மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

18.9.15

Quiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா?


Quiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா?

Quiz.95

18.9.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகர் கையில் காசு தங்குமா?
அல்லது தங்காதா? அதாவது ஜாதகர் பிறந்ததில் இருந்து கைக்கும்
வாய்க்குமாக ஏழையாகவே இருக்கிறாரா? அல்லது அடித்துப் பிடித்துப்
பணம் சேர்த்து பணக்காரராக ஆனாரா?

ஜாதகர் ஓட்டை அண்டாவா அல்லது தண்ணீரைப் பிடித்து
வைக்கலாம் என்னும்படியான நல்ல அண்டாவா? எந்த
நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை
(நாம் என்ன செய்ய முடியும் சாமிகளா?)
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் என்பதை எழுதுங்கள்.பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன்
எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

40 comments:

Hello Hello said...

thanakaragan guru lapakaragan sevaiudan kuttani kasu thangum

slmsanuma said...

Vakira Saneeswaran in 2nd place. In Amsam Saneeswaran is not ucham or in helpful place like Rajinikanth Horoscope hence Vakira Saneeswaran will act negatively for the native and the native will struggle to get money in his life.
2nd place has only 22 parals.
Laknathipathi aspect both the 2nd place and 11th place.
2nd place athipathi is in 8th place with laknathipathi (Hidden place) and also aspect the 2nd place.
11th place athipathi Budhan is in his own house Ucham but with Bapakarthari Thosam. Vakira Saneeswaran aspect the 11th place.
The native will struggle to get money in his life. So finally ஓட்டை அண்டா!!!!!

Gajapathi Sha said...

Ayya vanakkam, Lagnathipathi and 2nd house owner 8el maraivu 2aam veetil sani amarvoo neethi nerukkadi bhuthan utcham sukkatan neechabanga rajayogam bhudhan dasa finance will improve- gajapathi

Sakthivel K said...

வணக்கம் சார்......
அன்பர் ஜாதகத்தில். 10ல் சூரியன், 11ல் சுக்+புதன் !
பணம் வாய்க்கால் தண்ணீராய் வந்திருக்கும்!
2ல் சனி. 2ஆம்அதிபதி குரு8ல். +செவ்வாயுடன்(2+5ஆமிடம் சனியின் பெளன்சர் பார்வையில் கிளீன் போல்டு)
அதனால் வாய்கால் தண்ணீராய் வந்தபணம் எலிவங்கில் போய்விட்டது.
1+5+9 ம் கெட்டதால் கொடுப்பினை இல்லை.(வாங்கிவந்தவரம்)

thadiyan said...

புதிர் எண் 95
ஓட்டை அண்டா அல்ல, நசுங்கிய அண்டா.
இரண்டாம் வீட்டு அதிபதி குருவின் நேரடி பார்வையில் இரண்டாம் வீடு.
நான்காம் வீட்டு அதிபதி இரண்டில், குருவின் நேரடி பார்வையில்.
பதினொன்றாம் அதிபதி சொந்த வீட்டில் அதுவும் உச்சத்தில்.
போததற்கு ஒன்பதாம் அதிபதி லக்னத்தில்.
குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா.

Srinivasa Rajulu.M said...

ஓட்டை அண்டாவும் உடைந்த குழாயும்:
1) லக்னாதிபதியும், இரண்டுக்கு அதிபதியான குருவும் (இவர் தனகாரகனுங்கூட) எட்டில் மறைவு. லக்கினத்தில் நீச்சமான தர்மாதிபதி.
2) இரண்டில் சனைஸ்சரன் டென்ட் அடித்துள்ளார்
3) பதினொன்றின் அதிபதியுடன் விரையாதிபதி சம்பந்தம். (உச்சனானாலும், நீச்சன் சம்பந்தம்)
4) லாபஸ்தானம் பதினொன்றாம் இடத்தில் பாபிகள் சனி மற்றும் செவ்வாயின் பார்வை.

கர்மாதிபதி ஆட்சியில் இருப்பது ஆறுதல். ஆனாலும் மாந்தியுடன் இருப்பதாலும் சுபர் பார்வை இல்லாததாலும் நிலையான தொழில் இல்லை.

அண்டாவும் ஓட்டை ... குழாயிலும் தண்ணீர் வரவில்லை. வாழ்க்கை முழுதும் கைக்கும் வாய்க்கும்தான்.

selvaspk said...

