மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

24.11.15

சினிமா: என்ன நக்கல்டா சாமி!சினிமா: என்ன நக்கல்டா சாமி!

 திரைப்படப் பாடல். அதுவும் தத்துவப் பாடல். அதில் என்ன நக்கலாக சமூகத்தின் அவலங்களைக் கவிஞர் பிளந்து கட்டியிருக்கிறார் - நீங்களே பாருங்கள்!

 பாடலின் சரணத்தை இப்படித் துவக்கினார் கவிஞர்:

 ”உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே 
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு 
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர் 
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?” 
(உண்டாக்கி விட்டவர்கள்) 

 ஒரு மனிதன் உலகத்திற்கு வருவதற்குக் காரணம் இரண்டு பேர்கள். அதாவது அவனது பெற்றோர்கள். ஆடி முடித்து, அவன் சனீஷ்வரனிடம் போர்டிங் பாஸ் வாங்கி தன் கடைசிப் பயணத்தை நடத்துவதற்கு உதவுபவர்கள் 4 பேர்கள். அதை எளிமையாகச் சொன்ன கவிஞர், அதற்கு பிறகுதான் சாட்டையைக் கையில் எடுக்கிறார். வரிகளைப் பாருங்கள்:

 ”தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் 
படித்தான் முடித்தான் ஹோய் 
தீராத நோய்களையும் தீர்த்து முடித்தான் - இவன் 
தேராத வைத்தியத்தைத் தேர்ந்து படித்தான் - பிறர் 
நோய் தீர்க்கும் வைத்தியன் தன் 
நோய் தீர்க்க மாட்டாமல் பாய் போட்டுத் தூங்குதப்பா - உயிரும் 
பேயோடு சேர்ந்ததப்பா ஹோய்” 

 மருத்துவர். எத்தனையோ மனிதர்களின் நோய்களைத் தீர்த்தவர், அவருக்கு நோய் வந்த போது, அதைத் தீர்க்க முடியாமல் போய்ச் சேர்ந்ததைச் சொல்லி, காலம் வரும்போது, மருத்துவமாவது, மருந்தாவது - ஒன்றும் பயன்படாது என்பதை கவிஞர் தனக்கே உரிய பாணியில் சொல்கிறார்

 அத்துடன் விட்டாரா? அடுத்து பஞ்சாங்கம் பார்த்து சுப காரியங்களுக்கு நேரம் குறித்துக் கொடுக்கும் ஜோதிடரையும் ஒரு பிடி பிடிக்கிறார்: வரிகளைப் பாருங்கள்:

 கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார்
கல்யாணம் செய்வதற்கும் நாள் சொல்லுவார் - எந்தக்
காரியத்தை செய்வதற்கும் தேதி குறிப்பார் - நல்ல
சேதி சொல்லும் ஜோசியர்க்கும் நீதி சொல்லும் சாவு வந்து
தேதி வைத்து விட்டதடியோ - கணக்கில்
மீதி வைக்கவில்லையடியோ ஹோய்

 காலம் அவருக்கே தேதி குறித்துக் கொடுத்துவிட்டதை அசத்தலாகச் சொல்கிறார்!

 பிறகு பணம் பணம் என்று அலைந்து பல வழிகளிலும் பணத்தைச் சேர்த்து சொத்துக்களாக வாங்கிக் குவிக்கும் பணக்காரர்களையும் தன் சாட்டையால் ஒரு பிடி பிடிக்கிறார். பாடல் வரிகளைப் பாருங்கள்:

பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான்
எடுத்தான் முடித்தான் ஹோய்
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான் - அந்தப்
பட்டயத்தில் கண்டது போல் வேலியெடுத்தான் - அதில்
எட்டடக்கு மாடி வைத்துக் கட்டிடத்தைக் கட்டி விட்டு
எட்டடிக்குள் வந்து படுத்தான் - மண்ணைக்
கொட்டியவன் வேலியெடுத்தான் ஹோய்

உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு - இங்கே
கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு
கொண்டாடும் போது ஒரு நூறு பேரு - உயிர்
கூடு விட்டுப் போன பின்னே கூட யாரு?

