மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

7.9.15

மனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும்!


படைப்பின் ரகசியம்

வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை,
வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு.
வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை,
கொம்புள்ள கடமானுக்கோ வீரம் இல்லை.
கருங்குயிலுக்குத் தோகையில்லை
தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை.
காற்றுக்கு உருவமில்லை
கதிரவனுக்கு நிழலில்லை
நீருக்கு நிறமில்லை
நெருப்புக்கு ஈரமில்லை
ஒன்றைக் கொடுத்து
ஒன்றை எடுத்தான்,
ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான்,
எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான் இறைவன்.
அவனுக்கே இல்லை,
அற்பம் நீ உனக்கெதற்கு  பூரணத்துவம்?
எவர் வாழ்விலும் நிறைவில்லை
எவர் வாழ்விலும் குறைவில்லை
புரிந்துகொள்வாய் நண்பனே!
அமைதி கொள்வாய் அன்பனே!
===============================================
2


மனவளம்: நம்மால் எதைச் சுமக்க முடியும் என்பது அவனுக்குத் தெரியும்!

பகவான்  கிருஷ்ணரை  மிகவும்  நேசிக்கும் பெண்  ஒருவர்  ஒரு நாள் துவாரகையில் அவரிடம் சென்று, “உன் விருப்பப்படி நடந்துகொள்வதை
தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை கிருஷ்ணா. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்?” என்றார்.

அடிப்படையில் இவள் மிகவும் ஏழை. தாய் தந்தையர் யாரும் கிடையாது.

கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதித்தான் அவள் கேட்டாள். ஆனால் கேட்டது அந்த மாயாவியிடமாயிற்றே ? அவன் சும்மா விடுவானா?

அந்த பெண்ணிடம் அவள் அதிர்சியடையும் விதம், ஒரு கோணிப்பையை கொடுத்து, “நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் இதை தூக்கி கொண்டு வா. அது போதும். நம் கண்களை தவிர வேறு யார் கண்ணிற்கும் இந்த கோணிப்பை தெரியாது!” என்கிறார்.

வேறு எதையோ எதிர்பார்த்த அந்த பெண்ணிற்கு கடும் அதிர்ச்சி. கிருஷ்ணர் இப்படி ஒரு அழுக்கு சாக்கு மூட்டை தருவார் என்று அப்பெண் எதிர்பார்க்கவில்லை.

அவருடனே தூக்கி கொண்டு நடக்கும் அளவிற்கு அதனுள் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்க்க அந்த பெண்ணிற்கு ஆசை. ஆனால் கட்டுக்களை அவிழ்த்து பார்க்க முடியாதபடி மிகவும் பலமாக அது கட்டப்பட்டிருந்தது.

எனவே தாம் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்க்க பகவான் விரும்பவில்லை என்று தெரிந்துகொள்கிறாள் அந்த பெண். திறந்து பார்க்கும் எண்ணத்தை மாற்றிக்கொண்டு கடவுளின் கட்டளைப்படி அதை தூக்கி சுமந்து அவர் செல்லுமிடங்கள் எல்லாம் செல்கிறாள்.

நேரம் செல்ல செல்ல, ஒரு கட்டத்திற்கு மேல் அவளால் அந்த மூட்டையை தூக்க முடியவில்லை.

“கிருஷ்ணா உன் கட்டளையை எதிர்பார்த்து உனக்கு பணி செய்ய வந்தேன். நீ என்னடாவென்றால் சுமக்க முடியாத ஒரு அழுக்கு மூட்டையை என்னிடம் தந்து விட்டாயே… கருணை கடலுக்கு இது அடுக்குமா??” என்று கோபித்துகொள்கிறாள்.

“உன் பலவீனத்தில் என் பலம் அடங்கியிருக்கிறது. கவலைப்படாதே உன் பக்கம் நானிருக்கிறேன். தைரியமாக நான் கூறும் வரை சுமந்துவா” என்கிறார் கிருஷ்ணர்.

மேலும் சில காலம் சென்றது.

சில இடங்களில் அவளால் தூக்க முடியாத போது கிருஷ்ணரும் தானும் தன் பங்கிற்கு ஒரு கை பிடித்து தூக்கி அந்த சுமையை பகிர்ந்து கொண்டார்.

