முத்தைத்திரு அத்தித் திருநகை' மற்றும் 'பாட்டும் நானே பாவமும் நானே'.
அவரைப்பற்றிய இந்த லிங்கை விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்:
http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=1951////

தகவல் பகிர்விற்கும், உங்களின் பின்னூட்த்திற்கும் நன்றி உமாஜி!

Uma said...

எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் //

அது தெரிஞ்சுதான் உங்களுக்கேத்த பாடலா தேர்வு செய்திருக்கிறார். உங்களை சுத்தி இருக்கும் குழந்தைகள் ஆடினால் போதும். நீங்கள் அவர்களைப்பார்த்து கையைக்காட்டிக்கொண்டும் / தூக்கி வைத்துக்கொண்டும் பாடலாம் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'.................

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

////சுட்டி கிளப் வீடியோ க்ளிப்பிங் - கோவிந்த் - ஸ்நேகா இருவரின் ஆட்டம் பாட்டம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி ஆலாசியம். இப்போதுதான் இந்த வசதி எல்லாம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லையே என்ற ஏக்கமும் கூடவே தொக்கி நிற்கிறது ஆலாசியம்! பகிர்விற்கு நன்றி!/////

மிக்க நன்றி ஐயா! உண்மை தான் இன்றைய வசதிகள் அன்றில்லாதது இன்னும் நிறையக் கலைஞர்களை உலகம் பார்க்க நேராமல் போய்விட்டது....
"ஏக்கம் கூடவே தொக்கி நிற்கிறது"
:):) நிச்சயமாக ஐயா! நானும் தங்களைப் போலவே!

நான் தொலைக் காட்சியில் வந்த 'விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்து பெரிதும் ஏங்கி இருக்கிறேன்.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

// Parvathy Ramachandran said...
சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கு,

குழந்தை கோவிந்த் மிக அருமையாக ஆடியிருக்கிறான். எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இன்னொரு விஷயம், சிங்கைத் தொலைக்காட்சியில், பேசும் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் தங்கள் மகனின் நடனம் போலவே மிக அருமை, அழகு.////

தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள் சகோதரியாரே!

உண்மை தான் சரியாக தமிழைப் பேச, எழுதப் பெரும் முயற்சிகளைத் தமிழார்வலர்களும் அரசாங்க உதவியுடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

//////SP.VR. SUBBAIYA said...
//// தேமொழி said...
தொலைக்காட்சியில் நடன நிகழ்சியைப் பார்த்தேன் சகோதரரே, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
உன்ன மட்டும் புடிக்குது கோவிந்த்
உன் ஆட்டம் மட்டும் புடிக்குது////

கோவிந்தா! கோவிந்தா! - இது திருமலையானை அழைக்கக் கொடுத்த குரல்! அவர் அருளால் சிறுவன் வளர்ந்து பிரபலமாகட்டும்!///

ஆஹா! மிக்க நன்றிகள் ஐயா!

அதிசயம் என்ன வென்றால்... இங்கு தொலைக் காட்சியில் "அறிவாளி" படம் சிவாஜி - பானுமதி படம் போய்க் கொண்டிருக்கிறது...

இந்த பின்னோட்டம் இட்ட போது தேனிலவு சென்றக் காட்சி.... சிவாஜி பேஸ், பேஸ் மங்களம் உண்டாகட்டும் என்று பேசிய வசனம் என் காதுகளில் கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.

தங்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றிகள் ஐயா!

VCTALAR said...

அனைத்துப் பாடல்களும் அருமை. திரு. T.M.S.அவர்களின் குரலும், பாடல் வரிகளும் , இசையும் அந்தக் காலம் அந்தக் காலம் தான். நான் 40 முதல் 50 வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்தவை. நன்றி பல.

அருணாசலம்.

முருகராஜன் said...

பல ஆயிரக்கணக்கான பாடலை பாடி தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர் டி.எம்.எஸ்,
அதிலிருந்து அடிக்கடி கேட்டு ரசித்து பாடக்ககூடிய பத்து பாடல்களை பதிவிட்டு அசத்திய வத்தியார் ஐயாவிற்கு நன்றிகள்,

முகப்பில் அம்மணியின் படம் போட்டு அச‌த்தியுள்ளிர் அம்மணி தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம்!

பெயர் தெரிய ஆவாலக உள்ளது சொன்னால் மிக்க மகிழ்ச்சி!

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
ஆஹா...தமிழ் திரைத்துரையில் சிறந்த பாடகரை அறியாதவரும் இருக்க முடியுமோ?அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் அளவிற்கு தனித்துவமிக்க குரல்வளம் கொண்டவர் டி.எம்.எஸ்.அவர்கள் தான்...அவரது முகம் அறிந்திடாத வயதில் அவரது பாடல்களை எப்பொழுதும் பாடிக் கொண்டே இருப்பேன்...என் தந்தை வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது வானொலியில் 'கேசட்'டை திருப்பிப் போடுவது தான் என் வேலை,அதனால் பழைய படங்களின் பாடல்கள் பல எனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும்...இன்னும் சொல்ல போனால் எனக்கு புதிய பாடல்களை விட பழைய பாடல்களின் வரிகள் தான் பரிச்சயம்...

எம்.ஜி.ஆர்க்கு ஒரு தோனியிலும்,சிவாஜி கணேசனுக்கு வேறு விதமாகவும் பாடும் வித்தியாசத்தை நான் அவர் பாடும் பாடல்களில் அடிக்கடி கவனிப்பேன்...டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் பெரும்பாலான பாடல்கள் எனக்கு பிடிக்கும்...அவற்றை பத்து பாடல்களில் அடக்க இயலாது,அதை கொண்டு வந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா...

எனக்கு சோகப் பாடல்கள் தான் அதிகம் பிடிக்கும்...ஆதலால் 'எங்கே நிம்மதி','சட்டி சுட்டதடா','போனால் போகட்டும் போடா' பாடல்கள் பின்பு திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும் நானே...'என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...சிவனின் உருவாகவே நடித்திருப்பார் நடிகர் திலகம்...

டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலிலிருந்து மிகவும் இதமான பாடலான 'யார் அந்த நிலவு...' பாடலில் மிகவும் அருமையாக பாடியிருப்பார்...இன்றும் நான் அடிக்கடி பாடும் பாடல் இது தான்...பிறகு 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை' கண்ணதாசன் அவர்களின் பாடலின் வரிகளும் டி.எம்.எஸ் அவர்களின் குரலும் சேர்ந்து இப்பாடலை இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமையாகவே இனிக்கும்...இன்றும் எங்கள் வீட்டில் இப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்தால் அனைவரும் அமர்ந்து ரசிப்போம்...நல்லதொரு அருமையான கலைஞரின் படைப்புகள் காலத்தால் என்றும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன் என்பதற்கு இது போன்ற 'மலரும் நினைவுகளை'கொண்டு வரும் வாத்தியார் ஐயாவின் ஆக்கமும் அதற்கு கிடைக்கும் பின்னூட்டங்களுமே ஆதரமாய் அமைகின்றன...நல்ல அருமையான ஆக்கத்தை தந்தமைக்கு நன்றி ஐயா...

