மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.8.10

குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
குழந்தைப் பேறுக்கு அதி முக்கியமானது எது?
கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 11
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++===========
மின்னஞ்சல் எண்: 33
சதீஷ் பாண்டியன்
   
வணக்கம்,
நான் நீங்கள் எழுதி வரும் பதிவுகளை படித்து வருகிறேன்.
என்னுடைய ஜாதகத்தையும் உங்களுடைய பதிவுகளையும் தொடர்பு 
படுத்திப் பார்க்க வேண்டாம் என்று நினைத்தாலும் மனது கேட்கவில்லை.

1. ஐந்தில் ராகு இருப்பதால் குழந்தை பெரும் பாக்கியம் இல்லையா?

முதலில் திருமணம் செய்து கொள்ளுங்கள். குழந்தைப் பேற்றிற்கு அதி முக்கியமானது அதுதான்! மற்றதெல்லாம் உபரியான மேட்டர்கள். குழந்தைப்பேறு என்பது டீம் ஒர்க். ராகு என்னும் ஸ்பின் பெளலரை
மட்டும்  வைத்து வெற்றி தோல்விகளை நிர்ணயம் செய்ய முடியாது.
குழுவின் மற்ற ஆட்டக்காரர்களை வைத்து முடிவு செய்ய வேண்டும்.
மனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது
தெரியவரும். அதுவரை பொறுத்திருங்கள்.

2. நான் முழு நேரமும் தெளிவற்றவனாக இருக்கிறேன்?

அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். ஐந்தில் (house of mind) ராகுவும், 12ல் சந்திரனும் (Lord for mind) இருந்தால் அப்படித்தான் இருக்கும். தீர்த்தம் குடிக்க வேண்டும் (துளசி கலந்த தீர்த்தம். நீங்கள் வேறு தீர்த்தத்தை நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!)

3. என் திருமணமும் பிரச்சினையில் இருக்கிறது. இதுவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

உங்கள் ஜாதகத்தில் 6ம் & 8ம் அதிபதிகளான சந்திரனும், புதனும், களத்திரகாரகனான சுக்கிரனுடன் சேர்ந்து  12ஆம் வீட்டில்
இருக்கிறார்கள். அதனால்தான் தாமதம். 29 வயதில் ராகு தசை முடிகிறது. அதற்குப் பிறகுதிருமணம் நடக்கும். வாழ்க்கை நன்றாக இருக்கும்.
நீங்கள் திருவோண நட்சத்திரக்காரர். மகர ராசி. சனிக்கிழமை தோறும் சனீஷ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள்.

4. ஜாதகத்தையும் பதிவுகளையும் தொடர்பு படுத்தி கேள்விகேட்டமைக்கு மன்னிக்கவும்.
இப்படிக்கு உங்கள் மாணவன்,
சதீஷ் பாண்டியன்

இது பழகிப்போன / கேட்டுப் புளித்துப்போன ஒன்று. மன்னித்துவிட்டேன். அதற்காக, உடனே, உங்கள் ஜாதகத்தை வைத்து இன்னும் மூன்று கேள்விகளை அனுப்பிவைக்காதீர்கள்.திருவோண நட்சத்திரம் - சதீஷ் பாண்டியன் என்ற பெயரை மறக்க மாட்டேன்.
--------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.34
இளையராஜா குமாரவேல்
K. இளையராஜா
பிறந்த ஊர்: ஆரணி
வசிக்குமிடம்: கோயம்புத்தூர்
வயது. 26

கேள்வி ஒன்று
Dear Sir,
             This is Ilayaraja from Coimbatore Ratnapuri. Last week only i visited your web page. i wish to join in your classroom. Please accept my request and give guidance to Learn.
Thanks & Regards
K.ILAYARAJA

கேள்வி இரண்டு
Please tell me my Horoscope is eligible for Learning and i wish to see Horoscope for other peoples also. kindly tell me it is possible in my horoscope.

கேள்வி மூன்று   
yes i want to know it is possible to do Astrology as my profession. it is possible for me. please tell me.now i finished 30 lessons. i ll complete my remaining lessons as soon as possible.

ஐந்து நாட்களில் மூன்று கேள்விகளைக் கேட்டுள்ளீர்கள். உங்களின்
ஜோதிட ஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்.30 நாட்களில் ஆங்கிலம்,
30 நாட்களில் ஹிந்தி போன்று 30 நாட்களில் ஜோதிடராகும் வழிகள்
என்ற நூல்கள் கிடையாது. 30 நாட்களில் கற்றுக்கொள்ளவும் முடியாது.ஜோதிடம் படிப்பதற்கு ஆர்வமும், முயற்சியும் இருந்தால்
போதும். வேறு எதுவும் (உங்கள் மொழியில் சொன்னால் வேறு
எந்தப் புண்ணாக்கும்) வேண்டாம்.

விதி உங்களைப் பொறியாளராக்கி, நல்ல வேலையிலும் அமர்த்தியிருக்கிறது. எதற்கு வீண் ஆசை?

நல்ல விற்பனைப் பிரதிநிதிக்கு அடையாளமாக இதைச் சொல்வார்கள்:
A good marketing man is one who sells refrigerators to Eskimos!

நல்ல ஜோதிடருக்கான அடையாளத்தைத் தேடிப்பெற முடியாது. அதுவாகவே கிடைக்கும். பாடங்களில் நல்ல தேர்ச்சி, நீண்ட அனுபவம், தெய்வ அருள்  (intuition power) ஆகிய மூன்றும் சேர்ந்து அதைக்  கொடுக்கும்

ஆகவே பொறுத்திருங்கள். முதலில் பாடங்களை முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். உறவினர்கள், நண்பர்களின்  ஜாதகங்களைப் பார்த்துப்பலன் சொல்லிப் பழகிக்கொள்ளுங்கள். பிறகு வாய்ப்புக்
கிடைத்தால், பகுதி நேரத் தொழிலாக அதைச் செய்யுங்கள். அதில்
வருமானம் வரத்துவங்கினால், பிறகு முழு நேரத்தொழிலாக அதைச்
செய்யுங்கள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.35
சிவசுப்பிரமணியன்
சென்னை
வயது 30
   
Hello Sir
Thanks for answering previous questions.. and today's story is also good...


I have a general question... for some of the questions you have answered
like the  kids born in 8 seconds difference will have different kind of life
and i too agree with you.. but in that you explained about the Nadi.
is it  related with Nadi Jodidam. As far as i have researched Lagna
charts dont change for 90 mins and Navamsha charts does not change
for 15 mins and i am not sure about the parals. have not looked into it
deeply. So could you please let us know where can we find this
difference in the horoscope... 8 seconds difference.. and also the
applicability of horoscope for the kids born through Caesarian.
Please note that this question is not to question your expertise
or existence of Horoscope.. it is only a general question
Regards
Sivasubramaniam
Chennai


நாடி ஜோதிடம் பற்றி இன்னும் எழுதவில்லை. அது மேல் நிலைப்பாடம். தனித்தொடராக எழுதவுள்ளேன். பின்னால் வரும். பொறுத்திருந்து
படியுங்கள் நண்பரே! உங்களின் மேலான ஆர்வத்திற்கு நன்றி!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.36
R.பரமசிவம்
சென்னிமலை
   
சார்,  நான் உங்களுடைய மாணவர்களில் ஒருவன் உங்களுடைய
வகுப்பு மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது எனது
நன்றிகள். தங்களது சேவை மென்மேலும் தொடர வேண்டுமாய்
கேட்டுக்கொள்கிறேன்.

