மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

13.10.14

Numerology: Place of living எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2


Numerology: Place of living

எண்கணிதம்: நீங்கள் வசிக்கும் ஊரும் நீங்களும்! பகுதி 2

சென்ற பாடத்தின் தொடர்ச்சி இது!

13.10.2014

நீங்கள் பிறந்த ஊரின் எண்ணும், உங்களுடைய பிறந்த எண்ணும் ஒன்றாக இல்லை என்றால், நீங்கள் பிறந்த ஊரே உங்களுக்கு அதிர்ஷ்டம் தரக்கூடியதாக இல்லை என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.

பிறந்த ஊரின் மேல் அபிமானம் அல்லது காதல் இருப்பது இயற்கையானது! அடிக்கடி அல்லது எப்போது வேண்டுமென்றாலும் சென்று வரலாம். வயதான காலத்தில், அங்கேயே சென்று தங்கி (செட்டிலாகி) நம் காதலைக் கொண்டு செலுத்தலாம். அதாவது பணி ஓய்வு காலத்தில் அதைச் செய்யலாம். ஆனால் பொருளீட்ட வேண்டிய காலத்தில், அதாவது வயது 21ற்கு மேல் 60 வயதுவரை எண் கணிதப்படி ஒத்துவரும் ஊரில் நாம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அது நமக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

அதற்கு எண் கணிதம் ஒரு மாற்று வழியையும் தந்துள்ளது. அதாவது பிறந்த எண் ஒரு ஊருடன் சரிவராதவர்களுக்கு இரண்டாவது சாஸ்சாக வேறு சில எண்களையும் தந்துள்ளது. அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

நீங்கள் ஒன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 4, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
6 மற்றும் 7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் இரண்டாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக 7, 8 மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர் சரிப்பட்டுவராது!

நீங்கள் மூன்றாம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  5, 6, 7 மற்றும் 9. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
4 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் நான்காம் எண்ணிற்கு உரியவரா?
இரண்டாவது சாய்ஸாக  1 மற்றும் 6 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 5ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஐந்தாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  எதையும் தேட வேண்டாம். உங்களுக்கு எல்லா ஊர்களுமே சரிப்பட்டுவரும்.
ஆனாலும் 2 அல்லது 4ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்களைத் தவிர்ப்பது நல்லது!

நீங்கள் ஆறாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  3, 4, மற்றும் 9 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 8ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஏழாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 2 அல்லது 3. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
1 அல்லது 9ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் எட்டாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக 1, 2 & 4 எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
3 அல்லது 6ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

நீங்கள் ஒன்பதாம் எண்காரரா?
இரண்டாவது சாய்ஸாக  1, 2, 3, அல்லதுr 6. எண்களுடைய ஊர்கள் சரிப்பட்டுவரும்
7ஆம் எண்ணுடன் தொடர்புடைய ஊர்கள் சரிப்பட்டுவராது!

Each number has a numerological vibration.
------------------------------------------------------------
இளையராஜாவை எடுத்துக்கொள்வோம்.

அவருடைய பிறந்த தேதி: 2.6.1943

ஆதாரம்: http://en.wikipedia.org/wiki/Ilaiyaraaja

அவருடைய இயற்பெயர்: ஞானதேசிகன் (Gnanadesikan)
மாற்றி வைத்துக்கொண்ட பெயர்: Ilaiyaraaja
GNANADESIKAN = 3+5+1+5+1+4+5+3+1+2+1+5 = 36 = 9
ILAIYARAAJA = 1+2+1+1+1+1+2+1+1+1+1 = 13 = 4

