மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

11.8.10

ஊறுகாய் எப்படி முழு உணவு ஆகும்?

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஊறுகாய் எப்படி முழு உணவு ஆகும்?

கேள்வி - பதில்கள் (இரண்டாவது சீஸன்) பகுதி 7
உங்களின் கேள்விகள் - வாத்தியாரின் பதில்கள்
-----------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.18
சேகர் வெங்கடேசன்

அய்யா,

1.திருமணத்திற்கு குரு பலன் - கொஞ்சம் விளக்குங்களேன். சந்திர ராசிப் பிரகாரம் குரு பலன் பார்க்கிறார்கள். இதில் லக்னம் கணக்கில் வராதா?

கோள்சாரம் என்பது இன்றையத் தேதியில் வானில் கிரகங்கள் இருக்கும் நிலைமையைக் காட்டுவது!. சந்திரன் எண்ணிக்கையில் ஒருவர். லக்கினங்கள் பன்னிரெண்டு. எதைவைத்துக் கணக்கிடுவது சுலபமாக இருக்கும் நீங்களே சொல்லுங்கள். கோள்சாரத்தில் Man of the match award எப்போதும் சந்திரனுக்குத் தான். மற்றவர்கள் எல்லாம் (லக்கினங்கள் எல்லாம்) டீம் மேட்ஸ். பரிசுத்தொகையை அல்லது கிடைக்கும் Champagnes பாட்டிலைப் பங்கு வைத்துக்கொள்வார்கள். அவ்வளவுதான்!

கோள்சாரத்தில் சுற்றிவரும் குரு பகவான்சந்திர ராசிக்கு  5, 7, 9, 11ஆகிய இடங்களுக்கு வரும்போது பல நன்மைகளைச் செய்வார். திருமண மாகாதவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார். வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு உள்ள யோகத்தை நல்குவார். சுப காரியங்களை நடத்திவைப்பார்.

லக்கினத்தை வைத்துப்பார்க்கும் பலன்கள் அனைத்தும் தனி, கோள்சாரத்தை வைத்துப்பார்க்கும் பலன்கள் தனி. இரண்டையும் ஒன்றாக்கிக் குழம்பிக்கொள்ளாதீர்கள்

2 . திரிகோண பரிவர்த்தனையை பற்றி சொல்லி இருக்கிறீர்கள். ஆறாம் அதிபதி எட்டிலும் எட்டாம் அதிபதி ஏழிலும் ஏழாம் அதிபதி ஆறிலும் இருப்பதை திரிகோண பரிவர்த்தனை என்று சொல்லலாமா? இதுவும் நன்மை தரும் அமைப்பா?

சொல்லலாம். பரிவர்த்தனைகள் நன்மை செய்யும் அமைப்புக்கள்தான். உன் வீட்டில் நான். என் வீட்டில் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு நன்மைகளைச் செய்வார்கள். நன்மைகள் அவரவரின் தசா.புத்திகளில் கிடைக்கும்..

--------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.19
சுந்தர விக்னேஷ்
பிறந்த ஊர்: பொள்ளாச்சி
வசிக்கும் ஊர்: பஹ்ரெய்ன்
வயது 28+

Hello sir,
                      
1.How astrology should be taken in life.?

ஜோதிடம் ஊறுகாயைப் போல எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஊறுகாய் முழு உணவாகாது. அதை மனதில் வையுங்கள். இறையுணர்வுதான் முழுச் சாப்பாடு. அதை மட்டும் சாப்பிடுங்கள். ஊறுகாயைத் தேவைப்படும்போது பயன் படுத்திக்கொள்ளூங்கள்
                      
2.Does parigaram (Specifically wearing gold, Rasi stones etc) helps R it is just to console the situation?

நீங்கள் சொல்லும் பரிகாரங்கள் பிணியைப் போக்காது. பிணியினால் ஏற்படும் வலியை மறக்கச் செய்யும்!
                      
3.How it can be identified that the person is not having next jenma?

12ஆம் வீட்டில் ஞானகாரகன் கேது இருந்தால், அடுத்த பிறவி இல்லை என்பார்கள்.
                      
4. How to find a person can become saint in future?

இதற்கு ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். சாக்ரடீஸ் சொல்லிவைத்து விட்டுப் போயிருக்கிறார். எப்படியும் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு நல்ல பெண் மனைவியாகக் கிடைப்பாள். அல்லது நாட்டிற்கு ஒரு நல்ல தத்துவஞானி கிடைப்பார். ஆசிரமத்தில் உட்கார்ந்தால்தான் சந்நியாசியா? நல்ல மனைவி அமையாதவர்கள் அத்தனை பேர்களுமே சந்நியாசிகள்தான்

ஜாதகத்தில் ஒரு வீட்டில் 3ற்கும் மேற்பட்ட கிரகங்கள் இருக்கும் அமைப்பு ஜாதகனை சந்நியாசியாகும் மன நிலைமைக்குக் கொண்டுவந்துவிடும். 11ஆம் வீட்டில், 10ஆம் அதிபதியுடன் சேர்த்து 4 கிரகங்கள் ஒன்றாக, அதுவும் அஸ்தமனம் பெறாத நிலையில் இருக்கும் அமைப்பு ஆன்மிக வாழ்வில் ஜாதகனைப் பெருந்தலையாக்கிவிடும். ஆசிரமம், ஏகப்பட்ட சீடர்கள், பக்தர்கள் என்று ஜாதகன் அமோகமாக (சந்நியாசியாகத்தான்) இருப்பான்.