Born in a good family, but might faced monetry loss during early age and after middle age he should earn wealth dstarting Mercury and Venus dasas.

1,7,9,11-are all under papa karthari, so he will have a struggled life with up and down but will manage his life without any major monetary issues due to aspects on 4th house by 5th lord,4th lord and 10th lord and karaka venus is also well placed. Saturn in 2nd but have aspects of guru. He should be earned considerable wealth after his mid age.

rama said...

Dear Sir,

Virichika lagnam - papa-karthari yogam for lagnam, sani in 2nd place, lagnathipathi (Mars) in 8th place - Money will not stay in hand. But 10th lord (sun) in own rasi, 11th lord (budan) utcham so income will come through jobwise. 2nd lord sitting in 8th place along with lagnathipathi and aspecting 2nd place & Sani. So the money will stay little.

Regards,

S. Ramasubramanian

Srinivasa Rajulu.M said...

அப்புறம்தான் தெரிந்தது, திரு. வாரன் பஃப்ஃபே அவர்களும் 30-ஆகஸ்ட்-1930 அன்று பிறந்தவரென்று. ஆனாலும், இந்த லக்கினத்திற்கு அடியேனுக்குத் தோன்றியதையே விடையாகக் கொடுத்துள்ளேன்.

bg said...

அய்யா,
1. 2 இல் சனி. காசு தங்காது.
இருந்தாலும் 2 ஆம் அதிபர் குருவின் நேரடி பார்வை உளது.
ஆகவே நல்ல அண்டா. காசு தங்கும.
2. 11 இல் நீச பங்க யோகம் உள்ளது.
3. லாபாதிபதி புதன் உச்சம்.
4. அரசு துறையில் உயர் பதவியில் இருக்க வாய்ப்பு உண்டு.
மேலும் விவரம்
1 ஜாதகத்தில் சசி மங்கள யோகம் உள்ளது.
2 சகட யோகம் உள்ளது.
3 பிறந்த நாள் 31.08.1930
நன்றி.
இப்படிக்கு
பாலமுருகன்.

KJ said...

Respected Sir,

Native can be a Rich person.

1.Lagnathypathy with Guru aspects second house
2.Though Saniswaran in second house, Due to Guru's aspect he will play quiet music :-)
3.11th place Neesabangam Raja yogam.. Budan with Sukran (Nibuna yogam)
4. May be he become Rich due to hard work , Sevvai aspects third house also.
5. 10th house owner in tenth place (Suriyan), may be investor, or Government official

Thanks,
Sathishkumar GS

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யவுக்கு வணக்கம்

புதிர் எண 95.
விருசிக லக்னம் லக்னத்தில் சந்திரன் நீசம் .
2மிடம் .வரும் பணத்தை சேமித்து வைக்கும் அண்டா ....அன்ட்டாவில் பெரிய ஓட்டை ..அய்யா சனி உட்கார்ந்து
கவனமாக விரயமக்குவார் ..
11ல் லாப ஸ்தான்மாக இருக்குமிடத்தில் கேது ...10ல் சுக்கிரன் நீசமாகி உச்சம் பெற்ற புதனுடன் கூடி நீச பங்க ராஜ யோகம் பெற்று இருந்தாலும் ..10 மிடம் பாப கர்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறது .??
காணததற்கு .செவ்வாய் 7ம் பார்வை 2ம் வீட்டை பார்ப்பது .கூடவே குரு இருந்தாலும் செல்லாது ..செல்லாது ..
ஓ ஒ ஒ ட்டை ஆண்டா..!!!!

gopu said...

ஐயா,
2ல் சனி, கையில் காசு தங்காது (சனி தன்னுடைய 12வது வீட்டில். 10ம் இடம் தொழில் ஸ்தானம், மாந்தி வருமானத்தை கெடுக்கும்.

நன்றி
- கோபு

asbvsri said...

