மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

13.10.15

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற வாசல் அது!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மன வாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல்
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப் புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்தி வடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 
இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர் வாசல் 
மால் மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8 comments:

வேப்பிலை said...

Muruga
Muruga

வரதராஜன் said...

வணக்கம் வாத்தியாரையா,
எண்ணற்ற பேர்கட்கு எத்தனையோ விதங்களில் அவர்களது வாழ்க்கைதனில் ஏற்றத்தைத் தந்துள்ள எட்டுக்குடி வேலவன், வாத்தியார் உள்பட வகுப்பறை முழுவதும் நிறைந்து கிடக்கும் மாணவக் கண்மணிகளின் வாழ்க்கையிலும் அருள் பாலிக்கட்டும்.

kmr.krishnan said...

Nice Sir

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
Muruga
Muruga////

கந்தா போற்றி
கடம்பா போற்றி
கதிர்வேலா போற்றி!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வணக்கம் வாத்தியாரையா,
எண்ணற்ற பேர்கட்கு எத்தனையோ விதங்களில் அவர்களது வாழ்க்கைதனில் ஏற்றத்தைத் தந்துள்ள எட்டுக்குடி வேலவன், வாத்தியார் உள்பட வகுப்பறை முழுவதும் நிறைந்து கிடக்கும் மாணவக் கண்மணிகளின் வாழ்க்கையிலும் அருள் பாலிக்கட்டும்./////

எட்டுக்குடி முருகன் கோயில் நாகபட்டிணம் அருகே உள்ளது. அங்கே சென்றிருக்கிறீர்களா வரதராஜன்?

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
Nice Sir////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

வரதராஜன் said...

குமரக் கடவுள் இதுவரை தருணம் ஒன்று தரவில்லை, வாத்தியாரையா!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
குமரக் கடவுள் இதுவரை தருணம் ஒன்று தரவில்லை, வாத்தியாரையா!/////

தந்திருப்பார். நன்றாக யோசித்துப் பாருங்கள்!