மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

17.10.15

புதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு!

புதிர் 99: பதில்: கிரகங்களில் அவருக்கு மட்டும்தான் இரக்கம் உண்டு!

17.10.2015

நேற்றைய புதிருக்கான சரியான பதில்:

ஜாதகருக்கு 25 வயது முதல் 43 வயது வரை நடைபெற்ற ராகு திசை அவரை போட்டுப் பார்த்து, முன்னேற விடாமல் முடக்கி வைத்தது. அதற்குப் பிறகு வந்த குரு திசை, தடைகளை எல்லாம் விலக்கி வேலையிலும், வாழ்க்கையிலும் அவருக்கு உயர்வை அளித்தது

ஜாதகத்தைப் பாருங்கள்:கடக லக்கின ஜாதகம். பூர நட்சத்திரம்

1. பத்தாம் அதிபதி செவ்வாய் அந்த வீட்டிற்கு எட்டில் போய் அமர்ந்துள்ளார்

2. அத்துடன் அவர் சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கி அவதியில் (பலவீனமாக) உள்ளார்

3. ஏழு மற்றும் எட்டாம் அதிபதி சனியின் சேர்க்கை வேலை உயர்விற்குத் தடையாக இருந்தது. ஜாதகனின் 43ம் வயதுவரை அதே நிலைமைதான்! (அதாவது 18 வருட காலம் ராகுதிசையின் பிடியிலும் இருந்தார்)

4. அதற்குப் பிறகு குரு திசை ஆரம்பமானவுடன். மாற்றங்கள் ஏற்பட்டன.
குரு தன்னுடைய ஒன்பதாம் (விஷேச) பார்வையால் பத்தாம் வீட்டைப் பார்ப்பதால், அந்த மாறுதல் ஏற்பட்டது. நல்ல காலம் வந்தது

5. குருவுடன் லக்கினாதிபதி சந்திரனும் சேர்ந்திருப்பதால், அதுவும்
இரண்டாம் வீட்டில் அவர்கள் இருவரும் இருப்பதால், உத்தியோகம்
மற்றும் பண வரவில் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். உயர்வைக் கொடுத்தார்கள்

6. சனி மற்றும் ராகுவின் பிடியில் சிக்கியிருந்த பத்தாம் அதிபதிக்கு, குரு பகவான் தன்னுடைய தசாபுத்தியில் கை கொடுத்துத் தூக்கிவிட்டார்