கேள்வி .  இரண்டாம் வீடு தனம் , குடும்பம். இரண்டாம் வீட்டில், 
இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு
ஆகிய அதிபதிகள் புதன், குரு , சனி ,சந்திரன் நின்றால் பணம்
நெறைய வருமா? வராதா? (வரும் ஆனால் வராது என்ற பதிலை
தவிர்த்து சொல்லவும்) வரும் என்றால் எந்த திசை புக்தியல்
வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்?


இரண்டாம் வீட்டில் நிறைய கிரகங்கள் இருந்தால் நிறையப்பணம் வரும் என்ற எண்ணம் இருந்தால் அதை விட்டொழியுங்கள். முதலில் நீங்கள் கொடுத்துள்ள விவரங்களில் உள்ள இமாலயத் தவறைப் பாருங்கள்.

இரண்டாம் வீட்டில்,  இரண்டு, அஞ்சு, ஆறு, ஏழு, எட்டு, பதினொன்று , பன்னிரண்டு ஆகிய அதிபதிகள் (ஏழு கிரகங்கள்) உள்ளதாகச் சொல்லி, இருப்பவர்களின் பெயரைக் குறிப்பிடும்போது புதன், குரு, சனி,
சந்திரன் என்று நான்கு கிரகங்களை மட்டுமே குறிப்பிட்டு உள்ளீர்கள். உண்மையில் ஒரே இடத்தில் ஏழு கிரகங்கள் உள்ளனவா?
அல்லது தவறான தகவலா? லக்கினத்தைச் சொல்லாமல்  விட்டு
விட்டீர்கள். அதைச் சொல்லுங்கள். அதைச் சொன்னால் இரட்டை ஆதிபத்தியத்தைவைத்து 4 கிரகங்களுக்குள் நீங்கள் குறிப்பிடும்
கிரகங்கள் வந்துள்ளனவா என்று ஒத்துப்பார்த்துக்கொள்ளலாம்.

மிஸ்ஸாகும் மூன்று கிரகங்களும் சென்னிமலை முருகனை வணங்கி
வரப் போயிருந்தால், அவர்கள் திரும்பிவந்தவுடன், இரண்டாம் வீட்டில் உட்காரவைத்து, தாகத்திற்கு தம்ஸ் அப்ஸ், செவன் அப்ஸ் என்று
எதையாவது கொடுத்துவிட்டு, எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
அதுவரை பொறுமையாகக் காத்திருக்கிறேன்

மேலும் தங்களிடம் ஒரு கேள்வி ..தங்கள் சில இடங்களில் பாடங்களை
படித்து சுய ஜாதகத்தை பார்த்துகொள்ளுங்கள் என்று சொல்லிருகிறீர்கள் அப்படி பார்க்கும் பொது சுயஜாதகத்தில் தானே சந்தேகம் வரும்? 
தயவு செய்து இந்த கேள்வியைத் தவறாக எடுத்துகொள்ள  வேண்டாம், அதற்காகப் பதில் தராமலும் விட்டுவிடாதீர்கள் மதிப்பிற்குரிய ஆசிரியர்  அவர்களே!

இதை நான் ஒப்புக்கொண்டால், ஒவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை
வைத்து 360 கேள்விகளைக் கேட்கத் துவங்கிவிடுவார்கள்.
360 கேள்விகள் எப்படிக் கேட்க முடியும் என்று மலைப்பாக
இருந்தால், மின்னஞ்சலில் கேளுங்கள், அதற்குச் சரியான
பதிலைத் தருகிறேன். இங்கே சொன்னால் எல்லோரையும் எழுப்பிவிட்டதாகிவிடும் அல்லது உசுப்பி விட்டதாகும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

35 comments:

  1. "A good marketing man is one who sells refrigerators to Eskimos!"
    உண்மைதான் ஐயா!
    ஆகத்தையே அறைக்குள் அடிப்பவன் தானே திறமைசாலி!
    வண்ணம் தீட்டாத, ஓவியரின் கை வண்ணம் கூறும் அருமையான சித்திரம்
    வழக்கமாக சுவாரஸ்யமான பதில்களோடு, படமும் அருமை.

    நன்றிகள் குருவே!

    ReplyDelete
  2. ///////Alasiam G said...
    "A good marketing man is one who sells refrigerators to Eskimos!"
    உண்மைதான் ஐயா!
    ஆகத்தையே அறைக்குள் அடிப்பவன் தானே திறமைசாலி!
    வண்ணம் தீட்டாத, ஓவியரின் கை வண்ணம் கூறும் அருமையான சித்திரம்
    வழக்கமாக சுவாரஸ்யமான பதில்களோடு, படமும் அருமை.
    நன்றிகள் குருவே! //////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  3. அன்றாடம் மிகச் சுவையான செய்திகளைத் தந்துகொண்டிருக்கும் 'வகுப்பறை'க்கு நன்றி. நாடி ஜோதிடம் பற்றி இனிதான் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது குறித்து தெரிந்து கொள்ள நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. என் நண்பர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றார். என்னையும் கூட நாடி ஜோதிடம் பார்க்கச் சொன்னார். என் கைரேகைப் பதிவு செய்து கொண்டபின் பல ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்து அதில் எது எனக்குச் சரியாக வருகிறதோ சொலுங்கள் என்றனர். ஒரு சுவடியில் இருந்த செய்திகள் என்னைத் திகைப்பை அடையச் செய்தன. என் குடும்பத்தவர் பெயர்கள், அவர்கள் பணி இவை பற்றி மிகத் துல்லியமாகத் தரப்பட்டிருந்தது. அதில்கூட ஆச்சரியமில்லை. என் அம்மாவின் பெயர் அபூர்வமான பெயர். அதிகமாக யாரும் வைத்திருக்காத பெயர். (பெயர்: பிரஹத்குஜாம்பாள்). அந்தப் பெயரை அந்தச் சுவடியிலிருந்து படிக்க நான் அதிர்ந்து போனேன். முடியுமா? நாடி ஜோதிடம் உண்மையா? உங்கள் பதிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஞாயிறன்று நண்பர் ஆலாசியத்தின் 'நினைவலைகள்' மிகச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.
    Please read this blog and convey your feedback. http://www.bharathipayilagam.blogspot.com

    ReplyDelete
  4. அய்யா,

    இன்றும் உங்கள் பதில்கள் அருமை. தற்போது எல்லாம் காலையில் எழுந்த உடன் தங்கள் வகுப்பறைக்கு வந்து பாடங்களை படித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.

