மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

25.12.15

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?

சென்னிமலை முருகன்
கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் எது தெரியுமா?

கந்தர் சஷ்டி அரங்கேறிய இடம் சென்னிமலை

ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக் கோவில், சென்னிமலை, ஈரோடு மாவட்டம், சென்னிமலையில், மலை மீது அமைந்துள்ள திருத்தலம் இதுவாகும். இதன் சிறப்பு, இன்று உலகமெல்லாம் பாடப்படும் கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர், இந்த தலத்தில் உள்ள முருகபெருமான் முன்னிலையில் அரங்கேற்றினார்.ஈரோடு-கோவை செல்லும் வழியில் இங்கூர் என்ற ரெயில் நிலையத்தி லிருந்து 7.5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சென்னிமலை. ஈரோட்டிலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு தூரம். பெருந்துறையிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவு. கடல் மட்டத்தி லிருந்து 600 மீட்டர் உயரத்தில், 1320 படிக்கட்டுக்களுடன் மலையில் உள்ள கோவில் ஆகும். மலை உச்சி வரை பஸ் செல்லும் வசதி உண்டு. தேவஸ்தானத்தில் தங்கும் வசதிகளும் இருக்கின்றன.

நொய்யல் ஆற்றுக்கு அருகில் ஒரு விவசாயி ஒரு பசு வளர்த்து வந்தார். அந்த பசு ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று அந்த இடத்தில் மட்டும் பாலை சொரிந்தது. இதை கவனித்த அந்த பசுவின் உரிமையாளர், என்ன காரணத்தால் இந்த இடத்தில் மட்டும் பாலை தானாகவே சொரிகின்றது என்று அறிந்து கொள்ள, அந்த இடத்தை தோண்டியபொழுது, அந்த இடத்தில் ஒரு அழகிய முருகப் பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல அழகிய வேலப்பாடுகளுடன் இருந்தது.

சிலையிலிருந்து பீறிட்ட ரத்தம்

கீழ் பகுதி கரடு முரடாக இருந்தததால், அதை உளி கொண்டு செதுக்க முனைந்தபொழுது, சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டதாம். அதைக் கண்டு பயந்து போய் ஓடி விட்டார். பின்னர் அங்கு வசித்து வந்த ஒரு முனிவரிடம் இது பற்றி கூறினர். அவரின் பெயர் சரவண முனிவர். அவர் ஆராய்ந்து, இந்த முருகன் அப்படியேதான் இருக்க விரும்புகின்றார். ஆகவே அப்படியே வைத்து பிரதிஷ்டை செய்யும்படி கேட்டுக்கொண்டதால் இந்த முருகன் அன்று கண்டு எடுத்தது போலவே உள்ளார் என்பது வரலாறு.

இன்றும் இந்த முருகபெருமானின் சிலை இடுப்புக்கு கீழே வேலைப் பாடுகள் இல்லாமலேயே இருப்பதை காணலாம்.
தவிர, ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர்.
12.2.1984 அன்று, இரட்டை காளைகள் பூட்டிய மாட்டு வண்டி செங்குத்தான வளைந்து வளைந்து செல்லும் படிகளில் ஏறி, மலைக் கோவிலுக்கு சென்று அதிசயம் நடத்திய இடம் ஆகும். வேறு எங்கும் காண இயலாதபடி, இன்றும் பொதி காளைகள் மூலம் திருமஞ்சன தீர்த்தம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த திருத்தலம் 500-1000 வருட பழமை வாய்ந்தது. இதை புஷ்பகிரி, என்றும், கரை கிரி என்றும், மகுடகிரி என்றும் பல பெயர்களில் குறிப்பிடு கின்றனர்.

மூலவர் பெயர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் தண்டாயுதபாணி என்ற நாம கரணம் கொண்டவர். மூலவர் முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து, மூலவரை சுற்றி, எட்டு நவகிரகங்களும் உள்ளன. மூலவரை வழிபட்டாலே, நவகிரகங்களை வழிபட்ட பலனும் கிட்டும் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

அமிர்தவல்லி, சுந்தரவல்லி பெயரில் தவம்…

வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயருடன் தவம் செய்ய தனிப் பெருங்கோவிலாக இங்கு அமைந்து உள்ளது. இவை ஒரே கல்லில் வடிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பு. அருணகிரி நாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத் தானே பூஜித்த தலம் இதுவாகும். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழிகாட்டிய தலம் என்றும் கூறுகின்றனர்.

