மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.10.15

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீரும் கிடைக்கிறதாம்! நம்ம ஊருக்கு எப்போது வருமாம்? கேட்டுச் சொல்லுங்கள் சாமிகளா!

ஏ டி எம் மெஷின் மூலம் குடிநீர்! – ஆந்திராவில் அமோகம்.!

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் கிராமங்களின் நிலை நகரத்திற்கு இணையாக மாறிக் கொண்டு வருகிறது.
இதையொட்டி பல்வேறு கிராம மக்களுக்கு, துாய்மையான குடிநீர்
கிடைக்க கிராமங்கள் தோறும், ஏ.டி.டபிள்யூ., குடிநீர் திட்டம் ஏற்படுத்தப்
பட்டுள்ளது.

கடந்த, 2012 ஏப்ரல் 7ல், ஆந்திர மாநிலம், வரங்கல் மாவட்டத்தின் வெங்கடாபுரத்தில் இத்திட்டம் முதன் முதலாக செயல்படுத்தப் பட்டது.இத்திட்டம்

பெரும் வர்வேற்பைப் பெற்றதால், ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா உள்பட, 351 கிராமங்களில் இதை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

‘பாலவிகாஸ்’ என்ற நிறுவனம் இந்த இயந்திரத்தை வடிவமைத்துள்ளது.’துாய்மை குடிநீர்’ திட்டத்தின் கீழ்
702 ஏ.டி.டபிள்யூ., ப்ளான்டை இந்நிறுவனம் கிராமங்கள் தோறும்
ஏற்படுத்தி உள்ளது.இந்த இயந்திரங்களை அமைக்க கிராம
மக்களிடமிருந்து ஒரு குடும்பத்திற்கு 1,000 ரூபாய் வசூலித்து மீதி
தொகையை பாலவிகாஸ் நிறுவனம் ஏற்று ஒவ்வொரு கிராமத்திலும்
இரண்டு ஏ.டி.டபிள்யூ., இயந்திரங்களை ஏற்படுத்தியது.

ஆயிரம் ரூபாய் அளித்த குடும்பத்தினருக்கு அவர்களின் பெயரில்
ஒரு, ஏ.டி.டபிள்யூ., கார்டு வழங்கப்பட்டது.அந்த கார்டை இயந்திரத்தில் சொருகி துாய்மையான குடிநீர் பெறலாம். ஒரு கார்டு மூலம் ஒரு ரூபாய் அளித்து நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் குடிநீர் வரை பெற்றுக் கொள்ளலாம்.

 காலை, 6:00 மணி முதல் மாலை, 7:00 மணி வரை குடிநீர் வரும்படி
இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிஷனல் தேவைக்கு நான்கு
ரூபாய் செலுத்தி 20 லிட்டர் குடிநீர் பெறலாம்.

இதற்காக, ஆண்டுக்கு 360 ரூபாய் மட்டுமே இந்நிறுவனம் வசூலிக்கிறது.
இந்த கார்டுகளை ஆண்டுக்கு ஒருமுறை, ‘ரீசார்ஜ்’ செய்து கொள்ள
வேண்டும். அத்துடன் எவ்வளவு தண்ணீர் பெற்றுள்ளனர், அதற்குண்டான தொகை அனைத்தையும், அந்த இயந்திரத்தில் கார்டு செலுத்தி தெரிந்து
கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
---------------------------------------------------
அங்கே கிடைப்பதுபோல நம் ஊருக்கும் நல்ல குடிநீர் வந்தால்
எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்.? 20 லிட்டர் தண்ணீரின் விலை
ஒரு ரூபாய்தானாம் சாமி. இங்கே (கோவையில்) 20 வாட்டர் கேனின்
விலை ரூ.40:00

அப்பனே குரு பகவானே கொஞ்சம் கண் திறந்து பார்த்து தமிழ்நாட்டிற்கும் இந்த வசதி கிடைக்க வழி செய்யப்பா சாமி!

அன்புடன்,
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18 comments:

ARASU said...

ஆசிரியருக்கு வணக்கம் .
நம் ஊரில் ATM இயந்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக பல முறை செய்திகளை பார்த்திருக்கிறோம். இனி குடிநீருக்காக ATW இயந்திரங்கள் கொள்ளை போகும் செய்திகள் வருமோ?
அன்புடன் அரசு.

kmr.krishnan said...