இரண்டாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு 5ஆம் எண் மட்டுமே ஒத்துவராது. மற்ற எண்கள் எல்லாம் ராசியானதே! அவருக்குப் பிறந்த ஊர், வசிக்கும் ஊர், வீட்டில் வைத்த பெயர், அவர் மாற்றி வைத்துக்கொண்ட பெயர் என்று அனைத்துமே வசப்பட்டுள்ளது! அதாவது ராசியாக உள்ளது! ஜாதகத்தில் அவருக்கு மகா புருஷ யோகம் உள்ளது. அதனால் அவருக்கு எல்லாமும் வசப்படுகிறது. எண்ணற்ற ரசிகர்களையும் தன் வசப்படுத்தி வைத்துள்ளார்
---------------------------------------------------------
எண்கணிதத்தைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

ஜோதிடம் அதைக் கண்டுகொள்ளவே இல்லை!

மருத்துவத்தில் Allopathy, Homeopathy, Ayurveda, Acupuncture போன்று பல பிரிவுகள் இருப்பதைப்போல, பல சிகிச்சைமுறைகள் இருப்பதைப்போல ஜோதிடத்தில் பல பிரிவுகளில் இந்த எண் கணிதமும் ஒன்று. விருப்பமென்றால் எடுத்துக்கொள்ளலாம். அல்லது நம் வகுப்பறை ஜோதிடத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

அது உங்கள் சாய்ஸ்!

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

BLAKNAR said...

பகிர்வுக்கு மிகவும் நன்றி வாத்தியாரே....

lrk said...

காலை வணக்கம் ஐயா
எண்கணிதம் தொடர் அருமை .
மேல் நிலை பாடங்களை பதிந்தது .நன்றி .

Sakthivel K said...

வணக்கம் சார்...

எந்தஊர் என்ன!
எந்தஎண் என்ன!

நல்ல மனமும்
நல்ல குணமும்
நேர்மையும் இருந்தால்
சென்றயிடமெல்லாம் சிறப்பு!!!

வேப்பிலை said...

எண்களா...?
எண்ணங்களா..?

இருக்கட்டும்
இந்த எண்கள் அண்மையில்

கண்டு பிடிக்கப்பட்டது தானே
காணாதது இன்னமும் இருக்கிறதே

Subbiah Veerappan said...

/////Blogger BLAKNAR said...
பகிர்வுக்கு மிகவும் நன்றி வாத்தியாரே....////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

Blogger lrk said...
காலை வணக்கம் ஐயா
எண்கணிதம் தொடர் அருமை .
மேல் நிலை பாடங்களை பதிந்தது .நன்றி .

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
எந்தஊர் என்ன!
எந்தஎண் என்ன!
நல்ல மனமும்
நல்ல குணமும்
நேர்மையும் இருந்தால்
சென்றயிடமெல்லாம் சிறப்பு!!!/////

ஆமாம்! ஆமாம்! ஆமாம்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
எண்களா...?
எண்ணங்களா..?
இருக்கட்டும்
இந்த எண்கள் அண்மையில்
கண்டு பிடிக்கப்பட்டது தானே
காணாதது இன்னமும் இருக்கிறதே/////

அப்படி இருப்பதை நீங்கள் சொல்லுங்கள் வேப்பிலையாரே! கேட்டுக்கொள்கிறோம்!

selvam velusamy said...

வணக்கம் குரு,

எண்கணிதம் பதிவிற்கு நன்றி. புதிர் போட்டிகள் வந்து நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. புதிர் போட்டியும் தாருங்கள் என வேண்டுகிறேன்.

நன்றி
செல்வம்

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
எண்கணிதம் பதிவிற்கு நன்றி. புதிர் போட்டிகள் வந்து நீண்ட இடைவெளி ஆகிவிட்டது. புதிர் போட்டியும் தாருங்கள் என வேண்டுகிறேன்.
நன்றி
செல்வம்////

உங்களின் வேண்டுகோளுக்கு நன்றி. பதிவிடுகிறேன்!

Santhi Pusparani said...

thank you very much for your usefull service i like more numrology lesson sir please
santhi

நாகராஜ் சிவானந்தம் said...

அருமை