மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.8.10

முன்னுக்கு வாடா கண்ணா!

இன்று இந்திய சுதந்திரத்திற்கு 63 வயதுகள் நிறைவு பெற்று 
64வது வயது துவங்குகிறது. அனைவரும் மகிழ்ச்சி கொள்வோம். 
சுதந்திரத் தியாகிகளை நினைவு கூர்வோம். 
கிடைத்த சுதந்திரத்தைப் பேணிக்காப்போம். 
போற்றி மகிழ்வோம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++நமது வகுப்பறை சீனியர் மாணவர் 
தஞ்சாவூர் திரு. கே.முத்துராம கிருஷ்ணன் (KMRK)
அவர்களின் எழில்மிகு தோற்றம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
முன்னுக்கு வாடா கண்ணா!

முன்னுக்கு வா என்று அந்தக் காலத்தில் சொல்பவர்கள் இருவர்.
ஒருவர் குதிரை வண்டிக்காரர். இன்னொருவர் பள்ளிக்கூட வாத்தியார்.
குதிரை வண்டிக்காரர், வண்டியின் பாரத்தை சமன் செய்வதற்காக அமர்ந்திருப்பவர் களை முன்னுக்கு வரச் சொல்வார். அதுபோல வகுப்பறையில்  வாத்தியார், தன் மாணவர்களின் மேல் உள்ள
அன்பின் மிகுதியாலும், பாடத்தை நன்றாகக் கவனிக்கும் பொருட்டும், வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும்
முன்னுக்கு வரச் சொல்வார்.

இன்று  நமது வகுப்பறை சீனியர் மாணாவர் திருவாளர்.MRK என்றழைக்கப்பெறும் தஞ்சை முத்துராமகிருஷ்ணர்
தன்னுடைய பள்ளி அனுபவத்தைத் கட்டுரையாக்கிக் கொடுத்துள்ளார். வலை ஏற்றி உள்ளேன். அனைவரும் படித்து மகிழுங்கள். பின்னூட்டம் மூலம் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++
Over to the posting!
+++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியார் சொல்ல வேண்டும் என்றே காத்திருந்தேன். நானாக எழுதக் கொஞ்சம் கூச்ச‌மாக‌ இருந்த‌து. திரு.சுப்புரத்தினமும், திரு.தஞ்சாவூராரும் என்னைப் ப‌ற்றி அறிந்த‌ மூத்த‌வ‌ர்க‌ள். அவர்கள் முன்னிலையில் சுயபுராண காலட்சேபம் செய்யத் தயங்கினேன். வாத்தியார் நன்கு 'எடிட்' செய்து என் மானத்தைக் காப்பாற்றிவிடுவார் என்ற நம்பிக்கையில் எழுதத் துணிந்தேன்.

'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே'என்பது தெரிந்த பழமொழி. இந்தப் பழமொழியில் 'பெண்' என்பதற்கு பதில் 'ஆசிரியர்'  என்று மாற்றி வாசிக்க வேண்டும்.

ஓர் ஆசிரியர் நினைத்தால் வெறும் களிமண்ணையும் பிசைந்து உருவமாக்கி அதனுள் உயிர் மூச்சை ஊதி ஆளாக்கி, முன்னேற்றப் பாதையில் நடமாடவும் விட்டு விடுவார். அதற்கு நானே ஒரு உதாரணம்.

ஒரு மாணவனைப் பாராட்டிப் பாராட்டிப் பேனைப் பெருமாளாக மாற்றிவிடும் திறமை ஒரு நல்லாசிரியருக்கு உண்டு.என்னை அப்படி உரு மாற்றிய ஆசிரியரைப் பற்றியும், அவர் சம்பந்தப்பட்ட அந்த நாளும் நினைவுக்கு வந்தது.

அவருடைய திருப்பெயர் உயர்திரு கோபாலகிருஷ்ணைய்யர்.
சேலத்தில் நான் 7ம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு அவர் அறிவியல்
பாடம் எடுத்தார். அப்போது நான் கடைசி பெஞ்சு மாணவன்.

வீட்டுக்குக் கடைசிப் பிள்ளை என்பதால் எல்லோருக்கும் செல்லம். என் அம்மாவிற்கு நான் நன்றாகச் சாப்பிட வேண்டும். அது ஒன்றுதான்
அன்றைய தேதியில் அவருடைய கவலை. ஓவர் ஈட்டிங் செய்து ஊளைச் சதையும், மழுங்கிய மூளையுமாக நானும் பள்ளி சென்று வந்து கொண்டிருந்தேன். .படிப்பில் ஆர்வம் மிகவும் குறைவு.

திருப்பு முனையான அந்த நாளூம் வந்தது.  இந்த இடத்தில் திரு கோபாலகிருஷ்ணைய்யர் பற்றி ஒரு சில வார்த்தைகள் சொல்ல
வேண்டும். திரு அய்யர் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில்
சிப்பாயாகப் பணியாற்றியவர் என்று கூறக் கேட்டுள்ளேன். அவர்
தலையில் குண்டு உரசிச் சென்றதால், சில சமயஙக‌ளில் கட்டுப்படுத்த முடியாத அளவு கோபப் படுவார். சீக்கிரமாகவே மனம் மாறி வருத்தம் தெரிவிப்பார். சிறிது நேரம் கண் மூடி தியானத்தில் இருப்பது போல் அமர்வார்.உடனே மகிழ்ச்சியான மனிதராக வெளிப்படுவார்.
மனைவியை இளம் வயதில் காலனுக்குப் பறி கொடுத்தவர். தனியாக
ஒரு சிறு அறையில் தானே சமைத்து சாப்பிட்டுக் கொண்டு வாழ்ந்து
வந்தார். எந்த நேரமும் அவர் தனி அறைக்குச் சென்று பாடம்
கேட்கலாம். பணம் கேட்காத இலவச டியூசன்!

அன்று வழக்கம் போல நான் கடைசி பெஞ்சில் அமர்ந்து, நான் உண்ட மயக்கத்தில் இருந்தேன். திரு அய்யர் அவர்கள் 'ஆக்ஸிஜன்' என்ற பாடம் நடத்தத் துவங்கினார். வகுப்பைப் பார்த்து திரு அய்யர் கேட்டார்:

"தணலைத் தண்ணீர் விடாமலும், மணல் தூவாமலும் அணைக்கும் வழி என்ன?"

