மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.10.14

Interesting News: மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்


மாடுகளே தேவையில்லை: வருகிறது செயற்கைப் பால்

மாடுகள் வேண்டாம். பண்ணைகள் வேண்டாம். செயற்கையாகப் பால் தயாரிக்க முடியும் என்று அமெரிக்காவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து சென்று அமெரிக்காவில் ஆராய்ச்சியை மேற்கொண்ட  பெருமாள் காந்தி, ரையான் பாண்டியா,இஷா தத்தார் ஆகிய மூவர்
அணியினர் செய்ற்கைப் பால் தயாரிப்புக்காக மூபிரீ (Muufri) என்ற பெயரில் ஒரு கம்பெனியைத் தொடங்கியுள்ளனர். அடுத்த ஆண்டு ஜூலை வாக்கில் தங்களது பால் அறிமுகப்படுத்தப்படும்  என்று அவர்கள் கூறியுள்ளனர்.


பெருமாள் காந்தி

ஈஸ்ட் போதும். அதை அடிப்படையாக வைத்து  பயோ-எஞ்சினீரிங் முறையில் செயற்கைப் பால் தயாரிக்கப் போகிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அடிப்படையில் பால் என்பது என்ன? ஆறு வகைப் புரதங்கள். எட்டு வகையான கொழுப்புப் பொருட்கள், அவ்வளவுதான் என்று அவர்கள் கூறுகின்றனர்.

செயற்கைப் பால் தயாரிப்பு முறையில்  சிறிது மாற்றங்களைச் செய்வதன் மூலம் பசும் பால், எருமைப் பால், ஆட்டுப் பால் என பலவகையான பால்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரையான் பாண்டியா
செயற்கைப் பால் பார்வைக்கு அசல் பாலைப் போலவே இருக்கும்.
அத்துடன் அசல் பாலைப் போலவே அடர்த்தி கொண்டதாக, ருசி
கொண்டதாக சத்து கொண்டதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஷா தத்தார்

செயற்கைப் பாலில் சில சாதகங்களும் உள்ளன. அசல் பாலில் லாக்டோஸ் இருக்கும். இது பலருக்கும் ஒத்துக்கொள்ளாது. செயற்கைப் பாலில் லாக்டோஸ் இராது. அத்துடன் கெட்ட  கொலஸ்ட்ராலும் இராது.

செயற்கைப் பால் கெட்டுப் போகாதது. பல நாட்கள் கெடாமல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அசல் பால் மூலம் தயாரிப்பது போலவே செயற்கைப் பாலிலிருந்தும் பால் பொருட்களைத் தயாரிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


செயற்கைப் பால் அடங்கிய பாட்டிலுடன் பெருமாள் காந்தி
இந்த மூவர் கூட்டணியில் ஒருவரான பெருமாள் காந்தி சென்னையில் 
உள்ள ஒரு பல்கலையில் உயிரி தொழில் நுட்பம் படித்து பட்டம் பெற்றவர். முமபையில் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி விட்டு அமெரிக்கா சென்று மேல்படிப்பு படித்து வருபவர். மற்ற இருவரும் உயிரி தொழில் 
நுட்பப் படிப்பு படித்தவர்களே.

இவர்கள் தொடங்கியுள்ள நிறுவனத்துக்கு ரையான் பாண்டியா CEO. 
பெருமாள் காந்தி தலைமை தொழில் நுட்ப அதிகாரி. இஷா தலைமை 
கல்ச்சர் அதிகாரி.

இவர்களது திட்டம் வெற்றி பெறுமானால் செயற்கைப் பாலானது பெரிய ஆலைகளில் உற்பத்தி செய்யப்படுவதாக இருக்கும். மருந்து ஆலைகள் மாதிரியில் உயர்ந்த தரத்திலான தயாரிப்பு முறைகள் பின்பற்றப்படும் 
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மக்கள் தொகை பெருத்து வருகிறது. எதிர்காலத்தில் மக்கள் செயற்கைப் பாலைத்தான் பயன்படுத்துபவர்களாக இருப்பர் என்று 
அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

செயற்கைப் பால் இப்போது எப்படி சாத்தியமாகியது என்று கேட்டதற்கு இதுவரை யாரும் இதற்கு முயலவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

Source: http://www.ariviyal.in/2014/10/blog-post_28.html
------------------------------------------------------------------------------------------------
இணையத்தில் படித்தேன். செய்தி சுவையாக இருந்ததால் உங்களுக்கு அறியத்தந்துள்ளேன்

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. மனிதர்களே
    மாடுகளானபின்

    மாடுகள் எதற்கு..
    மாற்று சிந்தனையால்

    மாடுகளின் பெருக்கும் குறையுமா
    மடியை அறுத்து திண்ணும்

    மூர்கர்களின் குணம் மறையுமா இந்த
    முயற்சி கோழி ஆடு என

    தொடர்ந்தால்.. அசைவம்
    திண்பவர் இல்லாது போகலாம்

    ReplyDelete
  2. இந்த செயற்கை பால் இங்கே uriya அது இது என்று கலந்து முன்னமேயே தனியார் நிறுவனங்கள் செய்தார்களே?

    Jayakumar

    ReplyDelete
  3. /////Blogger வேப்பிலை said...
    மனிதர்களே
    மாடுகளானபின்
    மாடுகள் எதற்கு..
    மாற்று சிந்தனையால்
    மாடுகளின் பெருக்கும் குறையுமா
    மடியை அறுத்து திண்ணும்
    மூர்கர்களின் குணம் மறையுமா இந்த
    முயற்சி கோழி ஆடு என
    தொடர்ந்தால்.. அசைவம்
    திண்பவர் இல்லாது போகலாம்/////

    தவறு. இன்னும் எல்லா மனிதர்களும் மாடுகளாகவில்லை. அதை நினைவில் வையுங்கள். அவர்களுக்காக எழுதப்பெற்றதுதான் இக்கட்டுரை

    ReplyDelete
  4. ////Blogger jk22384 said...
    இந்த செயற்கை பால் இங்கே uriya அது இது என்று கலந்து முன்னமேயே தனியார் நிறுவனங்கள் செய்தார்களே?
    Jayakumar/////

    இந்தப் பால் வந்தால் அவர்கள் எல்லாம் காணாமல் போய்விடுவார்கள்!

    ReplyDelete
  5. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்/////

    நல்லது. நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com