கவிதை: மனித உடம்பின் அவலம்!
தன் உடம்பைப் பற்றியும். தன் தோற்றத்தைப் பற்றியும்தான் மனிதன் அதிகமாகக் கவலைப்படுவான்.
அதிலும் ஆண்களைவிடப் பெண்கள்தான் உடல் அழகிற்கும் புறத்தோற்றத்திற்கும், அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.
ஆனால் நமது புராணங்களும், மறைநூல்களும் உடல் அழியக்கூடியது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. ஆன்மாவிற்கே முக்கியத்துவம்
கொடு என்கின்றன!
மரணமடைந்தவுடன் மனிதனுக்கும், மனித உடலிற்கும் என்ன நேர்கிறது என்பதைத் திருமூலர் மிக அற்புதமாக இப்படிச் சொன்னார்.
"ஊர்கூடி ஒன்றாகி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிட்டு
சூரியன் காட்டிடையே கொண்டுபோய் சுட்டுவிட்டு
நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்"
ஆமாம்! உயிர் நீங்கியவுடன் பெயரும் நீங்கிவிடும் கெட்கிறவன் Body ஐ எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்றுதான் கேட்பான்.
கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்த உடலின் அவலத்தை வேறு விதமான சிந்தனையோடு நமக்கு எடுத்துச் சொன்னார்.
பாடலைப் பாருங்கள்:
---------------------------------------------------
"பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா - ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
(பாத்தா)
கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா - கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா?
(பாத்தா)
பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு
(பாத்தா)
அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா - அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா - இந்தப்
பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா?
(பாத்தா)
படம் - திருவிளையாடல் - வருடம் 1965
சாதாரண மரம் கூட எரிந்து தணியும் போது கரியாவது மிஞ்சும். மனித உடம்பில் எதுவும் மிஞ்சாது என்று எழுதியது இந்தப் பாடலின் சிறப்பு. அதுபோல நீ எதை மூட்டைகட்டி வைத்தாலும் இறைவன் உனக்குள்ள கணக்கை முடிக்கும்போது நீ எதையும் எடுக்காமல் போய்ச்சேர வேண்டியதுதான் என்று எழுதியது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!
----------------------------------------------------------
மற்றுமொரு பாடல்:
பாதி உள்ளமும், பாதி கள்ளமும் கொண்ட மனித உருவத்தைப் பற்றிக் கவியரசர் எழுதிய பாடல். இந்தப் பாடல் வரிகள் முழுவதும் தன்னிலை விளக்கம் கொண்டவை - அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!
"இங்கே தெய்வம் பாதி - மிருகம் பாதி
மனிதன் ஆனதடா - அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!
ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசு இல்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா!
தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்திலே ஆசையடா!
இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா - எதிலும்
ஓட்டை சொல்லுமடா - நாட்டில்
வாட்டம் வந்து சேரும்போது
கூட்டம் கூடுமடா - நன்றாய்ப்
பாட்டுப் பாடுமடா!
முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்!
மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"
படம் - சித்தி - வருடம் 1966
இந்தப் பாடலில் உள்ள கருத்து மற்றும் சொல் விளையாட்டைப் பாருங்கள்.
அதோடு,
"வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"
என்று எழுதிய அவருடைய நகைச்சுவை
உணர்வையும் பாருங்கள்.
=======================================================================
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

Good one. Thought you may refer Pattinathar. 😁
ReplyDeleteஉள்ளேன் ஐயா
ReplyDeleteசோதிட அலசலை எப்படி ஒருவர்
ReplyDeleteசோதிக்கிறார் என ஒவ்வொரு மாணவரும்
பகிரிந்து கொள்ள வேண்டும் ஒரு தனி
பதிவாக வாத்தியார் பதிவேற்ற வேண்டும்
முதலில் வேப்பிலை தொங்கி வைக்கிறது
முடிந்தால் மற்றவர்களும் பகிர அனுமதிக்கவும்
----
முதலில்
5ம் இடத்தை பார்த்து படித்து விட்டு
ஆதிபத்தியம் பெற்ற கிரக நிலையை சோதித்த பின்
தோஷ நிவர்த்தி அடையாமல்
யோகம் பலன் தராது என்ற கருத்தை உடையவன் நான்
அதனால் தோஷ நிலைகளை படித்து மனதில் வைத்துக் கொண்டு
அந்த மாந்தி நிற்கும் நிலையை மனதில் குறித்து
ஆலோசனை கேட்க வருபவர் வரும் நேரம்
அல்லது ஜாதகம் பார்க்கும் நேரதிற்க்கான
ஓரை எது என பார்த்து விட்டு
ஓசையின்றி எது குறித்து கேட்க வந்துள்ளார்
என்பதை இறைவன் திருக்குறிப்பில்
எழுதி தந்தபடி ஒரு prayer செய்துவிட்டு
வந்தவரிடம் பேச தொடங்குவேன் அவர்களும்
வாழ்த்துக்களுடன் செல்வார்கள்
சரி
நீங்கள் எப்படி மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே
" ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
ReplyDeleteபேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே."
