கவிதை: நீயொரு பாதி நானொரு பாதி!
கவியரசர் கண்ணதாசன் பாடல்களில் சிறப்பானவை
8.10.2014
காதல் மயக்கம்
சிந்தனைக்கும், உணர்விற்கும் தாளிட முடியாது. அதாவது கட்டுப் படுத்திவைக்க முடியாது.
அதுவும் உணர்வின் உச்ச வெளிப்பாட்டில், மனிதன் தன்னை மறந்து சொல்லும் வார்த்தைகள் சுவாரசியமாக இரூக்கும்.
கோபத்தில்,"அவனை நிக்கவச்சு சுடனும்டா" என்று ஒருவன் சொல்வதும், துக்கத்தில், "செத்துடனும்டா" என்று ஒருவன் சொல்வதும் உணர்வுமேலிட வரும் வார்த்தைகள்தான்
காதல் மயக்கம் வந்தால், உணர்வுகள் வெய்யிலில் வைத்த பனிக்கட்டியாக உருகும். அதுவும் பெண்ணிற்கு வந்தால் - பெண் மென்மையானவள் அல்லவா அந்த உருக்கம் பல மடங்கு அதிகமாக இருக்கும்
அதுபோல காதல் மயக்கத்தில், உருக்கத்தில் ஒரு இளம் பெண் என்ன சொல்வாள்?
பள்ளிக்கூட வாத்தியார் என்றால் சங்க இலக்கியத்தைத் துணைக்குக் கூட்டிக் கொண்டு வந்து பதில் சொல்வார்
ஆனால் நம் கவியரசருக்கு அதெல்லாம் தேவையில்லை
கேட்ட மாத்திரத்திலேயே பட்டியலிட்டுப் பாட்டாய் எழுதிக் கொடுத்து விடுவார்
அந்த மயக்கத்திற்கெல்லாம் சரியான பதிலை அவரைவிடச் சிறப்பாக வேறு யார் சொல்ல முடியும்?
"எந்தன் ஆருயிர்க் காதலனைக் காணாத கண் கண்ணல்ல, அவரை எண்ணாத நெஞ்சு நெஞ்சல்ல, அவர் இதழ் பிரிந்து சொல்லாத சொல் சொல்லல்ல,அவரில்லாமல் நானும் நானல்ல" என்று சொல்வாளாம் அந்தப் பெண்
அதோடு விடுவாளா அவள்? மேலும் சொல்வாளாம். “நீயொரு பாதி நானொரு பாதி - இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி. காலங்கள்
மாறலாம்-காட்சிகள் மாறலாம் ஆனால் காதலின் முன்னே நம் இருவருக்கும் எந்த மாற்றமும் வராது. இருவரும் எப்போதும் ஒன்றுதான்!”
மேலும் அவள் சொல்வாளாம்,"என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான் வாரியணைப்பேன் ஆசையினாலே, நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல"
என்னவொரு கருத்து, கற்பனை சொல்லாட்சி பாருங்கள். வாருங்கள் முழுப் பாடலையும் பார்ப்போம்
-------------------------------------------------------------
''உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி - இதில்
யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
(உன்னை)
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைப்பேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்தபோதும் நீயும் நானும் வேறல்ல
(உன்னை)
ஒரு தெய்வமில்லாமல் கோயிலும் இல்லை
ஒரு கோயில் இல்லாமல் தீபமும் இல்லை
நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
(உன்னை)"
படம் : இதயக் கமலம் - வருடம் 1965
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
குரல் : திருமதி. பி.சுசீலா
இசை : திரு. கே.வி. மகாதேவன்
நடிகை : திருமதி.கே.ஆர்.விஜயா
"நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல"
என்ற வரிகள்தான் பாடலின் முத்தாய்ப்பான வரிகள்
==============================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
முத்தாய்ப்பான வரிகள் என்றதில்
ReplyDeleteமுகாந்திரம் வேறு இருப்பதாக
உள்ளதே...அதைத்தான்
உண்மையிலேயே சொல்லவந்ததா?
"காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்" என்ற வரிகளை
நடைமுறை சூழலுக்கு ஏற்ப
நாம் சிந்திக்க தக்கது..
காலத்தால் அழியாத பாடல்!..
ReplyDeleteஇப்போது கேட்டாலும் மேகத்தின் ஊடாக மிதப்பது போலிருக்கும்!..
Goodafternoon sir,
ReplyDeleteNice posting thanks for that.
I want horoscope book
Take care ur health sir.
வணக்கம் சார்...
ReplyDeleteகண்ணதாசா இன்பநேசா
கைநீட்டி அழைக்கின்றபக்கமெல்லாம்
கரம்நீட்டி தாவுகின்றகுழந்தை நீ....
(மு.க)
தத்துவ நோக்கில் இப்பாடலை பார்த்தால் அத்வைதம்தான். நீயும் நானும் வேறல்ல;ஒன்றேதான்.நீயொரு பாதி நானொருபாதி என்னும்போது சிவ சக்தி ஐக்யம்.நாயகி நாயக பாவம் வெளிப்படும் ஒரு பாடல் பி.சுசீலா அம்மாவின் குரல் இனிமையில் நல்ல மெலடி. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteநல்ல பகிர்வு ஐயா...
