மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

30.9.15

இக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி?


இக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி?

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்களால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த்தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு
30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ்
30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம்.

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்!

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல
அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள்.

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும்
அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி,
இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம்
ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு
மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும்
பொறுப்பும் வராது.

அத்தியாவசியமா, ஆடம்பரமா..?

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி,
ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.

பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும்.

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!

வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.
செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங்கள்.

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது,
ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/
ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான
புரிதலை உண்டு பண்ணும்.

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்!
தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள்
கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக்
கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது
உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை
வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான்,
குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு
அவர்களுக்குக் கிடைக்கும்.

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர்
இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும்.
இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும்.

பாக்கெட் மணி கொடுங்கள்!

குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம்.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான
பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள்.
30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.
வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘
மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம்,
அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது.

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.


மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்

இக்கட்டில் தலை தப்பிக்க அதுதான் வழி?
---------------------------------
இணையத்தில் படித்தேன். பிடித்திருந்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

Nagendra Bharathi said...

அருமை

lrk said...

ஐயா வணக்கம்

இன்றைய நவீன கால த்தில் சிக்கனம் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் உள்ளனர் ்.
வரவு செலவு பார்ப்பதே தரம் குறைவானது என்று நினைக்கின்றனர்.

பதிவு அருமை ஐயா
நன்றி
கண்ணன்.

Thirumal Muthusamy said...

ஐயா

அற்புதம். காலத்திற்கேற்ற சிந்தனை.

எம்.திருமால்
பவளத்தானூர்

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
இன்றைய கால கட்டத்திற்க்கு, இளைய தலைமுறையினர்க்கு மிக அவசியமான, தேவையான அறிவுறைகள். மறுக்க முடியாத உண்மையும் கூட.
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Bala.N said...

அருமையான பதிவு அய்யா

நன்றி

வேப்பிலை said...

கட்டிலில் தலையா என தலைப்பை
கண்டதும் குழம்பினேன் பின் தான் புரிந்தது

சேமிக்க சொல்கிறீர்கள்... சுருட்டி கொண்டு
சேர்த்து தருவதாக சொல்பவர் போகிறார்

அதனால் தான் நம் இளசுகள்
அப்படி இழப்பதற்கு அனுபவிக்கலாம் என

இப்படி செலவு செய்கிறார்கள்
இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை

அரசுக்கு வரி கொடுப்பதற்காகவே
அவர்கள் சம்பாதிப்பதும் செலவழிப்பதும்

அரசுக்கு வரி கொடுப்பதற்கு தான்
அவர்கள் சேமிப்பு செய்தாலும் வரி உண்டு

என சொல்லி வையுங்கள் அப்போது தான்
எப்போவாவது சேமிக்கவும் செய்வார்கள்

நீங்கள் பொறுமை அப்புறம் வாங்கி
தருவதாக சொல்லும் முன் அவளின் பாய் பிரண்டு

வாங்கி தந்து விடுவார் அம்மா
வாங்கி தரும் வரை பொறுமை (தேவை)இல்லை

இன்றைய ஆடம்பரம்
நாளைய அத்தியாவசியம்

அதனால் தடை போடதீங்க
அத்தனைக்கும் ஆசை பட அனுமதியுங்க

செலவை குறைத்து வருவாயை கூட்டவா
செலவுக்கு ஏற்ப வருமானத்தை பெருக்கவா

இதில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தேர்ந்தவர்கள்
இவர்கள் நேரத்தை காசாக்கி கொண்டிருக்கிறார்கள்

சேமிப்பு பற்றி கற்று கொடுக்க வேண்டியதில்லை
சேர்த்து தரும் வங்கி போஸ்ட் ஆபீஸ் அதிக வட்டி

தருவதில்லை அவர்கள் தரும் வட்டிக்கும்
தடால் என "வரி" பிடிக்கிறார்கள்

அதிக வட்டி தருபவர்கள் அதனை
அப்படியே சுருட்டி கொண்டு போகிறார்கள்

அதனால் சேமிக்கும் பழக்கம் இன்றைய நாளில்
அனாவசியம் இது தான் எதார்த்தம்

உங்கள் கருத்துக்கு மறுப்பு சொல்லும் எண்ணம்
உண்மையில் இல்லை எனினும் இது தான் உண்மை

வரதராஜன் said...

ஐயா,
நாட்டு நடப்பு. நம் வீட்டு இளம் தலைமுறையினரின் இன்றைய நடப்பு என்று காலக்கோளாறைப் புட்டுப் புட்டு வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தயும் பல கோடிகளுக்குச் சமம்.
சேமிப்பின் அவசியத்தைச் சொல்லி, தம் மக்களின் சேமிப்புக்கு பாராட்டும் மறைமுகமாக உள்ளதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஐயா!
படித்ததில் பயனுள்ளதைப் பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள்.

shree said...