    அன்புடன்
    வெங்கடேசன்.

    ReplyDelete
  5. //////Thanjavooraan said...
    அன்றாடம் மிகச் சுவையான செய்திகளைத் தந்துகொண்டிருக்கும் 'வகுப்பறை'க்கு நன்றி. நாடி ஜோதிடம் பற்றி இனிதான் எழுதப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறீர்கள். அது குறித்து தெரிந்து கொள்ள நானும் மிகவும் ஆவலாக இருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. என் நண்பர் ஒருவர் நாடி ஜோதிடம் பார்க்கச் சென்றார். என்னையும் கூட நாடி ஜோதிடம் பார்க்கச் சொன்னார். என் கைரேகைப் பதிவு செய்து கொண்டபின் பல ஓலைச்சுவடிகளைக் கொண்டுவந்து அதில் எது எனக்குச் சரியாக வருகிறதோ சொலுங்கள் என்றனர். ஒரு சுவடியில் இருந்த செய்திகள் என்னைத் திகைப்பை அடையச் செய்தன. என் குடும்பத்தவர் பெயர்கள், அவர்கள் பணி இவை பற்றி மிகத் துல்லியமாகத் தரப்பட்டிருந்தது. அதில்கூட ஆச்சரியமில்லை. என் அம்மாவின் பெயர் அபூர்வமான பெயர். அதிகமாக யாரும் வைத்திருக்காத பெயர். (பெயர்: பிரஹத்குஜாம்பாள்). அந்தப் பெயரை அந்தச் சுவடியிலிருந்து படிக்க நான் அதிர்ந்து போனேன். முடியுமா? நாடி ஜோதிடம் உண்மையா? உங்கள் பதிவினை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். ஞாயிறன்று நண்பர் ஆலாசியத்தின் 'நினைவலைகள்' மிகச்சுவையாக இருந்தது. பாராட்டுக்கள்.
    Please read this blog and convey your feedback. http://www.bharathipayilagam.blogspot.com//////

    70, 80 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் ஒழுங்காக இருந்தன! பிரகு ஏற்பட்ட குடும்பச்சண்டைகளில் வாரிசுகள், தாங்கள் வீட்டுகளில் இருந்த ஏடுகளைத் தனித்தனியாக அள்ளிக்கொண்டு போய்விட்டார்கள். சிலரிடம் இருக்கும் பகுதிகள் வேறு சிலரிடம் இருக்காது. அதுதான் குழப்பம்.

    ஏடுகளை வைத்துக் கடந்த காலத்தை அறுமையாகச் சொல்லிவிடுவார்கள். எதிர்காலத்திற்கான ஏடுகள் கிடைக்காது. பின்னால் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிடுவார்கள்

    உங்கள் பதிவைப் பார்த்துப் பின்னூட்டம் இடுகிறேன். நன்றி!

    ReplyDelete
  6. /////venkatesan.P said...
    அய்யா,
    இன்றும் உங்கள் பதில்கள் அருமை. தற்போது எல்லாம் காலையில் எழுந்த உடன் தங்கள் வகுப்பறைக்கு வந்து பாடங்களை படித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
    அன்புடன்
    வெங்கடேசன்./////

    நானும் நமது வகுப்பறை மாணவர்களைக் காக்க வைக்ககூடாது என்றுதான் முடிந்தவரை அதிகாலையிலேயே எனது பாடங்களைப் பதிவில் ஏற்றிவிடுகிறேன். நல்லது. நன்றி!

    ReplyDelete
  7. வணக்கம் ஆசிரியருக்கு, சென்னிமலை பரமசிவ(ம்)னாரின் கேள்வியில் உள்ள புதிர் வரவேற்புக்குரியது.ஏழு வீட்டில் நாலு அதிபதிகள்‍ முடியுமா? முடியும்.அதனால்த்தான் ஆசிரியர் தெரிந்துகொண்டு என்ன லக்கினம் என வினவினார்.நல்லது. சிம்ம லக்கினம்.2ம்,11ம் வீடு புதன்.5ம்,8ம் வீடு குரு,6ம்,7ம் வீடு சனி,12ம் வீடு சந்திரன். மாணவராகிய எமக்கு வேறு புதிர்களை ஆசிரியர் ஏற்படுத்தினால் நல்லது.

    ReplyDelete
  8. ////krishnar said...
    வணக்கம் ஆசிரியருக்கு, சென்னிமலை பரமசிவ(ம்)னாரின் கேள்வியில் உள்ள புதிர் வரவேற்புக்குரியது.ஏழு வீட்டில் நாலு அதிபதிகள்‍ முடியுமா? முடியும்.அதனால்த்தான் ஆசிரியர் தெரிந்துகொண்டு என்ன லக்கினம் என வினவினார்.நல்லது. சிம்ம லக்கினம்.2ம்,11ம் வீடு புதன்.5ம்,8ம் வீடு குரு,6ம்,7ம் வீடு சனி,12ம் வீடு சந்திரன். மாணவராகிய எமக்கு வேறு புதிர்களை ஆசிரியர் ஏற்படுத்தினால் நல்லது. ///////

    புதிர்தானே - இதோ: உங்களுக்குப் பணம் வரும். ஆனால் வராது:-))))

    இரண்டாம் அதிபதி உச்சம் பெற்று இரண்டாம் வீட்டில் இருப்பதோடு உடன் தனகாரகன் குருவையும் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பதால் பணம் வரும். ஆனால் 6ஆம் இடத்துக்காரன் சனீஷ்வரனும், 12ஆம் இடத்துக்காரன் சந்திரனும் கூடவே இருப்பதால் வராது.

    விளக்கமாகச் சொன்னால் பணம் வரும். ஆனால் வரும் பணம் கையில் தங்காது போய்விடும். பணம் வரும் ஆனால் வராது.

    விளக்கம் போதுமா நண்பரே?

    ReplyDelete
  9. வணக்கம் மீண்டும் ஆசிரியருக்கு,

    /// புதிர்தானே - இதோ: உங்களுக்குப் பணம் வரும். ஆனால் வராது:-))))///

    த‌வ‌றாக‌ எடுத்துவிட்டீர்க‌ள் என எண்ணுகின்றேன்.நான் புதிர் என்று கூறிய‌து
    ப‌ர‌ம‌சிவ(ம்)‌னாரின் கேள்வியில் ல‌க்கின‌ம் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை.அதைக் க‌ண்டு கொள்ள‌வேண்டும். அத‌னைத்தான் புதிர் என்றேன்.ப‌ண‌த்தைப் ப‌ற்றி நான் சொல்ல‌வில்லை.
    ஆசிரிய‌ரின் வ‌குப்பில் தான், நான் ஏழு மாத‌ங்க‌ள் வ‌ரை ப‌டித்து ஓரளவு, இந்தளவு தெரிந்துகொள்ள‌ முடிந்த‌து.

    சுப்பையா வாத்தியாருக்கு என்றும் என் ந‌ன்றிக‌ள்.

