மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

24.3.12

பிள்ளையார் கனவில் வந்து சொல்லட்டும், அப்போது நிறுத்துகிறேன்!

 மாணவர் மலர்
இன்றைய மாணவர் மலரை ஆறு பேர்களின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. அப்ப்டியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
1


 புரியாத நிலையில் அவளும் நானும்!
ஆக்கம்: தனுசு

ஓடிச்சென்று மறைகிறாள்
ஒளிந்திருந்து பார்க்கிறாள்
ஒத்தையில் அலைகிறாள்
ஒருவரும் இல்லையெனில்
என்ஓரவிழியில் சேருகிறாள்.

வெடியாய் சிரிக்கிறாள்
வெட்டியாய் அளக்கிறாள்
கை தட்டியே அதிர்கிறாள்
இவை யாவும்
என் நிழல்  கண்டால்  நிறுத்துகிறாள்.

குரலெடுத்து பாடுகிறாள்
நடமெடுத்து ஆடுகிறாள்
கம்பெடுத்து சுழற்றுகிறாள்
என் குரல் கேட்டால்  
மவுனமாய் சுருங்குகிறாள்.

விழியை உருட்டுகிறாள்
இமையை விரிக்கிறாள்
உதட்டை பிதுக்குகிறாள்
இதை யாரும் பார்த்தால்
நுனி மூக்கில் வேர்க்கிறாள் .

வீட்டு வாசலில் நிற்கிறாள்
விரல்களில் பின்னுகிறாள்
தோழியரை விரட்டுகிறாள்
போக மறுத்தால்
அவர்களிடம் அருமையாய் நடிக்கிறாள் .

தெளிவாய் இருக்கிறாள்
தெரிய படுத்த மறுக்கிறாள்
என்னை தேடுகிறாள்
தென்படவில்லை என்றால்
தங்கையை ஒற்றனாக்கி அனுப்புகிறாள்.

கைவீசி போகிறாள்
கால் எத்தி நடக்கிறாள்
குரல் இருமி குனிகிறாள்
நிமிர்ந்து பார்த்தால்
இமைகளால் "இச்" சை தருகிறாள்.

என்னமோ சொல்கிறாள்
எதையோ  கேட்கிறாள்
என்னிடமிருந்து எதையோ எடுக்கிறாள்
ஆனால் இன்னதென்று புரியவில்லை
தெரிந்தவர் சொல்லுங்களேன்.
-தனுசு-
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

பிள்ளையார் கனவில் வந்து சொல்லட்டும், அப்போது நிறுத்துகிறேன்!
ஆக்கம்: கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி

கேது தசா நடந்த காலம் முழுவதும் ஆன்மீகமும், மக்கள் சேவையுமாக என் பொழுது கழிந்தது.மனைவியாருக்கும் எனக்கும் சேர்ந்து ஒரே தசா ஒரே புக்தி நடக்கும்.'காடு வெந்தால் சந்தன மரமும் வேகாதா?'. எனவே என் ஆன்மீகப் பித்துக்களுக்கெல்லாம் அவர்களும் சேர்ந்து 'பின் பாட்டு'ப் பாடியதால் குடும்பம்,குழந்தைகளை விட மக்கள் சேவை முன் உரிமை பெற்றுவிட்டது.ஒரு பக்கம் பள்ளியைக் கட்டி நிறுவும் பணியில் ஒத்துழைப்புக் கொடுத்துக் கொண்டே, ஒரு மாலை நேர மருந்தகமும் நடத்தி வந்தேன்.

இச்சேவைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் தஞ்சை வல்லம் சாலையில் உள்ள பிள்ளையார்பட்டி பிள்ளையார் என்னை ஈர்த்தார். எல்லா விடுமுறை நாட்களிலும் அக்கோவிலில் பழியாகக் கிடப்பேன்.பூசை நின்று போயிருந்த காலம்.'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' மட்டும் இல்லை,இங்கே பிள்ளையாரே ஆண்டியாகத்தான் இருந்தார்.'அரச மரத்தைப்பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது போல' முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தார் பிள்ளையார்.

நான் சென்ற நாட்கள் எல்லாம் பிள்ளையாருக்கு சிறிது பால் அபிஷேகமும், கடலைப் பொரி நிவேதனமும் கிடைத்தது.'கொஞ்சம் பொருளை மந்திரம் பண்ணி கை காட்டி' வந்தேன்.ஆற‌டிக்கு மேல் உயரம் உள்ள பிள்ளயார். 'ஆனைப் பசிக்கு சோளப்பொரி என்பது போல்' எதோ நான் வைத்ததை மறுக்காமல் பிள்ளையார் ஏற்றுக்கொண்டார்.

என் தாயாரும், வெளியூர் பாட்டி ஒருவருமாகச் சேர்ந்து நந்தியாவட்டைப்பூ, அரளிப்பூ, மருவு சேர்த்து 'கலரா'க கதம்பம் கட்டிக்கொடுப்பார்கள். சுமார் 25 அடி நீளமுள்ள கதம்பத்தால் பிள்ளையாருக்கு அலங்காரம் செய்வேன்.அமசமாக இருக்கும்.

'இந்தப் பூக்கள் எல்லாம் பிள்ளையாருக்கு ஆகாது' என்று ஒருவர் வந்து சொல்லிக்கொண்டே இருப்பார் ஓர் 'அழு கள்ளன், தொழு கள்ளன் ஆசாரக்கள்ளன்!'

'வலியப்போய் பெண் கொடுக்கிறேன் என்றால் குலம் என்ன கோத்திரம் என்ன' என்பார்கள்.

"எதோ என்னால் முடிந்ததைச் செய்கிறேன்.'கோணக் கோண கோவிந்தா போடு'கிறேன்! இந்தப் பூக்களை எனக்கு சார்த்தாதே' என்று இந்தப் பிள்ளையார் என் கனவிலாவது வந்து சொல்லட்டும்;உடனே நிறுத்தி விடுகிறேன்" என்பேன்.

பிள்ளையாருக்கு ஒரு சில பழைய வேட்டிகள் சொந்தமாக இருந்தன. எல்லாம் கறை படிந்து இருந்ததால் அவற்றை இல்லத்திற்கு எடுத்து வந்து துவைக்கச் சொல்லி மனைவியாருக்குத் தொல்லை கொடுத்தேன். அவர்களுக்கும் கேது தலையில் உட்கார்ந்து இருந்ததால் மறுக்காமல் செய்தார்கள்.அப்போது அவர்கள் நிறைமாத கர்பிணி.வாஷிங் மெஷினெல்லாம் வீட்டில் இல்லாத நேரம்.இப்போது நினைத்தாலும் அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்று மனம் பதறுகிறது.

என் வாழ்வில் முதன் முதலாக ஒரு கிராம வாழ்க்கையை சந்தித்தது அந்தக் கால கட்டத்தில்தான்.

'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது'என்றார் மஹாத்மாஜி. நான் பார்த்தவரை அந்தக் கிராமங்களோ சாதியில் வாழ்கின்றன.

கோவிலுக்குள் நான் போகும் போதெல்லாம், என்னைப் பார்த்தவுடன் அங்குள்ள உண்டியலை ஒருவர் சாவி போட்டுத் திறப்பார். அதில் உள்ள சில்லறை நாணயங்களை 'அரிசி அள்ளும் காகத்தைப்'போல'எடுத்துச் சென்று விடுவார்.'தூண்டில் போட்டவனுக்கு தக்கைமேல் கண்!' மறந்தும் பிள்ளையாருக்குக் கை கூப்ப மாட்டார்.பூசைக்கு நிற்க மாட்டார்.விசாரித்ததில் அவர்தான் கோவிலுக்குப் பரம்பரை தர்மகர்த்தா என்று தெரிந்தது.'கரும்புக் க‌ட்டுக்கு வரும் எறும்பு' போலத் தோன்றியது.

'வெல்லம் தின்பது ஒருவன் விரலைச் சூப்புகிறவன் வேறொருத்தானா?'

உண்டியல் விஷயத்தை ஒரு சிலரிடம் கூறினேன்.

'உங்களுக்குத் தேவை இல்லாத செய்திகளைப் பார்க்கவோ, கேட்கவோ, பேசவோ வேண்டாம்; விளைவுகள் விபரீதமாக இருக்கும்' என்று எச்சரித்தார்கள்.

'காட்டுக்குப் புலி ஆதரவு;புலிக்கு காடு ஆதரவு!'பாழ் ஊருக்கு நரி ராஜா! இதென்ன!   'கிணறு வெட்ட பூத‌ம் கிளம்புகிறதே!'

'கஞ்சி ஊற்ற ஆளில்லாவிட்டாலும், கச்சை கட்ட ஆள் உள்ள ஊராக' இருக்கிறதே!'பட்டா உன் பேரிலே சாகுபடி என் பேரிலே'என்று ஒரு நியாயமா?

ஒரு பெண்மணி நான் கோவிலை அடையும் முன்பாகவே தயாராகப் பால் சொம்புடன் நிற்பார்கள்.கணிசமான பாலை அபிஷேகத்திற்கு அளிப்பார்கள். உள்ளே வந்து அபிஷேகம் செய்வதைப் பார்க்க வாருங்கள் என்று எவ்வளவு முறை அழைத்தாலும் வராமல் வெளி வாசலிலேயே நின்று தரிசிப்பார்கள்.'மஞ்சளும் மலரும் கொண்டு துதிக்காவிட்டாலும் நெஞ்சில் நினைப்பதே போதும்' என்று தள்ளி நிற்பார்கள்

ஏன் அப்படி என்று எனக்குப் புரியவில்லை. அவர்களும் சொல்லவில்லை.

இதனை நண்பர்களிடம் பேசியபோது 'என்ன இவ்வளவு வெள்ளந்தியாக இருக்கிறாய்!.'கறுத்ததது எல்லாம் தண்ணீர் வெளுத்ததெல்லாம் பால்' என்கிறாயே!அவர்கள் தாழ்த்தப்பட்ட சமூகமாக இருக்கும். அதனால்தான் கோவில் உள்ளே வரத் தயங்குகிறார்கள்' என்றார்கள்.

அப்போதுதான் முதன் முறையாக தீண்டாமைக் கொடுமை என்பது எப்படி இருக்கும், சமூகப் புறக்கணிப்பு என்றால் என்ன என்பதை நேரடியாக உணர்ந்தேன்.

ஆதிக்க சமூகம் எந்த அஸ்திரத்தால் தாழ்த்தப்பட்டவர்களை வெளீயிலேயே நிறுத்துகிறது?எண்ணிக்கையில் மற்றவர்களுக்குச் சமமாக இருந்தும் தாழ்த்தப்படவர்கள் ஏன் இதனைத் தட்டிக் கேட்காமல் பணிந்து போகிறார்கள்?

ஒரு பக்கம் கோவிலில் இருக்கும் தெய்வத்துடன் தொடர்பே இல்லாமல் கோவில் உண்டியலுக்குப் பாத்தியப்பட்ட ஆதிக்க சமூகத்தவர்.ம‌ற்றொரு ப‌க்கம் தினமும் கோவிலுக்கு வந்து தன்னால் இயன்றதை வழிபாட்டுக்கு அளித்துவிட்டு தள்ளி நின்று தரிசிக்கும் 'தீண்டத்தகாத' பெண்மணி!

ஒண்ணுமே புரியலையே பிள்ளையாரப்பா! இப்போது நான் என்ன செய்ய‌ வேண்டும்?

நான் செய்யும் பூசையால் கோவிலுக்கு வருவோர் எண்ணிக்கை கூடி வந்தது. தட்டில் விழும் காசை நானும் உண்டியலில் இட்டு வந்தேன்.

கோவில் தெய்வத்திடம் நம்பிக்கை இல்லாத ஆதிக்க சமூகத்தவருக்கு நான் ஆதரவா? அல்லது தெய்வ நம்பிக்கை உள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு நான் ஆதரவா? சொல்லப்பா பிள்ளையாரப்பா! எப்பவும் போல மவுனம்தான் உன் பதிலா?

சரியான தர்மசங்கடம்!

பிள்ளையார் மிகவும் சோதித்துவிட்டு, மிகவும் கோரமாக என்னை அந்த தர்ம சங்கடத்திலிருந்து விடுவித்தார்.'மரத்திலிருந்து விழுந்தவனைப் பாம்பு தீண்டியதுபோல!' ஆம்! என் அண்ணனின் விதவை மனைவி, என் அண்ணியார், மூன்று குழந்தைகளை அனாதையாக்கி விட்டு உயிர் துறந்தார்,'ந‌ல்லவர்களுக்கு அடையாளம் சொல்லிக்காமல் போவது போல!' அதனால் கோவிலுக்குச் செல்வது தடைப் பட்டது.

பிள்ளையார் தன் வேலையை தவத்திரு காத்தையா சுவாமிகள் மூலம் நடத்திக்கொண்டுவிட்டார். ஆம்! நான் விலகிய பின்னர் ,காத்தையா சுவாமிகள் மனதில் தோன்றி தனக்குக் கும்பாபிஷெகம் செய்து கொண்டு, நித்ய பூஜைக்கும் வழி வகுத்துக் கொண்டார் பிள்ளையார்.

கிராம மக்களுக்குள் சமத்துவத்தையும் பிள்ளையார் ஏற்படுத்தினாரா என்று தெரியவில்லை.

வாழ்க வளமுடன்!
ஆக்கியோன்:கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
வரை படம்:   ஒப்பனை செய்து கொள்ளும் பெண்!
வரைந்தவர்: தேமொழி

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4


 எது எது ஏது!
 ஆலாசியம் கோ. சிங்கப்பூர்.
 
அன்பிற்கு ஏது? அளவும் அழிவும்
பண்பிற்கு ஏது? பகையும் பழியும்
பாசத்திற்கு ஏது? பகட்டும் பயமும்
நேசத்திற்கு ஏது? நேரமும் தூரமும்
காதலுக்கு ஏது? காரணமும் மரணமும் 
அழகுக்கு ஏது? அருவருப்பும் அலட்டலும்
அறிவுக்கு ஏது? நீளமும் ஆழமும் 
உண்மைக்கு ஏது? பிறப்பும் இறப்பும்  
பொய்மைக்கு ஏது? நிழலும் நிரந்தரமும் 
நீதிக்கு ஏது? விருப்பும் வெறுப்பும்
நிம்மதிக்கு ஏது? ஆசையும் அகந்தையும்
கோபத்திற்கு ஏது? பார்வையும் பகுப்பும்
கொடுமைக்கு ஏது? ஈரமும் இரக்கமும்
காமத்திற்கு ஏது? வெட்கமும் விவேகமும் 
குரோதத்திற்கு ஏது? கேண்மையும் கருணையும் 
வீரத்திற்கு ஏது? வயதும் பாலும்
தீரத்திற்கு ஏது? திருட்டும் உருட்டும்
மானத்திற்கு ஏது? மயக்கமும் தயக்கமும்
மரியாதைக்கு ஏது? மலிவும் மமதையும்
முட்டாளுக்கு ஏது? தெளிவும் தைரியமும்
மூர்க்கனுக்கு ஏது? நெளிவும் சுளிவும்
பக்தனுக்கு ஏது? சலிப்பும் சந்தேகமும்
சித்தனுக்கு ஏது? மனமும் இடமும்
பித்தனுக்கு ஏது? பேதமும் வேதமும்
முக்தனுக்கு ஏது? இன்பமும் துன்பமும்
சக்திக்கு ஏது? இடமும் பொருளும் 
சிவத்திற்கு ஏது? ஆதியும் அந்தமும்

*****************************************************************************
 5

எல்லாமாகி எங்கும் நிறை பராசக்தியே! 
பொல்லா வினையறுப்பாய் ஆதிசக்தியே!.  
ஆலாசியம் கோ.சிங்கப்பூர்.


வெடிபடு அணுவினுள் ஒளியுரு கடும்பொறி;
இடியொடு பிறந்தக்கொடுவிட அரவச்சீறி; நடுநடுங்க 
துடிதுடிக்க; சடசட, படபடவெனப்  பாயும்மின் 
கொடியொடு ஓடிடும் தூதூமணியே! 

அறிவினில் உறையும்; கருவென வளரும்;
பரிதியில் ஒளிரும்; வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; குணம்,
குறியிலா ஞானப்பெரும் திரளே! 

ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும் 
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை 
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய் 
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! 

பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளென சுடரொளி நிறைய 
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய 
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!
 +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 6


 வீட்டுலே என்னதான் வெட்டி முறிக்கிறே?
அனுப்பியவர்: ஜி.ஆனந்த முருகன்

What do you do all day??

A man came home from work and found his three children outside, still in their pyjamas, playing in the mud, with empty food boxes and 20 wrappers strewn all around the front yard.

The door of his wife's car was open, and so the front door to the house and there was no sign of the dog. Proceeding into the entry, he found an even bigger mess. A lamp had been knocked over, and the throw rug was wadded against one wall.

In the front room the TV was loudly blaring a cartoon channel, and the family room was strewn with toys and various items of clothing.

In the kitchen, dishes filled the sink, break fast food was spilled on the counter, the fridge door was open wide, dog food was spilled on the floor a broken glass lay under the table, and a small pile of sand was spread by the back door.

He quickly headed up the stairs, stepping over toys and more piles of clothes, looking for his wife.. He was worried she might be ill, or that something serious had happened.

He was met with a small trickle of water as it made its way out the bathroom door.

As he peered inside he found wet towels, scummy soap and more toys thrown over the floor. Miles of toilet paper lay in a heap and tooth paste had been smeared over the mirror and walls.

As he rushed to the bedroom, he found his wife still curled up in the bed in her pyjamas, reading a novel.

She looked up at him, smiled, and asked how his day went..

He looked at her bewildered and asked, 'What happened here today?'

She again smiled and answered, 'You know every day when you come home from work and you ask me what in the world I do all day?'

'Yes, ' was his incredulous reply.