R.Srishobana said...

//நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு - கண்ணன்
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று - மைனர்
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் - தனுசு
மின்மினியை கண்மணியாய் கொண்டவளை - துபாய் சரவணா
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - எஸ். சந்திரசேகரன்//

ஆஹா...அன்று மாணவர் மலரில்...இன்று மாணவர்கள் மலர பின்னூட்டத்தில்!!!...தேமொழி சகோதரியின் கற்பனைகளுக்கு உண்மையில் "வானமே எல்லை"...கலக்கிட்டீங்களே மறுபடியும்...இதை இப்படி தலைப்பில் கொடுங்கள் "தேமொழியின் கலக்கலான கலாய்ப்புகள் ரீலோடடு"...ஹிஹிஹி...

Ananthamurugan said...

இன்று விஜய் tv இல் சிகரங்களின் சங்கமம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் திரு.Tms,kj.யேசுதாஸ்,BP.SRINIVAS,VANI JEYARAM,BALAMURALI KRISHNA, hariharan,MANO, மற்றும் பலரின் பங்களிப்பு இருந்தது.சுசீலா அவர்களின் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற,இந்நிகழ்ச்சி,உங்களின் பதிவும் ஒன்றுகொன்று எது சூப்பர் என கேட்க தூண்டுகிறது.உன்னை அறிந்தால்!!!நீ உன்னை அறிந்தால்!!!,பாட்டும் நானேபாடலும் நானே!!!அருமை!!!!

thanusu said...

TMS அவர்களைப் பற்றி சொல்ல நினைத்ததை தட்டச்சு செய்விட்டு காபி செய்து கமான்ட்சில் பேஸ்ட் செய்துவிட்டு, அனுப்பாமல் வந்த பின்னூட்டங்களை அப்படியே படித்தேன் . நான் சொல்ல வந்ததை தான் பார்வதி அவர்களும் மற்றவர்களும் சொல்லி உள்ளார்கள் .ஆகவே நான் புதிதாக எழுத ஒன்னும் இல்லை இங்கு.

MGR SIVAJAIKANESAN ஆகியோரின் படங்கள் யாருக்கு பிடிக்கிறதோ அவர்களுக்கு TMS பாடல்கள் கண்டிப்பாக .
பிடிக்கும் .

திரை இசை குரல்கள் பகுதி வரும்போதே நான் எதிர் பார்த்த குரல்கள் TMS, C.S.ஜெயராமன் ,சுசிலா.

எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எம்ஜிஆருக்காக அவர் பாடிய அவரின் கொள்கை பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் .

R.Srishobana said...

//ஸ்ரீஷோபனாவைப் பார்த்து - ஐ வில் சிங் ஃபார் யு, ஐ வில் டான்ஸ் ஃபார் யு, ஆட்டமென்ன சொல்லடி தோழி நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி//

ஆஹா...எனக்கு துள்ளலான பாடலா!!!...சூப்பரான தேர்வு...ஆட்டம் தானே!!!தேமொழி சகோதரிக்கும் மிகவும் பிடித்த ஆட்டம் "மூன் வாக்" தான்...வேறெதுவாக இருக்க முடியும்...ஹிஹிஹி...

ஆலாசிய‌ம் அவ‌ர்க‌ளின் ம‌கனின் காணொலியை ச‌ரியாக‌க் காண‌ இய‌ல‌வில்லை...மன்னிக்கவும்...Bsnl Broadband யின் தொ(ல்)லைத்தொட‌ர்பு சேவையின்(???!!!) ம‌கிமையே ம‌கிமை தான்...

ஐயா,ப‌டித்தில் இருப்ப‌வ‌ர் யார் என்று என‌க்கு ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை...பின்னூட்டங்களிலும் எந்த ஒரு 'க்ளு'வும் கிடைக்கவில்லை...ஐயா தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்...

thanusu said...

தேமொழி said... வெளிநாட்டில் வாழும் நம் வகுப்பறை தோழர்களும் இதுபோல் பாடி ஆடி வெளியிட்டால் நன்றாக இருக்குமே, எங்கே தனுசு, ஆலாசியம், மைனர், கண்ணன்

என் இந்த விபரீத ஆசை .

நான் சிறுவனாக இருந்த காலத்தில் மிகவும் நன்றாக டான்ஸ் ஆடுவேன்.நினைத்தாலே இனிக்கும் படப் பாடல் களுக்கும் . என்னடி மீனாச்சி பாட்டுக்கும் டிஸ்கோ டான்சர் படத்தி மிதுன் சக்ரவர்த்தி போலும் ஆடுவேன் . பள்ளியில் என்னை ஆடவிட்டு வாத்த்தியார் , டீச்சர் எல்லோரும் ரசித்துருக்கிரார்கள்.

அதில் என்னால் மறக்க முடியாத ஆட்டம்ஒன்று .என் உறவினர் வீட்டு கல்யாணத்தில் மேடை கச்சேரி நடக்கிறது ."எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்"பாட துவங்கினார்கள் , நான் ஆட துவங்கினேன் , மேடையில் ஏற்றி விட்டார்கள் , செம குத்து என்று இப்போது சொல்வோமே அதுபோல் ஒரு ஆட்டம் . பாடல் முடிந்தது , கைதட்டலும் கிளம்பி அடங்கியது ,ஆனால் என் ஆட்டம் மட்டும் அடங்க வில்லை , அதற்குள் மேடையில் வேறு பாடல் துவங்கி விட்டார்கள் , அது எங்கே நிம்மதி .. எங்கே நிம்மதி ,என் ஆட்டம் அதே வேகத்திலிருந்து குறையவே இல்லை , பார்த்தார் மேடை கச்சேரி நடத்துபவர் , வாத்தியங்களை இசைப்பவர்களைப் பார்த்து , அந்த பையனின் ஆட்ட வேகத்துக்கு அடியுங்கள் டியூன்மாறினால் பரவாஇல்லை என்றார், படிக் கொண்டு இருந்தவரையும் பார்த்து ஸ்பீட் பிட்டில் பாடுங்கள் என்றார், பிறகென்ன எங்கே நிம்மதி பாடலும் குத்து பாட்டு ரேஞ்சுக்கு கேட்டு மகிழ்ந்தார்கள் வந்த விருந்தினர்கள் .

Maaya kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

ஒரு உண்மை சம்பவத்தை சிறிய வயதில் கேட்ட ஞாபகத்தை வைத்து தங்களிடம் ஒரு கேள்வி ஐயா

ஸ்ரீ வில்லி புத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறுவார்கள் ஐயா .
அதாவது
" பாச மலர்கள் ", படத்தில் இருந்த " அண்ணன் தங்கை",

உறவுகள் இல்லாத ஒரு குடுப்பம் ஐயா.

தங்கை கணவனை இழந்தவள் அவளுடைய ஒரே சொத்து என்னை போன்ற சராசரியான ஒரு ஆண் மகன் .தனது தனி திறமையால் . பெரும் செல்வத்தை உண்டாக்கும் திறமை இல்லாத ஒரு சராசரியான பாவ பட்ட ஒரு மகன்.

