மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.10.14

நீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்!


நீங்களும் நிலத்தில் விளையும் நிலக்கடலையும்!

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில்
அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு
எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.
 நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே
சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது
இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன்
உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய
பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது
உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்
கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய்
வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு
வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம்
தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும்
என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்
கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின்
உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.
மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால்
அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து
அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால்
அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும்
கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள
தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட்
வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும்
கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3
சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை
அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும்.
இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை
 வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது
மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து
தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை
எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள்.

இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரிய
மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்
படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து
சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம்  நிலக்கடலை
குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை
சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டா
வதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக்
அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது.
இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.


கார்போஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.
போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில்தான் சத்து
அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில்
தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன.
நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான்
உண்டு
----------------------------------------------
இணையத்தில் படித்தது. செய்தி பயன்தரும் என்று கருதியதால்,
உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்

அன்புடன், 
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

20 comments:

  1. போன வாரம் சுவைத்து மகிழஅனுப்பிய
    வேர்கடலை வந்ததா?

    நிலக்கடலை
    வேர்கடலை

    மல்லாட்டே
    மோம்பொலி என

    எத்தனை பெயர் சொன்னாலும்
    எனக்கு வேர்கடலை தான் ஃபர்ஸ்ட்

    வேக வைத்து திண்பதைவிட
    வெறுமனே வறுத்து திண்பதே சிறப்பு

    கடலை வெறும் வாய்க்கு என்ற நிலை போய்
    கடலை போடுகிறாயா என்றளவுக்கு

    காலம் மாறினாலும்
    கடலை மாறவில்லை அதன்

    சுவையும் மாறவில்லை அதனால்
    சுவைக்க உங்களுக்கும் இந்த கடலை

    கடலை..
    கடலே..

    ReplyDelete
  2. அருமையான தகவலுக்கு நன்றி வாத்தியாரே!!!

    ReplyDelete
  3. Thanks for writing this up. Please write more as time permits in similar topics.

    My deepest concern is, for a society to live, their language and culture are the main pillars. We from the oldest language and land of spirituality are getting away far from the real Tamils.

    I live in US for work, here most of times you live by eating food which is genetically modified, injected with heavy pesticide, people were told oil is unhealthy, sugar is unhealthy, meat is good and so on. The sad part is, people from India believe in what American says. They believe Ghee is bad, Rice is unhealthy and what not.
    Its even tough to convince my room mates, so not to talk about known people!!

    Just saying it, as now the situation in India is 10x fold growing in bad things (see the queue in Subway/McD/Malls) where as the good things are 1/10x.

    Pharma companies destructing our herbs, Siddha is a joke to most youngsters, Ayurvedha means only legiam, people dont even know Unani or Other treatment exists.

    I really wish we still have Gurukul, atleast i would have mastered 10 arts if not 64 (really, do anyone still know what are the 64 kalaigal? May be you should write it).

    India is by far the best and favorite target for USA and other dominating countries for doing human bio-lab, bank-lab, lobbying, taking natural resources without public knowledge with help of corruption (Coke for example) etc.,

    Its just overwhelming how these countries pick the top brains of world to get them together to make such a organized crime. We are just victims. There are so many things which is wrong, if we say it loud, you will be bad guy.

    Like Buddha said, Wisdom and Health are two real wealth of a person.

    I wish you continue to provide knowledge of yours to public, if they consume to get wisdom or read it on the go, its in their hand. Health through wisdom or the Fate (337) is not in our hands :)

    Thanks,
    Selva

    ReplyDelete
  4. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete
  5. ////Blogger வேப்பிலை said...
    போன வாரம் சுவைத்து மகிழஅனுப்பிய
    வேர்கடலை வந்ததா?
    நிலக்கடலை
    வேர்கடலை
    மல்லாட்டே
    மோம்பொலி என
    எத்தனை பெயர் சொன்னாலும்
    எனக்கு வேர்கடலை தான் ஃபர்ஸ்ட்
    வேக வைத்து திண்பதைவிட
    வெறுமனே வறுத்து திண்பதே சிறப்பு
    கடலை வெறும் வாய்க்கு என்ற நிலை போய்
    கடலை போடுகிறாயா என்றளவுக்கு
    காலம் மாறினாலும்
    கடலை மாறவில்லை அதன்
    சுவையும் மாறவில்லை அதனால்
    சுவைக்க உங்களுக்கும் இந்த கடலை
    கடலை..
    கடலே.. /////