இரண்டு தலை முருகன்

இங்குள்ள முருகப்பெருமானுக்கு இரண்டு தலைகள் உள்ளன. இது போன்று எந்த தலத்திலும் கிடையாது. அக்னிஜாத மூர்த்தி என்பது இதுவாகும். இது மிகவும் விசேஷமான தலம் ஆகும். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லாத தேர் இங்கு உள்ளது. இது வேங்கை மரத்தில் செய்யப்பட்டது ஆகும்.

மலையின் மீது அடர்ந்த மரங்களுடன், அமைதியான, அழகான கோவில் இதுவாகும். மேலும் சிறப்பான அம்சமாக, இங்குள்ள மாமாங்க தீர்த்தக்குளம் என்பது ஆகும். 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வறட்சியான கோடை காலத்திலும், மழையே இல்லாத நேரத்திலும், மலைக் கோவிலின் தென்புறம் உள்ள தீர்த்த குளத்தில் விநாயகர் முன்பு, திடீரென்று பொங்கி வழிந்தோடுவது மிகவும் அதிசயமான ஒன்றாகும். இத்தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்த தாகவும் சகல பிணிகளையும் களைய வல்லதாகும் என்கின்றனர்.

சித்தர்கள் வாழ்ந்த மலை

இந்த மலையில் பல சித்தர்கள் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மன் சன்னதியில் இருந்து பின்புறம் சென்றால், மலையின் உச்சியில் 18 சித்தர்களில் ஒருவரான பின் நாக்கு (புண்ணாக்கு) சித்தர் கோவில், வேல்கள் நிறைந்து வேல்கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகில், சரவணமா முனிவரின் சமாதியும் உள்ளது. அந்த முனிவர்கள் வசித்த குகைகள் உள்ளது.

சென்னிமலை என்பதில் சென்னி என்றால் சிரம், கிரி என்றால் மலை ஆகவேதான் சிரகிரி சென்னிமலை என்கின்றனர்.

இயற்கை மூலிகைகள், மரங்கள், செடி கொடிகள் அதிக அளவில் இங்கு இருப்பதாகவும், இங்கு வந்து செல்லும் பக்தர்கள், ரத்தக்கொதிப்பு, ஆஸ்துமா, நெஞ்சு வலி, மூச்சு இறைப்பு உள்ளோர் குணம் அடைகின்றனர் என்று கூறுகின்றனர். இது அனுபவ பூர்வமாக உணர்ந்த பக்தர்கள் பலர். திருமணம் வரங்கள், விவசாயம், கிணறு வெட்டுதல், புதிய தொழில் துவங்க,வியாதிகள் தீர, முடிவு செய்ய, அர்ச்சனை செய்து சிரசுப்பூ உத்திரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்த பின்பு, காரியத்தை தொடங்குகின்றனர். உத்தரவு கிடைக்கா விட்டால் அந்த காரியத்தை துவங்குவது இல்லை.
இத்தலத்தில் உள்ள சக்தி வாய்ந்த சுப்ரமணிய சுவாமியை வழிபட்டால், கல்யாண தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிட்டும்,செவ்வாய் தோஷம் நீங்கும், நோய்கள் அகலும், ஆயுள் தீர்க்கமடையும், ஞானம் பெருகும், சுபிட்சமான வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.

பால், தயிர் அபிஷேகம்

முருகப் பெருமானுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது.மேலும் காவடி எடுத்தல், முடிக்காணிக்கை செலுத்துவது, அன்னதானம் செய்வது, காது குத்தும் வைபவம் செய்வது என்பதற்காக பக்தர்கள் அதிக அளவில் கூடுகின்றனர்.

தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்து இருக்கும். கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், சிறப்பாக கொண்டாடப்படும் விழாக்கள் ஆகும்.

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27 comments:

kmr.krishnan said...

சென்ற பிப்ரவரி மாதம் முதன் முறையாக சென்னிமலை முருகனை தரிசித்தேன் ஐயா!அருமையான ஸ்தலம்.

Mrs Anpalagan N said...

அருமையான பல விடயங்களை தெரியத்தந்தமைக்கு நன்றிகள் ஐயா.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
சென்னிமலை பற்றிய கட்டுரை விளக்கம் மிகவும் அருமை!!
”கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் அவர் வழி நடத்துவார்” - சுப்பிரமணிய சுவாமி!!!
வகுப்பறை வாத்தியார் (சுப்பையா சுவாமி!) அவர்களுக்கும், சக மாணவக்கண்மனிகளுக்கும், தோழர் பெருந்தகைக்களுக்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!
மொத்ததில் - " SEASON GREETINGS"
-பொன்னுசாமி

வேப்பிலை said...

