Quiz: புதிர்: நமது சட்டங்கள் எங்கே செல்லாது?
Quiz.99
16.10.2015
நமது சட்டங்கள் எங்கே செல்லாது?
நமது சட்டங்கள் கிரகங்களிடம் செல்லாது!
சிலருக்கு இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி அப்படியே தேமே என்று இருப்பார்கள். உடல் தோற்றத்தில் ஆரோக்கியத்தில்
அப்படியே இருந்தால் மார்க்கண்டேயன் என்று பெருமையாகச்
சொல்லலாம். வேலையில் அப்படியே இருந்தால், எப்படிப் பெருமையாகச் சொல்ல முடியும்? அல்லது மகிழ்ச்சி கொள்ள முடியும்?
ஒருவர் அவரது 24 வது வயதில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது
ஆண்டு காலம் அவருக்கு அவர் பார்த்த வேலையில் உயர்வு
(promotion) எதுவும் கிடைக்க வில்லை. அவர் பார்த்தது அரசாங்க
வேலை. சட்டப் படியான உயர்வு கூட அவருக்குக் கிடைக்க வில்லை. கிரகங்களின் முன்னால் நமது சட்டங்கள் என்ன செய்ய முடியும்?
அதற்கு என்ன காரணம்? அவருக்கு எப்போது உயர்வு கிடைத்தது ?என்பதை ஜாதக ரீதியாக அலசிப் பதிலை எழுதுங்கள்.
ஜாதகம் கீழே உள்ளது.
பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்!
=============================================================
அடுத்த புதிர் பாடம் 100 வது பாடம் ஆகும். இந்தப் பகுதியைத் துவங்கும்
போது 100 பாடங்களையாவது எழுத வேண்டும் என்று முடிவு
செய்திருந்தேன். இறையருளால் அதன்படியே நடந்துள்ளது,
100 பாடங்கள் என்பது 100 வாரங்கள் இரண்டு வருட காலம் என்பதை
மனதில் வையுங்கள். அடுத்த வாரத்துடன் இந்தப் பகுதி நிறைவு
பெறுகிறது.
அடுத்து என்ன செய்யலாம் என்பதை யோசனை செய்து எழுதுங்கள்.
அதுபோல வரும் தீபாவளி நாள் முதல் (10th November'2015) புதிய வகுப்பைத் துவங்கி (closed classroom) மீண்டும் ஜோதிடப் பாடங்களை
(மேல்நிலைப் பாடங்களை) விறு விறுப்பாக எழுதலாம் என்று உள்ளேன். இங்கே வகுப்பறையில் தினமும் 5, 000 பேர்கள் வந்து செல்கிறார்கள்.
அத்தனை பேர்களையும் எனது சொந்த இணைய தளம் (My own web site) தாங்காது. அதற்கு ஒரு குறிப்பிட்ட குறைவான எண்ணிக்கையிலேயே உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்று உள்ளேன். எந்த அடிப்படையில்
அந்த வகுப்பிற்கு உறுப்பினர்களைச் சேர்க்கலாம் என்பதையும்
எழுதுங்கள்.
உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.
email:
classroom2007@gmail.com
or
spvrsubbiah@gmail.com
அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஜாதகர் 30 ஜனவரி 1956ல் பிறந்தவர்.பிறந்த நேரம் மாலை 5 மணி 12 நிமிடங்கள்.பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteஜாதகரின் பத்தாம் இடத்துக்காரரான செவ்வாய் ஐந்தில் சனி ராகு என்ற பகைவர்களால் பாதிக்கப்பட்டார்.அவரே இந்த கடக லக்கினக்காரருக்கு யோககாரகன்.
கர்மகாரகன் சனைச்சரன் பகை வீட்டில். சுய வர்கபரல் 2 மட்டுமே. செவ்வாயுக்கு 4 மட்டுமே. பத்தாம் வீட்டுக்கு 24 பரல் மட்டுமே.
24 வயதில் செவ்வாய் தசா சூரிய புக்தியில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது. தொடர்ந்து வந்த ராகு தசாவில் 18 ஆண்டுகள் செக்குமாடு போல் ஒரே வேலையில் முன்னேற்றம் இல்லாமல் அவதிப்பட்டார்.
