மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

14.10.15

பக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்?

பக்தன் தனக்குப் படைப்பதை கடவுள் எப்படிச் சாப்பிடுவார்?

சிஷ்யன் ஒருவன் தன குருவிடம் ஒரு கேள்வி கேட்டான். ‘’குருவே, நாம் படைக்கும் நைவேத்யத்தை இறைவன் அருந்துகிறார் என்பதை என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவன் சாப்பிட்டால் நாம் பிறருக்கு எப்படி பிரசாதமாக வழங்க முடியும்? கடவுள் படையலை சாப்பிடுவாரா’’?
என்று கேட்டான்.

குரு எதுவும் சொல்லாமல். அவனை ஊடுருவி பார்த்துவிட்டு ‘’நமது வேதாந்த வகுப்புக்கு நேரமாகி விட்டது. வகுப்பறையை தயார் செய். சிறிது
நேரத்தில் நானும் வருகிறேன்” என்றார்.

அனைத்தும் பூர்ணமான வஸ்துவிலிருத்தே தோன்றியது என பொருள் கொண்ட “பூர்ணமிதம்” எனும் ஈஷாவாசிய உபநிஷத்தில் வரும் மந்திரத்தை
விளக்கினார் குரு அனைத்து மாணவர்களும் மந்திரத்தை மனதில் உரு போட துவங்கினர்.

சிறிது நேரத்திற்கு பிறகு கேள்வி கெட்ட சிஷ்யனை சைகையால் அழைத்தார் குரு.

குருவின் முன் பணிவுடன் வந்து வணங்கி நின்றான்.

“எனதருமை சிஷ்யனே, மந்திரத்தை மனதில் ஏற்றி கொண்டாயா? ,” என்றார்.

“முழுமையாக உள்வாங்கி கொண்டேன் குருவே”.

“எங்கே ஒரு முறை சொல் பார்ப்போம்”

கண்கள் மூடி மனதை ஒருநிலைப்படுத்தி கணீர் குரலில் கூற துவங்கினான்..” பூர்ண மித பூர்ண மிதம் ...” என கூறி முடித்தான்.

மெல்ல புன்சிரிப்புடன் குரு தொடர்ந்தார்.. “நீ சரியாக மனதில் உள் நிறுத்தியதாக தெரியவில்லையே.. எங்கே உனது புத்தகத்தை காட்டு”

பதட்டம் அடைந்த சிஷ்யன், புத்தகத்தை காண்பித்து கூறினான் “ குருவே தவறு இருந்தால் மன்னியுங்கள். ஆனால் நான் கூறியது அனைத்தும் இதில்
இருப்பதை போலவே கூறினேன்...”

“இந்த புத்தகத்திலிருந்து படித்துதான் மனதில் உள்வாங்கினாயா?”.
இதிலிருந்து உள்வாங்கினாய் என்றால் மந்திரம் இதில் இருக்கிறதே?
நீ உன் மூளையில் மந்திரத்தை ஏற்றி கொண்டால் புத்தகத்தில் இருக்க கூடாதல்லவா?”

சிஷ்யன் குழப்பமாக பார்த்தான்.

குரு தொடர்ந்தார், ‘’உனது நினைவில் நின்ற மந்திரம் சூட்சம நிலையில் இருக்கிறது. புத்தகத்தில் இருக்கும் மந்திரம் ஸ்தூல வடிவம். இறைவன்
சூட்சம நிலையில் இருப்பவன். இறைவனுக்கு படைக்கப்படுவது ஸ்தூல வடிவில் இருந்தாலும் அவன் சூட்சமமாகவே உட்கொள்கிறான். நீ
உள்வாங்கிய பின் புத்தகத்தில் மந்திரம் அளவில் குறைந்துவிட்டதா?
அது போலதான் இறைவன் உட்கொண்ட பிரசாதம் அளவில் குறையாமல் நாம் எல்லோரும் உண்கிறோம். ஸ்தூலமாக இருக்கும் நாம் ஸ்தூலமாகவும், சூட்சுமமாக இருக்கும் இறைவன் சூட்சுமமாகவும் நைவேத்யத்தை
உட்கொள்கிறோம். ”

தனது பக்தியற்ற தர்க்கம் செய்த அறியாமையை குருவிற்கு நைவேத்யம் செய்து முழுமையடைந்தான் சிஷ்யன்.
------------------------------------
இணையத்தில் படித்தது. அறியத் தந்துள்ளேன்!

அன்புடன்,
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

34 comments:

வரதராஜன் said...