    உங்களூடைய கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  6. ///Blogger selvaspk said...
    Thanks for writing this up. Please write more as time permits in similar topics.
    My deepest concern is, for a society to live, their language and culture are the main pillars. We from the oldest language and land of spirituality are getting away far from the real Tamils.
    I live in US for work, here most of times you live by eating food which is genetically modified, injected with heavy pesticide, people were told oil is unhealthy, sugar is unhealthy, meat is good and so on. The sad part is, people from India believe in what American says. They believe Ghee is bad, Rice is unhealthy and what not.
    Its even tough to convince my room mates, so not to talk about known people!!
    Just saying it, as now the situation in India is 10x fold growing in bad things (see the queue in Subway/McD/Malls) where as the good things are 1/10x.
    Pharma companies destructing our herbs, Siddha is a joke to most youngsters, Ayurvedha means only legiam, people dont even know Unani or Other treatment exists.
    I really wish we still have Gurukul, atleast i would have mastered 10 arts if not 64 (really, do anyone still know what are the 64 kalaigal? May be you should write it).
    India is by far the best and favorite target for USA and other dominating countries for doing human bio-lab, bank-lab, lobbying, taking natural resources without public knowledge with help of corruption (Coke for example) etc.,
    Its just overwhelming how these countries pick the top brains of world to get them together to make such a organized crime. We are just victims. There are so many things which is wrong, if we say it loud, you will be bad guy.
    Like Buddha said, Wisdom and Health are two real wealth of a person.
    I wish you continue to provide knowledge of yours to public, if they consume to get wisdom or read it on the go, its in their hand. Health through wisdom or the Fate (337) is not in our hands :)
    Thanks,
    Selva/////

    உங்களுடைய நீண்ட, கருத்தாழம் மிக்க பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  7. ////Blogger Yarlpavanan Kasirajalingam said...
    சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. ////Blogger Prasanna Venkatesh said...
    அருமையான பதிவு/////

    உங்களுடைய பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  9. வணக்கம் குரு

    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு தந்துள்ளீர்கள். நான் ஒரு முறை லிப்பிட் டெஸ்ட் எடுத்த போது வேர்கடலை மற்றும் எண்ணையை உபயோகிக்க கூடாது என மருத்துவர் அறிவுரை கூறினார்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  10. காந்தி ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும் சாப்பிட்டது நாம் மறந்து போனோம். ஏன் காந்தியையே மறந்து போனோம்.

    இது மிகச் சரியான பதிவு.

    செய்திகள் இணையத்தில் இருந்தாலும் இத்தகைய பதிவுகள் தங்களைப் போன்றவர்களது வலைத்தளத்தில் வருவது செய்தியை மிகுந்தோர் பயனடையும் படி கொண்டு சேர்க்கும்.

    நன்றிகள் அய்யா.

    ReplyDelete
  11. ஐயா வணக்கம்
    அருமையான பதிவு .நம் பாரம்பரிய தீனி கடலை மிட்டாயை மறக்க முடியுமா ஐயா
    நன்றி .

    ReplyDelete
  12. Sir, Very useful information .Thanks.Even 40 years back one doctor advised my father to take groundnut daily for his treatment at his 65 years age.Now only i understand the importance of that R.Sundararajan

    ReplyDelete
  13. ///Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு
    நல்லதொரு விழிப்புணர்வு பதிவு தந்துள்ளீர்கள். நான் ஒரு முறை லிப்பிட் டெஸ்ட் எடுத்த போது வேர்கடலை மற்றும் எண்ணையை உபயோகிக்க கூடாது என மருத்துவர் அறிவுரை கூறினார்.
    நன்றி
    செல்வம்////

    மருத்துவ ரீதியாக அதற்கு ஏதாவது காரணம் இருக்கலாம். நன்றி

    ReplyDelete
  14. ////Blogger Govindasamy said...
    காந்தி ஆட்டுப் பாலும் வேர்க்கடலையும் சாப்பிட்டது நாம் மறந்து போனோம். ஏன் காந்தியையே மறந்து போனோம்.
    இது மிகச் சரியான பதிவு.
    செய்திகள் இணையத்தில் இருந்தாலும் இத்தகைய பதிவுகள் தங்களைப் போன்றவர்களது வலைத்தளத்தில் வருவது செய்தியை மிகுந்தோர் பயனடையும் படி கொண்டு சேர்க்கும்.
    நன்றிகள் அய்யா.////

    உங்களுடைய பாராட்டிற்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  15. ////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    அருமையான பதிவு .நம் பாரம்பரிய தீனி கடலை மிட்டாயை மறக்க முடியுமா ஐயா
    நன்றி ./////

    உண்மைதான். சின்ன வயதில். வீட்டில் மாலை நேரங்களில் தேன்குழல்களையும், கடலை மிட்டாய்களையும் தருவார்கள். அதுதான் மாலை நேர சிற்றுண்டி. பானிபூரி, பேல்பூரிகள் எல்லாம் அப்போது கிடையாது! நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger Sundararajan Rajaraghavan said...
    Sir, Very useful information .Thanks.Even 40 years back one doctor advised my father to take groundnut daily for his treatment at his 65 years age.Now only i understand the importance of that R.Sundararajan////

    நல்லது. உங்களுடைய அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. ////Blogger R.gopal1090@gmail.com Gopal said...
    Very nice health tip/////

    நல்லது. நன்றி நண்பரே

    ReplyDelete
  18. ////Blogger BLAKNAR said...
    அருமையான தகவலுக்கு நன்றி வாத்தியாரே!!!////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி தூத்துக்குடிக்காரரே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com