She answered, 'Well, today I didn't do it...'
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7 (இடைச் சேர்க்கை)

மைனர் ஜானகி அம்மாவுடன் சேர்ந்து பாடிய பாடல்:-))

My Music - Neelakkuyile -fnl - eSnips

My Music - Neelakkuyile -fnl - eSnips

பாடலை அனுப்பிய மைனர், அதை ஒரு இணைய ஆடியோ தளத்தில் வலை ஏற்றி - அதன் embedded code ஐ அனுப்பியிருந்தால் அதை வலை ஏற்றுவத்ற்கு செள்கரியமாக இருந்திருக்கும்.  e snips  தளத்தில் நான் வலை ஏற்றி அதன் சுட்டியை இங்கே ஒட்டியுள்ளேன். அவர்களும் embedded code வச்தியைக் கொடுக்கவில்லை. Blogger  தளத்திலும் அந்த வசதி இல்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதற்கொரு தீர்வைக் கண்டு பிடித்து விடலாம். வாத்தியார் அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் உடனே அதைச் செய்ய இயலவில்லை. பதிவில் ஒலி வடிவத்தை ஏற்றுவதற்கு கிடைக்கும் வசதியைக் குறித்து தெரிந்தவர்கள் (மைனர் உட்பட அனைவரும்) எழுதுங்கள். ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் அதைச் செய்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்
-+++++++++++++++++++++++++++++++++++++
8

நகைச்சுவை
அனுப்பியவர்: எஸ். சபரி நாராயணன். சென்னை
எச்சரிக்கை: நகைசுவைகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படிக்கவும்!
1
A man in Hell asked Devil:
Can I make a call to my Wife?
After making call he asked how much to pay.
Devil: Nothing, Hell to hell is Free.
-------------------------------
2
Wife is dreaming in the middle of the night and suddenly shouts: "Up!
Quick! My husband is back!"
Man gets up, jumps out of the window, hurts himself, and then realizes:
"Damn, I am the husband!"
-------------------------------
3
You know why women starts with 'W'...
because all questions start with "W".. !
Who ?
Why ?
What ?
When ?
Which ?
Whom ?
Where ?
&
Finally Wife..!!!
------------------------------
4
Nobody teaches Volcanoes to erupt, Tsunamis to devastate, Hurricanes to
sway around & no one teaches How to choose a Wife,
NATURAL DISASTERS JUST HAPPEN.
------------------------------------
5
Difference between Friend & Wife
U can Tell ur Friend "U r my Best Friend"
But Do u have courage tell to ur Wife "U r my Best Wife?"
------------------------------------
6
Judge: why did you shoot your wife instead of shooting her lover?
Sardar: Your honour, it's easier to shoot a woman once, than shooting one
man every week.
----------------------------------
7
Doctor: Madam, your husband needs rest and peace, so here are some
sleeping pills.
Wife: Doc, when should I give them to him?
Doctor: They are for you.!!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

146 comments:

Maaya kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

இன்றைய ஆக்கத்தினை அலங்கரித்த அனைத்து அன்பு உள்ளம்களுக்கும் அன்பின் மேலான வணக்கத்துடன் கூடிய நன்றிகள்.

kmr.krishnan said...

தெரிந்தவன் சொல்கிறேன்.
தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன்.
புரிந்தவர்களுக்குச் சொல்கிறேன்
புரியாதவர்களுக்கும் சொல்கிறேன்.
இதுதான் காதல் என்பது.
அல்லது காதல் கவிதை என்பது!

ஹிஹிஹி! நம்ப கவிதை எப்பூடி?
தனுசுவுக்குப்பாராட்டுக்கள்.

தேமொழியின் பட‌ம் 'நொம்ப' கலருங்கோ! அந்த மரத்தில் தொங்கும் குலை குலையான பழங்கள் என்ன பழங்களோ?சிங்காரம் செய்யும் சிங்காரி அருமை. மயிலு கூடவே நின்னு வெட்கமே இல்லாமல் பார்க்குதே!

ஹாலாஸ்யம் கவிதைகளுக்கு கோனார் உரை தேவை. என்ன என்ன என்ன‌ என்று கே பி எஸ் கேட்டது போல ஏது ஏது ஏது என்று புதுமை செய்த நயம்
அருமை."ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தி" என்றால் என்ன?"அழகு ஒளிக்கும்...?" பார்வதி ராமச்சந்திரன் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டுகிறேன்.

சபரி, ஆனந்தமுருகன் நகைச்சுவை வாசித்து ரசித்தேன்.இவற்றைத் தழுவி தமிழில் கொடுக்கலாம்தானே?

ஜி ஆலாசியம் said...

ஆசிரியருக்கு வணக்கம்,
எனது கவிதைகளை வகுப்பறையில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி ஐயா!

ஜி ஆலாசியம் said...

////வெடியாய் சிரிக்கிறாள்
வெட்டியாய் அளக்கிறாள்
கை தட்டியே அதிர்கிறாள்
இவை யாவும்
என் நிழல் கண்டால் நிறுத்துகிறாள்.///

வாயாடியானாலும் அவளின் பெண்மை இங்கே நாணப் படுகிறது!
கவிதை நன்று பாராட்டுக்கள் நண்பரே!

ஜி ஆலாசியம் said...

கிருஷ்ணன் சார்... ஆக்கம் அருமை!!!
அனுபவக் கட்டுரை நல்ல விசயங்களை சிந்திக்கத் தோன்றுகிறது...

நான் பிறந்த வளர்ந்த ஊர் இப்படி ஒரு கிராம சூழல் இல்லை, (காலனியில் வசிப்போருக்கு) இருந்தாலும்
கிராம மக்களோடு பழக வாய்ப்பு கிடைத்து சில வற்றை கண்டும் கேட்டும் இருக்கிறேன்....

பொதுவாக "எதார்த்த வாதி வெகுஜன விரோதி" ன்று சொல்வார்கள் எப்படியோ உங்களை
அந்த நான்முகன் காத்து விட்டான் என்றேத் தோன்றுகிறது...

செயற்கரிய செய்வார் பெரியார் சிறியர்
செயற்கரிய செய்க லாகாதார்.

நல்லப் பதிவு பகிர்வுக்கு நன்றிகள் சார்.

(இங்கே சிலோன் சாலையில் இருக்கும் செண்பக விநாயகர் கோவிலில் இன்றைய தினம் காலையில் ஒரு குடும்பம் பெரும் யாகம் வளர்த்து... மிகவும் அருமையான முறையில் அபிஷேககங்களும் பூஜையும் நடந்ததை எதேச்சியாக இன்று கோவிலுக்கு சென்றபோது ஆத்மார்த்தமாக கண்டு வணங்கி களித்தேன்... இன்றும் அந்த பிள்ளையாரைப் பற்றிய ஆக்கம் கண்டத்தில் மிக்க மகிழ்ச்சி).

ஜி ஆலாசியம் said...

சகோதரியாரின் சித்திரம் மிகவும் அருமை...

அந்தப் பெண்மணியின் ஆடையில் நிறைய கவனமும் கொண்டது இன்னும் அழகு அதே போல் பின்புலத்தில் காணும் சென்நாவல் (செர்ரி) பழம்?! தொங்கும் அழகும் அருமை...
சென்ற வாரத்தை விட இம்முறை என்னை அதிகம் கவர்ந்தது... வாழ்த்துக்கள்.

ஜி ஆலாசியம் said...

திரு ஜி ஆனந்த முருகன் ஆக்கம் உண்மையைத் தாங்கி வந்துள்ளதால் நீதி போதனை பாடமாக ரசித்தேன்... நமது சகோதரிகள் கொஞ்ச சாந்தமாக அடுத்த ஆக்கத்திற்குப் போவார்கள் என்று நம்புவோம். நன்றி!!

ஜி ஆலாசியம் said...

எஸ் சபரி நாராயணன் சார்...

எழாவதை நான்காவதாக தந்திருந்தால்...

நாளும் இரண்டும் (சொல்ல) அருமை என்றிருப்பேன்.
பகிர்வுக்கு நன்றி!

thanusu said...

எனது கவிதையை வெளியிட்ட அய்யா அவர்களுக்கு நன்றிகள் .

thanusu said...

"ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி"

"அரச மரத்தை பிடித்த சனி பிள்ளையாரையும் பிடித்தது போல"

"ஆனைப்பசிக்கு சோளப்பொறி"

"அரிசி அள்ளும் காகத்தைப் போல"

"தூண்டில் போட்டவனுக்கு தக்கை மேல் கண்"

"கரும்பு கட்டுக்கு வரும் எறும்பு"

"காட்டுக்கு புலி ஆதரவு";"புலிக்கு காடு ஆதரவு"

"பாழ் ஊருக்கு நரி ராஜ"

"கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறதே"

"காஞ்சி ஊற்ற ஆள் இல்லாவிட்டாலும் கச்சை கட்ட ஆள் உள்ள ஊராக"

"பட்ட உன் பேரிலே சாகுபடி என் பேரிலே"

"கறுத்ததெல்லாம் நீர், வெளுத்ததெல்லாம் பால்"

"மரத்திலிருந்து வீழ்ந்தவனை பாம்பு தீண்டியது போல"

"நல்லவர்களுக்கு அடையாளம் சொல்லாமல் போவது"

இந்த பழமொழிகள் போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

சமத்துவம் வந்ததா?
சொல்லாமல் விடுவதா?
இது கதை அல்ல நிஜம்
என்பதால்
அறிந்துக் கொள்ள ஆவல்
தெரிந்து சொல்லுங்கள்.

thanusu said...

அலங்கரிப்பது
மானா? மயிலா ?
ஆடும் மயில்
அதிசயமாய் பார்க்குது !

thanusu said...

அழகு அழகு அழகு
ஆலாசியம் சொன்னதெல்லாம்
அழகோ அழகு

kmr.krishnan said...

//சமத்துவம் வந்ததா?
சொல்லாமல் விடுவதா?//

நான் பேசிய இந்த அனுபவம் 1980க்கு முன்னர் நடந்தது.32 ஆண்டுகள் கழிந்துவிட்டன. மாற்றங்கள் பலவும் இயற்கையாக வந்துள்ளன. ஆனாலும் இலை மறை காயாக சில பழக்க வழக்கங்கள் மாறாமலேயே உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் முன் போல ம‌வுனம் சாதிப்பதில்லை. முறையாகத் தங்கள் குறைகளை அதிகார பீடத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். நன்றி தனுசு சார்!

ஆக்கத்தைப் படித்து பின்னூட்டம் இட்ட சிங்கைச் செல்வருக்கு நன்றி.

என் ஆக்கத்தை வெளியிட்டு ஆதரவு அளித்துவரும் அய்யாவுக்கு நன்றிகள்.

thanusu said...

ஆனந்த முருகன்
கையை வைச்சா
அது எப்பொழுதும்
ரொம்போ ரொம்போ அச்சா.

thanusu said...

சபரிக்கு என்ன கோபம்
மலரை முள்ளாய் பார்க்குது
நிலவை நெருப்பாய் பார்க்குது

Ananthamurugan said...

kmr.krishnan said...
இவற்றைத் தழுவி தமிழில் கொடுக்கலாம்தானே?

தமிழில் மொழி மாற்றம் செய்ய நேரமின்மையால் அப்படியே வெளியிடப்பட்டது.தமிழில் வெளியிட்ட சில ஆக்கங்களை அய்யா,பிறகு வெளியிடுவரோ??மற்றபடி இது நகைசுவை அல்ல!!வாழ்வின் நிதர்சனம்!நமது அன்றாட வாழ்வில் நடப்பது. இது அனைத்து சகோதரிகளுக்கும் எனது மனைவிக்கும் சமர்ப்பணம்!! !பழமொழிக்கரசர் kmrk,பாட்டுக்கரசர் தனுசு,பக்திக்கரசர் ஆலாசியம்,படத்துகரசி தேமொழி, நகைசுவையரசர் சபரி,ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களும்!வணக்கமும்!!!!

V Dhakshanamoorthy said...

ஆறு பேர்களின் ஆக்கங்களும்
அறுசுவை போல் உள்ளது.
நன்றி!!

தேமொழி said...

///பதிவில் ஒலி வடிவத்தை ஏற்றுவதற்கு கிடைக்கும் வசதியைக் குறித்து தெரிந்தவர்கள் (மைனர் உட்பட அனைவரும்) எழுதுங்கள்///

ஐயா, காணொளியாக மாற்றி சுட்டி கொடுப்பதுதான் சுலபமான முறை என எனக்குத் தோன்றுகிறது.
நான் முயற்சி செய்தேன். உபயோகித்தது " Windows Movie Maker 2.6".
பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் பல படங்களை உபயோகிக்கவில்லை. மைனர் இதுபோன்று காணொளி தயாரிப்பதில் வல்லவர் என்று முன்பு ஒரு முறை குறிப்பிட்டுளார். இந்த முறையை உபயோகப்படுத்தி அவர் மனதில் எவ்வாறு கற்பனை செய்தாரோ அதுபோலவே காணொளி தயாரிக்கலாம். பின்னர் "யு ட்யூப்" வலையேற்றி அதன் சுட்டி கொடுத்தால் உங்களுக்கு எளிதாக முடியும்.

நான் முயற்சி செய்த காணொளியின் சிட்டி இது:
http://youtu.be/vykJe-dG-kw
நிச்சயமாக இது மைனர் கற்பனை செய்து வைத்திருப்பது போல 0.0009% கூட இருக்க வாய்ப்பே இல்லை:)))))))))

தேமொழி said...

என்னுடைய ஓவியத்தை மாணவர் மலரில் வெளியிட்டதற்கு நன்றி ஐயா, அதைப் பார்த்து ரசித்தவர்களுக்கும், கருத்து சொன்னவர்களுக்கும் நன்றி. ஏதோ ஒரு மாத நாட்காட்டியில் வெளியான படத்தைப் பார்த்து பல ஆண்டுகளுக்கு முன் வரைந்தது இந்தப் படம்.
-----
புதுக்கவிஞர் தனுசு எழுதிய 'புரியவில்லை புரியவில்லை' கவிதை அவருக்கும் புரிந்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதைப் படித்த அத்தனை பேருக்கும் புரிந்து போய் பதில் கவிதை எல்லாம் வந்துவிட்டது ஆச்சர்யம்.
-----
அப்போ KMRK ஐயா கனவில் பிள்ளையார் வந்து சொல்லாமலே நிறுத்திவிட்டார்.
"ஆதிக்க சமூகம் எந்த அஸ்திரத்தால் தாழ்த்தப்பட்டவர்களை வெளீயிலேயே நிறுத்துகிறது?எண்ணிக்கையில் மற்றவர்களுக்குச் சமமாக இருந்தும் தாழ்த்தப்படவர்கள் ஏன் இதனைத் தட்டிக் கேட்காமல் பணிந்து போகிறார்கள்?"
இதுதான் மூளைச் சலவை என்பது.....psychology major ஒருவரிடம் இதைப்பற்றி விளக்கத் துணிந்தால் அது என் அறிவீனம்
-----
ஆலாசியம் கேள்வியாக தொடர்ந்து கேட்கவும் கொஞ்சம் குழம்பி போய் நான் அவர் கூடவே
"அன்பிற்கு அளவும் இல்லை அழிவும் இல்லை
பண்பிற்கு பகையும் இல்லை பழியும் இல்லை"
என்று பதில் சொல்லி பாடலை படித்துவிட்டேன்
மரபுக் கவிஞர் ஆதிபராச்கதியைப் புகழ்ந்து பாடிய திருப்புகழும் நன்றாக இருந்தது
-----
Minor ...I'm really impressed, and I mean it :)
-----
வீட்டில் வெட்டி முறிக்கிறது எப்படி என்பது புரிகிறது. வெட்டி ஆஃபீசர்கள் சங்கத்தின் சார்பாக ஆனந்தமுருகனுக்கு பூங்கொத்து ஒன்றும் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
-----
நகைச்சுவைகளை நகைச்சுவை கண்ணோட்டத்துடன் மட்டும் படிக்கவும் என்று ஐயா கேட்டுக் கொண்டதால் போனால் போகிறதென்று சபரியை இப்பொழுதைக்கு மட்டும் விட்டு விடுகிறேன். ஆனால் தப்பித்து விட்டதாக எண்ணினால் அது தவறு

kmr.krishnan said...

//இதுதான் மூளைச் சலவை என்பது//

ஆக்கத்தைப் படித்துப் பின்னூட்டம் இட்ட தேமொழிக்கு தேமொழிக்கு நன்றி

minorwall said...

வழக்கம்போல் ஆக்கங்கள் அனைத்தும் அருமை..

exactly at the 11th hour லே அனுப்பப்பட்ட எனது ஆக்கத்தையும் இணைத்துப் பதிவிட்ட ஆசிரியருக்கு நன்றி..

கொஞ்சம் வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால்
மதியத்துக்கு மேலே எனது விமர்சனங்களை எழுதுகிறேன்..

minorwall said...

வழக்கம்போல் ஆக்கங்கள் அனைத்தும் அருமை..

exactly at the 11th hour லே அனுப்பப்பட்ட எனது ஆக்கத்தையும் இணைத்துப் பதிவிட்ட ஆசிரியருக்கு நன்றி..

கொஞ்சம் வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால்
மதியத்துக்கு மேலே எனது விமர்சனங்களை எழுதுகிறேன்..

Thanjavooraan said...

கவிஞர் தனுசுவின் கவிதைகளில் மெறுகேறுவது மட்டுமல்ல, சுவையும் கூடிவருகிறது. நல்ல தொடக்கத்தை அடுத்து நல்ல முன்னேற்றம், வாழ்க, வளர்க! ஆலாசியம் அவர்கள் சந்தக் கவிதையைச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டார். என்னென்ன திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிக் கொணரும் ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி சொல்ல வேண்டும். கே.எம்.ஆரின் தஞ்சை பிள்ளையார்பட்டி அனுபவம் எனக்கு அப்போதே தெரியும். அந்தப் பிள்ளையார் வழிபாட்டுக்கு வராமல் இருந்ததற்கு இரண்டு காரணங்கள். அந்த ஊரில் பெரும்பான்மையோர், தர்மகர்த்தாக்கள் உட்பட அனைவருமே வைணவ சம்பிரதாயத்தில் ஊறியவர்கள். பிள்ளையார் அவர்களுக்கு அன்னியப்பட்டு விட்டார். மேலும் அந்த ஆறடி பிள்ளையார் துதிக்கையில் வெட்டுப்பட்ட காயம் இருக்கிறது. பின்னமுள்ள சிலையை வழிபடுவதில்லை. மற்றபடி அந்தப் பணிக்கு எண்ணெய் தந்து உதவிய இதயங்களையும் அவர் சொல்லியிருக்கலாம். இப்போது அந்தப் பிள்ளையார் கொழிக்கிறார் அந்த ஊராரும் இப்போது பிள்ளையாரைக் கவனிக்கத் துவங்கிவிட்டனர். நல்ல பதிவு. சுவையான நிகழ்ச்சிகள். அதுபோலவே வல்லத்திலுள்ள பெரியார் பாலிடெக்னிக் அருகில் மூடிக் கிடந்த‌ பெருமாள்கோயிலைத் திறந்து துப்புறவு செய்து வழிபாட்டுக்குக் கொண்டு வந்த எங்கள் அலுவலகத் தோழர் அரவிந்தன் அவர்களையும் இந்த நேரத்தில் நினைக்க வேண்டும்.

