மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.11.15

ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?


ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?

எல்லோருக்கும் ஜாதகத்தில் ஏதாவது ஒரு தோஷம் இருக்கும். அந்த தோஷத்தினால், சிலருக்கு திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும், சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் பெரும் வேதனைக்கு ஆளாவார்கள். அடுத்தவர்களுக்குப் பதில் சொல்லி மாளாது. சிலருக்கு முதல் விவாகம் ரத்தாகி, அடுத்து என்ன செய்யலாம் என்று அவதிப் பட்டுக் கொண்டு இருப்பார்கள். சிலருக்கு தொழிலில் அல்லது வியாபாரத்தில் உழைப்பிற்குத் தகுந்த பலன் இன்றி வெறுத்துப்போய் இருப்பார்கள். சிலருக்கு எப்போது பார்த்தாலும் பணபற்றாக்குறை, மேற்கொண்டு கடன் தொல்லை என்று படுத்தி எடுக்கும். சிலருக்கு நோய் நொடிகள் உபாதைகள் ஏற்பட்டு ஆளைப் புரட்டி எடுக்கும். அவற்றில் இருந்து மீள்வது எப்படி?
அதற்கான வழியை இன்றையப் பதிவில் சொல்லியிருக்கிறேன். படித்துப் பார்த்து, செயல் படுத்திப் பயனடையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
கந்த சஷ்டி விரதமும் கந்தர் சஷ்டி கவசம் பிறந்த கதையும்!

பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சி பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்று வலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார்.

அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார்.

திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார்.

முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார்.

அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்…

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப் பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார்.

6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது.

கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த
பரவசம் ஆனார்.

அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது
குறிப்பிடத்தக்கது.

முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்
படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் 
தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு 
செய்ய வேண்டும். இதேபோல், முருகப் பெருமானுக்கு முகங்களும் 
6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப் பெருமானின் 
திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக 
விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும்.

இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர்
திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி  கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம்,

நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள்,

குழந்தை பாக்கியம் கிட்டும்…. இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப் பட்டுள்ளது.
=====================================
விளக்கம் போதுமா சாமிகளா?
அன்புடன்,
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28 comments:

kmr.krishnan said...

Yes, Sir. Thank you.

lrk said...

அய்யா வணக்கம்
கந்த ஷஷ்டி கவசம் பற்றி வரலாறு அறிந்து கொண்டேன் .
நன்றி அய்யா
கண்ணன்

ravichandran said...

Respected Sir,

Happy morning... Nice explanation and good photo.

Have a pleasant day.

With kind regards,
Ravi

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் .
உண்மையான .விஷயம் ...மெய்யன்பொடு ஷஷ்டி விரதம் இருந்தால் .நினைத்து பார்க்க முடியாத .விஷயங்கள் நடக்கும் .
எனது நெருங்கிய நண்பர் சுமார் 26 வருடங்களுக்கு முன் அவரது மகன் 3 வயது திடிரென காய்ச்சல் மருத்துவர்கள் ..கை விரித்து விட்டனர் .பேச்சு இல்லை ..அசைவு இல்லை ..நண்பர் தீவிர முருக பக்தர் .திருசெந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி படத்துக்கு முன் மகனை கிடைத்தி ..முருகா உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் மீண்டும் என்னிடம் உயிரோடு கொடுப்பது நீ எடுப்பதும் உன் விருப்பம் ..என கூறி விட்டு ..பணிக்கு சென்று விட்டார். அவரது மனைவி அழுகை..முருகா முருகா என அரற்றி கொண்டே இருந்தார்கள் ..
மறுநாள் காலை அம்மா பசிக்கு இட்லி கொடு என் கேட்டான் ..மருத்துவர்கள் அசந்து போனார்கள் ....நண்பர் சுமார் 30 வருடமாக ஷஷ்டி விரதம் இருப்பவர் இன்று வரை தொடர்கிறது அவரது விரதம். ..அவரது மகன் திருமணம் ஆகி 2 குழைந்தைகளுக்கு தந்தை ...
நண்பர் ..நேர்மையான மனிதர் லஞ்சம் வாங்குவதில்லை ..பணி காலங்களில் பலவித இன்னல்கள் மேலதிகாரிகள் .படுத்தும் பாடு சொல்லி முடியாது தனது பதவி வைத்து எந்தவிதமான சலுகைகளும் யாரிடமும் கேட்பதில்லை...!!நங்கள் திருக்கோவில் தரிசனத்திற்கு சென்றால் அவரால் எங்களை அழைத்து செல்ல முடியும் அதிக கூட்டம் அதனால் நாம் தரிசிக்க வேண்டும் என்றால் ..தனது செலவில் 100/=டிக்கெட் எடுத்து கொடுத்துவிடுவார் ..என்ன பணியில் இருந்தார் என்று நீங்களே யுகித்து கொள்க...
***எல்லாம் ..திருசெந்தூர் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கண் நோக்கம் .**
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!..

