மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

5.11.15

கைகள் எத்தனை? கால்கள் எத்தனை?

கைகள் எத்தனை? கால்கள் எத்தனை?

எம்பெருமான் முருகனுக்கு முகம் ஆறு, கைகள் பன்னிரெண்டு, கால்கள் எத்தனை?

வகுப்பறையில் இது என்னுடைய 2,000 மாவது பதிவு. 14.1.2007ல் வகுப்பறை துவங்கப்பெற்றது. அன்றில் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். 2,000 என்பது வெறும் எண்ணிக்கையல்ல. எனது எண்ணங்கள், அனுபவங்கள் என்று எல்லாம் பல பதிவுகளாக வந்துள்ளன.

இந்தப் பதிவை யாருக்கு அர்ப்பணிக்கலாம் என்று யோசித்துப் பார்த்தேன். அதாவது யாருக்கு டெடிகேட் செய்வது என்று யோசித்துப் பார்த்தேன்.

பண்பலை ரேடியோக்களில் பார்த்தீர்களென்றால், ஒரு அன்பர் புதிதாக வெளிவந்துள்ள ஏதாவது ஒரு மொக்கைப் பாடலைப் போடும்படி கேட்க,
உடனே ரேடியோ ஜாக்கி (அறிவிப்பளர்) இந்தப் பாடலை யாருக்கு டெடிகேட் செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலாக அந்த அன்பர் சுமார் 20
பெயர்களைக் கூறுகின்றார்.

ஒரு சாதாரண திரைப்படப் பாடலுக்கே இந்தக் கதை என்றால், என்னுடைய 2,000 ஆவது பதிவிற்கு இருக்கக்கூடாதா என்ன?

ஆகவே என்னுடைய இந்தப் பதிவை காலனோடு சென்று விட்டாலும் நமது நினைவில் தங்கியுள்ள வாரியார் சுவாமி அவர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.
===============================================================

“கைத்தலம் நிறைகனி, அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி....” என்று வாரியார் சுவாமிகள் கணீர்க் குரலில் பாடித் தன்னுடைய
ஆன்மிகச் சொற்பொழிவைத் துவங்கியவுடன் அரங்கம் களைகட்டிவிடும்
முன் வரிசையில் போய் உட்கார்ந்து கொண்டு விடுவேன்,

அதெல்லாம் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள். அப்போது நாங்கள் சேலத்தில் இருந்தோம். நான் பள்ளியில் படித்துக்
கொண்டிருந்தேன். சுகவனேஷ்வரர் ஆலய வளாகம் போன்ற இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பெரியபுராணம், கந்தபுராணம், தேவாரம், திருப்புகழ் என்று புகுந்து விளையாடுவார். மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரண்டு மணி
நேரம் சொற்பொழிவு தொடரும். அற்புதமான படிப்பாற்றலும் நினைவாற்றலும் உள்ள மேதை அவர். அருமையாகப் பல குட்டிக்கதைகளையும், உதாரணங்களையும் சொல்வார்.

அவருக்கு நிகர் அவரேதான்!

தொடர்ந்து வாரக்கணக்கில் சொற்பொழிவு நடக்கும். ஒருநாள் பேசியதில் உள்ள செய்தி அடுத்த நாள் உள்ள பிரசங்கத்தில் இருக்காது.

அவருக்கு சமமான நினைவாற்றல் கொண்ட மனிதர் இப்போது கிடைப்பாரா என்றால் சர்வ நிச்சயமாக இல்லை!
------------------------------------------------------------------------------------
மிமிக்கிரி செய்யும் கலைஞர்கள் அவரைப்போல் நான்கு வரிகள் சொல்லி எல்லாவற்றையும் கேலிக்கூத்தாகும் நிகழ்வுகளே இப்போது நடந்து
கொண்டிருக்கின்றது.

நஷ்டம் யாருக்கு என்று யோசித்துப் பார்க்கவேண்டும்!

பல நாத்திக சொற்பொழிவாளர்களும், தங்களுடைய மேடைப் பேச்சுக்களால் தங்கள் நாவன்மையால் இறைவனைப் பழித்துப் பேசி வருகின்றனர்.
அது காலம் காலமாக நடந்து வருகிறது.

