மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.3.12

Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!

Astrology: மாயக் கண்ணன் செய்த மாய லீலை!

காலபைரவர், அதாங்க காலதேவன், ஒரு பூரட்டாதி நட்சத்திர நன்நாளில்தான் ஏழு கிழமைகளைப் படைத்தாராம். அவ்வாறு, காலச்சக்கரத்தை படைத்தருளிய தலம் இன்று அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில் இருக்கும் இடம் என்று கோவிலின் தலபுராணம் கூறுகிறது. மூலவர் விமானம் கஜகடாட்ச சக்தி விமானம் எனப்படுகிறது. ஐராவத யானையும், தேவர்களின் தலைவன் இந்திரனும் பூரட்டாதி நாளில் இங்கு வந்து வழிபாடு செய்கின்றனராம். எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?

இறையனார் திருவானேஸ்வரர் கிழக்கு நோக்கியும்  அம்பாள் காமாட்சி அம்மன் தெற்கு நோக்கி நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். வலம்புரி விநாயகரும், சண்டிகேஸ்வரரும் புடைப்பு சிற்பமாக உள்ளனர். பிரகாரத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், கஜலட்சுமி, துர்க்கை, பிரம்மா, நவக்கிரகம், நந்தி சன்னதிகள் உள்ளன. சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திக்கடனைச் செய்ய விரும்புகிறவர்கள் செய்யலாம்.

ஜாதகத்தில் மதிகாரனாகிய சந்திரனுக்கும், வித்யாகாரனாகிய புதனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சந்திரன் மதியை ஆள்பவர், புதன் அறிவை ஆள்பவர். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நல்ல மனம், சிறந்த புத்திகூர்மை பெற்று வலம்வர, பூரட்டாதி நட்சத்திர நாளில் இங்கு வழிபாடு செய்வது நன்மை தரும்!

கல்விக்குரிய ஸ்தலம் இது. கல்வியறிவு என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது தர்மனின் தம்பி சகாதேவனைத்தான். மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான். அவன் ஜோதிட அறிவு கொண்டவன். பாரத யுத்தம் துவங்கும் முன்பு, துரியோதனன் அவனைத் தேடி வந்து, எந்த நாளில் போரைத் துவங்கினால் வெற்றி கிடைக்குமென அவனிடமே கேட்டான். தன்னை எதிர்த்து போரிட, தன்னிடமே ஆலோசனை கேட்க வந்த துரியோதனனை ஏமாற்ற சகாதேவன் விரும்பவில்லை. அமாவாசை அன்று போர் துவங்கினால் வெற்றி உனக்கே என அவன் நாள் குறித்துக் கொடுத்தான். அவனது கணிப்பு தப்பியதில்லை.

ஆனால், கிருஷ்ணர் தன் மாயத்தால் அமாவாசையை முந்தச் செய்து, துரியோதனனைத் தோற்கடித்தார். இவ்வாறு எதிரியை வெறுக்காத குணமும், உண்மையாகவும் நடந்து கொள்ளவும், சகாதேவன் போல் சாஸ்திர ஞானம் பெறவும் இங்கு வழிபடலாம்.

கிருஷ்ணர் எப்படி அமாவாசையை ஒரு நாள் முந்தச் செய்தார் என்பத்ற்கு சுவாரசியமான கதையொன்று உண்டு. யுத்தம் நடந்து கொண்டிருந்த போது, அமாவாசைக்கு முதல் நாள், கிருஷ்ணர் நதிக்கரையில் அமர்ந்து திதி கொடுப்பதற்குத் தயாராகிவிட்டார். திகைத்துப்போன சூரியனும், சந்திரனும் ஒன்றாக அங்கே தோன்றி, ஒரு சேர அவரிடம் கேட்டனர்:

"பகவானே! நாளை அல்லவா அமாவாசை?"

கிருஷ்ணர் எதிர்க் கேள்வி கேட்டார்: "நீங்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் தினம்தானே அமாவாசை?"

"ஆமாம்" என்று இருவரும் பதில் அளித்தனர்.

கிருஷ்ணர் புன்னகைத்தார்." இப்போது நீங்கள் இருவரும் ஒன்றாகத்தானே இருக்கிறீர்கள்?"

அப்போதுதான் அவ்விருவருக்கும் அந்த மாயக் கண்ணனின் லீலை புரிந்த்து.
-----------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் பகுதி 15
பூரட்டாதி நட்சத்திரத்திற்கான கோவில்
பூரட்டாதி நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது 25ஆவ்து நட்சத்திரம்
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
----------------------------------------
சுவாமியின் பெயர்: திருவானேஷ்வர்
அம்பிகையின் பெயர்: காமாட்சி அம்மன்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
திருவையாறிலிருந்து 17 கி.மீ. தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி சென்றால்,
அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இத்திருக்கோவில் உள்ளது
மாதம் தோறும் பூரட்டாதி நட்சத்திர நாளில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது

முகவரி
அருள்மிகு திருவானேஷ்வர் திருக்கோயில்
ரங்கநாதபுரம் போஸ்ட்- 613 104
திருக்காட்டுப்பள்ளி வழி,
திருவையாறு தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம்.
கோவில் ந்சடை திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 9 மணி வரை,
மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை

பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள ஜாதக தோஷங்கள், மற்றும் க்‌ஷ்டங்கள் நீங்க இத்தலத்திற்குச் சென்று அங்கு உறைகின்ற இறைவனை வழிபட்டு விட்டு வரலாம். இசையில் ஞானம்பெற விரும்புகிறவர்களும் இத்தலத்து இறைவனை வழிபடலாம். நல்ல பலன் கிடைக்கும்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

63 comments:

  1. திருவானேஸ்வரர் திருக்கோவில் பற்றிய ஆற்றுப்படுத்தும் பதிவுக்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  2. ////////எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?////////
    ஏன்? ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே?

    ///////////"நீங்கள் இருவரும் 'இன்றாக' இருக்கும் தினம்தானே அமாவாசை?"/////
    'ஒன்றாக' என்று மாற்றி விட வேண்டுகிறேன்..

    ReplyDelete
  3. நான்
    பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி

    என்னை
    படம் எடுக்கிறேன் என்று
    நீ விழுந்து தொலைக்காதே
    படம் புடிப்பவரே.

    ReplyDelete
  4. புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் துளிக்கூட பயம் இல்லை!.'ஆமா, அப்படித்தான். என்ன பண்றது?' என்கிற பாவமே இருக்கிறது. துணிச்சல் என்றால் இது தான்.

    'மாயக் கண்ணனின் லீலை' அருமை. இராமர் தர்மத்தின் வழி நின்று வாழ்ந்து காட்டியவர். ஆனால் கிருஷ்ணர் எதைச் செய்கிறாரோ அதுவே தர்மம்.
    இதே கண்ணனை, ஒருமுறை, தன் அன்பால் கட்டி வைத்தான் சகாதேவன்.
    ஆயிரம் லீலைகள் செய்தாலும் அன்புக்கு வசப்படும் பரம்பொருளின் லீலையும்,பூரட்டாதி நட்சத்திரக் கோவிலின் வரலாறும் படிக்க மிக இனிமையாக இருந்தது. ஆமாம்,'பூரட்டாதி ஊரெட்டாளும்' என்ற வழக்கு ஏன் ஏற்பட்டது?.

    ReplyDelete
  5. முகப்பில் குழந்தையும், அதன் காதுகளில் செருகிய ரோஜாக்களுமாக வெளியிட்ட புகைப்படம் நன்றாக இருந்தது.ரோஜாவுடன் ரோஜா இதழ்களும் இருந்தன.ஒருவேளை முள்ளும் இருந்ததோ என்னமோ!

    வடநாட்டில் அந்தப்பெண்ணைப் போல ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளும் பலர் உண்டு.ரயில் திடீரென நின்றால் அந்தப்பெண்ணின் கால்களுக்கு மிகவும் மோசமான தாக்குதல் கிடைக்க வாய்ப்பு அதிகம்.

    ஓடும் வண்டியின் கூறையில் இருந்து புகைப்படம் எடுத்த‌ நிபுணருக்குப் பாராட்டுக்கள்.

    அந்தக் கோட்டையும், குளமும், கோவில்களும் எந்த ஊர் ஐயா? அவையும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன.

    ReplyDelete
  6. பூரட்டாதி நட்ச‌த்திரக்கோவில் தகவல்கள் அருமை. நன்றி. தினமலர் ஆலயங்கள்
    பகுதியிலும் இக்கோவில் 'திருவானேஷ்வர்' திருக்கோவில் என்றே குறிப்பிடப்படுள்ளது.வனம் புரிகிறது. காடு என்று பொருள். 'வான' இங்கே என்ன பொருள் என்று விளங்கவில்லை. திருவானேஷ்வர் என்றால் என்ன பொருள் என்று எஸ் ஸி சேகரோ, பார்வதி ராமச்ச‌ந்திரன் அவர்களோ விளக்க வேண்டுகிறேன்.எனக்கென்னமோ சுவாமியின் பெயர் ஸ்ரீவனேஸ்வர் என்பதே சரி என்று தோன்றுகிறது. 'வான' என்பது சமஸ்கிருதச்சொல்லா? அப்படியானல் என்ன பொருள். அது தமிழ்ப்பெயர் என்றால் வான், ஆகாயம், ஸ்கை என்ற பொருளா?

