மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.11.18

Astrology: ஜோதிடம்: புதிர்: விவாகம் ஏன் ரத்தானது?


Astrology: ஜோதிடம்: புதிர்: விவாகம் ஏன் ரத்தானது?

கீழே உள்ள ஜாதகம் ஒரு அன்பரின் ஜாதகம். அவருக்கு நீண்ட நாள் தாமதித்து அவருடைய 36வது வயதில்தான் திருமணம் நடைபெற்றது. ஆனால் துரதிஷ்ட வசமாக திருமணமான சில மாதங்களிலேயே (ஒரு ஆண்டிற்குள்) திருமண வாழ்வு முடிவிற்கு வந்து விட்டது. ஆமாம். அவருடைய விவாகம் ரத்தில் முடிந்து விட்டது. மனைவியின் உடல் நிலை காரணம்.

இப்போது கேள்விக்கு வருகிறேன்:

திருமணம் ஏன் விவாகரத்தில் முடிந்தது? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!

சரியான விடை 2-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

 1. 1. மனைவி ஸ்தானதிபதி 7க்கு உரிய கிரகம் சனி 6ம் இடத்தில் அமர்ந்தது. வக்கிரமும் அடைந்தது.
  2. எட்டாம் அதிபதி குரு 6ம் இடத்தில் அமர்ந்து 7ம் அதிபதியைப் பாதித்தது. குருவும் வக்கிரம் அடைந்து நீசமும் பெற்றது..
  3. 7ம் இடத்தில் கேது வந்து அமர்ந்தது. 7ம் இடத்திற்கு ராகு, செவ்வாய் பார்வை அமைந்தது.
  4.7ம் இடத்திகு அஷ்ட வர்க்க பரல் 20 மட்டுமே. சுக்கிரனைத் தவிர மற்ற எல்லா கிரகங்களும் சுய வர்க்கத்தில் 4க்கும் கீழாகப் பரல் பெற்றது.
  5.12ம் அதிபதி சந்திரன் 8ல் சென்று அம்ர்ந்தது படுக்கை சுகத்தைப் பரித்தது.
  6 லக்கினாதி பதியும் குடும்ப ஸ்தான அதிபதியும் 12ல் மறைந்தது குடும்பம் அமையாமல் செய்தது.
  7.36 வயதில் நடந்த சுக்கிரதசா ராகு புக்தி திருமணத்தை நடத்திவைத்தது.
  அடுத்துவந்த குரு புக்தி (எட்டாம் அதிபதி புக்தி)சுக்கிரனுட்ன் பகையானதால் மனைவியுடன் சண்டையைத் துவக்கியது. பிரிவில் முடித்துவைத்தது.
  8.சாதாரணமாகவே சிம்ம ராசிக்காரர்கள், லக்கினகாரர்களுக்குத் திருமணவாழ்வு சுமார்தான். சனி 7ம் இடமாக வருவதால் உறுதிபடைத்த, மிக நிதானமான வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனை செய்துகொண்டேதான் வாழ்வார்கள். இந்த
  ஜாதகருக்கு சனியும் வக்கிரமடைந்ததால் மனைவி திரும்பிக்கொண்டு சென்று விடார்கள்.

  ReplyDelete
 2. 7ம் வீட்டில் தீய கிரகம் (கேது) அமர்ந்து இருந்தாலும், 7ம் வீட்டை தீய கிரகம் (ராகு)பார்த்தாலும், 7ம் வீட்டு அதிபதி சனி 6ம் வீட்டில் (அதாவது 7ம் வீட்டிற்க்கு 12ம் வீடு) திருமணம் பிரிவில் தான் முடியும்,...

  ReplyDelete
 3. Good morning sir, The person was born on 01/08/1961 time 8.05 am Simma lagna Meena Rasi Uttrattadhi nakshtra lagna lord sun in 12th house and seventh house lord in sixth house is not good for married life and second house lord in twelfth house is not good for family life hence married life was divorced . Thanks sir vazhga valamidan

  ReplyDelete
 4. இந்த எளியேனின் பதில்

  7 க்கு (கும்பம்) உடையவர் சனீஸ்வரன் அவர் அந்த வீட்டுக்கு 12 ம் இடமான 6 ம் இடத்தில் (மகரம்) உள்ளார். ஆகவே விவாகரத்தில் முடிந்தது.

