மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.10.14

Quiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்!

Quiz.no.69 Answer: நல்ல நேரம் வரும்போது, நல்லதே நடக்கும்!

புதிர் எண் 70ற்கான விடை

29.10.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து 3 கேள்விகளைக் கேட்டிருந்தேன். கேளிகள்தான் மூன்றே தவிர அலச
வேண்டிய வீடு ஒன்றுதான்!

கேட்கப்பெற்றிருந்த கேள்விகள்:

கேள்விகள்:
1. எந்த வயதில் நோய் வந்தது?
2. எத்தனை காலம் அது படுத்தி எடுத்தது?
3. ஜாதகர் அதிலிருந்து குணமாகி மீண்டு வந்தாரா அல்லது வரவில்லையா?

சரியான பதில்:

1. ஜாதகரின் 54வது வயதில் கடுமையான நோய் ஏற்பட்டது.
2. ஏழு ஆண்டுகாலம் அது படுத்தி எடுத்தது.
3. அடுத்துவந்த மகாதிசை சுயபுத்தியில் அவர் மீண்டு வந்தார். பிறகு நலமுடன் இருந்தார்

மிகச் சரியாக இரண்டு கேள்விகளுக்கான பதிலை நமது வகுப்பறையின்
மூத்த மாணவர்களில் ஒருவரான திரு. கே.முத்துராமகிருஷ்ணன்  
(KMRK) அவர்கள் மட்டும் எழுதியுள்ளார். அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவ்ருடைய பதில் கிழே உள்ளது

கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்!
---------------------------------------------------------------

மிதுன லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி 12ல் மறைந்துவிட்டார்.
ஆனாலும் ஜாதகத்தில் சுக்கிரனும், சூரியனும் உச்சம்
பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி உச்சம் அத்துடன் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுபக்கிரகமான சந்திரன்.
ஆறாம் வீட்டில் அதன் அதிபதி செவ்வாய் ஆட்சி பலத்துடன். அது பெரிய மைனஸ் பாயிண்ட்

54 வயதில் கேது மகா திசை ஆரம்பித்த போது நோய் உண்டானது.
தசா அதிபதி கேது லக்கின அதிபதி புதனுடன் கூட்டு - அதுவும்
12ம் வீட்டில்.6ம் அதிபதி செவ்வாயின் நேரடிப் பார்வை அவர்களின்
மேல். அத்துடன் சனியின் பார்வையும் அவர்கள் மேல். மேலும் 8ல்
அமர்ந்த குரு பகவானின் பார்வையும் அவர்கள் மேல். இந்த அமைப்பு அவருக்கு நோயை உண்டாக்கியது.உடல் நோயோடு, மன நோயையும் உண்டாக்கியது.

Ketu dasa started at the age of 54 and it gave all the health problems to the native
Venus Dasa which started at the age of 62 set right everything

சுக்கிரன் உச்சமானதுடன், கேந்திர வீட்டிலும் இருக்கிறார். அவர் தனது
மகா திசையில் நன்மை செய்யத் துவங்கி, ஜாதகரைக் காப்பாற்றி,
நோய்களில் இருந்து ந் மீண்டு வரச் செய்தார்

தசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
////Blogger kmr.krishnan said...
    ஜாதகர் 26 ஏப்ரல் 1937ல் காலை 10மணி 9 நிமிடம் 30 வினாடிக்குப்பிற‌ந்தவர்.
    உஷ்ண‌ ச‌மபந்தமான, குருதி நோய்;ரத்த‌ அழுத்தம்,இதய‌ சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார். இவை துவங்கிய போது அவர் வயது 54.
    60 வயது வரை நோயால் 6 வருடங்கள் துன்பம்.
    செரிபரல் ஹெமரேஜால் 60 வயதில் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
    வீடு மாற்றம் செய்து கொண்டுள்ள சூழலில் அவசரமாக எழுதுகிறேன்.முழுதும் கவனம் செலுத்த முடியவில்லை. மன்னிக்கவும்./////
================================================================
வாழ்க வளமுடன்! 
வளர்க நலமுடன்!

