மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

7.10.15

வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய விருப்பமா? அப்படி என்றால் இதைப் படியுங்கள்

வேலையை விட்டுவிட்டு சொந்தத் தொழில் செய்ய விருப்பமா? அப்படி என்றால் இதைப் படியுங்கள்

வேலை செய்வதிலிருந்து தொழிலுக்கு மாறும்போது கவனிக்க வேண்டுயவை..

ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவரும் ஒருவர் சொந்தமாக தொழில் தொடங்கும்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும்? தொழில் தொடங்க  தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்? எந்தெந்த விஷயங்களில்  முன்னுரிமை அளிக்க வேண்டும் என ஐஐடி பேராசிரியர் தில்லைராஜனிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர்.

இரு பிரிவினர்!

“30 வயதுக்கு கீழுள்ளவர்கள், 30 வயதை கடந்தவர்கள் என வேலையிலிருந்து பிஸினஸுக்கு மாறுகிறவர்களை இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். 30 வயதுக்கு கீழுள்ளவர்களின் வாழ்க்கை அவரவர்களின் கையில் இருக்கும். இந்த வயதில் அவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கலாம். அதனால் குழந்தைகளுக்கான கல்விச் செலவு, குடும்பத்துக்கான செலவு என எந்தவொரு ஃபைனான்ஷியல் கமிட்மென்ட்டுகளும் இருக்காது. எனவே, துணிந்து ரிஸ்க் எடுக்க இந்த வயதில் வாய்ப்புண்டு.

ஆனால், 30 வயதை கடந்தவர்க ளுக்கு திருமணமாகி குழந்தை இருக்கும். அவர்களின் கல்வி மற்றும் திருமணச் செலவு களுக்காகவும், தங்களது ஓய்வுக் காலத்துக்காகவும் பணத்தை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பார்கள். நம்மை நம்பி நமது குடும்பம் வாழ்கிறது என்கிற எண்ணத்துடன் எடுக்கும், ஒவ்வொரு முடிவையும் மிகவும் கவனத்துடன் கையாள வேண்டும்.
முன்னேற்பாடுகள் முக்கியம்!

எனக்கு தொழில் குறித்த அனுபவம் இருக்கிறது; அதற்கான நிதி வசதியும் இருக்கிறது என்னும்  பட்சத்தில் வயது அதற்கு தடையாக இருக்காது.

அதேசமயம், இதுவரை வேலையில் இருந்து பழகிய வர்கள், திடீரென்று தொழிலுக் குள் அடி எடுத்து வைக்கும்போது, மாதாமாதம் கிடைத்து வந்த வருமானம் தடைபடும். இதை சமாளிக்கும் வகையில் போதுமான நிதியையும், தொழிலில் ஏற்படும் செலவுகளுக்கு தேவைப்படும் பணத்தையும் (குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கான செலவுத் தொகை) முன்பாகவே ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். ஏனெனில், சொந்த தொழிலில் ஆரம்ப காலத்தில் மாதாமாதம் வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. நன்கு வளர்ந்தபிறகு கிடைக்கும் லாபத்திலிருந்து வேண்டுமானால், மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை சம்பள மாக எடுத்துக் கொள்ளலாம்.

வேலையில் இருந்த நேரத்தை விட சொந்த தொழிலுக்கு அதிக நேரத்தை ஒதுக்க வேண்டி யிருக்கும். கடின உழைப்பு மிகவும் முக்கியமானதாகும். இந்த மனநிலைக்கெல்லாம் தயார் படுத்திக்கொண்டுதான் வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்க வேண்டுமே தவிர, அஜாக்கிரதையுடன் ஆரம்பிப்பது சங்கடத்தை தரும்” என்றவர் எந்த சமயங்களில் வேலையிலிருந்து விலகி சொந்த தொழிலை தொடங்கலாம் எனச் சொன்னார்.

சரியான நேரம்!