நன்மை எங்கு இருந்தாலும் அதனைக் காப்பி அடிக்க வேண்டியதுதான். அந்த நிறுவனம் த‌னியார் என்பதால் அவர்கள் அதனை யாருக்கும் அளிக்கலாம் தானே?!
அவர்களுடன் தொடர்பு கொண்டு நாமக்கு நாமே செய்து கொள்ளலாமே. அரசாங்கம் என்றால் கம்பனிக்காரார்களும் நாமும் மேஜைக்குக் கீழே கொடுக்க வேண்டுமே!

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
இங்கே குரு பகவான் இல்லை . அம்பிகை தான் ..கருணை பார்வை கிட்டுமா..???.

siva kumar said...

உள்ளேன் ஐயா

nandha kumar said...

நண்பர் அருமையாக சொன்னார் ATW machine கள் வந்தால் மக்களுக்கு பயன்படுமோ இல்லையோ குடிமகன்களுக்கு உள்ளே 1லிட்டர் பாட்டிலின் விலை 30 ரு

SELVARAJ said...

நம்ம அரசாங்கம் வேறு "தண்ணி" ATM களை நிறுவ திட்டமிட்டு உள்ளார்கள் வாத்தியாரே...!

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!
ஆந்திர மாநிலத்தை முதல் தரமான நகரமாக உருவாக்கிய பெருமை திரு.சந்திரபாபு நாயுடு அவர்களையே சேரும்.இன்றைய தேதிக்கு மும்பைக்கு அடுத்த பொருளாதார ஏற்ற நிலையில் உள்ள மாநிலம் ஆந்திரமே. ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் நீரானது வீணாக்கப் படாமல் மக்களின் நலனுக்கு உருவாக்கப் பெற்றுள்ளது.
எனக்கும் இது புது செய்தியே!. திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள் தற்போது முதல்வராக இருக்கும் பிளவு படுத்தப்பட்ட ஆந்திராவின் வளர்ச்சிப் பணிகள் மிக பிரமாண்டமானதாக உருவெடுக்கப் போகின்றது தாங்கள் அறிந்ததே!. நம்மூரில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் குடித்துவிட்டு தங்களுடைய நேற்றைய பதிவில் விளக்கியுள்ள பஞ்சகவ்வியம் உண்ணவேண்டும். இங்கு சாதாரண குழாய் நீரை இரவு முழுவதும் பிடித்து பாட்டில்களில் அடைத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
கோவைக்கு பெருமை சேர்க்கும் சிறுவாணி, அத்திக்கடவு நீர்த்தேக்கங்கள் தள்ளாடுகின்றன.பவானி ஆற்று நீர் விவசாயத்திற்கே பயனற்றது(இரசாயன கழிவுகளால்) என போராட்டம் நடக்கின்றது!. இது போன்ற காரணங்களாலும் நம்மூரில் ஏ.டி.டபிள்யூ மெஷின் வைத்தால் சூடான காற்று வரும். ஏ டி டபிள்யூ மெஷின்களை டிரையர் (DRIER) ஆக பயன்படுத்தலாம்.தண்ணி வரும்!,ஆனால் வராது!!!....எப்பவாச்சும் வரும்!!!!...
அன்புடன்,
-பொன்னுசாமி

C Jeevanantham said...

aha... very good provision for the public.

Subbiah Veerappan said...

/////Blogger ARASU said...
ஆசிரியருக்கு வணக்கம் .
நம் ஊரில் ATM இயந்திரங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக பல முறை செய்திகளை பார்த்திருக்கிறோம். இனி குடிநீருக்காக ATW இயந்திரங்கள் கொள்ளை போகும் செய்திகள் வருமோ?
அன்புடன் அரசு//////.

வரலாம். நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
நன்மை எங்கு இருந்தாலும் அதனைக் காப்பி அடிக்க வேண்டியதுதான். அந்த நிறுவனம் த‌னியார் என்பதால் அவர்கள் அதனை யாருக்கும் அளிக்கலாம் தானே?!
அவர்களுடன் தொடர்பு கொண்டு நாமக்கு நாமே செய்து கொள்ளலாமே. அரசாங்கம் என்றால் கம்பனிக்காரார்களும் நாமும் மேஜைக்குக் கீழே கொடுக்க வேண்டுமே!/////

உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

///Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
இங்கே குரு பகவான் இல்லை . அம்பிகை தான் ..கருணை பார்வை கிட்டுமா..???./////

சரி, உங்களூர் கோமதி அம்மன் என்றே வைத்துக்கொள்வோம். அருள் புரிந்தால் மகிழ்ச்சிதான் கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

Subbiah Veerappan said...