5. By seeing ones jadakam how to find out it is male or a female?

ஜாதகத்தின் முதல் பக்கத்தில் பெயர் எழுதியிருப்பார்களே சாமி - அதைவைத்துத் தெரிந்து கொள்ளலாம்!:-))))

நாடி முறையில் 150 நாடிகள் உள்ளன. அவற்றையும் இரண்டாகப் பிரிக்கலாம். பூர்வ நாடி. உத்திர நாடி. ஆக மொத்தம் 300 பிரிவுகள். அவற்றின் அளவுகள் ஒரே மாதிரியானவை அல்ல! அவற்றை மேலும் பிரித்தால் 8 விநாடிகளுக்கு ஒரு நாடி வரும் (விநாடி என்று குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்கவும்). சுருக்கமாகச் சொன்னால், எட்டு விநாடிகள் வித்தியாசத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் ஜாதகம்/வாழ்க்கை வெவ்வேறாக இருக்கும்.
Like Nadiamsha theory as to with division of a Nadiamsha in purva and uttara, here also the sub-sub arc of Ascendant is divided into two parts - former part and later part. Former part in male sign indicates Male native while later part in male sign indicates Female native.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மின்னஞ்சல் எண்.20
நந்தகுமார்
கோயமுத்தூர்
வயது 38
   
Dear sir,
Please explain about Athi sooktchmam (அதி சூட்சுமம்) and its nullification.
Thanks and regards,
NNK.

அனைவரும் நினைப்பது சனிபகவான் தீமை மட்டுமே செய்வார் என்று, அது தவறு.  நாம் கொண்டு வந்து இருக்கும் பாவங்களை இப்பிறவியில் குறைக்க அவர் உதவி செய்கிறார். அதே போல் பிறவிப் பிணி நீங்க அவர் அருள் இல்லாமல் முடியாது.

விஞ்ஞான பூர்வமாகப் பார்த்தால் சனி கிரகத்தில் இருந்து வீசும் காந்த அலைகள் அவரவரின் வாழ்வில் பல மாற்றங்களைச் செய்கிறது. அந்த மாற்றங்கள் தீமை அல்லது கெட்டது என நாம் நினைக்கும்படி நடப்பதால் சனி கிரகம் தீமை மட்டுமே செய்யும் என்று வழக்கில் இருக்கிறது. சனி காயத்திரி சொல்லும் போது நம் உடலில் உள்ள அணுக்களின் அதிர்வலைகள் சனி கிரகத்தில் இருந்து வீசும் காநத அலைகளுடன் ஒத்து போவதால், சனியின் தாக்கம் குறையும். இவை அனைத்தும் அதி நுட்ப விஞ்ஞானமும், கணிதமும் சேர்ந்த சூட்சமம்.Blended together. கலப்பது (blending) அல்லது கலந்தது என்னவென்று தெரியுமல்லவா. அந்த ப்ளெண்டிங்தான் அதி சூட்சுமம்.

தீமைகளுக்குப் பரிகாரம், சனீஷ்வரனை வணங்குவதுதான்! அவர் பெட்டி எல்லாம் வாங்க மாட்டார். வாங்குவார் என்றால் எப்படி இருக்கும்?:-)))))
-----------------------------------------------------------------------------------------
மின்னஞ்சல் எண்.21
திருமதி சந்தானகுழலி நாகராஜன்
வசிக்கும் ஊர் பெங்களூர்
குடும்பத் தலைவி
வயது 53
   
Ayya,
kelvi padhil  paguthikku nandri,

After started learning the computer horoscope'
I am following the Nadappu Disai & Bukthis
ACCORDING TO Thirukkanitham,
BUT MY FATHER IN LAW's Jathaga ghanippu are
Pambhu panchangam,
both are having different dasa bukthi,
how can i find the prdictions for the marriage dasa & bukthi
in general to see for  the bride or bride groom
who has a jadhagam according to Pambhu panchangam
thanking u
for the opportunity
Santhanakuzhali Nagarajan

மதுரை, சிவகங்கைப் பகுதிகளில் இந்தப் பாம்புப் (பாம்புப் படம் போட்ட) பஞ்சாங்கம் வெகு பிரசித்தம். அதை வைத்திருக்கிறீர்களா? பழைய பிரதியாக இருந்தாலும் பரவாயில்லை. இல்லை என்றால் புதிய அல்லது பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும். ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் தசா/புத்தை அட்டவனைகள் இருக்கும். அதை வைத்து ஜாதகனின் கெர்ப்பச்செல் இருப்பில் இருந்து, இன்றையத் தேதிவரை உள்ள நடப்பு தசா/புத்தியைக் கணக்கிட்டு வைத்துக் கொள்ளுங்கள். அதைப் பயன் படுத்துங்கள். அந்தக் கணக்கின்படியே பலன்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் மாமனார் கணித்து வைத்துவிட்டுபோய் அல்லது கணித்துக் கொடுத்து விட்டுப்போனாது சரியாக இருக்கும். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

42 comments:

kmr.krishnan said...