“ஒருவர் படித்து முடித்ததும் வேலை என்றில்லாமல் தொழில் தான் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார் என்றால், அவர் தொழில் தொடங்க நினைக்கும் துறை சார்ந்த நிறுவனங்களில் வேலைக்குச் சேர்ந்து அங்கு கற்றுக்கொண்ட விஷயங்களை, தொழில் செய்வதற்கான நெழிவு சுழிவுகளை கற்றுக்கொண்டு அதை வைத்து தொழிலை ஆரம் பிக்கலாம். அப்போது ஏற்கெனவே வேலை செய்த நிறுவனத்தின் வாயிலாக தொழில் சார்ந்த தொடர்புகள் கிடைத்திருக்கும். அந்த தொழில் சார்ந்த அறிவும் வளர்ந்திருக்கும் எனும்போது வேலையிலிருந்து தொழிலுக்கு மாறுவதில் பிரச்னை வந்துவிடாது.

உதாரணமாக, தற்போது ஐடி துறையில் ஜாம்பவானாக இருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவிய நாராயண மூர்த்தியும், தன்னுடைய படிப்பு சார்ந்த துறையிலேயே பணியாற்றி, பின்னர் அதிலிருந்து விலகி இன்ஃபோசிஸ் என்னும் ஐடி நிறுவனத்தை தனது நண்பர் களுடன் ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டவர். ஆக, வேலையிலிருந்து தொழிலுக்கு மாறலாம். ஆனால், அது சார்ந்த அறிவு உங்களுக்கு இருக்கிறதா என்பதைப் பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

தொழில் வளர்ச்சி!

ஒருவர் ஆரம்பிக்கப் போகும் தொழில் சார்ந்த துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என்பதை, வேலையிலிருந்து விலகி தொழில் தொடங்கலாம் என்று நினைப்பவர்கள் கவனிக்க தவறுகிறார்கள். இதுவே அவர்களை பிரச்னைக்கு பெரிதும் ஆளாக்குகிறது. இன்றைய உலகம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் அவசரகதியில் சுழன்றுகொண்டு இருக்கிறது. மனிதர்கள் தங்கள் ஒவ்வொருவரையும் அதனுடன் அப்டேட் செய்துகொண்டே வருகிறார்கள். இப்படி இருக்கை யில் இன்றைய நிலையில் தொழிலை ஆரம்பிப்பவர்கள் இன்னும் காலத்துக்கேற்ப புதுமை படைப்பவர்களாய் இருக்க வேண்டும்.

பெரும்பாலானவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்கிற ஆசை இருந்தும், ரிஸ்க் எடுக்க பயந்து, தொடங்காமலே  விட்டுவிடுகிறார்கள். வாய்ப்பு களை உருவாக்கிக் கொண்டு சொந்த தொழிலில் காலடி வைப்பவர்களே ஜெயிக் கிறார்கள்'' என்றார் தெளிவாக.
வேலையிலிருந்து விலகி சொந்த தொழில் தொடங்கும் போது, வாய்ப்புகளை சரியாக  அமைத்துக்கொண்டு, முறையாக ஆரம்பித்தால் வெற்றி நிச்சயமே!

நன்றி: நாணயம் விகடன்
===========================================
படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23 comments:

B. Lakshmi Narayanan, Tuticorin said...

தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மிகவும் அருமை வாத்தியாரே!!!

அத்துடன் யார் எளிதாக வியாபாரத்தில் நுழையாலாம், யார் கஷ்டப்பட்டு நுழைவார்கள், யார் அதன் பக்கத்தில் கூட செல்லக் கூடாது என உதாரண ஜாதகம் கொடுத்திருந்தால் இன்னும் இப்பதிவு நெத்தியடி பதிவாக இருக்கும். உதாரணம் கொடுப்பது எளிதல்ல என்று தாங்கள் முன்பே கூறியுள்ளீர்கள். இருந்தாலும் ப்ராக்டிகல் நாலேஜ் வேண்டுமே ஜோதிடம் படிக்க...

பிழை இருப்பின் மன்னிக்கவும்... அனைத்து கத்துகுட்டிகளின் சார்பாக நான் வேண்டுகிறேன். தயவு செய்து உதாரணம் கொடுங்கள்... மாணவ கண்மணிகள் தங்களின் கணிப்பை மேம்படுத்த இது உதவும்...

பிழை இருப்பின் மன்னிக்கவும்...

அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

வேப்பிலை said...

எந்த தொழிலாக இருந்தாலும்
எப்படியாவது வரி கட்டனும் சாமியோவ்

இந்தியாவில் தொழில் தொடங்குவது
இப்படி ஈசி அல்ல (நீங்கள் சொல்வது போல்)

என்ன அப்படி பார்க்கிறீர்கள்
எல்லா வற்றிக்கும் வரி கேட்கிறது இந்த அரசு ...

இந்திய நாட்டில் இருந்து க(று)ருப்பு பணத்தை
இவர்கள் வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டு

இந்தியாவில் தொழில் தொடங்க "வாங்க... வாங்க..." என
இப்போ அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது

இந்தியாவில் தொழில் தொடங்க
இந்தியர்கள் அத்தனை சிரமப்பட வேண்டும்

வாடகைக்கு வரி
வேலைக்கு ஆள் எடுத்தால் வரி

கேண்டினுக்கு வரி
கேப் (cab ) எடுத்தாலும் வரி

ஹோட்டலுக்கு போனால் வரி
சினிமா வுக்கு போனாலும் வரி

பாருக்கு போனால் வரி
ஊருக்கு போனாலும் வரி

சேமிப்பு செய்தாலும் (இன்சூரன்ஸ் சேமிப்புக்கு) வரி..
சோர்ந்து போய் டி வி முன்னால் உட்கார்ந்தாலும் வரி...