 நீ நன்றாக பணம் பதவி செல்வாக்கோடு இருக்கும்போது அதைக்
கொண்டாடி அனுபவைப்பதற்கு உன்னோடு ஒரு நூறு பேராவது இருக்கிறார்களே - நீ இறந்து இடுகாட்டுக்குப் போகும் போதும்,
அதற்குப் பின் மேல் உலகம் போகும்போதும் உன்னுடன் யார்
வருவார்கள் என்று என்றைக்காவது யோசித்துப் பார்த்தாயா என்று
நச்’சென்று கேட்டார் பார்த்தீர்களா? அதுதான் இந்தப் பாடலின்
முத்தாய்ப்பான வரி!

 படம்: முகராசி 
 பாடலை இயற்றியவர்: கவிஞர் வாலி 
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன் 
இசை: கே.வி. மஹாதேவன் 
ஆண்டு: 1968 
சரி நடிப்பு யார்? பாடலின் காணொளி உள்ளது நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
 அன்புடன் 
வாத்தியார் 
======================================

Our sincere thanks to the person who uploaded this video in the net
===================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

14 comments:

 1. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
  எத்துணை அற்புதமான பாடல்.இருக்கும் வரை அனுபவித்துவிடு! இறந்தபின் உன்னை யாரும் நினைக்கப் போவதிலை!இதைத்தான், நீர்க்குமிழி படத்திலும் ஒரு பாடல்-”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா!!!”- இதை நிரூபிக்கும் வகையில் மாவீரன் அலெக்ஸாண்டர் நோய்வாய்ப்பட்டு- தீவிர சிகைச்சைக்குப் பின்னரும் தன் இறப்பை ஊணர்ந்து கொண்டவுடன், தன் முக்கிய படைத் தளபதிகளை அழைத்து மூன்று கட்டளைகள் இட்டாராம்.
  1) தன்னுடைய சவப்பெட்டியை நவரத்தினங்களால் செய்யப்பட்டு, அதில் வைக்கப்பட்டுள்ள தனது உடலை தனக்கு வைத்தியம் செய்த நான்கு மருத்துவர்களும் சுமந்து வரவேண்டும்.
  2) இறுதியாத்திரை தொடங்கும் இடம் முதல் தனது உடலை அடக்கம் செய்யப்போகும் புதைக் குழி வரையிலும்,தான் வென்று சம்பாதித்த அத்தனை தங்கம்,வைரம்,வைடூரியம் போன்ற அனைத்து நவரத்தினங்களையும் கொண்டு பாதை அமைக்க வேண்டும்.
  3) உடலை மண்ணிற்குள் வைத்து அடக்கம் செய்யும்போது, தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து அடக்கம் செய்யவேண்டும்.
  தலைமை தளபதி மிகத் தயங்கி இதன் காரணத்தைக் கேட்டபோது அலெக்ஸாண்டர் கூறினாராம்:
  1)மனிதனுக்கு இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது-மருத்துவரே ஆனாலும் யாருடைய மரணத்தையும் தவிர்க்க முடியாதவர்கள் என நிரூபிக்கும் வகையில் டாக்டர்கள் உடலை சுமந்து வரவேண்டும்.
  2) எந்த ஒரு மனிதனின் சம்பாத்தியமும் பொருளும் புகழும் அவனது சவக்குழி வரையில் மட்டுமே.
  3) தன் வாழ்க்கையில் எந்த சாதனையும் சம்பாத்தியமும் இருந்தாலும் அவன் வெறும் கையுடனேயே பூமியை விட்டு செல்ல வேண்டும்.
  இதை உணர்த்தவே இந்த ஏற்ப்பாடுகள்- என்றாராம்.
  இணையத்தில் படித்தது- தங்களின் பதிவுகளும் ஏற்ப்படுத்தும் தாக்கம் உணர்ச்சிகரமானது!!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

  பட்டினதடிகள் பாடி வைத்தாரே.!!! கூடு விட்டு ஆவி போன பின் கூடவே வருவதென்ன..!!
  ஆனாலும் சினிமாவில் மக்களுக்கு ஒரு நீதி போதனை.. !!!
  நன்றி.