ஒவ்வொரு மாண‌வனாக எழுந்து விழிக்கிறார்கள். ஒரு சிலர் 'தண்ணீர் விடலாம்' என்கிறார்கள். சிலர் 'மணல்'என்கிறார்கள்.

"அதுதான் கூடாது என்கிறேனே"என்று ஆசிரியர் மிரட்டுகிறார்.

என் முறை வந்தது.

”தணல் மேல் ஒரு சட்டியைக் கவிழ்த்து வைத்து விட்டால், தணல் தானாக அவிந்துவிடும் சார்!' என்றேன்.

"இது எப்படியடா உனக்குத் தெரிந்தது?" ஆசிரியர் வியப்புடன் கேட்டார்.

"எங்கள் வீட்டில் என் அம்மா குளிக்க விறகு அடுப்பில் வென்னீர் போட்டு முடித்தவுடன் விறகை வெளியில் இழுத்துத் தணலைத் தட்டி அதன் மீது சட்டியைக் கவிழ்த்து வைப்பார்கள். அந்தத் தணல் கரியாக மாறிவிடும். அதனை மீண்டும் கரி அடுப்பில் பயன் படுத்துவார்கள்" என்று அவருக்குப் பதிலைச் சொன்னேன்.
.
"சபாஷ்! ஏன் தணல் அவ்வாறு அவிந்து போகிறது?" என்று அவர் மீண்டும் கேட்டார்.

"காற்று கிடைக்காததால்.." என்றேன்.

"பலே! பலே!அதுதான் இன்றைய பாடம். நெருப்பு எரிவது, காற்றில் உள்ள ஆக்ஸிஜனால். புரிகிறதா?"என்றார் அய்யர்.

மேலும் சொன்னார்: "நீராவியின் ஆற்றலைக் கண்டுபிடிக்கும் போதும், வீட்டில் அம்மா தேனீர் போடக் கெட்டிலில் வென்னீர் போட்டதையும், கெட்டில் மூடி நீராவியால் தூக்கப்படுவதையும் கண்டு ஆய்வில் ஈடு பட்டார் ஜேம்ஸ் வாட். இதோ நம் வகுப்பிலும் ஒரு ஜூனியர் ஜேம்ஸ் வாட். வாடா! நீ ஏனடா பின்னால் உட்காருகிறாய்? முன்னுக்கு வாடா!" என்று பலவாறு புகழ்ந்தார்.

அன்று முதல் படிப்பதில் ஊக்கம் பிறந்தது. அய்யரிடம் நல்லபெயர் எடுக்கப் படிக்க ஆரம்பித்தேன். ஏதோ இந்த அளவாவது முன்னேற்றம் கண்டேன்.

என் காதுகளில் எப்போதும் அவருடைய "முன்னுக்கு வாடா!" என்ற அவரின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. என்னை ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறது. இதைப் பலமுறை பலரிடமும் சொல்லி மகிழ்ந்து இருக்கிறேன். என் பணி ஓய்வு நாள் அன்று பிரிவு உபசார நிகழ்ச்சியிலும் நனறியுடன் அதை நினைவு கூர்ந்தேன்.

நல்லாசிரியர்கள் அனைவருக்கும் இப்பதிவைக் காணிக்கை ஆக்குகிறேன்.

வாத்தியார்கள் அனைவரும் வாழ்க!

குரு பிரம்மா! குரு விஷ்ணு! குருதேவோ மஹேஷ்வர!
- ஆக்கம்: தஞ்சை முத்துராமகிருஷ்ணன்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அடுத்து வருவது இரண்டாவது பதிவு (சுதந்திர தின ஸ்பெஷல்)நமது வகுப்பறை மாணவர் சீதாராமன் கண்ணனின் 
எழில்மிகு தோற்றம்.
இன்று அவருடைய ஆக்கம் ஒன்று அரங்கேறியுள்ளது. 
படித்துப்பாருங்கள்
சீதாராமன் கண்ணன்
வயது 31
சொந்த ஊர்: வாசுதேவ நல்லூர், நெல்லை மாவட்டம்
வசிக்கும் ஊர்: தோஹா, கத்தார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சைத் தொட்ட கதை!

ஓ...வெற்றிக்கு இதுதான் காரணமா?

ஒரு நகரத்திற்கு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனை களுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்த மானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான் ; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப் பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும், திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
----------------------------------------------------------------
நட்புடன்,,
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!
------------------------------------------------------
ஆக்கம்: சீதாராமன் கண்ணன், கத்தார்
_________________________________________

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

45 comments:

kmr.krishnan said...

மிக்க நன்றி அய்யா! சில சொற்களை அழகாக மாற்றியுள்ளீர்கள். அதனால்
கட்டுரை சீரான உருவத்தைப் பெற்றுவிட்டது.கத்தார் சீதாராமன் Kannan பதிவும் மிக நன்றாக உள்ளது. திரு சுப்புரத்தினம் என்னைப் பதிவில் பார்த்த பின்னராவது தொடர்பு கொள்வார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
HAPPY INDEPENDENCE DAY TO ALL OF YOU! I earnestly request every youngster to visit the site of Thiru V.Gopalan and read about Tamilnadu freedom fighters.

tamilnadufreedomfighters-Thanjavooraan blogspot.com

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா! அற்புதம்.
முதலில் நான் கற்பனை செய்திருந்த படி திருவாளர். கிருஷ்ணன் சாரும், கண்ணனும் அப்படியே புகைப்படத்தில் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர்கள் எழுத்துக்கள் மூலம் நான் கணித்தது அப்படியே இருந்தது. இறைவனுக்கு நன்றி.
தன்முனைப்புத் தரும் பாராட்டுத் தான் ஒரு மனிதனை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் முதல் படி அதிலும் ஆசிரியர்களின் பங்கு தான் மிக மிக முக்கியம் என்பது சத்தியம் உண்மை. அப்படிப்பட்ட குருவை நாம் பெற்றால் அது நம் பாக்கியம். எதிலும் ஒரு நேர்மறையான பார்வையும், முயன்றால் எல்லோராலும் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அதை நம்மோட இருப்பவர்களுக்கு கொடுத்தால் அனைவரும் சாதிக்கலாம். உங்களை உயர்த்திய குருவின் மேல் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் இன்னும் உங்களை ஒளிபெறச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.

