மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

Galaxy2007 Class

Galaxy2007 Class
Classroom for Advanced Lessons

Galaxy 2007 Class -Advanced Lessons

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

இரண்டு சிறப்பு வகுப்புக்கள் ஒன்றாக இணைக்கப்பெற்றுள்ளன!

Galaxy 2007 சிறப்பு வகுப்பும் Stars2015 சிறப்பு வகுப்பும் இப்போது ஒன்றாக இணைக்கபட்டு (168 + 126 = 294 பாடங்கள்) ஒன்றாக உள்ளன. 2014 & 2016ம் ஆண்டுகளில் எழுதப்பெற்ற மேல் நிலைப் பாடங்கள் அவைகள், முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் இப்போது படிக்கலாம்.

அந்த இரண்டு வகுப்புக்களும் இணைப்பிற்குப் பிறகு எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

வந்தவர்களின் எண்ணிக்கை

17.10.14

இருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது?


இருவிழிகளால் முழுமையாகக் காண்பதற்கு இயலாதது எது?

பக்தி மலர்

17.10.2014

இன்றைய பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------
உன்னுடைய வேல் ஒன்றே
உறுதுணையாய் வருகிறது!
(உன்னுடைய ... )

கும்மிருட்டுப் பாதையிலும்
கோலாகத் தெரிகிறது!
(உன்னுடைய ... )

வருகிறது ... வேல் வருகிறது

என்னுடைய ஆட்டமெல்லாம் 
நீ அமைத்த மேடையிலே
என்னுடைய ஆட்டமெல்லாம்
நீ அமைத்த மேடையிலே

இசைவதுவும் ... அசைவதுவும்
இசைவதுவும் அசைவதுவும்
நீ காட்டும் ஜாடையிலே
(உன்னுடைய ... )

பன்னிரெண்டு தோள்களெனும்
பரந்தவெளி பறந்துவர
சின்னமனச் சிறகதுதான்
சிறிதேனும் பயின்றிடுமோ

தென்பழநி ஷண்முகத்தின்
தேன் முகத்தைக் காண்பதற்கு 
என்முகத்தில் அமைந்திருக்கும்
இருவிழியால் இயன்றிடுமோ
(உன்னுடைய ... )

சூழ்ந்திருக்கும் இயற்கையெல்லாம்
சொல்லுதய்யா திருப்புகழை
சுற்றி வரும் உலகமெல்லாம்
துதிக்குதய்யா உன் பெயரை

வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை 
வர இருக்கும் பிறவியிலும்
வாழ்த்திடுவேன் நின் அருளை
(உன்னுடைய ... )

கும்மிருட்டுப் பாதையிலும்
கோலாகத் தெரிகிறது 
(உன்னுடைய ... )

வருகிறது ... துணையாய் வருகிறது.

பாடிப் பரவசப்படுத்தியவர்: 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் 
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

kmr.krishnan said...

ஆம் ஐயா!வேலும் மயிலுமே துணை. திக்கற்றவருக்கு தெய்வமே, தண்டபாணித் தெய்வமே துணை.சீர்காழியின் அற்புதமான பகதிப் பாடல்களில் மிகச்சிறந்தது இது.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!

classroom2007 said...

ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:

நல்ல பாடல்.

Ram Venkat said...

முருகா! முருகா!

வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்.

Unknown said...

யாமிருக்க பயம் ஏன்

விசு அய்யர் said...

Thunaiyaga vandhadhu VEL
namkkku amindhadhu vetri VEL

I was in prayer in the morning..
so could not attend the class in the Morning hours..!!

Relaaax... and be HAPPY

வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை
வர இருக்கும் பிறவியிலும்
வாழ்த்திடுவேன் நின் அருளை

Yarlpavanan said...

சிறந்த பக்திப் பா வரிகள்
தொடருங்கள்

selvaspk said...

Oru vinnappam.