கிட்டத்தட்ட வேலையில் என்னை போல 'அதிர்ஷ்டம்' இவருக்கு.
கடக இலக்கினம். 10ம் வீட்டிற்கு பாக்கியாதிபதி குரு பார்வை உள்ளது. ஆனால் குரு தசை இவருக்கு 43 வயதில் தான் வரும். 25 வயதிலிருந்து இவருக்கு இராகு தசை தொடங்குகிறது. 10ம் வீட்டு செவ்வாய் தனது மற்றொரு வீடான விருச்சிகத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும், 10ம் வீட்டிற்கு எட்டில். உடன் தொழில்காரகர் சனி மற்றும் இராகு. ஆக இராகு தசையில் இவருக்கு பதவியில் முன்னேற்றம் இல்லை. அதன் பிறகு வரும் குரு தசையில் இவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
ReplyDeleteBased on people who bought your book that shows interest and respect in your teachings;
ReplyDeleteஐயா
ReplyDeleteநூறு புதிர்கள் கொடுத்து எங்களை சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி. தொடர் முடிகிறது என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் தொலைக்காட்சி தொடர்கள் போல் இல்லாமல் எதற்கும் ஒரு வரையறை வேண்டும். அந்த வகையில் நூறு என்பது ஒரு முழுமை அடைந்துள்ளது.
புதிய வகுப்புக்கான பாடத்திட்டங்கள் என்ன? காலவரையறை சுமாராக எவ்வளவு? கட்டணம் எவ்வளவு? அனைத்தும் முன்னரே குறிப்பிடலாம். முழுக்க ஜோதிடம் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்பது எனது ஆவல். ஏனென்றால் பார்க்கும் விசயங்களில் எல்லாம் ஜோதிடம் ஒழிந்திருந்தாலும் மேல்நிலை வகுப்பு என்பதால் கூடுதல் கவனம் வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.
எம்.திருமால்
பவளத்தானூர்
குருவே நமஹா:
ReplyDelete10அதிபதி செவ்வாய் 10க்கு 8ல் சனி/ராஹூ கூட்டில். செவ்வாய் சுய வீட்டில் எனவே செவ்வாய் திசை கடைசியில் வேலை கிடைத்தது. அடுத்து ராஹூ திசை 18 வருடம் உயர்வில்லை(10க்கு8ல்). குரு திசையில் சனி புக்தியில் (சனி 10க்கு 10ம் அதிபதி அதன் வீட்டை பார்பதால்)உயர்வு கிடைத்தது. 10க்கு பாக்கியாதிபதி குரு 10ஆம் இடத்தை தன் 9ஆம் பார்வையில் பார்பதால் கிடைத்தது.
வணக்கம்.
Dear sir.
ReplyDeletetthe given horoscope 10th lord mars is with saturn and rahu.. so that he did not get promotion.
C. Jeevanantham
வணக்கம் வாத்தியாரே!
ReplyDeleteQuiz 99க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 30 Jan 1956 17:10 மணி
கடக லக்கினம். சிம்மராசி. 24வயதிற்கு மேல்வந்த ராகு திசை(18 வருடம்) சனி மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து ஜாதகருக்கு வேலை முன்னேற்றத்தை தடை செய்தனர்.
அடுத்து வந்த குரு திசையில் ஜாதகருக்கு பணி உயர்வு கிடைத்திருக்கும்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Answer to Quiz.99:
ReplyDelete10 ஆம் அதிபதி செவ்வாய் ராகு மற்றும் சனியோடு சேர்ந்து அவருடைய ராகு திசையில் பதவி உயர்வு இல்லாமல் பணி புரிந்து இருப்பார்.
குருவின் 9 ஆம் பார்வை 10 ஆம் இடத்தின் மேல் இருப்பதால் அவருடைய
குரு திசையில் பதவி உயர்வு பெற்று இருப்பார்.
மு.சாந்தி.
Dear Sir,
ReplyDeleteVery happy for your decision to start your closed class again.
Please join me in that, whatever way you decide to join people in that plzz...
Requesting this on the basis of your sincere studentship !!
