மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

20.10.15

நகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன? கீழே உள்ளது படித்துப் பாருங்கள்!

நகைச்சுவை: மருத்துவமனைக்கான பன்ச் டயலாக் என்ன? கீழே உள்ளது படித்துப் பாருங்கள்!

இன்றும் நகைச்சுவைதான். பூஜாகால விடுமுறையை இப்படிக் கொண்டாடுவோம்
---------------------------------------------------
மனம் விட்டு சிரியுங்க😆
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍
------------------------------------------
: ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
----------------------------------------
நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு...."SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
----------------------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
--------------------------------------
நர்ஸ்: மூணாம் நம்பர் ரூம் பேஷண்ட், ரொம்ப நாள் இங்க இருப்பார்போல தெரியுது டாக்டர்!
டாக்டர்: எப்படி சொல்ற?
நர்ஸ்: சுவத்துல ஆணியடிச்சு அவரோட போட்டோவை மாட்டிட்டாரே..?
----------------------------------------
மனைவி: ”நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க”
கணவன்:”அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்.
---------------------------------------
ஒருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா என் கூட ஒரு வாரத்துக்கு பேச மாட்டாள்.
மற்றொருவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா கையில எது கிடைக்குதோ அத என் மேல வீசி அடிப்பா.
மூன்றாமவர்: என் மனைவிக்கு கோபம் வந்தா உடனே என்னோட சட்டைய துவைக்க ஆரம்பிச்சிடுவா.
மற்ற இருவரும்: ஆச்சரியமா இருக்கே ... ஏன் அப்படி?
மூன்றாமவர்: அந்த சட்டைய நான் போட்டுக்கிட்டு இருக்கும் போதே அத அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.
---------------------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
----------------------------------------
அன்றோரு நாள்.....
-
-ஒரு மாலை வேளை.....
-
-ரயில்வே ஸ்டேஷன் அது.......
_
_நான் டிரெயினின் உள்ளே, நீ வெளியே......
_
_நம் இருவரின் கண்களும் ஒரே நேரத்தில் சந்தித்தபோது.......
_
_உன் முகத்தில் தான் எத்தனை உற்சாகம்.......
_
_அப்போது தான்....
_
_அப்போது தான்....
_
_அந்த வார்த்தையை நீ சொன்னாய்......
_
_அய்யா...... தர்மம் போடுங்க சாமி......
---------------------------------------
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
எந்த அளவுக்கு பாக்குறாங்க?
''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
----------------------------------------
பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...
அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?
பையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.
----------------------------------------
ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
---------------------------------------
ஆசிரியர் : முரளியிடம் 4 ஆரஞ்சு இருக்கிறது. அவனது தம்பிக்கு 2 பழத்தை கொடுக்க சொல்லிட்டேன். மீதம் அவனிடம் எத்தனை பழம் இருக்கும்?
அவன் : 4.
ஆசிரியர் : எப்படி உனக்கு கணக்கே தெரியாதா?
அவன் : உங்களுக்கு முரளியை பற்றி தெரியாதா? அவன் யாருக்கும் எதுவும் தரமாட்டன்
---------------------------------------
ஆசிரியர் : அவன் பணக்கார வீட்டுப் பையனா இருக்கலாம். அதுக்காக இப்படி அடம்புடிக்கக் கூடாது....
தலைமை ஆசிரியர் : என்னதான் சொல்றான் பையன்?
ஆசிரியர் : கழித்தல் கணக்கு போடும் போது பக்கத்தில் இருக்கிற நம்பர் கிட்டஇருந்து கடன் வாங்கணும்னு சொன்ன..நான் பணக்கார வீட்டுப் பையன். ஏன் கடன் வாங்கணும்னு எதிர்கேள்வி கேக்குறான்
தலைமை ஆசிரியர் :?!?!
----------------------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
---------------------------------------
மருத்துவர்: “ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்.”
நோயாளி : “ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?”
----------------------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
---------------------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
----------------------------------------
நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டொக்டர்
டொக்டர் - அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதீங்க
---------------------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
---------------------------------------
தபால்காரர்: உங்க பார்சலை கொண்டுவர நான் ஏழு கிலோ மீட்டர் நடந்து வருகிறேன்.
: ஏன் இவ்வளவு தூரம் நடக்கறீங்க. பேசாம தபால்ல அனுப்பி இருக்கலாமே?
----------------------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
----------------------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
---------------------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என் மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
----------------------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
---------------------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப் பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
---------------------------------------
 என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
---------------------------------------
எதுக்கு மேலே பார்த்துக்கிட்டு இருக்கீங்க?"
"மதுரை பஸ் பத்து மணிக்கு மேலே வரும்னு சொன்னாங்க.. அதான்!"
---------------------------------------
கழுதைக்குப் பிடித்த ரொட்டி எது?
கிரண் : தெரியலியே?
கரண் : சுவரொட்டி - தான்.
கிரண் : ?????????
----------------------------------------
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
---------------------------------------
 அந்த கோயில் மண்டபத்தில் இரவில் யாரும் தங்குவதில்லையே ஏன்? "
அங்குள்ள கோவில் யானைகளுக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதியாம் "
------------------------------------------
மேலே உள்ளவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?
அன்புடன், 
வாத்தியார்
===================================================
இது உபரி:

