மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.10.15

அவ்வப்போது எதை அணிய வேண்டும்?அவ்வப்போது எதை அணிய வேண்டும்?

அவ்வப்போது எதை அணிய வேண்டும்?  வான்ஹுசைன் சட்டை, கே.ஜி டெனிம் பேன்ட். 4 சவரன் தங்கத்தில் கைக்கு ஒரு பிரேஸ்லெட், எட்டாயிரம் ரூபாயில் கைக்கு ஒரு வெளிநாட்டுக் கடிகாரம், என்று உங்களுக்கென்று தனியாக ஒரு பட்டியல் வைத்திருப்பீர்கள். அதையெல்லாம் மறந்துவிட்டு, திருஞானசம்பந்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் வாருங்கள்!

நெற்றியில் அணிந்து கொள்ளும் திறுநீற்றைப் பற்றிச் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

" திருநீறு " இந்த உயிருக்கு எப்படிப் பயன்படுகிறது என்பது பற்றியும் சொல்லியிருக்கிறார்.

சைவத் திருவேடங்களில் திருநீறு உருத்திராக்கம் சடாமுடி ஆகியன இம்மூன்றும்  மிகவும் உன்னதமாக போற்றப்படுகின்றன

 இறைவனே திருநீற்றினை மேனி ( உடல் முழுவதும்)  முழுவதும் பூசி விரும்பி அணிந்துள்ள குறிப்புகள் புராணங்களிலும் உபநிடதங்களிலும் ஆகமங்களிலும் திருமுறைகளிலும் நிறைந்துள்ளன

 திருநீற்றின் ஆற்றலால் திருஞானசம்பந்தர் சமணர்களை வாதில்  வென்றது வரலாற்றுச் சான்றக உள்ளது

 அடியார் பெருமக்கள் திருநீற்றினை இறைவன் அருளிய பெரும் செல்வமாக ( சொத்தாக)  போற்றி அணிய வேண்டும்

 கையிருப்பில் திருநீற்றுப்பை வைத்துக்கொண்டு அவ்வப்போது திருவைந்தெழுத்து ( சிவாயநம)  என  நினைந்து அணிய வேண்டும்

 திருநீற்றின் மகிமை முழுவதும் அறியாததாலேயே அடியார் பெருமக்கள் கூட திருநீற்றினை நிறைய அணியா நிலை உள்ளது

"திருஞானசம்பந்தர் வாக்கில்”  விபூதியின் பெருமை பற்றிச் சொன்னதை விரிவாகப் பார்ப்போம்