7. குருவின் விஷேசப் பார்வையால், அதன் பார்வை பெறும் வீட்டை
வைத்து, அதன் திசையில் (குரு திசையில்) ஜாதகனுக்கு நன்மையான பலன்கள் உண்டாகும். அதை மனதில் கொள்க அதை வலியுறுத்திச் சொல்லவே இந்தப் பாடம்!
---------------------------------------------
போட்டியில் 14 பேர்கள் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுக்கள். பலனை துள்ளியமாகவோ அல்லது ஒட்டியோ எழுதி போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மொத்தம் 11 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின்
பெயர்கள் கீழே உள்ளன
------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================================
1
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஜனவரி 1956ல் பிறந்தவர்.பிறந்த நேரம் மாலை 5 மணி 12 நிமிடங்கள்.பிறந்த ஊர் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ஜாதகரின் பத்தாம் இடத்துக்காரரான செவ்வாய் ஐந்தில் சனி ராகு என்ற பகைவர்களால் பாதிக்கப்பட்டார்.அவரே இந்த கடக லக்கினக்காரருக்கு யோககாரகன்.
கர்மகாரகன் சனைச்சரன் பகை வீட்டில். சுய வர்கபரல் 2 மட்டுமே. செவ்வாயுக்கு 4 மட்டுமே. பத்தாம் வீட்டுக்கு 24 பரல் மட்டுமே.
24 வயதில் செவ்வாய் தசா சூரிய புக்தியில் அவருக்கு அரசாங்க வேலை கிடைத்தது. தொடர்ந்து வந்த ராகு தசாவில் 18 ஆண்டுகள் செக்குமாடு போல் ஒரே வேலையில் முன்னேற்றம் இல்லாமல் அவதிப்பட்டார்.
கிட்டத்தட்ட வேலையில் என்னை போல 'அதிர்ஷ்டம்' இவருக்கு.
Friday, October 16, 2015 6:50:00 AM //////
--------------------------------------------
2
Blogger thozhar pandian said...
கடக இலக்கினம். 10ம் வீட்டிற்கு பாக்கியாதிபதி குரு பார்வை உள்ளது. ஆனால் குரு தசை இவருக்கு 43 வயதில் தான் வரும். 25 வயதிலிருந்து இவருக்கு இராகு தசை தொடங்குகிறது. 10ம் வீட்டு செவ்வாய் தனது மற்றொரு வீடான விருச்சிகத்தில் ஆட்சி பலத்துடன் இருந்தாலும், 10ம் வீட்டிற்கு எட்டில். உடன் தொழில்காரகர் சனி மற்றும் இராகு. ஆக இராகு தசையில் இவருக்கு பதவியில் முன்னேற்றம் இல்லை. அதன் பிறகு வரும் குரு தசையில் இவருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
Friday, October 16, 2015 7:10:00 AM /////
--------------------------------------------
3
/////Blogger ARIMALAM said...
குருவே நமஹா:
10அதிபதி செவ்வாய் 10க்கு 8ல் சனி/ராஹூ கூட்டில். செவ்வாய் சுய வீட்டில் எனவே செவ்வாய் திசை கடைசியில் வேலை கிடைத்தது. அடுத்து ராஹூ திசை 18 வருடம் உயர்வில்லை(10க்கு8ல்). குரு திசையில் சனி புக்தியில் (சனி 10க்கு 10ம் அதிபதி அதன் வீட்டை பார்பதால்)உயர்வு கிடைத்தது. 10க்கு பாக்கியாதிபதி குரு 10ஆம் இடத்தை தன் 9ஆம் பார்வையில் பார்பதால் கிடைத்தது.
வணக்கம்.
Friday, October 16, 2015 9:02:00 AM //////
---------------------------------------------
4
////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 99க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 30 Jan 1956 17:10 மணி
கடக லக்கினம். சிம்மராசி. 24வயதிற்கு மேல்வந்த ராகு திசை(18 வருடம்) சனி மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து ஜாதகருக்கு வேலை முன்னேற்றத்தை தடை செய்தனர்.
அடுத்து வந்த குரு திசையில் ஜாதகருக்கு பணி உயர்வு கிடைத்திருக்கும்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, October 16, 2015 9:32:00 AM /////
--------------------------------------------
5
////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.99:
10 ஆம் அதிபதி செவ்வாய் ராகு மற்றும் சனியோடு சேர்ந்து அவருடைய ராகு திசையில் பதவி உயர்வு இல்லாமல் பணி புரிந்து இருப்பார்.
குருவின் 9 ஆம் பார்வை 10 ஆம் இடத்தின் மேல் இருப்பதால் அவருடைய
குரு திசையில் பதவி உயர்வு பெற்று இருப்பார்.
மு.சாந்தி.
Friday, October 16, 2015 9:50:00 AM //////
---------------------------------------------
6
/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
99 புதிர்கான பதில்
10 ஆம் அதிபதி அந்த இடத்துக்கு 8ல் உள்ளார். மேலும் அவர்
தீய கிரகங்கள் கூட்டணி யில் உள்ளார்
கர்மகாரகன் தீய கிரகங்கள் சேர்க்கை
சந்திர ராசிக்கு 10 ல் கேது.
நன்றி
கண்ணன்.
Friday, October 16, 2015 2:47:00 PM/////
---------------------------------------------
7
////Blogger bala said...
Vanakkam Iyya,
Kataka lagna jaathagar.
Lagnathipathi 2il + Bagyaathipathiyudan (9aam athipathi - Guru) kootani.