    ReplyDelete
  10. Dear sir,

    Thanks for the patients answers.
    I think most of the General Questions seems to be over.

    Now i think we can move into next level.

    ReplyDelete
  11. Dear Sir

    Kelviyum Badhilum Arumai Sir.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  12. ஐயா இன்றைய கேள்வி பதில் அருமை,
    எனக்கு இதில் மிகவும் பிடித்தது துளசி பற்றியது.

    ஒரு சிறு வினா.
    கன்னி லக்னத்திற்கு 2-ல் சனி உச்சம் கூடவே செவ்வாய். 2-ம் அதிபதி நான்காம் வீட்டில் குருவுடன். இந்த அமைப்புக்கு தனம், குடும்பம் பற்றி என்ன பலன் சொல்வது ஐயா.
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி

    ReplyDelete
  13. ஐயா வணக்கம்...!

    நாடி ஜோதிடம் பற்றி நானும் கேள்விப்பட்டு தில்லி-லாஜ்பத் நகர் பகுதியில் உள்ள ஒரு நாடி ஜோதிடரிடம் சென்றேன். தாங்கள் கூறியது போல் கடந்த காலம், பெற்றோர், மனைவி பெயர் போன்ற விவரங்களை துல்லியமாகக் கூறிவிட்டனர். எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு ஆடியோ கேசட் பதிவிட்டு கொடுத்துள்ளனர். கடந்த காலத்தைப்பற்றி சரியாகச் சொன்னதால் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும் சரியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். தாங்கள் இதைப்பற்றியும் எழுதப்போகிறீர்கள் என்று தெரிந்தவுடன் என் ஆவல் மேலும் கூடிவிட்டது. காத்திருக்கிறேன்...

    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்

    ReplyDelete
  14. Monday, August 23, 2010 9:30:00 AM
    //////krishnar said...
    வணக்கம் மீண்டும் ஆசிரியருக்கு,
    /// புதிர்தானே - இதோ: உங்களுக்குப் பணம் வரும். ஆனால் வராது:-))))///
    த‌வ‌றாக‌ எடுத்துவிட்டீர்க‌ள் என எண்ணுகின்றேன்.நான் புதிர் என்று கூறிய‌து
    ப‌ர‌ம‌சிவ(ம்)‌னாரின் கேள்வியில் ல‌க்கின‌ம் சொல்ல‌ப்ப‌ட‌வில்லை.அதைக் க‌ண்டு கொள்ள‌வேண்டும்.

    அத‌னைத்தான் புதிர் என்றேன்.ப‌ண‌த்தைப் ப‌ற்றி நான் சொல்ல‌வில்லை.
    ஆசிரிய‌ரின் வ‌குப்பில் தான், நான் ஏழு மாத‌ங்க‌ள் வ‌ரை ப‌டித்து ஓரளவு, இந்தளவு தெரிந்துகொள்ள‌
    முடிந்த‌து.சுப்பையா வாத்தியாருக்கு என்றும் என் ந‌ன்றிக‌ள்./////

    நல்லது. நன்றி!

    ReplyDelete
  15. //////Ram said...
    Dear sir,
    Thanks for the patients answers.
    I think most of the General Questions seems to be over.
    Now i think we can move into next level./////

    இன்னும் கொஞ்சம் பாக்கி உள்ளது சாமி! அதெல்லாம் முடியட்டும். அவர்களின் வருத்தத்திற்கு ஆளாக வேண்டாம்!

    ReplyDelete
  16. //////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Kelviyum Badhilum Arumai Sir.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    நல்லது. நன்றி ராஜாராமன்

    ReplyDelete
  17. ///////R.Puratchimani said...
    ஐயா இன்றைய கேள்வி பதில் அருமை,
    எனக்கு இதில் மிகவும் பிடித்தது துளசி பற்றியது.
    ஒரு சிறு வினா.
    கன்னி லக்னத்திற்கு 2-ல் சனி உச்சம் கூடவே செவ்வாய். 2-ம் அதிபதி நான்காம் வீட்டில் குருவுடன். இந்த

    அமைப்புக்கு தனம், குடும்பம் பற்றி என்ன பலன் சொல்வது ஐயா.
    என்றும் அன்புடன்
    இரா.புரட்சிமணி//////

    ஒன்றும் சொல்ல வேண்டாம். குடும்பஸ்தானத்திற்குப் பலன் சொல்லும்போது ஏழாம் அதிபதி மற்றும் லக்கினாதிபதியின் நிலை தெரிய வேண்டும். இரண்டில் ஆறாம் இடத்து அதிபதி சனியும், எட்டாம் அதிபதி செவ்வாயும் இருக்கும்போது. 9 & 10ஆம் இடத்து அதிபதிகளின் நிலைமை தெரிய வேண்டும். இப்படி உதிரியான கிரக நிலைகளை வைத்துப் பதில் சொன்னால் அது தவறாகிவிடும்.

    உங்களுடைய சொந்த ஜாதகத்திற்கு இப்படி மறைமுகமாக என்ன பலன் சொல்வது என்று கேட்டுள்ளீர்கள்.
    உத்தேசமாகச் சொன்னால் 2ஆம் அதிபதி கேந்திரத்தில் குருவுடன் சேர்ந்துள்ளது நல்ல குடும்பவாழ்க்கை அமையும். ஆனால் அங்கே வந்து அமர்ந்திருக்கும் சனி & செவ்வாயின் காரணமாக ஜாதகர் குடும்பத்தைத் தன் வேலைகாரணமாக அடிக்கடி பிரிந்து தூர தேசங்களில் இருக்க நேரிடலாம்.

    ReplyDelete
  18. /////M. Thiruvel Murugan said...
    ஐயா வணக்கம்...!
    நாடி ஜோதிடம் பற்றி நானும் கேள்விப்பட்டு தில்லி-லாஜ்பத் நகர் பகுதியில் உள்ள ஒரு நாடி ஜோதிடரிடம்

    சென்றேன். தாங்கள் கூறியது போல் கடந்த காலம், பெற்றோர், மனைவி பெயர் போன்ற விவரங்களை

    துல்லியமாகக் கூறிவிட்டனர். எதிர்காலத்தைப் பற்றியும் ஒரு ஆடியோ கேசட் பதிவிட்டு கொடுத்துள்ளனர். கடந்த

    காலத்தைப்பற்றி சரியாகச் சொன்னதால் எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பும் சரியாக இருக்கும் என்ற

    நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன். தாங்கள் இதைப்பற்றியும் எழுதப்போகிறீர்கள் என்று தெரிந்தவுடன் என்

    ஆவல் மேலும் கூடிவிட்டது. காத்திருக்கிறேன்...
    தங்கள் அன்பு மாணவன்
    மா. திருவேல் முருகன்/////

    நல்லது நன்றி நண்பரே!

    ReplyDelete
  19. நல்ல பதில்கள்.
    நன்றி அய்யா!

