மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

4.8.10

வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா?

வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா? யார் உறித்துத் தின்பது? உறித்துத் தாருங்கள்!
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.7
ஷ்யாம் பிரசாத்
   
அன்புள்ள  சார் அவர்களுக்கு ,

1. ஜாதகத்தில் வக்ரத்தில் உள்ள குரு பகவான் நல்லது செய்வாரா ?
Blog Commentல் போஸ்ட் செய்து விட்டேன் . மன்னிக்கவும் .

ஏன் செய்ய மாட்டார்? “கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!” என்ன, முழு அளவு செய்ய மாட்டார்.
குறைவாகச் செய்வார். (பதிவிலேயே சொல்லியிருந்தேன். இருந்தாலும் அனைவர் கண்ணிலும் படுவதற்காக மீண்டும் ஒருமுறை இங்கே கொடுத்துள்ளேன்.)

2. http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_11.html  இந்த போஸ்டில் உள்ள கேள்விகளுக்கு தாங்கள்   பதில் எங்கு எழுதி உள்ளீர்கள்?

இந்த போஸ்ட்டில் உள்ள கேள்விகளா? பின்னூட்டங்களா? அதைத் தெளிவாகச் சொல்லுங்கள். பின்னூட்டங்கள் என்றால், அந்தப் பதிவிலேயே பதில்கள் இருக்கும்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.8
கோபாலகிருஷ்ணன்.ஜி
பவானி, ஈரோடு
   
Dear Sir,
             I have one small clarification, i born on 09-04-1984 at 6:40 PM, when my jhathaka written, where they wrote it as kadaka rasi and dhulam lagna and punarpoosam natchathiram and now few months back we have seen computer astrology, there lagna is mentioned as kanni lagna and astrologer told that if these lagna changes won't be problem, prediction(balankal) will be same. please kindly clarify, which lagna we have to consider whether dhulam or kanni. what my doubt is, if lagna is changing means, planets position also will change, and entire prediction will change, is it right sir?, please kindly clarify my doubt, which one i have to follow, whether computer based or astrologer written jhadhakam, it will be very helpful to other's also.
Thank you,
Yours obediently,
Gopalakrishnan.G(Bhavani-Erode)

கர்நாடக இசை வேறு, மேற்கத்திய இசை வேறு. இரண்டும் இசைதான். ஆனால் இரண்டையும் ஒன்றுபடுத்திக் கும்மி அடிக்கக்கூடாது. எல்விஸ் பிரஸ்லியின் பாடலும், திருமதி. சுதாரகுநாதனின் பாடலும் தனிதன்மை வாய்ந்தவை.

அதுபோல பஞ்சாங்களில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று வாக்கியப் பஞ்சாங்கம். இரண்டாவது திருக்கணிதப் பஞ்சாங்கம்.

நம் வகுப்பறைக்கு வரும் பெரும்பாலான ஜாதகர்களின் அப்பாக்கள், உள்ளூர் ஜோசியரிடம் கொடுத்து ஜாதகத்தை manual ஆகக் கணித்து அல்லது எழுதி வாங்கியிருப்பார்கள். அவை அனைத்துமே வாக்கியப் பஞ்சாங்கத்தின்  அடிப்படையில் எழுதப்பெற்றதாக இருக்கும். ஆகவே கணினி மூலம் (திருக்கணிதம்) தன் ஜாதகத்தை ஒரு ஜாதகன் கணித்து எடுத்து, தன் தந்தையார் கொடுத்த ஜாதகத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தலை சுற்றும்.
கணினியில் வாக்கிய முறையில் கணிப்பதற்கும் வசதி (option) இருக்கிறது. பலருக்கும் அது தெரியாது.
ஆகவே கணினியில் ஜாதகத்தை உள்ளிட்டு எடுக்கும்போது, இந்த optionஐ பயன் படுத்தி எடுக்க வேண்டும்.
அப்போது சரியாக இருக்கும்!

இப்போது புதிதாக வரும் எல்லோரும் கேட்கும் கேள்வி: இரண்டு பஞ்சாங்கங்கள் ஏன்? அவற்றிற்கிடையே ஏன் வித்தியாசம்?