அடுத்து கண்ணன், உங்கள் கற்பனையுமதனால் பிறந்த கதை கூறும் கருத்தும் அற்புதம் அற்புதம்.
"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு."
"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு." வரும் தீமையைக் கண்டு துவளாமல் அதை துடைத்தொழிக்க உழைத்தால் வெற்றி உறுதி. அருமை.

Alasiam G said...

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.

ஐயா! இன்னும் ஏன்?
சுதந்திர மலர் சூரியனைக் காணாது
இருட்டறையில் குடிகொண்டுள்ளது?
வண்ண மலரென்றாலும்,
பொய்யாய் பூத்திருக்கிறதே அது
மெய்யாய் பூத்து மீதினிலே சிறக்க
அருள்வாய் இறைவா! என்று வேண்டிக் கொள்கிறன்!

நன்றிகள் குருவே!

kannan said...

அதிகாலை வணக்கம் வாத்தியார் ஐயா!

" எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் "!

என்பது சான்றோர்கள் வாக்கு

வாத்தியார்கள் அனைவரும் வாழ்க! அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.

குரு பிரம்மா! குரு விஷ்ணு! குருதேவோ மஹேஷ்வர!

ஆரம்ப பள்ளி காலம் முதல் இன்றோடு அல்லாது எதிர்காலதிலைலும் எம்மோடு
"ஞானம் என்னும் கல்வி பாடகசாலையில் கல்வி பாடம் போதிக்க வரும் இருபால் ஆசிரியர்கள் " மற்றும் எம்முடன் கல்வி பயில வரும்
" சகல மாணவ மாணவியருக்கு" எமது ஆத்மார்த்தமான சுதந்திரதின நல்வாழ்த்துகள்

இந்த ஆடி மாதத்தில்
"நற்சிந்தனை என்னும் புதிய விதைகளை விதைப்போமாக"

ஜெய் ஹிந்த்! பாரத மாதாவிற்கு ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் !

thirunarayanan said...

திரு முத்துராமகிருஸ்ணனும்
திரு சீத்தாராமன் ஆகிய‌
இருவருமே அருமையான‌
பதிவை தந்திருக்கிறார்கள்.
அந்த மன்னனை போல‌
புத்திசாலியாக இருந்தால்
நிச்சயம் பிழைத்துக்கொள்ளலாம்.
பதிவை இட்டவர்களுக்கும்
பதிவை இட இடம் தந்தவர்களுக்கும்
நன்றி அய்யா.

minorwall said...

KMRகிருஷ்ணன் சாரின் ஆக்கம் அருமை..ஏனோ குணா கமல் ரோஷினியின் விக்கலை சரிசெய்ய கத்தியை ஓங்கி பயமுறுத்தி கவனச்சிதறல் மூலம் விக்கல் சரியானவுடன்
'எங்க வீட்லேல்லாம் செய்வாங்க..உங்க வீட்லே செய்யமாட்டாங்களா? 'என்று அப்பாவியாய் வெகுளியாய் ஒரு முகபாவத்துடன் வசனம் பேசுவது நினைவுக்கு வருகிறது..
அன்றாட நடப்பிலே நமக்குத்தெரியாமலே அறிவியல் பூர்வமாக பலசமயங்களிலே செயல்படுவதுண்டு..அப்படி ஒரு எதார்த்த சம்பவத்தை நினைவூட்டி இந்த சுதந்திர தினத்தில்
'முன்னுக்கு வா' என்னும் வாக்கியத்தை நம்முள் உருவேற்றும் விதம் இந்த ஆக்கம் அமைந்திருப்பது சிறப்பு..
மற்றபடி ஊடுருவும் பார்வையுடன் அய்யா KMRK அவர்கள் இந்தியன் தாத்தாவை ஒத்த முகவமைப்பை பெற்றிருக்கிறார்..தஞ்சாவூர் ரேஷன் கடை ஆளுங்கள், டிராபிக் கான்ஸ்டபிள்,RTO , வருவாய்த்துறை அலுவலர்கள் உஷாராக இருப்பது நல்லது..(சும்மா காமெடிக்காக)

minorwall said...

சீத்தா ராமன் அவர்கள் இந்த சுதந்திர தினத்தில் இந்தக் கதையை பதிவிட்டிருப்பதன் நோக்கம் நிறைவேறுமானால் தங்கள் பதவிக்காலம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும் MP , MLA க்கள் பயப்படாமல் ஊர் திரும்பலாம்..
ஆனாலும் வெட்டருவா, வேல்கம்பு சகிதம் சுற்றும் பழைய காலத்து ஆட்களை கொடிய மிருகங்களாக சித்தரித்திருப்பது பாவமாகப் படுகிறது.(காமெடிக்காக)

தேடல் said...

ஆகா! அருமையான பதிவு.

இந்த வாரத்தில் மட்டும் பல சுவையான பதில்கள்.

நன்றிகள் அய்யா.

அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.

ananth said...

இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துகள். திரு கிருஷ்னன் அவர்களின் அனுபவப் பகிர்வும் கண்ணன் அவர்களின் கதையும் நன்று. இது தொடர வேண்டும்.

நானும் சில நாட்களில் இந்த பதிவு, இணையம் இவற்றையெல்லாம் தலை முழுகி விட்டு பேசாமல் வேறு வேலையைப் பார்க்கலாம் என்று இருந்தேன். என்னையும் ஒரு பதிவு ஆரம்பிக்க வைத்து பதிவுலகம் என்னை இறுக பிடித்துக் கொண்டு விட்டது. இறைவனின் விருப்பம் இதுதான் போலும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இறைவன் நேரடியாக வருவதில்லை. யார் மூலமாகவாவது வருவார். தனக்கு சித்தமானதை செய்து முடித்துக் கொள்வார்.

iyer said...

நெஞ்சை தொட்ட வரிகளில் இன்று இடம் பெற்ற பாடலை பார்த்த வுடன் நெஞ்சை சுட்ட வரிகள் என சொல்ல வைக்கிறது . .

பண்பாடு என்பதே என்ன என அறியாமல் போன சோகம் தெரியவில்லையா . .