Velaiku - 10aam idam paarka pada vendum, Promotions - 5aam idam pugazh,udhyogathil menmai, puthira baagyam, arivu aagiyavatrai kurikum.
Kataka lagnathirku - (yogathipathi + 5&10 ku athipathi) - Sevvai
Intha jaathagathil - 5aam idathil ullar. thirikona amaipu petrullar. 
10aam athipathi 5il (Andha veetirku 8il) + Lagnathin 8aam athipathi (sani) + ucha Ragu vudan kootani
Sevai - sani+ragu kootaniyinal balam izhandhu ullar, ivai anaithum 5aam idathil ullathu + avaruku 24 vayadhil aaramithathu raagu dasai(18 yrs)
ithanaal avaruku velayil menmai(Promotions) kidaika thaamatham aanathu.
Jathagathil guru vin vishesha paarvai (9aam paarvai) - 10aam idathirku ullathu
Pinnar vantha guru dasai chandran/sevvai buthiyil avaruku velayil menmai kidaithathu. 
nandri,
Bala
Friday, October 16, 2015 3:58:00 PM //////
--------------------------------------------------
8
///////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 99.
1,,கடக லக்னம் .லக்னாதிபதி சிம்மத்தில் உடன் குரு
2..குரு 9ம் பார்வையாக 10 ம் வீட்டை பார்ப்பது வேலை கிடைத்தது..!!
3..10ம் வீட்டதிபதி செவ்வாய் 5ல் சனி ராஹுவுடன் கூட்டணி சரியில்லை ..10 படி ஏறினால்11. படி சறுக்கும்
4..லாபஸ்தானத்தில் 11ல் கேது .மூவர் பார்வை ...லாபமே இல்லது போனது .அதாவது உயர்வு இல்லை../////
வேண்டுகோள் ..
100 வது புதிர் மிக சிறப்பான ஜாதகம் கொடுத்து அலசுங்கள் ..
தனிப்பட்ட வலைத்தளம் ..
தற்போது புதிர் போட்டியில் பங்கு பெரும் மாணவர்களை சேர்க்க வேண்டும் .மேலும் வலை தள கொள்ளளவு பொறுத்து .மாணவர்களிடம் சிறிது கட்டணம் வசூல் செய்து சேர்த்து கொள்ள வேண்டுகிறேன் ..
வகுப்பில் மூத்த மாணவர்கள் திரு kmrk +திரு வேப்பிலை சாமி .அவர்களின் கருத்து ..
நன்றி .
Friday, October 16, 2015 6:46:00 PM //////
-----------------------------------------
9
/////Blogger Senthil J said...
பிறந்த தேதி 30.01.1956 ----- நேரம் 5.12 பி ப ----- இடம் சென்னை
பத்தாம் இடம் குரு பார்வை // ஏழாம் இடத்தில் சூரியன் புதன் கூட்டு // புத அதித்ய யோகம் // எனவே அவர் பார்த்தது அரசாங்க வேலை. லக்னாதிபதி திசையில் பணி கிடைத்தது.
காரகன் சனீஸ்வரன் 2 பரல்களுடன் // செவ்வாய் ராகு கூட்டு // லக்னத்திற்கு ஐந்தாம் இடம் என்றாலும் 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவக அதிபதி செவ்வாய் 4 பரல்களுடன் // சனீஸ்வரன் ராகு கூட்டு // 10ம் இடத்திற்கு 8ம் இடம் //
பாவகம் 24 பரல்களுடன்
அவரது 24 வது வயதில் லக்னாதிபதி திசையில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் இருபது ஆண்டு காலம் அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசையில் அவர் பார்த்த வேலையில் உயர்வு (promotion) எதுவும் கிடைக்க வில்லை. இருக்கும் வேலையில் முன்னேற்றம் எதுவும் இன்றி செவ்வாய் மற்றும் ராகு திசை முடியும் வரை அப்படியே இருப்பார். அவருக்கு செவ்வாய் மற்றும் ராகு திசை முடிந்த பிறகு 1998 க்கு பிறகு குரு திசையில் உயர்வு கிடைத்தது.
Friday, October 16, 2015 6:56:00 PM /////
---------------------------------------------
10
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
இந்த ஜாதகருக்கு 24 வயதுக்குமேல் அட்டமாதிபதி சனியுடன் கூட்டு சேர்ந்த ராகுவின் தசை அவருக்கு முன்னேற்றத்தை கொடுக்கவில்லை. அதற்க்கு பிறகு வந்த பாக்கியாதிபதி குருவின் தசையில் முன்னேற்றம் அடைந்திருப்பார். காரணம் தன ஸ்தானத்தில் அமர்ந்து 10மிடத்தை தன் பார்வைளும் வைத்து குரு தசை நடத்தினார்.
நன்றி,
செல்வம்
Friday, October 16, 2015 7:56:00 PM /////
-----------------------------------------------------
11
/////Blogger KJ said...
Respected Sir
Due to Ragu dasa, native didnot get benefits in his job because Ragu sits from 8 From tenth house also 10th house owner sits from 8th house also with 8th house owner Sanibagavan. He got promotion in Guru dasa who sits in second house With Moon. 
Thanks
Sathishkumar GS
Friday, October 16, 2015 11:55:00 PM /////
==========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
திரு KMRK அவர்களின் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது ...அப்படியே செய்யலாம் அய்யாவின் வேலை பழு பார்த்து கொண்டு ....நடை முறை படுத்த வேண்டுகிறேன் ....
வேண்டுகோள் ....!!!!
தொடர்ந்து .கண்டிப்பாக புதிர்கள் அல்லது மாணவர்களின் ஜாதக அலசல்கள் திரு KMRK கூறியது போல் இருந்தால் நன்றாக இருக்கும்
நன்றி ..

