மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

2.12.15

அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே? கேட்க ஆளில்லையா?


அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது இங்கே? கேட்க ஆளில்லையா?

அதிர்ச்சியளிக்கும் உண்மை..!! படித்து பிறருக்கும் பகிருங்கள்..

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!

20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..

சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.

90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.
63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.
18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.
226,80,00,000×10 = 2,268,00,00,000.

வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.

ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?

இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?

இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..? அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

இந்த டோல்கேட் மோசடியைப் பற்றிய காணொளி: இதையும் பாருங்கள்!


நாம் பணத்தை எப்படி ஏமாற்றுகிறார்கள் மக்களே இதையும் படியுங்கள்!

நண்பர்களே படித்து பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் – அதிர்ச்சி தகவல்

நண்பர் ஒருவரின் ஆதங்கம் எனக்கு மிகச் சரியாகவே பட்டது.அவர் சொன்னது இதுதான்.

வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு பெண் நகைக் கடையில் நகை வாங்கிய போது பில்லில் காட்டப்பட்ட சேதாரம் பற்றி விசாரித்த தோடு “சேதாரத்திற்கு பணம் பிடித்தம் செய்யப்படும் போது அந்த சேதாரத்திற்கான தங்கத்தைத் திருப்பித் தந்தாக வேண்டும், அது வாடிக்கையாளருக்குச் சொந்தமானது” என்று உரிமைக் குரல் எழுப்பினாராம்!

வாயடைத்துப் போன கடை நிர்வாகம் வேறு வழியில்லாமல் சேதாரப் பணத்தைத் தள்ளுபடி செய்ததாம்! இதனை அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒரு பிரபலப் பேச்சாளர் தனக்கும் சேதாரம் பிடிக்கக்கூடாது என்று முழங்கி அவரும் காரியத்தைச் சாதித்துக் கொண்டாராம்!

நண்பரின் ஆதங்கம் இதுதான். ‘சேதாரம் என்ற பெயரில் நகைக்கடைகளில் பெருங்கொள்ளையடிப்பதை நம்மவர் யாரும் ஏன் கண்டு கொள்வதே இல்லை? என்பதே அவரது நியாயமான கேள்வி”.

16 கிராமில் ஒருவர் நகை வாங்கினால் ஏறக்குறைய 3 கிராம் சேதாரம் என்று கணக்கிட்டு ஒன்பதாயிரம் ரூபாய் வரையில் பெருங் கொள்ளையடிக்கிறார்கள் நகைக் கடை முதலாளிகள். இன்றைய தங்க விற்பனை விலை 16 கிராமுக்கு ரூ.48000 என்றால் கடைமுதலாளிக்கு சேதாரம் என்ற பெயரில் “ஒன்பதாயிரம் ரூபாய்” தண்டம் அழ வேண்டும்.ஏறக் குறைய 16 சதவீதம்? “எதற்காக இந்த தெண்டம்? பதினாறு கிராமுக்கு மூணு கிராம் எப்படி சேதாரமாகும்?” எந்த அதி மேதாவியும் இதுவரை கேள்வி கேட்டதில்லை.

அப்படி புத்தியோடு யாரும் தைரியமாக எதுவும் கேட்டு விடக்கூடாது என்று சொல்லித் தான் அவர்களாக சில நூறு ரூபாய்களை பிச்சை போடுவார்கள்.
போனவுடன் குடிக்க ஏதாவது கொடுத்து ஆட்களை ‘கூல்’ பண்ணுவார்கள்.

இப்பொழுதெல்லாம் சேதாரத்தைச் சட்டப்பூர்வமாகவே ஆக்கி விட்டார்கள்.அதாவது எந்தப் பொருளையும் கொடுக்காமலேயே பல்லாயிரக்கணக்கில் கொள்ளையடிப்பது…

சில கடைகளில் மிகக் குறைந்த சேதாரம் என்ற விளம்பரம் வேறு… உற்றுப் பார்த்தால் ஆறு சதவீதம் முதல் என்று இருக்கும்.

என்னுடைய கேள்வி என்னவென்றால் ஏன் சேதாரமில்லாமல் யாரும் நகை விற்பனை செய்ய முடியாதா?

பொருளுக்குள்ள உண்மை விலையை மட்டும் தானே வாங்க வேண்டும்?

செய்கூலி கேட்பது நியாயம் தான்.

16 கிராமில் நகை செய்ய மூன்று கிராமா சேதம் ஆகும்?
இந்த அக்கிரமத்தை ஏன் அரசாங்கங்கள் கண்டு கொள்வதில்லை?

பல சரக்குக் கடைக்கு விலைப் பட்டியல் வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அரசாங்கம் ஏன் நகைக் கடைகளுக்கு சேதார அளவுக்கு வரம்பு வைக்க வில்லை?