நன்றி . மிக அருமை.

vignesh waran said...

Very necessary sharing for this generation...

Nandri ...

Subbiah Veerappan said...

////Blogger Nagendra Bharathi said...
அருமை////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
ஐயா வணக்கம்
இன்றைய நவீன காலத்தில் சிக்கனம் என்பதற்கு அர்த்தம் தெரியாமல் உள்ளனர்
வரவு செலவு பார்ப்பதே தரம் குறைவானது என்று நினைக்கின்றனர்.
பதிவு அருமை ஐயா
நன்றி
கண்ணன்.//////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
அற்புதம். காலத்திற்கேற்ற சிந்தனை.
எம்.திருமால்
பவளத்தானூர்/////

நல்லது. நன்றி திருமால் முத்துசாமி!!

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
இன்றைய கால கட்டத்திற்க்கு, இளைய தலைமுறையினர்க்கு மிக அவசியமான, தேவையான அறிவுறைகள். மறுக்க முடியாத உண்மையும் கூட.
அறியத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////

நல்லது. நன்றி பொன்னுசாமி!

Subbiah Veerappan said...

////Blogger Bala.N said...
அருமையான பதிவு அய்யா
நன்றி/////

நல்லது. நன்றி பாலா!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
கட்டிலில் தலையா என தலைப்பை
கண்டதும் குழம்பினேன் பின் தான் புரிந்தது
சேமிக்க சொல்கிறீர்கள்... சுருட்டி கொண்டு
சேர்த்து தருவதாக சொல்பவர் போகிறார்
அதனால் தான் நம் இளசுகள்
அப்படி இழப்பதற்கு அனுபவிக்கலாம் என
இப்படி செலவு செய்கிறார்கள்
இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை
அரசுக்கு வரி கொடுப்பதற்காகவே
அவர்கள் சம்பாதிப்பதும் செலவழிப்பதும்
அரசுக்கு வரி கொடுப்பதற்கு தான்
அவர்கள் சேமிப்பு செய்தாலும் வரி உண்டு
என சொல்லி வையுங்கள் அப்போது தான்
எப்போவாவது சேமிக்கவும் செய்வார்கள்
நீங்கள் பொறுமை அப்புறம் வாங்கி
தருவதாக சொல்லும் முன் அவளின் பாய் பிரண்டு
வாங்கி தந்து விடுவார் அம்மா
வாங்கி தரும் வரை பொறுமை (தேவை)இல்லை
இன்றைய ஆடம்பரம்
நாளைய அத்தியாவசியம்
அதனால் தடை போடதீங்க
அத்தனைக்கும் ஆசை பட அனுமதியுங்க
செலவை குறைத்து வருவாயை கூட்டவா
செலவுக்கு ஏற்ப வருமானத்தை பெருக்கவா
இதில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தேர்ந்தவர்கள்
இவர்கள் நேரத்தை காசாக்கி கொண்டிருக்கிறார்கள்
சேமிப்பு பற்றி கற்று கொடுக்க வேண்டியதில்லை
சேர்த்து தரும் வங்கி போஸ்ட் ஆபீஸ் அதிக வட்டி
தருவதில்லை அவர்கள் தரும் வட்டிக்கும்
தடால் என "வரி" பிடிக்கிறார்கள்
அதிக வட்டி தருபவர்கள் அதனை
அப்படியே சுருட்டி கொண்டு போகிறார்கள்
அதனால் சேமிக்கும் பழக்கம் இன்றைய நாளில்
அனாவசியம் இது தான் எதார்த்தம்
உங்கள் கருத்துக்கு மறுப்பு சொல்லும் எண்ணம்
உண்மையில் இல்லை எனினும் இது தான் உண்மை/////

என்ன சொல்கிறீர்கள் என்பது என் சிற்றறிவிற்குப் புரியவில்லை சுவாமி!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
ஐயா,
நாட்டு நடப்பு. நம் வீட்டு இளம் தலைமுறையினரின் இன்றைய நடப்பு என்று காலக்கோளாறைப் புட்டுப் புட்டு வைக்கப் பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் பல கோடிகளுக்குச் சமம்.சேமிப்பின் அவசியத்தைச் சொல்லி, தம் மக்களின் சேமிப்புக்கு பாராட்டும் மறைமுகமாக உள்ளதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி, ஐயா! படித்ததில் பயனுள்ளதைப் பகிர்ந்தமைக்கு பல்லாயிரம் நன்றிகள்.//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger shree said...
நன்றி . மிக அருமை./////

நல்லது. நன்றி சகோதரி!!

Subbiah Veerappan said...

/////Blogger vignesh waran said...
Very necessary sharing for this generation...
Nandri .../////

நல்லது. நன்றி விக்னேஷ்வரன்!

arul said...

good post sir