5 சதவீதமாக இருந்த சேவை வரி
14 சதவீதமாக ஆனது 10-12 ஆண்டுகளில்

திறமை இல்லாத பிரதமர் இந்தியாவிற்கு கிடைத்தது
துர் அதிர்ஷ்டம் தான் என்ன செய்ய

முடியலடா சாமி என
முகத்தை மூடி உட்கார்ந்தேன்

சோர்வின் மிகுதியால்
சோகம் தாங்காமல்

அயர்ந்து தூங்கிவிட்டேன்
அப்போ ஒரு கனவு

அங்கே நிதி அமைச்சரை
அப்படியே சந்தித்தேன்

எல்லாவற்றிற்கும் சேவை "வரி" அது
எப்படி "சரி" என்றேன் சந்தேகமாக

பேசினால் வரி (கிண்டலாக)
பேசாவிட்டால் கிடையாது என்றார்

கொஞ்சம் வியப்போடு பார்த்தேன்
குழப்பம் வேண்டாம் என விளக்கம் தந்தார்

போனில் பேசினால் தான் வரி
பேசாவிட்டால் வரியில்லை என

அதனால் தான் மக்கள் உறவை
அப்படியே புறம் தள்ளுகிரார்களா என வியந்தேன்

கோவில் நிர்வாகம் வாடகைக்கு கடை தருகிறதே
கேட்டு பார்க்கலாம் தானே வரியை என்றேன்

குத்தகைக்கு கொடுத்த இடத்தில் வாடகை கேட்டால்
குத்த "கை" தான் வருகிறது

குத்த கையே வரவில்லையே இவர்கள்
குடுப்பர்களா வரியை என்று பதில் கேள்வி கேட்டார்

வரி கட்ட வில்லையானால் 30 சதவீதம்
வட்டியை penalty உடன் வசூல் செய்வோம்

தேவைப்பட்டால் அவர்களை
தேவையான போது கைதும் செய்வோம்

என்றார் ஒரு பெருமிதத்தோடு
என்ன சேவை வரியில் இத்தனை கொடுமையா

சம்பாதித்தாலும் (வருமான) வரி
செலவு செய்தாலும் (சேவை) வரி

சேமிப்பு செய்தாலும் (சேவை) வரி என்ன
செய்ய என தெரியவில்லை

அப்படியானால் செத்தால் தான் வரியில்லை என
அவர் பாணியிலே கிண்டல் செய்தேன்

அதற்க்கும் வரி போட சிபாரிசு செய்தேன்
ஆனால் அவன் செத்த பிறகு யாரிடம் வசூல் செய்ய

என பிரதமர் மறுத்துவிட்டார்
என மறு மொழி சொன்னார்

தோளில் யாரோ தட்டியது
போல இருந்தது திரும்பி பார்த்தேன்

வீர பாண்டிய கட்டபொம்மன்
விருட் என நடுங்கினேன்

வரி வட்டி கிஸ்தி யாரை கேட்கிறாய்
வரி எதற்கு கேட்கிறாய் வரி

வானம் பொழிகிறது
பூமி விளைகிறது என்ற அதே

வீர பாண்டிய கட்டபொம்மனின்
வீர வசனம்

திடுக்கிட்டு விழித்தேன்
தூக்கம் கலைந்தது

வெளி நாட்டு காரன் இங்கே
தொழில் செய்தால் வரி சலுகை உண்டு

இந்தியன் என்றால்
இது இல்லை இந்தியாவில்

10 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3 ரூபாய் வரி
1000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் எக்ஸ்ட்ரா டாக் டைம்

இனி இந்தியாவில் வாழ்வது தொழில் தொடங்குவது கஷ்டம்
இப்படி ஒரு உணர்வு உங்களுக்கும் வந்தால்

இன்னொரு கட்டபொம்மன் பிறக்க காக்க வேண்டாம்
இப்போ நாம் ஒவ்வொருவரும் கட்டபொம்மனாக மாறுங்கள்

shree said...

ஆசிரியர் என்றால் அது நீங்கள் தான். தொழில் தொடங்கலாமா என யோசிப்போருக்கு ஏற்ற ஆலோசனை.

நன்றி.

அதற்கு வந்த பின்னூட்டமும் அருமை.

GOWDA PONNUSAMY said...

அய்யா வணக்கம்!
மாத்தி யோசிங்க அய்யாமார்களே! எத்தனையோ தொழில் முனைவோர்களும், தொழில் அதிபர்களும் தொழில் செய்து கொண்டுதானே உள்ளனர்.சிரமங்களைத் தாண்டி முன்னுக்கு வருபவர்களையும் முடியாதுபோய் நசிந்து போனவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.
எதற்கும் வாத்தியார் அவர்களின் அறிவுரையையும் அறிந்து கொண்டு செயல்படுவது நலம்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

hamaragana said...

anbudan vaathiyaara ayya vanakkam

arumaiyana yosanai. new enterpriner must read this ..they can achive the target...

KJ said...

Respected Sir,

Very useful lesson particularly for today youngsters.
But we should not leave the current job till we find some balance in our new Business, if we have to take care of Family. Otherwise no problem in that.
This is my opinion.

Thanks,
Sathishkumar GS

வரதராஜன் said...

ஐயா
நிதர்சனமான உண்மைகள்.சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய தொழிற்சாலை தொடங்துவது வரை யாராயிருந்தாலும் அடிப்படை அறிவு (தொடங்கும் தொழில் பற்றிய] இல்லையேல் நிச்சயம் அவர் அதில் சிறக்க இயலாது என்பதுடன் நஷ்டமடைவார் என்பதும் 100% உண்மை.

Kumanan Samidurai said...

அய்யா வணக்கம், ஆசரியர் சொன்னது சரிதான், ஆனால் இன்னும் நிறைய விஷயம் அனுபவித்து தான் தொழில் செய்யணும், சரி நம்ப ஜாதகப்படி விளக்கமாக சொல்லுங்க அய்யா, திரு பா. லக்ஷ்மி நாராயணன் அவர்கள் சொன்னது போல் உதாரணமும், விளக்கமும் கொடுத்தல் நல்லா இருக்கும் , நானும் இதைத்தான் சில வருடமா சிந்தனையோடு இருக்கேன், உங்கள் விளக்க உரைதான் எனக்கு வேண்டும் அப்புறம் என் ஜாதகத்தை நான் பார்த்து முடிவு எடுக்கலாம்.
நன்றி.

சா. குமணன்

selvaspk said...

In USA, if a person want to do a small Business they have so many sources to get knowledge like how to get funds, what are tax they are liable, all discussed on a monthly sessions in library, Websites and bribe free.

In India, I am not sure where I should find how to get license, what certificates I have to get, taxation makes it worse. Yes, we have brokers who does all bribing and get all done. It's a shame we don't have clear system where as most developed countries used Indians on their backend for brain power.

