மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Well said

Well said
Varahamihiram, The Great

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

1.10.15

வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!


வார்த்தைகளால் விவரிக்க முடியாத படைப்புக்கள்!

சில படைப்புகளை வார்த்தைகளால் விளக்கவோ விவரிக்கவோ முடியாது! அதற்கு மிகச் சிறந்த உதாரணம் அமரர் சில்பியின் அமரத்துவம் பெற்ற ஓவியங்கள். ஓவியம் வரையும் திறனை இறைவன் பலருக்கு அளித்துள்ளான் எனினும் தன்னையே (இறைவன்) வரையும் திறனை மிகச் சிலருக்கு மட்டுமே அவன் அருளியுள்ளான்! அதில் முதன்மையானவர் ஓவியர் சில்பி என்றால் அது மிகையாகாது.

மதுரை தொடங்கி ஹளேபீடு வரை 39 ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களை ஓவியங்களாக வடித்திருக்கிறார் ஓவியர் சில்பி.

கருவிலேயே கலைஞனாக உருவெடுப்பவர்களின் புகழ், காலத்தால் மறையாது. அவர்கள் மெய் உருக உழைத்த உழைப்பின் பலன்களை எப்பேர்ப்பட்ட சக்தியாலும் கரைத்துவிட முடியாது. தெய்வீகச் சிற்பங்கள் தரும் ஆத்ம அமைதியை நாடிச் செல்லும் எண்ணத்தின் வெளிப்பாடு, மாபெரும் நோன்பாகவே அமைந்துவிடும். அப்படி, சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள். வரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி.

கருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி.

மேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைத்துள்ளது விகடன் பிரசுரம்.  அற்புதத் தொகுப்பு இது. நூலினுள் நுழைந்துவிட்டால், தன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்.

இத் தொகுப்புகளை வாங்கி பக்கம் பக்கமாக சில்பி வடித்துள்ள சிற்பங்களை (ஓவியங்கள்!) அதன் பின்னணியில் உள்ள விளக்கங்களோடு படித்துப் பார்க்கும்போது மெய்சிலிர்க்கும் என்பது என்னவோ உண்மை!

புத்தகம் கிடைக்கும் இடம்:

Vikatan Media Services
757, Anna Salai,
Chennai 600002
Phone : 044 42634283 & 84 Mobile : 95000 68144
Email : pubonline@vikatan.com

ஓவியர் சில்பியின் இயற்பெயர் சீனிவாசன். அவரைப்பற்ரிய மேலதிகத்தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பெற்றுள்ள சுட்டியைக் கிளிக்கிப் பார்க்கவும்
https://en.wikipedia.org/wiki/Silpi

அன்புடன்
வாத்தியார்
----------------------------
உங்கள் பார்வைக்கு அவர் வரைந்தவற்றுள் சில ஓவியங்கள்:================================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

kmr.krishnan said...

ஆம். ஐயா! சில்பியின் அற்புதமான் ஓவியங்களை சுடச் சுட காணும் பேறு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். புதிய நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளது உயர்வான அறிமுகம்.

shree said...

சில்பியின் ஓவியங்கள் அருமை. புத்தகம் கிடைக்கும் இடத்தின் முகவரி கொடுத்ததற்கு நன்றி

raj said...

Oviyar sirpi avargalin sithirangalai nesitha manithargalur adiyenum oruvan. Eppadi, ippadi varaiya mudigirathu enru nan malaithathundu.

Its god gift. It is as if photos are taken of the monumnets. Kalkiyil enru ninaikiren. Avarathu padaippugalai parththu appothe viyanthu ponen.
Ippodhu, ippadi yaravathu varaigirarkala? enakku theriyavillai.

hamaragana said...

அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
போற்றத்தக்க ஓவியர் ""சில்பி அவர்கள் " கோட்டோவியம் என்றால் சில்பி எனுமளவு ..நிறைவனவர். ..
இவருக்கு இணை இவரே. சில ஓவியங்கள் பேசும் ..!!!
நன்றி.


Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஆம். ஐயா! சில்பியின் அற்புதமான் ஓவியங்களை சுடச் சுட காணும் பேறு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். புதிய நண்பர்களுக்கு நீங்கள் கொடுத்துள்ளது உயர்வான அறிமுகம்.//////

ஆமாம். அடியவனும் சுடச் சுட அனுபவித்தவன். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger shree said...
சில்பியின் ஓவியங்கள் அருமை. புத்தகம் கிடைக்கும் இடத்தின் முகவரி கொடுத்ததற்கு நன்றி////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger raj said...
Oviyar sirpi avargalin sithirangalai nesitha manithargalur adiyenum oruvan. Eppadi, ippadi varaiya mudigirathu enru nan malaithathundu.
Its god gift. It is as if photos are taken of the monumnets. Kalkiyil enru ninaikiren. Avarathu padaippugalai parththu appothe viyanthu ponen.
Ippodhu, ippadi yaravathu varaigirarkala? enakku theriyavillai./////

Line drawingல் இப்போது அப்படி யாரும் இல்லை

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வணக்கம் வாத்தியார் அய்யா ..
போற்றத்தக்க ஓவியர் ""சில்பி அவர்கள் " கோட்டோவியம் என்றால் சில்பி எனுமளவு ..நிறைவனவர். ..
இவருக்கு இணை இவரே. சில ஓவியங்கள் பேசும் ..!!!
நன்றி.////

உண்மைதான். நன்றி கணபதியாரே!

B. Lakshmi Narayanan said...

வணக்கம் வாத்தியாரே!

ஓவியர் சில்பியின் அன்னப்பறவை ஓவியம் அவரது நுணுக்கத்தையும், சிறுத்தை ஓவியம் தத்ரூப அனுபவத்தையும் தருகிறது... பகிர்வுக்கு மிக்க நன்றி....

இவரது ஜாதகத்தையும் நம் வகுப்பறையில் வாத்தியார் அலசலாமே!!! தவறு இருந்தால் மன்னிக்கவும்....


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

வரதராஜன் said...

ஐயா,
சில்பி அவர்கள் வரைந்துள்ள பல தீபாவளி மலர் படங்கள் பார்த்து ரசித்துள்ளேன். அவரைத் தேடி வீட்டிலேயே வந்து ஆர்டர் கொடுப்பார்களாம், படம் வரைய.

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
ஓவியர் சில்பியின் அன்னப்பறவை ஓவியம் அவரது நுணுக்கத்தையும், சிறுத்தை ஓவியம் தத்ரூப அனுபவத்தையும் தருகிறது... பகிர்வுக்கு மிக்க நன்றி....
இவரது ஜாதகத்தையும் நம் வகுப்பறையில் வாத்தியார் அலசலாமே!!! தவறு இருந்தால் மன்னிக்கவும்....
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.//////

ஜாதகம்தானே. தேடிப் பிடித்துக் கொடுங்கள். பார்க்கலாம்!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
ஐயா,
சில்பி அவர்கள் வரைந்துள்ள பல தீபாவளி மலர் படங்கள் பார்த்து ரசித்துள்ளேன். அவரைத் தேடி வீட்டிலேயே வந்து ஆர்டர் கொடுப்பார்களாம், படம் வரைய./////

ஆமாம். நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். நன்றி வரதராஜன்!