    ReplyDelete
  20. இந்த நாடி ஜோதிடம் பற்றி என் அனுபவம் வேறு விதமானது..இதிலே இவர்கள் பண்ணுகிற ட்ரிக் என்பது சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாதது..வெறும் கட்டைவிரல் ரேகை மட்டும் எடுத்துக்கொண்டு ஓலைச்சுவடியை எடுத்து வந்துவிடுவார்களேயானால் அதனை நம்பலாம்..இவர்கள் உங்கள ஆழம் பார்க்க, அதாவது ஒரு ஜாதகத்தைக்கணிக்க என்று அவசியமான விஷயங்களான பிறந்த நேரம்,நாள், ஊர் விவரங்களை வெவ்வேறு ஓலை combinations களில் சொல்லி, உங்களிடமே வாயைப்பிடுங்கி, அல்லது போட்டு வாங்கி இந்த விவரங்களைக் கண்டு பிடித்துவிடுவார்கள்..அதன் பின் உங்களுக்கு ஜோதிடம் சொல்ல நம்ம வகுப்பின் சாதாரண கடைசி பெஞ்ச் மாணவரே போதும்..
    ஒரு ஜாதகத்தில் லக்கினம் மட்டுமே 2மணிக்கொருதரம் மாறும். இந்த டிப்சை வைத்து சர்வ சாதாரணமாக பிறந்த நேரத்தை மட்டும் போட்டு வாங்கிவிடுவார்களேயானால்
    அடுத்ததாக வருடத்தின் முன்னாறு மாதம் பின்னாறு மாதம் என்று மாதத்தைக் கணக்கு பண்ணுவார்கள்..எதாவது ஒன்று என்று ஆனபிறகு (நாமதான் தெளிவாப் பதில் சொல்லிடுவோமே) அடுத்த ஓலையில் அந்த பின்னாறு மாதத்தில் எந்த மாதம் என்பதற்குரிய பாடலை விவரமாகப் பாடுவார்கள்..நீங்கள் யாராவது ஒரு tape recorder உடன் சென்று உரையாடலை எங்கேனும் பதிவு செய்தால் மிக எளிதாக இந்த சித்து விளையாடலைக் கண்டுபிடித்துவிடலாம்..சிறந்த திறமைசாலிகள்..நீங்கள் பிரஸ்காரர் என்றால் நிச்சயம் உங்களுக்கு அனுமதியே கிடைக்காது..
    செல்பவருக்கோ வேறு வழியே இல்லை.உங்கள் பெயர் முதலெழுத்து 'சு' என்று ஒரு ஓலையில் படிக்கும்போது கண்டுபிடிப்பார்கள்..நான்கெழுத்து என்று வேறொரு ஓலையைப் படித்துகாண்பிக்கும்போது போட்டு வாங்குவார்கள்..மூன்றாம் எழுத்து 'பை' என்று வேறொரு ஓலையின் மூலம் கண்டுபிடிப்பார்கள்..
    நான்கெழுத்து பெயரில் முதலெழுத்து 'சு' என்றும் மூன்றாம் எழுத்து 'பை' என்றும் தெரிந்தபின் யாருக்குத்தான் முழுப்பெயரும் சுப்பையா என்று கண்டுபிடிக்க முடியாது?மரமண்டைகளை நாம் லிஸ்டிலே சேர்க்கவே வேண்டாம்..இவர்கள்தான் புத்திசாலிகள் ஆயிற்றே..?வார்த்தை விளையாட்டையே தொழிலாகக் கொண்டவர்கள்..வாரமலர் குறுக்கெழுத்துப்போட்டி விளையாடும் சுட்டிப்பையன்கள் போதுமே?கடைசியில் உங்கள் பெயர் சுப்பையாதானே என்று கேட்கும்போது நாம் பூம்பூம் மாட்டைப்போலத் தலையாட்டுவதைத் தவிர வேறு வழியே இல்லை..நம்ம பேரை நாம நம்ம வாயாலேயே இல்லை என்று மறுத்துச் சொல்ல முடியுமா?
    பர்சைத் திறந்து பணத்தை எண்ணி ரெடியாகிக்கொள்ளவேண்டியதுதான்..
    மொத்தத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துவந்து உங்கள் முகத்துக்கு முன் பிடித்து இது நீங்கள்தானா?உங்கள் முகம்தானா?என்று கேட்பதைப்போன்ற காரியம் இது..
    பாவம்..ஜோதிட ஆர்வத்தில் செல்லும் எவருமே இந்த 'ஜாலக்' வேளையில் முற்றிலும் தன்வசம் இழப்பது சாதாரணமே..உள்ளே போய்(பொய்) ஓலையைத் தேடும் இடத்தில் ஒரு லேப்டாப்பும் அதிலே வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் சாப்ட்வேர் இன்ஸ்டாலும் ஆகிருந்தால் உங்களுக்கு பணம் பண்ணுவது அவ்வளவு கஷ்டமா என்ன?
    நல்ல திறமையை இப்படி ஏமாற்றுவதில் ஏன் வீணடிக்கிறார்கள் இவர்கள் என்பதுதான் என் ஆதங்கம்..சரியான விவரங்களைக் சாதாரணமாகக் கேட்டறிந்து எல்லா ஜோதிடரையும்போலே கணித்து பலன் சொல்லிவிட்டுப்போகலாமே..ஆர்வத்தில் வருவோரை நம்பிக்கை மோசடி செய்வது என்ன நியாயம் என்பதுதான் என் கேள்வி?
    ஒரு சாப்ட்வேர் ப்ரோக்ராமருக்கு வேண்டிய அளவு அனலிடிகல் மைன்ட் இருந்தால் போதுமே..இப்படி data collection செய்து அதனை மனதில் பதியவைத்து..பல தில்லாலங்கடி வேலைகள் செய்கிறார்கள்..உண்மையில் வியப்பான அனுபவம் வேண்டுவோர் தன்னை மறந்து ஏமாறலாம்..அவர்களின் இந்தத் திறமையை பாராட்டி வெகுமதி அளித்து மகிழலாம்..

    ReplyDelete
  21. வாத்தி ஐயா வணக்கம்.

    ஆரம்ப பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களில் இருந்தே வாத்தியார்கள் சொல்ல கேட்டது உண்டு.

    அது என்ன வென்றால் ஏதாவது ஒரு காரியம் ( நல்லதோ அல்லது கெட்டதோ) செய்து விட்டால் உன்னை
    பற்றி எனக்கு நன்றாக தெரியும்டா நீ கண்டிப்பா செய்து இருப்பாய்டா ஏனென்றால் உனது ஜாதகமே என்கையில் உள்ளது என்பார்கள் ஆசிரிய பெருமக்கள் அவ்வாறு சொல்லுவதின் சூட்சுமம் இன்றுதான் தெரிய வந்தது

    இருந்தாலும் ஐயா தாங்கள் 1,747 மாணவர்களின் ஜாதகத்தை தங்களின் உள்ளில் வைத்து இருப்பது என்னமோ பெரியகாரியம் தான் போங்க! தங்களுக்கு ஈடு தாங்கள் தான் வாத்தியார் ஐயா !