Probably if you make few posts a month to see what solutions you think as possible options for our generation we could take that and execute.

Even if you know or ask the students to provide and make a list of good, active and fruitful non profit organization list and contacts of them it will be great. Like categorized sector wise ( agri, human rights, orphanage, school, old age).

kmr.krishnan said...

ஜின்னிங் ஃபாக்டரிக்கு உதிரிபாகம் விற்பனை செய்து கொண்டிருந்தார்
என் உறவினர்.காது கேட்காதவர். அதற்கான காது கேட்கும் கருவியையும் வைக்க மாட்டார்.வியாபாரத்தில் நல்ல வெற்றி பெற்றார்.

அவரிடம் ஒருமுறை வியாபாரம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவர் கூறினார்:"இப்போது நீ பார்ப்பதெல்லாம் என் வெற்றிகளைத்தான். நான் தோல்வி அடைந்த தருணங்களை நீ அறிய மாட்டாய்.வியாபாரம் கற்றுக்கொள்ள நான் பேருந்து நிற்கும் இடத்தில் பால் பாயிண்டு பேனா விற்று இருக்கிறேன்.கைக்குட்டை விற்று இருக்கிறேன்.என் வளர்ச்சி திடீரென வரவில்லை. சுமார் 30 ஆண்டுக்கான விடா முயற்சி.எனவே வியாபாரத்திற்கு விடாமுயற்சியும், எதையும் தாங்கும் இதயமும், தோல்வி கண்டு துவளா மனமும் வேண்டும். முக்கியமாக பொறுமையும், நம்பிக்கையும் வேண்டும்.இவையெல்லாம் உனக்கு இருக்கிறதா? இருந்தால் வா .கை பழகு" என்றார்.
நான் போகவில்லை.

Subbiah Veerappan said...

//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை. மிகவும் அருமை வாத்தியாரே!!!
அத்துடன் யார் எளிதாக வியாபாரத்தில் நுழையாலாம், யார் கஷ்டப்பட்டு நுழைவார்கள், யார் அதன் பக்கத்தில் கூட செல்லக் கூடாது என உதாரண ஜாதகம் கொடுத்திருந்தால் இன்னும் இப்பதிவு நெத்தியடி பதிவாக இருக்கும். உதாரணம் கொடுப்பது எளிதல்ல என்று தாங்கள் முன்பே கூறியுள்ளீர்கள். இருந்தாலும் ப்ராக்டிகல் நாலேஜ் வேண்டுமே ஜோதிடம் படிக்க...
பிழை இருப்பின் மன்னிக்கவும்... அனைத்து கத்துகுட்டிகளின் சார்பாக நான் வேண்டுகிறேன். தயவு செய்து உதாரணம் கொடுங்கள்... மாணவ கண்மணிகள் தங்களின் கணிப்பை மேம்படுத்த இது உதவும்...
பிழை இருப்பின் மன்னிக்கவும்...
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.//////

simple rule: 10ஆம் வீட்டுக்காரன் (owner of the 10th house - Lord of the 10th house) மறைவிடங்களில் போய் உட்கார்ந்து இருந்தால், அதாவது 6, 8, & 12ஆம் வீடுகளில் இருந்தால், அவர்களுக்கு, அதாவது அந்த ஜாதகர்களுக்கு சொந்தத் தொழில் உதவாது. மீறி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால், பண முதலீடு எதுவும் இல்லாமல் கமிஷன் அடிப்படையில் (Brokerage) சொந்தத் தொழில் செய்யலாம்.

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
எந்த தொழிலாக இருந்தாலும்
எப்படியாவது வரி கட்டனும் சாமியோவ்
இந்தியாவில் தொழில் தொடங்குவது
இப்படி ஈசி அல்ல (நீங்கள் சொல்வது போல்)
என்ன அப்படி பார்க்கிறீர்கள்
எல்லா வற்றிக்கும் வரி கேட்கிறது இந்த அரசு ...
இந்திய நாட்டில் இருந்து க(று)ருப்பு பணத்தை
இவர்கள் வெளி நாட்டிற்கு அனுப்பிவிட்டு
இந்தியாவில் தொழில் தொடங்க "வாங்க... வாங்க..." என
இப்போ அழைப்பது வேடிக்கையாக இருக்கிறது
இந்தியாவில் தொழில் தொடங்க //////

உலகில் எங்கேயுமே விற்பனை வரியும், சேவை வரியும் கிடையாதாம். அதைலும் நாம் தான் முன்னோடி.
என்ன செய்ய முடியும்? வருத்தப்பட முடியும் அவ்வளவுதான் சாமி!