  சரியா என்று கூறுங்கள் ஐயா

  ReplyDelete
 5. ஐயா வணக்கம்,
  1, லக்ன அதிபதி, குடும்ப அதிபதி லக்னத்திற்கு 12 ல் விரையத்தில் அமர்ந்து வலுவிழந்துள்ளனர்,
  2, 7ம் அதிபதி 7 க்கு 12ல் 6வது வீட்டில் உள்ளார், அவர் 6 ம் அதிபதிம் ஆவார், உடன் 8ம் அதிபதி குரு உள்ளார்,
  எட்டாம் அதிபதி ஏழாம் அதிபதியோடு ஆறாம் வீட்டில் உள்ளதால் மனைவிக்கு நலமில்லை,
  3, மேலும் குரு நீசத்தில் இருக்கிறார்,

  4, 7ம் அதிபதி மற்றும் 2 ம் அதிபதி வர்கோத்தமத்தில் முறையே 6 ம் வீட்டிலும் 12ம் வீட்டிரலும் உள்ளனர்,
  5, களத்திரகாரகன் சுக்ரன் எவ்வித பார்வை ம் இல்லாமல் உள்ளார்
  6. 7ம் வீட்டை ராகு பார்வை
  எனவே லக்ன அதிபதி குடும்ப அதிபதி வலுவிழந்தும், அவர்களை பாவி சனி பார்ப்பதாலும், நீச குரு பார்வையின் பார்வை பலன் இல்லை,

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா,1)7ம் இடத்தில் கேது.7ம் இடத்திற்க்கு,ராகுவுடன் சேர்ந்த வலுவிழந்த யோககாரன் செவ்வாய் பார்வை.2)7ம் அதிபதி சனி,ஆறில் அமர்ந்து வர்கோத்தம்.மனைவி நோயாளி.3)7ம் அதிபதிக்கு,லக்ன சுபரான சூரியன் 12ல் அமர்ந்து,மேலும் முழுமுதல் பாபரான வர்கோத்தமம் அடைந்த புதனுடன் சேர்ந்ததால் கெடுதலான பார்வையாய் ஆனது.4)சந்திரனை லக்னமாக கொண்டு பார்ப்போம்.7ம் இடத்திற்க்கு,5ம் அதிபதி மற்றும் சனியுடன் சேர்ந்து கெட்ட லக்னாதிபதி பார்வை.5)7ம் அதிபதி,6ம் அதிபதியுடன் சேர்ந்து நோயாளி மனைவியென உறுதி ஆயிற்று.6)காரகன் சுக்ரன் லக்ன,மற்றும் சந்திர லக்ன பாபர்.அவர் லாப ஸ்தானத்தில் நட்பு வீட்டில் அமர்ந்து வலுப்பெற்றதும்,கெட்ட நிலையே.எனவே 7ம் இடமும்,அதிபதியும் மேலே குறித்தபடி கெட்டதும்,களத்ர காரகன் கெட்டதுமே காரணம்.நன்றி.

  ReplyDelete
 7. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
  ஜார்ஹகத்திற்குரிய அன்பர் 01-08-1961 அன்று காலை 8-15 மணிக்கு ஜனனம்.
  சிம்ம லக்கினம். லக்கினாதிபதி சூரியன் 12ல் - லக்கினாதிபதி 12ல் அமர்ந்தால் ஜாதகர் வாழ்க்கை அவருக்கு பயன்படாது அல்லது வெளிநாட்டு வாசம் என்பது விதி.
  சிம்ம லக்கின யோககாரகன் செவ்வாய் லக்கினத்தில் அமர்ந்தாலும் உடன் அமர்ந்த ராகுவால் கெட்டுவிட்டார்.7ம் வீட்டில் அமர்ந்த கேது நோயாளி வாழ்க்கை துணையாவார் என்கிறது.
  7ம் வீட்டு அதிபதி சனீஸ்வரர் 7க்கு விரையவீடான 6ல் அமர்ந்து வாழ்க்கை துணையை இழக்க வேண்டும் என குறிப்பிடுகிறது.
  5ம் அதிபதி புத்திரகாரகாரகன் குரு 6மிடத்தில் அமர்ந்து சனியுடன் கூட்டு போட்டு புத்திர பாக்கியமில்லை என உறுதி செய்துள்ளார்.
  குடும்ப வாழ்க்கையை குறிப்பிடும் 2ம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்துக்கு 12ல். (சென்ற வாரம் வரவு விரையம் - இந்த வாரம் குடும்ப வாழ்க்கை விரயம்) குடும்பம் விரையம்.
  லக்கின செவ்வாய் இளமையான தோற்றம் வேகமானவர். உடன் அமர்ந்த ராகுவுடன் சேர்ந்து 7ல் அமர்ந்த கேதுவை பார்வை செய்வதால் - நோயாளி மனைவியுடன் போராட்டமான வாழ்க்கை - விரையம் ஆக வேண்டியுள்ளதால் மனைவி மறைவு அல்லது விவாக ரத்து.
  நடப்பு சந்திர தசை 12ம் (அதிபதி) தேய் பிறை சந்திரனாகி 8மிட மான மீனத்தில் அமர்ந்து பகை கிரகமான சனியின் பார்வை பெற்றதுடன் சனியின் புத்தியும் நடைபெறுவதால் அவருக்காக இறைவனை பிரார்த்திப்போம்
  41 பரல்களுடன் 10 மிடம் பலமாக இருப்பதால் வெளிநாட்டு வேலை?
  அன்புடன்
  -பொன்னுசாமி.

