மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.11.18

பட்டேலுக்கு ஏன் சிலை என்று கேட்காதீர்கள்!!!


பட்டேலுக்கு ஏன் சிலை என்று கேட்காதீர்கள்!!!

சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ஏன் சிலை வைக்க வேண்டும் என்று பலர் கேட்கிறார்கள்..?

சர்தார் வல்லபாய் பட்டேல் மட்டும் இல்லையென்றால் இன்று முகலாய நிஜாம் சமஸ்த்தானத்திற்க்கு விசா எடுத்து தான் செல்ல வேண்டிய நிலைமை இருந்திருக்கும்.....

முகலாய நிஜாம் சமஸ்தானம்  என்பது இன்றைய தெலுங்கானா மாநிலம். ஆந்திராவின் சில பகுதிகள், கர்நாடகா மாநிலத்தில் உள்ள இன்றைய  ஹைதராபாத்-கர்நாடக பகுதி, மகாராஷ்டிராவின் மராத்வாடா பகுதி  ஆகியவற்றை உள்ளடக்கியது...

85% மேல் ஹிந்துக்களின் மக்கள் தொகை கொண்டது முகலாய நிஜாம்  ஹைதராபாத் சமஸ்தானம் ......

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகு ஹைதராபாத் மகாணத்தை ஆண்ட நிஜாம்  இந்த பகுதியை இந்தியாவுடன் இணைக்க மறுத்து மக்களின் விருபத்திற்கு மாறாக  தனி நாடாக இருக்க போகிறோம் என்றார்.....

தனி நாடு என்று சொல்லி பாகிஸ்தானுடன் செல்ல தான் அவரின் உத்தேசமாக இருந்தது......

ஆனால் சில மாதங்கள் பொறுத்த அன்றைய துணை பிரதமர் வல்லபாய் பட்டேல்  பிரதமர் நேரு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று இருந்த சமயத்தில் ராணுவத்தை அனுப்பி ஹைதராபாத் மகாணத்தை கைப்பற்றி இந்தியாவுடன் இணைத்தார்.....

இதற்கிடைய காஷ்மீர் போன்று சில ஒப்பந்தங்களை போட்டு ஹைதராபாத்தை தனி நாடாக இருக்க நேரு  சம்மதித்தார்....

ஆனால் நேரு நாட்டில் இல்லாத போது ராணுவத்தை வைத்து ஹைதராபாத்தை வெற்றிகரமாக இந்தியாவுடன் இணைந்தார் இந்தியாவின் இரும்பு மனிதர்  பட்டேல்...

அது மட்டுமல்லாமல் குஜராத் பகுதியில் உள்ள ஜூனாகட் சமஸ்தானம்  , கேரளா கன்னியாகுமரியை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சமஸ்தானம் உட்பட 500 க்கு மேற்பட்ட சிறு மாகாணங்களை இந்தியாவுடன் இணைந்தவர் பட்டேல்........

நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட  பொறுப்பு காஷ்மீரை வெற்றிகரமாக இணைப்பது.... ஆனால் அந்த பிரச்சினை இன்று வரை தீர்ந்தபாடில்லை... காஷ்மீர் பிரச்சினையை ஐநா வரை எடுத்து சென்று ஆரம்பித்திலேயே தீராத  பிரச்சினையை உண்டாக்கியவர் நேரு.

ஆனால் வெறும் நான்கே நாட்களில் ராணுவத்தை வைத்து வெற்றிகரமாக பல மாகாணங்களை  இணைந்தவர் வல்லபாய்  பட்டேல்.

இப்படி  இந்தியாவை வெற்றிகரமாக இணைத்த வல்லபாய் பட்டேலுக்கு ஆயிரம் அடியில்  சிலை வைத்தாலும் தவறில்லை.

நேருவிற்கு பதில் பட்டேல் பிரதமர் ஆகியிருந்தால் இந்தியாவின் தலையெழுத்து ஆரம்பித்திலேயே மாறியிருக்கும்...

வங்காள பிரிவினை மற்றும் பாகிஸ்தான் பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.

அது போல் நடக்க விடாமல் முகாலய மன்னனிடம் இருந்து ஹைதராபாத்  சமஸ்தானத்தை எடுத்து இந்தியாவுடன் இணைத்து பல கோடி இந்துக்களை இஸ்லாமிய மதவெறி முகலாயனிடம் இருந்து  காப்பாற்றினார் பட்டேல்.....