இறைவன் இருக்கின்றானா இல்லையா என்ற இருவித சிந்தனை உள்ள இளைஞன் அவர்களுடைய பேச்சுக்களால் குழம்பிப் போய் விடுகிறான்.

ஆனால் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த உலகம் (பூமி) எப்படி ஒருவித ஒழுங்கோடு இயங்கிக் கொண்டிருக்கும் என்று நம்பும்
இளைஞன் அந்த நாத்திக உரைகளைப் புறந்தள்ளி விடுவான்.

அது எப்படி உனக்குத் தெரியும் என்கிறீர்களா?

நானும் ஒரு காலத்தில் நாத்திக உரைகளில் மனம் லயித்திருந்தவன்தான்
அதனால்தான் என்னால் அதைச் சொல்ல முடிகிறது!

அந்த லயிப்பு போதையில் இருந்து ஒவ்வொரு முறையும் என்னை மீட்டவர் வாரியார் சுவாமிகள் தான்.

இல்லையென்றால் நான் இந்தப் பதிவைப் பதிந்து கொண்டிருக்க மாட்டேன். கதை கேட்கும் ஆர்வம், கதை சொல்லும் ஆர்வம், பிற்காலத்தில் கதை
எழுதும் ஆர்வம் என்று எல்லாம் வசப்பட்டதற்கு மூல காரணம் வாரியார் சுவாமிகள்தான்! ஆகவே இந்த முக்கியமான பதிவை அவருக்கு
அர்ப்பணிப்பதுதான் நியாயமாகும்.

சரி, அவரைப் பற்றி சில செய்திகளைச் சொல்கிறேன். படித்துப் பாருங்கள்.
------------------------------------------------------------------
திடீரென்று முன் வரிசையில் உள்ள குழந்தைகளை நோக்கி ஏதாவது
கேள்வி ஒன்றைக் கேட்பார். சரியாகப் பதில் சொல்லும் குழந்தையை
மேடைக்கு அழைத்து இரண்டு பழங்களைப் பரிசாகக் கொடுத்து
அனுப்புவார். பரிசு பெற்ற குழந்தைக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

சில சமயம் இளைஞர்களும் பதில் சொல்லிப் பரிசைப் பெறுவதுண்டு.
பரிசு பெற்ற இளைஞனுக்கு மைக்ரோசாஃப்ட் கார்பொரேட் அலுவலகத்
திலேயே வேலை கிடைத்துப் பில்கேட்ஸின் கையால் பணி உத்தரவைப் பெற்ற சந்தோஷம் இருக்கும்.

ஒருநாள் தனது சொற்பொழிவின் நடுவே, திடீரென்று இப்படிக் கேட்டார்.

”எம்பெருமான் முருகனுக்கு முகம் ஆறு, கைகள் பன்னிரெண்டு -
அனைவரும் அறிவோம். கால்களை யாராவது பார்த்திருக்கிறீர்களா?
கால்கள் எத்தனை?” என்று கேட்க அரங்கில் நிசப்தம்

ஒரு பெரியவர் எழுந்து ”கால்கள் இரண்டுதான் சாமி!” என்று சரியான விடையைச் சொல்ல, வாரியார் சுவாமிகள் விடவில்லை.

“கைகள் பன்னிரெண்டு இருக்கும்போது, கால்கள் மட்டும் ஏன் இரண்டு?”

எழுந்தவர் அதற்கு விடை தெரியாமல் முழித்தார்.

இந்தக் காலத்து இளைஞனாக இருந்தால், “How he will walk Swamiji? So his legs are only two!" என்று சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பான்.
வாரியார் சுவாமிகளும் இப்போது இருந்திருந்தால் அவனுக்கும் அதிரடி யாகப் பதில் சொல்லியிருப்பார்.

“அவன் மயிலை வாகனமாகக் கொண்டவனடா தம்பி, அவன் ஏன் நடக்க வேண்டும்? திருவிளையாடல் படம் பார்க்கவில்லையா நீ?

அனால் அன்று அப்படி ஏதும் நடக்கவில்லை. கிறுக்குத்தனமாக யாரும் ஒன்றும் சொல்லவில்லை.