எத்தனை எத்தனை ஏழை மக்கள் குருவி சேர்ப்பது போல் பணம் சேர்த்து நகை வாங்க வருகிறார்கள்?

அவர்களிடம் வழிப்பறி செய்வதைவிட மோசமான செயலல்லவா சேதாரம் என்ற பெயரில் திருடுவது?

பின்னர் ஏன் நாட்டில் ஏழை ஏழையாகவே இருக்க மாட்டான்? ஒரு நகைக்கடை வைத்தவன் ஊரெல்லாம் நகைக் கடை திறக்க மாட்டான்?

மில்லி கிராம் தங்கம் கூட சொந்தமில்லாத ஏழைகள் இந்த மண்ணில் கோடிக்கணக்கில்.கோடிக்கணக்கான ஏழைகளைச் சுரண்டித்தான் ஒருவன் பணக்காரனாக கொழுக்க முடிகிறது. இது போன்ற பகற்கொள்ளைக்காரர்கள் திருந்த வேண்டும்.அல்லது திருத்தப்படவேண்டும்.

விரைவில் இம்மண்ணில் இது நிகழ்ந்தாக வேண்டும்…! அதுவும் உங்களால் தான் முடியும்…!

இந்த செய்தியை அவரவர்கள் அவர்களூடைய எல்லா தொடர்புகளுக்கும் தொடர்ந்து அனுப்புங்கள்1111

அன்புடன்
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

வேப்பிலை said...

இதை தான் பலமுறை சொல்லி வருகிறேன்
///இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும்

எந்த வேறுபாடும் இல்லை..!!///
எப்படி அப்படி சொல்கிறீர்கள்

மன்மோகனே தேவலை
மோடி ஆட்சியில்.

சாதாரனவர் கட்டும் வரியை வாங்கி
கார்பொரேட் களுக்கு வரி தள்ளுபடி செய்கிறார்

வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள
விலை நிலங்களை அழித்து ....???

தாமிரபரணியில் நடப்பது தெரியும் தானே
தகுதி இல்லாத பிரதமர் இந்தியாவின்

துர் அதிர்ஷ்டம்...
தூக்கி எறியுங்கள் இவரை

புதிய தகுதி உள்ள பிரதமரை தேர்வு செய்து
புதிய இந்தியா படைப்போம்

இந்தியாவில் இவர் ஆட்சி தொடர்ந்தால்
இருபது ஆண்டுகளில் இந்தியா என்ற

ஒரு நாடு இல்லாமல் போகும்.
ஒரு முறையாவது யோசித்து பாருங்களேன் ..

வேப்பிலை said...

சேதாரம் இது மக்களுக்கு
சேராதா(ர)ம்.. இது மட்டுமா

நம்பிக்கை என விளம்பரம் செய்யும்
நகை கடையில் வாங்கிய தோட்டில்

இரும்பு கம்பி வைத்து விற்றதும்
இப்படி இருப்பதை சொன்னவருக்கு

சில லட்சம் தந்து சரிகட்டியதும்
சிறப்பாக சொல்லும் கல்யாண மாளிகை தானே

வரி பற்றிய கணக்கை இன்னொருமுறை
வரி வரியாக எழுதுகிறேன் ....

வரி கட்ட மாட்டேன் என்று
வாய் விட்டு உறுதியாக

ஓட்டு போடும்
ஒங்கலால் சொல்ல முடியுமா

அப்படி சொன்னால்
அப்போது தான் உண்மையான சுதந்திரம்.

hamaragana said...

அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ....???இந்திய ஒட்டு மொத்த லாரிகளும் வேலை நிறுத்தம் செய்தும் இது பற்றி அரசு ஒன்றும் செய்யவில்லை..???

வேப்பிலை said...

///hamaragana said...
இது பற்றி அரசு ஒன்றும் செய்யவில்லை..???///

முந்தைய பா ஜா க செய்த
முரண்பாடு தான் PPP (Private-Public-Partnership)

தங்க நாற்கர சாலை என அன்று
தொடங்கப்பட்டது; அதனால்

கொள்கையும் தொடருது இந்த
கொள்ளையும் தொடருது...

இந்தியாவை தனியாருக்கு விற்று விட்டு
இப்போ என்ன செய்வது என

இவர்கள் விழிக்கும் பொது தான்
இந்த மக்கள் விழிப்பார்கள்..

அதுவரை
அந்த வாக்கு சாதுர்யம் உள்ள

மனிதனை நம்பி
மக்கள் அழிய போகிறார்கள்....

இவர் தகுதி இல்லாதவர் என்று தான்
இதுவரை இவரை ஓரம் கட்டி வைத்தனர்

அறுபது ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என
ஆலாபனை செய்கிறார் "இந்த வாய் சொல் வீரர்".