selvam velusamy said...

வணக்கம் குரு,

நான் நமது வகுப்பறையில்தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், கற்றுக்கொண்டும் உள்ளேன். நான் மேல்நிலை வகுப்பிலும் ஒரு மாணவனாகவும் இருந்துள்ளேன். எனது வேண்டுகோள் யாதெனில் ஜோதிட புதிர் போட்டியையும், பாப்கார்ன் போஸ்டையும் நிருத்திவிடார்தீர்கள்.

நன்றி
செல்வம்

sriram1114 said...

ஐயா
எந்த புக்தி அந்தரம் என்று விளக்குங்கள் ஐயா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.

ஸ்ரீராம்

amuthavel murugesan said...

ஐயா வணக்கம்,

அடுந்த ஜோதிட புதிருக்கான பதிலை தருவதற்கு இரண்டு நாள் அவகாசம் தரும்மாறு வேண்டிக்கொள்கிறேன்.விடுமுறை நாட்கள் வருவதால் புதிரை பார்பது கடினம்.100 வது பாடத்திற்கு பதில் கொடுத்த திருப்தி இருக்கும்.

தவறு இருப்பின் மன்னிக்கவும்

மு.சாந்தி

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
வலை தளம் பற்றி அடியேனின் கருத்து [[.வாத்தியாருக்கும் எண் கணிதம் பற்றி நன்றாகவே தெரியும்]]

classroom 2007. இது 33+9=42. 33 எண் கணிதத்தில் மிக மிக சிறப்பாக சொல்லபடுகிறது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண் .... வாடி கொண்டு இருக்கும் மரமும் துளிர் விடும் இந்த எண்ணை ஒரு அட்டையில் கட்டி தொங்க விட்டால் ..அனுபவம்.... இது மிக சிறப்பான பெயர்..

galaxy 2007 .14+9=23. இதுவும் புதனின் ஆதிக்கம் பெற்ற எண் ஆனால் .galaxy என்ற வார்த்தையில் வரும் *X* தவறு என்று பொருள் படும் ..பரீட்சை யில் தவறான பதிலுக்கு வாத்தியார் போடுவது*X *.. மேலும் *Y * கடைசியில் வருவது வரக்கூடிய அனைத்தும் வீணாகி விடும் .
அடிக்கடி தடங்கல் ஏற்படும் .....பெயரில் எந்த இடத்திலும் இந்த *X * என்ற எழுத்து வருதல் கூடாது ...

சற்று கூர்ந்து கவனித்தால் ..X போன்று இரண்டு வாட்களை சின்னமாக கொண்டுள்ள நாடு எப்போதும் பிரச்சினை சந்தித்து கொண்டே இருக்கிறது ...