இதற்குப் பலமுறைகள் நான் பதில் சொல்லியுள்ளேன். பாடங்களை முழுமையாகப் படிப்பதற்குப் பலருக்குப் பொறுமையும், நேரமும் இல்லை. இங்கே உள் நுழைந்து சட்டென்று கேட்பார்கள். பழைய படத்தில் இருக்கிறது என்றால் - அதன் சுட்டியைத் (Link URL) தாருங்கள் என்பார்கள். அதைத் தேடிப்பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. நேரம் இருக்காது. சிலருக்கு சோம்பேறித்தனத்தால் தேடிப்பார்க்க வலிக்கும்.

வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்

இன்று அதைச் செய்திருக்கிறேன்.
ஏன் செய்திருக்கிறேன்?
ஒரே / இதே கேள்வியை 3 பேர்கள் கேட்டிருக்கிறார்கள்.

26.12.2009 அன்று கேள்வி - பதில் பகுதியில் இதற்கான பதில் உள்ளது. அதற்கான சுட்டி இங்கே உள்ளது. அழுத்திப் பார்க்கவும்!

Doubt: எது நம்பிக்கைக்கு உரியது - வாக்கியமா? திருக்கணிதமா?
Doubts: கேள்வி பதில் பகுதி 20 (Dated 27.1.2010)
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் எண் இருபது! (27.1.2010)
URL: http://classroom2007.blogspot.com/2010/01/doubt_27.html

----------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.9
சுபாஷிணி

I have a doubt:
You have been taking on strength/parals of planets.
If a particular planet is debiliated in navamsa will it have high paral points ?
Similarly if a planet is well placed in navamsa is it possible to have low paral points?
In that case which is effective? Either position of planet or paral strength?
For eg sukra is neecha in navamsa but with 67.5% strength but sani is aatchi in navamsa but with least strength.Considering navamsa is magnified version of the raasi chart.
Please explain
Thanks in Advance
Shuba/////

நவாம்சத்தையும், அஷ்டகவர்க்கப் பரல்களையும் ஒன்றாக்கி உங்களை நீங்களே ஏன் குழப்பிக் கொள்கிறீர்கள்?
ராசிக்குத்தானே அஷ்டகவர்க்கம் (அதாவது பரல்கள்) நவாம்சத்திற்குத் தனியாக ஏது பரல்கள்?

நவாம்சம் என்பது ராசியின் விரிவாக்கம் (Magnified version of a rasi chart)
அஷ்டகவர்க்கம் என்பது ஒரு ஜாதகத்தின் பலனை மதிப்பெண்களால் கணக்கிடுவது.

ராசியில் பகைவீட்டில் இருக்கும் கிரகம் அம்சத்தில் உச்ச வீட்டில் இருக்கலாம். அப்படியிருந்தால், அக்கிரகம் ஜாதகனுக்கு உச்சமானதன் பலனையே தரும். கிரகங்களின் உண்மையான வலிமையை நவாம்சத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.( assessing the value of a planet) நவாம்சத்தின் மூலம் செய்யவேண்டும்.

உங்கள் பணியைச் சுலபமாக்க உள்ளதுதான் அஷ்டகவர்க்கம் (பரல்கள்). ராசியில் உச்சமாக உள்ள கிரகம் அம்சத்தில் நீசமாக இருக்கலாம். அதௌ தன் சுயவர்க்கத்தில் 6 பரல்களுடனும் இருக்கலாம். அம்சத்தில் நீசமான
கிரகத்திற்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள் கிடைத்தது எப்படி என்றால் என்ன செய்வது. ராசியின் மற்ற அமைப்புக்களைவைத்து வந்திருக்கும். அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!

சுடிதாரையும், சேலையையும் ஒன்றாகக் கட்டிக்கொள்ள முடியாது. அதாவது உடுத்திக்கொள்ள முடியாது.
அஷ்டகவர்க்கத்தைக் கட்டிக்கொண்டால், அம்சத்தை சற்றுத் தள்ளி வைத்து விடுங்கள். அம்சத்தைக் கட்டிக்கொண்டால், அஷ்டகவர்க்கத்தைக் கொடியில் தொங்க விட்டு விடுங்கள்.

சுடிதாரைப் போட்டுக்கொண்டு அதன் மேல் சேலையையும் கட்டிக்கொள்ளலாமா என்று ஒரு பெண் கேட்டால் என்ன சொல்வீர்கள்?
------------------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.10
மணிவண்ணன்
பிறந்த ஊர்: ராசிபுரம்
வசிக்கும் ஊர்: ஹைதராபாத்
வயது: 29
   
ஐயா,

பாடங்கள் அருமை. எனக்கு சில சந்தேகங்கள்.