அவர்கள் செய்த சில குளறுபடிகளில்
ஆட்சியை இவர்கள் பிடித்தனர்....

தகுதி என்று பார்த்தால்
தர வரிசையில் கடைசியில் இருப்பார் இவர்.

வரதராஜன் said...

குருவே வணக்கம்.
வயிறு பற்றி எரிகிறது, சுங்கவரிச் செய்தி. இதையொட்டி, நாடு மொத்தமுள்ள லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ததையுமறிவேன். ஆனால் அப்போராட்டம் எப்படி முறியடிக்கப்பட்டது, யாமறியோம்!? யாரெல்லாம் சேர்ந்து அதை சரி செய்தார்கள்? என்ன பங்கு அவர்களுக்கு, யாருமறியர்!!!? FDI ஐ ஏன் மையஅரசு இத்துனை ஆர்வத்துடன் அரவணைக்கிறது,
அறிகிலன்??!!
அட அட அடா, தங்கத்தில் இவ்வளவு கொள்ளையா?! தாங்கள் கூற்றுப்படியே வைத்தாலும், இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் புதிய கிளை திறக்க அமிதாபச்சன் முதல் பெரிய நடிகர்களை வரவழைக்க எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அவ்வளவும் நம்ம பணம்!!!!!
ஐயோ, நாம் வாழத் தகுதியற்றவர்கள் போல் எல்லா அநியாயங்களையும் கண்டும், கேட்டும் கூட வாய் திறப்பதில்லையே!?
இரண்டுமே அரசின் அநுமதியடன் தொடர்கிறதே!? எப்படி/ எப்போது முறியடிப்பது?!
ஒனறுமே புரியவில்லையே????

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
இதை தான் பலமுறை சொல்லி வருகிறேன்
///இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும்
எந்த வேறுபாடும் இல்லை..!!///
எப்படி அப்படி சொல்கிறீர்கள்
மன்மோகனே தேவலை
மோடி ஆட்சியில்.
சாதாரனவர் கட்டும் வரியை வாங்கி
கார்பொரேட் களுக்கு வரி தள்ளுபடி செய்கிறார்
வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள
விலை நிலங்களை அழித்து ....???
தாமிரபரணியில் நடப்பது தெரியும் தானே
தகுதி இல்லாத பிரதமர் இந்தியாவின்
துர் அதிர்ஷ்டம்...
தூக்கி எறியுங்கள் இவரை
புதிய தகுதி உள்ள பிரதமரை தேர்வு செய்து
புதிய இந்தியா படைப்போம்
இந்தியாவில் இவர் ஆட்சி தொடர்ந்தால்
இருபது ஆண்டுகளில் இந்தியா என்ற
ஒரு நாடு இல்லாமல் போகும்.
ஒரு முறையாவது யோசித்து பாருங்களேன் ../////

ஆமாம். யோசித்தால் மலைப்பாகத்தான் இருக்கிறது!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
சேதாரம் இது மக்களுக்கு
சேராதா(ர)ம்.. இது மட்டுமா
நம்பிக்கை என விளம்பரம் செய்யும்
நகை கடையில் வாங்கிய தோட்டில்
இரும்பு கம்பி வைத்து விற்றதும்
இப்படி இருப்பதை சொன்னவருக்கு
சில லட்சம் தந்து சரிகட்டியதும்
சிறப்பாக சொல்லும் கல்யாண மாளிகை தானே
வரி பற்றிய கணக்கை இன்னொருமுறை
வரி வரியாக எழுதுகிறேன் ....
வரி கட்ட மாட்டேன் என்று
வாய் விட்டு உறுதியாக
ஓட்டு போடும்
ஒங்கலால் சொல்ல முடியுமா
அப்படி சொன்னால்
அப்போது தான் உண்மையான சுதந்திரம்./////

நம்மால் பல விஷயங்களைச் செய்ய முடியாது. அதுதான் நமது பலவீனம்! ஆனால் நம் பிரார்த்தனைகள் வீணாகாது. காலதேவன் ஒரு நாள் கையில் பிரம்பை எடுப்பான். பொறுத்திருந்து பாருங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
நம்மால் ஒன்றும் செய்ய முடியாது ....???இந்திய ஒட்டு மொத்த லாரிகளும் வேலை நிறுத்தம் செய்தும் இது பற்றி அரசு ஒன்றும் செய்யவில்லை..???/////