என் பிளாகிலும் மிகச் சிறிய வயதிலேயே ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு குழப்பிக் கொள்ளும் இளைஞர்கள் வருகிறார்கள்.ஜோதிடம் மட்டும் பிர‌ச்சனையைத் தீர்க்காது. இறை ந‌ம்பிக்கையுடன் கூடிய‌ பலனில் பற்று வைக்காத தன் முயற்சி மட்டுமே பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று வலியுறுத்தி வருகிறென்.

Alasiam G said...

****ஜாதகத்தின் முதல் பக்கத்தில் பெயர் எழுதியிருப்பார்களே சாமி - அதைவைத்துத் தெரிந்து கொள்ளலாம்!:-))))****

Superb Sir....

R.Puratchimani said...

ஐயா,
இன்றைய பதிவிற்கு நன்றி.

கண்ணதாசன் நான்கு வாசல் என்று கூறி உள்ளார் அவர் திசைகளை குறிப்பிடுகிறார் என்று நினைக்கின்றேன். உண்மையிலேயே நமக்கு 9 வாசல்கள் உள்ளன, அதில் ஒன்று நாம் வந்த வழி, ஒன்று நாம் செல்லப்போகும் வழி என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி.

குரு 5,7,9,11-ல் வரும்பொழுது தான் நன்மை செய்வார் என்று கூறி உள்ளீர்கள். அப்பொழுது 2-ல் வந்தால் கூட சிறப்பான பலன்கள் கிடைக்காதா?.
கேது உச்சம் பெற்றிருந்தாலும் , 5, 12 -ல் இருந்தாலும் மறு பிறவி இல்லை என்றும் எங்கேயோ படித்துள்ளேன். ஐயா உங்கள் கருத்து?

இவன்
இறைத்துளி
இரா. புரட்சிமணி

SP.VR. SUBBAIYA said...

/////kmr.krishnan said...
என் பிளாக்கிலும் மிகச் சிறிய வயதிலேயே ஜாதகத்தை எடுத்து வைத்துக்கொண்டு குழப்பிக் கொள்ளும் இளைஞர்கள் வருகிறார்கள்.ஜோதிடம் மட்டும் பிர‌ச்சனையைத் தீர்க்காது. இறை ந‌ம்பிக்கையுடன் கூடிய‌ பலனில் பற்று வைக்காத தன் முயற்சி மட்டுமே பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று வலியுறுத்தி வருகிறேன்./////

நல்லது. அப்படியே செய்யுங்கள் சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
****ஜாதகத்தின் முதல் பக்கத்தில் பெயர் எழுதியிருப்பார்களே சாமி - அதைவைத்துத் தெரிந்து கொள்ளலாம்!:-))))****
Superb Sir..../////

பின்னே இல்லையாஆலாசியம்?

SP.VR. SUBBAIYA said...

/////R.Puratchimani said...
ஐயா,
இன்றைய பதிவிற்கு நன்றி.
கண்ணதாசன் நான்கு வாசல் என்று கூறி உள்ளார் அவர் திசைகளை குறிப்பிடுகிறார் என்று நினைக்கின்றேன். உண்மையிலேயே நமக்கு 9 வாசல்கள் உள்ளன, அதில் ஒன்று நாம் வந்த வழி, ஒன்று நாம் செல்லப்போகும் வழி என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி.
குரு 5,7,9,11-ல் வரும்பொழுது தான் நன்மை செய்வார் என்று கூறி உள்ளீர்கள். அப்பொழுது 2-ல் வந்தால் கூட சிறப்பான பலன்கள் கிடைக்காதா?.

கிடைக்கும். நான் மிகவும் சிறப்பான இடங்களைக் குறிப்பிட்டுள்ளேன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கேது உச்சம் பெற்றிருந்தாலும் , 5, 12 -ல் இருந்தாலும் மறு பிறவி இல்லை என்றும் எங்கேயோ படித்துள்ளேன். ஐயா உங்கள் கருத்து?
இவன்
இறைத்துளி
இரா. புரட்சிமணி////////

உங்கள் வயதென்ன? முதலில் கிடைத்த பிறவியை அனுபவித்து மகிழுங்கள். அடுத்த பிறவியைப் போகிற காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்!

Jack Sparrow said...

enakku 12th houseil kedu utcham. appo idhu enakku kadaiyasee piravi . he hehe hehehehe..

sury said...

// ஜோதிடம் ஊறுகாயைப் போல எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஊறுகாய் முழு உணவாகாது. அதை மனதில் வையுங்கள். இறையுணர்வுதான் முழுச் சாப்பாடு. அதை மட்டும் சாப்பிடுங்கள். ஊறுகாயைத் தேவைப்படும்போது பயன் படுத்திக்கொள்ளூங்கள்//

இதை விட அழகாக, தெளிவாக, சுருக்கமாக சொல்ல முடியாது.

ஜோதிடத்தை ஒரு இன்டிகேடர் அளவுக்கு எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே போதும்.

பலானி க்ருஹசாரானி ஸூசயந்தி மனீஷினஹ‌
கோவா தாரதம்யஸ்ச ....வேதஸம் வினா...

என்று துவங்கும் ப்ருஹத் ஜாதகம் இதைத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே சொல்கிறது.

எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?