Quiz No: 95 Answer
இரண்டாம் வீடு அண்டா. இரண்டாம் வீட்டுக்காரர் இரண்டாம் வீட்டை லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
11 ஆம் அதிபதி புதன் உச்சத்தில் ஆட்சி / மூலத்திரிகோண வீட்டில்.
7 ஆம் / 12 ஆம் அதிபதி சுக்ரன் நீச்ச வீட்டில் நீச்ச பங்கமாகி வலுவாகியுள்ளார்.
சனி இரண்டாம் வீட்டில். 9 ஆம் அதிபதி சந்த்ரன் நீச்சமாகி லக்னத்தில். பிறப்பில் ஏழையாக இருந்திருப்பார்.
பிறப்பு சனி மஹாதசை 7 வயதில் முடிந்தபின் உச்ச புதனின் 17 ஆண்டுகள் ஜாதகர் சிற்ப்பாக வாழ்ந்திருப்பார். பின்னர் வந்த 7 வருடங்களில் கேதுவின் சிறிய சலசலப்பிற்கு பிறகு 20 வருடங்கள் சுக்ரனின் தசையில் 30 வயதிற்கு மேல் பணம் சேர்த்து பணக்காரராகியிருப்பார்.
K R Ananthakrishnan - Chennai

kmr.krishnan said...

ஜாதகர் 30 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர். அனுஷ நட்சத்திரம்.கொடுக்கப்பட்டுள்ள லக்கினத்திற்காக, பிறந்த நேரத்தை காலை 11 45 என்று எடுத்துக் கொண்டால்
தசா இருப்பைச் சரி செய்ய முடியவில்லை.

30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர தசாவில் சுயமாகச் சம்பாதித்து பணம் கையில் தங்கியது. சுக்கிரன் நீச மடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்க ராஜ யோகம் என்பதனாலும், ஆறாம் இடத்தில் இருந்த ராகுவாலும் பணவரவு இருந்தது.லக்கின அதிபனும், குருவும் சேர்ந்து இரண்டாம் இடத்தினைப் பார்த்ததால் சேமிக்க முடிந்தது.சனியின் காலில் பிறந்தவராதலால் இரண்டில் நின்ற சனி தடுக்கவில்லை.

முற்றிலும் ஓட்டை அண்டா அல்ல. தண்ணீர் பிடித்து வைக்கலாம்.

C Jeevanantham said...

Dear Sir,

This horoscope person earned money and spent in so many waste ways. He could not save the money. His 11th lord exalted Mercury in own place and exalted. He earned money in his mercury dasa period since 11th lord is mercury.

His 2nd lord in 8th place and lost all his money in Kethu dasa period. Sani placed in 2nd place and kethu placed in 12th and aspected by sani. He did not save money even though he earned enough money.

Thanking you.
C.Jeevanantham.

Ezhil Ram said...

Sir ,can u please tell my ashtagavargam to my 7th, 10 th place dob is 29-4-83 kumba lagna

Ezhilram Desent said...

Sir ,can u please tell me my ashtagavargam for my 10th place dob is 29-4-83 kumba lag

Narayanan V said...

Nee cha panga rajayougam is there.

He would have come up step by step well

v narayanan
advocate

வேப்பிலை said...

தண்ணியே வரலை அப்புறம்
தானே அது ஓட்டையா இல்லையான்னு பார்க்க

(சும்மா ஒரு இதுக்கு தான்)

SAI SRIDHAR said...

லக்னகாரகன் எட்டில், இரண்டு, ஐந்துக்குடையவனுடன் தனகாரகனாகியவனுடன். விருச்சிகத்திற்கு ஆகாத சனி தன ஸ்தானத்தில் சம சப்தம பார்வை. போதாத குறைக்கு சந்திரனும், குருவும் சஷ்டாஷ்டமத்தில். சகட யோக ஜாதகம். ஊஹும், பணம் தங்காது.

kothanda ramar said...

வணக்கம்,
பணத்திற்க்கு அதிபதி குரு 8ல் மறைவு மதிப்பும் கிடைக்காது பணம் கிடைப்பதும் புளியம் கொம்பே சுக்கிரன் நீசம் லக்னம் ஐந்தாம்பாவம் ஒன்பதாம் பாவம் அனைத்தும் கையை விரித்திருக்கிரது பணம் தங்காது கஷ்ட ஜீவனம் நடந்திருக்கும்.
வாய்ப்புக்கு நன்றி ஐயா.

amuthavel murugesan said...

Answer to Quiz.95:

1. 12 ல் கேது ராஜ வாழ்கை அல்லது சன்யாசி வாழ்கை.

இரண்டில் ஒன்றை எடுப்பதற்கு சமமான வாய்ப்பு உள்ளது.

