மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

10.8.10

அது டீம் ஒர்க்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 6

உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அது டீம் ஒர்க்!

“வாத்தி (யார்) அது டீம் ஒர்க் என்றால் எது?”
“பாடத்தைப் படியுங்கள். தெரியவரும்”
--------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண். 14
ஸ்ரீனிவாசன்
பானிபட்

Dear sir,
Thank you very much for Q&A session. my question are

1] is it good (irrespective of position of life lord Saturn & lagna lord ), if Jupiter aspects eighth house?

லக்கின அதிபதி, ஆயுள்காரகன் அவர்கள் இருவரும் எக்கேடு
கெட்டாலும் பரவாயில்லை. எட்டாம் வீட்டைக் குரு பார்த்தால்
மட்டும் போதுமல்லவா - அது நல்லதுதானே? நல்ல ஆயுளைத்
தரும்தானே? என்பதுதானே உங்கள் கேள்வி? அவர்கள் இருவரையும் ஓரங்கட்டிவிட்டுப் பலனைப் பார்க்க முடியாது.

கீழ்கோர்ட்டு, மேல்கோர்ட்டு, உயர்நீதி மன்றம், உச்ச நீதிமன்றம்
என்று எல்லா மன்றங்களையும் தாண்டித்தான் குடியரசுத்
தலைவரிடம் கருணை மனு அளிக்க முடியும். பார்வையைக்
கருணையாகக் கடைசியில்தான் எடுத்துக்கொள்ள முடியும்.

2] if sixth and eight house lords  interchange ,,, will increase the life ?

பரிவர்த்தனை எப்போதுமே நல்ல பலனைக் கொடுக்கும்!

3] as you said in lesson if Saturn in eighth house , the person will have more life. 
In amsam ,if Saturn is ineighth house , will the effect is same?
4] how we have to analyze horoscope-based on rasi and amsam?

அம்சம் என்பது ராசியின் விரிவாக்கம். magnified version of rasi chart
இரண்டையும் பார்க்க வேண்டும்
-------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.15
முத்துக்குமார். கே
சென்னை
வயது 29.
   
என்னுைடய வினாக்கள்
Hi Sir
1. லக்னம் துலாம், துலா லக்னத்திற்கு சனி ேயாகக்காரகன்,
5 ஆம் (கும்பம்) விட்டிற்குைடயவன்  சனி  ம றைவிடமான 
12 (கன்னி) ல் இருந்தால் புத்திர புத்திர தோஷமா?.  சனியின் 
பாதிப்பு எப்படி இருக்கும் 5  விட்டிற்கு?

புத்திர பாக்கியம் என்பது டீம் ஒர்க்! ஒரு படத்திற்கு நாயகன் நாயகி, திரைக்கதை, வசனகர்த்தா, இயக்குனர், இசையமைப்பாளர்,
ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், எடிட்டர், முக்கியமாகத்
தயாரிப்பாளர் என்று பலரின் பங்குஇருப்பதைப்போல, குழந்தை பாக்கியத்திற்கும் பங்களிப்பு உள்ளது. கணவன் &  மனைவி இருவரின்
ஜாதகம், அவற்றில் ஐந்தாம் வீடு, அதன் அதிபதி, குழந்தைக்குக்காரகன்
(authority for children) குரு பகவான் என்று பலரின்  பங்களிப்பு இருக்கும்.
நீங்கள் சொல்கிறபடி ஒருவரை வைத்து மட்டும் இந்த ஆட்டத்தைக்
கணிக்க முடியாது. ஜாதகத்தில் ஒருவர் ஆடும் ஆட்டம் கிடையாது.

2, லக்னம் துலாம், 10 ல் ராகு (கடகம்), கடக ராகு இராஜ யோகத்தைத் 
தரும் என்பது உண்ைமயா?

நைசாக உங்கள் சொந்த ஜாதகத்தை வைத்து ஒரு கேள்வியை
நுழைத்து விட்டீர்கள். இல்லையென்றால் 10ல் இருக்கும்
ராகுவைப் பத்தி உங்களுக்கு எதற்குக் கவலை? கடக ராகு
நன்மை செய்யும். அவ்வளவுதான். ராஜயோகத்தைக் கொடுத்தால்
வேண்டாம் என்று சொல்லாதீர்கள். கிடைப்பதைப் பெற்றுக்
கொள்ளுங்கள். அப்படியே நமது வகுப்பறைக் கண்மணிகளையும்
உங்கள் யோகவரவுகளால் கவனித்துக்கொள்ளுங்கள்!