ReplyDeleteவகுப்பு அறையில் 23/09/2014 அன்று வாத்தியார் அளித்த "ஒரு அரசியல் வாதியின் உருக்கமான கடிதம் " அதில் உள்ள கருத்து "மனைவியிடம் பேசுங்கள். சிந்தித்ததில் சில.....
ReplyDeleteஒருவருக்கு ஒருவர் உணர்ந்து இருவரும் ஒருவர் தான் என்ற எண்ணம் இருவருக்கும் உருவாக வேண்டும், அதையும் , இன்று வந்த பாடலின் கருத்தையும் ஒன்று இணைத்தால் ஒரு உண்மை விளங்கும். அது தான் இது...
" நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம் ...தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல "
அர்தநாதீஸ்வர்ம் என்ற வேதாந்த சொல்லின் கருத்தை திரு. கண்ணதாசன் அவர்கள் மிகவும் அற்புதமாக இந்த பாட்டில் அளித்துள்ளார்.
என்னதான் சொன்னாலும் உங்களுக்கு ரசனை அதிகம்தான் வாத்தியாரே.கவிதையில் இருக்கும் காதல் உணர்வு உங்கள் ரசனையின் உருக்கத்தில் அப்படியே வெளிப்படுகிறது.
ReplyDeleteசும்மாவா... "வாத்தியாரா"ச்சே.
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுத்தாய்ப்பான வரிகள் என்றதில்
முகாந்திரம் வேறு இருப்பதாக
உள்ளதே...அதைத்தான்
உண்மையிலேயே சொல்லவந்ததா?
"காலங்கள் மாறும்
காட்சிகள் மாறும்" என்ற வரிகளை
நடைமுறை சூழலுக்கு ஏற்ப
நாம் சிந்திக்க தக்கது..////
நல்லது. உங்களின் கருத்திற்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteகாலத்தால் அழியாத பாடல்!..
இப்போது கேட்டாலும் மேகத்தின் ஊடாக மிதப்பது போலிருக்கும்!..////
உண்மைதான். நன்றி நண்பரே!
///Blogger sundari said...
ReplyDeleteGoodafternoon sir,
Nice posting thanks for that.
I want horoscope book
Take care ur health sir.////
நல்லது. வேலை நடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் கிடைக்கும். பொறுத்திருங்கள் சகோதரி!
////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்...
கண்ணதாசா இன்பநேசா
கைநீட்டி அழைக்கின்றபக்கமெல்லாம்
கரம்நீட்டி தாவுகின்றகுழந்தை நீ....
(மு.க)////
தகவலுக்கு நன்றி சக்திவேல்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteதத்துவ நோக்கில் இப்பாடலை பார்த்தால் அத்வைதம்தான். நீயும் நானும் வேறல்ல;ஒன்றேதான்.நீயொரு பாதி நானொருபாதி என்னும்போது சிவ சக்தி ஐக்யம்.நாயகி நாயக பாவம் வெளிப்படும் ஒரு பாடல் பி.சுசீலா அம்மாவின் குரல் இனிமையில் நல்ல மெலடி. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!///
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
////Blogger சே. குமார் said...
ReplyDeleteநல்ல பகிர்வு ஐயா.../////
நல்லது. நன்றி நண்பரே!
ReplyDelete////Blogger Chandrasekaran Suryanarayana said...
வகுப்பு அறையில் 23/09/2014 அன்று வாத்தியார் அளித்த "ஒரு அரசியல் வாதியின் உருக்கமான கடிதம் " அதில் உள்ள கருத்து "மனைவியிடம் பேசுங்கள். சிந்தித்ததில் சில.....
ஒருவருக்கு ஒருவர் உணர்ந்து இருவரும் ஒருவர் தான் என்ற எண்ணம் இருவருக்கும் உருவாக வேண்டும், அதையும் , இன்று வந்த பாடலின் கருத்தையும் ஒன்று இணைத்தால் ஒரு உண்மை விளங்கும். அது தான் இது...
" நீ எந்தன் கோயில் நான் அந்த தீபம் ...தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல "
அர்தநாதீஸ்வர்ம் என்ற வேதாந்த சொல்லின் கருத்தை திரு. கண்ணதாசன் அவர்கள் மிகவும் அற்புதமாக இந்த பாட்டில் அளித்துள்ளார்.////
உங்களின் மேலான கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
This comment has been removed by the author.
ReplyDelete/////Blogger Govindasamy said...
ReplyDeleteஎன்னதான் சொன்னாலும் உங்களுக்கு ரசனை அதிகம்தான் வாத்தியாரே.கவிதையில் இருக்கும் காதல் உணர்வு உங்கள் ரசனையின் உருக்கத்தில் அப்படியே வெளிப்படுகிறது.
சும்மாவா... "வாத்தியாரா"ச்சே./////
ரசனை எல்லோருக்கும் பொதுவானதுதான். எதையும் உள்வாங்கிப் படித்தால் நம்மை அறியாமலேயே அது வெளிப்படும். அதாவது ரசனை வெளிப்படும். நன்றி நண்பரே!