    ReplyDelete
  7. தஞ்சாவூரார் நமது வகுப்பறைக்குப் பெருமை சேர்ப்பது போல, மகளிர் அணியில் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் இங்கு வருவது நமக்கெல்லாம் பெருமை. அவர்கள் மங்கையர் மலர் மற்றும் பல ஆன்மீக இதழ்களில் தன் பங்களிப்புச்செய்தவர். இளைய தலமுறைக்கு நம் பாரம்பரியத்தை எடுத்துச்சொல்வதில் அதிக நாட்டம் உடையவர்.அவர் வகுப்பறைக்கு நிறைய‌ ஆக்கங்கள் அளிக்க வேண்டுகிறேன்.

    ஒரு நாளைக்கு ஒரு மாணவரின் ஆக்கம் வெளியிடுதல் என்ற வகையில்
    மாற்றம் செய்வது நலன் பயக்குமா என்று ஐயா அவர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.ஒரே நாளில் அளவில் நீண்ட ஆக்கங்கள் பல வெளியிடப் பட்டால் கருத்தூன்றிப்படிப்பதில் சிரமம் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது ஐயாவின் ஆளுமை நிறைந்த இடம் . எனவே ஐயாவின்
    எண்ணத்திற்கே முதலிடம். நன்றி.

    ReplyDelete
  8. //ரோஜாவுடன் ரோஜா இதழ்களும் இருந்தன//

    "ரோஜா இருந்தால் இதழ்களும் இருக்கத்தானே செய்யும்? என்ன பிதற்றல் இது?" என்று மைனரோ, டெல்லிக்காரங்களோ சொல்வதற்கு முன்பாக நானே திருத்திவிடுகிறேன்.

    "ரோஜாவுடன் ரோஜா இலைகளும் இருந்தன" என்று வாசிக்கவும்.

    அது போகட்டும். டெல்லியில் நில நடுக்கமாமே? உமாஜி நலமா?
    நிலநடுக்கத்திற்கான காரணங்களில் உமாஜியின் பங்கைப் பற்றி மைனர் எழுதலாம். அவர்தான் ஜப்பானில் இது போன்றெலாம் அடிக்கடி பார்ப்பவர்.
    அவருக்குதான் இதைப் பற்றிச் சொல்ல முழு உரிமை.

    ReplyDelete
  9. //// ஆலாசியம் said...
    திருவானேஸ்வரர் திருக்கோவில் பற்றிய ஆற்றுப்படுத்தும் பதிவுக்கு நன்றிகள் ஐயா!////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  10. //// minorwall said...
    ////////எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?////////
    ஏன்? ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே?
    ///////////"நீங்கள் இருவரும் 'இன்றாக' இருக்கும் தினம்தானே அமாவாசை?"/////
    'ஒன்றாக' என்று மாற்றி விட வேண்டுகிறேன்..////

    தட்டச்சுப்பிழை. சரி செய்துவிட்டேன். சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  11. /// thanusu said...
    நான்
    பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி
    என்னை
    படம் எடுக்கிறேன் என்று
    நீ விழுந்து தொலைக்காதே
    படம் புடிப்பவரே.////

    படம் பிடித்தவர் விழுகவில்லை. நமக்குக் கிடைத்த படம் அதை உறுதி செய்கிறது!:-)))

    ReplyDelete
  12. //// Parvathy Ramachandran said...
    புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் முகத்தில் துளிக்கூட பயம் இல்லை!.'ஆமா, அப்படித்தான். என்ன பண்றது?' என்கிற பாவமே இருக்கிறது. துணிச்சல் என்றால் இது தான்.
    'மாயக் கண்ணனின் லீலை' அருமை. இராமர் தர்மத்தின் வழி நின்று வாழ்ந்து காட்டியவர். ஆனால் கிருஷ்ணர் எதைச் செய்கிறாரோ அதுவே தர்மம்.
    இதே கண்ணனை, ஒருமுறை, தன் அன்பால் கட்டி வைத்தான் சகாதேவன். ஆயிரம் லீலைகள் செய்தாலும் அன்புக்கு வசப்படும் பரம்பொருளின் லீலையும்,பூரட்டாதி நட்சத்திரக் கோவிலின் வரலாறும் படிக்க மிக இனிமையாக இருந்தது. ஆமாம்,'பூரட்டாதி ஊரெட்டாளும்' என்ற வழக்கு ஏன் ஏற்பட்டது?.///

    ஊரெட்டாளும் உண்மையை அந்த நட்சத்திரக்காரர்கள்தான் சொல்ல வேண்டும்:-)))

    ReplyDelete
  13. //// kmr.krishnan said...
    முகப்பில் குழந்தையும், அதன் காதுகளில் செருகிய ரோஜாக்களுமாக வெளியிட்ட புகைப்படம் நன்றாக இருந்தது. ரோஜாவுடன் ரோஜா இதழ்களும் இருந்தன.ஒருவேளை முள்ளும் இருந்ததோ என்னமோ!
    வடநாட்டில் அந்தப்பெண்ணைப் போல ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளும் பலர் உண்டு.ரயில் திடீரென நின்றால் அந்தப்பெண்ணின் கால்களுக்கு மிகவும் மோசமான தாக்குதல் கிடைக்க வாய்ப்பு அதிகம்.
    ஓடும் வண்டியின் கூறையில் இருந்து புகைப்படம் எடுத்த‌ நிபுணருக்குப் பாராட்டுக்கள்.
    அந்தக் கோட்டையும், குளமும், கோவில்களும் எந்த ஊர் ஐயா? அவையும் நன்றாகப் படமாக்கப்பட்டுள்ளன.////

    ராஜஸ்தானில் உள்ள சிட்டோர்கர் Chittorgarh என்னும் ஊரில் உள்ள கோட்டை. வரலாற்றுச் சிற்ப்பு மிக்க இடம். கூகுள் காமாட்சியிடம் விவரம் உள்ளது. படித்துப்பாருங்கள்

    ReplyDelete
  14. ///// kmr.krishnan said...
    பூரட்டாதி நட்ச‌த்திரக்கோவில் தகவல்கள் அருமை. நன்றி. தினமலர் ஆலயங்கள்
    பகுதியிலும் இக்கோவில் 'திருவானேஷ்வர்' திருக்கோவில் என்றே குறிப்பிடப்படுள்ளது.வனம் புரிகிறது. காடு என்று பொருள். 'வான' இங்கே என்ன பொருள் என்று விளங்கவில்லை. திருவானேஷ்வர் என்றால் என்ன பொருள் என்று எஸ் ஸி சேகரோ, பார்வதி ராமச்ச‌ந்திரன் அவர்களோ விளக்க வேண்டுகிறேன்.எனக்கென்னமோ சுவாமியின் பெயர் ஸ்ரீவனேஸ்வர் என்பதே சரி என்று தோன்றுகிறது. 'வான' என்பது சமஸ்கிருதச்சொல்லா? அப்படியானல் என்ன பொருள். அது தமிழ்ப்பெயர் என்றால் வான், ஆகாயம், ஸ்கை என்ற பொருளா?////

    வானேஷ்வர் - ஆகாய் ஈஸ்வர் என்றே பொருள் கொள்வோம்! நன்றி!

    ReplyDelete
  15. ///// kmr.krishnan said...
    தஞ்சாவூரார் நமது வகுப்பறைக்குப் பெருமை சேர்ப்பது போல, மகளிர் அணியில் திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்கள் இங்கு வருவது நமக்கெல்லாம் பெருமை. அவர்கள் மங்கையர் மலர் மற்றும் பல ஆன்மீக இதழ்களில் தன் பங்களிப்புச்செய்தவர். இளைய தலமுறைக்கு நம் பாரம்பரியத்தை எடுத்துச்சொல்வதில் அதிக நாட்டம் உடையவர்.அவர் வகுப்பறைக்கு நிறைய‌ ஆக்கங்கள் அளிக்க வேண்டுகிறேன்.
    ஒரு நாளைக்கு ஒரு மாணவரின் ஆக்கம் வெளியிடுதல் என்ற வகையில் மாற்றம் செய்வது நலன் பயக்குமா என்று ஐயா அவர்கள் யோசிக்க வேண்டுகிறேன்.ஒரே நாளில் அளவில் நீண்ட ஆக்கங்கள் பல வெளியிடப் பட்டால் கருத்தூன்றிப்படிப்பதில் சிரமம் இருக்கலாமோ என்று தோன்றுகிறது. இது ஐயாவின் ஆளுமை நிறைந்த இடம் . எனவே ஐயாவின் எண்ணத்திற்கே முதலிடம். நன்றி./////

    G அனந்த முருகனிடம் நிறைய விஷயம் இருக்கிறது. வெரைட்டியாக அவரால் தினமும் 2 ஆக்கங்களைத் தர முடியும். எனக்கு அவர் தினமும் சராசரியாக 3 மின்னஞ்சல்கள் அனுப்புகின்றார். உங்களாலும் தினமும் ஒரு ஆக்கத்தைத்தார முடியும். மறறவர்களை விடுங்கள். உங்கள் இருவருடையதை மட்டும் தினமும் எப்ப்டி வெளியிடலாம்? எங்கே வெளியிடலாம்? தனியாக வலைப் பதிவு ஒன்றைத் துவ்ங்கி வெளியிடலாமா? யோசித்துச் சொல்லுங்கள்.