முருகா.. முருகா ...

பரிவை சே.குமார் said...

நல்ல தகவலைத் தெரியத் தந்தீர்கள்.

குலசேகரன் said...

கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர் பற்றி ஒரே ஒரு வரிதான் தொடக்கத்தில் உள்ளது. அந்நூல் அரங்கேற்றப்பட்ட இடம் இக்கோயில். சரி. தேவராயர் இந்நூல் தவிர பிறிதொன்றும் இயற்றவில்லையா? இவரேன் இவ்வூருக்கு வரவேண்டும்? எந்தவூர்க்காரர்? அவர் ஊருக்கருகில் ஏதேனும் முருகன் கோயில் இருந்திருக்குமே? இவ்வூருக்கு வர அவருக்கு சிறப்பான காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.

அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்தால் நன்று. காரணம். கந்த சஷ்டி கவசம் எழுதியவர் இவரே என்பது கூட பலருக்குத் தெரியா சூழல் நிலவுகிறது.

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
சென்ற பிப்ரவரி மாதம் முதன் முறையாக சென்னிமலை முருகனை தரிசித்தேன் ஐயா!அருமையான ஸ்தலம்./////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger Mrs Anpalagan N said...
அருமையான பல விடயங்களை தெரியத்தந்தமைக்கு நன்றிகள் ஐயா./////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
சென்னிமலை பற்றிய கட்டுரை விளக்கம் மிகவும் அருமை!!
”கடவுள் மீது நம்பிக்கை வைத்தால் அவர் வழி நடத்துவார்” - சுப்பிரமணிய சுவாமி!!!
வகுப்பறை வாத்தியார் (சுப்பையா சுவாமி!) அவர்களுக்கும், சக மாணவக்கண்மனிகளுக்கும், தோழர் பெருந்தகைக்களுக்கும் கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!!!
மொத்ததில் - " SEASON GREETINGS"
-பொன்னுசாமி/////

நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
முருகா.. முருகா .../////

நல்லது. நன்று வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger பரிவை சே.குமார் said...
நல்ல தகவலைத் தெரியத் தந்தீர்கள்./////

நல்லது. நன்றி குமார்!

Subbiah Veerappan said...

/////Blogger குலசேகரன் said...
கந்த சஷ்டி கவசத்தை இயற்றிய தேவராயர் பற்றி ஒரே ஒரு வரிதான் தொடக்கத்தில் உள்ளது. அந்நூல் அரங்கேற்றப்பட்ட இடம் இக்கோயில். சரி. தேவராயர் இந்நூல் தவிர பிறிதொன்றும் இயற்றவில்லையா? இவரேன் இவ்வூருக்கு வரவேண்டும்? எந்தவூர்க்காரர்? அவர் ஊருக்கருகில் ஏதேனும் முருகன் கோயில் இருந்திருக்குமே? இவ்வூருக்கு வர அவருக்கு சிறப்பான காரணங்கள் இருந்திருக்க வேண்டும்.
அவரைப்பற்றி கூடுதல் தகவல்கள் தெரிந்தால் நன்று. காரணம். கந்த சஷ்டி கவசம் எழுதியவர் இவரே என்பது கூட பலருக்குத் தெரியா சூழல் நிலவுகிறது.//////

உங்களின் ஆர்வத்திற்கு நன்றி நண்பரே! இணையத்தில்தான் தேடிப் பார்க்க வேண்டும். பார்த்துவிட்டு மேல் விபரங்களை பிறிதொருநாள் பதிவிடுகிறேன் நண்பரே!

periaperumal said...

பலருக்குத் தெரிய வேண்டும் !!
நன்றி

Mrs Anpalagan N said...

ஐயா,
இது சில காலம் முன்பு இணையத்திலிருந்து எனது சொந்த உபயோகத்திற்கென சேகரிக்கப்பட்டது. அதனால் எங்கிருந்து எடுத்தேன் என்பது குறிப்பிலில்லை.

கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள்.

கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம்தான்.
சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.

அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.

சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்...

என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.

பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.

சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது.

வரதராஜன் said...

