Humour: நகைச்சுவை: ஒற்றைவரி நகைச்சுவைகள்!
டக்’ டக்’ கென்று ஒற்றைவரிகளில் கேட்கப்படும் கேள்வி, பதிலைப் போல, இன்று ஒற்றைவரி நகைச்சுவைகளை வழங்கியிருக்கிறேன். படித்து மகிழுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------
*டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
எந்த பாட்டுக்கு?
*ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
நோயோடதான்!
*தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
*டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
*டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி
வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?
*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
*படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!
*காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?
*குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
தெரியல! குளிக்கும் போதே துவட்ட முடியாதே!
*இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..!!?
என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
*டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு!
என்னிடம் சுத்தமா இல்ல! பரவாயில்லை!
கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
*இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
கிடைக்காது! கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
*சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
இன்டெர்வியுக்கு சென்றவர்: ஒ! நிறைய! என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!
*மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னா
இவைகள் மின்னஞ்சலில் வந்தவை. ஓரளவிற்கு நன்றாக இருந்தன. அதனால் உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். மொத்தம் 15 உள்ளன. இவற்றில் எது மிகவும் நன்றாக உள்ளது. அதைச் சொல்லிவிட்டுச் செல்லுங்கள்
--------------------------------------
செய்தியின் மூலம் ஒரு வேண்டுகோள்!:
சீனத்து பட்டாசுகளை புறக்கணிப்போம்.
....
தீபாவளிக்கு சீனப்
பட்டாசுகளை வாங்காதீர்கள்.
சிவகாசிப்
பட்டாசுகளை மட்டுமே வாங்கி 5
இலட்சம் தமிழ் குடும்பங்களை வாழ
வையுங்கள்....
வெளியுறவுக் கொள்கையின்
ஒரே காரணத்தால்
இந்தியா சீனத்துப்
பொருட்களை இங்குள்ள
வியாபாரிகள் இறக்குமதி செய்ய
அனுமதி கேட்டால் அரசாங்கத்தால்
தடை சொல்ல முடியாது.
ஆகவேதான்
வடநாட்டு வியாபாரிகள் சீனாவில்
இருந்து மலிவு விலையில்
ரூ 2000
கோடிக்கு பட்டாசுகளை இறக்குமதி செய்து
தமிழன் தலையில் கொளுத்திப் போடப்
பார்க்கிறார்கள்.
அரசாங்கத்தால் தடை செய்ய
முடியாததை தமிழர்களாகிய நாம்
செய்வோம். சீனத்துப்
பட்டாசுகளை நீங்கள்
வாங்கவில்லை என்றால் அடுத்த
வருடம் அதை இறக்குமதி செய்ய
அந்த சுயநல வணிகர்கள்
தயங்குவார்கள்.
வியாபாரம் குறையும். மெல்ல மெல்ல சீனப்
பொருட்கள் நம்மை விட்டு விலகும்.
தமிழர்களே... விழித்தெழுங்கள்....
சீனா உங்கள் தேசமல்ல, சீனப்
பொருட்கள் உங்கள் உள்நாட்டுத் தயாரிப்பல்ல....
சிவகாசி உங்கள் ஊர்...
சிவகாசிக்காரர்கள் நம் மக்கள்...
தமிழர்கள்.... அவர்களது பரம்பரைத்
தொழிலை நசிக்கப் பார்க்கும்
சீனாவை நாம் உள்ளே நுழைய விடலாமா?
நீங்கள் சிவகாசிப்
பட்டாசு வாங்கவில்லை என்றாலும் பரவாயில்லை !... ஆனால்
சீனத்து பட்டாசு வாங்கி வெடித்து அனைத்து தமிழர்களின்
தலையிலும் தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்....
அதுமட்டும் இல்லை.... ஒருவருடம்
இந்த தீபாவளிக்காக,
உங்களுக்காகவே உழைத்து,
வெடிவிபத்தில் சிக்கி சீரழிந்து,
தினம் செததுப் பிழைக்கும்
சிவகாசிப் பட்டாசுத் தொழிலில்
ஈடுபட்டுள்ள 5 இலட்சம் தமிழ்க் குடும்பமும்
உங்களை காலமெல்லாம் வாழ்த்தும்.....
இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்...
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

தீபாவளியின் போது பட்டாசு வகைகளை வெடிப்பதில்லை என்றாலும் தமிழ்க் குடும்பங்கள் வாழ வேண்டும்.. வாழ வைப்போம்!..
ReplyDeleteசீனப் பொருட்களைத் தவிர்ப்போம்..
வாழ்க பாரதம்!.. வளர்க தமிழகம்!..