ஊறுகாயைத் தேவைப்படும்பொழுது பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் பாருங்கள்.
அது நூற்றில் ஒரு வார்த்தை.

ஜ்யோதிஷம் ஒரு இன்டிகேடர். அவ்வளவே.

அயரா உழைப்பு, தளரா முயற்சி, ஆழ்ந்த சிந்தனை,
துவளாத தன்னம்பிக்கை ஆகியவையே
வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.

வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது அவரவர் நோக்கைப் பொறுத்தது.

பற்பல சூபர் ஜாதகங்களைக் கொண்டவர்கள் மற்றவர் ஏளனத்திற்கும் நகைக்கும் உள்ளாகி இருப்பதையும்
பார்க்கிறேன். ஏன் ! ஒரு ஜாதகம் எத்தனை தான் நன்றாக இருந்தாலும், வாத்தியார் ஸார் ஒரு இடத்தில்
மிக அழகாக விவரித்திருப்பது போல, அந்தந்த தசா புக்திகளில் தான், அதுவும் அவரவர் கர்ம பலனுக்கேற்ற படி
தான் நடக்கும். இது வெள்ளிடை மலை.

இதை மனதில் கொள்ளாது, ஜாதகத்தையே பரிபூர்ணமாக நம்பி, அரை குறை ஜோதிடர்கள், அவர்கள் சொல்லும்
பரிகாரங்கள் இவற்றையெல்லாம் செய்பவர் எல்லோரையும் பார்த்து ஒன்றே ஒன்று தான் சொல்லவேண்டும்.

என்ன அது ?
ஜாதகம் ஒரு ஊறுகாய்.
வாத்தியார் ஸார் !
சபாஷ்!
69 வயதில் நான் பெற்ற அனுபவத்தை ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டீர்களே !!

சுப்பு ரத்தினம்.
http://pujyasrigurujiviswanath.blogspot.com

SP.VR. SUBBAIYA said...

//////Jack Sparrow said...
enakku 12th houseil kedu utcham. appo idhu enakku kadaiyasee piravi . he hehe hehehehe..////////

:-))))))))))))))))))))))))))))))))))))))

SP.VR. SUBBAIYA said...

/////sury said...
// ஜோதிடம் ஊறுகாயைப் போல எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். ஊறுகாய் முழு உணவாகாது. அதை மனதில் வையுங்கள். இறையுணர்வுதான் முழுச் சாப்பாடு. அதை மட்டும் சாப்பிடுங்கள். ஊறுகாயைத் தேவைப்படும்போது பயன் படுத்திக்கொள்ளூங்கள்//
இதை விட அழகாக, தெளிவாக, சுருக்கமாக சொல்ல முடியாது.
ஜோதிடத்தை ஒரு இன்டிகேடர் அளவுக்கு எடுத்துக்கொண்டு செயல்பட்டால் மட்டுமே போதும்.
பலானி க்ருஹசாரானி ஸூசயந்தி மனீஷினஹ‌
கோவா தாரதம்யஸ்ச ....வேதஸம் வினா...
என்று துவங்கும் ப்ருஹத் ஜாதகம் இதைத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே சொல்கிறது.
எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?
ஊறுகாயைத் தேவைப்படும்பொழுது பயன் படுத்திக்கொள்ளுங்கள் என்று சொன்னீர்கள் பாருங்கள்.
அது நூற்றில் ஒரு வார்த்தை.
ஜ்யோதிஷம் ஒரு இன்டிகேடர். அவ்வளவே.
அயரா உழைப்பு, தளரா முயற்சி, ஆழ்ந்த சிந்தனை,
துவளாத தன்னம்பிக்கை ஆகியவையே
வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.
வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது அவரவர் நோக்கைப் பொறுத்தது.
பற்பல சூப்பர் ஜாதகங்களைக் கொண்டவர்கள் மற்றவர் ஏளனத்திற்கும் நகைக்கும் உள்ளாகி இருப்பதையும்
பார்க்கிறேன். ஏன் ! ஒரு ஜாதகம் எத்தனை தான் நன்றாக இருந்தாலும், வாத்தியார் ஸார் ஒரு இடத்தில்
மிக அழகாக விவரித்திருப்பது போல, அந்தந்த தசா புக்திகளில் தான், அதுவும் அவரவர் கர்ம பலனுக்கேற்ற படிதான் நடக்கும். இது வெள்ளிடை மலை.
இதை மனதில் கொள்ளாது, ஜாதகத்தையே பரிபூர்ணமாக நம்பி, அரை குறை ஜோதிடர்கள், அவர்கள் சொல்லும் பரிகாரங்கள் இவற்றையெல்லாம் செய்பவர் எல்லோரையும் பார்த்து ஒன்றே ஒன்று தான் சொல்லவேண்டும்.
என்ன அது ?
ஜாதகம் ஒரு ஊறுகாய்.
வாத்தியார் ஸார் !
சபாஷ்!
69 வயதில் நான் பெற்ற அனுபவத்தை ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டீர்களே !!
சுப்பு ரத்தினம். http://pujyasrigurujiviswanath.blogspot.com ////////

உங்களுடைய பாராட்டுக்கள் எனக்கு எப்போதுமே ஆசீர்வாதம்! நன்றி சார். நீண்ட பின்னூட்டத்திற்கும் நன்றி சார்!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Today Questions and Answers are different.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Ram said...

thanks for the answer sir, keep going, past is no more, furture is unknown, enjoy the

M. Thiruvel Murugan said...

ஐயா வணக்கம்...!