வாரியார் சுவாமிகளே தொடர்ந்து சொன்னார்,”இறைவனைச் சரணடைவதுதான் பக்தியின் உன்னத நிலை. சரணடையவரும்
பக்தன் எந்தக்காலில்  விழுவது என்று தெரியாமல் குழம்பக்கூடாது என்றுதான் கருணை வடிவான ஆறுமுகனுக்குக் கால்கள் இரண்டு!”

என்ன அற்புதமான விளக்கம் பார்த்தீர்களா? அவரைப் பற்றிப் பக்கம்
பக்கமாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இடம், பதிவின் நீளம், மற்றும்
காலத்தின் அருமை கருதி இதை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

நன்றி ,
வணக்கத்துடன்
வாத்தியார்.

பி.கு: ஒருமுறை வாரியார் சுவாமிகளைத் தனியாகச் சந்தித்து ஆட்டோகிராஃப் வாங்கினேன். “இரை தேடுவதோடு, இறையுந்தேடு” என்று எழுதிக்
கையெழுத்திட்டுக் கொடுத்தார். உங்கள் பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
========================================================

=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

56 comments:

Nagendra Bharathi said...

அருமை

Prasanna Venkatesh said...

அருமை அருமை

lrk said...

ஐயா வணக்கம்
திரு கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களின் கையெழுத்து பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஐயா
கண்ணன்.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
தங்களின் 2000 மாவது பதிவு மிக அற்புதமானதாக இருந்தது.பாராட்டுக்கள்.அதை விடவும் சிறப்பு என்னவெனில் இந்த பதிவு 64 வது நாயன்மாராக ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையருளாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்டதுதான்!.
என்னுடைய பள்ளி பருவத்தில் ஒரு முறை வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
நமது வாழ்நளில் நேரில் கண்ட ஒரு இறையருளாளர் வாரியார் சுவாமிகளே!
”இரை தேடுவதோடு,இறையுந்தேடு” என சுவாமிகளால் ஆசிர்வதிக்கப் பட்ட தாங்கள் பாக்கியவானே!!!
அன்புடன்,
-பொன்னுசாமி

SELVARAJ said...

எல்லாம் பழனியப்பன் அருள்.

Manohara Ramanathan said...

Dear Sir,

My heartiest congratulations! 2000 blog posts continuously over a period of eight years is an astonishing achievement. Please keep it up.

May Lord Muruga be with you in your future endeavours.

Best regards

Mano Ramanathan

Scarborough Canada

S Balaji said...

Dear Sir,

You are doing great job for us. In today's world we do not have enough time to read articles and news that they are coming out in the daily news paper, magazine, books etc., because of the computer oriented life. In this form of life you are writing all kinds of articles in your blog that seems to be very excellent and ultimate. I am reading your articles daily but due to some tight schedule I am unable to reply you. I have learned and learning so much of concepts of astrology with the help of your blog only. For this I don't have the words to praise you. Expecting your many more writings and astrology books. One small request in the publication of astrology books. In volume I some horoscopes charts are printed in unclear form, kindly rectify this if possible.

Many more gratitude for your articles that always relaxing my (our) mind. One more kind request, please don't stop your writings in cassroom2007.

Thank you

with regards

S. Balaji

ravichandran said...

Respected Sir,

Happy morning... My heartful wishes for your 2000 post.

We are blessed to read your posts... God may bless you all.

Have a great day.

With kind regards,
Ravichandran M

Thirumal Muthusamy said...

ஐயா

வாழ்த்துக்கள்.

எம்.திருமால்
பவளத்தானூர்

Kumanan Samidurai said...

அய்யா வணக்கம்,

தாங்கள் நலமாக இருக்க கடவளை prarthikren,

நானும் உங்கள் வகுப்பு உரை புத்தகம் வாங்கிவிட்டேன். படிக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக. ஏன் என்றல் அது அமுதம் ஆகையால் தான்.
உங்கள் மேல் வகுப்புகளையும் புத்தகமாக எழுதவும் தயவுசெய்து.

என்னையும் உங்கள் புது வகுப்பில் சேர்கவேண்டுகிறேன்
நன்றி,
சா. குமணன்.

C Jeevanantham said...

ஐயா வணக்கம்
பதிவு மிக அருமை..
“இரை தேடுவதோடு, இறையுந்தேடு”

kamakshi said...