    >>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<

    2. நான் முழு நேரமும் தெளிவற்றவனாக இருக்கிறேன்?

    அதை நீங்கள் சொல்லவே வேண்டாம். ஐந்தில் (house of mind) ராகுவும், 12ல் சந்திரனும் (Lord for mind) இருந்தால் அப்படித்தான் இருக்கும். தீர்த்தம் குடிக்க வேண்டும் (துளசி கலந்த தீர்த்தம். நீங்கள் வேறு தீர்த்தத்தை நினைத்துக் கொண்டால் நான் அதற்குப் பொறுப்பல்ல!)

    ReplyDelete
  22. //மனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது
    தெரியவரும்//

    ஒபனிங் ஃபாஸ்ட் போலராக வரும் மனைவி
    ஓயாது கழுத்தறுக்கும் விக்கட்கீப்பர் மச்சான்
    ஒயாது பேசியே டிஸ்ட்ராக்ட் செய்யும் மாமனார் மிட் ஆனில்
    ஒப்புக்கு வா எனச்சொல்லும் மாமியார் கவரில்

    இத்தனை பேரும் போதாதென்று,
    மூத்த மாப்பிள்ளை முன்னே நிற்கும் அம்பயராக,

    பாட்ஸ்மேன் என்ன செய்வார் !
    பாவம் !!
    ஃப்ர்ஸ்ட் பாலே எல்.பி.டபிள்யூ. சத்தம்.
    அம்பயர் கை தூக்க,
    அம்பி என்ன செய்வான் !!

    எல்லாம் அந்த ஏழாம் பாவாதிபன் செய்யும் வேலை !!

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  23. /////INDIA 2121 said...
    நல்ல பதில்கள்.
    நன்றி அய்யா!//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. minorwall said...
    இந்த நாடி ஜோதிடம் பற்றி என் அனுபவம் வேறு விதமானது..இதிலே இவர்கள் பண்ணுகிற ட்ரிக் என்பது சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியாதது..வெறும் கட்டைவிரல் ரேகை மட்டும் எடுத்துக்கொண்டு ஓலைச்சுவடியை எடுத்து வந்துவிடுவார்களேயானால் அதனை நம்பலாம்..இவர்கள் உங்கள ஆழம் பார்க்க, அதாவது ஒரு ஜாதகத்தைக்கணிக்க என்று அவசியமான விஷயங்களான பிறந்த நேரம்,நாள், ஊர் விவரங்களை வெவ்வேறு ஓலை combinations களில் சொல்லி, உங்களிடமே வாயைப்பிடுங்கி, அல்லது போட்டு வாங்கி இந்த விவரங்களைக் கண்டு பிடித்துவிடுவார்கள்..அதன் பின் உங்களுக்கு ஜோதிடம் சொல்ல நம்ம வகுப்பின் சாதாரண கடைசி பெஞ்ச் மாணவரே போதும்..
    பர்சைத் திறந்து பணத்தை எண்ணி ரெடியாகிக்கொள்ளவேண்டியதுதான்..
    மொத்தத்தில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துவந்து உங்கள் முகத்துக்கு முன் பிடித்து இது நீங்கள்தானா?உங்கள் முகம்தானா?என்று கேட்பதைப்போன்ற காரியம் இது..
    பாவம்..ஜோதிட ஆர்வத்தில் செல்லும் எவருமே இந்த 'ஜாலக்' வேளையில் முற்றிலும் தன்வசம் இழப்பது சாதாரணமே..உள்ளே போய்(பொய்) ஓலையைத் தேடும் இடத்தில் ஒரு லேப்டாப்பும் அதிலே வகுப்பறை மாணவர் திலகம் கரூர் தியாகராஜன் சாப்ட்வேர் இன்ஸ்டாலும் ஆகிருந்தால் உங்களுக்கு பணம் பண்ணுவது அவ்வளவு கஷ்டமா என்ன?
    நல்ல திறமையை இப்படி ஏமாற்றுவதில் ஏன் வீணடிக்கிறார்கள் இவர்கள் என்பதுதான் என் ஆதங்கம்..சரியான விவரங்களைக் சாதாரணமாகக் கேட்டறிந்து எல்லா ஜோதிடரையும்போலே கணித்து பலன் சொல்லிவிட்டுப்போகலாமே..ஆர்வத்தில் வருவோரை நம்பிக்கை மோசடி செய்வது என்ன நியாயம் என்பதுதான் என் கேள்வி?
    ஒரு சாப்ட்வேர் ப்ரோக்ராமருக்கு வேண்டிய அளவு அனலிடிகல் மைன்ட் இருந்தால் போதுமே..இப்படி data collection செய்து அதனை மனதில் பதியவைத்து..பல தில்லாலங்கடி வேலைகள் செய்கிறார்கள்..உண்மையில் வியப்பான அனுபவம் வேண்டுவோர் தன்னை மறந்து ஏமாறலாம்..அவர்களின் இந்தத் திறமையை பாராட்டி வெகுமதி அளித்து மகிழலாம்..////////

    உண்மைதான் மைனர். உலகம் மட்டும் கெடவில்லை. நாடி ஜோதிடத்தின் பெயரும் கெட்டு இருப்பது என்னவோ உண்மைதான்!

    ReplyDelete
  25. ////kannan said...
    வாத்தி ஐயா வணக்கம்.
    ஆரம்ப பள்ளிக்கூடம் படிக்கும் நாட்களில் இருந்தே வாத்தியார்கள் சொல்ல கேட்டது உண்டு.
    அது என்ன வென்றால் ஏதாவது ஒரு காரியம் ( நல்லதோ அல்லது கெட்டதோ) செய்து விட்டால் உன்னை
    பற்றி எனக்கு நன்றாக தெரியும்டா நீ கண்டிப்பா செய்து இருப்பாய்டா ஏனென்றால் உனது ஜாதகமே என்கையில் உள்ளது என்பார்கள் ஆசிரியப் பெருமக்கள் அவ்வாறு சொல்லுவதின் சூட்சுமம் இன்றுதான் தெரிய வந்தது. இருந்தாலும் ஐயா தாங்கள் 1,747 மாணவர்களின் ஜாதகத்தை தங்களின் உள்ளில் வைத்து இருப்பது என்னமோ பெரியகாரியம் தான் போங்க! தங்களுக்கு ஈடு தாங்கள் தான் வாத்தியார் ஐயா!///////

    ஜாதகம் இருக்கட்டும் 1,747பேர்களில் முகம் தெரிய என்னுடன் பேசியவர்கள் சுமார் 30 பேர்கள் இருக்கலாம். எல்லோரையும், அட்லீஸ்ட் பாதிப்பேரை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தால், அப்போது நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம்.