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

Nagendra Bharathi said...

சிரித்து வயிறு வலிக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும்

Prasanna Venkatesh said...

என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

Super.....

siva kumar said...

வணக்கம் குருவே
அனைத்தும் நன்றாகவும் படிக்கும் போதும்,நினைத்தாலே சிரிப்பை அடக்கமுடிய வில்லை. அருமை அனைத்தும் ஐயா

kmr.krishnan said...

'கூட்டிக்கிட்டு வாங்க, தூக்கிகிட்டுபோங்க!'
:) :) :)

வேப்பிலை said...

///கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!///

இதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்
இனி

நோயை "கூட்டிகிட்டு" வாங்க
ஆரோக்கியத்தை "தூக்கிட்டு" போங்க

என்று சொன்ன (நல்ல வாசக) விளம்பரத்தை
ஏனோ நம்மவர்கள் வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள்

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
வாத்தியார் அய்யா அவர்களுக்கும் வகுப்பறை மாணவக் கண்மணிகளுக்கும் நவராத்திரி, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் உரித்தாகுக!.
அனைத்து ஜோக்குகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பிடும்படி சொல்வதென்றால் இன்றைய நடைமுறை மருத்துவமணையின் தாரகமந்திரமே “கூட்டிகிட்டு வாங்க, தூக்கிகிட்டு போங்க!”
வியாதியோடு வந்தாலும் ஆரோக்கியத்தோடு போனாலும் கூட போகும்போது ஆரோக்கியத்தோடு கடனையும் கவலையையும் தூக்கிகிட்டு போங்க!!!.
ஆட்டோவுக்கு கூட காசில்லாமல் இரண்டாவது முறையாக நடந்து போகிறார்.
கடைசியாக போட்டுள்ள படம் நிச்சயமாக வாத்தியார் அவர்கள் அன்னபூர்ணா ஹோட்டலில் காப்பி சாப்பிடும் போது எடுத்த படமாக இருக்கும். உண்மையான ஃபாதர் ஆஃப் தி இயர் இவர்தான்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

ravichandran said...

Respected Sir,

Happy morning... All are superb... Thanks for posting & sharing...

With kind regards,
Ravichandran M.

Radha Sridhar said...

''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''

Miga Arumai.
There's an American comedy sketch that's based on wordplay -
https://en.wikipedia.org/wiki/Who%27s_on_First%3F
https://www.youtube.com/watch?v=kTcRRaXV-fg

Pl. enjoy.

lrk said...

ஐயா வணக்கம்

///அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.///
//டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...///

சூப்பர் ஐயா

கண்ணன்

Gajapathi Sha said...

Ayya, vanakkam, Sirippu andavan alitha prasatham entha nagaitchui migavum arputham

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

வயறு குலுங்க சிரித்து ரசித்தோம்.. நன்றி ..

பரிவை சே.குமார் said...

ரசித்தேன் ஐயா....

MVK said...

கீழேதரப்பட்ட தமாஷ் தான் நன்றாக உள்ளது

மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????

எம் .வி.கிருஷ்ணமூர்த்தி

Subbiah Veerappan said...

////////Blogger Nagendra Bharathi said...
சிரித்து வயிறு வலிக்கிறது. டாக்டரிடம் போக வேண்டும்/////////

அதெல்லாம் வேண்டாம். அதே பதிவை ஒரு நாளைக்கு 2 வேளைகள் வீதம் 3 நாட்களுக்கு மீண்டும் படியுங்கள். சரியாகிவிடும்!

Subbiah Veerappan said...

/////Blogger Prasanna Venkatesh said...
என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
Super.....//////

நல்லது. உங்களைக் கவர்ந்ததைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger siva kumar said...
வணக்கம் குருவே
அனைத்தும் நன்றாகவும் படிக்கும் போதும்,நினைத்தாலே சிரிப்பை அடக்கமுடிய வில்லை. அருமை அனைத்தும் ஐயா///////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சிவகுமார்!!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
'கூட்டிக்கிட்டு வாங்க, தூக்கிகிட்டுபோங்க!'
:) :) :)

நல்லது,உங்களைக் கவர்ந்ததைத் தெரியப் படுத்தியமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!