1: மந்திரம் ஆவது நீறு
2: வானவர்கள் அணிவது நீறு
3: அழகு தருவது நீறு
4: வணங்கப்படுவது நீறு
5: வேத சிவ  ஆகமங்களில் புகழ்ந்து கூறப்படுவது நீறு
6: கொடிய துயர்களை ( துன்பங்களை) நீக்க கூடியது நீறு
7: சிவஞானம் தருவது நீறு
8: அறியாமையை போக்குவது நீறு
9: ஓதத் தக்கது நீறு
10: உண்மையாய் நிலைபெற்றிருப்பது நீறு
11: முத்தி தருவது நீறு
12: முனிவர் அணிவது நீறு
13: சத்தியமாவது நீறு
14: தக்கோர் புகழ்வது நீறு
15: இறைவனிடம் பக்தியை ஏற்படுத்துவது நீறு
16: போற்றிப் பரவ இனியது நீறு
17: எண் வகைச் ( அட்டமா சித்திகளை)  சித்திகளை அருளுவது நீறு
18: காண இனியது நீறு
19: கவர்ச்சியை ( தேஜஸ் - ஒளியை)  கொடுப்பது நீறு
20: போற்றி அணிந்து கொள்வோருக்கு பெருமைகள் கொடுப்பது நீறு
21: கொடிய மரணத்தை தவிர்ப்பது நீறு
22: அறிவை  ( ஞானத்தை) தருவது நீறு
23: உயர்வை ( மேலான நிலையை)  அளிப்பது நீறு
24: பூசிக் கொள்ள இனியது நீறு
25: புண்ணியம் தருவது நீறு
26: அதன் ( திருநீற்றின்)  பெருமை பேச இனியது நீறு
27: பெருந்தவப் புரிவோருக்கு உலகியல் ஆசை கெடுப்பது நீறு
28: முத்தியாகிய ( திருவடிப்பேறு, முக்திப்பேறு)  நிலையான பேரின்பம் நல்குவது நீறு
29: உலகோரால் ( உலகியல் வாழ்க்கை வாழும்)  புகழப்படுவது நீறு
30: செல்வங்கள் ( நிலையான செல்வம்)  ஆவது நீறு
31 : உலகியல் துன்பம் நீக்குவது நீறு
32: மன வருத்தங்களை  தணிப்பது நீறு
33: வானுலகம் அளிப்பது நீறு
34: பொருத்தி ( உடல் முழுவதும்)  அமைவது நீறு
35: புண்ணியர்கள் பூசுவது  நீறு
36: முப்புரங்களை அழித்தது நீறு
37: இம்மைக்கும் மறுமைக்கும் துணையாய் இருப்பது நீறு
38: அதன் ( திருநீற்றின் தன்மைகளை நூலில் பார்த்து உணர்வது)  பெருமைகளை பயிலப்படுவது நீறு
39: பாக்கியமாவது நீறு
40: அறியாமையால் மூழ்கும் துயிலை தடுப்பது நீறு
41: மும்மலங்களை ( ஆணவம்,கன்மம்,மாயை)  அகற்றி சுத்தம் செய்வது நீறு
42: சிவ பக்தனான இராவணன் விரும்பி  அணிவது நீறு
43: அதன் ( திருநீற்றின்)  பெருமைகளை எண்ணி இன்புறத் தகுவது நீறு
44: பாரசக்தி ( பார்வதி அம்மை அம்சம்)  வடிவமானது நீறு
45: எல்லா பாவங்களையும் ( பஞ்ச மகா பாவங்கள்)  நீக்குவது நீறு
46: தராவணமாவது ( அசுரர்கள் விரும்பி அணியும்)  (தரா -சங்கு) நீறு
47:தத்துவங்களாவது ( 36 தத்துவங்கள் மற்றும் 60 தாத்வீகங்கள்)  நீறு
48: திருமாலும் நான்முகனும் அறியாதது நீறு
49: மேலுறையும் ( கவசமாக)  தேவர்கள் காப்பாக மேல் அணிவது நீறு
50: பிறவிப் பிணி ( அறியாமை என்ற இருள்)  அடையும் உடலிடர் தீர்த்துப் பிறவி அறுப்பது நீறு
51 : புத்தரும் சமணரும் காண அவர்கள் கண்களை திகைக்கச்செய்வது  நீறு
52: அதை  திருவைந்தெழுத்தை ( சிவாயநம) கருதி  தியானிக்க இனியது  நீறு
53: எண் ( எட்டு திசைகளிலும்)  திசைகளிலும் சிவமே பரம்பொருள் என வாழும் மெய்ஞானிகள் ஏற்றிப் போற்றுவது நீறு
54: அண்டமெல்லாம் வாழும் சிவனடியார்கள் பணிந்து போற்றுவது  நீறு
55: பாண்டியனின் தீப்பிணியை உலகோர் முன் திருநீற்றின் பெருமைகளை பாட அவன் பிணி தீர்த்தது நீறு

இவ்வாறு திருநீற்றின் பெருமைகளை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ஆகவே திருநீறு நமக்கெல்லாம் கவசம் போல் உடலில் உள்ள உயிரை ஈடேற்றும் ஒரு சிறந்த மருந்தாகும்

இந்தப் பிறவி என்னும் நோயை தீர்க்க வல்லமை வாய்ந்த மாமருந்தாகும் திருநீறு  எனவே சிவனடியார்கள் எப்போதும் திருநீற்றை பூசிக்கொண்டே இருக்க வேண்டும்