  ReplyDelete
 3. தங்கள் வகுப்பறையில் சேர்ந்து படிக்காமல் இறந்திருந்தால் கவியரசு கண்ணதாசன் பாடல்களின் மகத்துவம் ஏன்னை போன்றவர்களுக்கு தெரியாமல் போயிருக்கும்.தங்கள் ஏழுத்தின் மூலம் ஆவலை தூண்டி அவரது படைப்புகளின் மேன்மையை விளக்கி புரியேவைத்தமைக்கு நன்றி.

  Maelum தமிழ் சங்கதி வெப்சைட் தட்டேச்சுவதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது.

  ஸ்ரீராம்

  ReplyDelete
 4. குருவே வணக்கம்.
  முகராசியில் உள்ள பாடல் உண்மையில் வாழும் வாழ்வில் செம்மையான செயல்களை செய்து உதாரண மனிதனாக வாழ்ந்து மடி என்பது போல உள்ளது.

  ReplyDelete
 5. ஆடி அடங்கும் வாழ்க்கையடா
  ஆறடி நிலமே சொந்தமடா

  முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
  கண் மூடினால் காலில்லா கட்டிலடா

  பிறந்தோம் என்பதே முகவுரையாம்
  பேசினோம் என்பதே தாய்மொழியாம்

  மறந்தோம் என்பதே நித்திரையாம்
  மரணம் என்பதே முடிவுரையாம்

  சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
  தீமைகள் செய்பவன் அழுகின்றான்

  இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
  இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்

  https://www.youtube.com/watch?v=XXQrkbtT7Gg

  ReplyDelete
 6. ஜாதகத்தில் 8ம் வீடு பாடம் நன்றாக அலச வேண்டும் .
  மீண்டும் பிறவாமல் இருக்கவும், இருக்கும் வரை நன்றாக இருக்கவும் இறைவனை துதிக்கவேண்டும் .

  ReplyDelete
 7. /////Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
  எத்துணை அற்புதமான பாடல்.இருக்கும் வரை அனுபவித்துவிடு! இறந்தபின் உன்னை யாரும் நினைக்கப் போவதிலை!இதைத்தான், நீர்க்குமிழி படத்திலும் ஒரு பாடல்-”ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா!!!”- இதை நிரூபிக்கும் வகையில் மாவீரன் அலெக்ஸாண்டர் நோய்வாய்ப்பட்டு- தீவிர சிகைச்சைக்குப் பின்னரும் தன் இறப்பை ஊணர்ந்து கொண்டவுடன், தன் முக்கிய படைத் தளபதிகளை அழைத்து மூன்று கட்டளைகள் இட்டாராம்.
  1) தன்னுடைய சவப்பெட்டியை நவரத்தினங்களால் செய்யப்பட்டு, அதில் வைக்கப்பட்டுள்ள தனது உடலை தனக்கு வைத்தியம் செய்த நான்கு மருத்துவர்களும் சுமந்து வரவேண்டும்.
  2) இறுதியாத்திரை தொடங்கும் இடம் முதல் தனது உடலை அடக்கம் செய்யப்போகும் புதைக் குழி வரையிலும்,தான் வென்று சம்பாதித்த அத்தனை தங்கம்,வைரம்,வைடூரியம் போன்ற அனைத்து நவரத்தினங்களையும் கொண்டு பாதை அமைக்க வேண்டும்.
  3) உடலை மண்ணிற்குள் வைத்து அடக்கம் செய்யும்போது, தனது இரண்டு கைகளையும் வெளியே தெரியும்படி வைத்து அடக்கம் செய்யவேண்டும்.
  தலைமை தளபதி மிகத் தயங்கி இதன் காரணத்தைக் கேட்டபோது அலெக்ஸாண்டர் கூறினாராம்:
  1)மனிதனுக்கு இறப்பு என்பது தவிர்க்கமுடியாதது-மருத்துவரே ஆனாலும் யாருடைய மரணத்தையும் தவிர்க்க முடியாதவர்கள் என நிரூபிக்கும் வகையில் டாக்டர்கள் உடலை சுமந்து வரவேண்டும்.
  2) எந்த ஒரு மனிதனின் சம்பாத்தியமும் பொருளும் புகழும் அவனது சவக்குழி வரையில் மட்டுமே.
  3) தன் வாழ்க்கையில் எந்த சாதனையும் சம்பாத்தியமும் இருந்தாலும் அவன் வெறும் கையுடனேயே பூமியை விட்டு செல்ல வேண்டும்.
  இதை உணர்த்தவே இந்த ஏற்ப்பாடுகள்- என்றாராம்.
  இணையத்தில் படித்தது- தங்களின் பதிவுகளும் ஏற்ப்படுத்தும் தாக்கம் உணர்ச்சிகரமானது!!!!
  அன்புடன்,
  -பொன்னுசாமி./////

  உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!

  ReplyDelete
 8. /////Blogger வேப்பிலை said...
  attendance marked.////

  நல்லது.

  ReplyDelete
 9. /////Blogger hamaragana said...
  அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
  பட்டினதடிகள் பாடி வைத்தாரே.!!! கூடு விட்டு ஆவி போன பின் கூடவே வருவதென்ன..!!
  ஆனாலும் சினிமாவில் மக்களுக்கு ஒரு நீதி போதனை.. !!!
  நன்றி./////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

  ReplyDelete
 10. /////Blogger sriram1114 said...
  தங்கள் வகுப்பறையில் சேர்ந்து படிக்காமல் இறந்திருந்தால் கவியரசு கண்ணதாசன் பாடல்களின் மகத்துவம் என்னைப் போன்றவர்களுக்கு தெரியாமல் போயிருக்கும்.தங்கள் எழுத்தின் மூலம் ஆவலைத் தூண்டி அவரது படைப்புகளின் மேன்மையை விளக்கி புரியேவைத்தமைக்கு நன்றி.
  Maelum தமிழ் சங்கதி வெப்சைட் தட்டேச்சுவதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது.
  ஸ்ரீராம்//////

  உங்களின் அனுபவத்தைச் சொல்லிப் பாராட்டியமைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. /////Blogger வரதராஜன் said...
  குருவே வணக்கம்.
  முகராசியில் உள்ள பாடல் உண்மையில் வாழும் வாழ்வில் செம்மையான செயல்களை செய்து உதாரண மனிதனாக வாழ்ந்து மடி என்பது போல உள்ளது.////

  உண்மைதான். நன்றி வரதராஜன்!

  ReplyDelete
 12. /////Blogger வேப்பிலை said...
  ஆடி அடங்கும் வாழ்க்கையடா
  ஆறடி நிலமே சொந்தமடா
  முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா
  கண் மூடினால் காலில்லா கட்டிலடா
  பிறந்தோம் என்பதே முகவுரையாம்
  பேசினோம் என்பதே தாய்மொழியாம்
  மறந்தோம் என்பதே நித்திரையாம்
  மரணம் என்பதே முடிவுரையாம்
  சிரிப்பவன் கவலையை மறக்கின்றான்
  தீமைகள் செய்பவன் அழுகின்றான்
  இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
  இறந்தவன் அல்லவோ திறக்கின்றான்
  https://www.youtube.com/watch?v=XXQrkbtT7Gg////

  மேலதிகத்தகவலாக நல்ல பாடல் ஒன்றைச் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 13. /////Blogger Chandrasekaran Suryanarayana said...
  ஜாதகத்தில் 8ம் வீடு பாடம் நன்றாக அலச வேண்டும் .
  மீண்டும் பிறவாமல் இருக்கவும், இருக்கும் வரை நன்றாக இருக்கவும் இறைவனை துதிக்கவேண்டும் /////.

  ஆமாம். இறையருள் கிடைக்க பிரார்த்தனை செய்து கொண்டே இருக்க வேண்டும்! நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com