தங்கை ஆனவள் தமது வயது மூர்ப்பு அதிகம் ஆவதையும் மேலும் அடிக்கடி உடல் உபாதைகள் வருவதை உணர்தவள் தமது மகனுக்கு கல்யாணம் செய்ய தீர்மானித்தாள்.

ஆனள் அந்த கால கட்டத்தில் பெண்ணுக்கு அல்லது பெண் வீட்டு காரருக்கு பொன் பொருள் கொடுத்தால் தான் பெண் தருவார்கள் கல்யாணமும் செய்ய முடியும் .

சரி கதைக்கு வருவோம் ஐயா!

தனக்கு என்று இருந்த ஒரே ஒரு ஆறுதல் என்ன வென்றால் தன்னுடன் பிறந்த அண்ணன் தான் . அண்ணனுக்கு மொத்தம் 5 பெண்கள் . அதனில் மூத்த இரண்டு பெண்ணுக்கு கல்யாணம் ஆகி விட்டது . மீதம் இருந்ததோ மூன்று பெண்கள். மேலும் அண்ணனுக்கு என்று சொல்ல முடியாத அளவிற்கு சொத்து சுகம் வேறு உண்டு .

தங்கை ஆனவள் தனது மகனை அழைத்துக்கு சென்று அண்ணனிடம் ஒப்படைத்து விடுகின்றாள் . இவனை ஆளாக்கி ஒரு மனிதனாக விட வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று அண்ணனும் உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகின்றேன் என்று கூறி விடுகின்றார்

தங்கையையும் தங்கை மகனையும் தன்னுடன் வைத்து கொள்கின்றார் . சில காலங்களில் உடல் நல கோளாறால் தங்கை இறைவன் அடி சென்று விடுகின்றாள் .

ஆண் மகனோ தாய் மாமன் வீட்டு வேலைகள் அனைத்தினையும் இழுத்து போட்டு செய்கின்றான் வீட்டு தொழுவில் உள்ள மாடுகளின் சாணத்தை அள்ளுவதில் இருந்து ஆனைத்து வேலைகளையும் சேர்த்து .

தாய் மாமனோ சொல்லுகின்றான் மூன்றாவது பெண் உனக்கு தான் என்கின்றார் .சிறிது காலம் செல்கின்றது ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு பெண்கேட்டு வருகின்றார் அவர்களுடைய வீட்டிற்கு மூன்றாவது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விட்டு தங்கை மகனிடம் நான்காவது பெண் உனக்கு தான் என்கின்றார் .

மூன்றாவது பெண்ணுக்கு நடந்ததை போலவே நான்காவது பெண்ணுக்கும் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் பெண் கேட்டு வர அவர்களுக்கு நான்காவது பெண்ணையும் கொடுத்து விடுகின்றார் ஐயா.

நம்ம ஆள் மாமன் கூறுவதை கோவில் மாடு தலையை ஆட்டுவது போல தலையை ஆட்டிவிட்டு அவனுடைய வேலைகளை எப்பொழுதும் போல செய்வனே செய்கின்றார் ஐந்தாவது பெண் தமக்கு தான் என்று .

நடந்த அனைத்து சம்பவத்தையும் கவனித்து கொண்டு வருகின்ற மிகவும் இறக்கம் உள்ள கடைசி பெண் தனது அத்தை மகனிடம் தனிபட்ட முறையில் பேசுகின்றாள் .

எனது தந்தை அத்தான் தங்களுடைய உழப்பை முழுவதும் ஏற்று கொண்டு
ஒவ்வொரு சாக்கு போக்கு கூறிக்கொண்டு தங்களுக்கு பெண் தராமல் ஒவ்வொன்றாக தட்டி கழித்து கொண்டு வருகின்றார் .

தங்களிடமோ பொன் பொருள் எதுவும் இல்லை ஆதலால் நாளைக்கு எனக்கு ஒரு செல்வந்தன் வீட்டில் இருந்து பெண்கேட்டு வருவார்கள் அவர்களுக்கு தான் என்னையும் கல்யாணம் செய்து கொடுக்க போகின்றார் . ஆதலால் தாங்கள் எமது தந்தையை நம்பாதிர்கள் நாம் இருவரும் வேறு எங்கையாவது சென்று கல்யாணம் செய்து கொண்டு உள்ளதை கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று கூற இருவரும் அன்றைய இரவிலே வீட்டை விட்டு கிளம்பி விடுகின்றனர் .

வெகு தூரம் நடந்தவர்கள் வழியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சற்று தங்கி விட்டு மீண்டும் போகலாம் என்று தீர்மானித்து உறங்குகின்றனர் சற்று இடைவெளி விட்டு ,

ஏனென்னில் கல்யாணம் ஆகுவதற்கு முன்னர் ஆடவரை தொட கூடாது என்ற சமுக கட்டு பாட்டின் படி.

காலதேவன் தனது விளையாட்டை நல்ல பாம்பின் வழியாக வந்து அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஆடவனை தீண்டி விட்டு சென்று விடுகின்றது .

அதிகாலை பொழுது வந்த உடன் மீண்டும் பயணத்தை தொடர எழுந்திருந்த பெண் தனது அத்தை மகனை பார்க்கின்றாள் அவனோ பாம்பின் விசத்தால் மாண்டு போகி விடுகின்றான் என்பதை அறிந்தவள் அழுது தொழுது இரத்த கண்ணிர் வடிக்கின்றாள் .

அத்தான் நான் என்ன பாவம் செய்தோனோ எனக்கே தெரிய வில்லை அத்தான் . தங்களை தொட்டு கட்டி பிடித்து கதறி அழ கூட நான் தகுதி அற்றவள் ஆகி விட்டேனே அத்தான் . நமக்கு கல்யாணம் ஆகி இருந்தால் எனக்கு அந்த பாக்கியம் ஆவது கிடைத்து இருக்கும் அத்தான் என்று கதறுகின்றாள் .

நிற்க

இதற்க்கு பின்னர் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது ஐயா தாங்களுக்கு தெரியுமா இந்த கதை ஐயா!

thanusu said...

தேமொழி அவர்களே ,சரி கேட்டு விட்டீர்கள் நானிருக்கும் சூழ்நிலையில் . என் BARGE லிருந்து RESCUE BOAT ஐ கடலில் இறக்கி மீனவர் ட்ரெஸ் பதிலாகவேலைக்கான COVERALL உடன் அதில் நான் அமர்ந்து

கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ

தனியாய் வந்தோர் துணிவை
தவிர துணையாய் வருபவர்ர் யாரோ

வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எண்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்கை .

O.K வா ஆனால் ஆட்டம் இருக்காது இதுல .

தமிழ் விரும்பி ஆலாசியம் said...