3) 5ல் 19 பரல்கள் இருந்தால் குழந்தை பாக்கியம் இல்ைலயா?

ஐந்தாம் வீட்டிற்கு மூன்று இலாக்காக்கள் உண்டு. House of mind,
House of Poorva punniya & House of Children. சந்திரன் (மனகாரகன்)
குரு (புத்திரகாரகன்) அதன் அதிபதி ஆகியவர்களைப் பொறுத்து
அந்தந்தத் துறைகள் சிறப்பாகச் செயல்படும். ஆகவே 19 ஐ
மட்டும் வைத்துக் குழம்பாதீர்கள். அவர்களின் வலுவையும்
பாருங்கள்.
----------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.16
ராஜேஷ். R

அய்யா, என்னுடைய நான்கு கேள்விகள்.

௧..ஒருவருக்கு தீர்க்க ஆயுள் உள்ளது என்று வைத்துகொள்வோம்.
அவருக்கு மாங்கல்ய பலமில்லாத பெண் மனைவி அமைந்தால் 
பலன் என்ன?

அதற்குத்தான் ஜாதகங்களைப் பொருத்தம் பார்த்துச் சேர்க்கிறார்கள். பொருத்தம் பார்க்காமல் சேர்க்கும்போது, இந்த மாதிரி சிக்கலில்
மாட்டிக் கொள்ள நேரிடும். தீர்க்க ஆயுள் உள்ள ஒருவரின்
மனைவிக்கு மாங்கல்ய பலம் இல்லையென்றால், பிரிவில்
முடிந்துவிடும் (Their relationship will end in separation)

௨.செவ்வாயும் சனியும் ஆறாம் வீட்டை நோக்கினால் என்ன பலன்?

அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்று காதல்
எல்லாம் உண்டாகாது. லக்கினத்தைவைத்து சனிக்கும்,
செவ்வாய்க்கும் என்ன ஆதிபத்யம் உள்ளதோ அதன்படி
பலன்கள் நடக்கும். அத்துடன் ஆறாம் வீடு, அதன் அதிபதி,
அங்கே டேரா போட்டு அமர்ந்திருக்கும் கிரகங்கள் ஆகையவற்றை
வைத்துப் பலன்கள் மாறுபடும். டிக்கெட் வாங்கினோம் படத்தைப்
பார்த்தோம் என்பதுபோல, பார்வை போன்ற ஒரு விதியை மட்டும்
வைத்துப் பலனைச் சொல்ல முடியாது. அனைத்தையும் சீர் தூக்கிப்
பார்க்க வேண்டும். பழைய பாடங்களைப் படியுங்கள். இந்த சந்தேகம்
எல்லாம் வராது.

௩. உங்களின் தமிழ் ஆர்வம் வாழ்க! எண்களைத் தூய தமிழில் 
எழுதியவர், இரண்டு கேள்விகளோடு நிறுத்திக்கொண்டு 
விட்டீர்களே. குறிப்பிட்டுள்ள நான்கில் மற்ற இரண்டு 
கேள்விகள் எங்கே சாமி?
-------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.17
மகேஷ்.டி, சென்னை
வசிக்கும் ஊர்: திருச்சி
பிறந்த ஊர்: வேடசந்தூர்   

ஐயா வணக்கம்          

1) விதிப்படிதான் நடக்கும் என்றால், சிலர் பரிகாரம் செய்வது எதற்கு?
அதனால் பயன் உண்டா?

இறைவன், வேண்டுதல், வேண்டாமை இல்லாதவர் என்றால்,
அவரை எதற்காக வணங்க வேண்டும்? தன்னை வணங்காதவனுக்கும்
அவர் நன்மை செய்ய வேண்டும் அல்லவா? என்று கேட்பதைப்போல
உள்ளது உங்கள் கேள்வி. பரிகாரம் செய்வது, பிரார்த்தனை செய்வது போன்றவற்றால், ஜாதகனுக்குத் தாக்குப்பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
தாக்குப் பிடிக்கும் சக்தி வேண்டாமா? வேண்டுமல்லவா?
அதுதான் பயன்!