Thanjavooraan said...

சகோதரி தேமொழியின் சித்திரங்களைக் காட்சிக்கு வைக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தேன். ஒவ்வொன்றாக வெளிப்படும் அவருடைய படங்களைப் பார்த்ததும், அந்த கண்காட்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்ய எல்லா தகுதிகளும் இருப்பதாகத் தெரிகிறது. அடேயப்பா! எத்தனை திறமை. விரைவில் அவருடைய அந்த படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஆவன செய்ய விரும்புகிறேன். ஆனந்தமுருகனின் பதிவுகளை நீண்ட நாட்களாகப் படித்து வருகிறேன். மிகவும் அருமையான பதிவுகள். ஒரே குறை, அவை தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்பதுதான். நகைச்சுவைத் துணுக்குகளும் மிகச் சுவையானவை, அதுவும் தமிழில் மொழிமாற்றம் கண்டால் நன்றாக இருக்கும். தமிழை உடனே படிக்க முடிகிறது. ஆங்கிலத்துக்கு மாற மனம் சற்று தாமதமாகிறது (எனக்கு). இந்த வாரமலர் மிகவும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Parvathy Ramachandran said...

தனுசுவின் கவிதை எளிமையிலும் எளிமை .அருமையிலும் அருமை.உண்மை.வெறும் புகழ்ச்சியில்லை.

பெண்மனமே ஒரு கவிதை!
அதை வைத்து ஒரு கவிதை!
இன்றெழுத எழுத ஏது விதை?
இப்போதே சொல்வீரோ இதை!
(இது சொந்தக் கவிதை)
குறிப்பாக,
'விழியை உருட்டுகிறாள்
இமையை விரிக்கிறாள்
உதட்டை பிதுக்குகிறாள்
இதை யாரும் பார்த்தால்
நுனி மூக்கில் வேர்க்கிறாள்'

எனத்தொடங்கும் வரிகள் எனக்கு,

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் (திருக்குறள், அதிகாரம் 110, குறிப்பறிதல்)

முதலிய குறட்பாக்களையும், 'ஒரு பக்கம் பார்க்கிறா' தொடங்கி ஒரு சில திரைப்பாடல்களையும் ஒருசேர நினைவிற்கு கொணர்ந்தது. நல்ல ஆக்கம்.நன்றி.

அய்யர் said...

///யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் (திருக்குறள், அதிகாரம் 110, குறிப்பறிதல்)..///

திருக்குறளை நினைவில் தந்தமைக்கு
நன்றிகள் சகோ பார்வதியாரே..

17 அதிகாரங்களில் நட்பை பற்றி குறிப்பிடும் திருக்குறளில்

குறிப்பறிதல் என்ற தலைப்பில் இரண்டு அதிகாரம் உண்டு..

ருசித்து மகிழவும்
ரசித்து படிக்கவும்

திருக்குறளை தவிர வேறொரு வேதம் நமக்கு தேவையோ..?

Parvathy Ramachandran said...

பிள்ளையார் விருத்தாந்தம் வியப்பாக இருந்தது. அதைவிட, சொல்லடைகள் அருமை. இரண்டையும் இணைத்த விதம் அழகு.

தீண்டாமைக்கொடுமை பற்றி நேரடி அனுபவம் இல்லாவிடினும், திருமணத்திற்குப் பிறகு, என் மாமனார், சுதந்திரப் போராட்ட தியாகியான, தன் தந்தை(என் கணவரின் தாத்தா), சமயபுரம் அம்பி ஐயர், தான் நடத்தி வந்த ஹோட்டலில், எல்லா இனத்தவருக்கும் உணவளிக்கவேண்டும் என்று, காந்தியடிகள் தன்னிடம் நேரடியாக வாங்கிய வாக்குறுதிக் கொப்ப நடந்து, அதனால், ஜாதிப்ரஷ்டம் செய்யப் பட்டதோடல்லாமல், உயர்சாதியினர் யாரும், தன் ஹோட்டலில் சாப்பிட‌ வராததால், நொடித்துப் போய், ஊரைவிட்டே போகவேண்டிய நிலைக்கு ஆளானதையும் கண்ணீர் மல்கச் சொல்லுவார். ஆனாலும் தன் தந்தையின் செயலைப்பற்றிப் பெருமிதமே அவருக்கு. தங்களின் வலைப்பதிவை ஒருமுறை திருச்சி சென்றபோது அவரிடம் காட்டியிருக்கிறேன். " உங்களை போல இவரது தந்தையும் ஒரு தியாகியே" என்று தொடங்கியபோது, " எங்க ரெண்டு பேருக்கும் அதனால் பெருமைதான். ஆனா, இதுவே உங்க ஜெனரேஷனா இருந்தா எங்கள பொழப்பத்தவம்பேள்" என்று முடித்தார். அவரும் பத்திரிகைகளுக்கு எழுதுவார். அவர் தந்தையைப் பற்றி ஒரு நாளிதழில் அவர் எழுதி வெளிவந்ததன் 'காப்பியை' பின் ஒரு நாளில் பார்வைக்குத் தருகிறேன்.

அய்யர் said...

1.தனுசு காரரின் கேள்விக்கு பதில்
"நாய்" - சரிதானே தோழரே செல்ல நாயை பெண்ணாக உருவகித்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்..

2. பிள்ளையார் என்றதும் முதலில் வந்து விட்டார் சாதிகள் பற்றி வகுப்பறையில் தொடங்கிய சர்ச்சையே இன்னமும் தொடரவில்லை.. மீண்டும் சாதிகளா..
சாதிக்க பிறந்தவர்கள் நாம்..
சாதிக்காக பிறந்தவர்ளில்லையே
போதிக்க தொடங்கும் ஒவ்வொருவரும்
பாதிக்காமல் இருந்தால் சரியே..

3. ஓவியத் திலகத்தின் ஒப்பனை
ஓஹோ.. அது சரி மயிலெப்படி அங்கே.. அது ஓவியம் அதனால் சரிதான்

4.சிங்கை செல்வர் இப்போ இந்த திசையில் ..
எது எதுவாக இருக்கிறதோ அது
அது அதுவாக இருப்பதில்லை..

அதற்கும் ஒரு "ஏது" இருக்கிறது
அது எதற்கு

6. வெட்டி முறிக்கிற வேலைகளை
பட்டியலிட்டு காட்டியது சரி..
ஆனால் ஒவ்வொரு அலங்கோலங்களுக்கும் நம் விணையே காரணம் - இது கசப்பான உண்மை

7.மைனர்வாலின் ஒலிச் சேர்க்கையை பார்க்க கேட்க முடியவில்லை. பிழை எமது கணினியிலும் இருக்கலாம்

8. சபரியின் சுவைகளை ரசிக்க தெரியவில்லை அல்லது புரியவில்லை..

இன்றைய விருந்தில்
அறு சுவையில் ஒரு சுவையில்லை
அது எது என கண்டுபிடிக்கவும்.
(சகோ தேமொழி கண்டுபிடித்திடலாம் அதற்குள் சகோ உமா முந்திக் கொள்வாரோ பார்ப்போம்)

Parvathy Ramachandran said...

ஒப்பனை செய்து கொள்ளும் பெண்மயிலும் அவள் முன் நிற்கும் ஆண்மயிலும் அழகு.

முகத்தில் சிருங்கார ரசம் பொங்கும் பெண்ணை வரைவதில் தெரியும் அதே கவனம், அவள் கை மருதாணி, கையில் அணிந்திருக்கும் கங்கண வளைகள், அவள் பக்கத்தில் வைத்திருக்கும் மரத்தாலான ஒப்பனைப் பெட்டி,குங்குமச் சிமிழ், சீப்பு,கலைநயம் மிக்க கண்ணாடி,முதலியவற்றை வரைவதிலும் செலுத்தப்பட்டிருப்பது அருமை. தேமொழிக்கு ஜே!

அய்யர் said...

///அந்த ஊரில் பெரும்பான்மையோர், தர்மகர்த்தாக்கள் உட்பட அனைவருமே வைணவ சம்பிரதாயத்தில் ஊறியவர்கள். பிள்ளையார் அவர்களுக்கு அன்னியப்பட்டு விட்டார். மேலும் அந்த ஆறடி பிள்ளையார் துதிக்கையில் வெட்டுப்பட்ட காயம் இருக்கிறது. பின்னமுள்ள சிலையை வழிபடுவதில்லை.///

காரணத்தை சொல்லுகையில்
சாதீ)யும் தெரிகிறதே.. உடன் நம்பிக்கையும் வளர்(க்)கிறதே..

திலிப் ரகுமானானதும்
ரஹிம் ராம் ஆனதும்
நியுமரலாஜி செய்த மாயாமோ..

தஞ்சை சகோதரரின் பகிர்வுக்கு நன்றிகள்..

அய்யர் said...

///அந்த ஊரில் பெரும்பான்மையோர், தர்மகர்த்தாக்கள் உட்பட அனைவருமே வைணவ சம்பிரதாயத்தில் ஊறியவர்கள். பிள்ளையார் அவர்களுக்கு அன்னியப்பட்டு விட்டார். மேலும் அந்த ஆறடி பிள்ளையார் துதிக்கையில் வெட்டுப்பட்ட காயம் இருக்கிறது. பின்னமுள்ள சிலையை வழிபடுவதில்லை.///

காரணத்தை சொல்லுகையில்
சாதீ)யும் தெரிகிறதே.. உடன் நம்பிக்கையும் வளர்(க்)கிறதே..

திலிப் ரகுமானானதும்
ரஹிம் ராம் ஆனதும்
நியுமரலாஜி செய்த மாயாமோ..

தஞ்சை சகோதரரின் பகிர்வுக்கு நன்றிகள்..

தேமொழி said...

எட்டைப் பற்றி எழுதச் சொன்னால்
எழுதிக் கொண்டே இருக்கலாம்
என்று யாரோ சொன்னார் ...யாரோ சொன்னார்...

இன்று பதிவில் எட்டி எட்டிப் பார்த்தால்
எட்டு பாய்ண்ட் கருத்து மட்டும் எழுதிவிட்டு
போயே போயிட்டார்... போயே போயிட்டார்...

எழுதியவரை முதல் பாகமாக இன்றிலிருந்து
எட்டாம் நாள் அவர் பதிவிடுவாரா என்பதை
அவரே இன்று சொல்வாரா ... சொல்வாரா...

ஜி ஆலாசியம் said...

/////Maaya kanna said...
வாத்தியார் ஐயா வணக்கம்.

இன்றைய ஆக்கத்தினை அலங்கரித்த அனைத்து அன்பு உள்ளம்களுக்கும் அன்பின் மேலான வணக்கத்துடன் கூடிய நன்றிகள்.////

அனைவரின் சார்பாகவும் வணக்கமும் நன்றிகளும் சகோ...

ஜி ஆலாசியம் said...

////kmr.krishnan said...
ஹாலாஸ்யம் கவிதைகளுக்கு கோனார் உரை தேவை. என்ன என்ன என்ன‌ என்று கே பி எஸ் கேட்டது போல ஏது ஏது ஏது என்று புதுமை செய்த நயம் ////
ஹி...ஹி..ஹி..
மிக்க நன்றி சார்!

ஜி ஆலாசியம் said...

//// thanusu said...
அழகு அழகு அழகு
ஆலாசியம் சொன்னதெல்லாம்
அழகோ அழகு/////

நன்றிகள் நண்பரே!

ஜி ஆலாசியம் said...

/// Ananthamurugan said...
!பழமொழிக்கரசர் kmrk,பாட்டுக்கரசர் தனுசு,பக்திக்கரசர் ஆலாசியம்,படத்துகரசி தேமொழி, நகைசுவையரசர் சபரி,ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களும்!வணக்கமும்!!!!///
ஹாஸ்ய சக்ரவர்த்தி அல்லவா நீங்கள்!!!
நன்றிகள் சார்!

ஜி ஆலாசியம் said...

//// V Dhakshanamoorthy said...
ஆறு பேர்களின் ஆக்கங்களும்
அறுசுவை போல் உள்ளது.
நன்றி!!////

அனைவரின் சார்பாகவும் நன்றிகள் சார்!

ஜி ஆலாசியம் said...

////தேமொழி said...

ஆலாசியம் கேள்வியாக தொடர்ந்து கேட்கவும் கொஞ்சம் குழம்பி போய் நான் அவர் கூடவே
"அன்பிற்கு அளவும் இல்லை அழிவும் இல்லை
பண்பிற்கு பகையும் இல்லை பழியும் இல்லை"
என்று பதில் சொல்லி பாடலை படித்துவிட்டேன்
மரபுக் கவிஞர் ஆதிபராச்கதியைப் புகழ்ந்து பாடிய திருப்புகழும் நன்றாக இருந்தது///

ஹி..ஹி..ஹி...

உண்மையான அன்பாக இருந்தால் அது ஒரு போதும் அழியாது, அந்த அன்பை ஒரு அளவுக்குள் சுருக்கவும் முடியாது என்பதாக நீட்டிக் கொள்ளுங்கள் இனி எளிதில் புரியும்.:):) மரபுக் கவிதையைப் பாராட்டியதற்கும் நன்றிகள் சகோதரியாரே!

ஜி ஆலாசியம் said...

/// Thanjavooraan said...
கவிஞர் தனுசுவின் கவிதைகளில் மெறுகேறுவது மட்டுமல்ல, சுவையும் கூடிவருகிறது. நல்ல தொடக்கத்தை அடுத்து நல்ல முன்னேற்றம், வாழ்க, வளர்க! ஆலாசியம் அவர்கள் சந்தக் கவிதையைச் சொந்தமாக்கிக் கொண்டு விட்டார். என்னென்ன திறமைகள் எங்கெல்லாம் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளிக் கொணரும் ஆசிரியர் ஐயாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.////

மிக்க நன்றிகளும் தாழ்மையான வணக்கங்களும் ஐயா!

ஜி ஆலாசியம் said...

/////Parvathy Ramachandran said...
தனுசுவின் கவிதை எளிமையிலும் எளிமை .அருமையிலும் அருமை.உண்மை.வெறும் புகழ்ச்சியில்லை.

பெண்மனமே ஒரு கவிதை!
அதை வைத்து ஒரு கவிதை!
இன்றெழுத எழுத ஏது விதை?
இப்போதே சொல்வீரோ இதை!
(இது சொந்தக் கவிதை)////

ஆஹா தங்களின் வரிகளும் அருமை!!! உணர்ச்சியை அழகாகச் சொல்வது கவிதை என்பதும்; அதன் இலக்கணங்களில் ஒன்று... தாங்களும் இரண்டடி வேண்பாகவே இதைக் கூறி இருக்கலாம். இதோ பாருங்கள் புனையா ஓவியத்திற்கு புனைந்த வண்ணத் தோடு தங்களின் கவிதை..

பெண்ணின் மனமே ஒருக்கவிதை - அதன்
மேன்மையை வைத்து புதுக்கவிதை

இன்றெழுத எது எதுவிதை -இப்போது
இங்கே சொல்வீரோ அதை.

தாங்களும் அழகாக எழுதுகிறீர்கள் நான் முன்பே ஒரு முறை பின்னூட்டத்தில் சொல்லி இருந்தேன் சகோதரியார் தேமொழியைப் போல் தாங்களும் ஷோபனாவும் நல்லக் கவிதையத் தர முடியும் என்று... கவி என்பது இந்த உலகத்தை பெண்மையால் பார்ப்பது; என்பது கவிதை இலக்கணங்களில் ஒன்றே... அப்படித்தான் ஒவ்வொரு கவிஞனுள்ளும் இருக்கும் பெண்மையே கவிதை...
ஆகப் பெண்ணாய் பிறந்த உங்கள் அனைவருக்கும் அருமையாக வரும் அடுத்து ஒரு கவிதையை தாருங்கள்.. நன்றி, பாராட்டுக்கள்.

ஜி ஆலாசியம் said...

/// அய்யர் said...சிங்கை செல்வர் இப்போ இந்த திசையில் ..
எது எதுவாக இருக்கிறதோ அது
அது அதுவாக இருப்பதில்லை..
அதற்கும் ஒரு "ஏது" இருக்கிறது
அது எதற்கு///

மிக்க நன்றி ஐயர் அவர்களே!

சூது வாது நிறைந்த உலகம்
போதுகள் மலராது ஒரு
பொழுதில் கருகும்; கலியானது
விழியிலும், மொழியிலும் எங்கும்
வியாபித்து இருக்கிறதல்லவா!

சாதுக்கள் சடுதியில் காண்பதற்கில்லை
சஞ்சலம் நிறை உலகில் சுயநல
நெஞ்சமன்றோ சுடர் அழிக்கிறது!

எது எது ஏது என்றாலும்
அது அது அது என்றாலும்
மது, மாது, மயக்கம் மலிந்த உலகில்
அது, இது அனைத்திற்கும்
பொது எது? அந்த பொது
புலரும் காலை அப்பொழுது
புலரும் (விடியும்) நற்பொழுது!!!

நன்றிகள் ஐயரே!

ஜி ஆலாசியம் said...

திருத்தம் ஐயர் கூறும் முன்னமே!
சுடரை அழிக்க முடியாது..
அது அழியாது, அழிவில்லாதது!

அதனாலே..
"----------------------------------------- -சுயநல
நெஞ்சமன்றோ சுடரை மறைக்கிறது!"

நன்றி.

minorwall said...

@தனுசு

"கண்கள் இரண்டால்..
உன் கண்கள் இரண்டால்
எனைக் கட்டி இழுத்தாய்..
உயிரே.."
என்று போகிறது தனுசுவின் கவிதை..

'சொல்லித் தெரியா
மன்மதக் கலைக்கு
ஆதிப் புள்ளிவைத்து
காதல் கோலமிட
நீர் தெளித்தார்
கவிஞர் அவர்..'

வாழ்த்துக்கள்..

minorwall said...

@தேமொழி

"உயிர் வாங்கிடும் ஓவியம் நீயடி.."

எனப் பாடத் தூண்டுகிறது
ஓவியத்துப் பெண்ணவளின் வனப்பு....

"பூ வாசம் புறப்படும் பெண்ணே..நீ பூ வரைந்தால்..
தீ வந்து விரல் சுடும் கண்ணே... நீ தீ வரைந்தால்..
உயிரல்லதெல்லாம் உயிர்கொள்ளும் என்றால்
உயிருள்ள நானோ என்னாகுவேன்?.."

என்று அன்பே சிவம் பாடலை மாற்றி
எல்லை மீறிப் பாடத்தூண்டுகிறது.......
ஓவியரின் கைவண்ணத்தின் சிறப்பு..

வாழ்க.வளர்க..