குரு வந்தனம்.
நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளேன், சென்னமலை சென்றுவர.
மூலவர் பெயர் சுப்ரமணியர் என்றால் "அக்னிஜாதமூர்த்தி" என்ற பெயரில் இருப்பவரும் அவர்தான் என்னும் செய்தி, இருதலையுடன் கூடிய அம்முருகப் பெருமானைக் காணும் ஆவலை அதிகப்படுத்துகிறது! எனவே அப்புனிதப் பயணம் விரைவிலிருக்கும்!
புனிதப் பகிர்ப்புக்காக வாத்தியாருக்கு சிறப்பு வணக்கங்கள்!

வரதராஜன் said...

குரு வந்தனம்.
அன்பு கூர்ந்து எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து தாருங்கள்!
பாலன் தேவராயர் வயிற்றுவலியால் கஷ்டப்பட்டு உயிர் துறக்கத் துணிந்து செல்லுங்கால், ஒருமுறை முருகனை தரிசித்துச் செல்ல விழைந்து, கோவிலுள் இறைவழிபாடு செய்யும் சமயத்து, திருச்செந்தூரார் அருளால் அல்லவா கந்தசஷ்டி உருவாகிறது!? அங்கேயே அரங்கேறியதல்லவா? அது வேறு கந்தசஷ்டியா?
நான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேனா?

Mrs Anpalagan N said...

அந்த பதிவு எடுக்கப்பட்டது இங்கிருந்து தான்:
http://temple.dinamalar.com/news_detail.php?id=27334

மேலும் ஐயாவின் கடந்த மாத (18.11.15) பதிவிலும் இதையே பதிந்துள்ளார்;
http://classroom2007.blogspot.com.au/2015_11_01_archive.html
18.11.15
"ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?" என்ற பதிவின் கீழ்.

எனவே சென்னிமலை பற்றிய குறிப்பில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும்.
நன்றி.

Mrs Anpalagan N said...

Sir
there is still confusion around sennimalai and senthur. The photo I sent about the கல்வெட்டு says; it's sennimalai. But in the internet everywhere it says Senthur. I think there is a lot of confusion among many people about this I guess.
I found this too in dinamalar website!:
http://temple.dinamalar.com/New.php?id=756
that says in the mid page that it is sennimalai!
I'm sending you couple of more photos regarding this through email classroom2007...
Thanking you
Sincerely
Mrs N Anpalagan

Thirumal Muthusamy said...

ஐயா

தாங்கள் எழுதிய கட்டுரையை இன்றுதான் படித்தேன்.ஆனால் கட்டுரை எழுதிய நாளில் சென்னிமலை முருகன் கோவிலில் இருந்தேன்.என்னே முருகனின் கருணை.

எம்.திருமால்
பவளத்தானூர்

Subbiah Veerappan said...

//////Blogger periaperumal said...
பலருக்குத் தெரிய வேண்டும் !!
நன்றி/////

நம்மால் முடிந்தவரை தெரியப்படுத்துவோம் நண்பரே!

Subbiah Veerappan said...

