மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

14.11.15

Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!


Week end post: இதல்லவா காதல் மயக்கம்!!!

கவியரசர் கண்ணதாசனின் காதல் பாடல்கள் - பகுதி ஒன்று  

அன்பு, பாசம், நேசம், கருணை, தியாகம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, பரவசம், காதல், கோபம், தாபம், வருத்தம், துக்கம் என்று பல கலவையான உணர்வுகளால் ஆனதுதான் மனித மனம்!

அவற்றுள் மிகவும் சக்திவாய்ந்த உணர்வு காதல் உணர்வு என்றால் அது நிதர்சனமான உண்மை!

"காதல் வந்துவிட்டால் கண் உறங்காது" என்றார் கவியரசர். கண் மட்டுமா உறங்காது? மனதின் எல்லா செயல்பாடுகளுமே மாறிவிடும். அதையும் அவர் தன்னுடைய பல பாடல்களில் சிறப்பாக விவரித்து எழுதியுள்ளார்.

ஒரு பாடலா அல்லது இரண்டு பாடலா நூற்றுக்கணக்கான காதல் பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

படத்தில் காதலர்களின் தன்மைக்கேற்ப, மனநிலைமைக் கேற்ப பல அற்புதமான பாடல்களை அவர் எழுதியுள்ளார்.

காதலினால் ஏற்படும் தவிப்பு, ஏக்கம், கிறக்கம், மயக்கம், வாட்டம், (பிரிவினால் ஏற்படும்) துக்கம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்று எல்லா
உணர்வுகளுக்கும் பாட்டு எழுதியிருக்கிறார் அந்தக் கவிமாமன்னர்.

எந்த உணர்வை மேல்நிலைப் படுத்தி இந்தக் காதல் பாட்டு அத்தியாயத்தைத் துவக்குவது என்ற சிறு மனக்குழப்பம் என் மனதில் ஏற்பட்டது!.

காதல் என்ற நந்தவனத்திற்குள் வந்தாகிவிட்டது. கவியரசர் வைத்துவிட்டுப்போன பல நறுமண மலர்கள் உள்ளன. வரிசை என்ற கட்டுப்பாட்டை உடைத்துவிட்டுக் கண்ணில் படுவதை எல்லாம், படுகின்ற விதத்தில் உங்களுக்குக் கொடுப்பது என்ற முடிவிற்கு வந்து விட்டேன்.

இதோ காதல் வரிசையில் முதல் பாடல். பலருக்கும் இது மிகவும் பிடித்த பாடல் என்பதை இன்றும் வானொலியில் ஒலிக்கும் இந்தப் பாடல் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றது!
--------------------------------------------------
“சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திடக் கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிடக் கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிடக் கண்டேனே

(சிட்டு)

பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே..
ஹோய்...

(சிட்டு)

ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா..
ஹோய்..

(சிட்டு)

படம் : புதிய பறவை - வருடம் 1964
குரல் : சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
நடிகை : சரோஜாதேவி

நாயகிக்கு வந்து விட்ட காதல் உணர்வைச் சொல்ல முத்தம் கொடுத்துக் கொஞ்சும் சிட்டுக்குருவிகளையும், கடலில் கலக்கின்ற செவ்வானத்தையும் உதாரணமாகக் காட்டிப் பாடலைத் துவக்கிய கவியரசர்,
"பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கொரு சிறகில்லையே பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே!
எடுத்துச் சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே என்னென்னவோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே"
என்று தனக்கொரு காதல் துணை இன்னும் வரவில்லையே என்று ஏங்குவதைச் சிறப்பாகச் சொன்னதோடு, அவள் கனவு நாயகன் கிடைத்தும்கூட, அவனிடம் தன் காதலை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் வராததையும், நாணம் விடாததையும் சொன்னதுதான் இந்தப் பாடலின் சிறப்பு

அதோடு விட்டாரா?

"ஒரு பொழுது மலராக கொடியில் இருந்தேனா
ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா
இரவினிலே நிலவினிலே என்னை மறந்தேனா
இளமை தரும் சுகத்தினிலே கன்னம் சிவந்தேனா.."

என்று நாயகியின் மன ஏக்கத்தையும் முத்தாய்ப்பாகச் சொல்லிப் பாடலை முடித்தார் பாருங்கள் - அதனால் இந்தப் பாடல் அமரத்துவம் பெற்றது!
-------------------------------------------------------------------------
மற்றொரு பாடல்.

“பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே!

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலய மணியின் இன்னிசை நீயே
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்கக் கோபுரம் போல வந்தாயே!

புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே!

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை

இந்த மனமும் இந்த உலகும்
என்றும் வேண்டும் என்னுயிரே!