////Uma said...
எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் //

அது தெரிஞ்சுதான் உங்களுக்கேத்த பாடலா தேர்வு செய்திருக்கிறார். உங்களை சுத்தி இருக்கும் குழந்தைகள் ஆடினால் போதும். நீங்கள் அவர்களைப்பார்த்து கையைக்காட்டிக்கொண்டும் / தூக்கி வைத்துக்கொண்டும் பாடலாம் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'.................////

ஹா!ஹா!ஹா!

சரி இவ்வளவு தூரம் சொல்றீங்க! நடப்பது நடக்கட்டும்!:):)

V Dhakshanamoorthy said...

இன்றைய மனதை மயக்கிய குரல்கள் பகுதி மூலமாக,
திரு.T.M.செள்ந்தரராஜன் அவர்கள் பாடியுள்ள, என்றென்றும் மறக்கமுடியாத பாடல்களை
எல்லாம் மனக்கண்ணில் ஓடவிட்டு, அந்த அந்த பாடல்களுக்கும்
நடித்துள்ள நடிகர்களையும் நினைப்பதற்கும்,ரசிப்பதற்கும் வாய்ப்பு
ஏற்ப்படுத்திக்கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி!!

thanusu said...

ஆஹா........
பின்னூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் கொண்டே அதற்கு பதில் பின்னூட்டங்கள் தந்துக் கொண்டு வந்தேன் .வந்த இடத்தில்

தேமொழி said...அதோ அந்த பறவைப் போல ......

என்னுடைய பாடலை விட நீங்கள் எனக்காக தேர்ந்தெடுத்த பாடல் நன்றாக இருக்கிறது. என்னுடைய பாடல் சோகமானது, ஆனால் உங்களுடையது சந்தோஷ மானது. ஆகவே rescue boat ஐ பயன் படுத்தாமல் பக்கத்திலிருக்கும்
work boat ஐ பயன் படுத்திக் கொள் கிறேன் .

சரி சரி ஒரு டீமாய் இறங்கி வேலை பாற்கிராமாரி தெரியுது

thanusu said...

ஆலாசியம் அவர்களே இணைய பிரச்சினை காரணமாக தாங்கள் பையனின் ஆட்டம் காணமுடியவில்லை .கரை இறங்கும் போது கண்டிப்பாக பார்க்கிறேன் .

SP.VR. SUBBAIYA said...

//// Uma said...
எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் //
அது தெரிஞ்சுதான் உங்களுக்கேத்த பாடலா தேர்வு செய்திருக்கிறார். உங்களை சுத்தி இருக்கும் குழந்தைகள் ஆடினால் போதும். நீங்கள் அவர்களைப்பார்த்து கையைக்காட்டிக்கொண்டும் / தூக்கி வைத்துக்கொண்டும் பாடலாம் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'................./////

சொல்லிவிட்டீர்கள் அல்லவா? உங்கள் பேச்சைக் கேட்காமல் இருப்பார்களா? சீக்கிரம் கானொளி வரும். பொறுத்திருங்கள் உமாஜி!

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
////சுட்டி கிளப் வீடியோ க்ளிப்பிங் - கோவிந்த் - ஸ்நேகா இருவரின் ஆட்டம் பாட்டம் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி ஆலாசியம். இப்போதுதான் இந்த வசதி எல்லாம் வந்திருக்கிறது. அந்தக் காலத்தில் இதெல்லாம் இல்லையே என்ற ஏக்கமும் கூடவே தொக்கி நிற்கிறது ஆலாசியம்! பகிர்விற்கு நன்றி!/////
மிக்க நன்றி ஐயா! உண்மை தான் இன்றைய வசதிகள் அன்றில்லாதது இன்னும் நிறையக் கலைஞர்களை உலகம் பார்க்க நேராமல் போய்விட்டது....
"ஏக்கம் கூடவே தொக்கி நிற்கிறது"
:):) நிச்சயமாக ஐயா! நானும் தங்களைப் போலவே!
நான் தொலைக் காட்சியில் வந்த 'விசுவின் அரட்டை அரங்கத்தைப் பார்த்து பெரிதும் ஏங்கி இருக்கிறேன்./////

கவலைப் படாதீர்கள். சற்று வயதான காலத்திலாவது நமக்கு இத்தனை தொழில் நுட்பங்கள் கிடைத்திருக்கின்றனவே. உதாரணம். தமிழ் வலைப்பதிவுகள், கணினி, அலைபேசிகள். இணையம். இன்னும் எத்தனையோ!

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
// Parvathy Ramachandran said...
சகோதரர் ஆலாசியம் அவர்களுக்கு,
குழந்தை கோவிந்த் மிக அருமையாக ஆடியிருக்கிறான். எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இன்னொரு விஷயம், சிங்கைத் தொலைக்காட்சியில், பேசும் ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ் தங்கள் மகனின் நடனம் போலவே மிக அருமை, அழகு.////
தங்களின் பாராட்டிற்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள் சகோதரியாரே!
உண்மை தான் சரியாக தமிழைப் பேச, எழுதப் பெரும் முயற்சிகளைத் தமிழார்வலர்களும் அரசாங்க உதவியுடன் செய்து கொண்டிருக்கிறார்கள்.////

இங்கே பல தொலைக்காட்சிகளில் அது இல்லை! டமிலில் பேசுபவர்கள்தான் அறிவிப்பாளினிகள்!

SP.VR. SUBBAIYA said...

//// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
//////SP.VR. SUBBAIYA said...
//// தேமொழி said...
தொலைக்காட்சியில் நடன நிகழ்சியைப் பார்த்தேன் சகோதரரே, பகிர்ந்து கொண்டதற்கு நன்றி, வாழ்த்துக்கள்.
உன்ன மட்டும் புடிக்குது கோவிந்த்
உன் ஆட்டம் மட்டும் புடிக்குது////
கோவிந்தா! கோவிந்தா! - இது திருமலையானை அழைக்கக் கொடுத்த குரல்! அவர் அருளால் சிறுவன் வளர்ந்து பிரபலமாகட்டும்!///
ஆஹா! மிக்க நன்றிகள் ஐயா!
அதிசயம் என்ன வென்றால்... இங்கு தொலைக் காட்சியில் "அறிவாளி" படம் சிவாஜி - பானுமதி படம் போய்க் கொண்டிருக்கிறது...
இந்த பின்னோட்டம் இட்ட போது தேனிலவு சென்றக் காட்சி.... சிவாஜி பேஸ், பேஸ் மங்களம் உண்டாகட்டும் என்று பேசிய வசனம் என் காதுகளில் கேட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது.
தங்களின் ஆசிர்வாதத்திற்கு நன்றிகள் ஐயா!////

இதற்கெல்லாமா நன்றி?

SP.VR. SUBBAIYA said...