Subbiah Veerappan said...////Blogger வேப்பிலை said...
///கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!///
இதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்
இனி
நோயை "கூட்டிகிட்டு" வாங்க
ஆரோக்கியத்தை "தூக்கிட்டு" போங்க
என்று சொன்ன (நல்ல வாசக) விளம்பரத்தை
ஏனோ நம்மவர்கள் வேறு மாதிரி புரிந்து கொள்கிறார்கள்////////

எப்போதுமே நீங்கள் மாற்றி யோசிப்பதுதானே வழக்கம். அதற்காக ஒரு நன்றி!

Subbiah Veerappan said...

Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்
வாத்தியார் அய்யா அவர்களுக்கும் வகுப்பறை மாணவக் கண்மணிகளுக்கும் நவராத்திரி, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள் உரித்தாகுக!.
அனைத்து ஜோக்குகளுமே சிறப்பாக உள்ளன. குறிப்பிடும்படி சொல்வதென்றால் இன்றைய நடைமுறை மருத்துவமணையின் தாரகமந்திரமே “கூட்டிகிட்டு வாங்க, தூக்கிகிட்டு போங்க!”
வியாதியோடு வந்தாலும் ஆரோக்கியத்தோடு போனாலும் கூட போகும்போது ஆரோக்கியத்தோடு கடனையும் கவலையையும் தூக்கிகிட்டு போங்க!!!.
ஆட்டோவுக்கு கூட காசில்லாமல் இரண்டாவது முறையாக நடந்து போகிறார்.
கடைசியாக போட்டுள்ள படம் நிச்சயமாக வாத்தியார் அவர்கள் அன்னபூர்ணா ஹோட்டலில் காப்பி சாப்பிடும் போது எடுத்த படமாக இருக்கும். உண்மையான ஃபாதர் ஆஃப் தி இயர் இவர்தான்.
அன்புடன்,
-பொன்னுசாமி/////////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி பொன்னுசாமி அண்ணா!.

Subbiah Veerappan said...

//////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... All are superb... Thanks for posting & sharing...
With kind regards,
Ravichandran M.
/////
நல்லது. நன்றி ரவிச்சந்திரன்!!!!

Subbiah Veerappan said...

/////Blogger Radha Sridhar said...
''டாக்டர், என் பையன் அஞ்சு ரூபாய் காயினை முழுங்கிட்டான்...''
''சீக்கிரமா போய் பெரிய டாக்டரைப் பாருங்க!''
''ஏன், நீங்க பாக்க மாட்டீங்களா..?''
''நான் ரெண்டு ரூபாய் காயின் வரைக்கும்தான் பார்ப்பேன்...''
Miga Arumai.
There's an American comedy sketch that's based on wordplay -
https://en.wikipedia.org/wiki/Who%27s_on_First%3F
https://www.youtube.com/watch?v=kTcRRaXV-fg
Pl. enjoy.//////

மேலதிகத் தகவலுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
///அடிச்சி,துவைச்சி,அலசி,பிழிஞ்சி கிளிப் மாட்டி தொங்க விட்டுடுவா.///
//டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...///
சூப்பர் ஐயா
கண்ணன்
////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கண்ணன்!!!

Subbiah Veerappan said...

//////Blogger Gajapathi Sha said...
Ayya, vanakkam, Sirippu andavan alitha prasatham entha nagaitchui migavum arputham////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
வயறு குலுங்க சிரித்து ரசித்தோம்.. நன்றி ..

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

//////Blogger பரிவை சே.குமார் said...
ரசித்தேன் ஐயா....///////

உங்களின் ரசிப்புத்தன்மை வாழ்க!

Subbiah Veerappan said...

//////Blogger பரிவை சே.குமார் said...
ரசித்தேன் ஐயா....///////

உங்களின் ரசிப்புத்தன்மை வாழ்க!

Subbiah Veerappan said...

///////Blogger MVK said...
கீழேதரப்பட்ட தமாஷ் தான் நன்றாக உள்ளது
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
எம் .வி.கிருஷ்ணமூர்த்தி/////////

நல்லது. நன்றி நண்பரே!

rayan s said...

ஒவ்வொருவரும் என்ன மாதிரி ஜோக் விரும்பறாங்க என்பதை வைத்து அவர்களை பற்றி எதாவது கணிக்க முடியுமா வாத்தியார் அவர்களே !!!

nandha kumar said...

அனைத்தும் நன்று