இன்றைய கேள்வி-பதில்களில் அதி சூட்சுமம் பற்றிய தங்களின் விளக்கம் மிக அருமையாகவும் எனக்கு உபயோகமாகவும் இருந்தது. மிக்க நன்றிகள்...

தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்

kannan said...

சுப்பு ரத்தினம் ஐயாவிற்கு
முதற்கண் வணக்கத்துடன் கூடிய நன்றி

வாத்தியாரின் வகுப்பறையில் உள்ள பாடத்தில் மிகவம் சரியாக குறிப்பு எடுத்து தந்தமைக்கு

{ தண்ணீரில் விழுந்தவன் சிறு கட்டை கிடைத்தாலும் அதனை பிடித்து தப்பிக்க பார்ப்பது மனித சுபாபம் தானே!
தாங்கள் கூறும் மன பக்குவத்தை அடைய ஆசிர்வதியுங்கள் ஐயாக்களே! }

எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?

kannan said...

சுப்பு ரத்தினம் ஐயாவிற்கு
முதற்கண் வணக்கத்துடன் கூடிய நன்றி

வாத்தியாரின் வகுப்பறையில் உள்ள பாடத்தில் மிகவம் சரியாக குறிப்பு எடுத்து தந்தமைக்கு

{ தண்ணீரில் விழுந்தவன் சிறு கட்டை கிடைத்தாலும் அதனை பிடித்து தப்பிக்க பார்ப்பது மனித சுபாபம் தானே!
தாங்கள் கூறும் மன பக்குவத்தை அடைய ஆசிர்வதியுங்கள் ஐயாக்களே! }

எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?

இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும்.

INDIA 2121 said...

கேள்வி கேட்பது வெகு சுலபம்.
ஆனால் பதில் சொல்வது கடினம்.
ஆனால் உங்கள் பதில்கள் ஓவ்வொன்றும் சும்மா நச்சுன்னு இருக்கு. நன்றி!

sundinesh1 said...

அய்யா வணக்கம்
நான் 5 கேள்விகள் கொண்ட ஒரு ஈமெயில் அனுப்பி உள்ளேன். எல்லாம் பொதுவான கேள்விகள் தான். அதனால்
அதற்க்கு பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.இங்ஙனம்
S.Dinesh

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
நல்ல தகவல்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-11

R.Puratchimani said...

SP.VR. SUBBAIYA said...
உங்கள் வயதென்ன? முதலில் கிடைத்த பிறவியை அனுபவித்து மகிழுங்கள். அடுத்த பிறவியைப் போகிற காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்!/////

ஐயா, தங்களுடைய பதிலுக்கும் அறிவுரைக்கும் நன்றி. என்னுடைய அகவை - சனி தன்னுடைய முதல் சுற்றை முடிக்க இன்னும் ஒரு வருடம் உள்ள நிலை.

கேந்திரம் எனப்படும் சதுர வீடுகளுக்கு உரிய இருவர்களும் வீரிய மிகுதியால் அடி வாங்க, சுக வாழ்விற்கு அதிபதியும் உரியவனும் விரையமாகி சிங்கத்தின் குகைக்குள் சிக்க வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா ஐயா? இந்தநிலையிலும் 337-ன் மூலம் வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா ஐயா?

sury said...

ல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?

இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும்.

// எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?

இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும். //

கண்ணன் அவர்களுக்கு பதில் எழுதுவது குறிப்பாக, அல்ல, பொதுவாக எழுதுகிறேன். தவறு இருந்தால்
மன்னித்தருள வேண்டும்.

ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் பாடல்கள் தமிழ் இலக்கியத்தினுள் விரவி இருக்கின்றன.

இறைவனை நாடியவருக்கு கோள் என்ன செய்ய இயலும் என்கிறது கந்தர் அலங்காரம்.

நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!

செகத்தை எல்லம் அணு அளவும் சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை; அணுத் திரனை எல்லாம்
மகத்துவமாப் பிரம்மாண்டம் ஆகச் செய்யும்
வல்லவா ! நீ நினைந்தவாறே எல்லாம்.

என தாயுமானவர் பாடுவார்.
subburathinam. ( contd)

sury said...

எல்லாவற்றிற்கும் மேலே ஊழின் வலிமை பற்றி வள்ளுவர் சொல்லாததா !

பல்லக்கு தூக்குபவனுக்கும் பல்லக்கில் சவாரி செய்பவனுக்கும் என்னென்ன வித்தியாசம் ?
அவனவன் வினைப்பயனே ! என்பார் வள்ளுவர்.