Gajapathi Sha said...

Murugan arulai pera unnatha kanda sasti kavasam enpathu migavum unnathamanathu

Mrs Anpalagan N said...

உண்மை தான் ஐயா,
கந்த ஷஷ்டி கவசம் என்றில்லை, தூய மனதுடன் மனமுருக வேண்டின் எந்த தெய்வமும் அருள் புரியும்.
அது அனுபவ உண்மை.
சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.

புத்தர் இளவரசனாக பிறந்தும், எல்லாம்(?! - பலர் விரும்பும் எல்லாம்) இருந்தும், ஜோதிட குறிப்பின் படி அவர் துறவுக்கு போகாமல் செய்ய எடுத்த முயற்சிகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி (இளமை திருமணம், வசதிகள்,..) அவரது உள்மனம் நாடியதோ துறவைத்தான். அது தான் பிறப்பின் ரகசியம். நாம் எதற்காக பிறந்தோமோ, அதைத்தான் மனம் சதா நாடும். அவர் அரச பரம்பரையானதால், இலகுவாக எல்லாவற்றையும் துறந்து, கடமைகளால் கட்டுப்படாமல் துறவை நாடிச் சென்றார்.

அதே போல் பட்டினத்தார். பெரும் பணக்காரராக இருந்தும், உள் மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவரால் தீர்வு தேட முடியவில்லை. ஆனால் அவரது வளர்ப்பு மகனானவர், பெரும் பணக்கார பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டும், பட்டினத்தாருக்கு முன்னரே வாழ்வின் உண்மையை புரிந்து கொண்டதுடன், அதை பட்டினத்தாருக்கும் குறிப்பால் உணர்த்தி விட்டுப் போய் விட்டார். பட்டினத்தாருக்கும், மன அமைதியை தவிர, எல்லாம் இருந்தும், கடமைகளும் அதிகம் இல்லாததால் இலகுவாக துறவறத்தை ஏற்க முடிந்தது.

அதே போல்தான் சுவாமி விவேகானந்தரும். அதிர்ஷவசமாக சம்சார பந்தத்தில் நுழையாமலேயே அவர் புரிந்து விலகி விட்டார். ஆனாலும், தனது தாயாருக்காக சில விடயங்களை அவர் உறுதி படுத்திய பின்னரேயே அவரால் முழுதாக துறவில் ஈடுபட முடிந்தது. (வீடு கோர்ட் கேசில் சிக்கியிருந்தது.)

இவர்கள் மூவரும் ஏதோ ஒரு விதத்தில் ஓரளவு கொடுத்து (முற்பிறவியில்) வைத்தவர்கள்.

ஆனால், கண்ணதாசனை எடுங்கள். இங்கே தான் நிலைமை வேறுபடுவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஞானம் பிறந்த பின்னரும் லௌகீக வாழ்வை உதற முடிந்ததா? காரணம்; அவருக்கிருந்த கடமைகள்.
சில கடமைகளிலிருந்து எல்லோராலும் இலகுவில் வெளியேற முடியாது. நரகம் என்று தெரிந்தும், நமது கடமைகள் சிலவற்றிலிருந்து இலகுவில் வெளியேறி விட முடியாது.