வாத்தியார் ஐயா,

வாரியார் அவர்களது அருள் மொழியோடு அவரின் கையோவியத்தையும் தந்து, 2000 ஆமாவது பதிவினை பதிவிட்டு, எங்களைபோன்ற இளஞ்சமுதயத்தை ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ள வைக்கும் தங்களின் திருப்பணி தொடர எல்லாம் வல்ல குமரக்கடவுளைப் பிரார்த்திக்கிறேன்!!

உங்கள் நேசமிகு மாணவி,
காமாட்சி

வரதராஜன் said...

மதிப்பிற்குரிய வாத்தியாரையா,
வணக்கம். தங்களின்மீதுள்ள அன்பும், மரியாதையும் இன்றைய பதிவைப படித்தபின் பன்மடங்கு பெருகியுள்ளது.காரணம் நானும் வாரியார் சுவாமிகளின் மீது அத்துணை பக்திஉள்ளவன.
அதைவிடத் தாங்கள் ஒரு கால கட்டத்தில் நாத்திக வாதத்தில் ஈடுபாடு கொண்டிருந்து, பின்னர் வாரியார் சுவாமிகள் சொற்களால் ஈர்க்கப்பட்டு பின்னர் தற்சமயம் வேலவன் அருள்மீது வேட்கை கொண்டுள்ளீர்கள் என்பது எப்படிப்பட்ட மாற்றம் என்ற எண்ணம்.கந்தன் அருள் தங்களுக்கு நிச்சயம் உண்டு வாத்தியாரே!
தங்களின் எழுத்துக்கள் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக வருவதற்கும் கந்தனே காரணமய்யா! தங்களின் 2000ம் பதிவைக் கண்டு மாணவக்கண்மணிகள் மகிழ்கிறோம். அனைவரும் தங்களுக்கஉ 'சபாஷ்' சொல்கிறோம். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.

siva kumar said...

உள்ளேன் ஐயா

siva kumar said...

வாழ்த்துகள் ஐயா 2000பதிவுகள் மட்டும் இல்லை மேலும் விருச்சம் போன்று உங்கள் பதிவுகள் வளரவேண்டும் என பழனி முருகனை வேன்டுகிறேன்

Rajam Anand said...

Dear Guru
You are doing a great job by educating the mankind. You have kept individuality in each one of your 2000 publishings which is amazing.

எல்லாம்வல்ல முருகப்பெருமானின் அருள் உங்களிற்கு என்றென்றும் நிலைத்து நிற்க.
வணக்கம்
ராஜம் ஆனந்த்

Narayanan V said...

Oru murai, naan college padikum pothu varior swamigalai villipuram rail nilyathil parthu, avar kaiyal vibhuthi petrukonda pakkiyam kidaithathu endru ninaivukku varukirathu. V.narayanan

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
எங்கள் ஊருக்கும் அடிகடி வருவார்கள் சாமி ..கந்த புராண சொற்பொழிவு..நடைபெறும் ..ம்ம்ம் அது மாதிரி கணீர் குரலில் ..உபன்யாசம் யாருமில்லை. பலவிதமான் நகைச்சுவை ...!!
அவர்களுக்கு நிகர் அவர்களே. தங்களின் படைப்பு அவர்களுக்கு என்பது பொருத்தமானதே ...
அன்பு கலந்த நன்றி.

Kamala said...

வணக்கம். வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் உரையை தினமும் படிக்கிறேன்.முருகப்பெருமானின் திருவருள் பெற்றவர் அல்லவா அவர்.2000வது பதிவு பதிந்துள்ள தங்களுக்கு என் வந்தனங்கள்.வாழ்க.

bala subramanian said...

அருமை

selvam velusamy said...

வணக்கம் குரு,

2000 பதிவுகள் தந்த உங்களுக்கு முதற்கண் நன்றி, மற்றும் வாழ்த்துகள்...இப்பதிவை வாரியார் சுவாமிகளுக்கு அர்ப்பணித்தது பெருமை...அவர் கையொப்பமாகிய உங்கள் பொக்கிஷத்தை எங்கலோடு பகிர்ந்தது மாணவர்களாகிய எங்களுடைய பாக்கியமே...