Blogger Mrs Anpalagan N said...
ஐயா,
இது சில காலம் முன்பு இணையத்திலிருந்து எனது சொந்த உபயோகத்திற்கென சேகரிக்கப்பட்டது. அதனால் எங்கிருந்து எடுத்தேன் என்பது குறிப்பிலில்லை.
கந்த சஷ்டி கவசம் உருவான வரலாறு
முருகப்பெருமான் புகழ்பாடும் பாடல்கள் எத்தனையோ நூறாயிரம் இருந்தாலும், தனது தனித்தன்மையால் உயர்ந்து நிற்கிறது இந்த சஷ்டி கவசம். இதை இயற்றியவர் பாலதேவராய சுவாமிகள்.
கந்த சஷ்டி கவசத்தில் நிறைய சொற்கள் வடமொழியில் இருந்து எடுத்தாளப்பட்டு இருப்பதால் பாலதேவராய சுவாமிகள் வடமொழியில் சிறந்த புலமை பெற்றவராக திகழ்ந்ததும் தெளிவாகிறது. பாலதேவராய சுவாமிகள் முருகப்பெருமானின் 6 அறுபடை வீடுகளுக்கும் சஷ்டி கவசங்களை இயற்றினாலும், அவை அனைத்துமே முருகப்பெருமானின் புகழ் பாடுவதால் கந்தர் சஷ்டி கவசம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனாலும் இப்போது அதிகம் பாடப்படுவது திருச்செந்தூர் தலத்திற்கு அவர் இயற்றிய, சஷ்டியை நோக்க சரவண பவனார்.. என்று ஆரம்பிக்கும் 270 வரிகளைக் கொண்ட கவசம்தான்.
சஷ்டி கவசம் பிறந்த கதை: பாலதேவராய சுவாமிகள் கந்த சஷ்டி கவசத்தை உருவாக்கிய சூழ்நிலை உணர்ச்சிப்பூர்வமானது. ஒருசமயம் அவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவரது வயிற்றுவலி குணமாகவில்லை. வாழ்க்கையே வெறுத்துப் போனவர் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூருக்கு வந்தார். அவர் அங்கு வந்த நேரம் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. ஏற்கனவே பாலதேவராய சுவாமிகள் தீவிர முருக பக்தர் என்பதால் அந்த திருவிழாக் காட்சிகளைப் பார்த்து சற்று மனம் மாறினார். திருவிழா முடிந்த பிறகு தற்கொலை முடிவை எடுத்துக்கொள்ளலாமே.. என்று எண்ணியவர், முருகப் பெருமானை வேண்டி சஷ்டி விரதம் இருக்கத் தொடங்கினார். முதல் நாள் செந்தூர் கடலில் புனித நீராடி முருகனை வழிபட்ட பிறகு, கோயில் மண்டபத்தில் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார். அவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் புரிந்ததோடு தனக்காக சஷ்டி கவசம் பாடும் திறனையும் அவருக்கு அளித்தார்.
அடுத்த நிமிடமே பாலதேவராய சுவாமிகள் மனதில் பக்தி வெள்ளமானது பிரவாகம் எடுத்து ஓடியது.
சஷ்டியை நோக்க சரவண பவனர்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்...
என்று துவங்கும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கான சஷ்டி கவசத்தை முதன் முதலாக எழுதி முடித்தார். அதற்கு அடுத்த 5 நாட்களுக்கு, முருகப்பெருமானின் பிற அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை திருத்தலங்களுக்கான சஷ்டி கவசங்களை இயற்றி முடித்தார். 6 சஷ்டி கவசங்களையும் பாலதேவராய சுவாமிகள் இயற்றி முடிந்தபோது, அவரை வாட்டி வந்த வயிற்றுவலி முற்றிலும் காணாமல் போய் இருந்தது. கந்த சஷ்டி கவசம் இயற்றுவதற்காகவே தன்னை முருகப்பெருமான் சோதித்து திருவிளையாடல் புரிந்துள்ளார் என்பதை அறிந்த சுவாமிகள் மிகுந்த பரவசம் ஆனார். அழகன் முருகப்பெருமானை ஆனந்தக் கூத்தாடி தொழுதார். திருவாசகத்திற்கு மனம் உருகாதவர்கள் யாரும் இல்லை என்றால், சஷ்டி கவசத்திற்கு தங்கள் மனதை பறிகொடுக்காதவர்கள் யாரும் கிடையாது. அவ்வளவு சக்திமிக்க வரிகள் கொண்டது சஷ்டி கவசம்.
பாம்பன் சுவாமிகள்: பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார். அப்படி ஒரு முறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவசநூலை முருகன் மீது பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவ்வாறு அவர் பாடியதுதான் சண்முக கவசம். இந்த சண்முக கவசமும் கந்த சஷ்டி கவசம் போன்று 6 கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு உகந்த விரதம் சஷ்டி. இது 6 நாட்கள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, ஐப்பசித் திங்கள் பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி, ஆறாம் நாளான சஷ்டி திதியில் இந்த விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதேபோல், முருகப்பெருமானுக்கு முகங்களும் 6. முருகனின் படை வீடுகளும் 6. முருகனை வளர்த்த கார்த்திகைப் பெண்களும் 6 பேர், சரவணபவ என்ற முருகப்பெருமானின் திருமந்திரமும் 6 எழுத்து. ஜாதகத்தின் ஆறாம் இடம் பொதுவாக விரோதம், கடன், ரோகம், சத்ரு போன்றவற்றை குறிக்கும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவரும் முருகப்பெருமான்தான். அதனால், நாம் வழக்கமாக பாடும் திருச்செந்தூர் திருத்தலத்துக்கான சஷ்டி கவசத்தோடு, மற்ற 5 அறுபடை வீடுகளுக்கும் சேர்த்து பாலதேவராய சுவாமிகள் இயற்றிய சஷ்டி கவசங்களையும் பாராயணம் செய்வது நல்லது.
சஷ்டி கவச பாராயண பலன்கள்: ஒருவர் சஷ்டி கவசத்தை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தால் நோய்கள் அண்டாது, மனம் வாடாது, குறைவின்றிப் பதினாறு பேறும் பெற்று நெடுநாள் வாழலாம், நவக்கிரகங்களும் மகிழ்ந்து நன்மை அளித்திடுவார்கள், குழந்தை பாக்கியம் கிட்டும்.... இப்படி பல பலன்கள் கிட்டும் என்று சஷ்டி கவசத்திலேயே சொல்லப்பட்டுள்ளது./////