    மாணவர் மலர் என்பது விருந்து. விருந்து என்பது வாரம் ஒருமுறை இருந்தால்தான் நன்றாக இருக்கும். மலர் இரண்டு பகல்கள் அனைவரின் கண்ணிலும் பட வேண்டும் என்பதற்காகத்தான், நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் என்து பதிவை வலை ஏற்றாமல் வைத்திருந்து மாலை 6.30 மணிக்குத்தான் வலை ஏற்றினேன். அதைக் கவனித்தீர்களா - இல்லையா?

    ReplyDelete
  16. எனக்கு சகாதேவனை மிகவும் பிடித்தது. எதிரியே நம்பிக்கை வைக்கும் குணம் என்பது சாதரமானதாகத் தெரியவில்லை.

    விரைவு வண்டியில் விந்தைப் பயணம் செய்யும் வீரத்திருமகள். வண்டிக்கு வெளியே பயணம் செய்வதால் கட்டணமில்லாப் பயணம் என்பதில் கைது செய்ய சட்டச் சிக்கல் வருமோ? இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தற்கொலை முயற்சி சட்டப் பிரிவு.

    நட்சத்திரக் கோயில் செய்திகளுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  17. // தேமொழி said...
    எனக்கு சகாதேவனை மிகவும் பிடித்தது. எதிரியே நம்பிக்கை வைக்கும் குணம் என்பது சாதரமானதாகத் தெரியவில்லை.
    விரைவு வண்டியில் விந்தைப் பயணம் செய்யும் வீரத்திருமகள். வண்டிக்கு வெளியே பயணம் செய்வதால் கட்டணமில்லாப் பயணம் என்பதில் கைது செய்ய சட்டச் சிக்கல் வருமோ? இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தற்கொலை முயற்சி சட்டப் பிரிவு.
    நட்சத்திரக் கோயில் செய்திகளுக்கு நன்றி ஐயா./////

    பயணிக்கும் பெண்ணிற்கு வறுமையும், அறியாமையுமே காரணமாக இருக்கும்! வீரமெல்லாம் இருக்க வாய்ப்பில்லை சகோதரி!

    ReplyDelete
  18. முதலில் திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் நமஸ்காரங்களும். தாங்கள், வாத்தியார் போன்ற பெரியோர்களின் ஆசியே என் எழுத்துக்குக் காரணம். தேமொழி, உமா போன்ற சிறந்த அறிவாளிகள் இருக்கும் மகளிர் அணியில், என் போன்ற புதுமுகத்துக்கு தாங்கள் அளிக்கும் ஊக்கத்துக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இளைய தலைமுறையை மனம் திறந்து பாராட்டும் தங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி.

    ' திருவானேஷ்வர் கோயில்' என்ற பெயர், ஐராவதம் வணங்கி வழிபட்டதால் ஏற்பட்டது எனத் தெரிகிறது( திருவானைக்காவல்' கோவில் போல ). கஜ ப்ருஷ்ட விமானம் ,கஜ கடாட்ச விமானம் போன்ற விமான அமைப்பு, மூலவர், பெரும் வரப்பிரசாதி என்பதை உணர்த்தும் குறியீடு ஆகும். மற்ற விமானங்களை விடவும் இதில், சக்தி, குவித்து வெளியிடும் திறன் அதிகம் என்று கூறப்படுகிறது.

    ReplyDelete
  19. வசிப்பது தஞ்சையென்றாலும், பொழுதுக்கும் திருவையாற்றில் ஐயாறப்பரை வழிபட்டுவரும் எனக்கு மிக அருகில் திருக்காட்டுப் பள்ளிக்கருகிலுள்ள இந்த ஆலயத்தின் பெருமை தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது. ஒரு முறை இந்த ஆலயத்துக்குக் குடமுழுக்கு நடந்தபோது ரங்கநாதபுரத்துக்குச் சென்றிருக்கிறேன். அந்த ஊர்காரர் ஒருவர் சென்னை சங்கீத சபா ஒன்றின் செயலாளர், எனவே பல பெரிய வித்வான்கள் அப்போது இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் மகாராஜபுரம் சந்தானம் அவர்களுடைய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.நேரம் அதிகமாகிவிட்டது. வெளியூர்க்காரர்கள் உணவருந்திவிட்டுச் செல்ல வேண்டும். ரசிகர்களோ ஒவ்வொரு பாட்டாக சீட்டு கொடுத்துப் பாடச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்து திடீரென்று அவர் ஒரு பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார். அந்தப் பாடல் "நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" எனும் பாடல். அந்த ஆலயம்தான் இது என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  20. //மாணவர் மலர் என்பது விருந்து. விருந்து என்பது வாரம் ஒருமுறை இருந்தால்தான் நன்றாக இருக்கும்.//

    ஓகே ஐயா!

    அதிக ஆக்கங்கள் தருபவர்களுடையதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து
    ஒரு படைப்பாளிக்கு வாரம் ஒரு வாய்ப்பு என்ற அளவில் செய்யலாம்.ஒரு நாளைக்கு ஒருவருடைய ஆக்கம் மட்டுமே வெளியிடலாம். முதலில் ஐயாவின் ஆக்கம், அதனைத் தொடர்ந்து ஒரு மாணவரின் ஆக்கம். ஐயாவுக்காக மட்டும் வருபவர்களே அதிகம். அவர்களில் ஒரு சிலராவது ஏனையோரின் ஆக்கங்களையும் படிக்கக் கூடும்

    அவசியம் எனில் நான் இளைஞர்களுக்கு வழிவிட்டு சற்றே விலகியிருக்கவும் தயார்.

    ஆலோசனைதானே தவிர இறுதி முடிவு தாங்கள்தான் எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  21. பூரட்டாதி நட்சத்திரக்கோயில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான்//

    எனக்கு மகாபாரதத்தில் பீஷ்மருக்கு அடுத்து பிடித்தது சகாதேவன். இருவரையும் வைத்து ஒரு கதை யோசித்து வைத்திருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்.

    அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து /

    நேற்று இங்கே உள்ள ஒரு அரசியல்வியாதி அச்சடித்த நோட்டிஸ்களை ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்துவிட்டுப்போனார். சரி என்ன விஷயம் என்று படித்தால் ஹோலி அன்று எல்லார்க்கும் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் விருந்து, வருகை தரவும் என. சரி என்று மேலே படித்தால் அவர் இதுவரை செய்த சேவைகள் பட்டியல், ரத்த தானம் செய்தது, அனாதைப் பிணத்தை எரித்தது என நீண்ட பட்டியல். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று சொல்வார்கள். சரி போகட்டும் என உள்ளே பிரித்தால் நிறைய போட்டோக்கள், அவர் சைக்கிளில் எதற்காகவோ பேரணி சென்றபோது ஒரு 'க்ளிக்', அனாதைப் பிணத்திற்கு கொள்ளி வைக்கும்போது ஒரு 'க்ளிக்', ஆஸ்பத்திரியில் ஹாயாக கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு கைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டு 'ரத்ததானம்' செய்தபோது ஒரு 'கிளிக்'. மனுஷன் சுடுகாட்டுக்குக்கூட காமேராவோடும், போட்டோ எடுக்க அல்லக்கைகளோடும்தான் போயிருக்கார். இந்திய அரசியல்வியாதிகளின் இப்படிப்பட்ட 'சேவை மனப்பான்மை'யைக் கண்ணுற்ற சந்தோஷத்தில் மனதும், வயிறும் நிறைந்து இரவு சாப்பாடு கூட வேண்டாமென்று தோன்றியது.

    ReplyDelete
  22. பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி//

    பூலான்தேவிக்கும், அல்லாவுக்கும், ஜான்சிராணிக்கும், அல்லாவுக்கும் என்னா சம்பந்தம்? சற்றே விளக்குவீர்களா தனுசு?

    ReplyDelete
  23. அது போகட்டும். டெல்லியில் நில நடுக்கமாமே? உமாஜி நலமா?//

    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.

    ReplyDelete
  24. உமா போன்ற சிறந்த அறிவாளிகள் இருக்கும் மகளிர் அணியில்//

    அவ், நம்மைக்கூட அறிவாளின்னு சொல்றதுக்கு இந்த உலகத்துல ஆள் இருக்கா?

    ReplyDelete
  25. ////////எல்லாம் நம்பிக்கைதான். அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து ஃபேஸ் புக்கில் போட முடியுமா என்ன?////////
    ஏன்? ட்ரை பண்ணிப் பார்க்குறதுதானே?

    சிவனுக்கு வேண்டுமானால் ஆங்கிலம் தெரிந்து இருக்கலாம். kmrk அய்யா சொன்னது போல் civan என்று எழுதினால்தான் அவருக்கு பிடிக்கும் என்பது போல்.அவருக்கு அடுத்த லேயர் தானே இந்திரன்.Face book இல் போட்டால்,அதை வியூ பண்ணிபார்க்க இந்திரனுக்கு logon id,password எல்லாம் யார் கொடுப்பது!!

    நல்லா படித்த வாத்தியாரிடம்(exam hall)answer தாளையும்.ஒண்ணுமே படிக்காத என்னிடம் கேள்விதாளையும் கொடுக்கும்

    முருகனுக்கு control of examination என்று கொடுத்து விடலாம்.
    சக்திக்கு shock supply unit என்று கொடுக்கலாம்.