இது போன்ற அடையாளம் கொண்டு சில பேர் வாகனத்தில் வைத்து அடிக்கடி விபத்து சந்தித்து பார்த்திருக்கிறேன் .!!

என் அனுபவத்தில் இதே GALAXY என்று பெயர் கொண்ட ஒரு நிறுவனம் நடத்த முடியாமல் தள்ளாடி கொண்டு விற்பனைக்கு இருக்கிறது ..நிறுவனர் எனக்கு தெரிந்தவர் சொன்னேன் மற்று சமயத்தவர் என்பதால் கேட்கவில்லை ..
மிக பிரபலமான அரசியல் தலைவர் தனது பெயரை மாற்றினார் ..மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார் இன்னும் அவரால் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியவில்லை. சனியின் எண்ணில் தனது பெயரை மாற்றி ..???

ஆகவே வாத்தியார் அய்யா புதிதாக திறக்கும் வலைதளதிற்கு JOTHIDA VAKUPARAI =51=6..
அய்யா உங்களுக்கு தெரியாதது விஷயம் இல்லை ..இருநதாலும் வகுப்பறை மாணவன் கருத்து ..சொல்கிறேன் .....நன்றி.

bala said...

Vanakkam Iyya,

Mikka magizhchi 100 aavathu paathivirku.. :) :) Ennuduya vaazhthukkal.

1. 100aavathu pathivirku piragu vaaram oru yogathai patri sollikudungal. athai therindhu kolvathrku sila udharana jaathagangalum thaarungal. athukum oru puthir poti nadathalaam

2. Puthu closed classroom inayathalathirku - intha puthir potiku varum anbargal/vaasagargal anaivarukum vaaipu aliyungal

nandri,
Bala

Rajam Anand said...

வணக்கம் வாத்தியாரே,
சீக்கிரகமாக பதிலை போட்டுவிட்டீர்களே,எழுதுவதற்கு சான்ஸே தரலையே. 30 மணித்தியாலம் அவகாசம்தானே தந்திருக்கின்றீர்கள். Dead line sunday தானே.
நன்றி
ராஜம் ஆனந்த்

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
புதிருக்கான விடையை நமது வகுப்பறையின் அன்பான மாணவர்கள் 14 பேர்கள் சரியான பதிலை அலசி எழுதியுள்ளார்கள்.இதிலிருந்து ஆர்வமுள்ள அன்பர்கள் எத்தனை பேர் வகுப்பறையின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தங்களுக்கு தெரிந்ததுதானே!!!
100 வது பதிவுடன் புதிர் பகுதியை நிறுத்திவிட்டால், பலரும் ஏக்கமடையும்(கவனிக்கவும்-ஏக்கம்) வாய்ப்பு உண்டாகலாம். வகுப்பறை பதிவு வழக்கம் போல் தொடர்ந்து வரும்போது, புதிய வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுடன் மேல்நிலை பாடங்களை அலசலாம்.
புதிய வலைதளத்தில் ஒரு கேள்வி மட்டும் புதிர் என்றில்லாமல் முழுமையான ஜாதகத்தை அலசும் படி பயிற்ச்சி அளிக்கலாம். வாத்தியார் ஐயாவே எது போன்ற ஜாதகம் கொடுக்கலாம் எனத் தேர்வு செய்யலாம்.
புதிர் விடை தராததால் அன்பர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்று அர்த்தமாகாது.
நான் அறிந்து பல தொழில் முறை ஜோதிடர்களும் வகுப்பறையை தொடர்ந்து கவனித்துக் கொண்டும்,படித்துத் தெரிந்து கொண்டும், அவ்வப்போது பின்னூட்டங்களும், புதிர் விடைகளை தந்து கொண்டும் உள்ளனர்.
இந்த அளவில் பிரபலமாகியிருக்கும் நமது பெருமைக்குறிய வகுப்பறை மாற்றம் கொண்டு வரும் போது பல தரப்பினரும் ஏமாற நேரலாம்.இந்த நிலையை தவிர்க்கலாம்.
குருவின் வேலைப் பளு அதிகமாகும் என்பது உண்மையே.இதற்கான உபாயமும் நிச்சயம் வாத்தியாரிடம் இருக்கும்.
இதே வகுப்பறையை தொடர்வது பலருக்கும் நண்மை அளிக்கும்.
புதிய தளத்தில் இன்னும் சிறப்பான பயிற்ச்சி ஆரம்பிக்கலாம்.
வாத்தியார் எழுதியிருந்தபடி யோகங்களின் வகைகள், அவை ஜாதகங்களில் ஏற்படுத்திய மற்றங்கள், காலகட்டங்கள், பல புகழ்பெற்ற பிரபலங்கள் (வாத்தியார் உட்பட) ஜாதகங்களை அலசலாம்.
கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி பகுதியாக நடத்தலாம்.
குறிப்பிடப் பட்டவை கருத்து மட்டுமே. வாத்தியாரின் நடமுறைப் படுத்தும் நெறி வித்தியாசமாகவே இருக்கும்.
சொந்த வேலை காரணமாக புதிர் விடை அளிக்க இயலாமல் போனதற்காக வர்ந்துகிறேன்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Narayanan V said...