 2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம்  கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?

ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.
மொத்தமாகப் பரிகாரம் உண்டு. ஒவ்வொரு அமாவாசையும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் போது, குறைந்தது மூன்று
ஏழை ஜனங்களுக்கு உணவளியுங்கள். அதற்கு மேற்பட்டவர்
களுக்கு உணவளிப்பதற்குத் தடைகள் எதுவுமில்லை. அது
உங்கள் மனசு, மற்றும் பர்ஸில் இருக்கும் பணத்தின் அளவைப்
பொறுத்தது!
     
3)   ஜாதகத்தில் ( சூரியன் + செவ்வாய் ) 7th இருந்தால் அமங்கலி  என்பது பொதுவிதி என்கிறார்கள் - உண்மையா?

உண்மைதான். மற்றவற்றையும் (ஜாதகத்தில் உள்ள மற்ற அமைப்புக்
களையும் ) அலச வேண்டும்!  
--------------------------------------------------------------------------
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

30 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி.

astroadhi said...

வணக்கம்....

இன்றைய பதிவு அருமை ,,,,,,தலைப்பு தனி சிறப்பு......

நன்றி ....

Alasiam G said...

வணக்கம் ஆசிரியரே!

***விதி என்பது யாது?
பூர்வ ஜென்ம வாழ்க்கைப் பரீட்ச்சையின் மதிப்பெண் சான்றிதழ்.
***வழிபாடு எதற்கு?
அதுதான், சிகிச்சை, ஆம் விதியால் பெறப்பட்ட உடல்,
மனம் சார்ந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவும் சிகிச்சை.
அதற்கு மேலுமொன்று உண்டு, அதுதான், இந்த ஜென்ம வாழ்க்கைப் பரீட்ச்சையில் நல்ல மதிப்பெண்களோடு தேற வழிவிடும் வேதசாலை.
வீண் வாதம் செய்ய நேரமில்லை.
நம்பினார் கெடுவதில்லை இவையே மதங்கள் அனைத்தும் கூறுகின்றன.

நன்றிகள் ஐயா!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மிகவும் சிறப்பான. பதில்கள் .
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவைகள்
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-10

kmr.krishnan said...

சொல்லிக் கொள்வது போல ஒரு கேள்வி வராதா என்று காத்து இருக்கிறேன்.
யார் தான் கேட்கப்போகிறார்களோ!?

SP.VR. SUBBAIYA said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி./////

உங்களின் வருகைப்பதிவிற்கு நன்றி ஷியாம்!

SP.VR. SUBBAIYA said...

////astroadhi said...
வணக்கம்....
இன்றைய பதிவு அருமை ,,,,,,தலைப்பு தனி சிறப்பு......
நன்றி ..../////

உங்களின் பாராட்டிற்கு நன்றி ஆதிராஜ்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
வணக்கம் ஆசிரியரே!
***விதி என்பது யாது?
பூர்வ ஜென்ம வாழ்க்கைப் பரீட்ச்சையின் மதிப்பெண் சான்றிதழ்.
***வழிபாடு எதற்கு?
அதுதான், சிகிச்சை, ஆம் விதியால் பெறப்பட்ட உடல்,
மனம் சார்ந்த பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவும் சிகிச்சை.
அதற்கு மேலுமொன்று உண்டு, அதுதான், இந்த ஜென்ம வாழ்க்கைப் பரீட்ச்சையில் நல்ல மதிப்பெண்களோடு தேற வழிவிடும் வேதசாலை.
வீண் வாதம் செய்ய நேரமில்லை.
நம்பினார் கெடுவதில்லை இவையே மதங்கள் அனைத்தும் கூறுகின்றன.
நன்றிகள் ஐயா!//////

நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மிகவும் சிறப்பான. பதில்கள் .
கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டியவைகள்
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////kmr.krishnan said...
சொல்லிக் கொள்வது போல ஒரு கேள்வி வராதா என்று காத்து இருக்கிறேன். யார் தான் கேட்கப்போகிறார்களோ!?////

சீசன் இரண்டின் துவக்கத்தில் சித்தூர் முருகேசன் கேட்டார். அது போல நீங்கள் ஒரு கேள்வி (சொல்லிக் கொள்வது போல ஒரு கேள்வி) கேட்கலாமே கிருஷ்ணன் சார்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Kelviyum badhilum arumai sir.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Uma said...