Parvathy Ramachandran said...

'வீட்டுல என்னதான் வெட்டி முறிக்கிறே?' மனைவி வீட்டுல சும்மாதான் இருக்காங்க....... என் மனைவி 'ஹவுஸ் வைஃப்' (அப்ப......ஹீம் வேணாம்) என்கிற மஹானுபாவர்களுக்கு சரியான பதிலடி, அனுப்பிய ஆனந்தமுருகனுக்கு ஸ்பெஷல் தாங்ஸ்.

சபரியின் துணுக்குகளுக்கு, தேமொழியின் பதிலையே காப்பி பேஸ்ட் செய்து விட்டு..............

இளையராஜாவின் இன்னிசை 'மகுடி'யில் மைனரின் கீதமும் சேர்ந்த இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே.......பெருமதிப்பிற்குரிய செந்தமிழ்ச்சிங்கம் மைனரிடம் இன்னும் என்னென்ன திறமைகள் ஒளிந்திருக்கின்றனவோ.....'காலக்கணக்குகளை' யார் அறிவார்?

ஜி ஆலாசியம் said...

மைனர் தங்களின் குரலில் அருமையாக அசத்தி இருக்கிறீங்க..
சூப்பர்!!! இருந்தும் சரியான மென்பொருளைப் பயன் படுத்தி இருந்தால் ஒலி இலையும் கூடவே வைத்திருக்கும் ஏது கிடைத்திருக்குமே..
இதைப் பாருங்கள் முடியுமா என்று..

Karaoke Mixer 1.1 Description:
With Karaoke Mixer you don't need advanced applications to mix karaoke background and recorded voice any more.

With this great tool mixing Karaoke is very easy. Anyway you can use many advanced settings to improve sound of your voice. You can adjust precisely synchronisation, change independently volume, balance, bass, treble and TONE for both sources.

For MIDI source you have full support for MIDI channels. Change its volume, balance and instrument, xwitch channel on and off. For vocal you can even add 4 different audio effects or choose one of 14 sound presets.
Karaoke Mixer 1.1 Requirements:
· Pentium 600MHz Procesor or better
· 16MB RAM
· MIDI interface/Windows-compatible sound card
Karaoke Mixer 1.1 Limitations:
· Trial version 15 days.
· Nag screen.
Related:
karaoke mixer - karaoke mixer - realtek karaoke mixer - karaoke mixer player - karaoke ware mixer - image mixer 3
Related searches:
karaoke - karaoke 5 - advanced audio mixer - advanced karaoke player
Karaoke Mixer security information
You cannot download any crack or serial number for Karaoke Mixer on this page. Every software that you are able to download on our site is legal. There is no crack, serial number, hack or activation key for Karaoke Mixer present here. Our collection also doesn't contain any keygens, because keygen programs are being used in illegal ways which we do not support. All software that you can find here is freely downloadable and legal.
Karaoke Mixer installation package is prepared to be downloaded from our fast download servers. It is checked for possible viruses and is proven to be 100% clean and safe. Various leading antiviruses have been used to test Karaoke Mixer, if it contains any viruses. No infections have been found and downloading Karaoke Mixer is completelly problem free because of that reason. Our experts on malware detection tested Karaoke Mixer with various spyware and malware detection programs, including fyxm.net custom malware and spyware detection, and absolutelly no malware or spyware was found in Karaoke Mixer.
All software that you can find on our servers, including Karaoke Mixer, is either freeware, shareware or open-source, some of the software packages are demo, trial or patch versions and if possible, we also host official full versions of software.
Because we want to be one of the fastest download sites on the web, we host all the software including Karaoke Mixer on our servers. You cannot find here any torrents or download links that would lead you to dangerous sites.
Fyxm.net does support free software, however we do not support warez or illegal downloads. Warez is harming producers of the software.
http://download.fyxm.net/Karaoke-Mixer-71353.html


அருமை, பாராட்டுக்கள்.

kmr.krishnan said...

//அவர் தந்தையைப் பற்றி ஒரு நாளிதழில் அவர் எழுதி வெளிவந்ததன் 'காப்பியை' பின் ஒரு நாளில் பார்வைக்குத் தருகிறேன்.//

காத்திருக்கிறேன் பார்வதி அம்மையாரே. அந்தப் பொக்கைவாய்க் கிழவருக்காக‌
குடும்பத்தையும், சொத்துக்களையும், வாழ்க்கையையும் இழந்தவர்கள் ஏராளம்.
அவர்களைப்பற்றி, அவர்களுடைய தியாகத்தைப் பற்றி மறந்துவிடாமல் பேசவாது வேண்டும். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

kmr.krishnan said...

//அவர் தந்தையைப் பற்றி ஒரு நாளிதழில் அவர் எழுதி வெளிவந்ததன் 'காப்பியை' பின் ஒரு நாளில் பார்வைக்குத் தருகிறேன்.//

காத்திருக்கிறேன் பார்வதி அம்மையாரே. அந்தப் பொக்கைவாய்க் கிழவருக்காக‌
குடும்பத்தையும், சொத்துக்களையும், வாழ்க்கையையும் இழந்தவர்கள் ஏராளம்.
அவர்களைப்பற்றி, அவர்களுடைய தியாகத்தைப் பற்றி மறந்துவிடாமல் பேசவாது வேண்டும். தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

ஜி ஆலாசியம் said...

மைனர் உங்களின் குரலில் அசத்தி இருக்கிறீங்க...
மென்பொருள் ஒலி இழைகளையும் இழைத்து தரும் படியானதாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
மிகவும் அருமை, பாராட்டுக்கள். வகுப்பறையில் ஒருப் பாடகர் அடையாளம் காணப் பட்டுள்ளார்... எனது பள்ளியில் கிட்டப்பா என்றே ஒரு அருமையான பாடகன் எனதருகில் அமர்ந்திருப்பான் அவனின் ஞாபகம் வந்தது..

இதற்கு முன்பு இட்டப் பின்னூட்டம் காணாமல் போயிற்று அதனால் இன்னும் ஒன்றைப் போடுகிறேன். நன்றி.

kmr.krishnan said...

//அதுபோலவே வல்லத்திலுள்ள பெரியார் பாலிடெக்னிக் அருகில் மூடிக் கிடந்த‌ பெருமாள்கோயிலைத் திறந்து துப்புறவு செய்து வழிபாட்டுக்குக் கொண்டு வந்த எங்கள் அலுவலகத் தோழர் அரவிந்தன் அவர்களையும் இந்த நேரத்தில் நினைக்க வேண்டும்.//

அந்தப்பகுதி முழுமையையும் அந்த நிறுவனம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து கோவிலையும் அழிக்க இருந்த நேரத்தில் அரவிந்தன் ஈடுபாடு
கொண்டு கோவிலை மீட்டெடுத்தார். மறக்க முடியுமா?பின்னூட்டத்திற்கு நன்றி கோபாலன்ஜி அவர்களே!

minorwall said...

தேமொழி ஓவியத்தைப் பார்க்கையில்
மேக் அப் அயிட்டங்கள் பற்றி
ஏற்கனவே பார்வதியக்கா அவர்கள் சொல்லிட்டதாலே
விடுபட்டு என் கண்ணில் பட்ட
கவர்ந்த விஷயங்களை பட்டியலிட்டு விடுகிறேன்..

இன்னும் சில நாட்களிலே உதிரப்போகும்
மரத்தின் பழுத்த இலைகள் தன் கடைசி காலத்திலே
தேமொழியின் ஓவியத்துக்கு தனி அழகைச்சேர்த்திருக்கின்றன..
முற்றிலும் பழுத்த,பாதிபழுத்த இலைகளை
வேறுபடுத்திக் காட்ட மஞ்சளுடன்
சிவப்புகலந்த பிரவுன்ஷேடில் ஆங்காங்கே டச்
பண்ணியிருப்பது மனதை டச் பண்ணுகிறது..

பேக்ரவுண்ட் ஸ்கைப்ளூகலரைவிட சேலையின் டீப் ஸ்கைப்ளூகலரின் ப்ரைட்நெஸ் கூட்டி
வேறுபடுத்திக் காட்டியிருப்பது படத்தை நல்ல எடுப்பாய்த் தெரிய வைக்கிறது....
மயிலைப் பார்ப்பதா கண்ணாடியைப் பார்ப்பதா என்ற போராட்டத்தில்
மயிலே ஈர்த்தது என்பதை அவளின் பார்வை சொல்கிறது..
ஒவ்வொரு இடத்திலும் ஓவியர் ஜொலிக்கிறார்..

மெல்லிடையாளின் புடவைத் தலைப்பின்,
கொசுவத்தின் சுருக்கங்கள் மடிப்புகளாய்
மிக மிக நேர்த்தியாய் மனதைச் சுண்டி இழுத்தாலும்..
மேலாப்புத் துணியை இழுத்து கிளிவேஜை மறைத்தும்
லோ-ஹிப் கட்டாமல் 'நாவல் ஷோ'வைத் தவிர்த்தும்
செய்திருக்கும் ஓவியரின் கஞ்சத்தனம்
தேடித் தவிக்கும் ஆண்மயிலின் கண்களுக்கு
ஏமாற்றத்தைத் தந்ததென்னவோ உண்மைதான்..

minorwall said...

சம்பவத்தை விவரித்ததிலே இன்று புது முயற்சியாக வரிகளினூடே சொல்லடைவுகளைத் திணித்து வெஜிடபிள் ரோல் ஆக சுவைபடத் தந்திருக்கிறார்.

நறு(க்) நறு(க்) என்று கடிக்க மிளகாயாய் ஆதிக்கசக்தியினரின் சிவப்பான விஷயங்களும், துவண்டு போன முட்டைக்கோசாய் தள்ளிவைக்கப் பட்டோரின் விஷயங்களுமாய் இயல்பான சமூகத்தில் தன் ரோலை நன்றாகவே சுவைபடச் செய்திருந்தார் KMRK.

பிள்ளையார் பிடிப்பது என்பது ஒரு கலை..அதை நான் நன்கு அறிவேன்..

ஒவ்வொரு பொங்கலன்றும் சாண உருண்டையில் பிள்ளையார் பிடிப்பது எங்கள் பகுதியில் வழக்கம்..

எனக்கு எப்போதோ தோன்றிய பழக்கத்திலே நான் ஊரிலிருந்த கால கட்டங்களில் பொங்கல் அன்று பிள்ளையார் உருவத்தைக் களிமண்ணிலே செய்து குண்டுமணியால் கண்களும் தும்பிக்கையிலே பிஞ்சு மாதுளையையும் வைத்து சம்மணமிட்டு அமரச்செய்து படிக்கட்டுகள் அமைத்து
சுற்றிலும் தும்பைப் பூவைத் தூவி தலைக்கிரீடத்துக்கு செவ்வந்தியும் தும்பையுமாய்ச் சூட்டி மிக அழகாய் அவரை படையலை ஏற்கத் தயார் செய்வது வாடிக்கை..தெய்வபக்தி சிரத்தை,ஆன்மீக நட்டம் என்றெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு ஆர்வத்திலே ஒருமுறை செய்துவிட அது அக்கம் பக்கத்து எல்லோருக்கும் பிடித்துப் போய்விட, அதன் பின் ஒவ்வொரு சமயமும் தொடர்ந்தது..

KMRK வின் பிள்ளையார்ப் பாசம் எனக்கு நினைவுகளைக் கிளறிவிட்டது..

minorwall said...

அண்ணன் ஆலாசியம் அவர்களின் கவிதையிலே ஏதேதோ விசயங்களை 'ஏது'வாய்ச் சொல்லியிருக்கிறார்..

குரோதம் பகுதியில் வரும் 'கேண்மை' என்னவென்று புரியவில்லை..

தமிழ்வார்த்தைகளுக்கு டிக்ஷனரி தேட வைத்துவிடுவார் போலும்..
'அகராதி பிடிச்சவன்' என்ற பெயரை வாங்க வைத்துவிடுவார் போலே..

minorwall said...

ஆதிபராசக்தியைப் போற்றி..வணங்கிப் பாடிடும் ஆலாசியத்தை 'தெய்வமே' என்று கூப்பிட்டாலும் தகும்..
ம்ஹூம்..ரெம்பக் கஷ்டம்..

minorwall said...

சிறு விஷயங்களாய் அலட்சியப்படுத்தப்படும் வீட்டுப் பெண்மணிகளின் வேலைப்பளுவை கண்முன் கொண்டு வந்த விஷயமாய் ஆனந்தமுருகன் பகிர்ந்திருக்கும் விஷயம் அருமை..

ஒரு முழுநாள் சம்பளமே கொடுக்கப்பட்டால் கூட அந்த சிறுசிறு வேலைகளை என்னாலெல்லாம் செய்யமுடியுமா?என்றே மலைப்பாக இருக்கிறது..
அலுப்பும் சோம்பேறித்தனமும் கலையை வளர்க்குமோ?

minorwall said...

@sabari article -

ஸ்கோர் '7/ 7'

minorwall said...

// தேமொழி said... Minor ...I'm really impressed, and I mean it :).///

Thanks

//அய்யர் said...7.மைனரின் ஒலிச் சேர்க்கையை பார்க்க கேட்க முடியவில்லை. பிழை எமது கணினியிலும் இருக்கலாம்////

முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் நன்றி..கேட்டுவிட்டு சொல்லுங்கள்..

//Parvathy Ramachandran said...இளையராஜாவின் இன்னிசை 'மகுடி'யில் மைனரின் கீதமும் சேர்ந்த இந்நாளிலே சங்கீதமும் சந்தோஷமும் ஒன்றானதே..///////

நல்ல கமென்ட்..எழுத்து நடையிலே படலை கலந்து குழலில் சூடிய பூச்சரமாய் தங்களின் எழுத்துநடை கமெண்ட்டிலும் மிளிர்கிறது..

/////Parvathy Ramachandran said...பெருமதிப்பிற்குரிய செந்தமிழ்ச்சிங்கம் மைனரிடம் இன்னும் என்னென்ன திறமைகள் ஒளிந்திருக்கின்றனவோ.....
'காலக்கணக்குகளை' யார் அறிவார்?///

நன்றி..நன்றி..நன்றி...
'காலக்கணக்குகளை' யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்..

///// ஜி ஆலாசியம் said...
மைனர் உங்களின் குரலில் அசத்தி இருக்கிறீங்க...
மென்பொருள் ஒலி இழைகளையும் இழைத்து தரும் படியானதாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்..
மிகவும் அருமை, பாராட்டுக்கள். வகுப்பறையில் ஒருப் பாடகர் அடையாளம் காணப் பட்டுள்ளார்... //////

நன்றி..நன்றி..சிரத்தை எடுத்துக் கேட்டதற்கு நன்றி..

ஜி ஆலாசியம் said...

பாராட்டிற்கு நன்றிகள் மைனரே!
கேண்மை என்றால் நட்பு...
நன்றி.

Parvathy Ramachandran said...

அண்ணா ஆலாசியம் அவர்களின் 'ஏது' படித்த பிறகு வந்த இன்பத்திற்கு ஏது?
அளவும், அழிவும்.
முழுக்கவிதையையும் மாற்றிப்போட்டும் (அளவும் அழிவும் அன்புக்கு ஏது?) பின் தாங்கள் பின்னூட்டத்தில் கூறியபடி நீட்டிப்போட்டும் படித்து மகிழ்ந்தேன்.
நன்றி.

Parvathy Ramachandran said...

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், முதலில் உங்கள் ஆக்கத்தைப் படித்த பிறகு பின்னூட்டமிடும் தகுதி எனக்கு இருக்கிறதா? என்ற சந்தேகமே என் முன் பெரும் கேள்விக்குறியாய் எழுந்து நின்றது(நேற்றே படித்துவிட்டேன்).
'இறைவனோ தொண்டர்தம் உள்ளத்தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற தமிழ்மூதாட்டியின் வாசகம் ஒன்றே தங்களைப் பற்றிக் கூறுவதற்குப் பொருத்தமாய் அமையும்.

எந்த நேரமும் சிந்தையில் நிற்கும் அம்பிகையின் 'நிர்க்குண பரப்பிரம்ம ஸ்வரூபத்தை' கண்முன்னே வடித்த விதம் ... பல அபிராமி அந்தாதிப் பாடல்களையும் நினைவுபடுத்தின.
குறிப்பாக,
படபடவெனப் பாயும்மின்
கொடியொடு ஓடிடும் ('துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன...'.அந்தாதி முதல் பாடல்)

தங்கள் பாடலில்,தேவியின் அத்தனை வடிவங்களும் காணக் கிடைக்கின்றன.சூரியனின் ஒளியும், காற்றின் எங்கும்நிறைத்தன்மையும் சக்தியே. குணமற்ற,ஞானப் பெரும் திரள் (பரப்பிரம்மம்)அம்பிகையே.
வளியென பரவும்;
விரிவெளி யெனத் திகழும்; (மநஸ்த்வம் வ்யோமத்வம்....ஆதிசங்கரர்)
(வ்யோமகேசி விமானந்தஸ்தா.....லலிதாசஹஸ்ரநாமம், (பொருள்) விரிந்த பிரபஞ்சவெளியைத் தன் கேசமாகக் கொண்டவள்).

('ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ') பிரம்மாண்ட பாண்ட ஜனனி அதாவது இந்த அண்டமேன்னும் பானையைப் பெற்றெடுத்த தாய் அம்பிகை. இந்த வரிகளுக்கு
'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்' ஆலிலையில் துயின்ற பெம்மானும் ஐயனும் மட்டுமல்ல, ஆலாசியமும் என்று சொல்லத் தோன்றுகிறது."ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! "
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி ஏன் அழகை ஒளிக்கப் போகிறாள்? ஒவ்வொன்றிலும் அவளே, அவள் அழகே நிறைகிறது.தூணிலும் துரும்பிலும் அவள் அம்சமாகிய அழகு ஒளிந்திருக்கிறது. அவள் அழகே ஆனந்தம். அதரம்
மதுரம், வதனம் மதுரம் .....அகிலம் மதுரம்.
பக்தியில் தங்களது பாதம் தொட எப்பிறவியிலேனும் அருள் புரியக் கோரி
மருள் எனும் செய்பாவம் உரு உறுவது ஒழிய‌பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே! என்று, நானும் வேண்டி வணங்குகிறேன். மிக்க நன்றி.

ஜி ஆலாசியம் said...

////Parvathy Ramachandran said...
அண்ணா ஆலாசியம் அவர்களின் 'ஏது' படித்த பிறகு வந்த இன்பத்திற்கு ஏது?
அளவும், அழிவும்.
முழுக்கவிதையையும் மாற்றிப்போட்டும் (அளவும் அழிவும் அன்புக்கு ஏது?) பின் தாங்கள் பின்னூட்டத்தில் கூறியபடி நீட்டிப்போட்டும் படித்து மகிழ்ந்தேன்.
நன்றி.////

ஆஹா! மிக்க நன்றி சகோதரியாரே!