ஒரு நாள் அவர்கள் போய் சேரவேண்டிய இடம் வந்தது.

“போதும் நீ சுமந்தது. அந்த மூட்டையை இறக்கி வை!!” என்று கிருஷ்ணர் கட்டளையிட, அந்த மூட்டையை பகவானின் முன் கீழே வைக்கிறாள் அந்த பெண்.

“மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா?” என்று பகவான் புன்முறுவல் செய்தபடி கேட்க, அந்த பெண் அதற்காகவே காத்திருந்த
அந்த பெண் “சீக்கிரம் கிருஷ்ணா” என்கிறாள் உரக்க.

கிருஷ்ணர் தனது புல்லாங்குழலை அசைக்க முடிச்சுக்கள் தானே அவிழ்ந்து மூட்டை தானே பிரிந்து கொள்கிறது. முதலில் கண்ணில் தெரிவது வைக்கோல் தான். ஆனால் வைக்கோல்களுக்கிடையே அரிய மாணிக்கங்களும் வைர வைடூரியங்களும், பொற்காசுகளும், தங்க ஆபரணங்களும் குவிந்து கிடந்தன. தேவலோகத்தில் உள்ள கற்பகவிருட்சம் மட்டுமே தரக்கூடிய பொக்கிஷம் அது!!

“இத்தனை காலம் பொறுமையுடன் நீ காத்திருந்தமைக்காக உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள்!!”

அந்த பெண்ணுக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சி இன்ப அதிர்ச்சியாகி கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

“கிருஷ்ணா……. என்னை மன்னித்துவிடு” என்று அவர் காலில் விழுகிறாள்.

“அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இந்த பாவி இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தை புரிந்துகொண்டு நான் இருந்திருந்தால் இந்த பொக்கிஷத்தின் பாரம் எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ புகார் செய்திருக்கவோ மாட்டேனே…” என்று அவள் உருக கிருஷ்ணர் தனக்கே உரிய சிரிப்பை உதிர்க்கிறார்.

ஒவ்வொரு சுமையும் அதை சுமப்பவர்களுக்கென்றே இறைவனால் மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேகமாக செய்யப்படுகிறது. அவற்றை சுமை என்று நினைத்தால் சுமை. பொக்கிஷம் என்று நினைத்தால் பொக்கிஷம். எதுவாகினும் உங்கள் கைகளில் தான் அது உள்ளது. பார்க்கும் பார்வை தான் வித்தியாசப்படுத்தி காட்டுகிறது.

நம்மால் எதை சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்கு தெரியும். எனவே அவனை நம்புங்கள். முழுமையாக.
☝🙌🙏
படித்ததில் பிடித்தது. அறியத் தந்துள்ளேன்!
=========================================
இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24 comments:

Anpalagan N said...

இரண்டுமே நன்றாக உள்ளது ஐயா. ஆனாலும், கதையுடன் வரும்போதும், அது இறைவனை இழுத்து வரும்போதும் கொஞ்சம் அதிகமாகவே மனதை தொடுகிறது.
இது தான் இறைவனின் சாரம்.
யார் யாரால் என்னென்ன முடியுமோ என்று தெரிந்தே இறைவன் தந்திருக்கின்றான். நாமோ, நமக்கு கீழானவற்றிலும், நமக்கு மேலான நம்மால் முடியாதவற்றிலும் ஆசை வைத்து, மனம் தடுமாறி, நமக்கு உரியதையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தெரியாது, உயிர் பிரியும் போது தான் சுடலை ஞானம் போல் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்.
ஆண்டவனின் திருவிளையாடலை புரிந்து கொண்டால் எமது ஆட்டத்தையாவது நாம் சரியாக ஆடிக் கொள்ளலாம்.

Thirumal Muthusamy said...

ஐயா

இரண்டும் இனிமை.
ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டிய சங்கதி.
சுகமான சுமைகள்!

எம்.திருமால்
பவளத்தானூர்

Kumanan Samidurai said...