//2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம் கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?

ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.//

நான் கேள்விப்பட்டது வரையில், முன்னோர்கள் செய்த தவறு, அதனால் ஏற்படும் தோஷம் ஆகியவற்றை ஓரளவு கணிக்க முடியும். திரு. ஏ.எம். ராஜகோபாலன் (குமுதம் ஜோதிடத்தில் எழுதுபவர்) பல கேள்விகளுக்கு விடையாக, முன்னோர்களால் குடும்பத்திற்கு ஏற்பட்ட தோஷம், வீட்டில் ரொம்ப நாளாக சுமங்கலிப் ப்ரார்த்தனை செய்யாதது போன்றவற்றைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். என் தாத்தாவும் பலன் சொல்லும்போது, நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.

R.Puratchimani said...

ஐயா வணக்கம்,
இன்று முதல் என்னையும் உங்களுடைய மாணவனாக ஏற்று கொள்ளுங்கள்.
இன்று செவ்வாய் கிழமை. பொதுவாக செவ்வாய் கிழமை எதுவும் தொடங்க வேண்டாம் என்பார்கள்.
எதுவானாலும் ஆகட்டும் என்று நான் இன்று சேர்கிறேன். என் தைரியத்திற்கு காரணம், அவன் தான் என் ராசி நாதன், அது மட்டும் அல்ல அவனுடைய வீடு எனக்கு மூன்றாம் வீடு, அவனுடைய மூலதிரிகோன வீடு எனக்கு எட்டாம் வீடு, அவன் இருப்பதோ பத்தாம் வீட்டில்.
ஐயா, அவன் எனக்கு நல்லவனா கெட்டவனா? அவன் கெட்டவனாக இருப்பின், நான் நாளை சேர்ந்து கொள்கிறேன்.
ஏன் என்றல் புதன் என்னுடைய லக்னாதிபதி அவன் இருப்பதோ (மென்பொருளின் படி பத்தாம் வீடு, பனை ஓலையின் படி பதினொன்றாம் வீடு.)

ஐயா முதல் நாளே நான் உங்களை குழப்பி இருந்தால் என்னை மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்
இரா. புரட்சிமணி

SP.VR. SUBBAIYA said...

//////Arulkumar Rajaraman said...
Dear Sir
Kelviyum badhilum arumai sir.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

/////Uma said...
//2) முன்னோர் செய்த (பித்ருக்களின் தோஷம் ) ஜாதகம் கொண்டு கண்டு கொள்ளமுடியுமா? அதற்கு பரிகாரம் உண்டா?
ஜாதகம் என்ன திரைப்படமா? நம் முன்னோர்கள் செய்த தீமைகள்
எல்லாம் ப்ளாஷ் பேக்கில் தெரிவதற்கு? அதெல்லாம் தெரியாது.//
நான் கேள்விப்பட்டது வரையில், முன்னோர்கள் செய்த தவறு, அதனால் ஏற்படும் தோஷம் ஆகியவற்றை ஓரளவு கணிக்க முடியும். திரு. ஏ.எம். ராஜகோபாலன் (குமுதம் ஜோதிடத்தில் எழுதுபவர்) பல கேள்விகளுக்கு விடையாக, முன்னோர்களால் குடும்பத்திற்கு ஏற்பட்ட தோஷம், வீட்டில் ரொம்ப நாளாக சுமங்கலிப் ப்ரார்த்தனை செய்யாதது போன்றவற்றைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார். என் தாத்தாவும் பலன் சொல்லும்போது, நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.////////