    எப்ப shock வரும்னே தெரியலை.ஆனா,நாங்க கவலைபடமாட்டோம்.பவர் இருந்ததானே ஷாக் வரும்ம்ம்ம்!!!

    ReplyDelete
  26. கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசை போதாயன அமாவாசை என்ற பெயரில் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.

    ReplyDelete
  27. //// Parvathy Ramachandran said...
    முதலில் திரு.கே.எம்.ஆர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளும் நமஸ்காரங்களும். தாங்கள், வாத்தியார் போன்ற பெரியோர்களின் ஆசியே என் எழுத்துக்குக் காரணம். தேமொழி, உமா போன்ற சிறந்த அறிவாளிகள் இருக்கும் மகளிர் அணியில், என் போன்ற புதுமுகத்துக்கு தாங்கள் அளிக்கும் ஊக்கத்துக்கு நான் என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். இளைய தலைமுறையை மனம் திறந்து பாராட்டும் தங்கள் பெருந்தன்மைக்கு என் நன்றி.
    ' திருவானேஷ்வர் கோயில்' என்ற பெயர், ஐராவதம் வணங்கி வழிபட்டதால் ஏற்பட்டது எனத் தெரிகிறது( திருவானைக்காவல்' கோவில் போல ). கஜ ப்ருஷ்ட விமானம் ,கஜ கடாட்ச விமானம் போன்ற விமான அமைப்பு, மூலவர், பெரும் வரப்பிரசாதி என்பதை உணர்த்தும் குறியீடு ஆகும். மற்ற விமானங்களை விடவும் இதில், சக்தி, குவித்து வெளியிடும் திறன் அதிகம் என்று கூறப்படுகிறது./////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  28. //// Thanjavooraan said...
    வசிப்பது தஞ்சையென்றாலும், பொழுதுக்கும் திருவையாற்றில் ஐயாறப்பரை வழிபட்டுவரும் எனக்கு மிக அருகில் திருக்காட்டுப் பள்ளிக்கருகிலுள்ள இந்த ஆலயத்தின் பெருமை தெரியாமல் போனது வருத்தமளிக்கிறது. ஒரு முறை இந்த ஆலயத்துக்குக் குடமுழுக்கு நடந்தபோது ரங்கநாதபுரத்துக்குச் சென்றிருக்கிறேன். அந்த ஊர்காரர் ஒருவர் சென்னை சங்கீத சபா ஒன்றின் செயலாளர், எனவே பல பெரிய வித்வான்கள் அப்போது இசை நிகழ்ச்சி நடத்தினார்கள். அதில் மகாராஜபுரம் சந்தானம் அவர்களுடைய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன்.நேரம் அதிகமாகிவிட்டது. வெளியூர்க்காரர்கள் உணவருந்திவிட்டுச் செல்ல வேண்டும். ரசிகர்களோ ஒவ்வொரு பாட்டாக சீட்டு கொடுத்துப் பாடச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவற்றைப் பார்த்து திடீரென்று அவர் ஒரு பாடலைப் பாடி கச்சேரியை நிறைவு செய்தார். அந்தப் பாடல் "நான் ஒரு விளையாட்டு பொம்மையா?" எனும் பாடல். அந்த ஆலயம்தான் இது என்பதை இப்போது புரிந்து கொண்டேன். நன்றி./////

    இந்தியாவில் உள்ள கோவில்களில் சரிபாதி தமிழ்நாட்டில் இருக்கிறதென்றும், அதில் பாதி தஞ்சை (பழைய தஞ்சை) மாவட்டத்தில் இருக்கிறது என்பார்கள்
    அததனை கோவில்களையும் அறிந்து வைத்திருப்பது என்பது சாத்தியமில்லை. அதில் வருந்துவதற்கும் ஒன்றும் இல்லை. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  29. //// kmr.krishnan said...
    //மாணவர் மலர் என்பது விருந்து. விருந்து என்பது வாரம் ஒருமுறை இருந்தால்தான் நன்றாக இருக்கும்.//
    ஓகே ஐயா!
    அதிக ஆக்கங்கள் தருபவர்களுடையதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து
    ஒரு படைப்பாளிக்கு வாரம் ஒரு வாய்ப்பு என்ற அளவில் செய்யலாம்.ஒரு நாளைக்கு ஒருவருடைய ஆக்கம் மட்டுமே வெளியிடலாம். முதலில் ஐயாவின் ஆக்கம், அதனைத் தொடர்ந்து ஒரு மாணவரின் ஆக்கம். ஐயாவுக்காக மட்டும் வருபவர்களே அதிகம். அவர்களில் ஒரு சிலராவது ஏனையோரின் ஆக்கங்களையும் படிக்கக் கூடும்
    அவசியம் எனில் நான் இளைஞர்களுக்கு வழிவிட்டு சற்றே விலகியிருக்கவும் தயார்.
    ஆலோசனைதானே தவிர இறுதி முடிவு தாங்கள்தான் எடுக்க வேண்டும்./////
    -----------------------------------------------------
    நீங்களும் இளைஞர்தான். அதுவும் ஓய்வில் இருக்கும் இளைஞர். விஷயஞானமுள்ள இளைஞர். சமைக்கச் சொல்லிவிட்டு (யோசனையைச் சொல்லி விட்டு) நீங்கள் ஏன் ஒதுங்க வேண்டும்? உங்களால் தினம் ஒரு ஆக்கத்தை எழுத முடியும். அது போல அனந்தமுருகனாலும் எழுத முடியும்.

    உங்கள் இருவரையும் ஆசிரியராக நியமித்து (தலைமை, உதவி என்று) தனியாக ஒரு வலைப் பதிவைத் துவங்கலாமா? லகான் உங்கள் இருவர் கையிலும். அதாவது blog administration நீங்கள் இருவரும் பார்த்துக்கொள்ள வேண்டும்.editting, publishing, comment moderation என்று சகலமும் உங்கள் கைகளில்தான். சம்மதமா?

    பெயர்: மாணவர் நாளிதழ்
    அதற்கான் சுட்டியை வகுப்பறையின் சைடுபாரில் கொடுத்துவிடுகிறேன்
    என்ன சொல்கிறீர்கள்?

    எனக்கு இப்போது உள்ள வேலைப்பளுவில் நீங்கள் பரிந்துரைத்துள்ளபடி செய்வதற்கு நேரமில்லை. மன்னிக்கவும். வாரம் ஒரு நாள் உங்கள ஆக்கங்கள அனைத்தையும் தொகுத்து ஒரே பதிவாக வெளியிடுவதில் மட்டுமே எனக்கு விருப்பம். அத்றகு மட்டுமே எனக்கு நேரம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதிலும் எனக்கு ஒன்றும் சிரம்ம் இல்லை
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    KMRK அவர்களின் யோசனைக்கும் என்னுடைய பதிலுக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். குறிப்பாக கோபாலன் சார், ஆலாசியம் , மைனர், தனுசு,
    தில்லி உமா அக்கா, சகோதரிகள் தேமொழி மற்றும் பார்வதி ராமச்சச்ந்திரன், அனந்தமுருகன், மற்றும் சபரி நாராயணன்.

    ReplyDelete
  30. /// Uma said...
    பூரட்டாதி நட்சத்திரக்கோயில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.
    மகாபாரதத்தில் கிருஷ்ணரே வியக்கும் வகையில் நல்லறிவு கொண்டவனாக பாண்டவர்களில் கடைசி தம்பியான சகாதேவன் விளங்கினான்//
    எனக்கு மகாபாரதத்தில் பீஷ்மருக்கு அடுத்து பிடித்தது சகாதேவன். இருவரையும் வைத்து ஒரு கதை யோசித்து வைத்திருக்கிறேன், விரைவில் எழுதுகிறேன்.
    அதற்காக ஒரு வீடியோ காமெராவுடன் சென்றால் படம் பிடித்து /
    நேற்று இங்கே உள்ள ஒரு அரசியல்வியாதி அச்சடித்த நோட்டிஸ்களை ஒவ்வொரு வீட்டிலும் கொடுத்துவிட்டுப்போனார். சரி என்ன விஷயம் என்று படித்தால் ஹோலி அன்று எல்லார்க்கும் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் விருந்து, வருகை தரவும் என. சரி என்று மேலே படித்தால் அவர் இதுவரை செய்த சேவைகள் பட்டியல், ரத்த தானம் செய்தது, அனாதைப் பிணத்தை எரித்தது என நீண்ட பட்டியல். வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது என்று சொல்வார்கள். சரி போகட்டும் என உள்ளே பிரித்தால் நிறைய போட்டோக்கள், அவர் சைக்கிளில் எதற்காகவோ பேரணி சென்றபோது ஒரு 'க்ளிக்', அனாதைப் பிணத்திற்கு கொள்ளி வைக்கும்போது ஒரு 'க்ளிக்', ஆஸ்பத்திரியில் ஹாயாக கூலிங் க்ளாஸ் அணிந்துகொண்டு கைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டு 'ரத்ததானம்' செய்தபோது ஒரு 'கிளிக்'. மனுஷன் சுடுகாட்டுக்குக்கூட காமேராவோடும், போட்டோ எடுக்க அல்லக்கைகளோடும்தான் போயிருக்கார். இந்திய அரசியல்வியாதிகளின் இப்படிப்பட்ட 'சேவை மனப்பான்மை'யைக் கண்ணுற்ற சந்தோஷத்தில் மனதும், வயிறும் நிறைந்து இரவு சாப்பாடு கூட வேண்டாமென்று தோன்றியது.////

    சுயவிளம்பரம் இன்றி இந்திய அரசியல் இல்லை. அதுதான் இன்றைய நிலைமை! மக்கள் மாக்களாகி விட்டார்கள்! வருந்தலாம். வேறு ஒன்றும் செய்வதற்கில்லை!

