மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.11.18

பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!


பிறவி மேதையைப் பற்றி சில செய்திகள்!!!

கணித மேதை சகுந்தலா தேவி 👀 பிறந்தநாள்..! 💐

அந்தக் குட்டிப் பெண்ணின் பெயர் தேவி. அவள் அப்பா வித்தியாசமானவர். அவரின் முன்னோர்கள் கோயில் அர்ச்சகராக இருந்தார்கள். அவரோ, சர்க்கஸ் பக்கம் போனார். எண்ணற்ற வித்தைகள், பலவித மேஜிக்குகள் என அசத்தினார். அப்பாவைப் பார்த்து அந்தச் சுட்டிக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.

''அப்பா, எனக்கும் ஏதாச்சும் சொல்லித்தா!' என்றாள். அட்டைகளில் மேஜிக் சொல்லித் தந்தார் அப்பா. கொஞ்ச நேரம்தான், எல்லா அட்டைகளையும் மனப்பாடமாக ஒப்பித்தாள் தேவி. அப்போது அவள் வயது 3.

'இனி சர்க்கஸ் வேண்டாம்’ என முடிவு செய்த அப்பா, மகளைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவளின் அதிவேகக் கணக்குப் போடும் ஆற்றலைக் காட்டினார். ''சின்னப் பெண்ணுக்கு இவ்வளவு அறிவா? கூப்பிடு செக் பண்ணிடலாம்'' எனப் பெரிய பெரிய பல்கலைக்கழகங்கள் அழைத்தன.

வீட்டின் வறுமையைப் போக்க, ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்து, பின் அதுவே வாழ்க்கை ஆகிப்போனது. அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு. இப்போது தேவிக்கு வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா?

916748676920039158098660927585380162483106680144308622407126516427934657040867096593279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள்.

கணினி 13,000 கட்டளைகளுக்குப் பிறகு, ஒரு நிமிடத்தில் பதிலைச் சொல்லத் தயாரானபோது, 546372891 என 10 நொடிகள் முன்னமே தேவி சொல்லி விட்டார். அரங்கத்தில் இருந்த பார்வையாளர்கள் நீண்ட கரவொலி எழுப்பினர்.

லண்டன் மாநகரில் 7,686,369,774,870 மற்றும் 2,465,099,745,779 என இரு எண்களைப் பெருக்கச் சொன்னார்கள். 28 நொடிகளில் விடையைச் சொல்லி, கின்னஸ் சாதனையில் இடம் பிடித்தார். அவர்தான் சகுந்தலா தேவி.

தான் பள்ளிக்கல்வி பெறாவிட்டாலும் சுட்டிகளுக்காக கணிதத்தை எளிமையாகக் கதை வடிவில் சொல்லும் வகையில் பல நூல்களை எழுதினார். ''கணிதம் என்பது பாடம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை. நீங்கள் சாப்பிடுகிற சாப்பாடு, பிறந்த நாள், விளையாட்டு என எல்லாவற்றிலும் கணிதம் இருக்கிறது. அதை சுட்டிகளுக்கு சொல்லித் தர வேண்டும். கணிதத்தைக் கதை போலச் சொல்லித் தர வேண்டும்'' என்றார் சகுந்தலா தேவி. இன்று (05/11/18) அவரது பிறந்தநாள்..!

உலகின் அதிவேக மனிதக் கணினியை அன்போடு நினைவுகூர்வோம்.🙏🏼
-------------------------------------------------------------------------
படித்து வியந்தது!!!
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

 1. சிறப்பான தகவல்கள்.

  ReplyDelete
 2. Ayya Vanakam, wiki date of birth is different.

  ReplyDelete
 3. Dear guru,
  Good morning. I am happy to read this article. She wrote lot of books, in this " more puzzles " book is very useful. Mnc companies asking question from this book. I took one week to solve a puzzzle in that book. Such a interesting one. I amaze. How sir pudan gives this wonders? Or which plant is so responsible? Can i have her horoscope?

  ReplyDelete
 4. வணக்கம் குருவே!
  பிறவி மேதையைப் பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி!
  அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள்
  கௌரவித்த அந்த மனிதக் கணிணியை, அக்காலத்திய
  பிரதமர் திருமதி இந்திரா காந்தி
  அவர்களுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, நம் நாட்டில் கௌரவிக்கவில்லை என்பதோடு அவரது எந்த நிகழ்ச்சியையும் இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பத் தடை விதித்திருந்தார்
  என்று கேள்விப்பட்டது உண்மையா?

  ReplyDelete
 5. இவர் திறமை பாராட்டக் கூடியது தான்..
  ஆனால்...

  இப்படி கணக்கு சொல்வதால் என்ன பயன்..

  ReplyDelete
 6. Respected Sir,

  Happy afternoon. Its wonderful...

  Thanks for sharing....

  Have a great day.

  With regards,
  Ravi-avn

  ReplyDelete
 7. /////Blogger ஸ்ரீராம். said...
  சிறப்பான தகவல்கள்.////

  நல்லது. நன்றி ஸ்ரீராம்!!!!!

  ReplyDelete
 8. /////Blogger jay kumar said...
  Ayya Vanakam, wiki date of birth is different./////

  தகவலுக்கு நன்றி!!!!

  ReplyDelete
 9. //////Blogger Kesavaraj & Kalaivani said...
  Dear guru,
  Good morning. I am happy to read this article. She wrote lot of books, in this " more puzzles " book is very useful. Mnc companies asking question from this book. I took one week to solve a puzzzle in that book. Such a interesting one. I amaze. How sir pudan gives this wonders? Or which plant is so responsible? Can i have her horoscope?/////

  இப்போது நேரமில்லை. பின்பு ஒருநாள் அலசுவோம். பொறுத்திருங்கள்!!!!!

  ReplyDelete
 10. //////Blogger வரதராஜன் said...
  வணக்கம் குருவே!
  பிறவி மேதையைப் பற்றிய அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி!
  அமெரிக்க, பிரிட்டிஷ் அரசுகள்
  கௌரவித்த அந்த மனிதக் கணிணியை, அக்காலத்திய
  பிரதமர் திருமதி இந்திரா காந்தி
  அவர்களுடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக, நம் நாட்டில் கௌரவிக்கவில்லை என்பதோடு அவரது எந்த நிகழ்ச்சியையும் இந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ஒலி/ஒளி பரப்பத் தடை விதித்திருந்தார்
  என்று கேள்விப்பட்டது உண்மையா?//////

  தெரியவில்லை வரதராஜன்!!!!

  ReplyDelete
 11. ////Blogger வேப்பிலை said...
  இவர் திறமை பாராட்டக் கூடியது தான்..
  ஆனால்...
  இப்படி கணக்கு சொல்வதால் என்ன பயன்..////

  உண்மைதான். உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வேப்பிலையாரே!!!!!

  ReplyDelete
 12. /////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy afternoon. Its wonderful...
  Thanks for sharing....
  Have a great day.
  With regards,
  Ravi-avn/////

  நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com