திருச்சிற்றம்பலம்
--------------------------------------------------
திருஞான சம்பந்தர் அருளிய மூலப் பாடல் உங்களுக்காகக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த திருஆலவாய் தேவாரத் திருப்பதிகம்

(இரண்டாம் திருமுறை 66வது திருப்பதிகம்)
2.66 திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே. 2.66.1

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.2

முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.3

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.4

பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே. 2.66.5

அருத்தம தாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே. 2.66.6

எயிலது வட்டது நீறு விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தாலவா யான் திருநீறே. 2.66.7

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆலவா யான்திரு நீறே. 2.66.8

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மாலவா யான்திரு நீறே. 2.66.9

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும் ஆலவா யான்திரு நீறே. 2.66.10

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே. 2.66.11

       - திருச்சிற்றம்பலம் -
===========================================================
இன்றைய பக்தி மலர் எப்படி உள்ளது?
ஒரு வரி சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

28 comments:

ssmani said...

Arumaiaana pathigam. Ellorum eppothum aaniya veendum.

kmr.krishnan said...

இளைய தலைமுறைக்கு நல்ல அறிமுகம்.

திருநீற்றை நம் முன் வைத்துக்கொண்டு அதனைத் தொட்டுக் கொண்டு
திருநீற்றுப் பதிகத்தை 11 முறை பக்தியுடன் வாசித்து அத் திருநீற்றை அளித்தால் எல்லா நோய்களும் தீரும் என்பது பெரியவர்கள் அநுபவத்தில் கண்ட செய்தி.
வெளியிட்ட ஐயாவுக்கு நன்றிகள் பல.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்

அருமை அருமை...திருஞான சம்பந்த பிரபு விபூதி பதிகத்தை பற்றி பதிவு எழுதி .வகுப்பறையே சிவமயமாக ஆக்கி விட்டீர்கள் ...
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக.உலகமெலாம் ..!!

siva kumar said...

உள்ளேன் ஐயா
இந்த வாரம் பக்தி மலர் வரவில்லை என்று என்னிய எனக்கு திருநீறு தந்து குறையை போக்கிநீர் ஐயா. மனம் கவர்ந்த நன்றி

siva kumar said...

மன்னிக்க வேண்டும் ஐயா
இன்று புதிர் பகுதி அள்ளவா. அள்ளது எப்போ வரும் புதிர்காக காத்திருப்பேன் ஐயா

siva kumar said...

மேலும் மன்னிக்கவும்
புதிய வகுப்பறை வேளைகள் முடிந்தத ஐயா. எப்போது ஆரம்பம். எவ்வாறு தொடர்பு கொள்வது ஆவளாக காத்திருக்கிறேன் ஐயா

selvam velusamy said...

வணக்கம் குரு,

இன்றைய பக்தி மலர் மிகவும் பரவசமாக இருக்கிறது. உலக நாயகியிடமே ஞான பால் அருந்தியவர் அல்லவா அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்...

நன்றி,
செல்வம்

lrk said...

ஐயா வணக்கம்
வெள்ளிக்கிழமை அன்று திருநீறு பற்றி அறிந்தது நன்று
நன்றி ஐயா
கண்ணன்

SELVARAJ said...