நன்றி
செல்வம்

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம் .
ஐயா, தங்களுடைய 2000 வது பதிவைக்
காண மிக்க மகிழ்ச்சி . தங்களிடமிருந்து
மேலும் இரண்டு லட்சம் பதிவுகள் காண
பழனியப்பன் அருளை வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு

பரிவை சே.குமார் said...

அருமை ஐயா...

தங்கம் பழனி said...

2000 மாவது பதிவுக்கு வாழ்த்துகள். அதையும் கிருபானந்த வாரியார் அவர்களுக்கு அர்பணம் செய்ததது போற்றத்தக்கது.

எனது வலைப்பூவில் இன்று: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்

Subbiah Veerappan said...

/////Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. நன்றி நாகேந்திர பாரதி!

Subbiah Veerappan said...

////Blogger Prasanna Venkatesh said...
அருமை அருமை////

நல்லது. நன்றி பிரசன்ன வெங்கடேஷ்!

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
திரு கிருபானந்த வாரியார் சுவாமி அவர்களின் கையெழுத்து பார்த்தது மிக்க மகிழ்ச்சி.
நன்றி ஐயா
கண்ணன்./////

உண்மைதான். சின்ன வயதில் பலரிடம் இதுபோன்று கையெழுத்து வாங்கியிருக்கிறேன். அவற்றைப் ,புரட்டிப் பார்க்கும்போது எனக்கும் பழைய நினைவுகளால் மகிழ்ச்சி ஏற்படும்!

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
தங்களின் 2000 மாவது பதிவு மிக அற்புதமானதாக இருந்தது.பாராட்டுக்கள்.அதை விடவும் சிறப்பு என்னவெனில் இந்த பதிவு 64 வது நாயன்மாராக ஏற்றுக்கொள்ளப் பட்ட இறையருளாளர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளுக்கு அர்ப்பணிக்கப் பட்டதுதான்!.
என்னுடைய பள்ளி பருவத்தில் ஒரு முறை வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் கிடைத்தது.
நமது வாழ்நளில் நேரில் கண்ட ஒரு இறையருளாளர் வாரியார் சுவாமிகளே!
”இரை தேடுவதோடு,இறையுந்தேடு” என சுவாமிகளால் ஆசிர்வதிக்கப் பட்ட தாங்கள் பாக்கியவானே!!!
அன்புடன்,
-பொன்னுசாமி//////

உங்களுடைய மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி போன்னுச்சாமி அண்ணா!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
எல்லாம் பழனியப்பன் அருள்.////

அதில் என்ன சந்தேகம்? அதுதான் உண்மை!

Subbiah Veerappan said...

/////Blogger Manohara Ramanathan said...
Dear Sir,
My heartiest congratulations! 2000 blog posts continuously over a period of eight years is an astonishing achievement. Please keep it up.
May Lord Muruga be with you in your future endeavours.
Best regards
Mano Ramanathan
Scarborough Canada//////

நல்லது. உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger S Balaji said...
Dear Sir,
You are doing great job for us. In today's world we do not have enough time to read articles and news that they are coming out in the daily news paper, magazine, books etc., because of the computer oriented life. In this form of life you are writing all kinds of articles in your blog that seems to be very excellent and ultimate. I am reading your articles daily but due to some tight schedule I am unable to reply you. I have learned and learning so much of concepts of astrology with the help of your blog only. For this I don't have the words to praise you. Expecting your many more writings and astrology books. One small request in the publication of astrology books. In volume I some horoscopes charts are printed in unclear form, kindly rectify this if possible.
Many more gratitude for your articles that always relaxing my (our) mind. One more kind request, please don't stop your writings in cassroom2007.
Thank you
with regards
S. Balaji//////

வகுப்பறை பணி நிச்சயம் தொடரும். எனக்கு பலரையும் அறிமுகம் செய்து நண்பர்களாக்கியது வகுப்பறைதான். ஆகவே வகுப்பறையை நான் விடமாட்டேன். கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளேன்!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My heartful wishes for your 2000 post.
We are blessed to read your posts... God may bless you all.
Have a great day.
With kind regards,
Ravichandran M/////

உண்மைதான். நாம் எல்லோரும் ஆசீர்வதிக்கபெற்றவர்கள்தான். நன்றி ரவிச்சந்திரன்!

Subbiah Veerappan said...

