மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.10.14

Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?


Astrology: நாளும், கோளும் நம்மை என்ன செய்யும்?

நாள் என்பது நட்சத்திரங்களையும் கோள் என்பது நவக்கிரகங்களையும் குறிப்பதாகும். இறைபக்தி மிகுந்தவர்களுக்கு அவைகளால் எந்தத்
துன்பமும் ஏற்படாது என்பது செய்தி. அதை வலியுறுத்திச் சொல்லும் விதமாகக் கந்தரலங்காரத்தில் ஒரு பாடல் உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நாளென் செயும், வினைதான் என் செயும் எனை நாடி வந்த
கோளென் செயும், கொடுங்கூற்று என் செயும் குமரேசர் இரு
தாளும், சிலம்பும் சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே”
- அருணகிரியார் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்களில் ஒரு
முக்கியமான பாடல் இது!

நல்லவனுக்கு நாளும் கோளும் எவ்வித தீங்கும் செய்யாது
என்பதையே அவர் அப்படி குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர்,
நாளென்செயும் வினைதான் என்செயும் எனை நாடி வந்த கோள்
என் செய்யும் என்று அடித்துச் சொல்கிறார். முருகன் அருள் முன்,
கிரகங்கள் வலிமை இழந்து போகும் என்பதே அதன் பொருள்.

சரி, நாளையும் கோளையும் நாம் பார்க்க வேண்டாமா?

பார்க்க வேண்டும்.

நாமென்ன அருணகிரியார் போல, அல்லது குமரகுருபரர் போல
முழுமையாக முருகனருள் பெற்றவர்களா? முருகனை நேரில் சந்தித்தவர்களா? இல்லையே! நாம் முருக பக்தர்கள் என்பது
மட்டுமே உண்மை. மற்றபடி நாம் சாதாரண மனிதர்கள்தான்.

நம் ஜாதகப்படிதான் நம் வாழ்க்கை!
Lord Muruga will give us withstanding power. 
தாக்குப்பிடிக்கும் சக்தியைக் கொடுப்பார்!

எல்லோருக்குமே இறையருள் கிடைத்துள்ளதா? இறையருள்
கிடைத்தவர்கள் கோடியில் ஒருவரே! அவர்களை நாம் மகான்கள்
என்கிறோம்.

திருமணங்களை ஏன் முகூர்த்த நாட்களில் செய்கிறார்கள்?
அவைகள் சுப நாட்கள் என்பதால் அவற்றைத் தேர்வு செய்து
அதில் செய்கிறார்கள். ஒரு ஆண்டில் 55 முதல் 60 நாட்கள் வரைதான்
முகூர்த்த நாட்கள் இருக்கும். மற்ற நாட்கள் எல்லாம் சுப நாட்கள் இல்லை.

எந்த முகூர்த்த நாளாவது செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமை
யில் வருகிறதா, பாருங்கள்? வராது. அதாவது எந்தத் திருமணமாவது செவ்வாய்க் கிழமை அல்லது சனிக்கிழமைகளில் செய்கிறார்களா
என்று பாருங்கள். செய்ய மாட்டார்கள். அவைகள், அதாவது அந்த
இரண்டு கிரகங்களுக்கு உரிய நாட்களும் திருமணங்களுக்கு ஆகாத நாட்களாகும்.

ராகுகாலங்களில், கேது காலங்களில் (எமகண்டங்களில்)
சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள். முகூர்த்த நாட்களில்கூட
அந்த நேரத்தைத் தவிர்த்து விடுவார்கள்.

ஏன்? அந்த நேரத்தில் செய்தால், செய்யும் காரியம் முழுமை பெறாது.
உங்கள் மொழியில் சொன்னால் ஊற்றிக் கொண்டுவிடும். அதே போல அஷ்டமியன்று (எட்டாவது திதியன்று) எந்த சுபகாரியங்களையும்
செய்ய மாட்டார்கள்.

திருமணம் மட்டும்தான் சுபகாரியமா? வீடு வாங்குதல், பிறந்த
குழந்தையை அதன் பாட்டி வீட்டில் இருந்து (அதாவது அது பிறந்த
வீட்டில் இருந்து) நம் வீட்டிற்கு முதன் முதலில் அழைத்து வருதல்
போன்று பலவிதமான சுபகாரியங்கள் நம் வாழ்க்கையில் உள்ளன.

அனுபவப் பட்டவர்களுக்கு அதெல்லாம் தெரியும்.

சரி, எததெற்கு நாளையும் நேரத்தையும் பார்க்க வேண்டாம்?

சாப்பிடுவதற்கும் தூங்குவதற்கும் தினசரி வேலைக்குச் செல்வதற்கு
அதை எல்லாம் பார்க்க வேண்டாம். பசிக்கும்போது சாப்பிட
வேண்டியதுதான். கண் அயர்ச்சி கொள்ளும்போது தூங்க
வேண்டியதுதான். குறிப்பிட்ட நேரத்தில் தினமும் பணிக்குச்
செல்ல வேண்டியதுதான்.

அதுபோல தண்ணியடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், டாஸ்மாக்
கடைக்குப் போவதற்கெல்லாம் நேரம் காலம் பார்க்க வேண்டாம்.
செட் சேர்ந்தால், அதாவது தோழமைகள் அழைத்தால் போக
வேண்டியதுதான்!

தந்தை இறந்துவிட்டால்,ஒரு ஆண்டிற்கும், தாய் இறந்துவிட்டால்,
ஆறு மாதங்களுக்கும், மனைவி இறந்துவிட்டால்,மூன்று
மாதங்களுக்கும்  சுபகாரியங்களைச் செய்யக்கூடாது!