அதனால் தான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார். கடமையை செய். பலனை எதிர்பாராதே. அதை முழுமனதுடன் என்னிடம் விட்டு விடு. உன் கடமையை செய்வது மட்டுமே உன் வேலை. (ஆனால் இது இலகுவான விடயமில்லை. காரணம் பொய்யான வாழ்வைப் புரிந்த பின்னரும் சிலவற்றிற்காய் பொய்யாய் நடப்பது என்பது இலகுவல்ல. அதனால் தான், அர்ஜுனன் தர்ம யுத்தம் என்று தெரிந்தும், தயங்கி நின்றான். கலங்கி நின்றான். )

உள்ளதை உள்ளபடி புரிந்த பின்னால், அதை தா, இதை தா என்று சிறு பிள்ளை போல்
அந்த தெய்வத்திடம் வேண்டுவது கூட சில வேளைகளில் சிலரால் முடியாது. காரணம்; நமக்கும் கீழே உள்ளவர் கோடி. நாம் இப்படி இருப்பதற்கே அந்த இறைவனுக்கு நாம் அதிகளவில் நன்றி சொல்ல வேண்டும்.
அதற்காக சில இக்கட்டான முக்கிய தருணங்களில் இல்லாம் இறைவனை வேண்டாமல் இருக்க முடியாது. அதற்கு, மேலே hamaragana ஐயா சொன்னது போல் சந்தர்ப்பங்கள் உதாரணம்.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்

(ஏழு)

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்

(ஏழு)

எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

(ஏழு)

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்

(ஏழு)

நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல

(ஏழு)

படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்

http://www.youtube.com/watch?v=51YPPoBKllg&feature=share&list=PLzyFZMoRbxgl4k98PElRw5HSVXkdauIU_&index=1

வேப்பிலை said...

முருகா ....
முருகா....

selvaspk said...

Thanks for sharing.

Is kanda sasti kavasam one song covers all 6 kavasam on thiruchendoor? Or one?
Please say more about how to do a proper viratham?

வேப்பிலை said...

படிக்கும் போதே மெய் சிலிர்கிர்கிறது
பரவசம் ஊட்டும் பதிவை தந்தமைக்கு

தங்கள் திருவடிகளை
தாழ்வுடன் வணங்குகிறேன் ..

முருகன் அருள்
முன் நிற்கும்..

Rajam Anand said...

மிக்க நன்றி்.எனக்கு தெரிந்த ஒருவர் ஐந்து ஆண்குழந்தைகளிற்கு பிறகு ஒரு பெண்குழந்தை வேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தார், முருகப்பெருமானின் அருளால் ஆறாவதாக ஒரு பெண்குழந்தை பிறந்தது.
எல்லாம் அவனருள்.

Kumanan Samidurai said...

Ayya Nandri,..

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
Yes, Sir. Thank you./////

நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
அய்யா வணக்கம்
கந்த ஷஷ்டி கவசம் பற்றி வரலாறு அறிந்து கொண்டேன் .
நன்றி அய்யா
கண்ணன்/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... Nice explanation and good photo.
Have a pleasant day.
With kind regards,
Ravi////

நல்லது. நன்றி! நீங்கள் எந்த ஊர் ரவிச்சந்திரன் என்பதைக் குறிப்பிடவில்லையே!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம் .
உண்மையான .விஷயம் ...மெய்யன்பொடு ஷஷ்டி விரதம் இருந்தால் .நினைத்து பார்க்க முடியாத .விஷயங்கள் நடக்கும் .
எனது நெருங்கிய நண்பர் சுமார் 26 வருடங்களுக்கு முன் அவரது மகன் 3 வயது திடிரென காய்ச்சல் மருத்துவர்கள் ..கை விரித்து விட்டனர் .பேச்சு இல்லை ..அசைவு இல்லை ..நண்பர் தீவிர முருக பக்தர் .திருசெந்தூர்