நீங்கள் சொல்லும் தகவல் புதியது. பொதுப்படையாக தோஷம் இருக்கிறது என்று சொல்வார்கள் என்று நினைக்கிறேன். தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////R.Puratchimani said...
ஐயா வணக்கம்,
இன்று முதல் என்னையும் உங்களுடைய மாணவனாக ஏற்று கொள்ளுங்கள்.
இன்று செவ்வாய் கிழமை. பொதுவாக செவ்வாய் கிழமை எதுவும் தொடங்க வேண்டாம் என்பார்கள்.
எதுவானாலும் ஆகட்டும் என்று நான் இன்று சேர்கிறேன். என் தைரியத்திற்கு காரணம், அவன் தான் என் ராசி நாதன், அது மட்டும் அல்ல அவனுடைய வீடு எனக்கு மூன்றாம் வீடு, அவனுடைய மூலதிரிகோன வீடு எனக்கு எட்டாம் வீடு, அவன் இருப்பதோ பத்தாம் வீட்டில்.
ஐயா, அவன் எனக்கு நல்லவனா கெட்டவனா? அவன் கெட்டவனாக இருப்பின், நான் நாளை சேர்ந்து கொள்கிறேன்.
ஏன் என்றல் புதன் என்னுடைய லக்னாதிபதி அவன் இருப்பதோ (மென்பொருளின் படி பத்தாம் வீடு, பனை ஓலையின் படி பதினொன்றாம் வீடு.)
ஐயா முதல் நாளே நான் உங்களை குழப்பி இருந்தால் என்னை மன்னிக்கவும்
என்றும் அன்புடன்
இரா. புரட்சிமணி //////

என்னை எல்லாம் குழப்பமுடியாது. நோ சான்ஸ்!
உங்கள் பெயருக்கு முன்னால் புரட்சி என்று போட்டுக்கொண்டிருக்கிறீர்களே - என்ன புரட்சி செய்தீர்கள்? அதைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!
இன்றைய கேள்விகள் அருமை... பதில்களோ மிக அருமை.. கிட்டத்தட்ட, இன்றைய அனைத்துக் கேள்விபதில்களுமே எனக்கு உபயோகமாக இருந்தன.. மிக்க நன்றிகள் குருதேவா.. (உபயோகமான கேள்விகள் கேட்ட என் சக மாணவர்களுக்கும் நன்றிகள்..!)

தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்

ananth said...

பித்ருக்கள் தோசம்/சாபம் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். பொதுவாக சூரியன், 9ம் இடம், ஆத்மகாரகன் இவை கெட்டிருந்தால் இந்த தோஷம் இருக்கும் என்றும் வழி வழியாக குல தெய்வ வழிபாடு, கடவுள் வழிபாடு சரியாக செய்யாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். வழி வழியாக ஏழ்மையில் இருப்பார்கள், அடிக்கடி குடும்பத்தில் அகால மரணம், துர் மரணம் சம்பவிக்கும். இப்படி பல விஷயங்கள் சொல்லப் படுகிறது. பின்னூட்டத்தில் எழுத இடம் போதாது. அத்துடன் இவையெல்லாம் எந்த அளவுக்கு சரி என்றும் தெரியவில்லை.

kannan said...

5 ம் வீட்டில் குருபகவான் இருந்தால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும்
இன்னும் சொல்ல போனால் மிகவும் திறமையான குழந்தையாக பிறக்கும் என்று கேள்வி பட்டது உண்டு மலையாள ஜோதிடர் வழியாக ஐயாவின் கருத்தை அறிய ஆவலுடன் அன்பு மாணவ கண்மணி

kannan said...

ஐயா நேற்றைய பாடத்தில் இறுதியாக தாங்கள் கூறும் தீர்ப்பு தான் என்ன ?

சித்தர்கள் கூறியது போல 8 * 8 = 64 வயதை தாண்டியவன் அதுவும் உலக அனுபவிஸ்தன் சொல்லுகின்றேன்
பெற்றவர்கள் பார்த்து வைக்கும் பையனையோ அல்லது பெண்ணையோ கல்யாணம் செய்வது கொள்ளுங்கள் என்பது தானே ஐயா!
>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<
கூடிவந்தாலும் நல்ல குணவதியாக அமையாவிட்டால், அதுவும் பிரச்சினைதான் கண்ணன்.
Tuesday, August 10, 2010 12:23:00 AM

sundari said...