  ReplyDelete
 8. DEAR SIR

  THE FOLLOWING REASONS FOR VIVAGARATHU...

  லக்கினாதிபதி 12 ஆம் இடத்தில மறைவு , கூடவே குடும்ப ஸ்தான அதிபதியும் 12 ஆம் இடத்தில மறைவு . குடும்ப வாழ்க்கை இல்லாமல் போனது.. மேலும் நவாம்ச கட்டத்திலும் குடும்ப ஸ்தான அதிபதி 12 ஆம் இடத்தில மறைவு. குடும்ப வாழ்க்கையை விரயம் செய்தது.

  7 ஆம் இடத்து அதிபதியும் 6 இல் மறைவு , குருவின் பார்வை பலமும் சுக்கிரனுக்கு இல்லாமல் போனது.. குருவின் இருந்து சுக்கிரன் 6 இல் மறைவு.

  லக்கினத்தில் ராகு மற்றும் 7 இல் கேது இதுவும் குடும்ப வாழ்வை இல்லாமல் செய்தது.

  THANKS & REGARDS
  P. CHANDRASEKARA AZAD
  MOB. 8879885399

  ReplyDelete
 9. Answer for quiz 30.11.2018
  1.Laknathipathi in 12th house (sun)
  2.2nd house owner also in 12th house
  3.In 7th house kethu
  4.In lakna Rahu wrong disitions
  5.Short temper due to in firsts house Mars& rahu
  This all are the reasons

  ReplyDelete
 10. ஐயா,
  30-11-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகம் சிம்ம லக்ன ஜாதகம். லக்னாதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் உள்ளார். களத்திர ஸ்தானாதிபதி சனி ஆறில் மறைந்துள்ளார். லக்னம் ராகுவின் பிடியில் உள்ளது.ஏழாம் இடம் கேதுவின் பிடியில் உள்ளது.
  லக்னத்தில் இருந்து ஏழாம் இடத்தை பார்க்கும் ராகு தன் புத்தியில் (சுக்கிர தசையில்) திருமணத்தை நடத்தி வைத்தாலும், ஏழாம் இடத்தில் உள்ள கேது தன் வீட்டோ பவரை பயன்படுத்தி ( ராகு மக நட்சத்திரத்தில் கேது சாரம் பெற்றுள்ளார் ) ராகு புத்தியிலேயே விவாஹத்தை முறித்திருப்பார்.
  அ.நடராஜன்,
  சிதம்பரம்

  ReplyDelete
 11. அய்யா வணக்கம், இது சிம்ம இலக்கின ஜாதகம்.

  ஏழாம் இடத்தின் அதிபதி ஆறில் மறைந்தது. ஏழில் கேது பகவானின் ஆதிக்கம் இந்த காரணங்களால் தாமதமானத் திருமணத்தைத் தந்தது. குடும்பாதிபதி புதன் விரய ஸ்தானத்திற்கு சென்றதும், ஏழாமிட கேது ஆகியவற்றின் காரணமாக குடும்ப வாழ்க்கை நிலைபெறாமல் சென்றது.
  மேலும் சுக பாக்கியாதிபதி இராகுவின் பிடியில் இருப்பது, பூர்வபுண்யாதிபதி நீசமடைந்தது மற்றும் விரயம் சென்ற புதன் வீட்டில் சுக்கிரன் ஆகிய இவர்களின் வலிமை அற்ற நிலையால் குடும்ப வாழ்க்கை நிலை பெறாமல் முடிவுற்றது.