//// VCTALAR said...
அனைத்துப் பாடல்களும் அருமை. திரு. T.M.S.அவர்களின் குரலும், பாடல் வரிகளும் , இசையும் அந்தக் காலம் அந்தக் காலம் தான். நான் 40 முதல் 50 வருடங்களுக்கு முன் கேட்டு ரசித்தவை. நன்றி பல.
அருணாசலம்.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/// முருகராஜன் said...
பல ஆயிரக்கணக்கான பாடலை பாடி தமிழர்களின் மனதில் இடம் பிடித்தவர் டி.எம்.எஸ்,
அதிலிருந்து அடிக்கடி கேட்டு ரசித்து பாடக்ககூடிய பத்து பாடல்களை பதிவிட்டு அசத்திய வத்தியார் ஐயாவிற்கு நன்றிகள்,
முகப்பில் அம்மணியின் படம் போட்டு அச‌த்தியுள்ளிர் அம்மணி தமிழ் நாட்டை சேர்ந்தவராக இருக்கலாம்!
பெயர் தெரிய ஆவாலக உள்ளது சொன்னால் மிக்க மகிழ்ச்சி!////

அம்மணி பின்னணிப் பாடகி காய்த்திரி. பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் என்ற பிரபலமான பாடலைப் பாடியவர் அவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

//// R.Srishobana said...
வணக்கம் ஐயா,
ஆஹா...தமிழ் திரைத்துரையில் சிறந்த பாடகரை அறியாதவரும் இருக்க முடியுமோ?அடுத்த தலைமுறையினரும் பாராட்டும் அளவிற்கு தனித்துவமிக்க குரல்வளம் கொண்டவர் டி.எம்.எஸ்.அவர்கள் தான்...அவரது முகம் அறிந்திடாத வயதில் அவரது பாடல்களை எப்பொழுதும் பாடிக் கொண்டே இருப்பேன்...என் தந்தை வீட்டில் ஓய்வு எடுக்கும் பொழுது வானொலியில் 'கேசட்'டை திருப்பிப் போடுவது தான் என் வேலை,அதனால் பழைய படங்களின் பாடல்கள் பல எனக்கு சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும்...இன்னும் சொல்ல போனால் எனக்கு புதிய பாடல்களை விட பழைய பாடல்களின் வரிகள் தான் பரிச்சயம்...
எம்.ஜி.ஆர்க்கு ஒரு தோனியிலும்,சிவாஜி கணேசனுக்கு வேறு விதமாகவும் பாடும் வித்தியாசத்தை நான் அவர் பாடும் பாடல்களில் அடிக்கடி கவனிப்பேன்...டி.எம்.எஸ் அவர்களின் பாடல்கள் பெரும்பாலான பாடல்கள் எனக்கு பிடிக்கும்...அவற்றை பத்து பாடல்களில் அடக்க இயலாது,அதை கொண்டு வந்த தங்களுக்கு நன்றிகள் ஐயா...
எனக்கு சோகப் பாடல்கள் தான் அதிகம் பிடிக்கும்...ஆதலால் 'எங்கே நிம்மதி','சட்டி சுட்டதடா','போனால் போகட்டும் போடா' பாடல்கள் பின்பு திருவிளையாடல் படத்தில் வரும் 'பாட்டும் நானே...'என்ற பாடலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...சிவனின் உருவாகவே நடித்திருப்பார் நடிகர் திலகம்...
டி.எம்.எஸ் அவர்களின் கம்பீரமான குரலிலிருந்து மிகவும் இதமான பாடலான 'யார் அந்த நிலவு...' பாடலில் மிகவும் அருமையாக பாடியிருப்பார்...இன்றும் நான் அடிக்கடி பாடும் பாடல் இது தான்...பிறகு 'வந்த நாள் முதல் இந்த நாள் வரை' கண்ணதாசன் அவர்களின் பாடலின் வரிகளும் டி.எம்.எஸ் அவர்களின் குரலும் சேர்ந்து இப்பாடலை இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து கேட்டாலும் இனிமையாகவே இனிக்கும்...இன்றும் எங்கள் வீட்டில் இப்பாடலை தொலைக்காட்சியில் பார்த்தால் அனைவரும் அமர்ந்து ரசிப்போம்...நல்லதொரு அருமையான கலைஞரின் படைப்புகள் காலத்தால் என்றும் வாழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன் என்பதற்கு இது போன்ற 'மலரும் நினைவுகளை'கொண்டு வரும் வாத்தியார் ஐயாவின் ஆக்கமும் அதற்கு கிடைக்கும் பின்னூட்டங்களுமே ஆதரமாய் அமைகின்றன...நல்ல அருமையான ஆக்கத்தை தந்தமைக்கு நன்றி ஐயா.../////

உங்களின் நெகிழ்வான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/// R.Srishobana said...
//நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே - ஆலாசியம்
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு - கண்ணன்
கடலோரம் வாங்கிய காத்து குளிராக இருந்தது நேற்று - மைனர்
அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும் - தனுசு
மின்மினியை கண்மணியாய் கொண்டவளை - துபாய் சரவணா
தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் - எஸ். சந்திரசேகரன்//
ஆஹா...அன்று மாணவர் மலரில்...இன்று மாணவர்கள் மலர பின்னூட்டத்தில்!!!...தேமொழி சகோதரியின் கற்பனைகளுக்கு உண்மையில் "வானமே எல்லை"...கலக்கிட்டீங்களே மறுபடியும்...இதை இப்படி தலைப்பில் கொடுங்கள் "தேமொழியின் கலக்கலான கலாய்ப்புகள் ரீலோடடு"...ஹிஹிஹி...////

இதைவைத்துக் கலக்கலாக ஒரு நகைச்சுவைக் கட்டுரை தருவார்.பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/// Ananthamurugan said...
இன்று விஜய் tv இல் சிகரங்களின் சங்கமம் என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் திரு.Tms,kj.யேசுதாஸ்,BP.SRINIVAS,VANI JEYARAM,BALAMURALI KRISHNA, hariharan,MANO, மற்றும் பலரின் பங்களிப்பு இருந்தது.சுசீலா அவர்களின் டிரஸ்ட் சார்பாக நடைபெற்ற,இந்நிகழ்ச்சி,உங்களின் பதிவும் ஒன்றுகொன்று எது சூப்பர் என கேட்க தூண்டுகிறது.உன்னை அறிந்தால்!!!நீ உன்னை அறிந்தால்!!!,பாட்டும் நானேபாடலும் நானே!!!அருமை!!!!////

நல்லது. நன்றி ஆனந்தமுருகன்!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
TMS அவர்களைப் பற்றி சொல்ல நினைத்ததை தட்டச்சு செய்விட்டு காபி செய்து கமான்ட்சில் பேஸ்ட் செய்துவிட்டு, அனுப்பாமல் வந்த பின்னூட்டங்களை அப்படியே படித்தேன் . நான் சொல்ல வந்ததை தான் பார்வதி அவர்களும் மற்றவர்களும் சொல்லி உள்ளார்கள் .ஆகவே நான் புதிதாக எழுத ஒன்னும் இல்லை இங்கு.
MGR SIVAJAIKANESAN ஆகியோரின் படங்கள் யாருக்கு பிடிக்கிறதோ அவர்களுக்கு TMS பாடல்கள் கண்டிப்பாக .
பிடிக்கும் .
திரை இசை குரல்கள் பகுதி வரும்போதே நான் எதிர் பார்த்த குரல்கள் TMS, C.S.ஜெயராமன் ,சுசிலா.
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் எம்ஜிஆருக்காக அவர் பாடிய அவரின் கொள்கை பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் .////

உண்மைதான். அக்காலத்தில் கட்சி பிரச்சாரக் கூட்டங்களில் கூட்டத்தைச் சேர்ப்பதற்கு ஒலிபரப்பிய பாடல்களைப் பாடியவர் டி.எம்.எஸ் அவர்களே!