    ReplyDelete
  26. ///////sury said...
    //மனைவி வந்த பிறகுதான் பேட்ஸ்மேன்கள் யார் யாரென்பது
    தெரியவரும்//
    ஒபனிங் ஃபாஸ்ட் போலராக வரும் மனைவி
    ஓயாது கழுத்தறுக்கும் விக்கட்கீப்பர் மச்சான்
    ஒயாது பேசியே டிஸ்ட்ராக்ட் செய்யும் மாமனார் மிட் ஆனில்
    ஒப்புக்கு வா எனச்சொல்லும் மாமியார் கவரில்
    இத்தனை பேரும் போதாதென்று,
    மூத்த மாப்பிள்ளை முன்னே நிற்கும் அம்பயராக,
    பாட்ஸ்மேன் என்ன செய்வார் !
    பாவம் !!
    ஃப்ர்ஸ்ட் பாலே எல்.பி.டபிள்யூ. சத்தம்.
    அம்பயர் கை தூக்க,
    அம்பி என்ன செய்வான் !!
    எல்லாம் அந்த ஏழாம் பாவாதிபன் செய்யும் வேலை !!
    சுப்பு ரத்தினம்.////////

    சார் லைன் அம்பயர் (second umpire) யாரென்று சொல்லாமல் விட்டுவிட்டீர்களே. மைத்துனியை லைன் அம்பயர் என்று சொல்லலாமா?

    ReplyDelete
  27. வணக்கம் அய்யா ....

    கேள்வி பதில் பகுதி அருமை சிறப்பாக உள்ளது.....நன்றி வணக்கம்....

    ReplyDelete
  28. /////astroadhi said...
    வணக்கம் அய்யா ....
    கேள்வி பதில் பகுதி அருமை சிறப்பாக உள்ளது.....நன்றி வணக்கம்.... /////////

    நல்லது. நன்றி ஆதிராஜ்!

    ReplyDelete
  29. புத்தகம் வெளியிடும் போது இன்று வெளியாகி உள்ள கேள்விபதில் போன்ற‌வற்றை 'எடிட்' செய்து விடுவீர்கள் தானே!?
    ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முன்னாள் ஊழியர்களில் சிலரை முகவர்களுக்குப்
    பயிற்சி அளிக்க அழைத்துள்ளார்கள்.அத்திட்டத்தின்படி அடியேன் 3 நாட்கள் காரைக்கால்விஜயம்!திருந‌ள்ளாறு அங்கிருந்து 5 கிமி மட்டுமே.சென்று வகுப்பறை மாணவ மணிகள் அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன். வாத்தியாருக்காக சிறப்பாக வேண்டிக்கொண்டேன்.

    ReplyDelete
  30. I agree with the comments of Minorwall, in as much as I have seen Nadi Jothidam from various places, including Salem, Tambaram, Vaitheeswaran Koil, Mylapore(chennai). I have seen almost all Kandams, including the one on Marriage, Profession etc. But the amazing truth is most of them proved to be right, with minor change in period, with the lag of one year. My wife's name givne by them before my marriage worked out right. All of them gave same horoscope (not navamsa) but it differred from horoscope casted using various software or original manual horoscope.

    Just disregard my previous comment, which was posted by mistake

    ReplyDelete
  31. kmr.krishnan said...
    புத்தகம் வெளியிடும் போது இன்று வெளியாகி உள்ள கேள்விபதில் போன்ற‌வற்றை 'எடிட்' செய்து விடுவீர்கள் தானே!?
    ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முன்னாள் ஊழியர்களில் சிலரை முகவர்களுக்குப்
    பயிற்சி அளிக்க அழைத்துள்ளார்கள்.அத்திட்டத்தின்படி அடியேன் 3 நாட்கள் காரைக்கால் விஜயம்!திருந‌ள்ளாறு அங்கிருந்து 5 கிமி மட்டுமே.சென்று வகுப்பறை மாணவ மணிகள் அனைவருக்காகவும் வேண்டிக்கொண்டேன். வாத்தியாருக்காக சிறப்பாக வேண்டிக்கொண்டேன்./////

    செய்துவிட்டால் போகிறது. உங்களின் சிறப்புப் பிரார்த்தனைக்கு நன்றி!

    ReplyDelete
  32. ////Balasubramanian Pulicat said...
    I agree with the comments of Minorwall, in as much as I have seen Nadi Jothidam from various places, including Salem, Tambaram, Vaitheeswaran Koil, Mylapore(chennai). I have seen almost all Kandams, including the one on Marriage, Profession etc. But the amazing truth is most of them proved to be right, with minor change in period, with the lag of one year. My wife's name givne by them before my marriage worked out right. All of them gave same horoscope (not navamsa) but it differred from horoscope casted using various software or original manual horoscope.
    Just disregard my previous comment, which was posted by mistake ////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி பாலா!

    ReplyDelete
  33. //////////////Balasubramanian Pulicat said...
    I agree with the comments of Minorwall, in as much as I have seen Nadi Jothidam from various places .
    All of them gave same horoscope (not navamsa)\\\\\\\\\\\\\
    ஒரு நாளைக்கு 24 மணி நேரம். ராசிக்கட்டத்திலே 12 ராசிகள்.

    ரெண்டு மணி நேர கால அளவிலே லக்கினம் மாறுகிறது..(24 / 12 =2 hrs )

    ஒரு நாளைக்கு 12 லக்கினங்களில் ஜனனங்கள் நிகழ முடியும்..

    இப்படி ராசிக்கட்டத்தின் ஒரு லக்கினம் 120 நிமிட அளவாக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது..( 2மணி x 60 நிமிடம் =120நிமிடங்கள். )

    இந்த 120 நிமிட கால அளவை பங்கிட்டுதான் வர்க்கச் சக்கரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன..

    இதை கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஜகன்னாத ஹோரவில் ஒரு உதாரண ஜாதகத்தின் பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி பார்த்து செக் செய்தால் இலக்கின இடமாறுதல் ஒவ்வொரு ராசி அல்லது வர்க்கக் கட்டங்களின் லக்கினாதிபதியின் இடம் மாறுதல் புரிபடும்..இதனை இவ்வளவு துல்லியமாகக் கேட்டறிய வாய்ப்பு இல்லாததால் நாடி ஜோதிடத்தில் நவாம்ச, வர்க்கக் கட்டங்களின் அளவுக்கு துல்லியமாகக் கொடுக்க முடிவதில்லை..ராசிகாட்ட லகின நேரம் 2 மணி கால அளவு என்பது பெரிய கால அளவென்பதால் இதனை மட்டும் போட்டு வாங்கும் முறையில் கண்டுபிடிப்பதால் இப்படி ஒரு நிலை..

    நவாம்சத்துக்கு : (9 = நவம்)

    இந்த 120 நிமிடங்களை 9 ஆல் வகுக்கும்போது 13 .33 என்று வருகிறது.கிட்டத்தட்ட 15 நிமிடம்..இந்த 15 நிமிடம்தான் நவாம்ச லக்கினத்தின் கால அளவு..

    அதாவது 15 x 12 = 180 நிமிடங்கள். அதாவது ஒரு நவாம்சக் கட்டத்தில் 12 லக்கினங்கள் 180 / 60 = கிட்டத்தட்ட 3 மணி கால அளவை பங்கிட்டு கணக்கிடப் பட்டுள்ளன..