ஒரு சுப கிரகம்
1) 3,6,8,12 வீடுகளில் மறைவது
a) - மறையும் வீடு பகை வீடாவது
b) - மறையும் வீடு நட்பு அல்லது ஆட்சி வீடாவது
c) - மறையும் வீட்டில் நீச்சமடைவது
d) மறையும் வீட்டில் அசுபர்
பார்வை பெறுவது
e) மறையும் வீட்டில் அசுபர்
சேர்கை பெறுவது
f) மறையும் வீட்டில் சுபர்
சேர்கை
g) மறையும் வீட்டில் சுபர்
பார்வை பெறுவது


2) கோணம் அல்லது கேந்திரத்தில்
h)- பகைவன் வீட்டில் இருப்பது
i) - நீச்சமடைவது


மேலே உள்ளவற்றை தயவு செய்து தர அடிப்படையில் வரிசை படுத்த வேண்டுகிறேன்

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஆம் ஐயா!வேலும் மயிலுமே துணை. திக்கற்றவருக்கு தெய்வமே, தண்டபாணித் தெய்வமே துணை.சீர்காழியின் அற்புதமான பகதிப் பாடல்களில் மிகச்சிறந்தது இது.பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!/////

நல்லது. நெகிழ்ச்சியூட்டும் உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
நல்ல பாடல்./////

உருவாய்...
அருவாய்....
வருவாய்...
அருள்வாய்....
குகனே!

Subbiah Veerappan said...

////Blogger venkatesh r said...
முருகா! முருகா!
வாயாரப் பாடி மனமார நினைந்து
வணங்கிடலே எந்தன் வாழ்நாளின் இன்பம்
தூயா முருகா மாயோன் மருகா - உன்னைத்
தொழுவதொன்றே இங்கு யான்பெற்ற இன்பம்./////

உண்மைதான். தொழுகின்றவர்களுக்கு முருகனருள் முன்னிற்கும்!

Subbiah Veerappan said...

/////Blogger ramakrishnan jayalakshmi said...
யாமிருக்க பயம் ஏன்////

ஆமாம். அவனிருக்கும்போது நமக்கு பயம் ஏது? நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

///Blogger வேப்பிலை said...
Thunaiyaga vandhadhu VEL
namkkku amindhadhu vetri VEL
I was in prayer in the morning..
so could not attend the class in the Morning hours..!!
Relaaax... and be HAPPY
வாழ்ந்திருக்கும் காலமெல்லாம்
வணங்கிடுவேன் திருவடியை
வர இருக்கும் பிறவியிலும்
வாழ்த்திடுவேன் நின் அருளை////

நான்கு வரிகளில் சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் வேப்பிலையாரே1 நன்றி!

Subbiah Veerappan said...

///Blogger Yarlpavanan Kasirajalingam said...
சிறந்த பக்திப் பாடல் வரிகள்
தொடருங்கள்/////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger futureimpact said...
Oru vinnappam.
ஒரு சுப கிரகம்
1) 3,6,8,12 வீடுகளில் மறைவது
a) - மறையும் வீடு பகை வீடாவது
b) - மறையும் வீடு நட்பு அல்லது ஆட்சி வீடாவது
c) - மறையும் வீட்டில் நீச்சமடைவது
d) மறையும் வீட்டில் அசுபர்
பார்வை பெறுவது
e) மறையும் வீட்டில் அசுபர்
சேர்கை பெறுவது
f) மறையும் வீட்டில் சுபர்
சேர்கை
g) மறையும் வீட்டில் சுபர்
பார்வை பெறுவது
2) கோணம் அல்லது கேந்திரத்தில்
h)- பகைவன் வீட்டில் இருப்பது
i) - நீச்சமடைவது
மேலே உள்ளவற்றை தயவு செய்து தர அடிப்படையில் வரிசை படுத்த வேண்டுகிறேன்/////

இருக்கும் அமைப்பை வைத்து கிரகங்களுக்கு தரச்சான்றிதழா?
கூட்டணியை வைத்து (மற்றகிரகங்களின் அமைப்பை வைத்து) நீங்கள் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை எல்லாம் கணக்கிட முடியாமல் போய்விடும்!
உதாரணத்திற்கு குரு பகவான் ஜாதகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் நன்மை செய்வார். அவருக்கு எப்படி மார்க் போடுவீர்கள்?