அன்புள்ளம் கொண்ட குருவே,
அதி அற்புதமான விளக்கத்தை எத்துனை அழகாக சீடனுக்குப் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுக்கிறார் அந்ந குரு!
அதேபோல எளிமையான உதாரணங்களோடு விளக்குகிறீர்கள், ஜோதிட பாடங்களை!
பலே, வாத்தியாரையா!!!

திவாண்ணா said...

o-{=C=

kmr.krishnan said...

பூர்ணமதம்: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே
=---------------
அதுவும் முழுமையானது.
இதுவும் முழுமையானது.
முழுமையிலிருந்தே முழுமை வந்துள்ளது.
முழுமையிலிருந்து முழுமை வந்த பிறகும் முழுமை
முழுமையாகவே உள்ளது

என்பது இதன் மேலோட்டமான பொருளாகும். இதற்கு மிக ஆழமான உட்பொருள்
உள்ளது.

இந்த மந்திரத்தில் உள்ள 'அதம்', 'இதம்' என்னும்
சொற்களின் உட்பொருளைக் காணலாம்.
இதம் / நம் கண்ணிற்குத் தென்படுவது
அதம் / கண் மறைவாக உள்ளது.
இதம்/ புலன்களின் மூலம் உணர்வது
அதம்/ புலன்களுக்கு அப்பால் இருப்பது
இதம் /விளைவு
அதம் / மூலப்பொருள்
இதம் / அழியும் தன்மை உடையது
அதம் / அழியாது நிலைத்து நிற்கும் உண்மைப் பொருள்.
==Ravi Shankar in Face Book

kmr.krishnan said...

பரிபூர்ண - பரிபூரணண் - இச்சொல்லுக்கு விளக்கம் கூறுவது இயலாது. ஆயினும், கீழ்க்கண்ட உபநிடதச் செய்யுளினை நோக்கவும் -

ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத்-பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவஸி1ஷ்யதே ||

"ஓம்.
பூரணம் அஃது (பரம்பொருள்);
பூரணம் இஃது (புலப்படும் உலகம்);
அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது.
அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க,
பூரணமே மிஞ்சும்."

http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2011/01/jaya-jaya-sita-ram-raga-saveri.html

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
அருமையான விளக்கம் ...நன்றி

Thirumal said...

sir,

nice

M.Thirumal
Pavalathanur

Gowda Ponnusamy said...

அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தாங்கள் அறியத்தந்த பதிவிலிருந்து நிதர்சனமான உண்மையை மனதில் உள்வாங்கிக் கொண்டோம்.படத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணை பானையைக் காணவில்லையே!!!....வகுப்பறையில் வாத்தியாரின் கண்மனிகள் அனைவருக்கும் இந்த கடை மாணாக்கனின் மனம் நிறைந்த நவராத்திரி மற்றும் தசரா வாழ்த்துக்கள்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

ravichandran said...

Respected Sir,

Happy morning.... Wow. Really superb article... Great....

Have a nice day.

With kind regards,
Ravichandran M.

Nagendra Bharathi said...

அருமை

Bala.N said...

Mikavum Arumai Ayya

venkateshsrm@gmail.com said...

குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்...மிகவும் அருமையான விளக்கம். நன்றி பாராட்டுகள். நான் தங்கள் பதிவுகள் மற்றும் புத்தகத்தின் முதல் பகுதியை படித்து விட்டேன். மேல்நிலை பாடங்களை படிக்க அனுமதி வேண்டி கேட்டுகொண்டிருந்தேன். பதில் வரவில்லை. பதிலை எதிர்பார்கிறேன்.

Rajam Anand said...

Complex information put in a simple way.
Thanks Vaathiyarae

Unknown said...

வணக்கம் ஐயா
அருமையான கருத்தது. அனைவருக்கும் இனிய தசரா வாழ்த்துக்கள்.

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
அன்புள்ளம் கொண்ட குருவே,
அதி அற்புதமான விளக்கத்தை எத்துனை அழகாக சீடனுக்குப் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுக்கிறார் அந்ந குரு!
அதேபோல எளிமையான உதாரணங்களோடு விளக்குகிறீர்கள், ஜோதிட பாடங்களை!
பலே, வாத்தியாரையா!!!/////

பாராட்டுக்கள் எல்லாம் என்னை எழுதவைக்கும் இறைவனுக்கே! அதாவது பழநிஅப்பனுக்கே!

Subbiah Veerappan said...

/////Blogger Vasudevan Tirumurti said...
o-{=C=////

என்ன சொல்ல வருகிறீர்கள் அன்பரே?