புரட்சி ம்ணி சகோதரருக்கு,
வாங்க வாங்க எங்க வ்குப்பறைச் சார்பா உங்களுக்கு வரவேற்பு அளிக்கிறேன்
உங்க பின்னூட்டம் ரொம்ப நலலாயிருந்தது.நீங்க மேஷராசி, கன்னி லக்கன்ம்
அப்போ ரொம்ப புத்திசாலித்தான். எங்க வகுப்பில் வாத்தியார் அடிக்க மாட்டார்
திட்ட மாட்டார்.அப்புறம் மூத்த மாணவர்கள் புதுசா சேர்ந்தவர்களை கிண்டல்
பண்ண ம்ர்ட்டங்கள்..

சார் வணக்கம், ரொம்ப நனறி அந்த புரட்சி மணி சகோதரர் மேஷ ராசியில்லையா அவர் வீரத்திலும் கன்னி லக்கனும் பேச்சியிலும் புரட்சி ப்ண்ணுவார். அதான் உங்க‌ளுக்கு தெரியும் சார்
சுந்த‌ரி

SP.VR. SUBBAIYA said...

//////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...!
இன்றைய கேள்விகள் அருமை... பதில்களோ மிக அருமை.. கிட்டத்தட்ட, இன்றைய அனைத்துக் கேள்விபதில்களுமே எனக்கு உபயோகமாக இருந்தன.. மிக்க நன்றிகள் குருதேவா.. (உபயோகமான கேள்விகள்
கேட்ட என் சக மாணவர்களுக்கும் நன்றிகள்..!)
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
5 ம் வீட்டில் குருபகவான் இருந்தால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்றும்
இன்னும் சொல்ல போனால் மிகவும் திறமையான குழந்தையாக பிறக்கும் என்று கேள்வி பட்டது உண்டு மலையாள ஜோதிடர் வழியாக ஐயாவின் கருத்தை அறிய ஆவலுடன் அன்பு மாணவ கண்மணி////

இந்தக் கேள்வியில் இத்தனை முனைப்பாக உள்ளீர்களே! உங்கள் ஜாதகத்தில் ஐந்தில் குரு இருக்கிறதா?

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
ஐயா நேற்றைய பாடத்தில் இறுதியாக தாங்கள் கூறும் தீர்ப்பு தான் என்ன ?
சித்தர்கள் கூறியது போல 8 * 8 = 64 வயதை தாண்டியவன் அதுவும் உலக அனுபவிஸ்தன் சொல்லுகின்றேன்
பெற்றவர்கள் பார்த்து வைக்கும் பையனையோ அல்லது பெண்ணையோ கல்யாணம் செய்வது கொள்ளுங்கள்
என்பது தானே ஐயா!///////

ஆமாம். காதல் வந்தாலும் பெற்றோர்களிடம் அனுமதிபெற்றே திருமணம் செய்யுங்கள் என்கிறேன். அவர்கள் காதலுக்கு அனுமதி தராவிட்டால், சத்யாகிரகம் செய்தாவது அனுமதி பெறுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////sundari said..
புரட்சி மணி சகோதரருக்கு,
வாங்க வாங்க எங்க வ்குப்பறைச் சார்பா உங்களுக்கு வரவேற்பு அளிக்கிறேன் உங்க பின்னூட்டம் ரொம்ப நலலாயிருந்தது. நீங்க மேஷராசி, கன்னி லக்கனம்
அப்போ ரொம்ப புத்திசாலித்தான். எங்க வகுப்பில் வாத்தியார் அடிக்க மாட்டார் திட்ட மாட்டார்.அப்புறம் மூத்த மாணவர்கள் புதுசா சேர்ந்தவர்களை கிண்டல்
பண்ண மாட்டார்கள்.
சார் வணக்கம், ரொம்ப நனறி அந்த புரட்சி மணி சகோதரர் மேஷ ராசியில்லையா அவர் வீரத்திலும் கன்னி லக்கனும் பேச்சியிலும் புரட்சி பண்ணுவார். அதான் உங்க‌ளுக்கு தெரியும் சார்
சுந்த‌ரி/////