    ReplyDelete
  31. //// Uma said...
    பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி//
    பூலான்தேவிக்கும், அல்லாவுக்கும், ஜான்சிராணிக்கும், அல்லாவுக்கும் என்னா சம்பந்தம்? சற்றே விளக்குவீர்களா தனுசு?///

    அல்லா = இல்லை

    ReplyDelete
  32. //// Uma said...
    அது போகட்டும். டெல்லியில் நில நடுக்கமாமே? உமாஜி நலமா?//
    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.///

    பெயரைக்கேட்டாலே நிலநடுக்கம் விலகிப் போய்விடாதா?

    ReplyDelete
  33. //// Jagannath said...
    கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசை போதாயன அமாவாசை என்ற பெயரில் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.////

    எந்த மாதம் என்பதைச் சொல்லவில்லையே நீங்கள்?

    ReplyDelete
  34. வகுப்பறையை விட்டு வெளியே சென்றால் அது வகுப்பறை போல் இருக்காது!
    அதோடு இங்கு வழக்கமாக பள்ளிக் கூடம் வருபவர்கள் வார விடுமுறை நாளான
    ஞாயிறு அன்று சும்மா ஓரிடத்தில் உட்கார்ந்து நமக்குள்ளே நமக்குத் தெரிந்த
    விசயங்களை சொல்லி கொஞ்சம் நல்ல படியான பொழுதை
    கடத்துகிறோம் என்பது மட்டுமே இன்றைய நிலைமை.

    இலக்கிய மன்றக் கூட்டம் போன்றதொரு கூட்டாம் ஊரில் எப்படி வாரக் கடைசியில் படிக்கும் இளைஞர்களும், அப்பத்தான் படித்தும்; ரொம்ப நாளைக்கு முன்னமே படித்தும் வேலையில்லாமல் இருப்பவர்களும் மேலும் அரசு அலுவலர்களும், அதில் சில ஓய்வு பெற்றவர்களுமாக கூடும் வாராந்திர பிரயோஜன அரட்டை அரங்கமாகவே இருக்கிறது... வெளியில் இருந்து வந்து யாரும் பேசுவதில்லை... ஒருவேளை எப்போதாவது ஒரு சிலர் போகும் வழியிலே பாட்டும், விவாதமும் என்று எதோ நடக்கறது என்று நின்று பார்த்தால் தான் உண்டு.

    இப்படி இருக்கும் நிலையிலும். வகுப்பறையை விட்டு போனால் நமது பள்ளி வாழ்க்கையை துளைத்தது போல் தான் ஆகும்.
    கிருஷ்ணன் சாரின் விருப்பம் சரி என்றாலும், வாத்தியாரின் சௌகரியம் இதில் முக்கியமாகப் படுகிறது.... அதனால் இந்த முறை இப்படியேத் தொடரட்டும்...

    அதே வேலை மாணவர் இதழ் என்றொன்று வைத்துக் கொள்ள யாவரும் விரும்பினால் வாத்தியார் சொன்னது போல் ஒன்றை ஆரம்பியுங்கள் அதிலே தினமும் ஏதாவது நடப்பு விசயங்களை (அரசியல் தவிர்த்தும் தனிமனித தாக்குதல் தவிர்த்தும்) வாத்தியார் சொன்னது போல் ஒரு இருபது முதல் நாற்ப்பது வரி வரும் படியாக எழுதுங்கள்... மற்றவர்களும் நிறைய ஆக்கங்களை செய்ய முடிந்தால் அனுப்பட்டும். நானும் கூட அனுப்புகிறேன். பொறுப்பு வாத்தியாரின் ஆலோசனைப் படி கிருஷ்ணன் சாரும், அனந்த முருகன் சாரும் ஏற்கட்டுமே.

    ஆனால் வகுப்பறையில் வரும் வாரமலர் (மாணவர் மலரை) மலர்வதை நிறுத்த வேண்டாம் அதுவும் வாத்தியாரின் சௌகரியம் போலவே செய்யட்டும்... என்பதே எனது அபிப்ராயமும் கூட. இங்கே எப்படியும் நாம் அனைவரும் வாரம் ஒருமுறையாவது கூட வேண்டும் என்பது எனது அவா!

    மற்ற படி பெரியவர்களாக பார்த்து சரியானதை செய்யுங்கள்.

    நன்றி.

    ReplyDelete
  35. // Jagannath said...
    கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசை போதாயன அமாவாசை என்ற பெயரில் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.//

    ஒவ்வொரு மாதமும் இரண்டு அமாவாசைகள் பின்பற்றப்படுகின்றன. போதாயனர் என்ற மஹரிஷி எழுதிய சூத்திரங்கள்(வழிமுறைகளை) பின்பற்றுவோர் போதாயன அமாவாசையும் ஆபஸ்தம்பர், காத்யாயனர், பாரத்வாஜர், வைகானஸர் போன்ற மற்ற ரிஷிகளின் வழிமுறைகளின் படி நடப்போர், வழக்கமான‌ அமாவாசையும் அனுசரிக்கிறோம். சகோதரர் கூறியபடி, கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசையையே போதாயனர் தன் வழிவந்தோர் அனுசரிக்கும்படி செய்தார்.

    காலண்டரில், போதாயன அமாவாசை, சர்வ அமாவாசை என்று தனித்தனியே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அது சர்வ அமாவாசைக்கு ஒரு நாள் முன் வரும். ஒரு நாளின் உதயாதி நாழிகையில்( சூரிய உதயத்தில்) சதுர்தசி திதி இருந்து, அந்த நாளில் முக்கால் பாகத்திற்கு மேல் அமாவாசை தொடங்குவதானால், அது போதாயன அமாவாசை. சில மாதங்களில் இரண்டு அமாவாசையும் சேர்ந்தே வரும். சதுர்தசி நாள் முழுவதும் இருந்தால் இவ்வாறு நிகழும்.

    ReplyDelete
  36. என்னிடம் கருத்து எழுதச் சொன்னதற்கு வாத்தியார் அவர்களுக்கு நன்றி.

    திரு.KMRK அவர்களின் யோசனையும் தங்களின் பதிலும் என்னைப் பொறுத்தவரை சரியே. அவரது மேலான வழிகாட்டுதல் மற்றும் திரு. ஆனந்தமுருகனின் நெறிப்படுத்துதலில்,எங்கள் எழுத்துக்கள் மேலும் பட்டை தீட்டப்படும் என்று நினைக்கிறேன். மற்றவர்களின் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  37. Uma said...
    பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி//

    பூலான்தேவிக்கும், அல்லாவுக்கும், ஜான்சிராணிக்கும், அல்லாவுக்கும் என்னா சம்பந்தம்? சற்றே விளக்குவீர்களா தனுசு?

    அது
    அல்லா அல்லா
    அல்ல அல்ல,
    அல்ல அல்ல தான்.

    SP.VR. SUBBAIYA said...
    அல்லா = இல்லை

    நன்றி அய்யா .

    ReplyDelete
  38. டெல்லியில் நில நடுக்கமாமே? உமாஜி நலமா?//

    இணைய பிரச்சினை காரணமாக தாமதமாக விசாரிக்கிறேன்,
    தாங்கள் நலமா?

    Uma said...

    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.

    நன்றி.

    ReplyDelete
  39. புகழ் ஆசைதான் ஆசைகளிலேயே விடுவதற்கு மிகவும் கடினமான ஆசை.

    'தோன்றிற்புகழொடு தோன்றுக'என்று வாசுகியின் கணவரே சொல்லியிருக்கிறார்.

    எனவே அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் புகழை தாங்களே சொல்லாவிட்டால் வேறு யார் வந்து சொல்லப் போகிறார்கள்?

    புகழுக்காகச் செய்தாலும் அந்த அளவிற்காவது, சிறிய அளவாவது நற்செயல் நடந்ததே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.

    நான் மற்றவர்கள் செய்த நற்செயல்களை அவர்கள் முன்னிலையிலும், அவர்கள் இல்லாத போதும் புகழ்வேன். காரணம் கேட்போரும் அதனைப் போன்ற புகழ்ச்சியை விரும்பி,தான தருமங்களில் ஈடுபடட்டும் என்பதுதான்.

    சில அகில உலகத் தொண்டு நிறுவன இயக்கங்களில் நற்செயலைக் காட்டிலும் அதனை வினியோகிக்கச் செய்யும் கூட்ட ஏற்பாட்டுக்கு அதிகச் செலவு செய்வார்கள்.