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
பூர்ணமதம்: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே
=---------------
அதுவும் முழுமையானது.
இதுவும் முழுமையானது.
முழுமையிலிருந்தே முழுமை வந்துள்ளது.
முழுமையிலிருந்து முழுமை வந்த பிறகும் முழுமை
முழுமையாகவே உள்ளது
என்பது இதன் மேலோட்டமான பொருளாகும். இதற்கு மிக ஆழமான உட்பொருள்
உள்ளது.
இந்த மந்திரத்தில் உள்ள 'அதம்', 'இதம்' என்னும்
சொற்களின் உட்பொருளைக் காணலாம்.
இதம் / நம் கண்ணிற்குத் தென்படுவது
அதம் / கண் மறைவாக உள்ளது.
இதம்/ புலன்களின் மூலம் உணர்வது
அதம்/ புலன்களுக்கு அப்பால் இருப்பது
இதம் /விளைவு
அதம் / மூலப்பொருள்
இதம் / அழியும் தன்மை உடையது
அதம் / அழியாது நிலைத்து நிற்கும் உண்மைப் பொருள்.
==Ravi Shankar in Face Book//////

உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
பரிபூர்ண - பரிபூரணண் - இச்சொல்லுக்கு விளக்கம் கூறுவது இயலாது. ஆயினும், கீழ்க்கண்ட உபநிடதச் செய்யுளினை நோக்கவும் -
ஓம் பூர்ணமத3: பூர்ணமித3ம் பூர்ணாத்-பூர்ணமுத3ச்யதே |
பூர்ணஸ்ய பூர்ணமாதா3ய பூர்ணமேவாவஸி1ஷ்யதே ||
"ஓம்.
பூரணம் அஃது (பரம்பொருள்);
பூரணம் இஃது (புலப்படும் உலகம்);
அந்த பூரணத்தினின்றும், இந்த பூரணம் உதிக்கின்றது.
அந்த பூரணத்தினின்று, இந்த பூரணத்தினை எடுக்க,
பூரணமே மிஞ்சும்."
http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.in/2011/01/jaya-jaya-sita-ram-raga-saveri.html//////

தொடர்ச்சியாக வந்துள்ள இந்தக் கருத்துப் பகிர்விற்கும் நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
அருமையான விளக்கம் ...நன்றி/////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

////Blogger Thirumal Muthusamy said...
sir,
nice
M.Thirumal
Pavalathanur/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
தாங்கள் அறியத்தந்த பதிவிலிருந்து நிதர்சனமான உண்மையை மனதில் உள்வாங்கிக் கொண்டோம்.படத்தில் கிருஷ்ணருக்கு பிடித்தமான வெண்ணை பானையைக் காணவில்லையே!!!....வகுப்பறையில் வாத்தியாரின் கண்மணிகள் அனைவருக்கும் இந்த கடை மாணாக்கனின் மனம் நிறைந்த நவராத்திரி மற்றும் தசரா வாழ்த்துக்கள்.
அன்புடன்,
-பொன்னுசாமி.////

ஆமாம். வெண்ணைப் பானையைக் காணவில்லை. நவராத்திரிக்கு இன்னும் நாட்கள் இருக்கிறதே சாமி! பரவாயில்லை நீங்கள் சொல்வதை கேட்டுக்கொள்கிறோம்!

Subbiah Veerappan said...

////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning.... Wow. Really superb article... Great....
Have a nice day.
With kind regards,
Ravichandran M.////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. நன்றி நாகேந்திர பாரதி!

Subbiah Veerappan said...

////Blogger Bala.N said...
Mikavum Arumai Ayya////

நல்லது. நன்றி பாலா!!

Subbiah Veerappan said...

////Blogger C.P. Venkat said...
குருஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்...மிகவும் அருமையான விளக்கம். நன்றி பாராட்டுகள். நான் தங்கள் பதிவுகள் மற்றும் புத்தகத்தின் முதல் பகுதியை படித்து விட்டேன். மேல்நிலை பாடங்களை படிக்க அனுமதி வேண்டி கேட்டுகொண்டிருந்தேன். பதில் வரவில்லை. பதிலை எதிர்பார்கிறேன்./////

வருகின்ற தீபாவளி நாளில் இருந்து புதிய தளத்தில் (New Web Site) மேல் நிலை வகுப்பைத் துவங்கத் திட்ட மிட்டுள்ளேன். வகுப்பறை மின்னஞ்சலுக்கு மனு ஒன்றை அனுப்பி வையுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger Rajam Anand said...
Complex information put in a simple way.
Thanks Vaathiyarae/////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

////Blogger sriram1114 said...
வணக்கம் ஐயா
அருமையான கருத்தது. அனைவருக்கும் இனிய தசரா வாழ்த்துக்கள்.////

நல்லது. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே!