இந்த வினைப்பயனைத் தான் நமது ஆசிரியர் ஜாதகத்தில் அஞ்சாவது இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம்
சொல்கிறது என்கிறார்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஏதோ ஒரு ஜோதிடன் நடுவிலே வந்து ஒரு சின்ன ஆபரேஷன் மாதிரி நான் ஒரு பரிகாரம் செய்யறேன். எல்லாம்
சரியாயிடும் அப்படின்னு சொல்லும்போது, எனக்கு எப்படி ரீ ஆக்ட் செய்வதென்றே தெரிவதில்லை. அன்னைக்கு
சோறு போடாதவன் அன்னதானம் செய்தால், செய்த பாபம் போய்விடுமா என்ன ?
அதனால்,
திரும்பவும், அதே வரி தான். ஜாதகம் ஒரு ஊறுகாய். ஊறுகாயை மட்டும் சாப்பிட முடியுமா ? என்கிறார்
நம்ம வாத்தியார். மத்த கருமங்களையும் சேர்த்து, சிந்தித்து செயல்படு என்று சொல்கிறார்.
அவனவன் தன் ட்யூடியை செய்யட்டும். உனது கடமைகளை, கருமங்களை ச் செய்,. விளைவுகளை என்னிடம்
விட்டு விடு என்றான் கண்ணன்.

நீங்களும் கண்ணன் தானே !

சுப்பு ரத்தினம்.
http://pujyasrigurujiviswanath.blogspot.com

Shyam Prasad said...

மிக்க நன்றி

Arul Murugan. S said...

///உங்கள் மாமனார் கணித்து கொடுத்து விட்டுப்போனது சரியாக இருக்கும். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை///

சார், பாம்பு பஞ்சாங்கபடி எனது பிறந்த நேரத்திற்கான சரியான அயனாம்சம் 24-31-13 என்பது சரியா ? இது திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கபடி கணிக்கப்பட்டது(15.7.1984, 5:20 pm, madurai)

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Today Questions and Answers are different.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்.

SP.VR. SUBBAIYA said...

///////Ram said...
thanks for the answer sir, keep going, past is no more, furture is unknown, enjoy the present!//////

நல்லது. நன்றி ராம்!

SP.VR. SUBBAIYA said...

////M. Thiruvel Murugan said...
ஐயா வணக்கம்...!
இன்றைய கேள்வி-பதில்களில் அதி சூட்சுமம் பற்றிய தங்களின் விளக்கம் மிக அருமையாகவும் எனக்கு உபயோகமாகவும் இருந்தது. மிக்க நன்றிகள்...
தங்கள் அன்பு மாணவன்
மா. திருவேல் முருகன்////

நல்லது. நன்றி முருகன்!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
சுப்பு ரத்தினம் ஐயாவிற்கு
முதற்கண் வணக்கத்துடன் கூடிய நன்றி
வாத்தியாரின் வகுப்பறையில் உள்ள பாடத்தில் மிகவம் சரியாக குறிப்பு எடுத்து தந்தமைக்கு
{ தண்ணீரில் விழுந்தவன் சிறு கட்டை கிடைத்தாலும் அதனை பிடித்து தப்பிக்க பார்ப்பது மனித சுபாபம் தானே! தாங்கள் கூறும் மன பக்குவத்தை அடைய ஆசிர்வதியுங்கள் ஐயாக்களே! }
எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?///////

உணர்ந்து கொண்டமைக்கு நன்றி!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
சுப்பு ரத்தினம் ஐயாவிற்கு
முதற்கண் வணக்கத்துடன் கூடிய நன்றி
வாத்தியாரின் வகுப்பறையில் உள்ள பாடத்தில் மிகவம் சரியாக குறிப்பு எடுத்து தந்தமைக்கு
{ தண்ணீரில் விழுந்தவன் சிறு கட்டை கிடைத்தாலும் அதனை பிடித்து தப்பிக்க பார்ப்பது மனித சுபாபம் தானே!தாங்கள் கூறும் மன பக்குவத்தை அடைய ஆசிர்வதியுங்கள் ஐயாக்களே! }
எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?
இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும்./////////

நிறைய இருக்கின்றன. பட்டினத்தார் நிறைய சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அடுத்தமுறை இந்தியா வரும்போது பட்டினத்தார் பாடல் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அதே போல சித்தர் பாடல்களும் அருமையாக இருக்கும்!

SP.VR. SUBBAIYA said...

////INDIA 2121 said...
கேள்வி கேட்பது வெகு சுலபம்.
ஆனால் பதில் சொல்வது கடினம்.
ஆனால் உங்கள் பதில்கள் ஓவ்வொன்றும் சும்மா நச்சுன்னு இருக்கு. நன்றி!////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBAIYA said...

/////sundinesh1 said...
அய்யா வணக்கம்
நான் 5 கேள்விகள் கொண்ட ஒரு ஈமெயில் அனுப்பி உள்ளேன். எல்லாம் பொதுவான கேள்விகள் தான். அதனால் அதற்க்கு பதில் அளிக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
இங்ஙனம்
S.Dinesh/////

நிறைய மின்னஞ்சல்கள் வந்துள்ளன. வரிசைப்படி அனைத்திற்கும் பதில் வரும்!