எனது தேர்வு காரணம் சன்யாசி வாழ்கை
1. பணம் சம்பாதிபத‌ற்கு 11 ஆம் வீட்டில் 11ஆம் அதிபதி மற்றும் 7 ஆம் அதிபதி சேர்கை.

2. பணத்தை சேமிபதற்கு இரண்டாம் வீட்டிற்கு குரு மற்றும் லக்கனாதிபதியின் பார்வை.

3. 10ஆம் அதிபதி 10ல்(தொழில் அதிபதி)

4. மற்றும் 14 வயதில் வந்த சுக்கர திசை.

இப்படிக்கு,
மு.சாந்தி

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வணக்கம் வாத்தியாரே!

Quiz 95க்கான பதில்.


ஜாதகர் பிறந்த நேரம் : 30 Aug 1930 பகல் 12:30 மணி


விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி. லக்கினதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் அவர் அங்கு குருவுடன் கூடி இரண்டாம் இடத்திலுள்ள வக்கிர சனியை கட்டுக்குள் வைத்திருப்பதால், ஜாதகரின் ஓட்டை அண்டா குணத்தை சற்றே மாற்றி பணத்தை சேமிக்கும் குணத்தை வழங்கி மேலும் முன்னேற வைத்திருப்பார். 11ம் இடத்தில் 33பரல் அதற்கு கை கொடுத்திருக்கும். அங்கு புதன் உட்சமாகி சுக்கிரன் நீச பங்கம் அடைந்துள்ளார் என்பது கவனிக்கதக்கது.


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Anonymous said...

saturn in 2nd house aspected by mars and jupiter. lagna lord and dhana karaka jupiter in 8th house. Debilitated moon in 1st house. However 11th lord exalted mercury and venus gives neecha bhanga raja yoga. This aspect might have given him a decent wealth during their respective dasa bhukti.

thanks

Radha Sridhar said...

குரு வணக்கம்.

இரண்டாம் அதிபதி எட்டில் லக்கினதிபதியுடன் அமர்ந்து தன/தன் வீட்டை பார்க்கிறார். நன்மை. சுக ஸ்தானாதிபதி சனீஸ்வரர் இரண்டாம் வீட்டில் அமர்வது நன்மை. நல்ல அண்டா.

selvam velusamy said...

வணக்கம் குரு,

ஜாதகர் ஓட்டை அண்டாதான். காரணங்கள்,

1. லக்னாதிபதி செவ்வாயும், தனாதிபதியும் காரகனுமாகிய குரு எட்டில் மறைந்ததோட சனியின் பார்வையும் பெற்று பலவீனம் அடைந்தார்கள்.
2. சனி இரண்டில் அமர்ந்து அந்த வீட்டை கெடுத்ததோடு மட்டுமல்லாமல் லக்னாதிபதி, தனாதிபதி மற்றும் லாபதிபதியை தன் பார்வையால் பார்த்து அவர்களை பலவீனம் ஆக்கினார்.

நன்றி
செல்வம்

siva kumar said...

வணக்கம் ஐயா

ram said...

Kasu Panam thuttu mani mani

ram said...

2

sriram1114 said...

Ottai kudam dhaan enru ninaikkiraen
1. Lagnaadhibadhi 8il guru vudan maraivu(guru dhanadhibathi) adhuvum pagai veettil midhunam(budhan veedu)
2. Dhanasthaanathil sani avar mondram veetirkum adhibhathi

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
நல்ல அண்டா. திருவாளர். வாரென் பஃபெட் அவர்கள் எப்படி ஓட்டை அண்டாவாக முடியும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Gouthaman R said...

ஜாதகர் நன்கு பணம் சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றுள்ளார். காரணம், 11ம் வீட்டதிபதி புதன் 11ல் உச்சம் & 10ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் சூரியன் & 2ம் வீட்டில் குருவின் சிறப்பு பார்வை.
பிழையிருந்தால் மன்னிக்கவும், அடியேன் இப்போதுதான் தொடக்க கல்வி நிலையில் உள்ளேன்.

-ரா. கௌதமன்.

jayakumar M said...

அய்யா,
1. 7 ஆம் அதிபதி 11 ம் அதிபதியுடன் நீசபங்க ராஜ யோகத்தில் உள்ளதால் வியபாரத்தி்ல் நல்ல லாபம் வரும்.
2, 9ஆம் அதிபதி ஆட்சி பலத்துடன் இருப்பது நல்ல வாய்ப்புகளை உருவாக்கும்.
3, 2 ல் சனி. குரு ,செவ்வாய் 8 ல் எனவே வரும் லாபம் அவருக்கு பயன்தராது.