விசு அய்யர் said...

இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல
இது போன்ற மாறுபட்ட வாதத்திற்கு உரியதை

பதிவிடாமல் தவிர்க்கலாம்
பதறாமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும்

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல
இது போன்ற மாறுபட்ட வாதத்திற்கு உரியதை
பதிவிடாமல் தவிர்க்கலாம்
பதறாமல் சொல்வதை ஏற்றுக் கொள்ளவும் /////

எதற்கு பதற்றம்? யாருக்கு பதற்றம்? அதைச் சொல்லுங்கள்!
மாறுபட்ட வாதம் என்பதற்கு என்ன அளவு கோல்?
என்னுடைய வாதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை!
அதுபோல உங்களுடைய வாதத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுமில்லை. இது பொது இடம். பதிவிடாமல் தவிர்க்கலாம் என்பதை யார் தீர்மானிப்பது?
கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல என்றால் நீங்கள் ஏன் மாறுபட்ட ஒரு சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை?

B. Lakshmi Narayanan said...

அருமையான விளக்கம் வாத்தியாரே...

நன்றி...

shree said...

very nice & practical story

விசு அய்யர் said...

Subbiah Veerappan said...
///எதற்கு பதற்றம்? யாருக்கு பதற்றம்? அதைச் சொல்லுங்கள்!
மாறுபட்ட வாதம் என்பதற்கு என்ன அளவு கோல்?
என்னுடைய வாதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை!
அதுபோல உங்களுடைய வாதத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுமில்லை. இது பொது இடம். பதிவிடாமல் தவிர்க்கலாம் என்பதை யார் தீர்மானிப்பது?
கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல என்றால் நீங்கள் ஏன் மாறுபட்ட ஒரு சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை?////

அய்யரின் முந்தைய பின்னூட்டம் வரவில்லை
அதனால் மாறுபட்ட வாதம் என குறிப்பிட்டது

உண்மை தான்
ஒருவருடைய வாதம் இன்னொருவருக்கு

எப்போதும் எதற்காகவும்
ஏற்புடையதாக இருக்க அவசியமில்லை

பதிவிடாமல் தவிர்க்கலாம் என்பது ஆலோசனை தான்
பதிவுக்கு விளக்கம் தராமைக்கு காரணம்

பதிந்தவரின் கருத்து உங்களுடையதல்ல நீங்கள்
படித்ததில் உங்களுக்கு பிடித்தது அதனால் தான்

Subbiah Veerappan said...

//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமையான விளக்கம் வாத்தியாரே...
நன்றி...//////

நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

Subbiah Veerappan said...

/////Blogger shree said...
very nice & practical story/////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
Subbiah Veerappan said...
///எதற்கு பதற்றம்? யாருக்கு பதற்றம்? அதைச் சொல்லுங்கள்!
மாறுபட்ட வாதம் என்பதற்கு என்ன அளவு கோல்?
என்னுடைய வாதம் உங்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டிய அவசியமில்லை!
அதுபோல உங்களுடைய வாதத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயமுமில்லை. இது பொது இடம். பதிவிடாமல் தவிர்க்கலாம் என்பதை யார் தீர்மானிப்பது?
கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் சரியல்ல என்றால் நீங்கள் ஏன் மாறுபட்ட ஒரு சரியான விளக்கத்தைக் கொடுக்கவில்லை?////
அய்யரின் முந்தைய பின்னூட்டம் வரவில்லை
அதனால் மாறுபட்ட வாதம் என குறிப்பிட்டது
உண்மை தான்
ஒருவருடைய வாதம் இன்னொருவருக்கு
எப்போதும் எதற்காகவும்
ஏற்புடையதாக இருக்க அவசியமில்லை
பதிவிடாமல் தவிர்க்கலாம் என்பது ஆலோசனை தான்
பதிவுக்கு விளக்கம் தராமைக்கு காரணம்
பதிந்தவரின் கருத்து உங்களுடையதல்ல நீங்கள்
படித்ததில் உங்களுக்கு பிடித்தது அதனால் தான் ///////

கொடுக்கப்பெற்ற விளக்கம் சரியல்ல என்றவர், அதற்குரிய உங்களுடைய விளக்கத்தை இப்போது வரை கொடுக்கவில்லை!