/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
வாழ்த்துக்கள்.
எம்.திருமால்
பவளத்தானூர்/////

நன்றி பவளத்தானூர்க்காரரே!
பவளத்தானூர் எங்கே இருக்கிறது - ஓமலூர் தாலுகாவிலா?

Subbiah Veerappan said...

////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம்,
தாங்கள் நலமாக இருக்க கடவளை prarthikren,
நானும் உங்கள் வகுப்பு உரை புத்தகம் வாங்கிவிட்டேன். படிக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக. ஏன் என்றல் அது அமுதம் ஆகையால் தான்.
உங்கள் மேல் வகுப்புகளையும் புத்தகமாக எழுதவும் தயவுசெய்து.
என்னையும் உங்கள் புது வகுப்பில் சேர்க்கவேண்டுகிறேன்
நன்றி,
சா. குமணன்.///////

ஜோதிட பாடங்கள் அனைத்துமே வரிசையாக புத்தகமாக வெளிவர ஏற்பாடு செய்கிறேன். உங்களின் (மாணவர்களின்) ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியம். நன்றி

Subbiah Veerappan said...

/////Blogger C Jeevanantham said...
ஐயா வணக்கம்
பதிவு மிக அருமை..
“இரை தேடுவதோடு, இறையுந்தேடு” /////

அந்த வாசகத்தில் ஒரு ஜீவன் (உயிர்) இருக்கிறது

Subbiah Veerappan said...

/////Blogger kamakshi said...
வாத்தியார் ஐயா,
வாரியார் அவர்களது அருள் மொழியோடு அவரின் கையோவியத்தையும் தந்து, 2000 ஆமாவது பதிவினை பதிவிட்டு, எங்களைபோன்ற இளஞ்சமுதயத்தை ஆன்மிகத்தில் நாட்டம் கொள்ள வைக்கும் தங்களின் திருப்பணி தொடர எல்லாம் வல்ல குமரக்கடவுளைப் பிரார்த்திக்கிறேன்!!
உங்கள் நேசமிகு மாணவி,
காமாட்சி/////'/

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
மதிப்பிற்குரிய வாத்தியாரையா,
வணக்கம். தங்களின்மீதுள்ள அன்பும், மரியாதையும் இன்றைய பதிவைப படித்தபின் பன்மடங்கு பெருகியுள்ளது.காரணம் நானும் வாரியார் சுவாமிகளின் மீது அத்துணை பக்திஉள்ளவன.
அதைவிடத் தாங்கள் ஒரு கால கட்டத்தில் நாத்திக வாதத்தில் ஈடுபாடு கொண்டிருந்து, பின்னர் வாரியார் சுவாமிகள் சொற்களால் ஈர்க்கப்பட்டு பின்னர் தற்சமயம் வேலவன் அருள்மீது வேட்கை கொண்டுள்ளீர்கள் என்பது எப்படிப்பட்ட மாற்றம் என்ற எண்ணம்.கந்தன் அருள் தங்களுக்கு நிச்சயம் உண்டு வாத்தியாரே!
தங்களின் எழுத்துக்கள் தொடர்ந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக வருவதற்கும் கந்தனே காரணமய்யா! தங்களின் 2000ம் பதிவைக் கண்டு மாணவக்கண்மணிகள் மகிழ்கிறோம். அனைவரும் தங்களுக்கஉ 'சபாஷ்' சொல்கிறோம். அன்புடன் ஏற்றுக்கொள்ளுங்கள்.//////

ஆஹா...ஏற்றுக்கொண்டுவிட்டேன். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வாழ்த்துகள் ஐயா 2000பதிவுகள் மட்டும் இல்லை மேலும் விருச்சம் போன்று உங்கள் பதிவுகள் வளரவேண்டும் என பழனி முருகனை வேன்டுகிறேன்//////

உங்களைப் போன்ன்றோர்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி சிவகுமார்!

Subbiah Veerappan said...