அப்படி இணைத்திருக்கவில்லை என்றால் பாகிஸ்தான்  போன்று இருந்திருக்கும்  ஹைதராபாத் சமஸ்தானம்.....

*இன்று சர்தார் வல்லபாய் பட்டேலின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு குஜராத்தில் நர்மதை நதி கரையோரத்தில் பாரத பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியால் தேசத்திற்க்கு அற்பணிக்கப்படுகிற 182 மீட்டர் உயர சர்தார் வல்லபாய் பட்டேலின் உலோகத்தால் ஆன திரு உருவ சிலை உலகிலேயே மிக உயரமான சிலை என்று சாதனை படைத்துள்ளது. அமேரிக்கா சுகந்திர தேவி சிலையை விட இருமடங்கு உயரமானது, சீனா புத்தர் சிலையை விட மூன்று மடங்கு உயரமானது*

*#STATUE OF UNITY*
-------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10 comments:

  1. Good morning sir absolutely correct sir amazing post thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. //தனி நாடு என்று சொல்லி பாகிஸ்தானுடன் செல்ல தான் அவரின் உத்தேசமாக இருந்தது......// I dont think so. William Darylymple has shown evidence of Nizam wanting to rule as a separate country. One of his wife's was a practicing Hindu. Also those people were self sustained, with food grown & enough water & minearals including coal there (Ramagundam).

    Demonetization disaster pain is not gone out of poeople's mind yet. Wasteful expenditure, knowingly religion/caste/creed doesnt help poor, but government socialistic schemes.

    ReplyDelete
  3. வணக்கம் குருவே!
    இந்தியாவின் இரும்பு மனிதர் "படேல்" என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன்! ஆனால் அதன் பின்னால் இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் சரித்திரம் புதைந்துள்ளதை எத்தனை இந்தியர்கள் அறிந்திருப்பர் என்பது சரித்திரத்தில் ஒரு கேள்விக் குறி தான் ஐயா!
    பயனுள்ள தகவல்கள் தந்துள்ள தங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!

    ReplyDelete
  4. சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் பெருமையைச் சொல்லலாம் தவறு இல்லை.அதற்கு நேருவைப் பழித்துத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.
    நேரு எடுத்த முடிவுகளில் சில தவறாகப் போயிருக்கலாம்.அதேபோல படேல் எடுத்த எல்லா முடிவுகளுமே சரியாகத்தான் இருந்தன என்பதும் சரியல்ல.முடிவுகள் அந்த அந்த சூழலுக்குத் த்குந்தபடி எடுக்கப்படுபவை.சில எதிர்பார்த்த நன்மைகளைத் தரும்.சில முடிவுகள் நாம் நினைக்கும் அளவிற்கு நன்மையைத் தரா.

    இப்போது மத்தியில் ஆளும் கட்சியினர் படேலைத் தூக்கிப்பிடித்து ஹீரோ ஆக்கி, நேருவை வில்லனாக்க முயற்சி செய்கின்றனர். ஏதோ அவர்களுக்குள் தீராப்பகை இருந்தது போல் ஒரு பிரமையை உருவாக்குகின்றனர். பழைய காங்கிரஸ் எப்போதுமே பரந்த ஜனநாயகம் உள்ளதாக இருந்துள்ளது.பல்வேறு அரசியல் கருத்துக்கள் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து நம்மை ஒற்றுமையானவர்கள் என்று காட்டியதில் காந்திஜி, நேருஜிக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் அவர்கள் இருவரையும் முறைகேடாகக் கூட‌ விமர்சிக்கும் ஜனநாயக உரிமையைப் பெற்றுத்தந்தது காந்திஜியும் நேருஜியும்தான்.நேருஜியைப்போல ஓருவர் ஆட்சி அதிகாரத்தில் முதலில் வந்தது நம் நாடு அறிவியல் பாதையில் முன்னேற‌வும்,நாட்டின்ஒற்றுமையை
    பேணிக்காக்கவும் முடிந்தது.'இந்து மதம் மட்டுமே' என்ற கருதுகோள் உள்ளவர்கள் முதலில் ஆட்சிக்கு வந்திருந்தால்,இன்று இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற பெருமையை என்றோ இழந்திருக்கும்.










    ReplyDelete
  5. இப்போ தேவையா என்பது தானே கேள்வி..

    ஒப்பாரி வைக்கும் வேளையில்
    ஒப்பனைக்கு என்ன அவசியம்...?