1. மிதுன லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் நல்லதா? எட்டாம் இடத்திற்கு 23 பரல்கள். சுக்கிரனுக்கு சுயவர்க்கத்தில் 6 பரல்கள்.

நைசாக சொந்தக் கேள்வியை நுழைத்துவிட்டீர்கள். பரவாயில்லை. பதில் சொல்கிறேன். சுக்கிரன் எட்டாம் இடத்தில் இருப்பது நல்லதுதான். ஆனால் கேதுவுடன் இருப்பது நன்மை செய்யும் அமைப்பு அல்ல! 8ல் கேது இருப்பதே நன்மையானதல்ல!

2. 9-ஆம் இடத்து அதிபதி சனியும் 10-ஆம் இடத்து அதிபதி குருவும் சேர்ந்து 4 - ஆம் வீட்டில் இருந்தால் யோகம் எப்பொழுது பலன் தரும்.

தங்களின் தசா/புத்திகளில் தருவார்கள்

3. 4 - ஆம் வீட்டு அதிபதி புதனும் 9-ஆம் இடத்து அதிபதி சனியும் பரிவர்த்தனை ஆனால் பலன் எப்பொழுது கிடைக்கும். தயவு செய்து பதில் சொல்ல முடியுமா அய்யா?

கிரகங்கள் பலனைத் தங்களின் தசா புத்திகளில் தருவார்கள். தரும்வரை காத்திருக்க வேண்டும். ஆட்டோவில் ஆட்களை அனுப்பி கிரகங்களை மிரட்ட முடியாது. தட்டவும் முடியாது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

24 comments:

Shyam Prasad said...

http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_11.html

இந்த போஸ்டில் உள்ள கேள்விகளுக்கு தாங்கள் பதில்களை எங்கு எழுதி உள்ளீர்கள் . Blog comment இல் கண்டு பிடிக்க முடியவில்லை .

மிக்க நன்றி

Alasiam G said...

"பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா"

பணமென்னும் மாயக் கண்ணாடியே
நீ செய்வது துரோகமில்லையா?
பாவம் உன் எஜமான் அவனின்
உண்மையான குணத்தை - இப்படி
காட்டி கொடுத்துவிட்டாயே?
என்னது! அவனே துரோகம்
செய்து தான் உன்னை சேர்த்தானா?

நன்றிகள் ஐயா.

kmr.krishnan said...

வாக்கியம்,திருக்கணிதம் இரண்டில் உங்கள் ஓட்டு வாக்கியத்திற்கு என்று நினக்கிறேன். சரியா? அதர்கான காரணம் ஏதாவது உண்டா?

SP.VR. SUBBAIYA said...

Shyam Prasad said...
http://classroom2007.blogspot.com/2008/07/blog-post_11.html
இந்த போஸ்டில் உள்ள கேள்விகளுக்கு தாங்கள் பதில்களை எங்கு எழுதி உள்ளீர்கள் . Blog comment இல் கண்டு பிடிக்க முடியவில்லை .
மிக்க நன்றி/////////

உங்கள் மின்னஞ்சலைக் கொடுங்கள். அதைக் copy & paste செய்து உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
"பணத்தின்மீதுதான் பக்தி என்றபின்
பந்த பாசங்கள் ஏனடா"
பணமென்னும் மாயக் கண்ணாடியே
நீ செய்வது துரோகமில்லையா?
பாவம் உன் எஜமான் அவனின்
உண்மையான குணத்தை - இப்படி
காட்டி கொடுத்துவிட்டாயே?
என்னது! அவனே துரோகம்
செய்து தான் உன்னை சேர்த்தானா?
நன்றிகள் ஐயா./////

“பணமென்னும் மாயக் கண்ணாடியே" என்று பணத்தைத் திட்டாதீர்கள்.“மனம் என்னும் குரங்கே ‘ என்று மனதைச் சாடுங்கள் ஆலாசியம்

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
வாக்கியம்,திருக்கணிதம் இரண்டில் உங்கள் ஓட்டு வாக்கியத்திற்கு என்று நினக்கிறேன். சரியா? அதர்கான காரணம் ஏதாவது உண்டா?/////

எனது வாக்குச் சீட்டு வாக்கியத்திற்கே. அதுதான் சரியாக உள்ளது. அனுபவத்தில் கண்டது!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மின்னஞ்சல் கேள்விகளுக்கான தங்களின்விளக்கமான,விரிவான பதில்கள் மிகவும்உபயோகமான விபரங்களுடன் உள்ளன.
மிக்க நன்றி
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-04

ananth said...

//வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்//

சிலருக்கு ஊட்டியும் விட வேண்டும்.

திருக்கணிதம், வாக்கியம் இந்த இரண்டு முறையிலும் என்னுடைய ஜாதகம் கணித்தால் லக்னம் ஒன்றுதான் வித்தியாசப்படுகிறது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை. இரண்டு லக்னங்களும் வர்கோத்தமமாக இருக்கிறது.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Kelviyum Badhilum Arumai Sir..

Still Pudhu Manavargal Ketkum Kelvikku ungal badhil Arumai Sir..

Neengal Repeatu endru sollividungal Sir...

Lot of times you show your passion..still

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Neengal oru vakiya panchangam sir...

Adhil Chandranum bhudhanum munnukku pin irundhalum dasa/bhudhi prediction is always correct Sir

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

மதி said...

>>அதைத் தேடிப்பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. நேரம் இருக்காது.<<

எழுதுவது மிக கடினம் இதற்கே உங்குக்கு நேரம் இருக்கும் பொழுது தேடிபர்க்க எப்படி நேரம் இருக்காது?

>>சிலருக்கு சோம்பேறித்தனத்தால் தேடிப்பார்க்க வலிக்கும்<<

நச்னு இருக்கு நிங்கள் சொல்வது...என்ன செய்வது (பெற்றோர்கள்) ஊட்டி பழக்கிவிட்டார்கள்

>>>வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்
<<<

இதைதான் எங்கள் ஊரில் வாழைப்பழம் சோம்பேறி என்பார்கள்.

ஆர்வம் இன்மைதான் இதற்கெல்லாம் மூல காரணமே...

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
மின்னஞ்சல் கேள்விகளுக்கான தங்களின்விளக்கமான,விரிவான பதில்கள் மிகவும்உபயோகமான விபரங்களுடன் உள்ளன.
மிக்க நன்றி
வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நீங்கள் பிரச்சினை இல்லாத ஸ்டூடண்ட். அதனால் உங்கள் கண்ணோட்டத்தில் எல்லாமே உபயோகமாகத்தான் தெரியும்:-)))))

SP.VR. SUBBAIYA said...

/////ananth said...
//வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்//
சிலருக்கு ஊட்டியும் விட வேண்டும்.
திருக்கணிதம், வாக்கியம் இந்த இரண்டு முறையிலும் என்னுடைய ஜாதகம் கணித்தால் லக்னம் ஒன்றுதான் வித்தியாசப்படுகிறது. இரண்டுக்கும் ஒரு ஒற்றுமை. இரண்டு லக்னங்களும் வர்கோத்தமமாக இருக்கிறது.

ஒரு லக்கினத்திற்கு 9 (நட்சத்திர) பாதங்கள். அவற்றுள் முதல் & கடைசி பாதங்களில் பிறக்கும் ஜாதகர்களுக்கு மட்டும்தான் லக்கினம் வித்தியாசப்படும். இல்லையென்றால், இரண்டிலும் அதே லக்கினம் வரும்!

SP.VR. SUBBAIYA said...

//////Arulkumar Rajaraman said...
Dear Sir
Kelviyum Badhilum Arumai Sir..
Still Pudhu Manavargal Ketkum Kelvikku ungal badhil Arumai Sir..
Neengal Repeatu endru sollividungal Sir...
Lot of times you show your passion..still
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

வாத்தியார் என்றாகிவிட்டது. பொறுமை காப்பதுதான் தலையாய செயல்!

SP.VR. SUBBAIYA said...

//////Arulkumar Rajaraman said...
Dear Sir
Neengal oru vakiya panchangam sir...
Adhil Chandranum bhudhanum munnukku pin irundhalum dasa/bhudhi prediction is always correct Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////

என்ன சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. ஒன்று மட்டும் தெரிகிறது - திட்டவில்லை

SP.VR. SUBBAIYA said...