லாரிக்காரர்களை சரிக்கட்டிவிட்டார்கள். என்ன நடந்ததென்று தெரியவில்லை!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
///hamaragana said...
இது பற்றி அரசு ஒன்றும் செய்யவில்லை..???///
முந்தைய பா ஜா க செய்த
முரண்பாடு தான் PPP (Private-Public-Partnership)
தங்க நாற்கர சாலை என அன்று
தொடங்கப்பட்டது; அதனால்
கொள்கையும் தொடருது இந்த
கொள்ளையும் தொடருது...
இந்தியாவை தனியாருக்கு விற்று விட்டு
இப்போ என்ன செய்வது என
இவர்கள் விழிக்கும் பொது தான்
இந்த மக்கள் விழிப்பார்கள்..
அதுவரை
அந்த வாக்கு சாதுர்யம் உள்ள
மனிதனை நம்பி
மக்கள் அழிய போகிறார்கள்....
இவர் தகுதி இல்லாதவர் என்று தான்
இதுவரை இவரை ஓரம் கட்டி வைத்தனர்
அறுபது ஆண்டுகள் என்ன செய்தீர்கள் என
ஆலாபனை செய்கிறார் "இந்த வாய் சொல் வீரர்".
அவர்கள் செய்த சில குளறுபடிகளில்
ஆட்சியை இவர்கள் பிடித்தனர்....
தகுதி என்று பார்த்தால்
தர வரிசையில் கடைசியில் இருப்பார் இவர்.//////

காலம் இவர்களைத் தண்டிக்கும்.பொறுத்திருந்து பாருங்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger வரதராஜன் said...
குருவே வணக்கம்.
வயிறு பற்றி எரிகிறது, சுங்கவரிச் செய்தி. இதையொட்டி, நாடு மொத்தமுள்ள லாரி உரிமையாளர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செய்ததையுமறிவேன். ஆனால் அப்போராட்டம் எப்படி முறியடிக்கப்பட்டது, யாமறியோம்!? யாரெல்லாம் சேர்ந்து அதை சரி செய்தார்கள்? என்ன பங்கு அவர்களுக்கு, யாருமறியர்!!!? FDI ஐ ஏன் மையஅரசு இத்துனை ஆர்வத்துடன் அரவணைக்கிறது,
அறிகிலன்??!!
அட அட அடா, தங்கத்தில் இவ்வளவு கொள்ளையா?! தாங்கள் கூற்றுப்படியே வைத்தாலும், இவர்கள் ஒவ்வொரு இடத்திலும் புதிய கிளை திறக்க அமிதாபச்சன் முதல் பெரிய நடிகர்களை வரவழைக்க எவ்வளவு செலவு செய்கிறார்கள்? அவ்வளவும் நம்ம பணம்!!!!!
ஐயோ, நாம் வாழத் தகுதியற்றவர்கள் போல் எல்லா அநியாயங்களையும் கண்டும், கேட்டும் கூட வாய் திறப்பதில்லையே!?
இரண்டுமே அரசின் அநுமதியடன் தொடர்கிறதே!? எப்படி/ எப்போது முறியடிப்பது?!
ஒனறுமே புரியவில்லையே????//////

காலதேவன் ஒரு நாள் கணக்குத் தீர்ப்பான். பொறுமையுடன் இருங்கள்!

Velu R said...

நடக்கும் தமிழ் வருடம் முடிவதுக்குள் தங்கம் விலை பெரிய அளவில் சரியும்(Gram= 1650). இதன் மூலம் நகைக்கடை முதலாளிகள் பெரிய நஷ்டம் அடைவர்.

அதுமட்டும் இன்றி இவ்வுலகில் எதுவும் நிரந்தரம் கிடையாது. உதாரணம் நமது classroom வாத்தியார். அவரது தாத்தா வுக்கு Barma வில் பல ஆயிரம் எக்கர் நிலங்களை இழந்தது அனைவரும் அறிந்ததே என நம்புகிறேன்.

இவ்வுலகில் இருந்து நாம் எதையும் எடுத்து செல்ல முடியாது. அது மட்டும் இன்றி எதையும் நிரந்தரமாக தன் வாரிசுகளுக்கு சேமித்தும் வைக்க முடியாது

Remanthi said...

சுங்கவரி...மிகப்பெரிய மோசடி, தங்கம் காலம் காலமாக நடக்கும் ஒரு நிகழ்வுகள், யாரும் எதிர்த்துக் கேட்பதில்லை என்பதைவிட முடியாத நிலைதான்...

இதைவிடக் கொடுமை சென்னையில் உணவு இன்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, உதவி செய்யாமல்...பால் பாக்கெட் விலை 50...100... என்று விற்பனை செய்யப்பட்டதை நாம் அறிவோம்... அவன் அவன் சக்திக்கு தகுந்தவாறு செயல் செய்கிறான்... ஒரு புறம் மனித நேயம் இருந்தாலும் மறுபுறம் இப்படி தான் எல்லா இடங்களிளும் நடக்கிறது. கல்வி, மருத்துவம் etc...

காலமே பதில் சொல்லும்...

நன்றி ஜயா உங்கள் பதிவு மிகவும் உண்மையானது...