5 comments:

  1. தோழர் லால்குடியாருக்கு
    தொடருகிறது பாராட்டுக்கள் மகிழ்ச்சி

    அடுத்த மாணவர் சந்திப்பில்
    அவருக்கு ஒரு பாராட்டு செய்வோம்..

    வாழ்த்துக்களுடன்
    வணங்குகிறோம்

    ReplyDelete
  2. மூன்றுக்கு இரண்டு என கணக்கில் பதில் சரியாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!தங்களுடைய மாணவன் என்ற அளவில் தங்கள் பெயரைக்காப்பாற்றும் மாணவனாக என்றும் இருப்பேன்.

    தசா புக்திதான் அதிக வேலை செய்கிறது என்பதை அனுபவத்திலும் தங்கள் பாடங்கள் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.

    பி வி ஆர் கூற்றுப்படி 6ம் இடத்துக்காரன் தன் வீட்டிலேயே இருந்து ஒரு கெட்ட கிரஹத்துடன் சேர்ந்து இருந்தால் தீர்க்காயுள்.என் நோக்கம் 12ல் கேது சுபருடன் இருந்ததால் மோட்சம் கேது தசாவில் வந்திருக்கும் என்று யூகித்தேன்.அந்த எண்ணம் தவறாகிவிட்டது.அடுத்த முறை இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன்.இன்று வீடு மாற்றம் செய்கிறேன். எனவே கவனம் சிதறிவிட்டது.

    புதிய வீட்டில் இணையம் எப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை.இணைப்பு கிடைக்கும் போது மீண்டும் தொடர்பில் வருவேன்.

    தங்களிடம் வந்து என்சோதிட அறிவை 'ஃபைன் ட்யூனிங்' செய்து கொண்டேன்.எட்டு பெண்களுக்கு திருமணம் செய்த அனுபவத்தில் பொருத்தம் பார்க்கச்சென்ற இடத்தில் சோதிடர்களின் பரிபாஷையைக் கற்றேன்.பல செய்திகள் புத்த‌கம் படிக்காமலேயே அனுபவத்தில் தெரிய வந்தது.பின்னர் கொஞ்சம் புத்தக அறிவு. பின்னர் உங்களுடைய வழிகாட்டுதல்.

    பல ஆண்டுகளாகவே இலவசமாகப் பலன் சொல்லி வ‌ருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பாராட்டியுள்ளனர்.தகுதியானவர்களிடம் பலனை சொல்லிவிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கிறேன். உதாரணமாக 'வேலை எப்போது கிடைக்கும்' என்று கேட்டால் அவர்க‌ளிடம் அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கமாட்டேன்.'பிரமோஷன் எப்போது கிடைக்கும்' என்பவர்களிடம் கேட்பேன்.10ல் ஒருவர்தான் விவரம் கேட்பார்கள்.

    ஒரு 'ர‌ஃப் எஸ்டிமேட்' சுமார் 8 லட்சம் அன்னதான‌த்திற்கு செலவு செய்துள்ளேன்.அனபர்களிடமிருந்து 3 லட்சம் கிடைத்து இருக்கும். இப்போது
    அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் உப தலைவராக உள்ளேன்.கடந்த 10 மாதங்களாக தினசரி காலை உணவு 60‍=70 நபர்களுக்கு தஞ்சைப் பெரிய கோவில் எதிரில் அளிக்கிறோம்.ஒருநாள் கூடத் தவறாமல் நடந்துள்ளது. அமாவாசை, பூசம், துவாதசி ஆகிய நாட்களில் மதிய உணவும் அளிக்கப்படுகிறது.

    மிக்க நன்றி ஐயா!
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  3. /////Blogger வேப்பிலை said...
    தோழர் லால்குடியாருக்கு
    தொடருகிறது பாராட்டுக்கள் மகிழ்ச்சி
    அடுத்த மாணவர் சந்திப்பில்
    அவருக்கு ஒரு பாராட்டு செய்வோம்..
    வாழ்த்துக்களுடன்
    வணங்குகிறோம்/////

    நல்லது. நன்றி வேப்பிலையாரே!