Subbiah Veerappan said...

/////Blogger shree said...
ஆசிரியர் என்றால் அது நீங்கள் தான். தொழில் தொடங்கலாமா என யோசிப்போருக்கு ஏற்ற ஆலோசனை.
நன்றி.அதற்கு வந்த பின்னூட்டமும் அருமை./////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா வணக்கம்!
மாத்தி யோசிங்க அய்யாமார்களே! எத்தனையோ தொழில் முனைவோர்களும், தொழில் அதிபர்களும் தொழில் செய்து கொண்டுதானே உள்ளனர்.சிரமங்களைத் தாண்டி முன்னுக்கு வருபவர்களையும் முடியாதுபோய் நசிந்து போனவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.
எதற்கும் வாத்தியார் அவர்களின் அறிவுரையையும் அறிந்து கொண்டு செயல்படுவது நலம்.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////

தூத்துக்குடிக்காரரின் பின்னூட்டத்தையும், அதற்கு வாத்தியார் எழுதியுள்ள பதிலையும் படியுங்கள்

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
anbudan vaathiyaara ayya vanakkam
arumaiyana yosanai. new enterpriner must read this ..they can achive the target...////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger KJ said...
Respected Sir,
Very useful lesson particularly for today youngsters.
But we should not leave the current job till we find some balance in our new Business, if we have to take care of Family. Otherwise no problem in that. This is my opinion.
Thanks,
Sathishkumar GS////

உண்மைதான் தனிக்கட்டைகள் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம். குடும்பஸ்தர்கள் யோசித்துத்தான் முடிவு செய்ய வேண்டும். இல்லையென்றால் அவஸ்தையாகிவிடும்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
ஐயா
நிதர்சனமான உண்மைகள்.சிறிய பெட்டிக்கடை முதல் பெரிய தொழிற்சாலை தொடங்துவது வரை யாராயிருந்தாலும் அடிப்படை அறிவு (தொடங்கும் தொழில் பற்றிய] இல்லையேல் நிச்சயம் அவர் அதில் சிறக்க இயலாது என்பதுடன் நஷ்டமடைவார் என்பதும் 100% உண்மை./////

முன் அனுபவம் இல்லை என்றால் எதுவும் நடக்காது!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம், ஆசரியர் சொன்னது சரிதான், ஆனால் இன்னும் நிறைய விஷயம் அனுபவித்து தான் தொழில் செய்யணும், சரி நம்ப ஜாதகப்படி விளக்கமாக சொல்லுங்க அய்யா, திரு பா. லக்ஷ்மி நாராயணன் அவர்கள் சொன்னது போல் உதாரணமும், விளக்கமும் கொடுத்தல் நல்லா இருக்கும் , நானும் இதைத்தான் சில வருடமா சிந்தனையோடு இருக்கேன், உங்கள் விளக்க உரைதான் எனக்கு வேண்டும் அப்புறம் என் ஜாதகத்தை நான் பார்த்து முடிவு எடுக்கலாம்.
நன்றி.
சா. குமணன்//////

simple rule: 10ஆம் வீட்டுக்காரன் (owner of the 10th house - Lord of the 10th house) மறைவிடங்களில் போய் உட்கார்ந்து இருந்தால், அதாவது 6, 8, & 12ஆம் வீடுகளில் இருந்தால், அவர்களுக்கு, அதாவது அந்த ஜாதகர்களுக்கு சொந்தத் தொழில் உதவாது. மீறி செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டால், பண முதலீடு எதுவும் இல்லாமல் கமிஷன் அடிப்படையில் (Brokerage) சொந்தத் தொழில் செய்யலாம்.