அய்யா வணக்கம்

தாங்கள் எழுதும் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. கடவுள் என்னை அப்படி தான் நடத்துகிறார்.
தங்களுக்கு மிக்க நன்றி

அன்புடன் குமணன்

B. Lakshmi Narayanan, Tuticorin said...

2வது தான், சந்தேகமே வேண்டாம்...
பொற்காசுகளுக்காக அல்ல.... கண்ணனுக்காக!!!...

ravichandran said...

Respected Sir,

Happy morning... I am really impressed both posts. First one is so meaningful.

Thanks a lot...

Have a pleasant day.

With kind regards,
M. Ravichandran

selvam velusamy said...

ணக்கம் குரு,

நீங்கள் தரும் அனைத்து பதிவுகளும் அருமை. இதிலென்ன கேள்வி, இரண்டுமே அருமை.

நன்றி,
செல்வம்

dhana lakshmi said...

வணக்கம் ஐயா

இரண்டுமே மிக அருமை.

இரண்டு கண்ணில் எது அருமை என்றால் என்ன சொல்வது?

மேலும் தங்களுடைய படைப்பில் அனைத்துமே இனிமை,அருமை.

அன்புடன்

J.Dhanalakshmi

SELVARAJ said...

எதை விடுவேன் எதை தெரிவிப்பேன். எதை எழுதினாலும் நன்றாக எழுதுகிறீர்கள். எதை எழுதினாலும் நன்றாகவே எழுத போகிறீர்கள். எதை (புத்தகத்தை) எழுதினீர்களோ அதையும் நன்றாகவே எழுதி உள்ளீர்க‌ள்.
முதல் 10 நபர்களில் ஒருவராக புத்தகம் பெற கொடுத்து வைத்து உள்ளேன். மகிழ்ச்சி. ஒரு வாரமாக பின்னூட்டம் இட முடியவில்லை. அடுத்த புத்தகத்தில் படங்கள், அட்டவனைகள் மறு உறுவாக்க பணிகள் இருந்தால் நானும் அனிலாக கைங்கரியம் செய்ய கிடைக்க பெற்றல் என் பாக்கியம்.

Chettuppattu Balaji said...

it is very good story as well make us to think what the the moral of the story says .

Thank you & Make keep coming

Unknown said...

Dear Sir!

Sree Maaya Kannaa vin Thiru Vilaiyaadal only Too Much fantastic.


Ungalaal maddum eppadi mudikinrathi eppadi class edukka Subbu Iyaay ?

siva kumar said...

வணக்கம் ஐயா
இரண்டும் பிடித்தது.
இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது

வரதராஜன் said...

ஐயா,
வணக்கம். இரண்டும் இறைவனின் லீலையைத் தெரிவிக்கின்றது.
முதலாவது படைப்பின் ரகசியம்!!?
இரண்டாவது, பக்தனின் தேவையைப் பூர்த்தி செய்யுமுன் அவனது அருகதையை சோதனை செய்தல்!
எம்பெருமானின் சிறப்பை விளக்கும் இரண்டுமே இரத்தினங்கள்!!?

Subbiah Veerappan said...

///////Blogger Anpalagan N said...
இரண்டுமே நன்றாக உள்ளது ஐயா. ஆனாலும், கதையுடன் வரும்போதும், அது இறைவனை இழுத்து வரும்போதும் கொஞ்சம் அதிகமாகவே மனதை தொடுகிறது.
இது தான் இறைவனின் சாரம்.
யார் யாரால் என்னென்ன முடியுமோ என்று தெரிந்தே இறைவன் தந்திருக்கின்றான். நாமோ, நமக்கு கீழானவற்றிலும், நமக்கு மேலான நம்மால் முடியாதவற்றிலும் ஆசை வைத்து, மனம் தடுமாறி, நமக்கு உரியதையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தெரியாது, உயிர் பிரியும் போது தான் சுடலை ஞானம் போல் எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறோம்.
ஆண்டவனின் திருவிளையாடலை புரிந்து கொண்டால் எமது ஆட்டத்தையாவது நாம் சரியாக ஆடிக் கொள்ளலாம்.//////

உண்மைதான் நண்பரே! உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
இரண்டும் இனிமை.
ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டிய சங்கதி.
சுகமான சுமைகள்!
எம்.திருமால்
பவளத்தானூர்//////

நல்லது. நன்றி திருமால்!

Subbiah Veerappan said...