    சப்தாம்சத்துக்கு : (7 = சப்தம்)

    இந்த 120 நிமிடங்களை 7 ஆல் வகுக்கும்போது 17 .14 என்று வருகிறது.கிட்டத்தட்ட 17 நிமிடம்..இந்த 17 நிமிடம்தான் சப்தாம்ச லக்கினத்தின் கால அளவு..

    அதாவது 17 x 12 இடங்கள் = 204 நிமிடங்கள்.

    தசாம்சத்துக்கு : (10 = தசம்)

    இந்த 120 நிமிடங்களை ஆல் வகுக்கும்போது 12 என்று வருகிறது..இந்த 12 நிமிடம்தான் சப்தாம்ச லக்கினத்தின் கால அளவு..

    அதாவது 12 x 12 இடங்கள் = 144 நிமிடங்கள்.

    இதிலே கட்டங்களாகப் பாவித்து தோராயமாகப் புரிந்து கொள்ள முயன்ற போதுதான் அடிப்படையில் இது ஒரு சக்கிரம். கட்டமல்ல என்பது மனதில் உரைக்கிறது..எனவே இந்த வகுத்தல் எல்லாம் டிகிரி கணக்கில் ஆழமாகப் போகவேண்டும் ..
    எல்லாமே தலை சுற்றுகிற விஷயங்கள்..சாப்ட்வேர் இருப்பதால் நாமெல்லாம் இங்கே ஈசியாக இந்த subject ஐ
    அலசிக் கொண்டிருக்கிறோம்..
    இல்லையென்றால் இவ்வளவு பேரும் இந்த subject ஐ follow பண்ண முடியுமா என்பது சந்தேகமே..

    ReplyDelete
  34. ////minorwall said...
    //////////////Balasubramanian Pulicat said...
    I agree with the comments of Minorwall, in as much as I have seen Nadi Jothidam from various places .
    All of them gave same horoscope (not navamsa)\\\\\\\\\\\\\
    ஒரு நாளைக்கு 24 மணி நேரம். ராசிக்கட்டத்திலே 12 ராசிகள்.
    ரெண்டு மணி நேர கால அளவிலே லக்கினம் மாறுகிறது..(24 / 12 =2 hrs )
    ஒரு நாளைக்கு 12 லக்கினங்களில் ஜனனங்கள் நிகழ முடியும்..
    இப்படி ராசிக்கட்டத்தின் ஒரு லக்கினம் 120 நிமிட அளவாக நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது..( 2மணி x 60 நிமிடம் =120நிமிடங்கள். )
    இந்த 120 நிமிட கால அளவை பங்கிட்டுதான் வர்க்கச் சக்கரங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன..
    இதை கொஞ்சம் நேரம் ஒதுக்கி ஜகன்னாத ஹோரவில் ஒரு உதாரண ஜாதகத்தின் பிறந்த நேரத்தை மட்டும் மாற்றி பார்த்து செக் செய்தால் இலக்கின இடமாறுதல் ஒவ்வொரு ராசி அல்லது வர்க்கக் கட்டங்களின் லக்கினாதிபதியின் இடம் மாறுதல் புரிபடும்..இதனை இவ்வளவு துல்லியமாகக் கேட்டறிய வாய்ப்பு இல்லாததால் நாடி ஜோதிடத்தில் நவாம்ச, வர்க்கக் கட்டங்களின் அளவுக்கு துல்லியமாகக் கொடுக்க முடிவதில்லை..ராசிகாட்ட லகின நேரம் 2 மணி கால அளவு என்பது பெரிய கால அளவென்பதால் இதனை மட்டும் போட்டு வாங்கும் முறையில் கண்டுபிடிப்பதால் இப்படி ஒரு நிலை..
    நவாம்சத்துக்கு : (9 = நவம்)
    இந்த 120 நிமிடங்களை 9 ஆல் வகுக்கும்போது 13 .33 என்று வருகிறது.கிட்டத்தட்ட 15 நிமிடம்..இந்த 15 நிமிடம்தான் நவாம்ச லக்கினத்தின் கால அளவு..
    அதாவது 15 x 12 = 180 நிமிடங்கள். அதாவது ஒரு நவாம்சக் கட்டத்தில் 12 லக்கினங்கள் 180 / 60 = கிட்டத்தட்ட 3 மணி கால அளவை பங்கிட்டு கணக்கிடப் பட்டுள்ளன..
    சப்தாம்சத்துக்கு : (7 = சப்தம்)
    இந்த 120 நிமிடங்களை 7 ஆல் வகுக்கும்போது 17 .14 என்று வருகிறது.கிட்டத்தட்ட 17 நிமிடம்..இந்த 17 நிமிடம்தான் சப்தாம்ச லக்கினத்தின் கால அளவு..
    அதாவது 17 x 12 இடங்கள் = 204 நிமிடங்கள்.
    தசாம்சத்துக்கு : (10 = தசம்)
    இந்த 120 நிமிடங்களை ஆல் வகுக்கும்போது 12 என்று வருகிறது..இந்த 12 நிமிடம்தான் சப்தாம்ச லக்கினத்தின் கால அளவு..
    அதாவது 12 x 12 இடங்கள் = 144 நிமிடங்கள்.
    இதிலே கட்டங்களாகப் பாவித்து தோராயமாகப் புரிந்து கொள்ள முயன்ற போதுதான் அடிப்படையில் இது ஒரு சக்கிரம். கட்டமல்ல என்பது மனதில் உரைக்கிறது..எனவே இந்த வகுத்தல் எல்லாம் டிகிரி கணக்கில் ஆழமாகப் போகவேண்டும் ..
    எல்லாமே தலை சுற்றுகிற விஷயங்கள்..சாப்ட்வேர் இருப்பதால் நாமெல்லாம் இங்கே ஈசியாக இந்த subject ஐ
    அலசிக் கொண்டிருக்கிறோம்..
    இல்லையென்றால் இவ்வளவு பேரும் இந்த subject ஐ follow பண்ண முடியுமா என்பது சந்தேகமே..///////

    உண்மைதான் மைனர். எனது வாத்தியார் வேலையைத் தற்போது உள்ள கணினி மென்பொருட்கள் சுலபமாக்கிவிடுகின்றன என்றால் அது மிகையல்ல! உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி மைனர்!

    ReplyDelete
  35. உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி அய்யா.
    திருமண விடயங்களில் மேலும் என் சந்தேகங்கள் உள்ளன. கண்டிப்பாக இது ஜாதகம் பற்றியது அல்ல.
    திருமணம் என்பதை ஜோசியம் என்னவென்று கூறுகிறது?
    இரு உடல்களின் சங்கமமா? இரு மனங்களின் சங்கமமா?
    இரு வேறு பொருட்களின் அருகாமையா?
    அறிவியல்படி இரு பொருட்கள் அருகாமையில் இருக்கும்போது அதனிடையே ஈர்ப்போ இல்லை எதிர்ப்போ இருக்கும். அப்படியாயின் அதை தான் ஜோசியம் சொல்கிறதா?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com