தங்களின் கவிதையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்!

kmr.krishnan said...

மைனரின் கணொளியை/குரலைக் காண /கேட்க முடியவில்லை. அவ்வளவு டெக்னாலஜி அறிவு இல்லைங்கோ.எப்படி பாட்டக்கேட்பதுன்னு சொல்லித் தாருங்கோ.

பிள்ளையார் பிடித்த அனுபவம் ஜோராக இருக்கிறது மைனர்.

'பிள்ளையார் பிடிக்க‌ப் போய் குரங்காக முடிந்தது' என்று ஒரு சொல்லடை உண்டு. ஒன்று நினைத்து மற்றொன்றாக முடிந்தது என்பது பொருள்.

உண்மையில் முதலில் பிள்ளையார் பூஜை செய்து துவங்கிவிட்டு, முடிக்கும் போது ஆஞ்ச‌னேயரை வணங்கி முடிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

என் ஆக்கத்தில் உள்ள சொல்லடைகளை தனுசுவும், மைனரும் ரசித்துள்ளார்கள் மிக்க நன்றி.

kmr.krishnan said...
This comment has been removed by the author.
ஜி ஆலாசியம் said...

@Parvathi R
கொஞ்ச அவசரம் வெளியில் செல்கிறேன் வந்து படித்து பின்னூட்டம் இடுகிறேன் ஓன்று மாத்திரம் கூறுவேன் தங்களின் விளக்கம் சக்தியின் விளக்கமாய் அழகொளிக்கிறது! = அழகு ஒளிர்கிறது..

kmr.krishnan said...

நண்பர் ஹாலாஸ்யத்தின் கவிதைக்குப் பார்வதி அம்மையாரின் உரையை நான் கேட்டதற்குத் தக்க பலன் கிடைத்துவிட்டது. இப்போது பாடலைப் படித்தால் ஒரு புதுப்பொலிவு தெரிகிறது. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'

Parvathy Ramachandran said...

அன்னையே அழகு ஒளிவெள்ளம் (மின்னாயிரம் ஒரு மெய்வடிவாய் விளங்குகிறது....அந்தாதி)அல்லவா.... ஆகையால் அழகு ஒளிந்திருக்கிறது என்றாலே அது ஒளிர்ந்து கொண்டும் இருக்கிறது என்றல்லவா பொருள்?

கவிதையைப் பத்தி ஒரு கதை அப்புறம்.....

Parvathy Ramachandran said...

//(வ்யோமகேசி விமானந்தஸ்தா.....//
மன்னிக்கவும் அது எழுத்துப் பிழை.' வ்யோமகேசி விமானஸ்தா' என்றிருக்க வேண்டும்.

kmr.krishnan said...
//. 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்'//
தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

minorwall said...
//நல்ல கமென்ட்.//

இப்படி எழுதும்போதே ஒரு மாமேதைக்கு என் தாய்மொழி தமிழ்தானானு சந்தேகம் வருது.
என்னதான் சிங்கம்னாலும் சீறிப்பாயும் போது சிறு கல் தடுக்கிடுது.
//எழுத்து நடையிலே "படலை" கலந்து குழலில் சூடிய பூச்சரமாய் தங்களின் எழுத்துநடை கமெண்ட்டிலும் மிளிர்கிறது..//

ஹூம்.... மேலிடத்துக்கு உடம்பு சரியில்லை. பிரார்த்தனைகள் செய்கிறோம்.
அந்தக் கவலையில் இருக்கிறோம் . இதைக் கண்டுக்காம விடுகிறோம்.

thanusu said...

Kmr.Krishnan said...தெரிந்தவன் சொல்கிறேன்.
தெரியாதவர்களுக்குச் சொல்கிறேன்.
புரிந்தவர்களுக்குச் சொல்கிறேன்
புரியாதவர்களுக்கும் சொல்கிறேன்.
இதுதான் காதல் என்பது.
அல்லது காதல் கவிதை என்பது!

லயித்து ரசித்த kmrk அவர்களுக்கு நன்றிகள்

thanusu said...

ஜி ஆலாசியம் said...
////வெடியாய் சிரிக்கிறாள்
வெட்டியாய் அளக்கிறாள்
கை தட்டியே அதிர்கிறாள்
இவை யாவும்
என் நிழல் கண்டால் நிறுத்துகிறாள்.///

வாயாடியானாலும் அவளின் பெண்மை இங்கே நாணப் படுகிறது!
கவிதை நன்று பாராட்டுக்கள் நண்பரே

அளவற்ற பாராட்டுகளுக்கு அன்புடன் நன்றிகள்.

thanusu said...

V Dhakshanamoorthy said...ஆறு பேர்களின் ஆக்கங்களும் அறுசுவை போல் உள்ளது.

நன்றி!!

சுவைத்தமைக்கு நன்றிகள் அறுவரின் சார்பாக.

thanusu said...

தேமொழி said...புதுக்கவிஞர் தனுசு எழுதிய 'புரியவில்லை புரியவில்லை' கவிதை அவருக்கும் புரிந்திருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது. அதைப் படித்த அத்தனை பேருக்கும் புரிந்து போய் பதில் கவிதை எல்லாம் வந்துவிட்டது ஆச்சர்யம்.

தாங்களின் பாராட்டு களுக்கு நன்றிகள் தேமொழி.

thanusu said...

Thanjavooraan said...கவிஞர் தனுசுவின் கவிதைகளில் மெறுகேறுவது மட்டுமல்ல, சுவையும் கூடிவருகிறது. நல்ல தொடக்கத்தை அடுத்து நல்ல முன்னேற்றம், வாழ்க, வளர்க!

நன்றிகள் அய்யா . எல்லாம் தாங்களின் மேலான ஆசிர்வாதம் தான்

minorwall said...

\\\\\ //Parvathy Ramachandran said...எழுத்து நடையிலே "படலை" கலந்து குழலில் சூடிய பூச்சரமாய் தங்களின் எழுத்துநடை கமெண்ட்டிலும் மிளிர்கிறது..//

ஹூம்.... மேலிடத்துக்கு உடம்பு சரியில்லை. பிரார்த்தனைகள் செய்கிறோம்.
அந்தக் கவலையில் இருக்கிறோம் . இதைக் கண்டுக்காம விடுகிறோம்.//////

தமிழ் எனை வஞ்சித்ததாகவோ கணினியின் மேலோ நான் பழியைப் போடப் போவதில்லை..மாறாக விளக்கம் கொடுத்திருக்கிறேன்..படித்துப் பாருங்கள்..

'பாடலை' என்று இருந்திருக்க வேண்டும்..தவறுதான்..என்ன செய்வது..

அப்பிரிக்கா என்று 'ஆ'காரத்தை 'அ'காரமாக்கி ஆரம்பித்து வைத்த உங்கள் மேலிடத்தின் பாதிப்பு எனக்கும் தாக்கத்தை ஏற்படுத்தி 'பா'வானது 'ப'வாக ஆகிவிட்டிருக்கிறது..

தவறுகளுக்கெல்லாம் எப்போதுமே எதிர்கட்சிதான் பொறுப்பு என்று தெரிவித்துக்கொள்கிறேன்..

thanusu said...

Parvathy Ramachandran said...தனுசுவின் கவிதை எளிமையிலும் எளிமை .அருமையிலும் அருமை.உண்மை.வெறும் புகழ்ச்சியில்லை.


பெண்மனமே ஒரு கவிதை!
அதை வைத்து ஒரு கவிதை!
இன்றெழுத எழுத ஏது விதை?
இப்போதே சொல்வீரோ இதை!
(இது சொந்தக் கவிதை)
குறிப்பாக,
'விழியை உருட்டுகிறாள்
இமையை விரிக்கிறாள்
உதட்டை பிதுக்குகிறாள்
இதை யாரும் பார்த்தால்
நுனி மூக்கில் வேர்க்கிறாள்'

எனத்தொடங்கும் வரிகள் எனக்கு,

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்
யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும் (திருக்குறள், அதிகாரம் 110, குறிப்பறிதல்)

முதலிய குறட்பாக்களையும், 'ஒரு பக்கம் பார்க்கிறா' தொடங்கி ஒரு சில திரைப்பாடல்களையும் ஒருசேர நினைவிற்கு கொணர்ந்தது. நல்ல ஆக்கம்.நன்றி.நீண்ட பின்னூட்டமிட்ட பார்வதி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் பாராட்டை படிக்கும் போது இன்னும் இன்னும் எழுத வேண்டும் என்று தோறுகிறது.

minorwall said...

////////Thanjavooraan said...
சகோதரி தேமொழியின் சித்திரங்களைக் காட்சிக்கு வைக்க விரும்புவதாகத் தெரிவித்திருந்தேன். ஒவ்வொன்றாக வெளிப்படும் அவருடைய படங்களைப் பார்த்ததும், அந்த கண்காட்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்ய எல்லா தகுதிகளும் இருப்பதாகத் தெரிகிறது. அடேயப்பா! எத்தனை திறமை. விரைவில் அவருடைய அந்த படங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க ஆவன செய்ய விரும்புகிறேன். //////

இன்றைய ஓவியம் இதை உறுதிப்படுத்துகிறது என்று நானும் அய்யாவின் கருத்தை வழிமொழிகிறேன்..

எனது பங்களிப்பு எந்த வகையிலாவது தேவைப்படுமென்றால் அதற்கு முடிந்தவரையில் ஒத்துழைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்..

thanusu said...

அய்யர் said...தனுசு காரரின் கேள்விக்கு பதில்
"நாய்" - சரிதானே தோழரே செல்ல நாயை பெண்ணாக உருவகித்து எழுதியமைக்கு பாராட்டுக்கள்..

மிக்க சரி நல்ல ரசனை.

பெண்ணைக் கண்டால் நாய் இல்லை
நாயை கண்டால் பெண் இல்லை

காண்பவரைப் பொறுத்தே காட்சி தெரியும்

ரசித்தமைக்கு நன்றிகள் அய்யர் அவர்களே.

thanusu said...

Ananthamurugan said...!பழமொழிக்கரசர் kmrk,பாட்டுக்கரசர் தனுசு,பக்திக்கரசர் ஆலாசியம்,படத்துகரசி தேமொழி, நகைசுவையரசர் சபரி,ஆகியோர்களுக்கு வாழ்த்துக்களும்!வணக்கமும்!!!!

அரசராக்கி அழகு பார்த்த ஆனந்தமுருகனுக்கு அனைவரின் சார்பில் அன்பு கலந்த நன்றிகள்.

thanusu said...

minorwall said..."
கண்கள் இரண்டால்.
உன் கண்கள் இரண்டால்
எனைக் கட்டி இழுத்தாய்..
உயிரே.."
என்று போகிறது தனுசுவின் கவிதை..

'சொல்லித் தெரியா
மன்மதக் கலைக்கு
ஆதிப் புள்ளிவைத்து
காதல் கோலமிட
நீர் தெளித்தார்
கவிஞர் அவர்..'


வாழ்த்துக்கள்.


கவிதைக்கு கவிதையும்
கவிங்கருக்கு கவிதையும் பாடிய மைனர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

thanusu said...

மைனர் அவர்களே தாங்களின் காணொளியை என்னால் காண முடியவில்லை . bookmaark போட்டு வைத்துள்ளேன் கரை இறங்கியதும் தாங்களின் காணொளி, ஆலாசியத்தின் மகன் மற்றும் பார்வதி அவர்களின் தாத்த சித்தப்பா ஆகியோரின் கானோளியும் பார்க்கிறேன்.

அய்யர் said...

///இன்று பதிவில் எட்டி எட்டிப் பார்த்தால்
எட்டு பாய்ண்ட் கருத்து மட்டும் எழுதிவிட்டு
போயே போயிட்டார்... போயே போயிட்டார்...

எழுதியவரை முதல் பாகமாக இன்றிலிருந்து
எட்டாம் நாள் அவர் பதிவிடுவாரா என்பதை
அவரே இன்று சொல்வாரா ... சொல்வாரா...///

எட்டாம் நாள் போருக்குரியதன்றோ..
போரும் warம் நமக்கெதற்கு தோழி..

சொல்வாரா என்பது சொல்லவருவரா என அமைக்க நினைத்தீர்களோ..

எட்டை பற்றி அறிய
எட்டிப் பார்த்து விட்டு ஒரு

எட்டு வந்து பலமாக
குட்டு போட்டு சென்றமைக்கு நன்றி

ஷொட்டு போட்டு படிக்க
பட்டுன்னு பல தருவார் வாத்தியார்

உங்களோடு சேர்ந்து படிக்க
எங்களுக்கும் ஆசை தான்..

உங்களுக்காக சுழல விடுகிறோம்
இந்த பாடலினை

எட்டுக்குள்ள வாழ்க்கை இருக்கு ராமையா
புத்திக்கு எட்டும்படி சொல்ல போறேன் கேளைய்யா இக்கட

முதல் எட்டில் ஆடாதது விளையாட்டல்ல

நீ ரெண்டாம் எட்டில்
கல்லாதது கல்வியுமல்ல

மூன்றாம் எட்டில்
செய்யாதது திருமணமல்ல

நீ நாலாம் எட்டில்
பெறாதது குழந்தையுமல்ல

ஐந்தாம் எட்டில்
சேர்க்காதது செல்வமுல்ல

நீ ஆறாம் எட்டில்
கற்காதது உலகமுல்ல

ஏழாம் எட்டில்
காணாதது ஓய்வுமில்ல

நீ எட்டாம் எட்டுக்கு
மேல இருந்தா நிம்மதியில்ல

minorwall said...
This comment has been removed by the author.
minorwall said...

////பாடலை அனுப்பிய மைனர், அதை ஒரு இணைய ஆடியோ தளத்தில் வலை ஏற்றி - அதன் embedded code ஐ அனுப்பியிருந்தால் அதை வலை ஏற்றுவத்ற்கு செள்கரியமாக இருந்திருக்கும். e snips தளத்தில் நான் வலை ஏற்றி அதன் சுட்டியை இங்கே ஒட்டியுள்ளேன். அவர்களும் embedded code வச்தியைக் கொடுக்கவில்லை. Blogger தளத்திலும் அந்த வசதி இல்லை. பொறுத்துக் கொள்ளுங்கள். அடுத்து இதற்கொரு தீர்வைக் கண்டு பிடித்து விடலாம். வாத்தியார் அவசரமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளவிருப்பதால் உடனே அதைச் செய்ய இயலவில்லை. பதிவில் ஒலி வடிவத்தை ஏற்றுவதற்கு கிடைக்கும் வசதியைக் குறித்து தெரிந்தவர்கள் (மைனர் உட்பட அனைவரும்) எழுதுங்கள். ஊரில் இருந்து திரும்பி வந்தவுடன் அதைச் செய்கிறேன்.
அன்புடன்
வாத்தியார்///

/// Ayyar said
7.மைனர் ஒலிச் சேர்க்கையை பார்க்க கேட்க முடியவில்லை. பிழை எமது கணினியிலும் இருக்கலாம்/////

///kmr.krishnan said...
மைனரின் கணொளியை/குரலைக் காண /கேட்க முடியவில்லை. அவ்வளவு டெக்னாலஜி அறிவு இல்லைங்கோ.எப்படி பாட்டக்கேட்பதுன்னு சொல்லித் தாருங்கோ.
பிள்ளையார் பிடித்த அனுபவம் ஜோராக இருக்கிறது மைனர்.

///thanusu said...
மைனர் அவர்களே தாங்களின் காணொளியை என்னால் காண முடியவில்லை . ///

////// http://www.crocko.com/43F2665DFC544069870BD340485DA9A2/Neelakkuyile_-fnl.wav //////
ஆர்வத்துக்கு நன்றி..
இந்த லின்க்கிலே கிளிக் பண்ணி ரெகுலர் டவுன்லோட் என்கிற ப்ரீ ஆப்ஷனை கிளிக்கி கொஞ்சம் வெயிட் பண்ணினா கொஞ்சம் வோர்ட் வெரிபிகேஷன் தாண்டி ஃபைல் டவுன்லோட் ஆகுது..ட்ரை பண்ணிப்பாருங்க..ஒரு ட்ரையல் எக்ஸ்பிரியன்ஸ் கிடைக்கும்..

ஏழுகடல் தாண்டுற மாதுரி ரொம்ப கடியா இருந்தா சொல்லுங்க..டைரக்ட் மெயிலே அனுப்பிடுறேன்..

ஜி ஆலாசியம் said...

arvathy Ramachandran said...
உண்மையைச் சொல்ல வேண்டுமானால், முதலில் உங்கள் ஆக்கத்தைப் படித்த பிறகு பின்னூட்டமிடும் தகுதி எனக்கு இருக்கிறதா? என்ற சந்தேகமே என் முன் பெரும் கேள்விக்குறியாய் எழுந்து நின்றது(நேற்றே படித்துவிட்டேன்).
'இறைவனோ தொண்டர்தம் உள்ளத்தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே' என்ற தமிழ்மூதாட்டியின் வாசகம் ஒன்றே தங்களைப் பற்றிக் கூறுவதற்குப் பொருத்தமாய் அமையும். ..............
"ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! "
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி ஏன் அழகை ஒளிக்கப் போகிறாள்? ஒவ்வொன்றிலும் அவளே, அவள் அழகே நிறைகிறது.தூணிலும் துரும்பிலும் அவள் அம்சமாகிய அழகு ஒளிந்திருக்கிறது.////


///ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ஒன்றும் பலவாய்
ஒன்றியழ கொளிக்கும் ஆதிசக்தியே! ////

அழகு கொழிக்கும் என்பதும்....
அழகு ஒளிர்க்கும் என்பதும்...
சரியான தேர்வாக இருக்கும்..

அழகு ஒளிக்கும் என்பது மாயாவாகி தனது உண்மையான அழகை மறைக்கும் மன மாயை மறைந்தால் மட்டுமே தன்னை அது வெளிக்காட்டும் என்றும் கொள்ளலாம் இவைகள் எல்லாம் நான் தவறுதலாக எழுதிய வார்த்தைக்கு வியாக்கியானமாக பேச உதவும்:):)

ஆனால் நான் தவறுதலாகத் தான் எழுத்தை உபயோகித்து இருக்கிறேன். அழகொழிக்கும் என்பதே அப்போது எனது சிந்தனையில் விளைந்தது....

இந்த தருணத்தில் தங்களுக்கும் அதை விட சற்று அதிகமாக நமது கிருஷ்ணன் சாருக்குத் தான் நன்றிக் கூறனும்.