பெண்களே . . சேலை கட்டத் தெரியுமா என கேட்கும் நிலையில் நாம் இருக்கின்றோமே . . (சேலை கட்டச் சொல்லித்தர தனிப் பயிற்சியே இருக்குதாம் இந்தியாவிலே . . )

வீடு வரை லேன்ட் லைன்
வீதி வரை ஸ்கை லைன்
காடு வரை செல்லு . .
கடைசி வரை பில்லு . . ன்னு

மாறிவிட்ட பரிதாபத்தை சொல்லவா . .

ஓட்டலுக்குப் போனாலும் நானமில்லாமல் நாணைக் கேட்கின்ற சோகத்தை சொல்லவா . .

உணவுகள் மாற . .
உணர்வுகள் மாற . .
உரவுகள் மாற . .

என
யாரையோ போல் இருக்கிறாய் என மகிழும் இவர்கள்
ஏன் இவர்களைப் போல் இவர்கள் இருப்பதைவிரும்புவதில்லையோ . .

சு-தந்திர தினத்தன்று வெளிவந்த நெஞ்சை தொட்ட வரிகள் இல்லை . .
நெஞ்சை சுட்ட வரிகள் . .

minorwall said...

எல்லோருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..
உலகமயமாக்கலுக்குப்பின் வெகுவேக வளர்ச்சியில் முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கும் இந்தியா 1991 லே கையிருப்பாகக் கொண்டிருந்த Forex Reserve வெறும் 1 பில்லியன் டாலர்தான்.
ஆனால் இப்போதோ 280௦ பில்லியன் டாலர் ரேஞ்சில்.. 1991 லேதான் உலகத்துக்கு தன் வர்த்தகக்கதவுகளை இந்தியா திறந்துவிட்டது..அதன்பின்தான் இந்த அசுர வளர்ச்சி..
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்?' என்ற பாடல் பரிணாம மாற்றத்தில் அர்த்தமிழக்கிறது..
வெளிநாட்டவர்க்கு இந்தியாவின் வளங்கள் தேவையாயிருக்கிறது..இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகளின் பணம் தேவையாயிருக்கிறது..
இந்த தேவைகள் பரிமாற்றத்தில் திட்டமிட்ட தொலைநோக்குப்பார்வையின்படி எல்லாம் நடந்தால் உலகப்பொருளாதார வரிசையின் வரிசைபட்டியலை இந்தியா இடம் மாற்றும்..
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை..இத்தாலியை 2015 லேயும், இங்கிலாந்தை 2020 லேயும் ,ஜப்பானை 2025 லேயும் ,அமெரிக்காவை 2027 லேயும் இந்தியா முந்தும்..முதல் இரண்டு இடங்களிலே இந்தியா இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது..கணித்தவர் ஜோதிடர் அல்ல.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லியில் தனது ஆய்வறிக்கையில் ஐரிஷ் பொருளாதார வல்லுநர் இர்மா கிளிக்க்மன் அடல்மன் இப்படிக் கணித்துள்ளார்.
இன்றைய Forex கையிருப்பு அடிப்படையில் வரிசைப்பட்டியல் { நமக்கும் மேலே அப்பனாக (ஏன்,தாத்தனாக) சீனா }, RBI graph என்று மேல்விவரம் இந்த லின்க்கிலே கொடுத்திருக்கிறேன்......
http://www.megaupload.com/?d=82XSK1ST

SP.VR. SUBBAIYA said...

///////kmr.krishnan said...
மிக்க நன்றி அய்யா! சில சொற்களை அழகாக மாற்றியுள்ளீர்கள். அதனால்
கட்டுரை சீரான உருவத்தைப் பெற்றுவிட்டது.கத்தார் சீதாராமன் Kannan பதிவும் மிக நன்றாக உள்ளது. திரு சுப்புரத்தினம் என்னைப் பதிவில் பார்த்த பின்னராவது தொடர்பு கொள்வார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
HAPPY INDEPENDENCE DAY TO ALL OF YOU! I earnestly request every youngster to visit the site of Thiru V.Gopalan and read about Tamilnadu freedom fighters.
tamilnadufreedomfighters-Thanjavooraan blogspot.com//////

நல்லது. நன்றி சார்!

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
ஆஹா! அற்புதம்.
முதலில் நான் கற்பனை செய்திருந்தபடி திருவாளர். கிருஷ்ணன் சாரும், கண்ணனும் அப்படியே புகைப்படத்தில் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர்கள் எழுத்துக்கள் மூலம் நான் கணித்தது அப்படியே இருந்தது. இறைவனுக்கு நன்றி.
தன்முனைப்புத் தரும் பாராட்டுத் தான் ஒரு மனிதனை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்லும் முதல் படி அதிலும் ஆசிரியர்களின் பங்கு தான் மிக மிக முக்கியம் என்பது சத்தியம் உண்மை. அப்படிப்பட்ட குருவை நாம் பெற்றால் அது நம் பாக்கியம். எதிலும் ஒரு நேர்மறையான பார்வையும், முயன்றால் எல்லோராலும் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும் அதை நம்மோட இருப்பவர்களுக்கு கொடுத்தால் அனைவரும் சாதிக்கலாம். உங்களை உயர்த்திய குருவின் மேல் நீங்கள் கொண்டுள்ள விசுவாசம் இன்னும் உங்களை ஒளிபெறச் செய்கிறது என்றால் அது மிகையாகாது.
அடுத்து கண்ணன், உங்கள் கற்பனையுமதனால் பிறந்த கதை கூறும் கருத்தும் அற்புதம் அற்புதம்.
"கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு."
"இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு." வரும் தீமையைக் கண்டு துவளாமல் அதை துடைத்தொழிக்க உழைத்தால் வெற்றி உறுதி. அருமை.////////

அது கண்ணனின் கற்பனையில் வந்ததல்ல. அதை அவரே தெரிவித்திருக்கிறார். அவர் படித்ததை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார்.

SP.VR. SUBBAIYA said...

/////Alasiam G said...
அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ஐயா! இன்னும் ஏன்?
சுதந்திர மலர் சூரியனைக் காணாது
இருட்டறையில் குடிகொண்டுள்ளது?
வண்ண மலரென்றாலும்,
பொய்யாய் பூத்திருக்கிறதே அது
மெய்யாய் பூத்து மீதினிலே சிறக்க
அருள்வாய் இறைவா! என்று வேண்டிக் கொள்கிறன்!
நன்றிகள் குருவே!///////

ஆகா வேண்டிக்கொள்ளூங்கள் ஆலாசியம்!

SP.VR. SUBBAIYA said...