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
நல்ல தகவல்களைத் தெரிந்துக் கொள்ள முடிந்தது
நன்றி
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

////R.Puratchimani said...
SP.VR. SUBBAIYA said...
உங்கள் வயதென்ன? முதலில் கிடைத்த பிறவியை அனுபவித்து மகிழுங்கள். அடுத்த பிறவியைப் போகிற காலத்தில் பார்த்துக்கொள்ளலாம்!/////
ஐயா, தங்களுடைய பதிலுக்கும் அறிவுரைக்கும் நன்றி. என்னுடைய அகவை - சனி தன்னுடைய முதல் சுற்றை முடிக்க இன்னும் ஒரு வருடம் உள்ள நிலை.
கேந்திரம் எனப்படும் சதுர வீடுகளுக்கு உரிய இருவர்களும் வீரிய மிகுதியால் அடி வாங்க, சுக வாழ்விற்கு அதிபதியும் உரியவனும் விரையமாகி சிங்கத்தின் குகைக்குள் சிக்க வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா ஐயா? இந்தநிலையிலும் 337-ன் மூலம் வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா ஐயா?//////

எல்லாவற்றிற்கும் மனசுதான் காரணம். எந்த நிலையிலும் சந்தோஷமாக இருக்க முடியும்!

SP.VR. SUBBAIYA said...

//////sury said...
எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?
இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும்.
// எல்லா க்ருஹங்களுமே( அவற்றின் அமைப்பும் சுழற்சியும் ) மனித வர்க்கத்திற்கு ஒரு சூசகத்தைத் தான்
சொல்கின்றன. இப்படித்தான் நடக்கும் என்று தவறில்லாமல் சொல்வது ப்ரும்மனைத்தவிர வேறு எவருக்குச்
சாத்தியம்?
இதனை விட தெளிவாக உணர்த்த தாய் மொழியாம் தமிழில் வேறு வாக்கு உண்டா என்பதனை நன்கு கற்றறிந்த மகான்கள் தான் கூறவேண்டும். //
கண்ணன் அவர்களுக்கு பதில் எழுதுவது குறிப்பாக, அல்ல, பொதுவாக எழுதுகிறேன். தவறு இருந்தால்
மன்னித்தருள வேண்டும்.
ஒன்றல்ல, இரண்டல்ல, ஓராயிரம் பாடல்கள் தமிழ் இலக்கியத்தினுள் விரவி இருக்கின்றன.
இறைவனை நாடியவருக்கு கோள் என்ன செய்ய இயலும் என்கிறது கந்தர் அலங்காரம்.
நாள் என் செயும்? வினை தான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடுங் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே!
செகத்தை எல்லம் அணு அளவும் சிதறா வண்ணம்
சேர்த்து அணுவில் வைப்பை; அணுத் திரனை எல்லாம்
மகத்துவமாப் பிரம்மாண்டம் ஆகச் செய்யும்
வல்லவா ! நீ நினைந்தவாறே எல்லாம்.
என தாயுமானவர் பாடுவார்.
subburathinam. ( contd)//////

நல்லது. நன்றி சார். நிறையச் சொல்லுங்கள். ரத்தினமாகச் சொல்கிறீர்கள்.இன்னும் சொல்லுங்கள். கேட்டுக்கொள்கிறோம்!

SP.VR. SUBBAIYA said...

sury said...
எல்லாவற்றிற்கும் மேலே ஊழின் வலிமை பற்றி வள்ளுவர் சொல்லாததா !
பல்லக்கு தூக்குபவனுக்கும் பல்லக்கில் சவாரி செய்பவனுக்கும் என்னென்ன வித்தியாசம் ?
அவனவன் வினைப்பயனே ! என்பார் வள்ளுவர்.
இந்த வினைப்பயனைத் தான் நமது ஆசிரியர் ஜாதகத்தில் அஞ்சாவது இடமாகிய பூர்வ புண்ணிய ஸ்தானம்
சொல்கிறது என்கிறார்.
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஏதோ ஒரு ஜோதிடன் நடுவிலே வந்து ஒரு சின்ன ஆபரேஷன் மாதிரி நான் ஒரு பரிகாரம் செய்யறேன். எல்லாம் சரியாயிடும் அப்படின்னு சொல்லும்போது, எனக்கு எப்படி ரீ ஆக்ட் செய்வதென்றே தெரிவதில்லை. அன்னைக்கு சோறு போடாதவன் அன்னதானம் செய்தால், செய்த பாபம் போய்விடுமா என்ன ?
அதனால், திரும்பவும், அதே வரி தான். ஜாதகம் ஒரு ஊறுகாய். ஊறுகாயை மட்டும் சாப்பிட முடியுமா ? என்கிறார் நம்ம வாத்தியார். மத்த கருமங்களையும் சேர்த்து, சிந்தித்து செயல்படு என்று சொல்கிறார்.
அவனவன் தன் ட்யூடியை செய்யட்டும். உனது கடமைகளை, கருமங்களைச் செய்,. விளைவுகளை என்னிடம்
விட்டு விடு என்றான் கண்ணன்.
நீங்களும் கண்ணன் தானே !
சுப்பு ரத்தினம்.
http://pujyasrigurujiviswanath.blogspot.com///////

அசத்தலான பதில். நன்றி சார்! உங்களுடைய நீண்ட பின்னூட்டத்திற்கு மீண்டும் நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////Shyam Prasad said...
மிக்க நன்றி.////

நன்றி ஷியாம்!

SP.VR. SUBBAIYA said...