Regards,
Priyavardini
Singapore.
அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்.
ReplyDeleteஇந்த வகுப்பறையை தொடர்ந்து இப்போது போல நடத்தவும், அது பல புது முகங்களை வரவேற்கும். மேலும் என்னைப்போல கத்துகுட்டிகளுக்கு உதவும். அவ்வப்போது புதிய பாப்கார்ன் பொட்டலம் கொடுப்பது அவசியம்.
இது பொது இடம், ஆகவே மற்றவை emailல் அனுப்பியுள்ளேன்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
ஐயா வணக்கம்
ReplyDelete99 புதிர்கான பதில்
10 ஆம் அதிபதி அந்த இடத்துக்கு 8ல் உள்ளார். மேலும் அவர்
தீய கிரகங்கள் கூட்டணி யில் உள்ளார்
கர்மகாரகன் தீய கிரகங்கள் சேர்க்கை
சந்திர ராசிக்கு 10 ல் கேது.
நன்றி
கண்ணன்.
hariom sir.new student to ur classroom,but sincere student.plz add me in ur new class.i read ur all articles. but some of them not available.my id andalr@gmail.com.
ReplyDeleteVanakkam Iyya,
ReplyDeleteKataka lagna jaathagar.
Lagnathipathi 2il + Bagyaathipathiyudan (9aam athipathi - Guru) kootani.
Velaiku - 10aam idam paarka pada vendum, Promotions - 5aam idam pugazh,udhyogathil menmai, puthira baagyam, arivu aagiyavatrai kurikum.
Kataka lagnathirku - (yogathipathi + 5&10 ku athipathi) - Sevvai
Intha jaathagathil - 5aam idathil ullar. thirikona amaipu petrullar.
10aam athipathi 5il (Andha veetirku 8il) + Lagnathin 8aam athipathi (sani) + ucha Ragu vudan kootani
Sevai - sani+ragu kootaniyinal balam izhandhu ullar, ivai anaithum 5aam idathil ullathu + avaruku 24 vayadhil aaramithathu raagu dasai(18 yrs)
ithanaal avaruku velayil menmai(Promotions) kidaika thaamatham aanathu.
Jathagathil guru vin vishesha paarvai (9aam paarvai) - 10aam idathirku ullathu
Pinnar vantha guru dasai chandran/sevvai buthiyil avaruku velayil menmai kidaithathu.
nandri,
Bala
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteபுதிர் எண் 99.
1,,கடக லக்னம் .லக்னாதிபதி சிம்மத்தில் உடன் குரு
2..குரு 9ம் பார்வையாக 10 ம் வீட்டை பார்ப்பது வேலை கிடைத்தது..!!
3..10ம் வீட்டதிபதி செவ்வாய் 5ல் சனி ராஹுவுடன் கூட்டணி சரியில்லை ..10 படி ஏறினால்11. படி சறுக்கும்
4..லாபஸ்தானத்தில் 11ல் கேது .மூவர் பார்வை ...லாபமே இல்லது போனது .அதாவது உயர்வு இல்லை..
அலசல் சரிவர பிடிபட வில்லை மன்னிக்கவும்.
வேண்டுகோள் ..
100 வது புதிர் மிக சிறப்பான ஜாதகம் கொடுத்து அலசுங்கள் ..
தனிப்பட்ட வலைத்தளம் ..
தற்போது புதிர் போட்டியில் பங்கு பெரும் மாணவர்களை சேர்க்க வேண்டும் .மேலும் வலை தள கொள்ளளவு பொறுத்து .மாணவர்களிடம் சிறிது கட்டணம் வசூல் செய்து சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் ..
வகுப்பில் மூத்த மாணவர்கள் திரு kmrk +திரு வேப்பிலை சாமி .அவர்களின் கருத்து ..
நன்றி .
பிறந்த தேதி 30.01.1956 ----- நேரம் 5.12 பி ப ----- இடம் சென்னை
ReplyDeleteபத்தாம் இடம் குரு பார்வை // ஏழாம் இடத்தில் சூரியன் புதன் கூட்டு // புத அதித்ய யோகம் // எனவே அவர் பார்த்தது அரசாங்க வேலை. லக்னாதிபதி திசையில் பணி கிடைத்தது.