////பெருமிருள் நெடுதுயில் சடுதியில்மறைய -விண்
உறுபெரும் பொருளென சுடரொளி நிறைய
மருளெனும்செய் பாவமதுரு உறுவது ஒழிய
பொறுத்தருள்புரிவாய் கருணைப் பெருங்கடலே!///

'பொருளது சுடரொளி நிறைய' என்றே இருக்கணும்.. பாடல்களை எழுதி உடனேயே (அலுவலக சத்தத்தில்) அவசர கதியில் வாத்தியாருக்கு அனுப்பும் பழக்கத்தை நான் விடவேண்டும்.

எப்படியாயினும் பிழை வருவதும் அதை தங்களைப் போன்றோர் படித்து திருத்துவதும் அதற்கு வகுப்பறை இடமளிப்பதும் மிகவும் சந்தோசமான தருணமே... பிழை திருத்தா வரை அதன் ஆபத்து வளர்ந்துக் கொண்டே போகும் அது தானே உண்மையும் கூட.

minorwall said...

தேமொழி said...
///பதிவில் ஒலி வடிவத்தை ஏற்றுவதற்கு கிடைக்கும் வசதியைக் குறித்து தெரிந்தவர்கள் (மைனர் உட்பட அனைவரும்) எழுதுங்கள்///

ஐயா, காணொளியாக மாற்றி சுட்டி கொடுப்பதுதான் சுலபமான முறை என எனக்குத் தோன்றுகிறது.
நான் முயற்சி செய்தேன். உபயோகித்தது " Windows Movie Maker 2.6".
பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதால் பல படங்களை உபயோகிக்கவில்லை. மைனர் இதுபோன்று காணொளி தயாரிப்பதில் வல்லவர் என்று முன்பு ஒரு முறை குறிப்பிட்டுளார். இந்த முறையை உபயோகப்படுத்தி அவர் மனதில் எவ்வாறு கற்பனை செய்தாரோ அதுபோலவே காணொளி தயாரிக்கலாம். பின்னர் "யு ட்யூப்" வலையேற்றி அதன் சுட்டி கொடுத்தால் உங்களுக்கு எளிதாக முடியும்.

நான் முயற்சி செய்த காணொளியின் சிட்டி இது:
http://youtu.be/vykJe-dG-kw
நிச்சயமாக இது மைனர் கற்பனை செய்து வைத்திருப்பது போல 0.0009% கூட இருக்க வாய்ப்பே இல்லை:)))))))))///

உங்க கமெண்டையும் ல்லின்க்கையும் கவனிக்க மறந்துவிட்டேன்..

ரேயல்லி எக்ஸ்ட்ரீம்லி சாரி..

KMRK சார் , தனுசு,அய்யர் என்று அன்பர்கள் யாரும் டவுன்லோட் பண்ணி சிரமப்படாமல் தேமொழி அவர்கள் கொடுத்திருக்கும் இந்த லின்க்கை உபயோகிப்பதே எளிது என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..நன்றி..


மிக்க நன்றி தேமொழி..ஏகப்பட்ட வேலையெல்லாம் பார்த்து கன்சல்ட் பண்ணியிருக்கீங்க..ரொம்ப நன்றி..பழசை எதுவும் மறக்கலே..நல்ல ஞாபக சக்தி..கொஞ்சம் கொஞ்சமா விளையாட்டை துவக்கலாம்..இன்னும் நேரம் கிடைக்கலே..கேட்க,பார்க்கவும் சக தோழருக்கும் பொறுமை வேணும்..பார்க்கலாம்..

ஜி ஆலாசியம் said...

//// Parvathy Ramachandran said...
('ஒன்றுமில்லா தொன்றில் ஒன்றாய் - என்றும்
ஒன்றாகி நின்றே பண்டு நன்னுலகை
நன்றாய் படைக்க ') பிரம்மாண்ட பாண்ட ஜனனி அதாவது இந்த அண்டமேன்னும் பானையைப் பெற்றெடுத்த தாய் அம்பிகை. இந்த வரிகளுக்கு
'ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலகம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்' ஆலிலையில் துயின்ற பெம்மானும் ஐயனும் மட்டுமல்ல, ஆலாசியமும் என்று சொல்லத் தோன்றுகிறது.....////

முதலில் தங்களின் பின்னூட்டம் வராத போதே தாங்கள் ஒரு அருமையான விளக்கத்தோடு தான் வருவீர்கள் என்றுக் காத்து இருந்தேன். என்னுடைய பாடலை முழுவதுமாக படித்து அத்தனைக்கும் அர்த்தம் பிரித்து மகான்களின் பாடல்களில் உள்ளக் கருத்தை கொண்டு இந்த சிறியோனின் பாடலை அதன் மூலக் கருத்தை ஆய்வு பார்க்க செய்தது எனது பேறு... தங்களுக்கு மிக்க நன்றி.

ஆலிலைக் கண்ணனோடு அவன் பாதத்தில் ஒட்டிய மகரந்தமாக (தூசாக) என்னையும் காட்டியது தாங்கள் ஒரு சக்திப் பிரியன் மேல் கொண்ட அன்பால் என்பதை எண்ணி ஆனந்தம் அடைகிறேன்.

வேறு யாரும் இத்தனை சிறப்பாக விளக்கம் தந்து இருக்க முடியாது.. எழுதிய நானும் இத்தனை அழகாக பொருள் தந்திருக்க முடியாது...

கிருஷ்ணன் சாருக்கு அவரின் விருப்பம் போன்றே தங்களின் விளக்கமும் அமைத்தது...
மிக்க நன்றி சகோதரியாரே! மிக்க நன்றி!! அன்னை அபிராமி நம் எண்ணமெல்லாம் என்றும் வியாபித்து நம்மை ஆட்கொள்ளவேண்டும் என்றே வேண்டி அவள் பொற் பாதம் பணிகிறேன்.

ஜி ஆலாசியம் said...

///// Parvathy Ramachandran said...
அன்னையே அழகு ஒளிவெள்ளம் (மின்னாயிரம் ஒரு மெய்வடிவாய் விளங்குகிறது....அந்தாதி)அல்லவா.... ஆகையால் அழகு ஒளிந்திருக்கிறது என்றாலே அது ஒளிர்ந்து கொண்டும் இருக்கிறது என்றல்லவா பொருள்?

கவிதையைப் பத்தி ஒரு கதை அப்புறம்.....////நான் கூறிய வியாக்கியான கருத்தையும் தாங்களே எனக்கு முன்னமே சொல்லியும் இருக்கிறீர்கள் ஆனால் அது இன்னும் சற்று ஆழமாக இருக்கிறது என்பது தான் எனக்கு தங்களை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது...ஒளிர்ந்து இருக்கும் பேரொளி ஒளிந்து இருக்கிறது என்றால்! அது இருப்பதாலே ஒளி(ர்)ந்து இருக்க முடியும் என்று தாங்கள் சொல்லியது இன்னும் ஆழமாகவே இருக்கிறது.

தங்களின் கதையை மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கிறோம் விரைவில் எழுதி வகுப்பறைக்கு அனுப்புங்கள் ஆசிரியர் சில நேரம் வாரமலருக்கு காத்திராமல் இடையிலே பதிவிடுவார்.

நன்றிகள் சகோதரியாரே!

Parvathy Ramachandran said...

உங்கள் நன்றிக்கு முழுமையும் உரியவர் திரு. கே.எம்.ஆர். அவர்கள் மட்டுமே.
சில சமயம் சில விஷயங்கள் தெரிந்தும் சொல்ல நான் தயங்குவதுண்டு. (உ.ம்) சில தினங்களுக்கு முன் )திரு. மாயக்கண்ணன் கேட்ட, கதையின் முடிவு என்ன? என்ற கேள்விக்கு, கடைசிவரை யாரிடமிருந்தும் பதில் வராமல் போகவே,பின்பு எழுதினேன். இதற்கு முன் தங்களின் ஆக்கத்திற்கு வேறு விதமாக விளக்கமளித்து விட்டு, பிறகு எழுதியிருக்கக் கூடாதோ என்று யோசித்தேன்.

ஆகவே இம்முறை, இமயமலையை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்திருக்க, திரு.கே.எம்.ஆர். அவர்களின் பின்னூட்டம் திசை திருப்பிவிட்டது. நான் வயதில் சிறியவளென்றாலும் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம். என்னிடம் இருக்கும் சில திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர்களில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு.அவரின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.

தேமொழி said...

///Thanjavooraan said...
...ஒவ்வொன்றாக வெளிப்படும் அவருடைய படங்களைப் பார்த்ததும், அந்த கண்காட்சி பெரிய அளவில் ஏற்பாடு செய்ய எல்லா தகுதிகளும் இருப்பதாகத் தெரிகிறது....///

///minorwall said...
இன்றைய ஓவியம் இதை உறுதிப்படுத்துகிறது என்று நானும் அய்யாவின் கருத்தை வழிமொழிகிறேன்..///

நன்றி...நன்றி... இந்தப் படங்கள் அனைத்தையுமே வரைந்து பல வருடங்களாகி விட்டது. பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் வரைந்தது போல் அவ்வளவாக இப்பொழுதெல்லாம் வரைவதில்லை. கோடை விடுமுறையில்தான் பெரும்பாலும் வரைந்தேன். சில படங்கள் அப்பாவிற்கு பிடித்திருந்தால் இதை வரை என்று சொல்லிக் வரையச் சொன்னால் உடனே வரைந்து விடுவேன். வரைந்த படங்களின் அளவு 8.5 x 14 inches என்று நினைக்கிறேன். அதாவது சிறிய படங்கள், சென்ற முறை வீட்டுக்குச் சென்றபொழுது, அலமாரியில் குடைந்த பொழுது இவைகள் கண்ணில் பட்டன. படங்கள் சிறியவையாக இருந்ததால் வீட்டில் சுலபமாக printer ல் scan செய்ய முடிந்தது.

படங்களை சாதாரண, மிகச் சிறிய அளவுள்ள chart paper ல் வரைந்திருப்பதும், மற்றும் மொத்தமாகவே 12 படங்களுக்கு மேல் தேராததுமே என் தயக்கத்திற்கு காராணம். கண்காட்சி அளவிற்கு போகுமளவிற்கு இப்பொழுது தகுதியில்லை. ஆனால் ஐயா கொடுத்த ஊக்கத்தில் கடைக்கு சென்று வண்ணங்களும் தூரிகைகளும் வாங்கி வந்துள்ளேன், இனி நேரம் கிடைக்கும் பொழுது வரைய ஆரம்பிக்க வேண்டியதுதான் :))))
வகுப்பறையில் நீங்களனைவரும் காட்டும் அன்பிற்கும், கொடுக்கும் ஊக்கத்திற்கும் எப்படி நன்றி சொல்வதென்று தெரியவில்லை

kmr.krishnan said...

//திரு.கே.எம்.ஆர். அவர்களின் பின்னூட்டம் திசை திருப்பிவிட்டது. நான் வயதில் சிறியவளென்றாலும் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம். என்னிடம் இருக்கும் சில திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர்களில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு.அவரின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்.//

திறமையை வெளிக் கொணர்வதில் முதலிடம் நம் அய்யாவுக்குத்தான்.தன்னுடைய வலைப்பூவில் சோதிட ஆர்வத்தால் தூண்டப்பட்டு வருபவர்களுக்கு இலக்கிய ஆர்வமும், மொழி ஆற்றலும்,நகைச்சுவை உணர்வும், பல்சுவை அறிவும் அளித்து ஊக்குவிப்பதில் அய்யாவுக்கு நிகர் அவரேதான்.வகுப்பறக்கு ஒரு நாளில் கிடைக்கும் போக்கு வரத்து எண்ணிக்கையை வைத்து விளம்பரங்களுக்கு இடம் கொடுத்து அவர் வருமானம் பார்க்கலாம். ஆனால் அதையெல்லாம் முக்கியமாக நினைக்காமல்
மாணவர்களின் அறிவு மேம்பாட்டிற்கு முதன்மை கொடுப்பது, மாணவர்களை ஊக்குவிப்பது என்று தொண்டாற்றி வருகிறார். நானெல்லாம் பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போலத்தான்.

ஜி ஆலாசியம் said...

/////Parvathy Ramachandran said...
உங்கள் நன்றிக்கு முழுமையும் உரியவர் திரு. கே.எம்.ஆர். அவர்கள் மட்டுமே.
சில சமயம் சில விஷயங்கள் தெரிந்தும் சொல்ல நான் தயங்குவதுண்டு. (உ.ம்) சில தினங்களுக்கு முன் )திரு. மாயக்கண்ணன் கேட்ட, கதையின் முடிவு என்ன? என்ற கேள்விக்கு, கடைசிவரை யாரிடமிருந்தும் பதில் வராமல் போகவே,பின்பு எழுதினேன். இதற்கு முன் தங்களின் ஆக்கத்திற்கு வேறு விதமாக விளக்கமளித்து விட்டு, பிறகு எழுதியிருக்கக் கூடாதோ என்று யோசித்தேன்.

ஆகவே இம்முறை, இமயமலையை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்திருக்க, திரு.கே.எம்.ஆர். அவர்களின் பின்னூட்டம் திசை திருப்பிவிட்டது. நான் வயதில் சிறியவளென்றாலும் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம். என்னிடம் இருக்கும் சில திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர்களில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு.அவரின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்./////

தாங்கள் சொல்வது முழுவதும் உண்மை... கிருஷ்ணன் சாருக்கு தான் முதல் நன்றி.
இருந்தும் தாங்கள் எண்ணி இருந்தபடி மெளனம் பேசியிருந்தால் இத்தனை மலர்ந்திருக்காது அல்லவா!

/////இதற்கு முன் தங்களின் ஆக்கத்திற்கு வேறு விதமாக விளக்கமளித்து விட்டு, பிறகு எழுதியிருக்கக் கூடாதோ என்று யோசித்தேன்.////
அப்படியெல்லாம் இல்லை, தாங்கள் கூறியதில் எந்த தவறும் இல்லை, எனக்கு வருத்தமும் அப்போது வரவும் இல்லை. அதனால் தயங்க வேண்டாம் நாம் இங்கே ஒருவருக்கு ஒருவர் தெரிந்ததை, அறிந்ததை, புரிந்ததை பகிர்ந்துக் கொள்கிறோம்.

இங்கே குறை கூறியதால் அல்லது மாற்றுக் கருத்து கூறியதால், அதெப்படி நான் சொன்னது தவறு என்று சொல்லப் போயிற்று என்று 'ஈகோ' யாவருக்கும் பெரும்பாலும் வராது. அதிலும் எனக்கு நூறு விழுக்காடு வராது / கூடாது என்று என் மனதிற்கு நான் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறேன். ஆக, தைரியமாக கூறுங்கள். இது மற்றவர் தொடர்பானது என்றாலும் ஒரு கூட்டாக இருப்பதால் யாரையும் தனியாக தவிக்க விடாமல்; பாதிக்கப் பட்டவர்களுக்கு துணையாக நாங்கள் நிற்போம். கவலையே வேண்டாம்.

எல்லாவற்றிற்கும் ஏதாவது பதில் சொல்வதால் தங்களை அதிகப் பிரசங்கி என்று யாரும் நினைப்பார்கள் என்ற எண்ணம் உங்களை தடுக்கும்.. அதை அசட்டை செய்யுங்கள். நீங்கள் வயதில் சிறியவர் (இந்த உடலுக்கு வயது கூறலாம்; ஆனால் உள்ளிருக்கும் ஆத்மாவிற்கு வயது என்ன! ஆக, இதில் மூத்தவர் இளையவர் என்பதே வெளித் தோற்றத்திற்கு மாத்திரமே பொருந்தும் மாறாக ஆன்மாவிற்கு அல்லவே!) என்பதால் யாரோடும் குறிக்கிடும் செல்ல உரிமையும் இளைய சகோதரி உங்களுக்கு வகுப்பறையில் உண்டு அதை யாவரும் மறுக்க மாட்டார்கள்.

தங்களின் சமஸ்கிருத அறிவும், புராண இதிகாச அறிவும் சிரமம் இல்லாமல் கிடைக்கும் பொழுது அதை மறுத்தால் அது புரியாத் தனமாகி விடும்.

/////ஆகவே இம்முறை, இமயமலையை வேடிக்கை பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் நினைத்திருக்க, திரு.கே.எம்.ஆர். அவர்களின் பின்னூட்டம் திசை திருப்பிவிட்டது. நான் வயதில் சிறியவளென்றாலும் அவர் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை அதிகம். என்னிடம் இருக்கும் சில திறமைகளை வெளிச்சம் போட்டுக்காட்டியவர்களில் முக்கியமான இடம் அவருக்கு உண்டு.அவரின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறேன்////

நான் எழுதிய பாடல்களின் கருத்து மாத்திரமே இமயம், என்பதை கூறினால் தான் பொருந்தும் :):) அது தான் முழு உண்மையும். அதன் அடிவாரத்தில் ஒரு மரமாக நின்று உச்ஹ்சியை காண முடியாமல் ஏங்கி நிற்பவன் மாத்திரமே ஆலாசியம் என்ற 'நான்'.::)).

ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர்.. எங்கே ஊற்றுக் கண் இருக்கிறது என்பதை அறிந்து லேசாக அந்தக் கண்ணைப் பார்த்து தட்டி விடுவார்.
அதனால் இனி தயக்கம் வேண்டாம்... நான் அறிந்த வரையில் எனது கருத்து என்று சேர்த்துக் கொண்டீர்கள் என்றால் தங்களுக்கு சிரமம் தோணாது. என் விசயத்தில் அதுவும் தேவை இல்லை.

நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்.

என்னை பெரிய விசயமெல்லாம் பேசுபவன் என்று மட்டும் நினைத்தால் பொது. விஷய ஞானம் உள்ளவன் என்று முத்திரை கொடுத்து ஒதுக்கி விடவேண்டாம் என்று தங்களோடு அனைவருக்கும் பணிந்து கூறிக் கொள்கிறேன்.

நன்றி நன்றி. நமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்து நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!

Parvathy Ramachandran said...

//நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்.//

என்னை மிகச்சரியாகப் புரிந்து கொண்டதற்கு நன்றி.

//நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும்//

நிச்சயமாக .

arul said...

all articles are good

ananth said...