/////மதி said...
>>அதைத் தேடிப்பார்ப்பதற்கு விருப்பம் இருக்காது. நேரம் இருக்காது.<<
எழுதுவது மிக கடினம் இதற்கே உங்களுக்கு நேரம் இருக்கும் பொழுது தேடிப்பார்க்க எப்படி நேரம் இருக்காது?//////
>>சிலருக்கு சோம்பேறித்தனத்தால் தேடிப்பார்க்க வலிக்கும்<<
நச்னு இருக்கு நிங்கள் சொல்வது...என்ன செய்வது (பெற்றோர்கள்) ஊட்டி பழக்கிவிட்டார்கள்
>>>வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும். துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும் <<<
இதைதான் எங்கள் ஊரில் வாழைப்பழம் சோம்பேறி என்பார்கள்.////////

உங்கள் ஊர் என்றில்லை. எல்லா ஊர்களிலும் அப்படித்தான் சொல்வார்கள்.
>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
/////ஆர்வம் இன்மைதான் இதற்கெல்லாம் மூல காரணமே.../////

விதி எப்போதுமே ஜோடி மாற்றித்தான் சேர்க்கும். இந்த மாதிரி ஆசாமிகளுக்கெல்லாம், படு சுறுசுறுப்பான பெண் மனைவியாக வந்து சேர்வாள். சேர்வதுடன் இல்லாமால் சாத்திக் கொண்டும் இருப்பாள். சாத்துவது என்ரால் என்னவென்று தெரியுமல்லவா?

கணவன் தண்டவாளமாக இருந்தால், மனைவி இரயிலாக இருப்பாள். இரண்டு இரயில்களை விதி எப்போதுமே ஒன்று (ஜோடி) சேர்க்காது

Thanjavooraan said...

"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசம் ஏதடா?" இது அன்று இருந்த நிலையில் கவியரசர் எண்ணத்தில் உதித்தப் பாடல். இன்று அவர் இருந்திருந்தால், "பதவியோடு செல்வத்திலும் பக்தி இருந்தால், உலகில் வேறெதிலும் பாசமேதடா?" என்றல்லவா பாடியிருப்பார். கவிஞர்கள் வாக்குப் பொய்க்காது. அவை மனித வாழ்வியலில் கண்ட யதார்த்தமான உண்மைகள்.

SP.VR. SUBBAIYA said...

/////Thanjavooraan said...
"பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசம் ஏதடா?" இது அன்று இருந்த நிலையில் கவியரசர் எண்ணத்தில் உதித்தப் பாடல். இன்று அவர் இருந்திருந்தால், "பதவியோடு செல்வத்திலும் பக்தி இருந்தால், உலகில் வேறெதிலும் பாசமேதடா?" என்றல்லவா பாடியிருப்பார். கவிஞர்கள் வாக்குப் பொய்க்காது. அவை மனித வாழ்வியலில் கண்ட யதார்த்தமான உண்மைகள்./////

நிதர்சனமான உண்மை! இன்று மனிதர்கள், பதவி, பணம், அதிகாரம், செல்வாக்கு என்று திசைமாறிவிட்டார்கள். நேயங்கள் மறைந்துவிட்டன! தர்ம சிந்தனை இல்லாமல் போய்விட்டது!

minorwall said...

\\\\\\\\\வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா? யார் உறித்துத் தின்பது? உறித்துத் தாருங்கள்!
வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்/////
\\\\\\\\\\\\\கர்நாடக இசை வேறு, மேற்கத்திய இசை வேறு. இரண்டும் இசைதான். ஆனால் இரண்டையும் ஒன்றுபடுத்திக் கும்மி அடிக்கக்கூடாது. //////
\\\\\\\\\\\\\\\சுடிதாரையும், சேலையையும் ஒன்றாகக் கட்டிக்கொள்ள முடியாது. அதாவது உடுத்திக்கொள்ள முடியாது.
அஷ்டகவர்க்கத்தைக் கட்டிக்கொண்டால், அம்சத்தை சற்றுத் தள்ளி வைத்து விடுங்கள். அம்சத்தைக் கட்டிக்கொண்டால், அஷ்டகவர்க்கத்தைக் கொடியில் தொங்க விட்டு விடுங்கள்.
சுடிதாரைப் போட்டுக்கொண்டு அதன் மேல் சேலையையும் கட்டிக்கொள்ளலாமா என்று ஒரு பெண் கேட்டால் என்ன சொல்வீர்?/////////////////
\\\\\\\\\\\கிரகங்கள் பலனைத் தங்களின் தசா புத்திகளில் தருவார்கள். தரும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆட்டோவில் ஆட்களை அனுப்பி கிரகங்களை மிரட்ட முடியாது. தட்டவும் முடியாது.///////////
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார்..இன்னிக்குத்தான் உங்கள் ப்ளாக் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.1685 பேர் வருகைக்கு எது முதல் காரணமாக இருக்கும் என்பது பற்றி ஒரு சின்ன டிச்கிச்சின்..
நான் சொன்னேன்...
முதல் காரணம்..தன் தலையை உருட்டும் பிரச்சினைகளுக்கு தலைக்கு மேல் சுத்தும் கிரகங்கள் காரணமா?எப்படி? என்று சோதிடத்தின் மேல் உள்ள ஆர்வம்.
இரண்டாம் காரணம்..இந்த வகை சோதிடப் பாட வகுப்புக்கு என்று கட்டணம் ஏதும் கிடையாது..இலவச இணைப்பு...
அப்புறம்தான் உங்களின் சுவாரஸ்யமான எழுத்து நடை என்று பட்டியலிட்டேன்..ஆனால் இன்றைய பதிவைப் படித்தபின் இந்த லொள்ளு கலந்த
உங்களின் சுவாரஸ்யமான எழுத்து நடைதான் முதல் காரணமா என்று சந்தேகம் வந்துவிட்டது..