விளக்கத்திற்கு பிறகு பாடலை தந்ததால் எளிதில் பாடலை விளங்கி கொள்ள முடிந்தது. நன்றிகள்.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
"FACTS OF LIFE" வாசகம் படித்ததுமே புரிந்தது, அய்யா பக்தி மார்க்கத்திற்க்கு இட்டுச் செல்கிறார் என்பது. சிறப்பான பதிவு.திருநீற்றின் மகிமையை பலரும் உணர்ந்து கொள்ளும் வகையில் தெளிவாக பதியப் பட்டுள்ளது. மிக மிக நன்றிகள்.
தற்காலத்தில் திருநீறு பயன்படுத்தும்போது நெற்றி புண்ணாகி விடுகின்றது. இது கலிகாலம் அல்லவா! திருஞானசம்பந்தர் குறிப்பிட்டது உண்மையான நீறு, இப்போது கலப்படமாகவே கிடைக்கின்றது. திருநீறு தயாரிக்கவும் பசுவின் சாணமே உபயோகிகப்படுகின்றது.
இன்று திருநீறு பூசியவர்களைக் கண்டாலே பயமாக உள்ளது.
இன்றைய பதிவிற்க்கு விடையும் தாங்களே "FACTS OF LIFE" மூலம் தந்துள்ளீர்கள். மனதை காலியாக வைத்திரு-எந்த வடிவமோ, தோற்றமோ,சலனமோ இல்லாமல் வைத்திரு-தண்ணீரைப் போலவே!. ஆயினும் அய்யா தண்ணீரும் கூட தான் இருக்கும் இடத்தின், பொருளின் வடிவமெடுத்து விடுகின்றதே?.
மஹாபாரததில், சகாதேவனின் பக்தியை சோதிக்க எம்பெருமான் கிருஷ்ணர் தன் உண்மையான உருவத்தை கண்டுபிடிக்க கூறியபோது சகாதேவன் தன் மன உறுதியான பக்தியினால்-அதிகமான அளவில் நிறைந்திருந்த கிருஷ்ணர்களில் உண்மையான கிருஷ்ணரை தன் மனதில் கட்டிவிட்டானாம்.பகவான் நெகிழ்ந்து விட்டாராம்.
இறைவனை சரணடைய அடையாளம் தேவையா அய்யா?
அன்புடன்,
-பொன்னுசாமி.
குறிப்பு:
வாட் அபொவுட் புதிர் ப்ளீஸ்..............!

kittuswamy palaniappan said...

Ayya Arumayana thiruneetrin vilakkam .silanerangalil pattiyal idumpoluthuthan mulumai purikirathu anbudan kittuswamy

kamakshi said...

மிகவும் அழகான ஆழமான கருத்துடைய பாடல் தந்து திருநீற்றின் பெருமையை உணர்த்தியமைக்கு என் உளமார்ந்த நன்றிகள் ஐயா!!!

திருநீறு என்று சொன்னதும் எனக்கு முதலில் நினைவில் வருவது கந்த பெருமான் திருநீறு புகழ் உணர்த்தும் பாடல் :
"
கந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்!!
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்!! "

R VASSUDEVAN said...

it is very good and also inspiring. pray that you come out like this on Vaishnavism
also.it will be a great service to the present generation.
R Vassudevan

Subbiah Veerappan said...

/////Blogger ssmani said...
Arumaiaana pathigam. Ellorum eppothum aaniya veendum.///////

ஆமாம். நீறில்லாத நெற்றி பாழ்! வட கர்நாடகாவில் லிங்காயத்தார் இன மக்களைப் பார்த்திருக்கிறேன். வயது வித்தியாசமின்றி அத்தனை பெண்களும் நெற்றியில் பட்டையாக விபூதி அணிந்திருக்கிறார்கள்

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
இளைய தலைமுறைக்கு நல்ல அறிமுகம்.
திருநீற்றை நம் முன் வைத்துக்கொண்டு அதனைத் தொட்டுக் கொண்டு
திருநீற்றுப் பதிகத்தை 11 முறை பக்தியுடன் வாசித்து அத் திருநீற்றை அளித்தால் எல்லா நோய்களும் தீரும் என்பது பெரியவர்கள் அநுபவத்தில் கண்ட செய்தி.வெளியிட்ட ஐயாவுக்கு நன்றிகள் பல./////

உங்களின் அனுபவத்தைச் சொன்னமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
அருமை அருமை...திருஞான சம்பந்த பிரபு விபூதி பதிகத்தை பற்றி பதிவு எழுதி .வகுப்பறையே சிவமயமாக ஆக்கி விட்டீர்கள் ...
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக.உலகமெலாம் ..!!/////

நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா
இந்த வாரம் பக்தி மலர் வரவில்லை என்று எண்ணிய எனக்கு திருநீறு தந்து குறையை போக்கினீர் ஐயா. மனம் கவர்ந்த நன்றி/////

நல்லது. நன்றி சிவகுமார்.