காதலரைப் பார்த்தவுடன் பெண்கள் நாணம் கொண்டு அந்த நேரத்தில் என்ன செய்துக் கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விடுவார்கள். தனுசுவின் கவிதை இதை அழகாக சொல்லியிருக்கிறது. அருமையிலும் அருமை. இது போன்ற கவிதைகள் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

KMRK அவர்களின் ஆக்கத்திலிருந்து நிறைய பழமொழிகளைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது. ஒன்றுக்கு பல முறை படித்து ஞாபகம் வைத்துக் கொண்டேன். பேசும்போது தேவையான இடத்தில் பயன்படுத்தலாமல்லவா. ஞான, மோட்ச காரகன் கேது தங்களுக்குள் நல்லதொரு ஆன்மீக சிந்தனையை விதைத்திருக்கிறார். மகிழ்ச்சி. எனக்கு 11ம் இட கேது (சனி தசை), அவ்வப்போது ஏதாவது ஒரு வகையில் திடீர் பண வரவை கொடுத்துக் கொண்டிருக்கிறார். என்ன கொடுப்பார் என்பது தான் இருக்கும் ஸ்தானத்தைப் பொருத்தது போலும்.

ananth said...

தேமொழி அவர்களின் ஒவியமும் நன்றாக இருக்கிறது. நல்ல திறமை இருக்கிறது. சித்திரமும் கைப்பழக்கம். அப்படிதானே சகோதரி.

ஆலாசியம் அவர்களின் கவிதையும் இவை எவற்றிற்கும் குறைந்ததல்ல. நன்றாக இருக்கிறது. விளங்கிக் கொள்ள சற்று கருத்தூன்றி படிக்க வேண்டியிருக்கிறது.

நகைச்சுவையாக இருந்தாலும், சபரி, பெண்கள் மேல் why this கொலவெறி.

ஆனந்த முருகனின் ஆக்கம் இல்லத்தரசிகளின் நிஜ கடமை, உணர்வு இவற்றை வெளிப் படுத்தியது. இதற்கு மேலும் பல கடமைகளை இல்லத்தரசிகள் நிறைவேற்றுகிறார்கள்.

thanusu said...

கடற்கரையை விட்டு குளக்கரைக்கு குளிக்க வந்த மைனரை நான் கண்டு பிடித்துவிட்டேன் .

thanusu said...

ananth said....காதலரைப் பார்த்தவுடன் பெண்கள் நாணம் கொண்டு அந்த நேரத்தில் என்ன செய்துக் கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விடுவார்கள். தனுசுவின் கவிதை இதை அழகாக சொல்லியிருக்கிறது. அருமையிலும் அருமை. இது போன்ற கவிதைகள் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

உங்களுக்கு கவிதை புரியாது என்று ஒருமுறை சொல்லி உள்ளீர்கள், ஆனால் அந்த ஆனந்துக்கு இன்று என் கவிதை பிடித்துபோய் பின்னூட்டம் வந்திருக்கிறது .

மிக்க மகிழ்ச்சி ஆனந்த்.

ஜி ஆலாசியம் said...

///ananth said...
ஆலாசியம் அவர்களின் கவிதையும் இவை எவற்றிற்கும் குறைந்ததல்ல. நன்றாக இருக்கிறது. விளங்கிக் கொள்ள சற்று கருத்தூன்றி படிக்க வேண்டியிருக்கிறது.///

மிக்க நன்றி ஆனந்த் அவர்களே!

எனது பாடலுக்கு மிகவும் அழகாக தெளிவுரையை நமது சகோதரியார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பின்னூட்டத்திலே அருமையாக செய்து உள்ளார்கள் அதையும் படித்து பார்க்க வேண்டுகிறேன். நன்றி.

Uma said...

அழகான கவிதையைத் தந்திருக்கிறார் தனுசு.

ஆனால் இன்னதென்று புரியவில்லை
தெரிந்தவர் சொல்லுங்களேன்.//

ரொம்ப அப்பாவி போல ஆக்டிங் குடுக்கிறாரே!!!

Uma said...

நிறைய சொல்லடைகளுடன் கிருஷ்ணன் சாரின் ஆக்கம் படிக்க சுவாரசியம்.

தேமொழியின் ஓவியம் வழக்கம் போல் அழகாக இருக்கிறது.

Uma said...

ஆலாசியத்தின் முதல் கவிதை அருமை. ரெண்டாவது கவிதை, என்னை விட்டுவிடுங்கள், எனக்கு அவ்ளோ அறிவு பத்தாது!!!! உங்கள் தமிழ் ஆர்வத்தை வாழ்த்தி வணங்கி எஸ்கேப் ஆகிறேன்!!!

Uma said...

ஆனந்தமுருகன், சபரியின் ஆக்கங்கள் நன்று, எல்லாரும் எதிர்பார்ப்பதுபோல் நானும் இவைகளைத் தமிழில் எதிர்பார்க்கிறேன்.

Uma said...

மைனரின் பாட்டு இன்று கேட்கமுடியவில்லை. நாளைக்குள் கேட்டுவிட்டுச் சொல்கிறேன். (மைண்ட்வாய்ஸ்: வரவர இவர் புகழ் கூடிக்கொண்டே போகிறதே! பொறுத்தது போதும் உமா, பொங்கி எழு! உடனே கட்சியின் (சதி)ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டு!)

Uma said...

மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!

ஜி ஆலாசியம் said...

Uma said...
ஆலாசியத்தின் முதல் கவிதை அருமை. ரெண்டாவது கவிதை, என்னை விட்டுவிடுங்கள், எனக்கு அவ்ளோ அறிவு பத்தாது!!!! உங்கள் தமிழ் ஆர்வத்தை வாழ்த்தி வணங்கி எஸ்கேப் ஆகிறேன்!!!

'நன்றி உமா...

'உமா எப்படி இருக்கிறீங்க! இப்போது உடல் நிலை சரியாகி விட்டதா?'

Uma said...

கொஞ்சம் வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருப்பதால் //

ஒரு தடவையிலேயே புரிகிறதே, அப்புறம் என்னாத்துக்கு ரெண்டு முறை?

Uma said...

இன்றைய விருந்தில்
அறு சுவையில் ஒரு சுவையில்லை
அது எது என கண்டுபிடிக்கவும்.
(சகோ தேமொழி கண்டுபிடித்திடலாம் அதற்குள் சகோ உமா முந்திக் கொள்வாரோ பார்ப்போம்)//

ஐயர் அவர்களே! உங்கள் பின்னூட்டங்களை எல்லாம் அப்படியே போகிற போக்கில் ஒரு ரீடிங் விடுவதோடு சரி (அப்படியே ஆழ்ந்து படித்தாலும் எதுவும் என் மரமண்டைக்குப் புரிவதில்லை), அதனால இந்த விளையாட்டுக்கு நான் வரல!

Uma said...

தெய்வபக்தி சிரத்தை,ஆன்மீக நட்டம் என்றெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு ஆர்வத்திலே //

நாட்டம்!

Uma said...

இதைக் கண்டுக்காம விடுகிறோம்.//

என்ன பார்வதி இது? இருந்திருந்து இந்த ஒரு பிழைதான் உங்கள் கண்ணில் பட்டதா? உங்களை நம்பி இனிமே லீவு எடுக்க முடியாது போலிருக்கே? நான் எவ்வளவு கண்டுபிடிச்சிருக்கேன் பாருங்க!!

Uma said...

தவறுகளுக்கெல்லாம் எப்போதுமே எதிர்கட்சிதான் பொறுப்பு என்று தெரிவித்துக்கொள்கிறேன்..//

அது சரி!

Uma said...

மிக்க சரி நல்ல ரசனை.
பெண்ணைக் கண்டால் நாய் இல்லை
நாயை கண்டால் பெண் இல்லை
காண்பவரைப் பொறுத்தே காட்சி தெரியும் //

nice answer !

Uma said...

'உமா எப்படி இருக்கிறீங்க! இப்போது உடல் நிலை சரியாகி விட்டதா?//

மெயில் பாருங்க!

ஜி ஆலாசியம் said...

////Uma said...
'உமா எப்படி இருக்கிறீங்க! இப்போது உடல் நிலை சரியாகி விட்டதா?//

மெயில் பாருங்க!///


சந்திர திசையா? என்ற கேள்வியோடு உறுதி செய்து கொண்டேன்... பதிலை அனுப்பி யுள்ளேன்.

thanusu said...

Uma said...ரொம்ப அப்பாவி போல ஆக்டிங் குடுக்கிறாரே!!!

நான் ரொம்ப அப்பவிதாங்க .

ரசித்து படித்துள்ளது நன்கு தெரிகிறது .நன்றி உமா அவர்களே.

thanusu said...

Uma said..மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!

எழுதுங்கள் தோழி , சாப்பிட போவது நாங்கள்தானே .

minorwall said...

minorwall said...
Uma said...
தெய்வபக்தி சிரத்தை,ஆன்மீக நட்டம் என்றெல்லாம் இல்லாமல் ஏதோ ஒரு ஆர்வத்திலே //

நாட்டம்!

ஆன்மீகத்துலே இறங்கினா நட்டம் வர்றது இயற்கைதானே?அதுனாலே சரியாத்தான் எழுதியிருக்கேன்..

அதே போலே குறள் படிச்சு உச்சரிக்கும் பொது கேட்ட குரலை 'குரல்' என்று சொல்லியிருந்தேன்..

நான் ஒண்ணு சொன்னா நீங்க ஒண்ணு புரிஞ்சுக்குறீங்களே?

'நம்பிக்கை நமக்குச் சொல்லித்தரும் பாடத்தைப் கெட்டிப் பத்திரமாக படித்திருப்பவன்' என்று சொல்ல வந்ததை சுருக்கமாக
நம்பிக்கையைப் படித்திருப்பவன் என்று சொல்லியிருந்தேன்..

நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நினைச்சேன்..ம்ஹூம்..

கவிதைக்கு மட்டும்தான் விளக்கவுரை எழுதமுடியுமோ?

நாங்க நின்னா பேச்சு,படுத்தா எழுத்து,அசைஞ்சா கவிதை..

அதுனாலே ஒண்ணொண்ணா விளக்கிப் புத்தகம் போடா முடியாது..

ஷார்ப்பா கப்னு புரிஞ்சுக்கிடணும்..

புரிஞ்சுதா?

minorwall said...

/////Uma said...
மைனரின் பாட்டு இன்று கேட்கமுடியவில்லை. நாளைக்குள் கேட்டுவிட்டுச் சொல்கிறேன். (மைண்ட்வாய்ஸ்: வரவர இவர் புகழ் கூடிக்கொண்டே போகிறதே! பொறுத்தது போதும் உமா, பொங்கி எழு! உடனே கட்சியின் (சதி)ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டு!)////

அவுங்க காதுலே கொஞ்சம் ஐஸ் வாட்டர் புடிச்சு ஊத்துங்க..

புகை கொஞ்சம் அடங்கட்டும்...

Uma said...

நாங்க நின்னா பேச்சு,படுத்தா எழுத்து,அசைஞ்சா கவிதை..
அதுனாலே ஒண்ணொண்ணா விளக்கிப் புத்தகம் போடா முடியாது..
ஷார்ப்பா கப்னு புரிஞ்சுக்கிடணும்..//

எவ்ளோ சமாளிக்கிறீங்கன்னு பார்ப்போம்!

Parvathy Ramachandran said...

//உங்களை நம்பி இனிமே லீவு எடுக்க முடியாது போலிருக்கே? நான் எவ்வளவு கண்டுபிடிச்சிருக்கேன் பாருங்க!!//

தலையிருக்க வால் ஆடக்கூடாது.


//வரவர இவர் புகழ் கூடிக்கொண்டே போகிறதே! பொறுத்தது போதும் உமா, பொங்கி எழு! உடனே கட்சியின் (சதி)ஆலோசனைக்கூட்டத்தைக் கூட்டு!)////

கட்சியின் அவை முன்னவர் என்ற முறையில், கூட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்தால், உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.

Uma said...

கட்சியின் அவை முன்னவர் என்ற முறையில், கூட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்தால், உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.//

இப்படித்தான் வேகமா செயல்படணும், குட்! கூட்டத்தில எப்படி இவரை கட்டம் கட்டறதுன்னு 'செயல்திட்ட முறையை' முடிவு செய்துவிடுவோம்!

Ananthamurugan said...

ananth said...
ஆனந்த முருகனின் ஆக்கம் இல்லத்தரசிகளின் நிஜ கடமை, உணர்வு இவற்றை வெளிப் படுத்தியது. இதற்கு மேலும் பல கடமைகளை இல்லத்தரசிகள் நிறைவேற்றுகிறார்கள்.

பெண்களின் வழக்கமான பணிகளையும்,இன்றியமையாமையும் பற்றிய அடுத்த தமிழ் கட்டுரை வாத்தியாருக்கு அனுப்பிவிட்டேன்.அவர் வெளியிடுவார்.நன்றிகள் பல!!!!

Ananthamurugan said...

ananth said...
ஆனந்த முருகனின் ஆக்கம் இல்லத்தரசிகளின் நிஜ கடமை, உணர்வு இவற்றை வெளிப் படுத்தியது. இதற்கு மேலும் பல கடமைகளை இல்லத்தரசிகள் நிறைவேற்றுகிறார்கள்.

பெண்களின் வழக்கமான பணிகளையும்,இன்றியமையாமையும் பற்றிய அடுத்த தமிழ் கட்டுரை வாத்தியாருக்கு அனுப்பிவிட்டேன்.அவர் வெளியிடுவார்.நன்றிகள் பல!!!!

ananth said...

/////Blogger ஜி ஆலாசியம் said...

///ananth said...
ஆலாசியம் அவர்களின் கவிதையும் இவை எவற்றிற்கும் குறைந்ததல்ல. நன்றாக இருக்கிறது. விளங்கிக் கொள்ள சற்று கருத்தூன்றி படிக்க வேண்டியிருக்கிறது.///

மிக்க நன்றி ஆனந்த் அவர்களே!

எனது பாடலுக்கு மிகவும் அழகாக தெளிவுரையை நமது சகோதரியார் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் பின்னூட்டத்திலே அருமையாக செய்து உள்ளார்கள் அதையும் படித்து பார்க்க வேண்டுகிறேன். நன்றி./////

ஆரம்பத்தில் அதை கவனிக்கவில்லை. இப்போது கவனித்து விடுகிறேன்.

ananth said...

/////Blogger thanusu said...

ananth said....காதலரைப் பார்த்தவுடன் பெண்கள் நாணம் கொண்டு அந்த நேரத்தில் என்ன செய்துக் கொண்டிருந்தாலும் அதை நிறுத்தி விடுவார்கள். தனுசுவின் கவிதை இதை அழகாக சொல்லியிருக்கிறது. அருமையிலும் அருமை. இது போன்ற கவிதைகள் நமக்கு சுட்டுப் போட்டாலும் வராது.

உங்களுக்கு கவிதை புரியாது என்று ஒருமுறை சொல்லி உள்ளீர்கள், ஆனால் அந்த ஆனந்துக்கு இன்று என் கவிதை பிடித்துபோய் பின்னூட்டம் வந்திருக்கிறது .

மிக்க மகிழ்ச்சி ஆனந்த்//////

நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு. அன்று ஏனோ அந்த கவிதை உடனே புரியவில்லை. இன்று இந்த கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்பது உடனே புரிந்தது. பல நேரங்களில் ஆக்கம் பிடித்திருந்தும் பின்னூட்டம் வராததற்கு நேரமின்மைதான் காரணம். I never singled out any article not to be read or commented.

thanusu said...

ananth said...நல்ல ஞாபக சக்திதான் உங்களுக்கு. அன்று ஏனோ அந்த கவிதை உடனே புரியவில்லை. இன்று இந்த கவிதையில் என்ன சொல்கிறீர்கள் என்பது உடனே புரிந்தது. பல நேரங்களில் ஆக்கம் பிடித்திருந்தும் பின்னூட்டம் வராததற்கு நேரமின்மைதான் காரணம். I never singled out any article not to be read or commented.

வாத்தியாரே சொல்லி உள்ளார் நம் போன்றோருக்கு முதலில் பிழைப்பு பிறகுதான் வகுப்பு.

நீங்கள் இரண்டாம் வாத்தியார் உங்களை குறை சொல்ல மாட்டோம் .

நானே கூட பின்னூட்டாம் இட வேண்டிய பல தகவல்களுக்கு நேரம் இல்லாததால் தருவதில்லை .

அய்யர் said...

kmr.krishnan said...
///திறமையை வெளிக் கொணர்வதில் முதலிடம் நம் அய்யாவுக்குத்தான். தன்னுடைய வலைப்பூவில் சோதிட ஆர்வத்தால் தூண்டப்பட்டு வருபவர்களுக்கு இலக்கிய ஆர்வமும், மொழி ஆற்றலும்,நகைச்சுவை உணர்வும், பல்சுவை அறிவும் அளித்து ஊக்குவிப்பதில் அய்யாவுக்கு நிகர் அவரேதான்...///


///நானெல்லாம் பூவோடு சேர்ந்து நாறும் மணப்பது போலத்தான்.///

நாறுடன் சேர்ந்து
நாங்களும் மணக்கலாம் தானே...

அய்யர் said...

///ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர்.. எங்கே ஊற்றுக் கண் இருக்கிறது என்பதை அறிந்து லேசாக அந்தக் கண்ணைப் பார்த்து தட்டி விடுவார்.///

சரிதான் சிங்கை செல்வரே..
வழிமொழிகிறோம்..
பதிவிடும் மாணவர்களின் பதிவும்
ஒவ்வொன்றும் மெருகேருவருவதும்
உரியவருக்கு சேர வேண்டிய பாராட்டு

வகுப்பறையில் வாழ்த்துச் சொல்ல வாத்தியாரும் அனுமதிப்பார்
என்றே நம்புகிறோம்..

///நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்...///

மௌனமாக சிரிக்கின்றோம்..


///நன்றி நன்றி. நமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்து நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!///

நன்றி சொல்வதில்
நாங்களும் சேர்ந்து கொள்ளலாம் தானே..

தேமொழி said...

///thanusu said...
கடற்கரையை விட்டு குளக்கரைக்கு குளிக்க வந்த மைனரை நான் கண்டு பிடித்துவிட்டேன் .///

///thanusu said...
நான் ரொம்ப அப்பவிதாங்க .///

அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லே

minorwall said...

////தேமொழி said...
///thanusu said...
கடற்கரையை விட்டு குளக்கரைக்கு குளிக்க வந்த மைனரை நான் கண்டு பிடித்துவிட்டேன் .///

///thanusu said...
நான் ரொம்ப அப்பவிதாங்க .///

அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லே////

'எல்லோருமே மைனருதான்..

இந்தப்படத்துலே...குளக்கரையிலே எல்லோருமே மைனருதான்..

சொல்லப்போனா சிறுசுங்கதான்..'