//////Blogger Rajam Anand said...
Dear Guru
You are doing a great job by educating the mankind. You have kept individuality in each one of your 2000 publishings which is amazing.
எல்லாம்வல்ல முருகப்பெருமானின் அருள் உங்களிற்கு என்றென்றும் நிலைத்து நிற்க.
வணக்கம்
ராஜம் ஆனந்த்//////

நல்லது. உங்களின் வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Narayanan V said...
Oru murai, naan college padikum pothu varior swamigalai villipuram rail nilyathil parthu, avar kaiyal vibhuthi petrukonda pakkiyam kidaithathu endru ninaivukku varukirathu. V.narayanan/////

உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
எங்கள் ஊருக்கும் அடிக்கடி வருவார்கள் சாமி ..கந்த புராண சொற்பொழிவு..நடைபெறும் ..ம்ம்ம் அது மாதிரி கணீர் குரலில் ..உபன்யாசம் யாருமில்லை. பலவிதமான் நகைச்சுவை ...!!
அவர்களுக்கு நிகர் அவர்களே. தங்களின் படைப்பு அவர்களுக்கு என்பது பொருத்தமானதே ...
அன்பு கலந்த நன்றி.//////

உங்களீன் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!!!

Subbiah Veerappan said...

/////Blogger Kamala said...
வணக்கம். வாரியார் சுவாமிகளின் திருப்புகழ் உரையை தினமும் படிக்கிறேன்.முருகப்பெருமானின் திருவருள் பெற்றவர் அல்லவா அவர்.2000வது பதிவு பதிந்துள்ள தங்களுக்கு என் வந்தனங்கள்.வாழ்க./////

நல்லது. உங்களின் வந்தனங்களுக்கு மிக்க நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger bala subramanian said...
அருமை/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
2000 பதிவுகள் தந்த உங்களுக்கு முதற்கண் நன்றி, மற்றும் வாழ்த்துகள்...இப்பதிவை வாரியார் சுவாமிகளுக்கு அர்ப்பணித்தது பெருமை...அவர் கையொப்பமாகிய உங்கள் பொக்கிஷத்தை எங்கலோடு பகிர்ந்தது மாணவர்களாகிய எங்களுடைய பாக்கியமே...
நன்றி
செல்வம்//////

எனக்கும் உங்கள் அனைவருடைய பின்னூட்டங்களைக் கண்டு மகிழ்ச்சிதான்! நன்றி செல்வம்!

Subbiah Veerappan said...

/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
ஐயா, தங்களுடைய 2000 வது பதிவைக் காண மிக்க மகிழ்ச்சி . தங்களிடமிருந்து மேலும் இரண்டு லட்சம் பதிவுகள் காண பழனியப்பன் அருளை வேண்டுகிறேன் .
அன்புடன்
அரசு////

லட்சமெல்லாம் வேண்டாம். இன்னும் சில ஆயிரம் பதிவுகள் போதும் சாமி!

Subbiah Veerappan said...

/////Blogger பரிவை சே.குமார் said...
அருமை ஐயா...//////

நல்லது. நன்றி குமார்!

Subbiah Veerappan said...

/////Blogger தங்கம் பழனி said...
2000 மாவது பதிவுக்கு வாழ்த்துகள். அதையும் கிருபானந்த வாரியார் அவர்களுக்கு அர்பணம் செய்ததது போற்றத்தக்கது.
எனது வலைப்பூவில் இன்று: ஆங்கிலத்தை சரியான உச்சரிப்புடன் வாசிக்கும் மென்பொருள்//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி. உங்கள் வலைப்பூவின் சுட்டியைக் (URL) கொடுத்திருக்கலாமே! பலருக்கும் பயன்படுமே அய்யா! (sir)

Spalaniappan Palaniappan said...

"இரை தேடுவதோடு இறையும் தேடு " திருப்புகழில் வரும் பாடலின் தலைப்பு . நல்ல வாசகம்

Spalaniappan Palaniappan said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்திருமுருக கிருபானந்த வாரியார் பற்றிய செய்தி தொகுப்பு மிக அருமை

"இரை தேடுவதோடு இறையும் தேடு " திருப்புகழில் வரும் பாடலின் தலைப்பு . நல்ல வாசகம்வாழ்த்துக்கள்அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன் \
மஸ்கட்

Spalaniappan Palaniappan said...

அய்யா அவர்களுக்கு வணக்கம்
07/11/1993 ( நாளை ) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின்
நினைவு நாள் .

வாரியார் சுவாமிகளின் நினைவு நாளுக்கு முன்னதாக அவரை பற்றிய தொகுப்பை பதிவிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் .