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
மன்னிக்க வேண்டும் ஐயா
இன்று புதிர் பகுதி அல்லவா? அல்லது எப்போது வரும்? புதிருக்காகக் காத்திருப்பேன் ஐயா/////

புதிர் அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதை அறிவேன். என்னிடம் உள்ள ஜாதகங்களைத் தொடர்ந்து பதிவில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புதிய வகுப்பறையில் (closed classroom) புதிர் பாடம் வேறு வடிவில் தொடரும். உங்கள் விருப்பமும் நிறைவேறும் சிவகுமார். புதிய வகுப்பறையின் பெயர் தெரியுமா? காதைக் கொண்டு வாருங்கள் சொல்கிறேன்: stars2015

Subbiah Veerappan said...

gger siva kumar said...
மேலும் மன்னிக்கவும்
புதிய வகுப்பறை வேலைகள் முடிந்ததா ஐயா. எப்போது ஆரம்பம். எவ்வாறு தொடர்பு கொள்வது ஆவலாகக் காத்திருக்கிறேன் ஐயா//////

புதிய வகுப்பறை கட்டடம் முடிந்தது. உள் அரங்க அலங்கார வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
11.11.2015 அன்று புதிய வகுப்பறை எனது சொந்த இணைய தளத்தில் (My own web site) துவங்க உள்ளது.
அது கட்டண வகுப்பறை. குறைந்த அளவே கட்டணம். குறைந்த அளவு எண்ணிக்கையிலேயே உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.
வகுப்பறையின் காலம் ஒரு ஆண்டு. வாரம் 3 பாடங்கள். மூன்று பாடங்களுமே ஜோதிடம் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.
வகுப்பறையின் பெயர்: stars2015
வகுப்பில் சேர விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: spvrsubbiah@gmail.com
இதற்கு (இந்த மின்னஞ்சல் முகவரிக்கு) மட்டுமே எழுத வேண்டும்.

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இன்றைய பக்தி மலர் மிகவும் பரவசமாக இருக்கிறது. உலக நாயகியிடமே ஞான பால் அருந்தியவர் அல்லவா அவர் சொன்னால் சரியாகதான் இருக்கும்...
நன்றி,
செல்வம்////

ஆமாம். அந்தப் பேறு பெற்றவர் அவர் ஒருவர்தானே!

Subbiah Veerappan said...

//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
வெள்ளிக்கிழமை அன்று திருநீறு பற்றி அறிந்தது நன்று
நன்றி ஐயா
கண்ணன்//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger SELVARAJ said...
விளக்கத்திற்கு பிறகு பாடலை தந்ததால் எளிதில் பாடலை விளங்கி கொள்ள முடிந்தது. நன்றிகள்.////

நல்லது நன்றி செல்வராஜ்!

Subbiah Veerappan said...