SP.VR. SUBBAIYA said...

//// R.Srishobana said...
//ஸ்ரீஷோபனாவைப் பார்த்து - ஐ வில் சிங் ஃபார் யு, ஐ வில் டான்ஸ் ஃபார் யு, ஆட்டமென்ன சொல்லடி தோழி நான் ஆடிடுவேன் கொஞ்ச நாழி//
ஆஹா...எனக்கு துள்ளலான பாடலா!!!...சூப்பரான தேர்வு...ஆட்டம் தானே!!!தேமொழி சகோதரிக்கும் மிகவும் பிடித்த ஆட்டம் "மூன் வாக்" தான்...வேறெதுவாக இருக்க முடியும்...ஹிஹிஹி...
ஆலாசிய‌ம் அவ‌ர்க‌ளின் ம‌கனின் காணொலியை ச‌ரியாக‌க் காண‌ இய‌ல‌வில்லை...மன்னிக்கவும்...Bsnl Broadband யின் தொ(ல்)லைத்தொட‌ர்பு சேவையின்(???!!!) ம‌கிமையே ம‌கிமை தான்...
ஐயா,ப‌டித்தில் இருப்ப‌வ‌ர் யார் என்று என‌க்கு ச‌ரியாக‌த் தெரிய‌வில்லை...பின்னூட்டங்களிலும் எந்த ஒரு 'க்ளு'வும் கிடைக்கவில்லை...ஐயா தான் தெளிவுப்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றேன்...////

அம்மணி பின்னணிப் பாடகி காய்த்திரி. பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால் என்ற பிரபலமான பாடலைப் பாடியவர் அவர்தான்!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
தேமொழி said... வெளிநாட்டில் வாழும் நம் வகுப்பறை தோழர்களும் இதுபோல் பாடி ஆடி வெளியிட்டால் நன்றாக இருக்குமே, எங்கே தனுசு, ஆலாசியம், மைனர், கண்ணன் என் இந்த விபரீத ஆசை .
நான் சிறுவனாக இருந்த காலத்தில் மிகவும் நன்றாக டான்ஸ் ஆடுவேன்.நினைத்தாலே இனிக்கும் படப் பாடல் களுக்கும் . என்னடி மீனாச்சி பாட்டுக்கும் டிஸ்கோ டான்சர் படத்தி மிதுன் சக்ரவர்த்தி போலும் ஆடுவேன் . பள்ளியில் என்னை ஆடவிட்டு வாத்த்தியார் , டீச்சர் எல்லோரும் ரசித்துருக்கிரார்கள்.
அதில் என்னால் மறக்க முடியாத ஆட்டம்ஒன்று .என் உறவினர் வீட்டு கல்யாணத்தில் மேடை கச்சேரி நடக்கிறது ."எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்"பாட துவங்கினார்கள் , நான் ஆட துவங்கினேன் , மேடையில் ஏற்றி விட்டார்கள் , செம குத்து என்று இப்போது சொல்வோமே அதுபோல் ஒரு ஆட்டம் . பாடல் முடிந்தது , கைதட்டலும் கிளம்பி அடங்கியது ,ஆனால் என் ஆட்டம் மட்டும் அடங்க வில்லை , அதற்குள் மேடையில் வேறு பாடல் துவங்கி விட்டார்கள் , அது எங்கே நிம்மதி .. எங்கே நிம்மதி ,என் ஆட்டம் அதே வேகத்திலிருந்து குறையவே இல்லை , பார்த்தார் மேடை கச்சேரி நடத்துபவர் , வாத்தியங்களை இசைப்பவர்களைப் பார்த்து , அந்த பையனின் ஆட்ட வேகத்துக்கு அடியுங்கள் டியூன்மாறினால் பரவாஇல்லை என்றார், பாடிக் கொண்டு இருந்தவரையும் பார்த்து ஸ்பீட் பிட்டில் பாடுங்கள் என்றார், பிறகென்ன எங்கே நிம்மதி பாடலும் குத்து பாட்டு ரேஞ்சுக்கு கேட்டு மகிழ்ந்தார்கள் வந்த விருந்தினர்கள்/////

அதெல்லாம் ஒரு காலகட்டம். மறக்கமுடியாத காலகட்டம்! பகிர்விற்கு நன்றி தனுசு!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
ஆஹா........
பின்னூட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக படித்துக் கொண்டே அதற்கு பதில் பின்னூட்டங்கள் தந்துக் கொண்டு வந்தேன் .வந்த இடத்தில்
தேமொழி said...அதோ அந்த பறவைப் போல ......
என்னுடைய பாடலை விட நீங்கள் எனக்காக தேர்ந்தெடுத்த பாடல் நன்றாக இருக்கிறது. என்னுடைய பாடல் சோகமானது, ஆனால் உங்களுடையது சந்தோஷ மானது. ஆகவே rescue boat ஐ பயன் படுத்தாமல் பக்கத்திலிருக்கும்
work boat ஐ பயன் படுத்திக் கொள் கிறேன் .
சரி சரி ஒரு டீமாய் இறங்கி வேலை பார்க்கின்றமாதிரித் தெரியுது////

தேமொழி அவர்கள் ஒரு ஆல் ரவுண்டர். அவருக்கு எதற்கு டீம்? தனியாக நின்று டபுள் செஞ்சுரி அடித்து, வகுப்பறையின் பெயரைக் காப்பாற்றுவார்!

SP.VR. SUBBAIYA said...