    ReplyDelete
  4. Blogger kmr.krishnan said...
    மூன்றுக்கு இரண்டு என கணக்கில் பதில் சரியாக வந்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா!தங்களுடைய மாணவன் என்ற அளவில் தங்கள் பெயரைக்காப்பாற்றும் மாணவனாக என்றும் இருப்பேன்.
    தசா புக்திதான் அதிக வேலை செய்கிறது என்பதை அனுபவத்திலும் தங்கள் பாடங்கள் மூலம் உணர்ந்து இருக்கிறேன்.
    பி வி ஆர் கூற்றுப்படி 6ம் இடத்துக்காரன் தன் வீட்டிலேயே இருந்து ஒரு கெட்ட கிரஹத்துடன் சேர்ந்து இருந்தால் தீர்க்காயுள்.என் நோக்கம் 12ல் கேது சுபருடன் இருந்ததால் மோட்சம் கேது தசாவில் வந்திருக்கும் என்று யூகித்தேன்.அந்த எண்ணம் தவறாகிவிட்டது.அடுத்த முறை இன்னும் கவனம் செலுத்த வேண்டும் என்று உணர்கிறேன்.இன்று வீடு மாற்றம் செய்கிறேன். எனவே கவனம் சிதறிவிட்டது.
    புதிய வீட்டில் இணையம் எப்படி வேலை செய்கிறதோ தெரியவில்லை.இணைப்பு கிடைக்கும் போது மீண்டும் தொடர்பில் வருவேன்.
    தங்களிடம் வந்து என்சோதிட அறிவை 'ஃபைன் ட்யூனிங்' செய்து கொண்டேன்.எட்டு பெண்களுக்கு திருமணம் செய்த அனுபவத்தில் பொருத்தம் பார்க்கச்சென்ற இடத்தில் சோதிடர்களின் பரிபாஷையைக் கற்றேன்.பல செய்திகள் புத்த‌கம் படிக்காமலேயே அனுபவத்தில் தெரிய வந்தது.பின்னர் கொஞ்சம் புத்தக அறிவு. பின்னர் உங்களுடைய வழிகாட்டுதல்.
    பல ஆண்டுகளாகவே இலவசமாகப் பலன் சொல்லி வ‌ருகிறேன்.பலரும் வாக்கு பலித்தது என்று பாராட்டியுள்ளனர்.தகுதியானவர்களிடம் பலனை சொல்லிவிட்டு அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கிறேன். உதாரணமாக 'வேலை எப்போது கிடைக்கும்' என்று கேட்டால் அவர்க‌ளிடம் அன்னதானத்திற்கு நன்கொடை கேட்கமாட்டேன்.'பிரமோஷன் எப்போது கிடைக்கும்' என்பவர்களிடம் கேட்பேன்.10ல் ஒருவர்தான் விவரம் கேட்பார்கள்.
    ஒரு 'ர‌ஃப் எஸ்டிமேட்' சுமார் 8 லட்சம் அன்னதான‌த்திற்கு செலவு செய்துள்ளேன்.அனபர்களிடமிருந்து 3 லட்சம் கிடைத்து இருக்கும். இப்போது
    அருள் ஒளி அன்னதான அறக்கட்டளையின் உப தலைவராக உள்ளேன்.கடந்த 10 மாதங்களாக தினசரி காலை உணவு 60‍=70 நபர்களுக்கு தஞ்சைப் பெரிய கோவில் எதிரில் அளிக்கிறோம்.ஒருநாள் கூடத் தவறாமல் நடந்துள்ளது. அமாவாசை, பூசம், துவாதசி ஆகிய நாட்களில் மதிய உணவும் அளிக்கப்படுகிறது.
    மிக்க நன்றி ஐயா!
    kmrk1949@gmail.com////

    உங்களின் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் நன்றி கிருஷ்ணன் சார்! தொடர்ந்து படியுங்கள்!

    ReplyDelete
  5. ஐயா வணக்கம்
    லக்னத்திற்கான அதிபர் இடம் ,பார்வை ,சேர்க்கை முக்கியத்துவம் தசா புத்தி அவசியம் நன்கு புரிந்தது .
    நன்றி ஐயா .

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com