நல்லது. அரிய தகவல்களுக்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
நிச்சயப்படுத்திக் கொண்டுள்ளேன், சென்னமலை சென்றுவர.
மூலவர் பெயர் சுப்ரமணியர் என்றால் "அக்னிஜாதமூர்த்தி" என்ற பெயரில் இருப்பவரும் அவர்தான் என்னும் செய்தி, இருதலையுடன் கூடிய அம்முருகப் பெருமானைக் காணும் ஆவலை அதிகப்படுத்துகிறது! எனவே அப்புனிதப் பயணம் விரைவிலிருக்கும்!
புனிதப் பகிர்ப்புக்காக வாத்தியாருக்கு சிறப்பு வணக்கங்கள்!////

நல்லது. நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
குரு வந்தனம்.
அன்பு கூர்ந்து எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்து தாருங்கள்!
பாலன் தேவராயர் வயிற்றுவலியால் கஷ்டப்பட்டு உயிர் துறக்கத் துணிந்து செல்லுங்கால், ஒருமுறை முருகனை தரிசித்துச் செல்ல விழைந்து, கோவிலுள் இறைவழிபாடு செய்யும் சமயத்து, திருச்செந்தூரார் அருளால் அல்லவா கந்தசஷ்டி உருவாகிறது!? அங்கேயே அரங்கேறியதல்லவா? அது வேறு கந்தசஷ்டியா?
நான் தவறாகப் புரிந்து கொண்டுள்ளேனா?////

செந்தூர் என்றே வைத்துக்கொள்ளுங்கள். எங்கே உருவானால் என்ன? கவசத்தைப் பாராயாணம் செய்து பயன் பெறுவோம்!

Subbiah Veerappan said...

/////Blogger Mrs Anpalagan N said...
அந்த பதிவு எடுக்கப்பட்டது இங்கிருந்து தான்:
http://temple.dinamalar.com/news_detail.php?id=27334
மேலும் ஐயாவின் கடந்த மாத (18.11.15) பதிவிலும் இதையே பதிந்துள்ளார்;
http://classroom2007.blogspot.com.au/2015_11_01_archive.html
18.11.15
"ஜாதகத்தில் உள்ள தோஷங்களைப் போக்க என்ன செய்ய வேண்டும்?" என்ற பதிவின் கீழ்.
எனவே சென்னிமலை பற்றிய குறிப்பில் எங்கோ தவறு நேர்ந்திருக்க வேண்டும்.
நன்றி./////

உருவான இடம் எதுவானால் என்ன? நமக்கு கவசம் கிடைத்ததுதான் முக்கியம் சகோதரி!

Subbiah Veerappan said...

//////Blogger Mrs Anpalagan N said...
Sir
there is still confusion around sennimalai and senthur. The photo I sent about the கல்வெட்டு says; it's sennimalai. But in the internet everywhere it says Senthur. I think there is a lot of confusion among many people about this I guess.
I found this too in dinamalar website!:
http://temple.dinamalar.com/New.php?id=756
that says in the mid page that it is sennimalai!
I'm sending you couple of more photos regarding this through email classroom2007...
Thanking you
Sincerely
Mrs N Anpalagan//////

சிரகிரி வேலா சீக்கிரம் வருக’ என்று பாடலை இயற்றிய பால தேவராய சுவாமிகளே சொல்வதால் அது சென்னிமலைதான் இருக்க வேண்டும்.
இருந்தாலும் பரவாயில்லை. செந்தூரில் உருவானதாகவே வைத்துக்கொள்வோம். நமக்கு கவசம் கிடைத்ததுதான் முக்கியம் சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
தாங்கள் எழுதிய கட்டுரையை இன்றுதான் படித்தேன்.ஆனால் கட்டுரை எழுதிய நாளில் சென்னிமலை முருகன் கோவிலில் இருந்தேன்.என்னே முருகனின் கருணை.
எம்.திருமால்
பவளத்தானூர்//////

முருகனருள் முன்னிற்கும். நன்றி!

Pathrachalam Chalam said...

Ayya arputhamana pathivu Alagan MURUGAPERUMANIN Alayathai therinthu kondu valipada vaipu...Nandri