///// Maaya kanna said...வாத்தியார் ஐயா வணக்கம்.
ஒரு உண்மை சம்பவத்தை சிறிய வயதில் கேட்ட ஞாபகத்தை வைத்து தங்களிடம் ஒரு கேள்வி ஐயா
ஸ்ரீ வில்லி புத்தூரில் நடந்த சம்பவம் என்று கூறுவார்கள் ஐயா .அதாவது
" பாச மலர்கள் ", படத்தில் இருந்த " அண்ணன் தங்கை",
உறவுகள் இல்லாத ஒரு குடுப்பம் ஐயா.
தங்கை கணவனை இழந்தவள் அவளுடைய ஒரே சொத்து என்னை போன்ற சராசரியான ஒரு ஆண் மகன் .தனது தனி திறமையால் . பெரும் செல்வத்தை உண்டாக்கும் திறமை இல்லாத ஒரு சராசரியான பாவ பட்ட ஒரு மகன்.
தங்கை ஆனவள் தமது வயது மூர்ப்பு அதிகம் ஆவதையும் மேலும் அடிக்கடி உடல் உபாதைகள் வருவதை உணர்தவள் தமது மகனுக்கு கல்யாணம் செய்ய தீர்மானித்தாள்.
ஆனள் அந்த கால கட்டத்தில் பெண்ணுக்கு அல்லது பெண் வீட்டு காரருக்கு பொன் பொருள் கொடுத்தால் தான் பெண் தருவார்கள் கல்யாணமும் செய்ய முடியும் .சரி கதைக்கு வருவோம் ஐயா!
தனக்கு என்று இருந்த ஒரே ஒரு ஆறுதல் என்ன வென்றால் தன்னுடன் பிறந்த அண்ணன் தான் . அண்ணனுக்கு மொத்தம் 5 பெண்கள் . அதனில் மூத்த இரண்டு பெண்ணுக்கு கல்யாணம் ஆகி விட்டது . மீதம் இருந்ததோ மூன்று பெண்கள். மேலும் அண்ணனுக்கு என்று சொல்ல முடியாத அளவிற்கு சொத்து சுகம் வேறு உண்டு .
தங்கை ஆனவள் தனது மகனை அழைத்துக்கு சென்று அண்ணனிடம் ஒப்படைத்து விடுகின்றாள் . இவனை ஆளாக்கி ஒரு மனிதனாக விட வேண்டியது தன்னுடைய பொறுப்பு என்று அண்ணனும் உனக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகின்றேன் என்று கூறி விடுகின்றார்
தங்கையையும் தங்கை மகனையும் தன்னுடன் வைத்து கொள்கின்றார் . சில காலங்களில் உடல் நல கோளாறால் தங்கை இறைவன் அடி சென்று விடுகின்றாள்.
ஆண் மகனோ தாய் மாமன் வீட்டு வேலைகள் அனைத்தினையும் இழுத்து போட்டு செய்கின்றான் வீட்டு தொழுவில் உள்ள மாடுகளின் சாணத்தை அள்ளுவதில் இருந்து ஆனைத்து வேலைகளையும் சேர்த்து .
தாய் மாமனோ சொல்லுகின்றான் மூன்றாவது பெண் உனக்கு தான் என்கின்றார் .சிறிது காலம் செல்கின்றது ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு பெண்கேட்டு வருகின்றார் அவர்களுடைய வீட்டிற்கு மூன்றாவது பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து விட்டு தங்கை மகனிடம் நான்காவது பெண் உனக்கு தான் என்கின்றார் .
மூன்றாவது பெண்ணுக்கு நடந்ததை போலவே நான்காவது பெண்ணுக்கும் ஒரு பெரிய செல்வந்தர் வீட்டில் பெண் கேட்டு வர அவர்களுக்கு நான்காவது பெண்ணையும் கொடுத்து விடுகின்றார் ஐயா.
நம்ம ஆள் மாமன் கூறுவதை கோவில் மாடு தலையை ஆட்டுவது போல தலையை ஆட்டிவிட்டு அவனுடைய வேலைகளை எப்பொழுதும் போல செய்வனே செய்கின்றார் ஐந்தாவது பெண் தமக்கு தான் என்று .
நடந்த அனைத்து சம்பவத்தையும் கவனித்து கொண்டு வருகின்ற மிகவும் இறக்கம் உள்ள கடைசி பெண் தனது அத்தை மகனிடம் தனிபட்ட முறையில் பேசுகின்றாள் .
எனது தந்தை அத்தான் தங்களுடைய உழப்பை முழுவதும் ஏற்று கொண்டு
ஒவ்வொரு சாக்கு போக்கு கூறிக்கொண்டு தங்களுக்கு பெண் தராமல் ஒவ்வொன்றாக தட்டி கழித்து கொண்டு வருகின்றார் .
தங்களிடமோ பொன் பொருள் எதுவும் இல்லை ஆதலால் நாளைக்கு எனக்கு ஒரு செல்வந்தன் வீட்டில் இருந்து பெண்கேட்டு வருவார்கள் அவர்களுக்கு தான் என்னையும் கல்யாணம் செய்து கொடுக்க போகின்றார் . ஆதலால் தாங்கள் எமது தந்தையை நம்பாதிர்கள் நாம் இருவரும் வேறு எங்கையாவது சென்று கல்யாணம் செய்து கொண்டு உள்ளதை கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று கூற இருவரும் அன்றைய இரவிலே வீட்டை விட்டு கிளம்பி விடுகின்றனர் .
வெகு தூரம் நடந்தவர்கள் வழியில் இருந்த ஒரு மரத்தின் அடியில் சற்று தங்கி விட்டு மீண்டும் போகலாம் என்று தீர்மானித்து உறங்குகின்றனர் சற்று இடைவெளி விட்டு ,
ஏனென்னில் கல்யாணம் ஆகுவதற்கு முன்னர் ஆடவரை தொட கூடாது என்ற சமுக கட்டு பாட்டின் படி.
காலதேவன் தனது விளையாட்டை நல்ல பாம்பின் வழியாக வந்து அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த ஆடவனை தீண்டி விட்டு சென்று விடுகின்றது .
அதிகாலை பொழுது வந்த உடன் மீண்டும் பயணத்தை தொடர எழுந்திருந்த பெண் தனது அத்தை மகனை பார்க்கின்றாள் அவனோ பாம்பின் விசத்தால் மாண்டு போகி விடுகின்றான் என்பதை அறிந்தவள் அழுது தொழுது இரத்த கண்ணிர் வடிக்கின்றாள் .
அத்தான் நான் என்ன பாவம் செய்தோனோ எனக்கே தெரிய வில்லை அத்தான் . தங்களை தொட்டு கட்டி பிடித்து கதறி அழ கூட நான் தகுதி அற்றவள் ஆகி விட்டேனே அத்தான் . நமக்கு கல்யாணம் ஆகி இருந்தால் எனக்கு அந்த பாக்கியம் ஆவது கிடைத்து இருக்கும் அத்தான் என்று கதறுகின்றாள் .
நிற்கஇதற்க்கு பின்னர் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது ஐயா தாங்களுக்கு தெரியுமா இந்த கதை ஐயா!/////

என்ன கதை? நீங்கள் சொன்னால்தான் தெரியும்!

SP.VR. SUBBAIYA said...

//// thanusu said...
தேமொழி அவர்களே ,சரி கேட்டு விட்டீர்கள் நானிருக்கும் சூழ்நிலையில் . என் BARGE லிருந்து RESCUE BOAT ஐ கடலில் இறக்கி மீனவர் ட்ரெஸ் பதிலாகவேலைக்கான COVERALL உடன் அதில் நான் அமர்ந்து
கடல் நீர் நடுவே
பயணம் போனால்
குடி நீர் தருபவர் யாரோ
தனியாய் வந்தோர் துணிவை
தவிர துணையாய் வருபவர்ர் யாரோ
வெள்ளி நிலாவே விளக்காய் எரியும்
கடல் தான் எண்கள் வீடு
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்கை .
O.K வா ஆனால் ஆட்டம் இருக்காது இதுல ./////

கானொளியை அனுப்புங்கள். பார்த்துவிட்டு ஓக்கே சொல்கிறோம்!

SP.VR. SUBBAIYA said...

/// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
////Uma said...
எனக்கு சுட்டுப் போட்டாலும் வராதது ஆட்டம் //
அது தெரிஞ்சுதான் உங்களுக்கேத்த பாடலா தேர்வு செய்திருக்கிறார். உங்களை சுத்தி இருக்கும் குழந்தைகள் ஆடினால் போதும். நீங்கள் அவர்களைப்பார்த்து கையைக்காட்டிக்கொண்டும் / தூக்கி வைத்துக்கொண்டும் பாடலாம் 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே'.................////
ஹா!ஹா!ஹா!
சரி இவ்வளவு தூரம் சொல்றீங்க! நடப்பது நடக்கட்டும்!:):)////

என்ன நடந்து விடப்போகிறது? கானொளியைத் தயார் செய்து அனுப்புங்கள்.

SP.VR. SUBBAIYA said...

//// V Dhakshanamoorthy said...
இன்றைய மனதை மயக்கிய குரல்கள் பகுதி மூலமாக,
திரு.T.M.செள்ந்தரராஜன் அவர்கள் பாடியுள்ள, என்றென்றும் மறக்கமுடியாத பாடல்களை
எல்லாம் மனக்கண்ணில் ஓடவிட்டு, அந்த அந்த பாடல்களுக்கும்
நடித்துள்ள நடிகர்களையும் நினைப்பதற்கும்,ரசிப்பதற்கும் வாய்ப்பு
ஏற்ப்படுத்திக்கொடுத்த ஆசிரியர் அவர்களுக்கு நன்றி!!///

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி!

kmr.krishnan said...

//நிற்கஇதற்க்கு பின்னர் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது ஐயா தாங்களுக்கு தெரியுமா இந்த கதை ஐயா!/////

என்ன கதை? நீங்கள் சொன்னால்தான் தெரியும்!//

இக் கதை சிவ பெருமானின் திருவிளையாடல்.அய்யரவர்கள் சொன்னால்தான் அதனுடன் ஈடுபாட்டோடு சொல்ல முடியும்.

பிரகாசம் said...

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் அவர் பாடியுள்ள நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலைப் பலமுறை கேட்டிருக்கிறேன். பள்ளியில் படிக்கும்போது ந,ன,ண வேறுபாடுகளும் ல,ள,ழ வேறுபாடுகள் தெரியாமல் படித்த நிலையில் அவரது இப்பாடலில் மிகச் சிறப்பக இந்த எழுத்துகளின் சரியான உச்சரிப்பைப் புரிந்து கொள்ள முடியும்

Parvathy Ramachandran said...

//நிற்கஇதற்க்கு பின்னர் என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது ஐயா தாங்களுக்கு தெரியுமா இந்த கதை ஐயா!/////

இது திருத்தொண்டர் புராணம், திருஞானசம்பந்தர் வரலாற்றில் நடந்த நிகழ்ச்சியாக வருகிறது.

அந்த இளைஞன் திருமருகல் எனும் சிவத்தலம் அருகே வரும்பொழுது அவனைப் பாம்பு கடிக்கிறது. (அக்கால வழக்கப்படி) திருமணமாகுமுன் ஒரு ஆடவனைப் பெண் தீண்டுதல் கூடாது. ஆகையினால், அவன் அருகே அவனைத் தீண்டாமல் கிடந்து அழுது புலம்புகிறாள். திருமருகல் கோபுரத்தை நோக்கி, 'விடம் உண்ட பிரானே, நான் தீண்டுமுன் நாகம் தீண்டிய என் நாதனின் விடம் தீர்த்து அருள்க'என வேண்டுகிறாள். அப்போது, அங்கு வந்த திருஞானசம்பந்தர், நடந்தவற்றை அறிந்து, 'சடையாய் எனு மால்' எனத் தொடங்கும் பதிகம் பாடி,அத்தைமகனை உயிர்ப்பித்து, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார்.

M.G.ரவிக்குமார்™..., said...

அது துகுலுவ அல்ல தொகுளுவா.இது குடும்பப் பெயரைக் குறிக்கிறது.எங்கள் சவுராஷ்டிர சமூகத்தில் எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரு பிரத்தியேகக் குடும்பப் பெயர் இருக்கும்.

SP.VR. SUBBAIYA said...

//// M.G.ரவிக்குமார்™..., said...
அது துகுலுவ அல்ல தொகுளுவா.இது குடும்பப் பெயரைக் குறிக்கிறது.எங்கள் சவுராஷ்டிர சமூகத்தில் எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரு பிரத்தியேகக் குடும்பப் பெயர் இருக்கும்.////

சுட்டிக்காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே! பதிவில் திருத்தம் செய்துவிட்டேன்!

kmr.krishnan said...

//அது துகுலுவ அல்ல தொகுளுவா.இது குடும்பப் பெயரைக் குறிக்கிறது.எங்கள் சவுராஷ்டிர சமூகத்தில் எல்லாக் குடும்பங்களுக்கும் ஒரு பிரத்தியேகக் குடும்பப் பெயர் இருக்கும்.//

என்னுடைய முந்தைய ஆக்கம் ஒன்றிலும் செளாராஷ்டிரா நாண்பரின் பெயர் 'அச்சிரா' நரசிம்மையர் என்று குறிப்பிட்டு இருந்தேன். அதுவும் குடும்பப் பெயர்தான். சில குடும்பப் பெயர்கள் நம் சூழலுக்கு வேடிக்கையாக ஒலிக்கும். அவர்கள் மொழியில் அதற்கு என்ன‌ பொருளோ தெரியாது.எடுத்துகாட்டாக‌
'பஜ்ஜி' என்பது ஒரு செள‌ராஷ்டிரா குடும்பப் பெயர். நமக்குத் தெரிந்த பஜ்ஜி சாப்பிடும் பஜ்ஜிதான்.

kmr.krishnan said...
This comment has been removed by the author.
Balamurugan Jaganathan said...

Nice

minorwall said...

அண்ணன் ஆலாசியம் அவர்களின் புதல்வரின் டான்ஸ் லின்க்கைப் பார்த்தேன்..மிகவும் சந்தோஷம்..

மிகுந்த வேலைப்பளுவினூடே இங்கே எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியவில்லை..பின்னூட்டங்களையும் படிக்க இயலவில்லை..அதான் லேட்....

அதனால் வாரமலர் பகுதியிலே மட்டுமே கவனம் செலுத்த முயற்சிக்கிறேன்..

மற்றபடி தேமொழி அவர்களின் பாடல் தேர்வு சிறப்பாய் அமைந்திருந்தது..

தேர்வு செய்திருந்த பாடல் 'பீச்மண்ணிலெனை வீழ்த்தி' எங்கெங்கோ இழுத்துச் சென்றது..

//// minorwall said...
அண்ணன் ஆலாசியம் அவர்களின் புதல்வரின் டான்ஸ் லின்க்கைப் பார்த்தேன்..மிகவும் சந்தோஷம்..////

மிக்க நன்றி சகோதரரே! தங்களின் பின்னூட்டம் மகிழ்ச்சியைத் தருகிறது.