Arul Murugan. S said...

அய்யா
திருக்கணித முறை நம்பகமானது அல்ல என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் கருர் தியாஹராஜன் மென்பொருள் வாக்கிய முறையில் horoscope தவறாகவே கணிக்கிறது . சக பதிவர் 'Ananth'' Dec. 2009'il (sorry it is not Mr.Sibhi as i mentioned in previous mail) கூறியதை வழிமொழிகிறேன். தமிழக ஜோதிடர்கள்
பின்பற்றும் அயனாம்சத்திற்கும் ராமன் அயனாம்சத்திற்கும் பெரும்
வித்தியாசம் உள்ளது. எனவே வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

SP.VR. SUBBAIYA said...

//////minorwall said...
\\\\\\\\\வாழைப்பழத்தை இலவசமாகத் தந்தால் போதுமா? யார் உறித்துத் தின்பது? உறித்துத் தாருங்கள்!
வாழைப்பழத்தை இலவசமாகக் கொடுத்தாலும், கனிந்த பழமாகக் கொடுக்க வேண்டும்
தோலை உறித்துக் கொடுக்க வேண்டும்
துண்டுகள் போட்டு, சாப்பிடுவதற்கு ஏதுவாக picking sticks போட்டும் கொடுக்க வேண்டும்/////
\\\\\\\\\\\\\கர்நாடக இசை வேறு, மேற்கத்திய இசை வேறு. இரண்டும் இசைதான். ஆனால் இரண்டையும் ஒன்றுபடுத்திக் கும்மி அடிக்கக்கூடாது. //////
\\\\\\\\\\\\\\\சுடிதாரையும், சேலையையும் ஒன்றாகக் கட்டிக்கொள்ள முடியாது. அதாவது உடுத்திக்கொள்ள முடியாது.
அஷ்டகவர்க்கத்தைக் கட்டிக்கொண்டால், அம்சத்தை சற்றுத் தள்ளி வைத்து விடுங்கள். அம்சத்தைக் கட்டிக்கொண்டால், அஷ்டகவர்க்கத்தைக் கொடியில் தொங்க விட்டு விடுங்கள்.
சுடிதாரைப் போட்டுக்கொண்டு அதன் மேல் சேலையையும் கட்டிக்கொள்ளலாமா என்று ஒரு பெண் கேட்டால் என்ன சொல்வீர்?/////////////////
\\\\\\\\\\\கிரகங்கள் பலனைத் தங்களின் தசா புத்திகளில் தருவார்கள். தரும்வரை காத்திருக்க வேண்டும்.
ஆட்டோவில் ஆட்களை அனுப்பி கிரகங்களை மிரட்ட முடியாது. தட்டவும் முடியாது.///////////
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார்..இன்னிக்குத்தான் உங்கள் ப்ளாக் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.1685 பேர் வருகைக்கு எது முதல் காரணமாக இருக்கும் என்பது பற்றி ஒரு சின்ன டிச்கிச்சின்..
நான் சொன்னேன்...
முதல் காரணம்..தன் தலையை உருட்டும் பிரச்சினைகளுக்கு தலைக்கு மேல் சுத்தும் கிரகங்கள் காரணமா?எப்படி? என்று சோதிடத்தின் மேல் உள்ள ஆர்வம்.
இரண்டாம் காரணம்..இந்த வகை சோதிடப் பாட வகுப்புக்கு என்று கட்டணம் ஏதும் கிடையாது..இலவச இணைப்பு...
அப்புறம்தான் உங்களின் சுவாரஸ்யமான எழுத்து நடை என்று பட்டியலிட்டேன்..ஆனால் இன்றைய பதிவைப் படித்தபின் இந்த லொள்ளு கலந்த உங்களின் சுவாரஸ்யமான எழுத்து நடைதான் முதல் காரணமா என்று சந்தேகம் வந்துவிட்டது..////////