///////Blogger nandha kumar said...
நண்பர் அருமையாக சொன்னார் ATW machine கள் வந்தால் மக்களுக்கு பயன்படுமோ இல்லையோ குடிமகன்களுக்கு உள்ளே 1லிட்டர் பாட்டிலின் விலை 30 ரு//////

உள்ளே போனால், அது செயல்படுமோ அல்லது படாமல் செய்துவிடுவார்களோ யாருக்குத் தெரியும்?

Subbiah Veerappan said...

//////Blogger SELVARAJ said...
நம்ம அரசாங்கம் வேறு "தண்ணி" ATM களை நிறுவ திட்டமிட்டு உள்ளார்கள் வாத்தியாரே...!//////

நம் தமிழகக் குடிமக்களுக்கு அதுவும் அவசியம்தானே சுவாமி!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு அன்பான வணக்கங்கள்!
ஆந்திர மாநிலத்தை முதல் தரமான நகரமாக உருவாக்கிய பெருமை திரு.சந்திரபாபு நாயுடு அவர்களையே சேரும்.இன்றைய தேதிக்கு மும்பைக்கு அடுத்த பொருளாதார ஏற்ற நிலையில் உள்ள மாநிலம் ஆந்திரமே. ஆந்திராவில் பாயும் கிருஷ்ணா, கோதாவரி நதிகளின் நீரானது வீணாக்கப் படாமல் மக்களின் நலனுக்கு உருவாக்கப் பெற்றுள்ளது.
எனக்கும் இது புது செய்தியே!. திரு.சந்திர பாபு நாயுடு அவர்கள் தற்போது முதல்வராக இருக்கும் பிளவு படுத்தப்பட்ட ஆந்திராவின் வளர்ச்சிப் பணிகள் மிக பிரமாண்டமானதாக உருவெடுக்கப் போகின்றது தாங்கள் அறிந்ததே!. நம்மூரில் நீர்த்தேக்கங்களில் உள்ள நீரைக் குடித்துவிட்டு தங்களுடைய நேற்றைய பதிவில் விளக்கியுள்ள பஞ்சகவ்வியம் உண்ணவேண்டும். இங்கு சாதாரண குழாய் நீரை இரவு முழுவதும் பிடித்து பாட்டில்களில் அடைத்து 40 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
கோவைக்கு பெருமை சேர்க்கும் சிறுவாணி, அத்திக்கடவு நீர்த்தேக்கங்கள் தள்ளாடுகின்றன.பவானி ஆற்று நீர் விவசாயத்திற்கே பயனற்றது(இரசாயன கழிவுகளால்) என போராட்டம் நடக்கின்றது!. இது போன்ற காரணங்களாலும் நம்மூரில் ஏ.டி.டபிள்யூ மெஷின் வைத்தால் சூடான காற்று வரும். ஏ டி டபிள்யூ மெஷின்களை டிரையர் (DRIER) ஆக பயன்படுத்தலாம்.தண்ணி வரும்!,ஆனால் வராது!!!....எப்பவாச்சும் வரும்!!!!...
அன்புடன்,
-பொன்னுசாமி/////

உங்களின் அனுபவம் பேசுகிறது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

/////Blogger C Jeevanantham said...
aha... very good provision for the public./////

உண்மைதான். நன்றி ஜீவானந்தம்!

வரதராஜன் said...

ஐயா,
ஆந்திரத்தை விட அதிகமான கிராமங்கள் கொண்ட நமது மாநிலத்தில் மக்கள் ரூ 1000/_
கொடுப்பதற்கு நிச்சயம் தயங்கமாட்டார்கள். அப்படி இருக்கும்போது தமிழக அரசும் உடனடியாகப் பரிசீலிக்கலாமே, இவ்விஷயத்தை! எந்தப் புற்றில் எந்தப் பாம்போ, யார் கண்டார்கள்?!
புதிய தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி, ஐயா.

விழித்துக்கொள் said...

இந்த குடிநீர் திட்டம் இருப்பது ஆந்திராவில் இல்லை தெலங்கானாவில் இதை நடைமுறைபடுத்தியவர் திரு சந்திரசேகரராவ் அவர்கள்