Respected Sir
ReplyDeleteThe last Joke made me laugh out loud. Sardhar joke is always good.
*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
ReplyDeleteபையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
*மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா.
எல்லாம் மிக்க நன்று.
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
ReplyDeleteமிக நல்ல வேண்டுகோள் .....நாம் அனைவரும் இந்த சீன பட்டாசுகளை புறக்கணிப்போம் .ஒன்று ..10 ஆகும் ..10 ..100 ஆகும் பல்கி பெருகி .மொத்தத்தில் வெளி நாட்டு பொருட்களை. புறகணிப்போம் ...
நமது நாட்டின் முன்னேற்றம் ....நமது ஒற்றுமையில் உள்ளாது ..!!! வந்தே மாதரம் ....ஜெய் ஹிந்த். s.n.ganapathi.
வணக்கம் சார்..
ReplyDeleteபட்டாசு!!!
பணக்காரன் வாங்கலாம்.
ஒருநிமிடத்தில் எரிக்கலாம்.
ஏழைகள். யோசிக்கவேண்டும்!
சீனா பட்டாசும் தேவையில்லை.
இந்தியா பட்டாசும் தேவையில்லை.
சிலமாதங்கலாவது நம்முடனோ,
நம் வீட்டிளோ இருக்கவேண்டும்.
அது நமக்கு பயன்படவேண்டும்
இது போன்றபொருள்கள்
வாங்கவேண்டும்!!!
ஏழைகள் இப்படிதான் யோசிக்கவேண்டும்..
all joke super
ReplyDeleteகாபி செய்து டுவிட்டர்ல போடலாமா?
ReplyDelete'தங்க வீடு கிடைக்குமா(?)' தான் பெஸ்ட்.
ReplyDeleteஉண்மையில் நடந்தது.
பிச்சைக்காரரிடம் "போய்ட்டு அப்பறமா வாங்க" என்றேன். 'நேரம் சொன்னா கரெக்டா அந்த நேரத்திற்கு வரேன் சார்' என்றாரே பார்க்கலாம். அசந்து போய் விட்டேன். அவருடைய நகைச்சுவை உணர்வைப் பாராட்டி 10/ ரூபாயைக் கொடுத்து அனுப்பினேன்.
================================
சீனா பட்டாசுகள் ஆபத்தானவையும் கூட. எனவே சீனப் பொருட்களை வாங்காதீர்கள்.
அன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்,
ReplyDeleteஅனைத்து நகைச்சுவைகளும் அருமை.
நான் மிகவும் ரசித்தது...
*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
நன்றி...
/////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteதீபாவளியின் போது பட்டாசு வகைகளை வெடிப்பதில்லை என்றாலும் தமிழ்க் குடும்பங்கள் வாழ வேண்டும்.. வாழ வைப்போம்!..
சீனப் பொருட்களைத் தவிர்ப்போம்..
வாழ்க பாரதம்!.. வளர்க தமிழகம்!..////
நல்லது. நன்றி நண்பரே!
/////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
The last Joke made me laugh out loud. Sardhar joke is always good./////
அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நன்றி டல்லாஸ் கண்ணன்!
/////Blogger mrx said...
ReplyDelete*சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
*மனைவி: ஏங்க! நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா? அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல!
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா.
எல்லாம் மிக்க நன்று.////
உங்களின் ரசனை உணர்விற்கு நன்றி கணபதியாரே!
////Blogger hamaragana said...
ReplyDeleteஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிக நல்ல வேண்டுகோள் .....நாம் அனைவரும் இந்த சீன பட்டாசுகளை புறக்கணிப்போம் .ஒன்று ..10 ஆகும் ..10 ..100 ஆகும் பல்கி பெருகி .மொத்தத்தில் வெளி நாட்டு பொருட்களை. புறகணிப்போம் ...
நமது நாட்டின் முன்னேற்றம் ....நமது ஒற்றுமையில் உள்ளாது ..!!! வந்தே மாதரம் ....ஜெய் ஹிந்த். s.n.ganapathi./////
நல்லது. நன்றி கணபதியாரே!
////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்..
பட்டாசு!!!
பணக்காரன் வாங்கலாம்.
ஒருநிமிடத்தில் எரிக்கலாம்.
ஏழைகள். யோசிக்கவேண்டும்!
சீனா பட்டாசும் தேவையில்லை.
இந்தியா பட்டாசும் தேவையில்லை.
சிலமாதங்கலாவது நம்முடனோ,
நம் வீட்டிளோ இருக்கவேண்டும்.
அது நமக்கு பயன்படவேண்டும்
இது போன்றபொருள்கள்
வாங்கவேண்டும்!!!