ஆலமரத்தின் விழுதினைப்போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக்கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே!

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

படம்: ஆலய மணி - வருடம் 1962
பாடல் : கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.வி.
குரல்: திரு. டி.எம்.செளந்தரராஜன்

கவியரசர் அவர்கள் எழுதிய பாடல்களில் மிகவும் சிறந்த நூறு பாடல்களைத் தேர்வு செய்தால், நிச்சயமாக இந்தப் பாடலும் அதில் அடங்கும்.

இந்தப் பாட்டிற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம் பாடலின் ஒவ்வொரு சொல்லுமே விளக்கமாக இருக்கும்.

பாடலின் முத்தாய்ப்பான வரிகள் என்ன என்கிறீர்களா?

அதைச் சொல்லாமல் இந்தப் பதிவை நிறைவு செய்வேனா? கீழே கொடுத்துள்ளேன்.

“உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே!’’

காதல் பாடல்கள் அடுத்த வார இறுதியில் தொடரும்
-----------------------------------------------------
இந்த இரண்டு பாடல்களில் உங்கள் மனதை மிகவும் கவர்ந்தது எந்தப் பாடல்?
அன்புடன்,
வாத்தியார்

முதல் பாடலின் காணொளி வடிவம் கீழே உள்ளது.
our sincere thanks to the person who uploaded this song in the net=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

10 comments:

 1. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  மிக அற்புதமான பதிவு!!!, என்னவென்று சொல்ல - காதல் என்பதே இயற்கையின் ஆரம்பம்.
  கவிதையின் மேல்,இசையின் மீது கவியரசு கொண்டது தீராத காதல்! கவியரசர் மீது மக்கள் கொண்டது தீராத காதல்.எங்களுக்காக அவ்வப் பொழுது தாங்கள் அளித்துவரும் அற்புதமான படைப்புகள் தீராத அந்த காதலின் வெளிப்பாடே!!!.
  தன் குழந்தையின் மழலையைக் கேட்கும் தகப்பனுக்கு, உண்டாகும் மகிழ்ச்சியும் தீராத காதலின் வெளிப்பாடே!!!.
  வகுப்பறையின் சிறப்பை உணர்ந்த தங்களின் மாணவக் கண்மணிகளின் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பும் தீராத காதலின் வெளிப்பாடே!
  இன்று பதிவியுள்ள இரண்டு பாடல்கள் இரண்டுமே சிறப்பு எனினும், முக்கியத்துவத்தை தாங்களே உணர்த்தியும் காட்டியுள்ளீர்களே!!.
  காதலின் சிறப்பை வெளிப்படுத்துவது இரண்டாவது பாடலே!!. எனது அன்புத் துணைவியின் காலர் ட்யூனாக நான் அமைத்துள்ளதும் இந்தப் பாடலையே!!!.
  கவியரசரின் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடலும் “பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே... புதையல் தேடி அலையும் உலகில், இதயம் தேடும் என்னுயிரே” - எத்துணை உயிரோட்டமுள்ள வரிகள், வார்த்தைகள், உண்மைகள்.
  இதனால் தான் கவியரசு சொல்லியுள்ளார்: “ நான் காவியத் தாயின் இளைய மகன், காதல் உலகின் பெருந் தலைவன்” என்று.
  கவியரசின் பாடல்களை தொகுத்து ஒரு பதிவிறக்க ஆக்கத்தை தந்தால் நன்று!!!.
  அன்புடன்,
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 2. இந்த பாட்டை விட்டு விட்டீங்களே
  இது சரியா

  காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
  வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை-ஜாதகத்தில் வழியுமில்லை

  பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
  வஞ்சி உன்னைக் காணும் வரை மனதும் துடித்ததில்லை

  பஞ்சு போல நரை விழுந்து பார்வையும் குழி விழுந்து
  ரெண்டுங்கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி- கண்டேனே உன்னையடி