பாட்டாவே படிச்சுட்டேன்..

kmr.krishnan said...

//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!//

சமையல் குறிப்பு தரவில்லையே தவிர, சாப்பாடு பற்றி நானும் வாத்தியார்
அவர்களும் பலமுறை பேசியுள்ளோம். பிப்ரவரி 2011ல் கல்யாண சமையல் ஜாபிதா அடியேன் அளித்துள்ளேன். செட்டிநாட்டு சமையல் மேஸ்திரிகளைப் பற்றி
அய்யாவும் பலமுறை சொல்லியுள்ளார்.

thanusu said...

தேமொழி said...அப்பாவி நீங்கள்? ஹ்ம்ம்...சாரி, உங்க ஸ்டேட்மெண்ட் நம்பறமாதிரி இல்லே

அய்யோ...நம்புங்க... நெஜம்மா நான் ரொம்போ அப்பாவிதாங்க.

thanusu said...

minorwall said...
சொல்லப்போனா சிருசுங்கதான்..
பாட்டாவே படிச்சுட்டேன்..

அந்த படத்தை பார்த்தவுடன் முன்பு ஒருமுறை ஜப்பான் கடற்கரையில் கூட்டமாக இருக்கும் ஒரு படத்தை போட்டு அதில் "மைனரை கண்டிபிடியுங்கள்" என்ற வாத்தியாரின் அறிவிப்பும்தான் என் நினைவுக்கு வந்தது.

அடுத்த நொடியில் அந்த பின்னூட்டமும் வந்து விட்டது .உடனே அனுப்பி விட்டேன்.

அதன் பின் யோசித்தேன் மைனர் தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது அவசரப் பட்டு விட்டோமோ? பின்னூட்டம் ஏதேனும் இடுவாரோ என்று refresh செய்துக் கொண்டே இருந்தேன். உமா அவர்களுக்குதான் பதில் வந்தது

காரணம் சென்ற வாரம் மதிப்பிற்குரிய கணேஷ் அவர்களுக்கு என்னுடைய வார்த்தைகள் வருத்தம் அடையும் படி அமைந்து விட்டது.

இப்போது பார்கையில் உங்களின் பின்னூட்டம் மிக சாதாரணமாக இருந்தது.

மிகவும் ஜாலியாக எடுத்துக் கொண்டு எல்லோரும் மைனர் தான் அதாவது எல்லோரும் சிறியவர்கள் தான் என்று சிலேடை மொழியில் ஒரு பின்னூட்டம் இட்டு அசத்தி விட்டீர்கள். நன்றிகள் மைனர்.

ஜி ஆலாசியம் said...
This comment has been removed by the author.
ஜி ஆலாசியம் said...

/////அய்யர் said...
///ஆம், கிருஷ்ணன் சார் இதில் மிகவும் கெட்டிக் காரர்.. எங்கே ஊற்றுக் கண் இருக்கிறது என்பதை அறிந்து லேசாக அந்தக் கண்ணைப் பார்த்து தட்டி விடுவார்.///

சரிதான் சிங்கை செல்வரே..
வழிமொழிகிறோம்..
பதிவிடும் மாணவர்களின் பதிவும்
ஒவ்வொன்றும் மெருகேருவருவதும்
உரியவருக்கு சேர வேண்டிய பாராட்டு

வகுப்பறையில் வாழ்த்துச் சொல்ல வாத்தியாரும் அனுமதிப்பார்
என்றே நம்புகிறோம்..

///நாம் அனைவரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துக் கொண்டால் இதுப் போன்ற சிரமம் வராது புரிந்துக் கொண்டோம்...///

மௌனமாக சிரிக்கின்றோம்..


///நன்றி நன்றி. நமக்கு இவ்வளவு சுதந்திரம் தந்து நாம் ஒவ்வொருவரின் சம்பாசனைகளையும் கண்டு களிக்கும் நமது வாத்தியாருக்குத் தான் நன்றி கூற வேண்டும். மிக்க நன்றி ஆசிரியர் அவர்களே!///

நன்றி சொல்வதில்
நாங்களும் சேர்ந்து கொள்ளலாம் தானே../////


மெளனமா! எது மெளனமாக இருக்கிறது...
பிரபஞ்சத்தில் எதுவுமே மெளனமாக இல்லையாமே...

சரி, மெளனமாக சிரிக்கிறீர்கள்!:):)
அர்த்தம் அனந்தமாக இருக்கும்
பொறுத்து இருங்கள்...

அறிவுறுத்தலா? உறுத்தலா! எதுவானாலும் சரி..
உங்களின் உறுத்தலை உதறுங்கள்
எங்களின் நினைவுருத்தலையே
தங்க மனதில் வையுங்கள் ஐயரே!

நன்றி சொல்வதில் நாங்களும் சேர்ந்துக் கொள்ளலாமா!
ஹா..ஹா..ஹா.. என்ன கேள்வி இது?
எல்லாவற்றிலும் உங்களுக்கும் பங்கு உண்டு விடுவதாக இல்லை..
நீங்கள் வகுப்பறையில் இருப்பவரே!

ஹி..ஹி.. என்ன தாடியைத் தடவிக் கொண்டே
வேறு ஏதாவது ஆராய்ச்சியில் அமர்ந்திருப்பீர்கள் :):)

அதற்காக விட்டு விடுவோமா என்ன?
அதுவும் என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தங்களை
விட்டு விட்டு தான் நான் நகர்வேனா?

நன்றிகள் ஐயரே!

அய்யர் said...

சரி, மெளனமாக சிரிக்கிறீர்கள்!:):)
அர்த்தம் அனந்தமாக இருக்கும்
பொறுத்து இருங்கள்...

அறிவுறுத்தலா? உறுத்தலா! எதுவானாலும் சரி..
உங்களின் உறுத்தலை உதறுங்கள்
எங்களின் நினைவுருத்தலையே
தங்க மனதில் வையுங்கள் ஐயரே!

தோழரே..
உறுத்தலுமில்லை
அறிவுறுத்தலுமில்லை
வெறுத்தலும் இல்லை

மௌனம் அழகானது
அனுபவித்தால் மட்டும் புரியக்கூடியது

காது கேட்கும் வரையில் தான் சத்தம்
காது கடவுளை நோக்கும் போது

கவனித்துப் பார்த்தால்
மௌன(மே)ராகம்..

அங்கு வந்தபின்
அதைப் பற்றி நீங்களே எழுதுவீர்கள்

எழுத வைப்பதே
எமது நோக்கமும் எண்ணமும்

வாழ்த்துக்களுடன் வாழ்க..
வழக்கம் போலஇந்தபாடல் உங்களுக்கு

உள்ளதை சொல்வேன்
சொன்னதை செய்வேன்

வேறு ஒன்றும் தெரியாது
உள்ளத்தில் இருப்பதை

வார்த்தையில் மறைக்கும்
உட்கபடம் தெரியாது

பள்ளிக்கு சென்று படித்ததில்லை
ஒரு எழுத்தும் தெரியாது

நான் பார்த்த உலகத்தில் பாசத்தை தவிர எதுவும் கிடையாது

அடிப்பது போல கோவம் வரும்
அதில் ஆபத்து இருக்காது

நீ அழுதால் நானும் அழுவேன்
காரணம் தெரியாது

நன்றியை மறந்தால் மன்னிக்க மாட்டேன் நெஞ்சுக்கு நெருப்பாவேன்

நல்லவர் வீட்டில் நாய்போல் உழைப்பேன் காலுக்கு செருப்பாவேன்

அய்யர் said...

kmr.krishnan said...
//மாணவர் மலரில் எல்லாவிதமான ஆக்கங்களும் வந்துவிட்டன. மிஸ்ஸிங் சமையல் குறிப்புதான், அத வேணா நான் எழுதவா???? சொல்லுங்கள் நண்பர்களே!//

அய்யர் "இளநீர்" கொடுத்து
அன்றே தொடங்கி வைத்து விட்டார்

தொடர வேண்டும் என்ற
காத்திருக்கின்றோம்..

தேமொழி said...

///அய்யர் said...
காது கேட்கும் வரையில் தான் சத்தம்///

உண்மை...உண்மை
இங்கே பார்க்கவும்...அதாவது கேட்கவும்....
http://youtu.be/2G9Q-r2leyw

ஜி ஆலாசியம் said...

@Ayyar...////

மௌனம் அழகானது
அனுபவித்தால் மட்டும் புரியக்கூடியது

காது கேட்கும் வரையில் தான் சத்தம்
காது கடவுளை நோக்கும் போது

கவனித்துப் பார்த்தால்
மௌன(மே)ராகம்..

அங்கு வந்தபின்
அதைப் பற்றி நீங்களே எழுதுவீர்கள்

எழுத வைப்பதே
எமது நோக்கமும் எண்ணமும்

வாழ்த்துக்களுடன் வாழ்க..
வழக்கம் போல்

நன்றி! நன்றி!! நன்றி!!!

நான் எதார்த்தமாகத் தான் சொன்னேன்
உறுத்தல் என்று :):)

ஐயரை நான் அறிவேன் ஐயர் என்னை அறிந்தது போல்.

இல்லையே அங்கேயும் "ஓம்" என்ற ஒழி இருக்கும் என்றல்லவா கேள்விப் படுகிறேன்.

சரி, 'காது கேட்கும் வரைக்கும் தான் சப்தம்'
நீங்கள் சொல்வது சரிதான் ஐயர் அவர்களே!

இருந்தும் சப்தம் அங்கேத் தான் இருக்கும்
அதைக் கேட்கும் காது மாத்திரமே பழுது!

நல்லது நன்றி தாங்கள் சுழட்டியப் பாடல்
அருமை... ரசித்தேன், ருசித்தேன் உணர்ந்தேன்.

ஜி ஆலாசியம் said...

கண்ணாடி காரிலே கசடான பிழை நடையிலே
'ஓம் எனும் சப்தம் ஒலித்துக் கொண்டு தான்...'

ஜி ஆலாசியம் said...

ஈஸ்வரா செய்யும் தவற்றிற்கு ஏதாவது காரணம் கொடுத்து தப்பிக்க செய்கிறாயே இது நியாயமா! தவறு வராமல் செய்ய வேண்டாமா!

அய்யர் said...

தேமொழி said...
///உண்மை...உண்மை
இங்கே பார்க்கவும்...அதாவது கேட்கவும்....
http://youtu.be/2G9Q-r2leyw///

பார்த்தோம்,, அது
பக்கத்து துறை தான் என்றாலும்

அங்கேயும் உமது நுண்ணறிவை தந்து
அசத்தி விட்டீர்கள்..

கேட்பதற்கு உதவுவதும் balance,ஆக
நிற்க உதவும் திறன் செவிகளே..

கேள்விகளால் தோட்கப்படாத செவி
என்ற வள்ளுவர் கோபத்தை நினைவு கொண்டு அன்புடன் தருகிறோம்

வணக்கமும் வாழ்த்துக்களும்
வாழ்க..

R.Srishobana said...

வணக்கம் ஐயா,
இந்த வார மாணவர் மலரின் ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது...

தனுசு அவர்களின் கவிதை மிகவும் அருமை..மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்...நல்ல கவிதையை தந்தமைக்கு நன்றிகள்...

கேது தசையில் பிள்ளையாருக்கு சேவை செய்து நல்ல புண்ணியத்தை தந்து சங்கடங்களை போக்கிய‌ பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் மகிமை நன்றாக இருந்தது ஐயா...ஆக்கத்துடனே பொருந்தி வந்த சொல்லடைகளுடன் நிறைந்திருந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது...நன்றி ஐயா

தேமொழி சகோதரியின் ஓவியம் அருமை...தன் அழகை அழகுப்படுத்திக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் அழகை ரசிக்கும் அழகு மயிலின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது...அப்பெண்ணின் ஆபரணங்களும் மிகவும் நேர்த்தியாக தீட்டியுள்ளீர்கள்...அருமையான ஓவியத்திற்கு நன்றி சகோதரி...

ஆலாசியம் அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தது...முதலில் யதார்த்தமாக ஆரம்பித்து பின்னர் இறுதி வரிகளில் ஆன்மிக சிந்தனைகள் கொண்ட கவிதை நன்றாக இருந்தது...மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே...

ஆனந்தமுருகனின் நகைச்சுவை ஆக்கம் நன்று...உண்மையும் இதுவே...என் தந்தையும் சில நேரம் இப்படி சொல்வார்...ஒரு முறை என் அம்மா வெளியூர் சென்ற பிறகு தான் உண்மையை புரிந்து கொண்டார்...

சபரி அவர்களின் நகைச்சுவையில் 1,4,5,7 நகைச்சுவைகள் சிரிக்க வைத்தன...

ஜி ஆலாசியம் said...

///// R.Srishobana said...
வணக்கம் ஐயா,
இந்த வார மாணவர் மலரின் ஆக்கங்கள் அனைத்தும் நன்றாக இருந்தது...

தனுசு அவர்களின் கவிதை மிகவும் அருமை..மிகவும் ரசித்து எழுதியுள்ளீர்கள்...நல்ல கவிதையை தந்தமைக்கு நன்றிகள்...

கேது தசையில் பிள்ளையாருக்கு சேவை செய்து நல்ல புண்ணியத்தை தந்து சங்கடங்களை போக்கிய‌ பிள்ளையார்பட்டி பிள்ளையாரின் மகிமை நன்றாக இருந்தது ஐயா...ஆக்கத்துடனே பொருந்தி வந்த சொல்லடைகளுடன் நிறைந்திருந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது...நன்றி ஐயா

//////தேமொழி சகோதரியின் ஓவியம் அருமை...தன் அழகை அழகுப்படுத்திக் கொண்டிருக்கும் அப்பெண்ணின் அழகை ரசிக்கும் அழகு மயிலின் அழகு என்னை மிகவும் கவர்ந்தது...அப்பெண்ணின் ஆபரணங்களும் மிகவும் நேர்த்தியாக தீட்டியுள்ளீர்கள்...அருமையான ஓவியத்திற்கு நன்றி சகோதரி...////இதுவே அழகு! மிகவும் அழகான வரிகள்:):)

/////ஆலாசியம் அவர்களின் இரு கவிதைகளும் நன்றாக இருந்தது...முதலில் யதார்த்தமாக ஆரம்பித்து பின்னர் இறுதி வரிகளில் ஆன்மிக சிந்தனைகள் கொண்ட கவிதை நன்றாக இருந்தது...மிக்க நன்றி ஆலாசியம் அவர்களே...////மிக்க நன்றி சகோதரி ஷோபனா.. உங்களின் பின்னூட்டத்தை நல்ல தமிழை ரசித்துப் படித்தேன்:):) நன்றி.

R.Srishobana said...

மைனர் அவர்களின் ஒலிநாடாவைக் கேட்க முடியவில்லை...கணிப்பொறியில் உள்ள sound hardwareயில் ஒரு சிறிய பிரச்சனை...அது சரியானவுடன் கேட்டுவிட்டு பிறகு என் கருத்தை கூறுகின்றேன்...அதில் அப்படி என்ன "மேஜிக்" செய்துள்ளீர்கள் என்று தெரியவில்லை...கேட்க மிகவும் ஆவலாய் இருக்கிறது,ஆனால் கேட்க இயலவில்லை...மன்னிக்கவும்...

minorwall said...

///////R.Srishobana said...
மைனர் அவர்களின் ஒலிநாடாவைக் கேட்க முடியவில்லை...கணிப்பொறியில் உள்ள sound hardwareயில் ஒரு சிறிய பிரச்சனை...அது சரியானவுடன் கேட்டுவிட்டு பிறகு என் கருத்தை கூறுகின்றேன்...அதில் அப்படி என்ன "மேஜிக்" செய்துள்ளீர்கள் என்று தெரியவில்லை...கேட்க மிகவும் ஆவலாய் இருக்கிறது,ஆனால் கேட்க இயலவில்லை...மன்னிக்கவும்...//////

'மேஜிக்'லாம் நமக்குத் தெரியாதே..

'மன்னிப்பு'அப்புடி இப்புடின்னு பெரிய வார்த்தையெல்லாம் வேணாம்..

கேக்கணும் என்கிற உங்களின் ஆர்வம் ஒன்றே போதும்..

தேமொழி கொடுத்த இந்த லின்க்கை ட்ரை பண்ணிக் கேளுங்க.. 

http://youtu.be/vykJe-dG-kw

minorwall said...

////Uma said...
கட்சியின் அவை முன்னவர் என்ற முறையில், கூட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்தால், உறுப்பினர்களுக்கு அனுப்பிவிடுகிறேன்.//

இப்படித்தான் வேகமா செயல்படணும், குட்! கூட்டத்தில எப்படி இவரை கட்டம் கட்டறதுன்னு 'செயல்திட்ட முறையை' முடிவு செய்துவிடுவோம்!////

ம்க்கூம்..
கட்டம் கட்டுற வேலை எல்லாம் உங்க கட்சிக்குள்ளதான் செல்லுபடியாகும்..
அதுக்கே கூட உங்க தலைமைக்கு பவர் இருக்கா இல்லியான்னு உங்க கட்சிக்காரங்களே குழம்பிக் கிடக்குறாங்க..அவுங்க சந்தேகத்தை போக்கி முதல்லே உங்க கட்சியை கண்ட்ரோலுக்குக் கொண்டு வர்ற வழியைப் பாருங்க மேடம்.. (இதெல்லாம் பாலிட்டிக்ஸ்லே பாலபாடம்..) இதுக்கே இந்த தடவு தடுறீங்க..நீங்கல்லாம் எங்க?

நானெல்லாம் கட்டம் கட்டி கட்டம் கட்டியே சலிச்சே போயிட்டேன்..

நான் கட்டம் கட்டினதுலே தப்பிச்ச கொஞ்ச ஆளுங்கள்லே இன்னிக்கு ஏதோ பேர் சொல்லிட்டுருக்குற ஆளா வளர்ந்துட்டீங்க..அதான் இப்புடியெல்லாம் பேசுறீங்க..

உங்களுக்கு முந்தின தலைமையை கணக்கு கேட்டார்னு கட்டம் கட்டினேன்..சீனியருங்களைக் கேட்டுப்பாருங்கசேதி தெரியும்.. புரிஞ்சுதா?

Uma said...

நானெல்லாம் கட்டம் கட்டி கட்டம் கட்டியே சலிச்சே போயிட்டேன்..
நான் கட்டம் கட்டினதுலே தப்பிச்ச கொஞ்ச ஆளுங்கள்லே இன்னிக்கு ஏதோ பேர் சொல்லிட்டுருக்குற ஆளா வளர்ந்துட்டீங்க..அதான் இப்புடியெல்லாம் பேசுறீங்க..//

ம்ம்ம்ம்