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி படத்துக்கு முன் மகனை கிடைத்தி ..முருகா உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் மீண்டும் என்னிடம் உயிரோடு கொடுப்பது நீ எடுப்பதும் உன் விருப்பம் ..என கூறி விட்டு ..பணிக்கு சென்று

விட்டார். அவரது மனைவி அழுகை..முருகா முருகா என அரற்றி கொண்டே இருந்தார்கள் ..
மறுநாள் காலை அம்மா பசிக்கு இட்லி கொடு என் கேட்டான் ..மருத்துவர்கள் அசந்து போனார்கள் ....நண்பர் சுமார் 30 வருடமாக ஷஷ்டி விரதம் இருப்பவர் இன்று வரை தொடர்கிறது அவரது விரதம். ..அவரது மகன்

திருமணம் ஆகி 2 குழைந்தைகளுக்கு தந்தை ...
நண்பர் ..நேர்மையான மனிதர் லஞ்சம் வாங்குவதில்லை ..பணி காலங்களில் பலவித இன்னல்கள் மேலதிகாரிகள் .படுத்தும் பாடு சொல்லி முடியாது தனது பதவி வைத்து எந்தவிதமான சலுகைகளும் யாரிடமும்

கேட்பதில்லை...!!நங்கள் திருக்கோவில் தரிசனத்திற்கு சென்றால் அவரால் எங்களை அழைத்து செல்ல முடியும் அதிக கூட்டம் அதனால் நாம் தரிசிக்க வேண்டும் என்றால் ..தனது செலவில் 100/=டிக்கெட் எடுத்து

கொடுத்துவிடுவார் ..என்ன பணியில் இருந்தார் என்று நீங்களே யுகித்து கொள்க...
***எல்லாம் ..திருசெந்தூர் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கண் நோக்கம் .**
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா !!../////

உங்களுடைய மேலான அனுபவப் பகிர்விற்கு மிக்க நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger Gajapathi Sha said...
Murugan arulai pera unnatha kanda sasti kavasam enpathu migavum unnathamanathu/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
உண்மை தான் ஐயா,
கந்த ஷஷ்டி கவசம் என்றில்லை, தூய மனதுடன் மனமுருக வேண்டின் எந்த தெய்வமும் அருள் புரியும்.
அது அனுபவ உண்மை.
சில விடயங்களை குறிப்பிட விரும்புகின்றேன்.
புத்தர் இளவரசனாக பிறந்தும், எல்லாம்(?! - பலர் விரும்பும் எல்லாம்) இருந்தும், ஜோதிட குறிப்பின் படி அவர் துறவுக்கு போகாமல் செய்ய எடுத்த முயற்சிகள் எல்லாவற்றையும் பொய்யாக்கி (இளமை திருமணம்,

வசதிகள்,..) அவரது உள்மனம் நாடியதோ துறவைத்தான். அது தான் பிறப்பின் ரகசியம். நாம் எதற்காக பிறந்தோமோ, அதைத்தான் மனம் சதா நாடும். அவர் அரச பரம்பரையானதால், இலகுவாக எல்லாவற்றையும்

துறந்து, கடமைகளால் கட்டுப்படாமல் துறவை நாடிச் சென்றார்.
அதே போல் பட்டினத்தார். பெரும் பணக்காரராக இருந்தும், உள் மனதில் இருந்த குழப்பங்களுக்கு அவரால் தீர்வு தேட முடியவில்லை. ஆனால் அவரது வளர்ப்பு மகனானவர், பெரும் பணக்கார பெற்றோரால்

தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டும், பட்டினத்தாருக்கு முன்னரே வாழ்வின் உண்மையை புரிந்து கொண்டதுடன், அதை பட்டினத்தாருக்கும் குறிப்பால் உணர்த்தி விட்டுப் போய் விட்டார். பட்டினத்தாருக்கும், மன

அமைதியை தவிர, எல்லாம் இருந்தும், கடமைகளும் அதிகம் இல்லாததால் இலகுவாக துறவறத்தை ஏற்க முடிந்தது.
அதே போல்தான் சுவாமி விவேகானந்தரும். அதிர்ஷவசமாக சம்சார பந்தத்தில் நுழையாமலேயே அவர் புரிந்து விலகி விட்டார். ஆனாலும், தனது தாயாருக்காக சில விடயங்களை அவர் உறுதி படுத்திய பின்னரேயே