/////Blogger Kumanan Samidurai said...
அய்யா வணக்கம்
தாங்கள் எழுதும் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. கடவுள் என்னை அப்படி தான் நடத்துகிறார்.
தங்களுக்கு மிக்க நன்றி
அன்புடன் குமணன் //////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
2வது தான், சந்தேகமே வேண்டாம்...
பொற்காசுகளுக்காக அல்ல.... கண்ணனுக்காக!!!.../////

ஆமாம். கண்ணனுக்காக! நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... I am really impressed both posts. First one is so meaningful.
Thanks a lot...
Have a pleasant day.
With kind regards,
M. Ravichandran/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
நீங்கள் தரும் அனைத்து பதிவுகளும் அருமை. இதிலென்ன கேள்வி, இரண்டுமே அருமை.
நன்றி,
செல்வம்/////

அடடா, மிக்க மகிழ்ச்சி. நல்லது. நன்றி செல்வம் வேலுசாமி!

Subbiah Veerappan said...

/////Blogger dhana lakshmi said...
வணக்கம் ஐயா
இரண்டுமே மிக அருமை.
இரண்டு கண்ணில் எது அருமை என்றால் என்ன சொல்வது?
மேலும் தங்களுடைய படைப்பில் அனைத்துமே இனிமை,அருமை.
அன்புடன்
J.Dhanalakshmi/////

நல்ல்து. நீங்கள் சொன்னால் சரிதான் சகோதரி! நன்றி உரித்தாகுக!

Subbiah Veerappan said...

//////Blogger SELVARAJ said...
எதை விடுவேன் எதை தெரிவிப்பேன். எதை எழுதினாலும் நன்றாக எழுதுகிறீர்கள். எதை எழுதினாலும் நன்றாகவே எழுதப் போகிறீர்கள். எதை (புத்தகத்தை) எழுதினீர்களோ அதையும் நன்றாகவே எழுதி உள்ளீர்க‌ள்.
முதல் 10 நபர்களில் ஒருவராக புத்தகம் பெற கொடுத்து வைத்து உள்ளேன். மகிழ்ச்சி. ஒரு வாரமாக பின்னூட்டம் இட முடியவில்லை. அடுத்த புத்தகத்தில் படங்கள், அட்டவனைகள் மறு உருவாக்க பணிகள் இருந்தால் நானும் அனிலாக கைங்கரியம் செய்ய கிடைக்க பெற்றல் என் பாக்கியம்./////

உங்களுக்கு Page Maker, indesign, coreldraw ஆகியவற்றில் பயிற்சி உண்டா? தொலைபேசி எண்ணுடன் விபரம் எழுதுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Chettuppattu Balaji said...
it is very good story as well make us to think what the the moral of the story says .
Thank you & Make keep coming/////

நல்லது. நன்றி பாலாஜி!

Subbiah Veerappan said...

/////Blogger Unknown said...
Dear Sir!
Sree Maaya Kannaa vin Thiru Vilaiyaadal only Too Much fantastic.
Ungalaal maddum eppadi mudikinrathi eppadi class edukka Subbu Iyaay ?//////

அதுவும் அந்த மாயக் கண்ணனின் கைங்கர்யம்தான்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
இரண்டும் பிடித்தது.
இரண்டிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது////////

ஆமாம். கவியரசர் கண்ணதாசன் இப்படிச் சொல்வார்:

அதுஇருந்தா இதுஇல்லை
இதுஇருந்தா அதுஇல்லை
அதுவும் இதுவும் சேர்ந்திருந்தா
அவனுக்கு இங்கே இடமில்லை!

(அதாவது மேலே போய்விடுவான்)

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
ஐயா,
வணக்கம். இரண்டும் இறைவனின் லீலையைத் தெரிவிக்கின்றது.
முதலாவது படைப்பின் ரகசியம்!!?
இரண்டாவது, பக்தனின் தேவையைப் பூர்த்தி செய்யுமுன் அவனது அருகதையை சோதனை செய்தல்!
எம்பெருமானின் சிறப்பை விளக்கும் இரண்டுமே இரத்தினங்கள்!!?/////

நல்லது. உங்களின் சிறப்பான பின்னூட்டத்திற்கு நன்றி.