/////kannan said...
அதிகாலை வணக்கம் வாத்தியார் ஐயா!
" எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் "!
என்பது சான்றோர்கள் வாக்கு
வாத்தியார்கள் அனைவரும் வாழ்க! அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
குரு பிரம்மா! குரு விஷ்ணு! குருதேவோ மஹேஷ்வர!
ஆரம்ப பள்ளி காலம் முதல் இன்றோடு அல்லாது எதிர்காலத்திலும் எம்மோடு
"ஞானம் என்னும் கல்வி பாடகசாலையில் கல்வி பாடம் போதிக்க வரும் இருபால் ஆசிரியர்கள் " மற்றும் எம்முடன் கல்வி பயில வரும்
" சகல மாணவ மாணவியருக்கு" எமது ஆத்மார்த்தமான சுதந்திரதின நல்வாழ்த்துகள்
இந்த ஆடி மாதத்தில்
"நற்சிந்தனை என்னும் புதிய விதைகளை விதைப்போமாக"
ஜெய் ஹிந்த்! பாரத மாதாவிற்கு ஜெய் ஹிந்த் ! ஜெய் ஹிந்த் !//////

நல்லது. நன்றி கண்ணன்!

SP.VR. SUBBAIYA said...

/////thirunarayanan said...
திரு முத்துராமகிருஸ்ணனும்
திரு சீத்தாராமன் ஆகிய‌
இருவருமே அருமையான‌
பதிவை தந்திருக்கிறார்கள்.
அந்த மன்னனை போல‌
புத்திசாலியாக இருந்தால்
நிச்சயம் பிழைத்துக்கொள்ளலாம்.
பதிவை இட்டவர்களுக்கும்
பதிவை இட இடம் தந்தவர்களுக்கும்
நன்றி அய்யா./////

நல்லது. நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBAIYA said...

/////minorwall said...
KMRகிருஷ்ணன் சாரின் ஆக்கம் அருமை..ஏனோ குணா கமல் ரோஷினியின் விக்கலை சரிசெய்ய கத்தியை ஓங்கி பயமுறுத்தி கவனச்சிதறல் மூலம் விக்கல் சரியானவுடன்
'எங்க வீட்லேல்லாம் செய்வாங்க..உங்க வீட்லே செய்யமாட்டாங்களா? 'என்று அப்பாவியாய் வெகுளியாய் ஒரு முகபாவத்துடன் வசனம் பேசுவது நினைவுக்கு வருகிறது..
அன்றாட நடப்பிலே நமக்குத்தெரியாமலே அறிவியல் பூர்வமாக பலசமயங்களிலே செயல்படுவதுண்டு..அப்படி ஒரு எதார்த்த சம்பவத்தை நினைவூட்டி இந்த சுதந்திர தினத்தில்
'முன்னுக்கு வா' என்னும் வாக்கியத்தை நம்முள் உருவேற்றும் விதம் இந்த ஆக்கம் அமைந்திருப்பது சிறப்பு..
மற்றபடி ஊடுருவும் பார்வையுடன் அய்யா KMRK அவர்கள் இந்தியன் தாத்தாவை ஒத்த முகவமைப்பை பெற்றிருக்கிறார்..தஞ்சாவூர் ரேஷன் கடை ஆளுங்கள், டிராபிக் கான்ஸ்டபிள்,RTO , வருவாய்த்துறை அலுவலர்கள் உஷாராக இருப்பது நல்லது..(சும்மா காமெடிக்காக)///////

அத்துடன் தஞ்சாவூரில் இருக்கும் மைனர்களும் உஷாராக இருப்பது நல்லது!

SP.VR. SUBBAIYA said...

///////minorwall said...
சீத்தாராமன் அவர்கள் இந்த சுதந்திர தினத்தில் இந்தக் கதையை பதிவிட்டிருப்பதன் நோக்கம் நிறைவேறுமானால் தங்கள் பதவிக்காலம் முடிந்து சொந்த ஊருக்குத் திரும்பும் MP , MLA க்கள் பயப்படாமல் ஊர் திரும்பலாம்..
ஆனாலும் வெட்டருவா, வேல்கம்பு சகிதம் சுற்றும் பழைய காலத்து ஆட்களை கொடிய மிருகங்களாக சித்தரித்திருப்பது பாவமாகப் படுகிறது.(காமெடிக்காக)////////

உங்களுக்குப் படுவது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்கிறோம் மைனர்! தைரியமாகச் சொல்லுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////தேடல் said...
ஆகா! அருமையான பதிவு.
இந்த வாரத்தில் மட்டும் பல சுவையான பதில்கள்.
நன்றிகள் அய்யா.
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்.//////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBAIYA said...

////ananth said...
இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கும் என் சுதந்திர தின வாழ்த்துகள். திரு கிருஷ்னன் அவர்களின் அனுபவப் பகிர்வும் கண்ணன் அவர்களின் கதையும் நன்று. இது தொடர வேண்டும்.
நானும் சில நாட்களில் இந்த பதிவு, இணையம் இவற்றையெல்லாம் தலை முழுகி விட்டு பேசாமல் வேறு வேலையைப் பார்க்கலாம் என்று இருந்தேன். என்னையும் ஒரு பதிவு ஆரம்பிக்க வைத்து பதிவுலகம் என்னை இறுக பிடித்துக் கொண்டு விட்டது. இறைவனின் விருப்பம் இதுதான் போலும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது. இறைவன் நேரடியாக வருவதில்லை. யார் மூலமாகவாவது வருவார். தனக்கு சித்தமானதை செய்து முடித்துக் கொள்வார்.////////