அவரால் முழுதாக துறவில் ஈடுபட முடிந்தது. (வீடு கோர்ட் கேசில் சிக்கியிருந்தது.)
இவர்கள் மூவரும் ஏதோ ஒரு விதத்தில் ஓரளவு கொடுத்து (முற்பிறவியில்) வைத்தவர்கள்.
ஆனால், கண்ணதாசனை எடுங்கள். இங்கே தான் நிலைமை வேறுபடுவதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஞானம் பிறந்த பின்னரும் லௌகீக வாழ்வை உதற முடிந்ததா? காரணம்; அவருக்கிருந்த கடமைகள்.
சில கடமைகளிலிருந்து எல்லோராலும் இலகுவில் வெளியேற முடியாது. நரகம் என்று தெரிந்தும், நமது கடமைகள் சிலவற்றிலிருந்து இலகுவில் வெளியேறி விட முடியாது.

அதனால் தான் கீதையில் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறார். கடமையை செய். பலனை எதிர்பாராதே. அதை முழுமனதுடன் என்னிடம் விட்டு விடு. உன் கடமையை செய்வது மட்டுமே உன் வேலை. (ஆனால் இது

இலகுவான விடயமில்லை. காரணம் பொய்யான வாழ்வைப் புரிந்த பின்னரும் சிலவற்றிற்காய் பொய்யாய் நடப்பது என்பது இலகுவல்ல. அதனால் தான், அர்ஜுனன் தர்ம யுத்தம் என்று தெரிந்தும், தயங்கி நின்றான்.

கலங்கி நின்றான். )
உள்ளதை உள்ளபடி புரிந்த பின்னால், அதை தா, இதை தா என்று சிறு பிள்ளை போல்
அந்த தெய்வத்திடம் வேண்டுவது கூட சில வேளைகளில் சிலரால் முடியாது. காரணம்; நமக்கும் கீழே உள்ளவர் கோடி. நாம் இப்படி இருப்பதற்கே அந்த இறைவனுக்கு நாம் அதிகளவில் நன்றி சொல்ல வேண்டும்.
அதற்காக சில இக்கட்டான முக்கிய தருணங்களில் இல்லாம் இறைவனை வேண்டாமல் இருக்க முடியாது. அதற்கு, மேலே hamaragana ஐயா சொன்னது போல் சந்தர்ப்பங்கள் உதாரணம்.
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்
(ஏழு)
காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி
அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி
ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித
இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்
(ஏழு)
எனக்காக நீ அழலாம் இயற்கையில் நடக்கும்
நீ எனக்காக உணவு உண்ண எப்படி நடக்கும்
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று
(ஏழு)
ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை
இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில்
பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்
(ஏழு)
நாளைப் பொழுது என்றும் நமக்கென வாழ்க
அதை நடத்த ஒருவனுண்டு கோயிலில் காண்க
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க
எந்த வேதனையும் மாறும் மேகத்தைப் போல
(ஏழு)
படம் - அபூர்வராகங்கள்
பாடியவர் - வாணி ஜெயராம்
வரிகள் - கண்ணதாசன்
இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
http://www.youtube.com/watch?v=51YPPoBKllg&feature=share&list=PLzyFZMoRbxgl4k98PElRw5HSVXkdauIU_&index=1/////

உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
முருகா ....
முருகா....///

கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிர்வேலா போற்றி!

Subbiah Veerappan said...

/////Blogger selvaspk said...
Thanks for sharing.
Is kanda sasti kavasam one song covers all 6 kavasam on thiruchendoor? Or one?
Please say more about how to do a proper viratham?/////

ஒரே ஒரு கவசம்தான் அனைத்துத் தலங்களுக்கும். விரதம் பற்றி ஒருநாள் விபரமாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
படிக்கும் போதே மெய் சிலிர்கிர்கிறது
பரவசம் ஊட்டும் பதிவை தந்தமைக்கு
தங்கள் திருவடிகளை
தாழ்வுடன் வணங்குகிறேன் ..
முருகன் அருள்
முன் நிற்கும்../////

நீங்கள் முருக பக்தர். முருகனின் திருவடிகளைத் தவிர வேறு அடிகளை வணங்கக்கூடாது!