மைனரின் சந்தேகம் மேஜாரானதல்ல - மைனரானதுதான்!
புரட்சித்தலைவரின் படங்கள் எதனால் அத்தனை சிறப்பாக ஓடின? அவரின் நடிப்பிற்காகவா? கதையம்சங்களுக்காகவா? பாடல்களுக்காகவா? இல்லை! அவருக்குக் கிடைத்த அபிமானம் மிக்க எண்ணற்ற ரசிகர்களால் ஓடியது.

என்னுடைய வலைப்பதிவையும் இத்தனை பேர்வந்து பார்வையிடுவதற்குக் காரணம் - அவர்கள் வெறும் வாசகர்கள் அல்ல! ரசிகர்களும் அல்ல! அத்தனைபேரும் வாத்தியாரின் அபிமானிகள். அபிமானம் மிக்கவர்கள். அதுதான் காரணம். அந்த அபிமானம் பிரித்து மேய்ந்து ஆராய்ச்சி செய்ய முடியாத நிலையை உடையதாகும். விளக்கம் போதுமா மைனர்?

minorwall said...

///////////SP.VR. SUBBAIYA said... புரட்சித்தலைவரின் படங்கள் எதனால் அத்தனை சிறப்பாக ஓடின? அவரின் நடிப்பிற்காகவா? கதையம்சங்களுக்காகவா? பாடல்களுக்காகவா? இல்லை! அவருக்குக் கிடைத்த அபிமானம் மிக்க எண்ணற்ற ரசிகர்களால் ஓடியது.\\\\\\\\\\
சந்தடி சாக்குலே நான் புரட்சித்தலைவர் போலேன்னு டயலாக் வெச்சுட்டீங்களே சார்..அங்கதான் நீங்க நிக்குறீங்க...

SP.VR. SUBBAIYA said...

////minorwall said...
///////////SP.VR. SUBBAIYA said... புரட்சித்தலைவரின் படங்கள் எதனால் அத்தனை சிறப்பாக ஓடின? அவரின் நடிப்பிற்காகவா? கதையம்சங்களுக்காகவா? பாடல்களுக்காகவா? இல்லை! அவருக்குக் கிடைத்த அபிமானம் மிக்க எண்ணற்ற ரசிகர்களால் ஓடியது.\\\\\\\\\\
சந்தடி சாக்குலே நான் புரட்சித்தலைவர் போலேன்னு டயலாக் வெச்சுட்டீங்களே சார்..அங்கதான் நீங்க நிக்குறீங்க... ////

உதாரணம் எல்லாம் உண்மையாகாது மைனர்!

SP.VR. SUBBAIYA said...

/////Arul Murugan. S said...
அய்யா
திருக்கணித முறை நம்பகமானது அல்ல என்பதில் சந்தேகம் இல்லை. அதே சமயம் கருர் தியாஹராஜன் மென்பொருள் வாக்கிய முறையில் horoscope தவறாகவே கணிக்கிறது . சக பதிவர் 'Ananth'' Dec. 2009'il (sorry it is not Mr.Sibhi as i mentioned in previous mail) கூறியதை வழிமொழிகிறேன். தமிழக ஜோதிடர்கள்
பின்பற்றும் அயனாம்சத்திற்கும் ராமன் அயனாம்சத்திற்கும் பெரும்
வித்தியாசம் உள்ளது. எனவே வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. இதை என்னால் உறுதியாகக் கூற முடியும்./////

சரி , வேறு மென் பொருள் ஒன்றைத் தேடிப்பிடியுங்கள். ஜகந்னாத ஹோரா மென் பொருளில் வாக்கியமுறையும் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அதை முயற்சி செய்யுங்கள். அது இலவசமாக இணையத்தில் கிடைக்கும்