வாழ்த்துக்கள்
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன் \
மஸ்கட்

kmr.krishnan said...

2000 பதிவுகள் கண்ட ஐயாவுக்கு பல வணக்கங்கள் வாழ்க, வளர்க‌ உங்கள் பணி.

திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் உரைகளை நானும் உங்கள் அருகிலேயே அமர்ந்து கேட்டு இருக்கிறேன். ஆம் நானும் சேலத்து ஆசாமி அல்லவா? சரியான பதில் சொல்லி சாக்லேட் பரிசு பெற்றுள்ளேன்.ஒரு முறை சேலம் சந்திப்பில் அவர் பூஜை செய்ய நன்னீர் பிடித்துக் கொடுத்துள்ளேன்.

சுவாமிகளுக்கு உங்கள் 2000 ஆவது பதிவை சமர்ப்பணம் செய்தது மிகப்பொருத்தமே. சுவாமிகளுக்கும் சோதிட அறிவு மிகுதியாக உண்டு.

இரை, இறைக்கு வேறுபாட்டினை நம் இளைஞர்கள் அறிவார்களா?

Subbiah Veerappan said...

/////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா அவர்களுக்கு வணக்கம்
திருமுருக கிருபானந்த வாரியார் பற்றிய செய்தி தொகுப்பு மிக அருமை
"இரை தேடுவதோடு இறையும் தேடு " திருப்புகழில் வரும் பாடலின் தலைப்பு . நல்ல வாசகம்
வாழ்த்துக்கள்
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன் \
மஸ்கட் /////

திருப்புகழில் வரும் வரி என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிய வருகிறது. நன்றி பழநியப்பன்!

Subbiah Veerappan said...

/////Blogger Spalaniappan Palaniappan said...
அய்யா அவர்களுக்கு வணக்கம்
07/11/1993 ( நாளை ) திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின்
நினைவு நாள் .
வாரியார் சுவாமிகளின் நினைவு நாளுக்கு முன்னதாக அவரை பற்றிய தொகுப்பை பதிவிட்டு பெருமை சேர்த்திருக்கிறார் .
வாழ்த்துக்கள்
அன்புடன்
சோமசுந்தரம் பழனியப்பன் \
மஸ்கட் /////

நல்லது. நன்றி பழநியப்பன்!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
2000 பதிவுகள் கண்ட ஐயாவுக்கு பல வணக்கங்கள் வாழ்க, வளர்க‌ உங்கள் பணி.
திருமுருக கிருபானந்த வாரியர் சுவாமிகள் உரைகளை நானும் உங்கள் அருகிலேயே அமர்ந்து கேட்டு இருக்கிறேன். ஆம் நானும் சேலத்து ஆசாமி அல்லவா? சரியான பதில் சொல்லி சாக்லேட் பரிசு பெற்றுள்ளேன்.ஒரு முறை சேலம் சந்திப்பில் அவர் பூஜை செய்ய நன்னீர் பிடித்துக் கொடுத்துள்ளேன்.
சுவாமிகளுக்கு உங்கள் 2000 ஆவது பதிவை சமர்ப்பணம் செய்தது மிகப்பொருத்தமே. சுவாமிகளுக்கும் சோதிட அறிவு மிகுதியாக உண்டு.
இரை, இறைக்கு வேறுபாட்டினை நம் இளைஞர்கள் அறிவார்களா?////

ஆமாம். அவர் திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் முருகன் கோயிலுக்கு அடிக்கடி செல்லும் முருகபக்தர். அவரைப் போன்ற பிரசங்க ஜாம்பவானெல்லாம் இப்போது இல்லை. உங்களை நினைக்கும்போது சேலமும் நினைவிற்கு வரும்! நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்.நன்றி கிருஷ்ணன் சார்!

வேப்பிலை said...

இமயமலை பயணம் கடந்த இரு வாரமாக அதனால்
இந்த தாமத மான வாழ்த்து

உடலுக்கு வயதானால்
முதுமை மிளிரும்
உள்ளத்து கருத்தை சொல்லும் எழுத்துக்கு வயதானால்
இளமை ஒளிரும்

இராயிரம் பதிவை நிறைவு செய்து
இனிமையாய் தந்த உங்களுக்கு

வணக்கம்
வாழ்த்துக்கள்