sir

jothida puthir pakuthiku, manavarkal anaivarin jathkangalai ondru ondru alasinalae pala varudangal paadam edukkalam.

v narayanan
pondicherry

dhana lakshmi said...

Dear Sir

Very Good Idea.

Regards
J.Dhanalakshmi

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
திரு KMRK அவர்களின் ஆலோசனை சிறப்பாக இருக்கிறது ...அப்படியே செய்யலாம் அய்யாவின் வேலை பழு பார்த்து கொண்டு ....நடை முறை படுத்த வேண்டுகிறேன் ....
வேண்டுகோள் ....!!!!
தொடர்ந்து .கண்டிப்பாக புதிர்கள் அல்லது மாணவர்களின் ஜாதக அலசல்கள் திரு KMRK கூறியது போல் இருந்தால் நன்றாக இருக்கும்
நன்றி ..///////////

நல்லது. உங்களின் மேலான யோசனைகளுக்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

//////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
நான் நமது வகுப்பறையில்தான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன், கற்றுக்கொண்டும் உள்ளேன். நான் மேல்நிலை வகுப்பிலும்
ஒரு மாணவனாகவும் இருந்துள்ளேன். எனது வேண்டுகோள் யாதெனில் ஜோதிட புதிர் போட்டியையும், பாப்கார்ன் போஸ்டையும் நிருத்திவிடார்தீர்கள்.
நன்றி
செல்வம்////////

உங்களின் யோசனைகளுக்கு நன்றி செல்வம்!

Subbiah Veerappan said...

//////Blogger sriram1114 said...
ஐயா
எந்த புக்தி அந்தரம் என்று விளக்குங்கள் ஐயா. சிரமத்திற்கு மன்னிக்கவும்.///////

நீங்களே கழித்துக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள் அன்பரே!!!!

Subbiah Veerappan said...

Blogger amuthavel murugesan said...
ஐயா வணக்கம்,
அடுந்த ஜோதிட புதிருக்கான பதிலை தருவதற்கு இரண்டு நாள் அவகாசம் தரும்மாறு வேண்டிக்கொள்கிறேன்.விடுமுறை நாட்கள் வருவதால்
புதிரை பார்பது கடினம்.100 வது பாடத்திற்கு பதில் கொடுத்த திருப்தி இருக்கும்.
தவறு இருப்பின் மன்னிக்கவும்
மு.சாந்தி////////