எல்லாம் நன்மைக்கே என்று நினையுங்கள்!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
நெஞ்சை தொட்ட வரிகளில் இன்று இடம் பெற்ற பாடலை பார்த்த வுடன் நெஞ்சை சுட்ட வரிகள் என சொல்ல வைக்கிறது . .
பண்பாடு என்பதே என்ன என அறியாமல் போன சோகம் தெரியவில்லையா . .
பெண்களே . . சேலை கட்டத் தெரியுமா என கேட்கும் நிலையில் நாம் இருக்கின்றோமே . . (சேலை கட்டச் சொல்லித்தர தனிப் பயிற்சியே இருக்குதாம் இந்தியாவிலே . . )
வீடு வரை லேன்ட் லைன்
வீதி வரை ஸ்கை லைன்
காடு வரை செல்லு . .
கடைசி வரை பில்லு . . ன்னு
மாறிவிட்ட பரிதாபத்தை சொல்லவா . .
ஓட்டலுக்குப் போனாலும் நானமில்லாமல் நாணைக் கேட்கின்ற சோகத்தை சொல்லவா .
உணவுகள் மாற . .
உணர்வுகள் மாற . .
உரவுகள் மாற . .
என
யாரையோ போல் இருக்கிறாய் என மகிழும் இவர்கள்
ஏன் இவர்களைப் போல் இவர்கள் இருப்பதைவிரும்புவதில்லையோ . .
சு-தந்திர தினத்தன்று வெளிவந்த நெஞ்சை தொட்ட வரிகள் இல்லை . .
நெஞ்சை சுட்ட வரிகள் . /////

அப்படி இப்படி இருக்கும்தான். அதை எல்லாம் மறந்துவிட்டு, நல்ல நாளும் அதுவுமா நல்லதையே நினையுங்கள்.

SP.VR. SUBBAIYA said...

/////////minorwall said...
எல்லோருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்..
உலகமயமாக்கலுக்குப்பின் வெகுவேக வளர்ச்சியில் முன்னிலைக்கு வந்துகொண்டிருக்கும் இந்தியா 1991 லே கையிருப்பாகக் கொண்டிருந்த Forex Reserve வெறும் 1 பில்லியன் டாலர்தான்.
ஆனால் இப்போதோ 280௦ பில்லியன் டாலர் ரேஞ்சில்.. 1991 லேதான் உலகத்துக்கு தன் வர்த்தகக்கதவுகளை இந்தியா திறந்துவிட்டது..அதன்பின்தான் இந்த அசுர வளர்ச்சி..
'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?
ஏன் கையை எந்த வேண்டும் வெளி நாட்டில்?' என்ற பாடல் பரிணாம மாற்றத்தில் அர்த்தமிழக்கிறது..
வெளிநாட்டவர்க்கு இந்தியாவின் வளங்கள் தேவையாயிருக்கிறது..இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகளின் பணம் தேவையாயிருக்கிறது..
இந்த தேவைகள் பரிமாற்றத்தில் திட்டமிட்ட தொலைநோக்குப்பார்வையின்படி எல்லாம் நடந்தால் உலகப்பொருளாதார வரிசையின் வரிசைபட்டியலை இந்தியா இடம் மாற்றும்..
அந்த நாள் வெகு தொலைவில் இல்லை..இத்தாலியை 2015 லேயும், இங்கிலாந்தை 2020 லேயும் ,ஜப்பானை 2025 லேயும் ,அமெரிக்காவை 2027 லேயும் இந்தியா முந்தும்..முதல் இரண்டு இடங்களிலே இந்தியா இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது..கணித்தவர் ஜோதிடர் அல்ல.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லியில் தனது ஆய்வறிக்கையில் ஐரிஷ் பொருளாதார வல்லுநர் இர்மா கிளிக்க்மன் அடல்மன் இப்படிக் கணித்துள்ளார்.
இன்றைய Forex கையிருப்பு அடிப்படையில் வரிசைப்பட்டியல் { நமக்கும் மேலே அப்பனாக (ஏன்,தாத்தனாக) சீனா }, RBI graph என்று மேல்விவரம் இந்த லின்க்கிலே கொடுத்திருக்கிறேன்......
http://www.megaupload.com/?d=82XSK1ST//////

2025ல் ஜப்பானை மிஞ்சும்போது நீங்கள் ரிடையர்மெண்ட் வாங்கிக்கொண்டு இந்தியாவிற்கு வந்துவிடுங்கள் மைனர்!

V Dhakshanamoorthy said...

அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
சுதந்திரதின நன்னாளில்,
முன்னுக்கு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி
முன்னுக்கு வரச் சொல்லும் வாத்தியார் அவர்களுக்கும்,

தனது நீங்காத நினைவினை சிறப்பாக பதிவேற்றி இருக்கும்
திரு.தஞ்சை முத்துராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும்,

வெற்றிக்கான வழியினை மனதில் பதிந்த நல்ல கதையின் மூலமாக
தெரிவித்துள்ள திரு.சீதாராமன் கண்ணன் அவர்களுக்கும்

நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.

தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி
2010-08-15

iyer said...

///அப்படி இப்படி இருக்கும்தான். அதை எல்லாம் மறந்துவிட்டு, நல்ல நாளும் அதுவுமா நல்லதையே நினையுங்கள்.//

அதெ எப்படி அய்ய விட முடியும்
இது மாதிரி சமயங்களிலே சொன்னாத் தானே நம்ம மக்கள் என்னதுன்னு நம்ம பண்பாட்டை பத்தி யோசித்தாவது பார்ப்பாங்க . .

நானும் தான் வெளி நாட்டு பக்கம் போயிருக்கேன் . . ஆனா மறவில்லையே . .

அரபு நாடுகள் துபாய் போயிருந்த போதும் நெற்றி நிறைய திருநீறு பூசியபடியே. . . பல தெருக்களில் நடந்து சென்று இருக்கிறேன் (அவர்கள் தொழுகை நடத்தும் வெள்ளிக்கிழமைகளில் கூட)

கண்டிப்பு இல்லாத வாத்தியாரின் வகுப்பறை தான் . . அதற்காக இப்படியா . . .

sundari said...

GOod evening sir,
Thanks for today sunday class story sir. It is very nice. Thanks for Brothers Krishnan and sita raman
Happy Independence day to all of us.
sundari.p
Dear Brother Minor wall u have to send one story

SP.VR. SUBBAIYA said...

ஓடிக்கொண்டிருக்கும் படத்தைத் தூக்கிவிட்டு இன்னொரு படத்தை ஓட்டக்கூடாது.அதுவும் இருவரின் ஆக்கங்கள் உள்ளன. ஞாயிற்றுக் கிழமை என்பதால், அலுவலகத்தில் அமர்ந்து, டீம் மேலாளர் இல்லாத இடைவெளியில் வகுப்பறையை எட்டிப்பார்க்கும் கண்மணிகள் எல்லாம் திங்கட்கிழமையன்றுதான் உள் நுழைவார்கள். அவர்களும் படிக்க வேண்டும்.