அதுபோல ஜென்ம நட்சத்திரத்தில் (அதாவது ஒருவருடைய
பிறந்த நட்சத்திரத்தன்று) அவருக்கு திருமணத்தை செய்யக்கூடாது.
இது ஆண், பெண் இருவருக்குமே பொருந்தும். அது சுபநாளாக
இருந்தாலும், அந்த நாளின் நட்சத்திரத்தையும் பார்க்க வேண்டும்.

கூடாத நாட்களையும், ஆகாத நட்சத்திரங்களையும் பட்டியலிட்ட பாடல் ஒன்று உள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

ஆதிரை பரணி கார்த்திகை
   ஆயில்யம் முப்பூரங் கேட்டை
தீதிரு விசாகஞ் சோதி
   சித்திரை மகமீ ராறும்
மாதங் கொண்டார் தாரார்
   வழிநடைப் பட்டார் மீளார்
பாய்தனிற் படுத்தார் தேறார்
   பாம்பின் வாய்த் தேரைதானே!

பாடலுக்கான விளக்கம்:

1. பரணி
2. கார்த்திகை
3. திருவாதிரை
4. ஆயில்யம்
5. மகம்
6. பூரம்
7. சித்திரை
8. சுவாதி
9. விசாகம்
10. கேட்டை
11. பூராடம்
12. பூரட்டாதி

ஆகிய 12 நட்சத்திர நாட்களிலும் நம்மிடம் கடன் வாங்கிச் சென்றவர்கள் திருப்பித் தரமாட்டார்களாம். நெடுந்தூரப் பயணம் சென்றவர்கள் (உரிய நேரத்தில்) திரும்ப மாட்டார்களாம்.நோயில் படுத்தவர்கள் குணமாகித் திரும்புவதும் தமதமாகுமாம்

”என்னிடம் பணம் வாங்கிச் சென்ற கடன்காரன் எப்படித் திருப்பித்
தரமாட்டான்? சட்டையைப் பிடித்து அல்லது கழுத்தில் துண்டைப்
போட்டுப் பிடித்து திருப்பி வாங்கிவட மாட்டேனா?” என்று
தெனாவட்டாக யாரும் கேட்காதீர்கள். உங்களிடம் கடன் வாங்கிச்
சென்றவன் நன்றாக இருந்தால் தானே சுவாமி உங்களுக்குத் திரும்பத் தருவான். அதே நட்சத்திர நீயூட்டன் விதி அவனுக்கும் உண்டல்லவா?
கெட்ட நாளில் வாங்கிய அவன் கெட்டுப் போய் இருந்தால் என்ன
செய்வீர்கள்? . செலவு கணக்கில் எழுத வேண்டியதுதான்.
அதை நினைவில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. திதிகளில் அஷ்டமி, நவமி, நாட்களில் செவ்வாய், சனி,நட்சத்திரங்களில் பரணி கார்த்திகை,யோகங்களில் மரணயோகம் ஆகியவற்றைத் தவிர்ப்பது எங்கள் குடும்பங்களில் வழக்கம். ராகுகாலம், எமகண்டமும் கூடாது.

    நல்ல பதிவுக்கு நன்றி ஐயா!

    ReplyDelete
  2. கடனை திருப்பி செலுத்த
    கடன் மீண்டும் வாராது இருக்க

    மைத்தி முகூர்த்தம் சொல்வார்கள்
    மண்டையில் ஏற்றிக் கொள்ள

    அது பற்றி கொஞ்சம் எழுதுங்களேன்
    அந்த கடன்அட்டையோடு திரியும்

    பலருக்கும் அது
    பயனுள்ளதாக இருக்குமல்லவா

    ReplyDelete
  3. வணக்கம் குரு,

    நல்ல பகிர்வு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் சுக்கிரனும் புதனும் சேர்ந்திருந்து மூன்றாமிடம் நன்றாக இருந்தால் நல்ல எழுத்தாளராக வருவார்களென ஜோதிட புத்தகங்களில் படித்தேன். உங்கள் ஜாதகத்தில் அதுபோன்று அமைப்பு உள்ளதா. உங்களுக்கும் மற்றும் வகுப்பறை மாணவர்களுக்கும் எனது உளம்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  4. Vanakkam Ayya,

    Yes you are right. We are not Arunagirinathar or Kumaragurubarar to get the blessings of Lord Muruga. But they have written the good poems on Gods to not only for their betterment but also for us. From the Kandhar Alangaram there is a part called Noorpayan among 108 stanzas as given below which tells that who ever knows atleast a stanza don't need to afraid of the persons given in that stanza.

    சலங்காணும் வேந்தர்தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
    துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
    கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
    அலங்கார நூற்று ளொருகவிதான்கற் றறிந்தவரே.

    ......... பதவுரை .........

    சினம் கொள்கின்ற அரசர்களுக்கும் அஞ்சமாட்டார்கள்; இயமனுடைய
    போருக்கும் அஞ்சமாட்டார்கள்; இருண்ட நரகக் குழியை அடைய
    மாட்டார்கள்; கொடிய நோய்களால் துன்புறமாட்டார்கள்; புலி கரடி யானை
    முதலிய கொடிய விலங்குகள் குறித்தும் மனம் கலங்க மாட்டார்கள்;
    கந்தப்பெருமானது பெருமையைக் கூறும் நல்ல நூலாகிய
    கந்தரலங்காரத்தின் நூறு திருப்பாடல்களுள் ஒரு திருப்பாடலையேனும்
    கற்று அதன் மெய்ப்பொருளை உணர்ந்தவர்களே அவர்களாவர்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com