அப்படியே செய்கிறேன். நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
வலை தளம் பற்றி அடியேனின் கருத்து [[.வாத்தியாருக்கும் எண் கணிதம் பற்றி நன்றாகவே தெரியும்]]
classroom 2007. இது 33+9=42. 33 எண் கணிதத்தில் மிக மிக சிறப்பாக சொல்லபடுகிறது சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற எண் .... வாடி கொண்டு இருக்கும் மரமும் துளிர் விடும் இந்த எண்ணை ஒரு அட்டையில் கட்டி தொங்க விட்டால் ..அனுபவம்.... இது மிக சிறப்பான பெயர்..
galaxy 2007 .14+9=23. இதுவும் புதனின் ஆதிக்கம் பெற்ற எண் ஆனால் .galaxy என்ற வார்த்தையில் வரும் *X* தவறு என்று பொருள் படும் ..பரீட்சை யில் தவறான பதிலுக்கு வாத்தியார் போடுவது*X *.. மேலும் *Y * கடைசியில் வருவது வரக்கூடிய அனைத்தும் வீணாகி விடும் .
அடிக்கடி தடங்கல் ஏற்படும் .....பெயரில் எந்த இடத்திலும் இந்த *X * என்ற எழுத்து வருதல் கூடாது ..
சற்று கூர்ந்து கவனித்தால் ..X போன்று இரண்டு வாட்களை சின்னமாக கொண்டுள்ள நாடு எப்போதும் பிரச்சினை சந்தித்து கொண்டே இருக்கிறது ..
இது போன்ற அடையாளம் கொண்டு சில பேர் வாகனத்தில் வைத்து அடிக்கடி விபத்து சந்தித்து பார்த்திருக்கிறேன் .!!
என் அனுபவத்தில் இதே GALAXY என்று பெயர் கொண்ட ஒரு நிறுவனம் நடத்த முடியாமல் தள்ளாடி கொண்டு விற்பனைக்கு இருக்கிறது ..நிறுவனர் எனக்கு தெரிந்தவர் சொன்னேன் மற்று சமயத்தவர் என்பதால் கேட்கவில்லை ..
மிக பிரபலமான அரசியல் தலைவர் தனது பெயரை மாற்றினார் ..மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார் இன்னும் அவரால் ஒரு நல்ல நிலைமைக்கு வர முடியவில்லை. சனியின் எண்ணில் தனது பெயரை மாற்றி ..???
ஆகவே வாத்தியார் அய்யா புதிதாக திறக்கும் வலைதளதிற்கு JOTHIDA VAKUPARAI =51=6..
அய்யா உங்களுக்கு தெரியாதது விஷயம் இல்லை ..இருநதாலும் வகுப்பறை மாணவன் கருத்து ..சொல்கிறேன் .....நன்றி.///////////

உங்களின் மேலான யோசனைகளுக்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger bala said...
Vanakkam Iyya,
Mikka magizhchi 100 aavathu paathivirku.. :) :) Ennuduya vaazhthukkal.
1. 100aavathu pathivirku piragu vaaram oru yogathai patri sollikudungal. athai therindhu kolvathrku sila udharana jaathagangalum thaarungal. athukum oru puthir poti nadathalaam
2. Puthu closed classroom inayathalathirku - intha puthir potiku varum anbargal/vaasagargal anaivarukum vaaipu aliyungal
nandri,
Bala/////

நல்லது. உங்கள் யோசனைகளுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

///////Blogger Rajam Anand said...
வணக்கம் வாத்தியாரே,
சீக்கிரகமாக பதிலை போட்டுவிட்டீர்களே,எழுதுவதற்கு சான்ஸே தரலையே. 30 மணித்தியாலம் அவகாசம்தானே தந்திருக்கின்றீர்கள். Dead line sunday தானே.
நன்றி
ராஜம் ஆனந்த்////////

சென்ற ஞாயிறு அன்று வெளியூர்ப் பயணம் மேற்கொண்டதால் முதல் நாளே பதிலை வலை ஏற்றவேண்டிய கட்டாயமாகிவிட்டது. இனி அப்படி நிகழாமல் பார்த்துக்கொள்ளலாம்