    மிக அமைதியான முறையில் வெளியில் தெரியாமல் தன்னால் முடிந்த தொண்டினை,கைம்மாறு கருதாமல் செய்யக்கூடிய நல்லவர்களும் பரவலாக இருக்கவே செய்கிறார்கள். இங்கே இலால்குடியில் ஓர் உறவினர் மாலை நேரத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக குழல் விள‌க்கு வெளிச்சம்
    அளித்து,வீட்டுப் பாடங்களைச் செய்ய வைத்து,தனக்குத் தெரிந்த அளவு பாடங்களைப் புரிய வைத்துத் தொண்டு செய்தார். நேரமும், இடமும் மட்டும் அளித்தார். இந்த இலவச 'ட்யூஷன்' வகுப்பில் படித்த சில ஏழைப் பிள்ளைகள்
    எஞ்சினியரிங் சேர்ந்துவிட்டனர். ஒரு பெண் பி எஸ் ஸி அப்ளைடு மேத்ஸ்
    படித்து 3ம் வருடம் முடியு முன் ஸ்டேட் பாங்க் தேர்வு தேறிவிட்டாள். கேம்பஸ் செலெக்ஷனில் விப்ரோ, பிலானி அளிக்கும் எம் எஸ் கோர்சுக்கும் தேர்வு ஆகிவிட்டாள்.அவள் வீட்டில் எம் எஸ் படிக்க ஊரைவிட்டு போகக்கூடாது என்கிறார்கள்.அப்பெண்ணின் தந்தை பந்தல் போடும் தொழிலாளி.அண்ணன் மாட்டு வண்டி ஓட்டுபவர்.

    இந்த அம்மாள் புகழ் விரும்பி செயல் புரியவில்லை. ஆனால் நாம் அவர்களுக்குப்புகழ் சேர்க்காமல் இருக்கலாமா? அவர்கள் தாங்களாகவே விளம்பரப் படுத்திக் கொள்ளக்கூடாது என்பது சரிதான்.ஆனால் அவர்களைப் புகழ வேண்டிய சமுதாயக் கடமை நமக்கு உண்டு.

    ReplyDelete
  40. "On Chaturdashi at sunrise, if Amavasai begins in the fourth quarter of the day (22:30 Nalligai to 29:59 Nalligai from sun rise for 30 Nalligai Ahas)) Chaturdashi day is itself Bodhayana Amavasya.

    On Prathamai at sunrise, if Prathamai ends before sunset, the earlier Chaturdashi day is itself Bodhayana Amavasya."

    ANSWER BY SRIVIDYA RAJAGOPALAN IN YAHOO ANSWERS.

    ReplyDelete
  41. SP.VR. SUBBAIYA said...KMRK அவர்களின் யோசனைக்கும் என்னுடைய பதிலுக்கும் உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் .........

    கருத்து சொல்லும் அளவுக்கு பெரியவன் இல்லை ,கோபாலன் அய்யா , KMRK அய்யா ஆகியோரைப் போன்று படைப்பாளியும் இல்லை .வகுப்புக்கு வந்த பின்தான் எழுதவே துவங்கினேன் ,தாங்களும் கோபாலன் அய்யா அவர்களும் கொடுத்த உற்சாகத்தில் தான் இன்னும் ஏதோ எழுதுகிறேன் .

    வகுப்புக்கு வரும் மூன்றாயிரத்திர்க்கும் மேற்பட்ட கண்மணிகள் இங்கு எதிர் பார்ப்பது ஜோதிடம் சம்பந்தமான பாடங்களும் ,அலசல்களும், தகவல்களும் தான். மற்றபடி கதை, கட்டுரை, கவிதை , யாவும் இரண்டாம் பட்சமே. நானும் ஜோதிடத்தைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் .தொடர் ஜோதிடம் சம்பந்தமாக வரும் ஆக்கங்களின் இடையில் சற்றே இளைப்பாறிக் கொள்ள உருவானதுதான் ,மாணவர் மலர், சினிமா, புதிய-பழைய பாடல்கள் . இளைப்பாற வந்த ஆக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களை விட ஜோதிட தொடருக்கு வரும் பின்னூட்டங்கள்தான் இங்கு அதிகம் .kmrk அவர்களே கூட இப்படி குறைகிறதே என்று சில பின்னூட்டங்களும் இட்டுள்ளது யாவருக்கும் தெரியும் .

    kmrk சொல்லவருவது ஒரு நாளில் நிறைய ஆக்கங்கள் வருகிறது படிக்க நேரமில்லை எனும் அர்த்தத்தில் சொல்கிறார் என நினைக்கிறேன் . ஞாயறு அன்று விடுமுறை நாள் என்பதால் , கூடுதல் தூக்கம் ,நண்பர் உறவினர் வீட்டு விசேஷங்கள்,சந்திப்புகள், குடும்பத்தாரோடு வெளியில் செல்வது போன்றவையும் இடம் பெற்று விடும் .இவைகளை நாம் ஒதுக்கவோ குறைக்கவோ முடியாது .

    என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வேனில் ,மாணவர் மலர் இரண்டு தினங்கள் தொடர்ந்து முகப்பில் இருக்கும் போது இரண்டு தினங்களில் அதனை நேரம் இருக்கும் போது படித்தால் போதுமானது. படிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இங்கு யாரும் உண்டாக்குவதில்லை .ஆர்வம் உள்ளவர்கள் நேரம் உள்ளவர்கள் படிக்கட்டும் படித்த பின் மனதில் பட்டால் பின்னூட்டம் இடட்டும் .

    தனி சுட்டி ஏதும் தேவை இல்லை .

    மதிப்பிற்குரிய kmrk அவர்களுக்கு ; தாங்களின் கருத்தை மறுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் எழுதவில்லை .மனதில் பட்டதை எழுதி உள்ளேன் .

    கருத்து கூற அனுமதித்த அய்யா அவர்களுக்கும் kmrk அவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  42. ///KMRK அவர்களின் யோசனைக்கும் என்னுடைய பதிலுக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். குறிப்பாக கோபாலன் சார், ஆலாசியம் , மைனர், தனுசு,
    தில்லி உமா அக்கா, சகோதரிகள் தேமொழி மற்றும் பார்வதி ராமச்சச்ந்திரன், அனந்தமுருகன், மற்றும் சபரி நாராயணன்.///

    குறிப்பிட்டு சொன்னதினால்
    அமைதி கொள்கிறோம்..

    வணக்கமும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  43. சும்மாவே கருத்து சொல்றேன் பேர்வழின்னு ஏதாவது சொல்லி கலக்கிகிட்டு இருப்போம், கருத்து என்னென்னு கேட்டா விட்டுடுவோமா என்ன? ஹி. ஹி. ஹீ...

    எனக்கு இந்த சுட்டியில் உள்ள படம் சொல்லும் பாடம் பிடித்திருக்கிறது ஐயா.
    http://www.cartoonstock.com/lowres/dcr0546l.jpg

    ReplyDelete
  44. ///அல்லா = இல்லை ///

    அச்சச்சோ.... ஐயா, என்ன இது?..... பெரியார் பாணியில் கடவுள் இல்லை, இல்லவே இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு. கவனம்... கவனம்.
    கருத்துக்களை படித்த வரை அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் ஏதோ கொஞ்சம் கொஞ்சமா புரியற மாதிரி இருக்கு.

    ReplyDelete
  45. வாரம் ஒரு நாள் உங்கள ஆக்கங்கள அனைத்தையும் தொகுத்து ஒரே பதிவாக வெளியிடுவதில் மட்டுமே எனக்கு விருப்பம். அத்றகு மட்டுமே எனக்கு நேரம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதிலும் எனக்கு ஒன்றும் சிரம்ம் இல்லை//

    அப்படியே செய்யுங்கள். ஆலாசியத்தின் கருத்தையும், தனுசுவின் கருத்தையும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  46. இணைய பிரச்சினை காரணமாக தாமதமாக விசாரிக்கிறேன்,
    தாங்கள் நலமா?
    Uma said...
    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.
    நன்றி.//

    கேள்வியும் கேட்டு, பதிலையும் நீங்களே சொல்லிவிட்டதால் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  47. ஆனால் அவர்களைப் புகழ வேண்டிய சமுதாயக் கடமை நமக்கு உண்டு.//

    உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சுயவிளம்பரம்தான் ஏற்கமுடியாததாக இருக்கிறது.

    ReplyDelete
  48. ///// தமிழ் விரும்பி ஆலாசியம் said...
    வகுப்பறையை விட்டு வெளியே சென்றால் அது வகுப்பறை போல் இருக்காது!
    அதோடு இங்கு வழக்கமாக பள்ளிக் கூடம் வருபவர்கள் வார விடுமுறை நாளான
    ஞாயிறு அன்று சும்மா ஓரிடத்தில் உட்கார்ந்து நமக்குள்ளே நமக்குத் தெரிந்த
    விசயங்களை சொல்லி கொஞ்சம் நல்ல படியான பொழுதை
    கடத்துகிறோம் என்பது மட்டுமே இன்றைய நிலைமை.
    இலக்கிய மன்றக் கூட்டம் போன்றதொரு கூட்டாம் ஊரில் எப்படி வாரக் கடைசியில் படிக்கும் இளைஞர்களும், அப்பத்தான் படித்தும்; ரொம்ப நாளைக்கு முன்னமே படித்தும் வேலையில்லாமல் இருப்பவர்களும் மேலும் அரசு அலுவலர்களும், அதில் சில ஓய்வு பெற்றவர்களுமாக கூடும் வாராந்திர பிரயோஜன அரட்டை அரங்கமாகவே இருக்கிறது... வெளியில் இருந்து வந்து யாரும் பேசுவதில்லை... ஒருவேளை எப்போதாவது ஒரு சிலர் போகும் வழியிலே பாட்டும், விவாதமும் என்று எதோ நடக்கறது என்று நின்று பார்த்தால் தான் உண்டு.
    இப்படி இருக்கும் நிலையிலும். வகுப்பறையை விட்டு போனால் நமது பள்ளி வாழ்க்கையை துளைத்தது போல் தான் ஆகும்.
    கிருஷ்ணன் சாரின் விருப்பம் சரி என்றாலும், வாத்தியாரின் சௌகரியம் இதில் முக்கியமாகப் படுகிறது.... அதனால் இந்த முறை இப்படியேத் தொடரட்டும்...