Subbiah Veerappan said...

/////Blogger selvaspk said...
In USA, if a person want to do a small Business they have so many sources to get knowledge like how to get funds, what are tax they are liable, all discussed on a monthly sessions in library, Websites and bribe free.
In India, I am not sure where I should find how to get license, what certificates I have to get, taxation makes it worse. Yes, we have brokers who does all bribing and get all done. It's a shame we don't have clear system where as most developed countries used Indians on their backend for brain power.
Probably if you make few posts a month to see what solutions you think as possible options for our generation we could take that and execute.
Even if you know or ask the students to provide and make a list of good, active and fruitful non profit organization list and contacts of them it will be great. Like categorized sector wise ( agri, human rights, orphanage, school, old age). /////

உங்களின் கருத்துப் பகிர்விற்கும் ஆலோசனைக்கும் நன்றி. பின்னால் செய்யலாம். தற்சமயம் நேரமில்லை நண்பரே!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஜின்னிங் ஃபாக்டரிக்கு உதிரிபாகம் விற்பனை செய்து கொண்டிருந்தார்
என் உறவினர்.காது கேட்காதவர். அதற்கான காது கேட்கும் கருவியையும் வைக்க மாட்டார்.வியாபாரத்தில் நல்ல வெற்றி பெற்றார்.
அவரிடம் ஒருமுறை வியாபாரம் சொல்லிக் கொடுங்கள் என்று கேட்டேன்.அவர் கூறினார்:"இப்போது நீ பார்ப்பதெல்லாம் என் வெற்றிகளைத்தான். நான் தோல்வி அடைந்த தருணங்களை நீ அறிய மாட்டாய்.வியாபாரம் கற்றுக்கொள்ள நான் பேருந்து நிற்கும் இடத்தில் பால் பாயிண்டு பேனா விற்று இருக்கிறேன்.கைக்குட்டை விற்று இருக்கிறேன்.என் வளர்ச்சி திடீரென வரவில்லை. சுமார் 30 ஆண்டுக்கான விடா முயற்சி.எனவே வியாபாரத்திற்கு விடாமுயற்சியும், எதையும் தாங்கும் இதயமும், தோல்வி கண்டு துவளா மனமும் வேண்டும். முக்கியமாக பொறுமையும், நம்பிக்கையும் வேண்டும்.இவையெல்லாம் உனக்கு இருக்கிறதா? இருந்தால் வா .கை பழகு" என்றார்.
நான் போகவில்லை./////

அடியேனும் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்தவன், ஒரு நாள் அதை உதறிவிட்டு சொந்தத் தொழிலுக்கு வந்தவன். சொந்தத் தொழில் செட் ஆவதற்கு ஒரு வருடம் பாடு பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை எழுதினால் ஒரு புத்தகமாகப் போடலாம்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

தங்கள் பதிலுக்கு நன்றி வாத்தியாரே!!!

தமிழ்மணி said...

//அடியேனும் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்தவன், ஒரு நாள் அதை உதறிவிட்டு சொந்தத் தொழிலுக்கு வந்தவன். சொந்தத் தொழில் செட் ஆவதற்கு ஒரு வருடம் பாடு பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை எழுதினால் ஒரு புத்தகமாகப் போடலாம்.//

வார வாரம் பக்திமலர் போல அனுபவ மலர் போடுங்கள் ஐயா.... காத்திருக்கிறோம் :)

Subbiah Veerappan said...

////Blogger தமிழ்மணி said...
//அடியேனும் ஒரு நிறுவனத்தில் சம்பளத்திற்கு வேலை செய்தவன், ஒரு நாள் அதை உதறிவிட்டு சொந்தத் தொழிலுக்கு வந்தவன். சொந்தத் தொழில் செட் ஆவதற்கு ஒரு வருடம் பாடு பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்களை எழுதினால் ஒரு புத்தகமாகப் போடலாம்.//
வார வாரம் பக்திமலர் போல அனுபவ மலர் போடுங்கள் ஐயா.... காத்திருக்கிறோம் :)////

தற்சமயம் நேரமில்லை. பிறகு பார்க்கலாம்!