காரகன் சனீஸ்வரன் 2 பரல்களுடன் // செவ்வாய் ராகு கூட்டு // லக்னத்திற்கு ஐந்தாம் இடம் என்றாலும் 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவக அதிபதி செவ்வாய் 4 பரல்களுடன் // சனீஸ்வரன் ராகு கூட்டு // 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவகம் 24 பரல்களுடன்
அவரது 24 வது வயதில் லக்னாதிபதி திசையில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசையில் அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும் கிடைக்க வில்லை. இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி செவ்வாய் மற்றும் ராகு திசை முடியும் வரை அப்படியே இருப்பார். அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசை முடிந்த பிறகு 1998 க்கு பிறகு குரு திசையில் உயர்வு கிடைத்தது.
வணக்கம் குரு,
ReplyDeleteஇந்த ஜாதகருக்கு 24 வயதுக்குமேல் அட்டமாதிபதி சனியுடன் கூட்டு சேர்ந்த ராகுவின் தசை அவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அதற்க்கு பிறகு வந்த பாக்கியாதிபதி குருவின் தசையில் முன்னேற்றம் அடைந்திருப்பார். காரணம் தன ஸ்தானத்தில் அமர்ந்து 10மிடத்தை தன் பார்வைளும் வைத்து குரு தசை நடத்தினார்.
நன்றி,
செல்வம்
வகுப்பறையிலும் உங்கள் பதிவுகள் தொடரட்டும். அவ்வப் போது சில ஜோதிடத் தகவல்களும் வகுப்பறையில் எழுதுங்கள்.
ReplyDeleteபுதிரை புதுமாதிரியாக மாற்றலாம்.வாசகர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறி அதற்கான ஜோதிடக் காரணங்களைக் கேட்கலாம். ஜாதகரின் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டு வரலாம். ஜாதகக் கட்டங்களையெல்லாம் ஐயா பதிவிட வேண்டாம். பிறந்ததேதி, நேரம், பிறந்த ஊர் ஆகியவற்றை மட்டும் கொடுத்து அவர் அவர்கள் ஜோதிட மென்பொருளில் கணித்து காரணங்களைக் கூறப் பணிக்கலாம்.இதனால் பலரும் வகுப்பறைக்கு வர வாய்ப்பு உண்டு.
கலாக்ஸி போலவே புதிய வகுப்பையும் கட்டண வகுப்பாக்கலாம்.பூட்டுப் போட்டு வைத்து, கடவுச்சொல்லை அளித்துத் திறக்கச் சொல்லலாம்.
மீதமுள்ள புத்தகங்களையும் விரைவில் வெளியிடலாம்.
Respected Sir
ReplyDeleteDue to Ragu dasa, native didnot get benefits in his job because Ragu sits from 8 From tenth house also 10th house owner sits from 8th house also with 8th house owner Sanibagavan. He got promotion in Guru dasa who sits in second house With Moon.
Thanks
Sathishkumar GS
வணக்கம் ஐயா
ReplyDelete1.பத்தாம் வீட்டு அதிபதி பத்திற்கு 8ல் மறைவு மற்றும் கர்மகாரஹன் & யோககாரஹன் 10ற்கு 8ல் மறைவு பகை வீட்டில் அதுவும் ராகுவுடன்
2.10ஆம் வீட்டிற்கு குருவின் 9ஆம் பார்வை இருப்பதால் வேலை கிடைத்தது
3.24 வயது 7மாதங்கள் முதல் ராகு தசை 18 ஆண்டுகளுக்கு அதனால் உயர்வு கிடைக்கவில்லை
4.குரு தசையில் கிடைத்திருக்கும். சனி புக்தியில்.
நன்றி
ஸ்ரீராம்
Dear sir very very happy to know there will be new classroom.have entered this class room very late find so interesting and could not get galaxy lessons to go through. being known to this information about this new class room though have no suuggestion a great desire to join this class room is conveyed here . please allow not only me but also as many students as possible at a cost. i am sure your service to this society will be blessed by lord Muruga.
ReplyDelete