    அதே வேலை மாணவர் இதழ் என்றொன்று வைத்துக் கொள்ள யாவரும் விரும்பினால் வாத்தியார் சொன்னது போல் ஒன்றை ஆரம்பியுங்கள் அதிலே தினமும் ஏதாவது நடப்பு விசயங்களை (அரசியல் தவிர்த்தும் தனிமனித தாக்குதல் தவிர்த்தும்) வாத்தியார் சொன்னது போல் ஒரு இருபது முதல் நாற்ப்பது வரி வரும் படியாக எழுதுங்கள்... மற்றவர்களும் நிறைய ஆக்கங்களை செய்ய முடிந்தால் அனுப்பட்டும். நானும் கூட அனுப்புகிறேன். பொறுப்பு வாத்தியாரின் ஆலோசனைப் படி கிருஷ்ணன் சாரும், அனந்த முருகன் சாரும் ஏற்கட்டுமே.
    ஆனால் வகுப்பறையில் வரும் வாரமலர் (மாணவர் மலரை) மலர்வதை நிறுத்த வேண்டாம் அதுவும் வாத்தியாரின் சௌகரியம் போலவே செய்யட்டும்... என்பதே எனது அபிப்ராயமும் கூட. இங்கே எப்படியும் நாம் அனைவரும் வாரம் ஒருமுறையாவது கூட வேண்டும் என்பது எனது அவா!
    மற்ற படி பெரியவர்களாக பார்த்து சரியானதை செய்யுங்கள்.
    நன்றி.////

    உங்களின் கருத்தைத் தெளிவாகச் சொன்னமைக்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  49. /// Parvathy Ramachandran said...
    // Jagannath said...
    கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசை போதாயன அமாவாசை என்ற பெயரில் இன்றும் அனுசரிக்கப்படுகிறது.//
    ஒவ்வொரு மாதமும் இரண்டு அமாவாசைகள் பின்பற்றப்படுகின்றன. போதாயனர் என்ற மஹரிஷி எழுதிய சூத்திரங்கள்(வழிமுறைகளை) பின்பற்றுவோர் போதாயன அமாவாசையும் ஆபஸ்தம்பர், காத்யாயனர், பாரத்வாஜர், வைகானஸர் போன்ற மற்ற ரிஷிகளின் வழிமுறைகளின் படி நடப்போர், வழக்கமான‌ அமாவாசையும் அனுசரிக்கிறோம். சகோதரர் கூறியபடி, கிருஷ்ணர் உருவாக்கிய அமாவாசையையே போதாயனர் தன் வழிவந்தோர் அனுசரிக்கும்படி செய்தார்.
    காலண்டரில், போதாயன அமாவாசை, சர்வ அமாவாசை என்று தனித்தனியே குறிப்பிட்டிருப்பதைக் காணலாம். அது சர்வ அமாவாசைக்கு ஒரு நாள் முன் வரும். ஒரு நாளின் உதயாதி நாழிகையில்( சூரிய உதயத்தில்) சதுர்தசி திதி இருந்து, அந்த நாளில் முக்கால் பாகத்திற்கு மேல் அமாவாசை தொடங்குவதானால், அது போதாயன அமாவாசை. சில மாதங்களில் இரண்டு அமாவாசையும் சேர்ந்தே வரும். சதுர்தசி நாள் முழுவதும் இருந்தால் இவ்வாறு நிகழும்./////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  50. //// Parvathy Ramachandran said...
    என்னிடம் கருத்து எழுதச் சொன்னதற்கு வாத்தியார் அவர்களுக்கு நன்றி.
    திரு.KMRK அவர்களின் யோசனையும் தங்களின் பதிலும் என்னைப் பொறுத்தவரை சரியே. அவரது மேலான வழிகாட்டுதல் மற்றும் திரு. ஆனந்தமுருகனின் நெறிப்படுத்துதலில்,எங்கள் எழுத்துக்கள் மேலும் பட்டை தீட்டப்படும் என்று நினைக்கிறேன். மற்றவர்களின் மேலான கருத்துக்களையும் எதிர்பார்க்கிறேன்.////

    நல்லது. நன்றி சகோதரி!

    ReplyDelete
  51. //// thanusu said...
    Uma said...
    பூலான் தேவி அல்லா
    புல்லட் தேவி.
    ஜான்சி ராணி அல்லா
    ரயில் ராணி//
    பூலான்தேவிக்கும், அல்லாவுக்கும், ஜான்சிராணிக்கும், அல்லாவுக்கும் என்னா சம்பந்தம்? சற்றே விளக்குவீர்களா தனுசு?
    அது
    அல்லா அல்லா
    அல்ல அல்ல,
    அல்ல அல்ல தான்.
    SP.VR. SUBBAIYA said...
    அல்லா = இல்லை/////
    நன்றி அய்யா .////

    இதற்கு எதற்கு நன்றி!

    ReplyDelete
  52. /// thanusu said...
    டெல்லியில் நில நடுக்கமாமே? உமாஜி நலமா?//
    இணைய பிரச்சினை காரணமாக தாமதமாக விசாரிக்கிறேன்,
    தாங்கள் நலமா?////

    சுனாமி மைனரை ஒன்றும் செய்யாது. நிலநடுக்கம் உமாஜியை ஒன்றும் செய்யாது! இருவரும் ப.அ.வின் பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  53. /////Uma said...
    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.
    நன்றி.////

    நல்லது. பதிலுக்கு நன்றி!

    ReplyDelete
  54. //// kmr.krishnan said...
    புகழ் ஆசைதான் ஆசைகளிலேயே விடுவதற்கு மிகவும் கடினமான ஆசை.
    'தோன்றிற்புகழொடு தோன்றுக'என்று வாசுகியின் கணவரே சொல்லியிருக்கிறார்.
    எனவே அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் புகழை தாங்களே சொல்லாவிட்டால் வேறு யார் வந்து சொல்லப் போகிறார்கள்?
    புகழுக்காகச் செய்தாலும் அந்த அளவிற்காவது, சிறிய அளவாவது நற்செயல் நடந்ததே என்று மகிழ்ச்சி அடைய வேண்டியதுதான்.
    நான் மற்றவர்கள் செய்த நற்செயல்களை அவர்கள் முன்னிலையிலும், அவர்கள் இல்லாத போதும் புகழ்வேன். காரணம் கேட்போரும் அதனைப் போன்ற புகழ்ச்சியை விரும்பி,தான தருமங்களில் ஈடுபடட்டும் என்பதுதான்.
    சில அகில உலகத் தொண்டு நிறுவன இயக்கங்களில் நற்செயலைக் காட்டிலும் அதனை வினியோகிக்கச் செய்யும் கூட்ட ஏற்பாட்டுக்கு அதிகச் செலவு செய்வார்கள்.
    மிக அமைதியான முறையில் வெளியில் தெரியாமல் தன்னால் முடிந்த தொண்டினை,கைம்மாறு கருதாமல் செய்யக்கூடிய நல்லவர்களும் பரவலாக இருக்கவே செய்கிறார்கள். இங்கே இலால்குடியில் ஓர் உறவினர் மாலை நேரத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக குழல் விள‌க்கு வெளிச்சம்
    அளித்து,வீட்டுப் பாடங்களைச் செய்ய வைத்து,தனக்குத் தெரிந்த அளவு பாடங்களைப் புரிய வைத்துத் தொண்டு செய்தார். நேரமும், இடமும் மட்டும் அளித்தார். இந்த இலவச 'ட்யூஷன்' வகுப்பில் படித்த சில ஏழைப் பிள்ளைகள்
    எஞ்சினியரிங் சேர்ந்துவிட்டனர். ஒரு பெண் பி எஸ் ஸி அப்ளைடு மேத்ஸ்
    படித்து 3ம் வருடம் முடியு முன் ஸ்டேட் பாங்க் தேர்வு தேறிவிட்டாள். கேம்பஸ் செலெக்ஷனில் விப்ரோ, பிலானி அளிக்கும் எம் எஸ் கோர்சுக்கும் தேர்வு ஆகிவிட்டாள்.அவள் வீட்டில் எம் எஸ் படிக்க ஊரைவிட்டு போகக்கூடாது என்கிறார்கள்.அப்பெண்ணின் தந்தை பந்தல் போடும் தொழிலாளி.அண்ணன் மாட்டு வண்டி ஓட்டுபவர்.
    இந்த அம்மாள் புகழ் விரும்பி செயல் புரியவில்லை. ஆனால் நாம் அவர்களுக்குப்புகழ் சேர்க்காமல் இருக்கலாமா? அவர்கள் தாங்களாகவே விளம்பரப் படுத்திக் கொள்ளக்கூடாது என்பது சரிதான்.ஆனால் அவர்களைப் புகழ வேண்டிய சமுதாயக் கடமை நமக்கு உண்டு./////

    நல்லது. வாழ்க உங்கள் சமுதாயக் கடமை!