(திருமந்திரம், முதற்பாயிரம், யாக்கை நிலையாமை)
பாடலின் சரியான வடிவம் இதுவே.
சூரை என்பது சுடுகாடில் இருக்கும் ஒருவகை முட்செடி.
கவியரசரின் இரண்டு பாடல்களும் வயதான என்னைக் கொஞ்ச நேரம் கலங்க வைத்தது.
Tharkala vazhgaiku ugantha padalgal entrum azhiyatha pokishangal
ReplyDeleteஐயா,
ReplyDeleteதிருமூலர், பட்டினத்தார் மற்றும் அருணகிரிநாதர் முதலானோர் பாடல்களை, தற்காலத்திற்கேற்ப, இரத்தினச்சுருக்க நடையில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், எழுதியுள்ளார்.
எந்நாளும் போற்றப்படவேண்டியவை. இவற்றை சுட்டிக் காட்டும் தங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.
///kmr.krishnan said...
ReplyDeleteகவியரசரின் இரண்டு பாடல்களும் வயதான என்னைக் கொஞ்ச நேரம் கலங்க வைத்தது.///
அரியது கேட்கின் வரிவடி வேலோய்
அரிது அரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே"
வாழ்வெனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி,
தாழ்வெனும் தன்மை யோடும் சைவமாம் சமயம் சாரும்
ஊழ்பெறல், அரிது சால; உயர்சிவ ஞானத் தாலே,
போழ் இளமதியினானைப் போற்றுவார், அருள் பெற்றாரே.
இந்த இரு பாடலை படித்த பின் சொல்லுங்கள்
இனி கலங்க வேண்டிய அவசியம் இல்லை..
///////Blogger selvaspk said..
ReplyDeleteGood one. Thought you may refer Pattinathar. 😁///////
சிலரை நினைக்காமல் அன்றையப் பொழுது நகராது
Blogger siva kumar said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா//////
நல்லது. நன்றீ
///////Blogger வேப்பிலை said..
ReplyDeleteசோதிட அலசலை எப்படி ஒருவர்
சோதிக்கிறார் என ஒவ்வொரு மாணவரும்
பகிரிந்து கொள்ள வேண்டும் ஒரு தனி
பதிவாக வாத்தியார் பதிவேற்ற வேண்டும்
முதலில் வேப்பிலை தொங்கி வைக்கிறது
முடிந்தால் மற்றவர்களும் பகிர அனுமதிக்கவும்
----
முதலில்
5ம் இடத்தை பார்த்து படித்து விட்டு
ஆதிபத்தியம் பெற்ற கிரக நிலையை சோதித்த பின்
தோஷ நிவர்த்தி அடையாமல்
யோகம் பலன் தராது என்ற கருத்தை உடையவன் நான்
அதனால் தோஷ நிலைகளை படித்து மனதில் வைத்துக் கொண்டு
அந்த மாந்தி நிற்கும் நிலையை மனதில் குறித்து
ஆலோசனை கேட்க வருபவர் வரும் நேரம்
அல்லது ஜாதகம் பார்க்கும் நேரதிற்க்கான
ஓரை எது என பார்த்து விட்டு
ஓசையின்றி எது குறித்து கேட்க வந்துள்ளார்
என்பதை இறைவன் திருக்குறிப்பில்
எழுதி தந்தபடி ஒரு prayer செய்துவிட்டு
வந்தவரிடம் பேச தொடங்குவேன் அவர்களும்
வாழ்த்துக்களுடன் செல்வார்கள்
சரி
நீங்கள் எப்படி மற்றவர்களும் பகிர்ந்து கொள்ளலாமே////////
எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை சுவாமி!
/////Blogger kmr.krishnan said...
ReplyDelete" ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே."
(திருமந்திரம், முதற்பாயிரம், யாக்கை நிலையாமை)
பாடலின் சரியான வடிவம் இதுவே.
சூரை என்பது சுடுகாடில் இருக்கும் ஒருவகை முட்செடி.
கவியரசரின் இரண்டு பாடல்களும் வயதான என்னைக் கொஞ்ச நேரம் கலங்க வைத்தது.///////
உண்மைதான். நன்றீ
///////Blogger Gajapathi Sha said...
ReplyDeleteTharkala vazhgaiku ugantha padalgal entrum azhiyatha pokishangal/////
Thanks for your comments
///////Blogger வரதராஜன் said...
ReplyDeleteஐயா,
திருமூலர், பட்டினத்தார் மற்றும் அருணகிரிநாதர் முதலானோர் பாடல்களை, தற்காலத்திற்கேற்ப, இரத்தினச்சுருக்க நடையில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், எழுதியுள்ளார்.
எந்நாளும் போற்றப்படவேண்டியவை. இவற்றை சுட்டிக் காட்டும் தங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்.///////
Good. Thanks for your comments