அவர் வந்து வித்தியாசமாக ஏதாவது சொல்வார் பாருங்கள். பொறுமையாக இருங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
பித்ருக்கள் தோசம்/சாபம் என்று நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். பொதுவாக சூரியன், 9ம் இடம், ஆத்மகாரகன் இவை கெட்டிருந்தால் இந்த தோஷம் இருக்கும் என்றும் வழி வழியாக குல தெய்வ வழிபாடு, கடவுள் வழிபாடு சரியாக செய்யாதவர்கள் போன்றவர்களுக்கு இந்த பாதிப்பு இருக்கும் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன். வழி வழியாக ஏழ்மையில் இருப்பார்கள், அடிக்கடி குடும்பத்தில் அகால மரணம், துர் மரணம் சம்பவிக்கும். இப்படி பல விஷயங்கள் சொல்லப் படுகிறது. பின்னூட்டத்தில் எழுத இடம் போதாது. அத்துடன் இவையெல்லாம் எந்த அளவுக்கு சரி என்றும் தெரியவில்லை. ////

உங்களின் பின்னூட்டத்தில் கடைசியாகச் சொல்லியிருக்கும் 5 வார்த்தைகள் முக்கியம். அதனால்தான் நான் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நன்றி ஆனந்த்! மூன்று தலைமுறைகள் வாழ்ந்தவர்களும் இல்லை. மூன்று தலைமுறைகளாகக் கெட்டவர்களும் இல்லை என்பார்கள். அதற்கு சுழற்சியைக் கணக்காகச் சொல்வார்கள்.
அதற்கும் ஆதாரம் இல்லை.

kannan said...

ஒரு சொலவடை சொல்லு உண்டு ' வாத்தியாரா! கொக்கா ' என்பது சரியாக கண்பிடித்து விட்டீர்களே
நீசபங்கராஜயோக ஜாதககாரன் படைத்தவனால் கொடுக்கபட்ட நஷ்ட ஈட்டில்( தாங்கள் அடிக்கடி சொல்லும் வாக்கு ) லாபம் வருமாயின் அதனை கண்டு சந்தோசம் அடைவதில் தெட்டு ஒன்றும் இல்லையே எமது அருமை ஐயா! மேலும் சுயலத்துடன் கூடிய பொதுநல சந்தேகம் தான்

Pughazhenthy Babu said...

அய்யா, மகர லக்னதிற்கு 4‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ம் மற்றும் 11‍‍‍‍ம் அதிபதி அங்காரகன். பொதுவாக
மகர லக்னதிற்கு 11‍‍‍‍ம் அதிபதி பாதகதிபதி. அப்போது அங்காரகன் தசை எப்படி இருக்கும்?

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
ஒரு சொல்லடை சொல் உண்டு ' வாத்தியாரா! கொக்கா ' என்பது சரியாக கண்பிடித்து விட்டீர்களே
நீசபங்கராஜயோக ஜாதககாரன் படைத்தவனால் கொடுக்கபட்ட நஷ்ட ஈட்டில்( தாங்கள் அடிக்கடி சொல்லும் வாக்கு ) லாபம் வருமாயின் அதனை கண்டு சந்தோசம் அடைவதில் தெட்டு ஒன்றும் இல்லையே எமது அருமை ஐயா! மேலும் சுயலத்துடன் கூடிய பொதுநல சந்தேகம் தான்///////

சுயநலத்துடன் கூடிய எனும்போது, பொது நலம் அங்கே எப்படி சாமி நுழையும்?

SP.VR. SUBBAIYA said...

/////Pughazhenthy Babu said...
அய்யா, மகர லக்னதிற்கு 4‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ம் மற்றும் 11‍‍‍‍ம் அதிபதி அங்காரகன். பொதுவாக
மகர லக்னதிற்கு 11‍‍‍‍ம் அதிபதி பாதகதிபதி. அப்போது அங்காரகன் தசை எப்படி இருக்கும்?///////

கிரகங்களுக்குப் பலவிதமான பணிகள் உள்ளன. Planets have multiple task!
4 & 11 கேந்திர ஸ்தானங்கள். சுக ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானம். அந்த இடங்களுக்கு உரிய பணிகளைச் செய்யும்போது, பாதகாதிபதி பட்டத்தைக் கழற்றிவைத்துவிட்டு வந்து செய்யும். நமக்கே எத்தனை முகங்கள் எத்தனை பணிகள் உள்லன? கிரகங்களுக்கு இருக்காதா?