Subbiah Veerappan said...

//////Blogger Rajam Anand said...
மிக்க நன்றி்.எனக்கு தெரிந்த ஒருவர் ஐந்து ஆண்குழந்தைகளிற்கு பிறகு ஒரு பெண்குழந்தை வேண்டும் என்று சஷ்டி விரதம் இருந்தார், முருகப்பெருமானின் அருளால் ஆறாவதாக ஒரு பெண்குழந்தை பிறந்தது.
எல்லாம் அவனருள்./////

உங்களின் அனுபவத்தைச் சொன்னமைக்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
Ayya Nandri,..////

நல்லது. நன்றி குமணன்!!

வேப்பிலை said...

///Subbiah Veerappan said...
நீங்கள் முருக பக்தர். முருகனின் திருவடிகளைத் தவிர வேறு அடிகளை வணங்கக்கூடாது!///

முதலில் நீங்களும்
முருக பக்தர்

அடியார் வணக்கம்
ஆண்டவன் கட்டளை

வரதராஜன் said...

குருவே,
திருச்செந்தூரானின் மகிமை
சொல்லவொணா போலும். அறிந்தோ, அறியாமலோ நான் பல காலங்களாக "சஷ்டி கவசம்" விடாமல் நாள் தோறும் காலையில் சொல்லி வருகிறேன். திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோஹரா!!

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
மிக நல்ல பதிவு!கந்த சஷ்டி கவசத்தின் பெருமை மற்றும் மகிமையை பற்றி ஒரு சிறப்பான விருந்து படத்துள்ளீர்கள்!! மிக்க நன்றி. ஒரு சொல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பின், நினைத்துக் கொண்டே இருப்பின் அதுவே சிறந்த மந்திரமாகி விடுகின்றது.அதனால் தான் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் “ நீ எதுவாக ஆக வேண்டும் என விரும்புகின்றாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்” என கூறியுள்ளார்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Subbiah Veerappan said...

///Subbiah Veerappan said...
நீங்கள் முருக பக்தர். முருகனின் திருவடிகளைத் தவிர வேறு அடிகளை வணங்கக்கூடாது!///
முதலில் நீங்களும்
முருக பக்தர்
அடியார் வணக்கம்
ஆண்டவன் கட்டளை//////

உங்கள் விருப்பம் எதுவோ அதன்படியே செய்யுங்கள். நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குருவே,
திருச்செந்தூரானின் மகிமை
சொல்லவொணா போலும். அறிந்தோ, அறியாமலோ நான் பல காலங்களாக "சஷ்டி கவசம்" விடாமல் நாள் தோறும் காலையில் சொல்லி வருகிறேன். திருச்செந்தூர் முருகனுக்கு அரஹரோஹரா!!//////

நல்லது. உங்களின் மனம் திறந்த பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

//////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
மிக நல்ல பதிவு!கந்த சஷ்டி கவசத்தின் பெருமை மற்றும் மகிமையை பற்றி ஒரு சிறப்பான விருந்து படத்துள்ளீர்கள்!! மிக்க நன்றி. ஒரு சொல் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருப்பின், நினைத்துக் கொண்டே இருப்பின் அதுவே சிறந்த மந்திரமாகி விடுகின்றது.அதனால் தான் வீரத்துறவி சுவாமி விவேகானந்தரும் “ நீ எதுவாக ஆக வேண்டும் என விரும்புகின்றாயோ அதுவாகவே ஆகிவிடுவாய்” என கூறியுள்ளார்.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////

உண்மைதான். நம் விருப்பம் தொடர்ந்து செயல்படும்போது நாம் அதுவாகவே மாறிவிடுவோம். நன்றி போன்னுசாமி அண்ணா!