///////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
"FACTS OF LIFE" வாசகம் படித்ததுமே புரிந்தது, அய்யா பக்தி மார்க்கத்திற்கு இட்டுச் செல்கிறார் என்பது. சிறப்பான பதிவு.திருநீற்றின் மகிமையை பலரும் உணர்ந்து கொள்ளும் வகையில் தெளிவாக பதியப் பட்டுள்ளது. மிக மிக நன்றிகள்.
தற்காலத்தில் திருநீறு பயன்படுத்தும்போது நெற்றி புண்ணாகி விடுகின்றது. இது கலிகாலம் அல்லவா! திருஞானசம்பந்தர் குறிப்பிட்டது உண்மையான நீறு, இப்போது கலப்படமாகவே கிடைக்கின்றது. திருநீறு தயாரிக்கவும் பசுவின் சாணமே உபயோகிகப்படுகின்றது.
இன்று திருநீறு பூசியவர்களைக் கண்டாலே பயமாக உள்ளது.
இன்றைய பதிவிற்க்கு விடையும் தாங்களே "FACTS OF LIFE" மூலம் தந்துள்ளீர்கள். மனதை காலியாக வைத்திரு-எந்த வடிவமோ, தோற்றமோ,சலனமோ இல்லாமல் வைத்திரு-தண்ணீரைப் போலவே!. ஆயினும் அய்யா தண்ணீரும் கூட தான் இருக்கும் இடத்தின், பொருளின் வடிவமெடுத்து விடுகின்றதே?.
மஹாபாரததில், சகாதேவனின் பக்தியை சோதிக்க எம்பெருமான் கிருஷ்ணர் தன் உண்மையான உருவத்தை கண்டுபிடிக்க கூறியபோது சகாதேவன் தன் மன உறுதியான பக்தியினால்-அதிகமான அளவில் நிறைந்திருந்த கிருஷ்ணர்களில் உண்மையான கிருஷ்ணரை தன் மனதில் கட்டிவிட்டானாம்.பகவான் நெகிழ்ந்து விட்டாராம்.
இறைவனை சரணடைய அடையாளம் தேவையா அய்யா?
அன்புடன்,
-பொன்னுசாமி.
குறிப்பு:
வாட் அபொவுட் புதிர் ப்ளீஸ்..............!//////

புதிர் அனைவராலும் விரும்பப்படுகிறது என்பதை அறிவேன். என்னிடம் உள்ள ஜாதகங்களைத் தொடர்ந்து பதிவில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புதிய வகுப்பறையில் (closed classroom) புதிர் பாடம் வேறு வடிவில் தொடரும். உங்கள் விருப்பமும் நிறைவேறும் பொன்னுசாமி அண்ணா! புதிய வகுப்பறையின் பெயர் தெரியுமா? காதைக் கொண்டு வாருங்கள் சொல்கிறேன்: stars2015

Subbiah Veerappan said...

/////Blogger kittuswamy palaniappan said...
Ayya Arumayana thiruneetrin vilakkam .silanerangalil pattiyal idumpoluthuthan mulumai purikirathu anbudan kittuswamy////

நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kamakshi said...
மிகவும் அழகான ஆழமான கருத்துடைய பாடல் தந்து திருநீற்றின் பெருமையை உணர்த்தியமைக்கு என் உளமார்ந்த நன்றிகள் ஐயா!!!
திருநீறு என்று சொன்னதும் எனக்கு முதலில் நினைவில் வருவது கந்த பெருமான் திருநீறு புகழ் உணர்த்தும் பாடல் :"
கந்தன் திருநீரணிந்தால் கண்ட பிணி ஓடி விடும்!!
குந்தகங்கள் மாறி இன்பம் குடும்பத்தை நாடி வரும்!! "//////

உண்மைதான். நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger R VASSUDEVAN said...
it is very good and also inspiring. pray that you come out like this on Vaishnavism
also.it will be a great service to the present generation.
R Vassudevan/////

உங்களின் விருப்பம் நாளையே நிறைவேற்றப்படும். ஆமாம். நாளை திருமண்ணின் சிறப்புப் பற்றிய கட்டுரை!

Rajam Anand said...

அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கஙகள்
திருநீற்றின் மகிமையை point point ஆக list பண்ணயிருக்கின்றீர்கள். It's very easy to understand and appreciate.
ௐம் நமச்சிவாய.
மிக்க நன்றி
ராஜம் ஆனந்த்

Subbiah Veerappan said...

/////Blogger Rajam Anand said...
அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கஙகள்
திருநீற்றின் மகிமையை point point ஆக list பண்ணயிருக்கின்றீர்கள். It's very easy to understand and appreciate.
ௐம் நமச்சிவாய.
மிக்க நன்றி
ராஜம் ஆனந்த்/////

உங்களின் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!