AMG said...

11ம் இடம் பாபகர்த்தாரி யோகத்தில் இருப்பதால் ஓட்டை அண்டாதான்

ramesh kumar said...

இந்த ஜாதகன் பூர்வீக சொத்தும் கையில் காசும் தங்காது .ஆனால் தன் உழைப்பால் தனம் சேர்ப்பார் . சொல்லப்போனால் எவ்வளவு வந்தாலும் ஓட்டை அண்டா தான் .

CA Venkatesh Krishnan said...

அய்யா வணக்கம்.

ஓட்டை அண்டா.

லக்னத்தில் 9ம் அதிபதி நீசம். லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி 8ல் மறைவு. முக்கிய திசா நாதனான சுக்கிரன் 11ல் நீசம். தன பலமில்லாத சாதகம்.


வெங்கடேஷ் கிருஷ்ணன்

kohilam said...

ஐயா,
லகனாதிபதி 8ல்,2ல் சனி,11ல் சுக்கிரன் நீசம்.....எனவே இது ஓட்டை அண்டா தான் ஐயா...

katu raj said...

உங்களுடைய பதிவு புரியும்படியும் உபயோகமாகவும் பல தகவல்களுடனும் உள்ளது நன்றி ஐயா.

தனஸ்தான அதிபதியும் லக்னாதிபதியும் 8ல் மறைந்துள்ளது மேலும் அது அவர்களுக்கு பகை வீடு அது நல்ல அமைப்பல்ல, மேலும் 3ம் அதிபதி 2ல் அமைவது தனவிரயம். 2ல் சனி காசு தங்காது.

ஐயா நான் புதிய மாணவன் அடிப்படை பாடத்தை முடித்துள்ளேன் தவறு இருந்தால் மன்னிக்கவும். மேல்நிலை மற்றும் யோக பாடங்களை படிக்க விரும்புகிறேன்.
See your email pls.

Rajam Anand said...

அன்புள்ள வாத்தியாரிற்க்கு வணக்கம்
முதலாவதாக ஜாதகரிற்க்கு உள்ள யோகங்கள்,
1.. நீசபங்க ராஜயோகம் கன்னியிலிருக்கும் உச்சமடைந்த புதனும், நீசமடைந்த சுக்கிரனும். அதுமட்டுமல்லாது சுக்கிரனும். புதனும் ஓன்றாகியிருந்து நிபுணத்துவயோகத்தையும் பெற்றிருக்கின்றார்.
இரண்டாவதாக கிரகநிலையை பார்க்கும்போது
1. 5ம் வீட்டதிபதியான குரு, 6ம் வீட்டதிபதியான செவ்வாயுடன் கூட்டுச்சேர்ந்து பகைவீடானதும், 8ம் வீடுமான மிதுனத்தில் இருக்கின்றார்கள்.
2. 9ம் வீட்டதிபதியான சந்திரன் விருச்சிகத்தில் நீசமடைந்து இருக்கின்றார்.
3. 2ம் வீட்டதிபதியான சனீஸ்வரன் வக்ரம் அடைந்திருப்பதினால் பலம் இழந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது அதன் சொந்தவீடாகிய மகரத்திலிருந்து 12ம் வீடாகிய தனுசுராசியிலிருக்கின்றார்.
மூன்றாவதாக, அஸ்டகவர்க்கத்தை பார்ப்போமாயின்,
2ம் வீட்டிற்கு 22ம், 5ம் வீட்டிற்கு 26, 9ம் வீட்டிற்கு 31, 11ம் வீட்டிற்கு 33ம் உள்ளது.
நான்காவதாக, கிரக்கப் பார்வைகள்
1. 8ம் வீட்டிலிருக்கும் செவ்வாய் 7ம் பார்வையாக வக்கிரம் அடைந்த சனியைப் பார்க்கின்றது.
2. 8ம் வீட்டிலிருக்கும் செவ்வாய் 4ம் பார்வையாக 11ம் வீட்டைப் பார்க்கின்றது
கேள்விக்கென்ன பதில்
ஜாதகனிற்கு பணம் சேர்க்க முடியும் ஆனால் கையில் பணம் தங்காது.
அன்புடன்
ராஜம் ஆனந்த்