  இந்த மாணவனின் பதிலில் தவறுகள் இருப்பின் அதைப் பொருத்தருளவேண்டுகிறேன்.

  நன்றி🙏

  இவன்,
  முருகன் ஜெயராமன்,
  புதுச்சேரி.

  ReplyDelete
 12. ஆசிரியருக்கு வணக்கம்.

  சிம்ம லக்கினம், மீன ராசி ஜாதகர்.

  ஜாதகப்படி திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கான காரணங்கள்:

  1. களத்திராதிபதி சனி 6ல் வக்கிரமடைந்து, அட்டமாதிபதி நீச குருவுடன் மறைவு. களத்திர ஸ்தானத்தில் அமர்ந்த கேது.
  2. குடும்பாதிபதி புதன் லக்கினாதிபதி சூரியனுடன் 12ல் மறைவு.
  3. தவிர சயன சுக ஸ்தானமான 12ம் இடம், அதன் அதிபதி சந்திரன் மேல் 6ம் அதிபதி வக்கிர சனியின் 3ம் பார்வை.

  இந்த காரணங்களால் ஜாதகருக்கு திருமணம் அடைந்த சில மாதங்களில் மனைவிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மன முறிவு / மணமுறிவுக்கு வித்திட்டது.

  வாத்தியாரின் சரியான பதிலுக்கு காத்திருக்கும்,


  இரா.வெங்கடேஷ்.

  ReplyDelete
 13. Dear sir.

  1. leo lagana and meena rasi dire enemy sukar mahadasa
  2. 7th house kethu
  3. family house owner in 12th house mercury
  5 lagana is having mars and raghu
  4. 4th house suka house there is sitting in mandhi
  5 8th house having 12th house owner moon and having sani vision punarpoo dosam
  67th house sani in 12th house from 7th house that is joining with 8th house owner gururu
  7 lagana lord sun in 12th house
  this is why he got vivaga radhu

  ReplyDelete
 14. sani is the kalathrakaran and he is in the 6th house(hidden). Sani has in his view moon which is punarpoo yogam as there is no subagraha sight on moon. Hence the marriage has become late and could be conducted only on moon dasa period during the buddhi of Jupiter. Eventually guru buddhi is followed by sani buddhi which ended the marriage. The Eigth house of kumbam(kalathram of this horoscope) is kanni, which denotes the life span of kalathran (spouse). Its athipathi Buthan (mercury) is hidden in its 6th house from kumbam ie.kadakam (enemy house).This ended the marriage soon.
  ---A.Saravanan, Pondicherry

  ReplyDelete
 15. அன்புள்ள வாத்தியார் அவர்களிற்கு அன்பு வணக்கங்கள்
  புதிரிற்கான விடை
  1. லக்னாதிபதி 12ல் மறைவு. லக்கினத்தில் ராகுவும் செவ்வாயும் லக்கினத்தில். சிம்ம லக்கினத்திற்கு செவ்வாய் பாதகாதிபதியாவார்
  2. குரு 6ம் வீட்டில் மறைவு சனியுடன் சனி வீட்டில்
  3. களஸ்திர ஸ்தானத்தில் கேது இருந்து லக்கினத்தை 7ம் பார்வையாக பார்க்கின்றார். 7ம் வீட்டதிபதி 6ல் மறைவு.
  4. களஸ்திரகாரன் சுக்கிரன் லக்னாதிபதிக்கு 12ல் மறைவு
  5. திருமணம் சுக்கிர தசை சனி புத்தியில் நடந்தது சனி புத்தியிலே முடிந்தும்விட்டது.
  6. களஸ்திர ஸ்தானம் மனைவியை குறிக்கும் இடமாகும். 7ற்கு 6ம் இடமாகி கடகம் மனைவியின் ரோக ஸ்தானமாகும். அங்கே லக்னாதிபதி வலுவிழந்திருக்கின்றார்
  மேற் சொன்ன காரணங்களிறகாக அதாவது லக்னாதிபதி 12ல் மறைவு, 7ம அதிபதி 6ல் மறைவு. ஆகவே திருமண வாழ்க்கை கை கூடவில்லை.
  அன்புடன்
  ராஜம் ஆனந்த்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com