ஏழைகள் இப்படிதான் யோசிக்கவேண்டும்..//////
உண்மைதான்! உங்களின் பரிந்துரைக்கு நன்றி சக்திவேல்!
/////Blogger raja ganesh said...
ReplyDeleteall joke super///
நல்லது. நன்றி ராஜ கணேஷ்!
/////Blogger raja ganesh said...
ReplyDeleteகாபி செய்து டுவிட்டர்ல போடலாமா?/////
நகைச்சுவைகளைத் தானே? போடுங்கள்!
ஜோதிடப் பாடங்களைப் போட வேண்டாம்!
////Blogger kmr.krishnan said...
ReplyDelete'தங்க வீடு கிடைக்குமா(?)' தான் பெஸ்ட்.
உண்மையில் நடந்தது.
பிச்சைக்காரரிடம் "போய்ட்டு அப்பறமா வாங்க" என்றேன். 'நேரம் சொன்னா கரெக்டா அந்த நேரத்திற்கு வரேன் சார்' என்றாரே பார்க்கலாம். அசந்து போய் விட்டேன். அவருடைய நகைச்சுவை உணர்வைப் பாராட்டி 10/ ரூபாயைக் கொடுத்து அனுப்பினேன்.
================================
சீனா பட்டாசுகள் ஆபத்தானவையும் கூட. எனவே சீனப் பொருட்களை வாங்காதீர்கள்./////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger BLAKNAR said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு வணக்கம்,
அனைத்து நகைச்சுவைகளும் அருமை.
நான் மிகவும் ரசித்தது...
*என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
நன்றி.../////
நல்லது. நன்றி நண்பரே!
அரசின் தாராளமயபடுத்தல் கொள்கையால் வெளிநாட்டுப் பொருட்கள் வருவதைத் தடுக்க முடியாதுதான். இது விஷயத்தில் தாங்கள் சொல்வது போல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எங்கள் நாட்டில் பட்டாசு தடை செய்யப்பட்டுள்ளது. வாங்க/விற்க முடியாது. மத்தாப்பு அனுமதிக்கப்படுகிறது. ஆனாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆயினும் பட்டாசுகளை தாய்லாந்து/சீனா போன்ற நாடுகளிலிருந்து கடத்திக் கொண்டு வந்து விற்கதான் செய்கிறார்கள்.
ReplyDeleteஎனக்குப் பிடித்தது. "படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
ReplyDeleteபுக்கை மூடிடுவேன்!"
தீபாவளி அன்று சீனா தயாரிப்பு பட்டாசு களை தவிர்ப்போம் .நம் நாட்டுப் பொருளாதாரத்தை காப்போம் .
ReplyDeleteநன்றி .
///Blogger Kirupanandan A said...
ReplyDeleteஅரசின் தாராளமயபடுத்தல் கொள்கையால் வெளிநாட்டுப் பொருட்கள் வருவதைத் தடுக்க முடியாதுதான். இது விஷயத்தில் தாங்கள் சொல்வது போல் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எங்கள் நாட்டில் பட்டாசு தடை செய்யப்பட்டுள்ளது. வாங்க/விற்க முடியாது. மத்தாப்பு அனுமதிக்கப்படுகிறது. ஆனாலும் ஏகப்பட்ட கெடுபிடிகள். ஆயினும் பட்டாசுகளை தாய்லாந்து/சீனா போன்ற நாடுகளிலிருந்து கடத்திக் கொண்டு வந்து விற்கதான் செய்கிறார்கள்.////
உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஆனந்த்!
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஎனக்குப் பிடித்தது. "படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!"/////
நல்லது. நன்றி ஆனந்த்!!
////Blogger lrk said...
ReplyDeleteதீபாவளி அன்று சீனா தயாரிப்பு பட்டாசு களை தவிர்ப்போம் .நம் நாட்டுப் பொருளாதாரத்தை காப்போம் .
நன்றி .////
நல்லது. நன்றி நண்பரே!!
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த ஒற்றை வரி ஜோக்ஸ் நான் முகநூலில் பதிவு செய்தவை--
ReplyDeleteஅருணாசலம் சுந்தரம்
////Blogger SUNDARAM.AL.AR said...
ReplyDeleteஇந்த ஒற்றை வரி ஜோக்ஸ் நான் முகநூலில் பதிவு செய்தவை--
அருணாசலம் சுந்தரம்////
அப்படியா? எனக்கு whatsAppலும், மின்னஞ்சலிலும் வந்தது. எனது சொந்த சரக்கல்ல.
மின்னஞ்சலில் வந்தது என்று குறிப்பிட்டுள்ளேனே. அதைக் கவனித்தீர்களா?