  ReplyDelete
 3. ////Blogger kmr.krishnan said...
  Both are good songs.////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 4. ///Blogger GOWDA PONNUSAMY said...
  அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  மிக அற்புதமான பதிவு!!!, என்னவென்று சொல்ல - காதல் என்பதே இயற்கையின் ஆரம்பம்.
  கவிதையின் மேல்,இசையின் மீது கவியரசு கொண்டது தீராத காதல்! கவியரசர் மீது மக்கள் கொண்டது தீராத காதல்.எங்களுக்காக அவ்வப் பொழுது தாங்கள் அளித்துவரும் அற்புதமான படைப்புகள் தீராத அந்த காதலின் வெளிப்பாடே!!!.
  தன் குழந்தையின் மழலையைக் கேட்கும் தகப்பனுக்கு, உண்டாகும் மகிழ்ச்சியும் தீராத காதலின் வெளிப்பாடே!!!.
  வகுப்பறையின் சிறப்பை உணர்ந்த தங்களின் மாணவக் கண்மணிகளின் மீது தாங்கள் கொண்டுள்ள அன்பும் தீராத காதலின் வெளிப்பாடே!
  இன்று பதிவியுள்ள இரண்டு பாடல்கள் இரண்டுமே சிறப்பு எனினும், முக்கியத்துவத்தை தாங்களே உணர்த்தியும் காட்டியுள்ளீர்களே!!.
  காதலின் சிறப்பை வெளிப்படுத்துவது இரண்டாவது பாடலே!!. எனது அன்புத் துணைவியின் காலர் ட்யூனாக நான் அமைத்துள்ளதும் இந்தப் பாடலையே!!!.
  கவியரசரின் பாடல்களில் என்னைக் கவர்ந்த பாடலும் “பொன்னை விரும்பும் பூமியிலே, என்னை விரும்பும் ஓருயிரே... புதையல் தேடி அலையும் உலகில், இதயம் தேடும் என்னுயிரே” - எத்துணை உயிரோட்டமுள்ள வரிகள், வார்த்தைகள், உண்மைகள்.
  இதனால் தான் கவியரசு சொல்லியுள்ளார்: “ நான் காவியத் தாயின் இளைய மகன், காதல் உலகின் பெருந் தலைவன்” என்று.
  கவியரசின் பாடல்களை தொகுத்து ஒரு பதிவிறக்க ஆக்கத்தை தந்தால் நன்று!!!.
  அன்புடன்,
  -பொன்னுசாமி.////

  உங்களின் மேலான, உணர்ச்சிபூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா! தற்சமயம் நேரமில்லை. பிறகு தொகுத்து வெளியிடுகிறேன். பொறுத்திருங்கள்!!

  ReplyDelete
 5. /////Blogger வேப்பிலை said...
  இந்த பாட்டை விட்டு விட்டீங்களே
  இது சரியா
  காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை
  வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை-ஜாதகத்தில் வழியுமில்லை
  பஞ்சணையும் கண்டதில்லை பால் பழம் குடித்ததில்லை
  வஞ்சி உன்னைக் காணும் வரை மனதும் துடித்ததில்லை
  பஞ்சு போல நரை விழுந்து பார்வையும் குழி விழுந்து
  ரெண்டுங்கெட்ட வேளையிலே கண்டேனே உன்னையடி- கண்டேனே உன்னையடி//////

  விடவில்லை சுவாமி. காதல் பாடல்கள் தொடரும் என்று போட்டுள்ளேனே - கவனிக்கவில்லையா? அடுத்தடுத்து பல பாடல்கள் வரும். அதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலும் ஒன்றாகும்!

  ReplyDelete
 6. ஐயா,
  இரண்டு பாடல்களுமே அருமைதான். கவியரசரின் வார்த்தைத் தொகுப்பின் அழகை என்றுமே ரசிக்கலாம்.அவரது பாடல் வரிகள் ஒவ்வொன்றுமே ரசிக்கத்தக்கதல்லவா! அவரைப் போல் இனி ஒருவர் பிறப்பாரில்லை!

  ReplyDelete
 7. What about "மாசிலா உண்மைக் காதலே" இந்தக்காலத்து பாட்டுகளில் விமர்சிப்பதற்கு ஓன்றுமில்லை.You can listen to these old songs at any time and brings back the memory of hearing the song for first time. Fantastic!

  Thanks for the lyrics

  ReplyDelete
 8. /////Blogger வரதராஜன் said...
  ஐயா,
  இரண்டு பாடல்களுமே அருமைதான். கவியரசரின் வார்த்தைத் தொகுப்பின் அழகை என்றுமே ரசிக்கலாம்.
  அவரது பாடல் வரிகள் ஒவ்வொன்றுமே ரசிக்கத்தக்கதல்லவா! அவரைப் போல் இனி ஒருவர் பிறப்பாரில்லை!/////

  ஒரு பாரதியார்தான். ஒரு கண்ணதாசன்தான். அவர்களைப்போல இன்னொருவர் கிடைக்கமாட்டார். நன்றி வரதராஜன்.

  ReplyDelete
 9. /////Blogger Rajam Anand said...
  What about "மாசிலா உண்மைக் காதலே" இந்தக்காலத்து பாட்டுகளில் விமர்சிப்பதற்கு ஓன்றுமில்லை.
  You can listen to these old songs at any time and brings back the memory of hearing the song for first time. Fantastic!
  Thanks for the lyrics////

  உண்மைதான். நன்றி சகோதரி!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com