/////Arul Murugan. S said...
///உங்கள் மாமனார் கணித்து கொடுத்து விட்டுப்போனது சரியாக இருக்கும். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை///
சார், பாம்பு பஞ்சாங்கபடி எனது பிறந்த நேரத்திற்கான சரியான அயனாம்சம் 24-31-13 என்பது சரியா ? இது திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கபடி கணிக்கப்பட்டது(15.7.1984, 5:20 pm, madurai)/////

சரிதான் சாமி!

kannan said...

சுப்பு ரத்தினம் ஐயா!
தாங்கள் பெரிய மனது பண்ணி இச்சிறு பாலகனை மன்னித்தருள வேண்டும்.
தாங்கள் பெரிய மனிதன், அடியவனோ இன்னும் கல்யாணம் ஆகாத பிரமச்சாரி

தங்களின் உள்மனதில் இருந்து (மன்னிப்பு) இப்படி ஒரு வாக்கு வந்தமைக்கு அடியவன் காரணம் ஆனதை கண்டு மனவேதனை ஐயா .

அடியவன் பொருள் கொண்ட விதம் வேறு,
ஐயா! தங்களை குறைகூறும் அருகதை அணு அளவிற்கும் கூட இப்பாலகனுக்கு கிடையாது ஐயா!

உண்மையிலே அடியவன் இன்னும் பல்கலைகழக மாணவன் தான் என்பதனால் பாடத்தில் குறிப்பு எடுக்கும் பழக்கம் வாத்தியாரின் வகுப்பரையிளையும் தொடர்கின்றது ஐயா அவ்வளவ் தான் ஐயா

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

கண்ணன் அவர்களுக்கு பதில் எழுதுவது குறிப்பாக, அல்ல, பொதுவாக எழுதுகிறேன். தவறு இருந்தால்
மன்னித்தருள வேண்டும்.

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
சுப்பு ரத்தினம் ஐயா!
தாங்கள் பெரிய மனது பண்ணி இச்சிறு பாலகனை மன்னித்தருள வேண்டும்.
தாங்கள் பெரிய மனிதர், அடியவனோ இன்னும் கல்யாணம் ஆகாத பிரமச்சாரி
தங்களின் உள்மனதில் இருந்து (மன்னிப்பு) இப்படி ஒரு வாக்கு வந்தமைக்கு அடியவன் காரணம் ஆனதை கண்டு மனவேதனை ஐயா .
அடியவன் பொருள் கொண்ட விதம் வேறு,
ஐயா! தங்களை குறைகூறும் அருகதை அணு அளவிற்கும் கூட இப்பாலகனுக்கு கிடையாது ஐயா!
உண்மையிலே அடியவன் இன்னும் பல்கலைகழக மாணவன் தான் என்பதனால் பாடத்தில் குறிப்பு எடுக்கும் பழக்கம் வாத்தியாரின் வகுப்பறையிலும் தொடர்கின்றது ஐயா அவ்வளவுதான் ஐயா////

நல்லது. சுப்புரத்தினம் அய்யா மிகவும் உயர்ந்த பண்புகள் நிறைந்தவர். 13 வலைப்பூக்களை உருவாக்கிப் பல பதிவுகளை வலை ஏற்றிக்கொண்டிருப்பவர். நமது வகுப்பறைக்கு வந்து செல்வதற்கு அவருக்கு நேரம் கிடைப்பதே பெரிய விஷயம். ஆகவே அவருடைய நேரத்தை வீணாக்காமல், அவருடைய வார்த்தைகளை/ஞானத்தை நாம் பயன் படுத்திக்கொள்வோம்!

யோகம் said...

மு. பாரதிதாசன், திருக்கழுக்குன்றம்
அய்யா நான் தங்களது பாடங்களை பதிவிறக்கம் செய்து படித்துவருகிறேன், அதில் சில சந்தேகங்கள்...

12ம் அதிபதி 12இல் மறைந்தால் என்ன பலன்?

தனுசு லக்னதிற்கு சுக்ரன் 6 & 11 ம் அதிபதியாக அமைகிறது. தசா புக்தி பலன் எப்படி அமையும்? 6ம் பாவ பலனா அல்லது 11ம் பாவ பலனா?

SP.VR. SUBBAIYA said...

யோகம் said...
மு. பாரதிதாசன், திருக்கழுக்குன்றம்
அய்யா நான் தங்களது பாடங்களை பதிவிறக்கம் செய்து படித்துவருகிறேன், அதில் சில சந்தேகங்கள்...
12ம் அதிபதி 12இல் மறைந்தால் என்ன பலன்?//////

எந்தப் பன்னிரெண்டில் மறைந்தால்? லக்கினத்திற்குப் பன்னிரெண்டிலா? அல்லது 12ற்குப் பன்னிரெண்டிலா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
தனுசு லக்னதிற்கு சுக்ரன் 6 & 11 ம் அதிபதியாக அமைகிறது. தசா புக்தி பலன் எப்படி அமையும்? 6ம் பாவ பலனா அல்லது 11ம் பாவ பலனா?

mixed results
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

யோகம் said...

லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்?

SP.VR. SUBBAIYA said...

//////யோகம் said...
லக்கினத்திற்குப் பன்னிரெண்டில்? ///////

12ஆம் அதிபதி அந்த வீட்டில் இருந்தால், அது அவருக்கு சொந்த வீடு. அந்த வீட்டிற்கு இயற்கையாக உரிய தீமைகளில் இருந்து ஜாதகனைக் காப்பார்!