    திறமை இல்லாத ஆட்சியாளர்களின்
    திறமை நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது..

    குருடர்களை பின் தொடர நாம் ஏன்
    கண்களை மூடி கொள்ள வேண்டும்...?


    ReplyDelete
  6. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir absolutely correct sir amazing post thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  7. /////Blogger Vijayashankar said...
    //தனி நாடு என்று சொல்லி பாகிஸ்தானுடன் செல்ல தான் அவரின் உத்தேசமாக இருந்தது......// I dont think so. William Darylymple has shown evidence of Nizam wanting to rule as a separate country. One of his wife's was a practicing Hindu. Also those people were self sustained, with food grown & enough water & minearals including coal there (Ramagundam).
    Demonetization disaster pain is not gone out of poeople's mind yet. Wasteful expenditure, knowingly religion/caste/creed doesnt help poor, but government socialistic schemes.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete
  8. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    இந்தியாவின் இரும்பு மனிதர் "படேல்" என்று தான் கேள்விப் பட்டிருக்கிறேன்! ஆனால் அதன் பின்னால் இப்படிப்பட்ட ஒரு மாமனிதரின் சரித்திரம் புதைந்துள்ளதை எத்தனை இந்தியர்கள் அறிந்திருப்பர் என்பது சரித்திரத்தில் ஒரு கேள்விக் குறி தான் ஐயா!
    பயனுள்ள தகவல்கள் தந்துள்ள தங்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகள்!/////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!!

    ReplyDelete
  9. //////Blogger kmr.krishnan said...
    சர்தார் வல்லபபாய் பட்டேல் அவர்களின் பெருமையைச் சொல்லலாம் தவறு இல்லை.அதற்கு நேருவைப் பழித்துத்தான் சொல்ல வேண்டும் என்பதில்லை.
    நேரு எடுத்த முடிவுகளில் சில தவறாகப் போயிருக்கலாம்.அதேபோல படேல் எடுத்த எல்லா முடிவுகளுமே சரியாகத்தான் இருந்தன என்பதும் சரியல்ல.முடிவுகள் அந்த அந்த சூழலுக்குத் த்குந்தபடி எடுக்கப்படுபவை.சில எதிர்பார்த்த நன்மைகளைத் தரும்.சில முடிவுகள் நாம் நினைக்கும் அளவிற்கு நன்மையைத் தரா.
    இப்போது மத்தியில் ஆளும் கட்சியினர் படேலைத் தூக்கிப்பிடித்து ஹீரோ ஆக்கி, நேருவை வில்லனாக்க முயற்சி செய்கின்றனர். ஏதோ அவர்களுக்குள் தீராப்பகை இருந்தது போல் ஒரு பிரமையை உருவாக்குகின்றனர். பழைய காங்கிரஸ் எப்போதுமே பரந்த ஜனநாயகம் உள்ளதாக இருந்துள்ளது.பல்வேறு அரசியல் கருத்துக்கள் கொண்டவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டுவந்து நம்மை ஒற்றுமையானவர்கள் என்று காட்டியதில் காந்திஜி, நேருஜிக்குப் பெரும்பங்கு உண்டு. அந்த வகையில் அவர்கள் இருவரையும் முறைகேடாகக் கூட‌ விமர்சிக்கும் ஜனநாயக உரிமையைப் பெற்றுத்தந்தது காந்திஜியும் நேருஜியும்தான்.நேருஜியைப்போல ஓருவர் ஆட்சி அதிகாரத்தில் முதலில் வந்தது நம் நாடு அறிவியல் பாதையில் முன்னேற‌வும்,நாட்டின்ஒற்றுமையை
    பேணிக்காக்கவும் முடிந்தது.'இந்து மதம் மட்டுமே' என்ற கருதுகோள் உள்ளவர்கள் முதலில் ஆட்சிக்கு வந்திருந்தால்,இன்று இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற பெருமையை என்றோ இழந்திருக்கும். //////

    நன்றி. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  10. /////Blogger வேப்பிலை said...
    இப்போ தேவையா என்பது தானே கேள்வி..
    ஒப்பாரி வைக்கும் வேளையில்
    ஒப்பனைக்கு என்ன அவசியம்...?
    திறமை இல்லாத ஆட்சியாளர்களின்
    திறமை நாட்டின் வளர்ச்சியில் தெரிகிறது..
    குருடர்களை பின் தொடர நாம் ஏன்
    கண்களை மூடி கொள்ள வேண்டும்...?////

    நன்றி. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com