அத்துடன் இந்த மாதம் கடந்து சென்ற 15 தினங்களில் 14 நாட்களில் 14 பதிவுகள் வலையேறியுள்ளன. அத்தனை பின்னூட்டங்களுக்கும் பதில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே இன்று ஒருநாள் (16.8.2010 திங்கட்கிழமை) வாத்தியாருக்கு ஓய்வு தினம்!

அடுத்த பதிவு நாளை வலையேறும்!

ஓக்கேயா?

Sowmya said...

Thanks a lot sir ,for posting Mr.KMRK sir's photo ,i was through him that i got to know about your classroom .

Arulkumar Rajaraman said...

Dear Sir

I Sincere thanks to Mr.SPV.Subbiah...

I read both Mr.KMR Krishnan and Seetharaman Kannan Article.

Both the articles are good.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

R.Puratchimani said...

கவிதையும் அருமை கதைகளும் அருமை. நண்பர்களே அருமையான பதிவுகளைத் தரும் நம் வாத்தியாருக்கு ஒரு ஒ..... போடுங்கள்.

Uma said...

//அலுவலகத்தில் அமர்ந்து, டீம் மேலாளர் இல்லாத இடைவெளியில் வகுப்பறையை எட்டிப்பார்க்கும் கண்மணிகள் எல்லாம் திங்கட்கிழமையன்றுதான் உள் நுழைவார்கள்.//

ஹி ஹி, பதிவு நன்றாக இருந்தது.

க்ருஷ்ணன் சார், நீங்கள் சொல்லும் ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் இப்போது மிகவும் குறைவு. என் பெண்ணைப் பாட்டுப்பாட தேர்வு செய்து 2/3 நாள் பயிற்சியும் முடிந்தபின், மழலை மொழியில் பாடுவதாகச் சொல்லி நீக்கி விட்டார்கள். அவளுக்கு ரொம்ப வருத்தம். முதலிலேயே சேர்க்காதிருந்திருக்கலாம். அதே போல், விளக்கமாக பாடம் நடத்துவதும் இல்லை. புரிகிறதோ இல்லையோ, மனப்பாடம்தான், நாந்தான் உட்கார்ந்து புரிய வைக்கிறேன்.

Govindasamy said...

அருமை. காலத்திற்கேற்ற கதைகள். கத்தார் கண்ணணுக்கும் வாத்தியாருக்கும் நன்றிகள். இந்தப் பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். KMRK வின் பதிவும் நன்கு இருந்தது. அய்யாவின் பள்ளீ பாரதி வித்யாலயா, மரவனேரியா? வாத்தியாரின் சேலத்து அனுபவங்களையும் பழய பதிவில் படித்தேன். பழயது இனித்தது. வாத்தியாருக்கு நன்றிகள்.

SP.VR. SUBBAIYA said...

/////V Dhakshanamoorthy said...
அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
சுதந்திரதின நன்னாளில்,
முன்னுக்கு வர வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி
முன்னுக்கு வரச் சொல்லும் வாத்தியார் அவர்களுக்கும்,
தனது நீங்காத நினைவினை சிறப்பாக பதிவேற்றி இருக்கும்
திரு.தஞ்சை முத்துராமகிருஷ்ணன் அய்யா அவர்களுக்கும்,
வெற்றிக்கான வழியினை மனதில் பதிந்த நல்ல கதையின் மூலமாக
தெரிவித்துள்ள திரு.சீதாராமன் கண்ணன் அவர்களுக்கும்
நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
அனைவருக்கும் எனது சுதந்திரதின வாழ்த்துகள்.
நன்றி வணக்கம்.
தங்களன்புள்ள மாணவன்
வ.தட்சணாமூர்த்தி/////

நல்லது. நன்றி தட்சணாமூர்த்தி!

SP.VR. SUBBAIYA said...

/////iyer said...
///அப்படி இப்படி இருக்கும்தான். அதை எல்லாம் மறந்துவிட்டு, நல்ல நாளும் அதுவுமா நல்லதையே நினையுங்கள்.//
அதை எப்படி அய்யா விட முடியும்
இது மாதிரி சமயங்களிலே சொன்னாத் தானே நம்ம மக்கள் என்னதுன்னு நம்ம பண்பாட்டை பத்தி யோசித்தாவது பார்ப்பாங்க . .
நானும் தான் வெளி நாட்டு பக்கம் போயிருக்கேன் . . ஆனா மறவில்லையே . .
அரபு நாடுகள் துபாய் போயிருந்த போதும் நெற்றி நிறைய திருநீறு பூசியபடியே. . . பல தெருக்களில் நடந்து சென்று இருக்கிறேன் (அவர்கள் தொழுகை நடத்தும் வெள்ளிக்கிழமைகளில் கூட)
கண்டிப்பு இல்லாத வாத்தியாரின் வகுப்பறை தான் . . அதற்காக இப்படியா . . .???////

ஒருமுறை ரஷ்யாவிற்கும், ஆஃப்கானிஸ்தானுக்கும் போய்விட்டு வாருங்கள்! நம் நாடு எவ்வளவோ பரவாயில்லை என்று நினைப்பீர்கள்!

SP.VR. SUBBAIYA said...

//////sundari said...
GOod evening sir,
Thanks for today sunday class story sir. It is very nice. Thanks for Brothers Krishnan and sita raman
Happy Independence day to all of us.
sundari.p
Dear Brother Minor wall u have to send one story///////

மைனர் அக்கய்யாவின் வாய்ஸ் வினப்படுத்துந்தா (கேட்கிறதா) ?

SP.VR. SUBBAIYA said...

////Sowmya said...
Thanks a lot sir ,for posting Mr.KMRK sir's photo ,i was through him that i got to know about your classroom////

நல்லது. நன்றி சகோதரி!

SP.VR. SUBBAIYA said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
I Sincere thanks to Mr.SPV.Subbiah...
I read both Mr.KMR Krishnan and Seetharaman Kannan Article.
Both the articles are good.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBAIYA said...

////R.Puratchimani said... கவிதையும் அருமை கதைகளும் அருமை. நண்பர்களே அருமையான பதிவுகளைத் தரும் நம் வாத்தியாருக்கு ஒரு ஒ..... போடுங்கள்.//////

ஓ’ வெல்லாம் எதற்கு? புரட்சி செய்யாமல் இருந்தால் (வாத்தியாரைப் புரட்டிப்போடாமல் இருந்தால்) போதும்!:-)))

SP.VR. SUBBAIYA said...