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
புதிருக்கான விடையை நமது வகுப்பறையின் அன்பான மாணவர்கள் 14 பேர்கள் சரியான பதிலை அலசி எழுதியுள்ளார்கள்.இதிலிருந்து ஆர்வமுள்ள அன்பர்கள் எத்தனை பேர் வகுப்பறையின் பதிவுகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தங்களுக்கு தெரிந்ததுதானே!!!
100 வது பதிவுடன் புதிர் பகுதியை நிறுத்திவிட்டால், பலரும் ஏக்கமடையும்(கவனிக்கவும்-ஏக்கம்) வாய்ப்பு உண்டாகலாம். வகுப்பறை பதிவு வழக்கம் போல் தொடர்ந்து வரும்போது, புதிய வலைதளத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுடன் மேல்நிலை பாடங்களை அலசலாம்.
புதிய வலைதளத்தில் ஒரு கேள்வி மட்டும் புதிர் என்றில்லாமல் முழுமையான ஜாதகத்தை அலசும் படி பயிற்ச்சி அளிக்கலாம். வாத்தியார் ஐயாவே எது போன்ற ஜாதகம் கொடுக்கலாம் எனத் தேர்வு செய்யலாம்.
புதிர் விடை தராததால் அன்பர்கள் ஆர்வமில்லாமல் உள்ளனர் என்று அர்த்தமாகாது.
நான் அறிந்து பல தொழில் முறை ஜோதிடர்களும் வகுப்பறையை தொடர்ந்து கவனித்துக் கொண்டும்,படித்துத் தெரிந்து கொண்டும், அவ்வப்போது பின்னூட்டங்களும், புதிர் விடைகளை தந்து கொண்டும் உள்ளனர்.
இந்த அளவில் பிரபலமாகியிருக்கும் நமது பெருமைக்குறிய வகுப்பறை மாற்றம் கொண்டு வரும் போது பல தரப்பினரும் ஏமாற நேரலாம்.இந்த நிலையை தவிர்க்கலாம்.
குருவின் வேலைப் பளு அதிகமாகும் என்பது உண்மையே.இதற்கான உபாயமும் நிச்சயம் வாத்தியாரிடம் இருக்கும்.
இதே வகுப்பறையை தொடர்வது பலருக்கும் நண்மை அளிக்கும்.
புதிய தளத்தில் இன்னும் சிறப்பான பயிற்ச்சி ஆரம்பிக்கலாம்.
வாத்தியார் எழுதியிருந்தபடி யோகங்களின் வகைகள், அவை ஜாதகங்களில் ஏற்படுத்திய மற்றங்கள், காலகட்டங்கள், பல புகழ்பெற்ற பிரபலங்கள் (வாத்தியார் உட்பட) ஜாதகங்களை அலசலாம்.
கிட்டத்தட்ட ஒரு ஆராய்ச்சி பகுதியாக நடத்தலாம்.
குறிப்பிடப் பட்டவை கருத்து மட்டுமே. வாத்தியாரின் நடமுறைப் படுத்தும் நெறி வித்தியாசமாகவே இருக்கும்.
சொந்த வேலை காரணமாக புதிர் விடை அளிக்க இயலாமல் போனதற்காக வர்ந்துகிறேன்.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////////

நல்லது. மாற்றங்கள் உங்களது (மாணவக் கண்மணீகளின்) விருப்பத்திற்கு மாறாக இருக்காது!

Subbiah Veerappan said...

v////////Blogger Narayanan V said...
sir
jothida puthir pakuthiku, manavarkal anaivarin jathkangalai ondru ondru alasinalae pala varudangal paadam edukkalam.
v narayanan
pondicherry//////

வாரம் ஒன்று என்று வைத்துக் கொண்டால், வருடத்திற்கு 52 பேர்களின் ஜாதகத்திற்குத்தானே அலசிப் பதில் சொல்ல முடியும். இருக்கும் 5,000 பேர்களில் எப்படி
முன்னுரிமை கொடுப்பீர்கள்?

Subbiah Veerappan said...

/////Blogger dhana lakshmi said...
Dear Sir
Very Good Idea.
Regards //////

நல்லது. நன்றி சகோதரி!

Ravichandran Raghavan said...

dear vadyar sir
You are doing wonderfull job,You will become more famous and respected .keep it up and dont bent down to small favours and vested inerests.
Blessings
Ravichandran
Scientific Astrologer
Bangalore
Native Madurai