    ReplyDelete
  55. //// kmr.krishnan said...
    "On Chaturdashi at sunrise, if Amavasai begins in the fourth quarter of the day (22:30 Nalligai to 29:59 Nalligai from sun rise for 30 Nalligai Ahas)) Chaturdashi day is itself Bodhayana Amavasya.
    On Prathamai at sunrise, if Prathamai ends before sunset, the earlier Chaturdashi day is itself Bodhayana Amavasya."
    ANSWER BY SRIVIDYA RAJAGOPALAN IN YAHOO ANSWERS.////

    தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  56. //// thanusu said...
    SP.VR. SUBBAIYA said...KMRK அவர்களின் யோசனைக்கும் என்னுடைய பதிலுக்கும் உங்களின் கருத்துக்களை எழுதுங்கள் .........
    கருத்து சொல்லும் அளவுக்கு பெரியவன் இல்லை ,கோபாலன் அய்யா , KMRK அய்யா ஆகியோரைப் போன்று படைப்பாளியும் இல்லை .வகுப்புக்கு வந்த பின்தான் எழுதவே துவங்கினேன் ,தாங்களும் கோபாலன் அய்யா அவர்களும் கொடுத்த உற்சாகத்தில் தான் இன்னும் ஏதோ எழுதுகிறேன் .
    வகுப்புக்கு வரும் மூன்றாயிரத்திர்க்கும் மேற்பட்ட கண்மணிகள் இங்கு எதிர் பார்ப்பது ஜோதிடம் சம்பந்தமான பாடங்களும் ,அலசல்களும், தகவல்களும் தான். மற்றபடி கதை, கட்டுரை, கவிதை , யாவும் இரண்டாம் பட்சமே. நானும் ஜோதிடத்தைப் பற்றி தெரிந்து கொள்ளத்தான் வந்தேன் .தொடர் ஜோதிடம் சம்பந்தமாக வரும் ஆக்கங்களின் இடையில் சற்றே இளைப்பாறிக் கொள்ள உருவானதுதான் ,மாணவர் மலர், சினிமா, புதிய-பழைய பாடல்கள் . இளைப்பாற வந்த ஆக்கங்களுக்கு வரும் பின்னூட்டங்களை விட ஜோதிட தொடருக்கு வரும் பின்னூட்டங்கள்தான் இங்கு அதிகம் .kmrk அவர்களே கூட இப்படி குறைகிறதே என்று சில பின்னூட்டங்களும் இட்டுள்ளது யாவருக்கும் தெரியும் .
    kmrk சொல்லவருவது ஒரு நாளில் நிறைய ஆக்கங்கள் வருகிறது படிக்க நேரமில்லை எனும் அர்த்தத்தில் சொல்கிறார் என நினைக்கிறேன் . ஞாயறு அன்று விடுமுறை நாள் என்பதால் , கூடுதல் தூக்கம் ,நண்பர் உறவினர் வீட்டு விசேஷங்கள்,சந்திப்புகள், குடும்பத்தாரோடு வெளியில் செல்வது போன்றவையும் இடம் பெற்று விடும் .இவைகளை நாம் ஒதுக்கவோ குறைக்கவோ முடியாது .
    என்னுடைய தாழ்மையான கருத்து என்ன வேனில் ,மாணவர் மலர் இரண்டு தினங்கள் தொடர்ந்து முகப்பில் இருக்கும் போது இரண்டு தினங்களில் அதனை நேரம் இருக்கும் போது படித்தால் போதுமானது. படிக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் இங்கு யாரும் உண்டாக்குவதில்லை .ஆர்வம் உள்ளவர்கள் நேரம் உள்ளவர்கள் படிக்கட்டும் படித்த பின் மனதில் பட்டால் பின்னூட்டம் இடட்டும் .
    தனி சுட்டி ஏதும் தேவை இல்லை .
    மதிப்பிற்குரிய kmrk அவர்களுக்கு ; தாங்களின் கருத்தை மறுக்க வேண்டும் எனும் எண்ணத்தில் எழுதவில்லை .மனதில் பட்டதை எழுதி உள்ளேன் .
    கருத்து கூற அனுமதித்த அய்யா அவர்களுக்கும் kmrk அவர்களுக்கும் நன்றிகள்./////

    உங்களின் கருத்தைத் தெளிவுறச் சொன்னமைக்கு நன்றி தனுசு!

    ReplyDelete
  57. ///// அய்யர் said...
    ///KMRK அவர்களின் யோசனைக்கும் என்னுடைய பதிலுக்கும் உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். குறிப்பாக கோபாலன் சார், ஆலாசியம் , மைனர், தனுசு, தில்லி உமா அக்கா, சகோதரிகள் தேமொழி மற்றும் பார்வதி ராமச்சச்ந்திரன், அனந்தமுருகன், மற்றும் சபரி நாராயணன்.///
    குறிப்பிட்டு சொன்னதினால் அமைதி கொள்கிறோம்..
    வணக்கமும் வாழ்த்துக்களும்/////

    இல்லை! வாரமலரில் இதுவரை பங்கு கொண்டுள்ளவர்களின் பெயர்களையே குறிப்பிட்டேன்!

    ReplyDelete
  58. //// தேமொழி said...
    சும்மாவே கருத்து சொல்றேன் பேர்வழின்னு ஏதாவது சொல்லி கலக்கிகிட்டு இருப்போம், கருத்து என்னென்னு கேட்டா விட்டுடுவோமா என்ன? ஹி. ஹி. ஹீ...எனக்கு இந்த சுட்டியில் உள்ள படம் சொல்லும் பாடம் பிடித்திருக்கிறது ஐயா.
    http://www.cartoonstock.com/lowres/dcr0546l.jpg/////

    நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. எரர் என்று வருகிறது!

    ReplyDelete
  59. //// தேமொழி said...
    ///அல்லா = இல்லை ///
    அச்சச்சோ.... ஐயா, என்ன இது?..... பெரியார் பாணியில் கடவுள் இல்லை, இல்லவே இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கு. கவனம்... கவனம்.
    கருத்துக்களை படித்த வரை அம்மாவாசைக்கும் அப்துல் காதருக்கும் உள்ள சம்பந்தம் ஏதோ கொஞ்சம் கொஞ்சமா புரியற மாதிரி இருக்கு./////

    இல்லை. நான் சொன்னதைத்தான் தனுசு விளக்கி மீண்டும் ஒரு பின்னூட்டம் இட்டுள்ளார். படித்துப் பாருங்கள் சகோதரி!

    ReplyDelete
  60. //// Uma said...
    வாரம் ஒரு நாள் உங்கள ஆக்கங்கள அனைத்தையும் தொகுத்து ஒரே பதிவாக வெளியிடுவதில் மட்டுமே எனக்கு விருப்பம். அத்றகு மட்டுமே எனக்கு நேரம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதிலும் எனக்கு ஒன்றும் சிரம்ம் இல்லை//
    அப்படியே செய்யுங்கள். ஆலாசியத்தின் கருத்தையும், தனுசுவின் கருத்தையும் வழிமொழிகிறேன்.////

    நல்லது. உங்கள் கருத்தைப் பதிவு செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  61. //// Uma said...
    இணைய பிரச்சினை காரணமாக தாமதமாக விசாரிக்கிறேன்,
    தாங்கள் நலமா?
    Uma said...
    நலமே, தங்களது அக்கறையான விசாரிப்புக்கு நன்றி! நேற்று அலுவலகத்தில் இரண்டு - மூன்று வினாடிகள் நிலநடுக்கத்தை அனைவரும் உணர்ந்தோம்.
    நன்றி.//
    கேள்வியும் கேட்டு, பதிலையும் நீங்களே சொல்லிவிட்டதால் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்./////

    அடடா., கப்பலில் இருந்து தில்லிக்கு. தில்லியில் இருந்து கப்பலுக்கு என்ன வேகமான தகவல் பறிமாற்றம்? வாழ்க தொழில்நுட்பம்!

    ReplyDelete
  62. ஆனால் அவர்களைப் புகழ வேண்டிய சமுதாயக் கடமை நமக்கு உண்டு.//
    உண்மைதான், ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் சுயவிளம்பரம்தான் ஏற்கமுடியாததாக இருக்கிறது.////

    உண்மைதான். பாதிப்பேர்கள் அதற்கென்றே அலைகிறார்கள். என்ன செய்வது? கலி முற்றிக் கொண்டிருக்கிறது!

    ReplyDelete
  63. Blogger /// SP.VR. SUBBAIYA said...
    நீங்கள் கொடுத்துள்ள சுட்டிக்குத் தொடர்பு கிடைக்கவில்லை. எரர் என்று வருகிறது!////

    குளறுபடிக்கு மன்னிக்கவும் ஐயா ......
    If it ain't broke, don't fix it (it is a mistake to try to improve something that works)
    என்று அந்தப் படத்தில் எழுதி இருந்தது.

    ///வாரம் ஒரு நாள் உங்கள ஆக்கங்கள் அனைத்தையும் தொகுத்து ஒரே பதிவாக வெளியிடுவதில் மட்டுமே எனக்கு விருப்பம். அத்றகு மட்டுமே எனக்கு நேரம் இருக்கிறது. அதைத் தொடர்ந்து செய்வதிலும் எனக்கு ஒன்றும் சிரம்ம் இல்லை///

    என்னைப் பொறுத்தவரை இப்பொழுது வழக்கத்தில் உள்ளத்தில் எந்த குறையும் இருப்பதாகத் தெரியவில்லை, அதனால் இப்படியே தொடரலாமே. கருத்து சொல்ல அளித்த வாய்ப்பிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com