//////Uma said...
//அலுவலகத்தில் அமர்ந்து, டீம் மேலாளர் இல்லாத இடைவெளியில் வகுப்பறையை எட்டிப்பார்க்கும் கண்மணிகள் எல்லாம் திங்கட்கிழமையன்றுதான் உள் நுழைவார்கள்.//
ஹி ஹி, பதிவு நன்றாக இருந்தது.
கிருஷ்ணன் சார், நீங்கள் சொல்லும் ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் இப்போது மிகவும் குறைவு. என் பெண்ணைப் பாட்டுப்பாட தேர்வு செய்து 2/3 நாள் பயிற்சியும் முடிந்தபின், மழலை மொழியில் பாடுவதாகச் சொல்லி நீக்கி விட்டார்கள். அவளுக்கு ரொம்ப வருத்தம். முதலிலேயே சேர்க்காதிருந்திருக்கலாம். அதே போல், விளக்கமாக பாடம் நடத்துவதும் இல்லை. புரிகிறதோ இல்லையோ, மனப்பாடம்தான், நான்தான் உட்கார்ந்து புரிய வைக்கிறேன்.////

உண்மைதான். அன்றிருந்த சேவை மனப்பான்மை இப்போதுள்ள ஆசிரியர்களிடம் குறைந்துள்ளது.

hamaragana said...

அன்புடன் வணக்கம்.. அன்னை காட்டுவது தந்தை ! தந்தை காட்டுவது நல ஆசிரியரை !நல ஆசிரியர் நம்மின் திறன் அறிந்து நல்வழிபடுத்தி அறிவுகண்ணை திறப்பார் இறைவனையும் அடையும் வழி காட்டுவார். திரு கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த மூன்றும் கிடைத்துள்ளது நாலாவது கிடைக்கும்!!!!!
அஹா இவரு எங்க ஊரு பக்கத்துக்கு ஊர் ஆளு!! நல்ல வளமிக்க சிந்தனை தூண்டும் பதிவு!!

SP.VR. SUBBAIYA said...

//////Govindasamy said...
அருமை. காலத்திற்கேற்ற கதைகள். கத்தார் கண்ணணுக்கும் வாத்தியாருக்கும் நன்றிகள். இந்தப் பதிவுகளை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். KMRK வின் பதிவும் நன்கு இருந்தது. அய்யாவின் பள்ளி பாரதி வித்யாலயா, மரவனேரியா? வாத்தியாரின் சேலத்து அனுபவங்களையும் பழய பதிவில் படித்தேன். பழயது இனித்தது. வாத்தியாருக்கு நன்றிகள்.////

நீங்கள் எங்கே சிறுமலர் உயர் நிலைப் பள்ளியா? நானும் சேலத்தில் 7 ஆண்டுகள் படித்தவன். நகராட்சிக்கு அடுத்துள்ள பழம் பெருமை வாய்ந்த பள்ளிதான் நான் படித்த பள்ளி!வீரகேசரி என்கின்ற கணக்கு வாத்தியாரையும், முருகுசுந்தரம் என்கின்ற தமிழாசிரியரையும் மறக்கமுடியாது!

SP.VR. SUBBAIYA said...

/////hamaragana said...
அன்புடன் வணக்கம்.. அன்னை காட்டுவது தந்தை ! தந்தை காட்டுவது நல ஆசிரியரை !நல ஆசிரியர் நம்மின் திறன் அறிந்து நல்வழிபடுத்தி அறிவுகண்ணை திறப்பார் இறைவனையும் அடையும் வழி காட்டுவார். திரு கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த மூன்றும் கிடைத்துள்ளது நாலாவது கிடைக்கும்!!!!!
அஹா இவரு எங்க ஊரு பக்கத்துக்கு ஊர் ஆளு!! நல்ல வளமிக்க சிந்தனை தூண்டும் பதிவு!!/////

அதைதான் “மாதா, பிதா, குரு, தெய்வம்” என்று சுருக்கமாகச் சொல்வார்கள்! நன்றி!

Govindasamy said...

///நீங்கள் எங்கே சிறுமலர் உயர் நிலைப் பள்ளியா? நானும் சேலத்தில் 7 ஆண்டுகள் படித்தவன். நகராட்சிக்கு அடுத்துள்ள பழம் பெருமை வாய்ந்த பள்ளிதான் நான் படித்த பள்ளி!வீரகேசரி என்கின்ற கணக்கு வாத்தியாரையும், முருகுசுந்தரம் என்கின்ற தமிழாசிரியரையும் மறக்கமுடியாது! ///

அய்யா நான் நகரவைப் பள்ளியில் படித்தேன். வீரகேசரிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அதில் நானும் ஒருவன். அதைப்போலவே முருகுசுந்தரமும். அவரது வகுப்பு மிகவும் அழகு. ராஜாமணி எனக்கு வகுப்பாசிரியர். மிக்க மகிழ்ச்சி.

SP.VR. SUBBAIYA said...

/////Govindasamy said...
///நீங்கள் எங்கே சிறுமலர் உயர் நிலைப் பள்ளியா? நானும் சேலத்தில் 7 ஆண்டுகள் படித்தவன். நகராட்சிக்கு அடுத்துள்ள பழம் பெருமை வாய்ந்த பள்ளிதான் நான் படித்த பள்ளி!வீரகேசரி என்கின்ற கணக்கு வாத்தியாரையும், முருகுசுந்தரம் என்கின்ற தமிழாசிரியரையும் மறக்கமுடியாது! ///
அய்யா நான் நகரவைப் பள்ளியில் படித்தேன். வீரகேசரிக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அதில் நானும் ஒருவன். அதைப்போலவே முருகுசுந்தரமும். அவரது வகுப்பு மிகவும் அழகு. ராஜாமணி எனக்கு வகுப்பாசிரியர். மிக்க மகிழ்ச்சி. //////

பள்ளி இறுதியாண்டை எந்த வருடம் படித்தீர்கள்?

INDIA 2121 said...

இரண்டு பதிவுகளும் அருமை
நண்பர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

SP.VR. SUBBAIYA said...

/////INDIA 2121 said...
இரண்டு பதிவுகளும் அருமை
நண்பர்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்////

நல்லது. உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே! எழுதிய அவர்களும் மகிழ்வு கொள்வார்கள்!